ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'மையவிழிப் பார்வையிலே' - கதை திரி

Status
Not open for further replies.

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 14








தன்னவனுடனான முத்தத்தை நினைத்து வைஷ்ணவி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்க, அவளின் அறைக்குள் ரகசியமாக நுழைந்தாள் ஆராதியா.



'அவ கையில என்ன இருந்துச்சுன்னு தெரிஞ்சே ஆகணும், கண்டிப்பா அந்த லோக்கரோட கீ அவ பேக்லதான் இருக்கணும்' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள் ஒரு ஓரமாக வைத்திருந்த அவளுடைய பையை மெல்ல அலச ஆரம்பித்தாள்.



அடிக்கடி வைஷ்ணவியை நோட்டமிட்டுக்கொண்டவள் அவளுடைய பையில் கரத்தை விட்டு துலாவி சிறிய சாவியொன்றை கையிலெடுத்தாள்.



மெல்ல சத்தமே எழுப்பாதவாறு அந்த சிறிய லோக்கரை நோக்கி ஆராதியா நடக்க, திடீரென, "அம்மா..." என்ற அழைப்போடு விழிகளை கசக்கியவாறு தூக்கத்தில் எழுந்தமர்ந்தாள் வைஷ்ணவி.



அதைப் பார்த்ததும் இவளுக்கு பக்கென்று இருந்தது.



உடனே கட்டிலுக்கு கீழே ஒளிந்துக்கொள்ள, "அம்மா, அந்த பிசாச என்கிட்ட வச்சுக்க வேணாம்னு சொல்லுங்க, இல்லன்னா அவ்வளவுதான்" என்று தூக்கக் கலக்கத்தில் எதையோ உளறிவிட்டு மீண்டும் அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கிவிட, மெல்ல எட்டிப் பார்த்த ஆராதியாவுக்கு அய்யோ என்றிருந்தது.



'இவள.. இருடீ உன்னை காலையில வச்சுக்குறேன், என்னையா பிசாசுன்னு சொல்லுற' என்று திட்டி முடித்தவள், மீண்டும் அமைதியாக லோக்கரை நோக்கிச் சென்று சாவியை இட்டு அதைத் திறக்க, அதில் வைஷ்ணவியின் சில பொருட்களோடு சேர்த்து அந்த புகைப்படமும் இருந்தது.



அந்த புகைப்படத்தை கையிலெடுத்தவள் வைஷ்ணவி தூக்கத்தில் புரள்வதைப் பார்த்து வேகமாக லோக்கரை மூடி, அவசரத்தில் சாவியை மேசை மீதே வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.



வேகமாக தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட ஆராதியா, கட்டிலில் அமர்ந்து அந்த புகைப்படத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.



"இதுல இருக்குற எல்லாரையும் தெரியும், ஆனா இந்த ஒருத்திய தவிர. ஆனா... ஆனா இந்த பொண்ணோட ஃபோட்டோவ நா.. நான் நந்தினியோட வீட்டுல கூட பார்த்தேனே! யார் இது? கண்டிப்பா இந்த கொலைகளுக்கும் இந்த பொண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு" என்று ஆழமா யோசித்தவள், அந்த புகைப்படத்திலுள்ள அந்த இளம்பெண்ணைப் பற்றி யோசித்தவாறு உறங்கிப் போனாள்.



அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.



அடுத்தநாள், ஆராதியா சோஃபாவில் அமர்ந்து எதையோ யோசித்த வண்ணம் காஃபியை பருகிக்கொண்டிருக்க, வேகமாக அவளெதிரே வந்து நின்றாள் வைஷ்ணவி.



"நேத்து ராத்திரி என் ரூமுக்கு வந்தியா அக்கா?" என்று அவள் முறைத்தவாறுக் கேட்க, "ஆமா வந்தேன், அதுக்கென்ன இப்போ?" என்று பதிலுக்கு முறைத்தவாறு பதில் சொன்னாள் மற்றவள்.



அவளை முறைத்துப் பார்த்தவள், அதற்கு மேல் எதுவுமே பேசாமல் மீண்டும் அறையை நோக்கிச் செல்லப் போக, "காய்கறி முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும், அப்போ கவனிச்சிக்குறேன்" என்று தியா கத்திச் சொல்ல, சரியாக இவர்களின் பேச்சு வார்த்தைகளைக் கேட்டு சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தார் லலிதா.



ஆராதியாவின் வார்த்தைகளில் திரும்பிப் பார்த்த வைஷ்ணவி, "உன்னால முடிஞ்சை நீயே கண்டுபிடிச்சிக்கோ, ஆனா நீ நினைக்கிற மாதிரி அது கிடையாது" என்று வலி நிறைந்த குரலில் சொல்லிவிட்டு கலங்கிய விழிகளை மறைக்க முகத்தை திருப்பிக்கொள்ள, "ஏய், என்னாச்சுடீ? மறுபடியும் என்ன வம்ப இழுத்துட்டு வந்திருக்கீங்க இரண்டு பேரும்? சொல்லுங்கடீ" என்று பதற்றமாகக் கத்தினார் லலிதா.



"அதுவாம்மா... உங்க பொண்ணு உங்கள போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நிக்க வைக்க போறா. அதான்..." என்று ஆராதியா சொன்னதும், லலிதா விக்கித்துப் போய் தன் சிறிய மகளைப் பார்க்க, அவளுமே சற்று பதறித்தான் விட்டாள்.



"அது... அது அம்மா..." என்று வைஷ்ணவி தடுமாற, "அது ஏன்னு தெரியுமா, உங்க பொண்ணு இன்ஸ்பெக்டர் ப்ரணவ்வ லவ் பண்றா. வீட்டுக்கு வர போற மருமகன் போலீஸ்னா நாம ஸ்டேஷனுக்கு போய்தானே ஆகணும்" என்று ஆராதியா சொல்லி சமாளித்துவிட, "நிஜமாவாடீ சொல்ற" என்று இரு விழிகளை ஆச்சரியத்தோடு விரித்துக் கேட்டார் பெரியவர்.



தன் தமக்கையை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவள் ஆமென்று தலையசைக்க, "போலீஸ் மாப்பிள்ளைன்னா எனக்கு ஓகேதான். பையன பத்தி மட்டும் கொஞ்சம் விசாரிச்சுக்குறேன், எல்லா நல்லபடியா இருந்துச்சுன்னா சந்தோஷம்தானே!" என்று சந்தோஷத்தோடு சொன்னார் அவர்.



"இது நியாயமே இல்லை, ஹர்ஷாவ மட்டும் உங்களுக்கு பிடிக்கல, இவன பிடிச்சிருக்கோ? போலீஸ் மாப்பிள்ளைன்னதும் ரொம்பதான்" என அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு ஆராதியா நொடிந்துக்கொள்ள, அவரோ மகளை முறைத்துப் பார்த்தார்.



"ஆமா நீங்க இரண்டு பேரும் இழுத்துட்டு வர்ற பிரச்சனைக்கு வீட்டுல ஒரு போலீஸ் இருக்கணும்ல அதான்..." என்றுவிட்டு லலிதா சமையலறைக்குள் புகுந்துவிட, லேசான புன்னகையோடு தனதறைக்குள் நுழைந்தாள் ஆராதியா.



ஆனால், வைஷ்ணவியின் முகத்தில் கலக்கம் குடிகொள்ள, அந்த சம்பவத்தை நினைத்து முகம் இருண்டுப் போனது.



அதன் பிறகு ஆராதியாவும் தயாராகி நிறுவனத்திற்கு செல்ல, போகும் வழியிலேயே ஹர்ஷாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.



அதைப் பார்த்தவளின் முகமோ சட்டென இறுகியது.



'இந்த கேஸ்காக இவன் கூட பேசினா ரொம்பதான் அட்வான்டேஜ் எடுத்துக்குறான்' என்று முணுமுணுத்தவள், அழைப்பை ஏற்று காதில் வைத்ததுமே, "லுக் ஹர்ஷா, நாம என்னைக்கும் சேர போறதில்ல. அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சுன்னா இப்போவே விட்டுரு" என்று கடுகடுக்க, "என்ன உளர்ற, நான் ஒன்னும் நம்மள பத்தி பேசுறதுக்காக கால் பண்ணல. நீயா ஏதேதோ இமேஜின் பண்ணிக்காத! புரிஞ்சதா?" என்று பதிலுக்கு கத்தினான் ஹர்ஷத்.



ஆராதியாவுக்கு சப்பென்று ஆகிவிட்டது. 'மானமே போச்சு' என்று உள்ளுக்குள் நினைத்தவாறு அவள் அமைதியாக இருக்க, மீண்டும் 'ஊஃப்ப்..' என்ற பெருமூச்சோடு அவனே பேச்சை ஆரம்பித்தான்.



"நந்தினி இறந்துட்டா, நேத்து ராத்திரி உள்ள இருந்தே சூசைட் பண்ணியிருக்கா. என்ட், இன்னொரு முக்கியமான மேட்டர் அனிதா உடம்புல இருந்து எடுத்த டீஎன்ஏ நந்தினியோட டீஎன்ஏ கூட மேட்ச் ஆகல" என்று ஹர்ஷா அடுத்தடுத்த அதிர்ச்சித் தகவல்களாக சொல்ல, இவளுக்கோ கிட்டத்தட்ட தலையே சுற்றிவிட்டது.



"என்ன.. என்ன சொல்லுற ஹர்ஷா? அதெப்படி... அதெப்படி செத்தா? ஓ காட்!" என்று அதிர்ச்சி குரலில் அவள் கேட்க, "நீ நேர்ல வா, எல்லாத்தையும் சொல்றேன். இப்போ நான் யுகனோட ஃப்ளாட்ல இருக்கேன்" என்று சொல்லிவிட்டு ஹர்ஷா அழைப்பைத் துண்டித்ததும், வேகமாக அங்கு சென்றாள் அவள்.



இவள் உள்ளே செல்லும் போதே வாசலில் யாருடனோ பேசியவாறு ப்ரணவ் நின்றிருக்க, எதேர்ச்சையாக திரும்பியவளுக்கு அங்கு நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் திகைப்பாக இருந்தது.



அங்கு க்ரிஷும் அவனுடைய தந்தை வேந்தனும் பதற்றமாக அமர்ந்திருக்க, "இவங்க எப்படி இங்க..." என்று தன் சந்தேகத்தைக் கேட்டவளுக்கு அவர்களின் முகத்தில் தெரிந்த கலக்கமும் பதற்றமும் எதையோ ஒன்றை உணர்த்தியது.



"அந்த கொலைகாரனோட நெக்ஸ்ட் டார்கெட் இவன்தான், இவனுக்கு ஒரு சேஃபான ப்ளேஸ் தேவை, அதான் இங்க ரகசியமா கூட்டிட்டு வந்தோம். கண்டிப்பா அவனால இந்த இடத்தை கெஸ் பண்ணவே முடியாது" என்று ப்ரணவ் சொல்ல, "நந்தினி எப்படி இறந்தா ப்ரணவ்?" என்று விழிகளில் கேள்வியைத் தாங்கிய வண்ணம் கேட்டாள் ஆராதியா.



"அவளுக்கு எப்படி பாய்சன் கிடைச்சதுன்னு தெரியல தியா, ஆனா அவ இறக்குற அன்னைக்கு காலையில யாரோ ஒருத்தன் அவள பார்க்க வந்ததா ஆஃபீஸர் சொன்னாரு. மே பீ இது அவளாவே விரும்பி எடுத்த முடிவா கூட இருக்கலாம்" என்று அவன் விளக்கமாக சொல்லி முடிக்க, "அது யாரா இருக்கும்... இவ ஏன் இறந்தா, வைஷ்ணவிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இதுல எந்த கேள்விக்கும் எனக்கு பதில் தெரியல" என்று குழம்பிப் போய் பேசினாள் அவள்.



"சீக்கிரம் உனக்கு தெரிய வரும்" என்று ப்ரணவ் அழுத்தமாக சொல்ல, "மிஸ்டர் க்ரிஷ், எங்களுக்கு உண்மைய மட்டும் சொல்லுங்க. உங்களுக்கு காலேஜ தவிர எதிரிங்கன்னு வெளியில யாராச்சும் இருக்காங்களா, அதுவும் உங்கள கொலை பண்ற அளவுக்கு கோபத்தோட? இல்லன்னா இந்த கேள்விய இப்படி கூட கேக்கலாம், உங்க நாலு பேரால யாராச்சும் பாதிக்கப்பட்டு இருக்காங்களா?" என்று விழிகளை கூர்மையாக்கிக் கேட்டான் ஹர்ஷா.



அவனுடைய ஆராய்ச்சிப் பார்வையில் க்ரிஷுக்கு பக்கென்று இருக்க, "வாய திறந்து பதில் சொல்லுடா!" என்று தன் மகனின் முதுகில் அடித்தார் வேந்தன்.



"அது... அது வந்து அண்ணா, அப்படியெல்லாம் இல்லை. நாங்க எதுவும் பண்ணல" என்று சிறு தடுமாற்றத்தோடு அவன் சொல்லிவிட்டு தலையை குனிந்துக்கொள்ள, ப்ரணவோ அவனை தீப்பார்வைப் பார்த்தான்.



"எப்படியாச்சும் என் மகன காப்பாத்திருங்க அது போதும், இவன் மட்டும் இல்லன்னா நான் இத்தனை பணம் சம்பாதிச்சு அர்த்தமே இல்லை" என்று வேந்தன் ஒரு தந்தையாக கலங்கிய குரலில் சொல்ல, "அந்த விக்டிம்ம கண்டுபிடிக்குற வரைக்கும் க்ரிஷ் இங்கேயே இருக்கட்டும். உங்க பாதுகாப்புக்கு எங்க டிபார்ட்மென்ட்லயே ஒருத்தர உங்க கூட தங்க வச்சுக்குறேன்" என்ற ப்ரணவ் வேகமாக அங்கிருந்து வெளியேறியிருக்க, மற்ற இருவரும் அவனின் பின்னாலேயே சென்றனர்.



"ப்ரணவ் ஸ்டாப்! அந்த விக்டிம் க்ரிஷ் இருக்குற இந்த இடத்தையும் கண்டுபிடிச்சா என்ன பண்றது?" என்று ஆராதியா தன் கேள்வியைக் கேட்க, "ஒன்னும் பண்ண முடியாது, அவன் செத்துட்டான்னு அடுத்த நியூஸ்ல வரும். அவ்வளவுதான்" என்றான் அலட்சியமான குரலில்.



"வாட்! என்ன பேசுறீங்க ப்ரணவ். நாம அவன காப்பாத்தி ஆகணும். ஒரு போலீஸ் ஆஃபீசரா நீங்க இவ்வளவு கெயார்லெஸ்ஸா பேச கூடாது" என்று ஹர்ஷா சிறு கோபத்தோடு சொல்ல, "ஒரு போலீஸ் ஆஃபீசரா என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்" என்று பதிலுக்கு சொன்னவன், ஏதோ ஒன்றை மனதில் வைத்து தன் நிலையை இழந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.



ஹர்ஷாவோ அவனை முறைத்தவாறு ஒரு அடி வைக்க, இருவருக்குள் சண்டை மூடுவதை கவனித்தவள் உடனே ஹர்ஷாவின் மார்பில் கை வைத்து அவனை தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.



"சரி விடுங்க, க்ரிஷ் இப்போ உங்க பொறுப்பு. அவன் சாகுறதுக்குள்ள அந்த கொலைகாரன கண்டுபிடிக்கணும். என்ட், எனக்கு ஒரு முக்கியமான க்ளூ கிடைச்சிருக்கு. நந்தினி வீட்டுல நான் பார்த்த பொண்ணோட ஃபோட்டோ வைஷ்ணவி கிட்டயும் இருக்கு. இதுல இந்த பொண்ணு எல்லார் கூடவும் ரொம்ப நெருக்கமா இருக்குற மாதிரி தெரியுது. இவ யாரு, இவளுக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்னு உங்களால கண்டுபிடிக்க முடியுமா?" என்று ஆராதியா பேசிக்கொண்டே அந்த புகைப்படத்தை ப்ரணவிடம் நீட்ட, அதைப் பார்த்தவனின் விழிகள் விரிந்தன.



"இதை நீ வைஷ்ணவி கிட்ட கூட கேட்டிருக்கலாமே தியா?" என்று ஒரு மாதிரிக் குரலில் ப்ரணவ் சொல்ல, "அவ ரொம்ப அழுத்தக்காரி, அவளுக்குள்ள ஏதோ ரகசியம் இருக்கு. ஆனா சொல்ல மாட்டா. அதான் நானே தெரிஞ்சுக்கலாம்னு... சீக்கிரம் இதை கண்டுபிடிச்சா நமக்கு கொலைகாரன பத்தி ஏதாச்சும் க்ளூவ கண்டுபிடிக்கலாம்" என்று அவள் சொல்ல, "மீரா" என்றான் ப்ரணவ் புகைப்படத்தை வெறித்தபடி.



"என்ன?" என்று ஹர்ஷா சரியாக காதில் விழாததில் மீண்டும் கேட்க, "அவ பேரு மீரா" என்ற அந்த அதிகாரி அதற்கு மேல் எதுவும் பேசாமல் விறுவிறுவென சென்றுவிட, ஆராதியாவுக்கு பல கேள்விகள் மனதில் எழுந்தன.



"ஏய் ப்ரணவ்... வெயிட்! ப்ரணவ்..." என்று அவள் கத்திக்கொண்டே அவனின் பின்னே ஓட, அதற்குள் தன் ஜீப்பில் ஏறி அவன் சென்றிருக்க, ஆராதியாவும் ஹர்ஷாவும் அவனை புரியாமல் பார்த்து நின்றனர்.



"கண்டிப்பா ப்ரணவுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு ஆரு, அது என்னன்னு தெரிஞ்சிக்கணும்" என்று ஹர்ஷா போகும் அவனின் ஜீப்பை அழுத்தமாகப் பார்த்தவாறு சொல்ல, ஆராதியாவின் மனதில் அதேதான் தோன்றியது.



அதேநேரம் அந்த அறையிலிருந்த மொத்த பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்திருந்தான் அந்த ஒருவன். சிதறிக் கிடந்த பொருட்களுக்கு நடுவே தரையில் அமர்ந்திருந்தவனின் இதழ்களோ, "என்.. என்னை மன்னிச்சிரு.. என்னை மன்னிச்சிரு... நான்தான், நான்தான் எல்லாத்துக்கும் காரணம். எல்லாமே என்னாலதான். நான் அப்படி பண்ணியிருக்க கூடாது" என்று மீண்டும் மீண்டும் அதையே புலம்பிக்கொண்டிருக்க, திடீரென அவனுடைய முகபாவனை மாற ஆரம்பித்தது.



முகமெல்லாம் சிவந்து இறுக, பற்களைக் கடித்துக்கொண்டவன், "உயிர் தியாகம் பண்ணியிருக்கியா நந்தினி, உயிர் தியாகம் ஹாஹாஹா... உனக்காக அந்த இரண்டு பேரோட உயிரையும் நான் எடுக்குறேன். துடிக்க துடிக்க... அந்த கொடூரத்தை அவங்க நினைச்சும் பார்த்திருக்க மாட்டாங்க" என்று புகைப்படத்திலிருந்த க்ரிஷ் மற்றும் வைஷ்ணவியின் முகங்களை கையிலிருந்த கத்தியால் வெறித்தனமாக கிழித்தான்.



அன்றிரவு, ஹர்ஷா வீட்டிற்குள் நுழையும் போதே தரையை வெறித்திருந்த அபிமன்யுதான் அவனுடைய விழிகளில் தென்பட, அவனை புருவத்தை சுருக்கி யோசித்தவாறு பார்த்தவன் அவனருகே சோஃபாவில் சென்று அமர்ந்துக்கொண்டான்.



"என்னடா, ஏதோ மாதிரி இருக்க. என்னாச்சு? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற?" என்று ஹர்ஷா அவனுடைய தோளில் கைப் போட்டவாறுக் கேட்க, "இன்னும் வன் வீக்ல லண்டனுக்கு கெளம்பிருவேன். இவ்வளவு சீக்கிரம் போயிருவேன்னு நினைச்சே பார்க்கல" என்றான் அவன் ஒரு மாதிரிக் குரலில்.



"நீ இங்க இருக்குற வரைக்கும் நடந்ததையே யோசிச்சிக்கிட்டு இருப்ப, அவுட் ஆஃப் கன்ட்ரி போறது பெட்டர்தான்" என்று அவன் சொன்னதும், "ம்ம்... உன்னோட பிரச்சனை எல்லாம் எப்படி போகுது அண்ணா? அந்த பொண்ணு ஜெயிலுக்குள்ளயே இறந்துட்டான்னு நியூஸ்ல வந்திச்சு. இன்னுமா அந்த கொலைகாரன கண்டுபிடிக்கல?" என்று யோசனையோடுக் கேட்டான் அபி.



"இல்லைடா, அவன் ஏதோ சைக்கோ சும்மா கொலை பண்றான்னு நினைச்சோம். ஆனா இது கதையே வேற. இது ஏதோ இன்டென்ஷனோட பண்ற மாதிரி இருக்கு. நிஜமாவே உனக்கு எதுவும் தெரியாதா, நீயும் அவங்க கூட இருந்திருக்கல்ல?" என்று ஹர்ஷா சந்தேகமாகக் கேட்க, "அவங்க கூட பழகியிருக்கேன் அண்ணா, ஆனா... ஒருகட்டத்துல அவனுங்களோட பிஹேவியரும் எண்ணமும் எனக்கும் வைஷ்ணவிக்கும் ஒத்து வரல. அதனால அவங்களோட பழகுறத நிறுத்திட்டோம். ஆனா அவங்க இறந்தது எனக்கும் வருத்தம்தான். இப்போ க்ரிஷ் மட்டும்தான் உயிரோட இருக்கான்ல!" என்று மனவேதனையோடு கேட்டான் அவன்.



"ஆமா அபி... ஆனா, அந்த கொலைகாரனால கண்டிப்பா க்ரிஷ்ஷ எதுவும் பண்ண முடியாது. ஏன்னா எங்க ப்ளான் அப்படி!" என்று தன் திட்டத்தை சொன்ன ஹர்ஷா, "யுகனோட வீட்டை பத்தி அவன் யோசிச்சிருக்க கூட மாட்டான், ஆனா ஒன்னு யுகனோட சாவுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்" என்று விழிகளில் தீப்பொறி பறக்க சொல்ல, அபியின் விழிகளும் கோபத்தைக் கக்கின.



அதேநேரம் ஆஃபீஸ் கீபோர்ட்டில் தீவிரமாக எதையோ டைப் செய்தவாறு அமர்ந்திருந்தாள் ஆராதியா.



"தொடர்ந்து வரும் கொலைகள். போலீஸார் கண்டுபிடித்த புதிய திருப்பம். கொலையுடன் சம்பந்தப்பட்ட இன்னொரு மர்ம நபர். யார் அது?" அடுத்தநாள் பத்திரிகைக்கான தலைப்பு செய்தியை டைப் செய்தவள் அதை விழிகளை சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.



"ஊஃப்... ஏன் என்னால எதையும் யோசிக்க முடியல. ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ச்சே!" என்று தலையைத் தாங்கிக்கொண்டவள், நேரத்தைப் பார்க்க அதுவோ இரவு பதினொரு மணியைக் காட்டியது.



ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு ஆஃபீஸிலுள்ள கழிவறைக்குச் சென்றுவிட்டு முகத்தை அடித்துக் கழுவ, திடீரென பின்னாலிருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது.



வேகமாகத் திரும்பிப் பார்த்தவள் பின்னே யாருமில்லாததை சந்தேகமாகப் பார்த்துவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற, யாரோ பின்னாலிருந்து பின்தொடர்ந்து வருவது போல் அவளுக்குள் தோன்றியது.



வேகமாகத் திரும்பியவள் மீண்டும் முன்னோக்கி நடக்க, "ஆராதியா..." என்றொரு குரல் அவளுடைய காதில் நன்றாகவே விழுந்தது.



உடனே அவள் திரும்பிப் பார்க்க, அடுத்தகணம் அவளுடைய விழிகள் தன் பின்னே நின்றிருந்த உருவத்தைப் பார்த்ததும் தெறித்து விடுமளவிற்கு விரிந்துக்கொண்டன.



***************

மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்களே.. 👇

https://aadvikapommunovels.com/threads/மையவிழிப்-பார்வையிலே-கருத்துத்-திரி.2552/
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 15




"யார் நீ...?" என்று கத்திக்கொண்டு ஆராதியா திரும்ப, அவளுக்கு பின்னால் நின்றிருந்த அந்த கருப்பு முகமூடி அணிந்திருந்தவனோ கையிலிருந்த கூரிய கத்தியை அவளை நோக்கி நீட்டினான்.



அவளோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



அதைத் தடுப்பது போல் அவள் தன்னை மீறி தன் கரத்தால் கத்தியை பிடித்து விட, அதுவோ அவளுடைய உள்ளங்கையை நன்றாக பதம் பார்த்தது.



அந்த வலியில், "ஆஆ... அம்மா..." என்று ஆராதியா கத்திவிட, "ச்சே!" என்று சலித்துக்கொண்டு மீண்டும் கத்தியால் அவளை அவன் குத்த வர, திகில் நிறைந்த பார்வையோடு அவனைப் பார்த்தவளுக்கு என்ன நடக்கிறது என்று கிரகிக்கவே முடியவில்லை.



உடனே சுதாகரித்து அவனுடைய தாக்குதலிலிருந்து தப்பித்தவள், வேகமாக அங்கிருந்து ஓட, அவள் அணிந்திருந்த முந்தானையை பற்றியிழுத்தான் அவன்.



"ஹெல்ப்... ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. ப்ளீஸ்!" என்று அழுதுக்கொண்டே கத்த ஆரம்பித்தாள் ஆராதியா.



அவனோ மற்ற கரத்தால் அவளின் வாயைப் பொத்தி அவளுடைய கழுத்தை நோக்கி கத்தியை கொண்டு செல்ல, இவளுக்கோ மரண பயமே வந்துவிட்டது.



"ம்ம்... ம்ம்ம்...." என்று கத்தவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் அவள் திணறிக்கொண்டிருக்க, திடீரென அந்த பாதைக்குள் நுழைந்த சில ஆடவர்களின் விழிகளுக்கு இது சரியாக சிக்க, "டேய் அங்க பாருங்கடா, டேய்... யாருடா நீ?" என்று கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடி வந்தனர்.



அவர்களைப் பார்த்ததும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.



ஆராதியாவை தூரமாக தள்ளிவிட்டவன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி மறைந்துவிட, அவன் தள்ளிவிட்ட வேகத்தில் அங்கிருந்த பெரிய கல்லில் மோதி தரையில் விழுந்த ஆராதியா சுயநினைவின்றி கிடந்தாள்.



அவனை துரத்திச் சென்ற ஆடவர்களின் விழிகளுக்கு அவன் சிக்காமல் போக, உடனே ஆம்பியூலன்ஸ்ஸிற்கு அழைத்து விடயத்தை சொல்லி அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர்.



கூடவே, அவளின் அலைப்பேசியிலிருந்த அவசர எண்ணிற்கு அழைக்க அதை ஏற்றது என்னவோ ஹர்ஷாதான்.



ஆராதியாவின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும், 'இவ என்ன இந்த நேரத்துல கால் பண்றா?' என்று யோசித்துக்கொண்டு அழைப்பையேற்றவன் மறுமுனையில் கேட்ட செய்தியில் அதிர்ச்சியின் உச்சகட்டத்திற்கே சென்றுவிட்டான்.



வேகமாக இவன் வீட்டிலிருந்து வெளியேற, சரியாக அப்போதுதான் தன் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையப் போனான் அபிமன்யு.



"அபி.. அபி ஆருவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. என்னால ட்ரைவ் பண்ண முடியாது. ப்ளீஸ்!" என்று பதற்றமாகப் பேசிக்கொண்டே போக, "அண்ணா பதட்டப்படாம பேசுங்க, இப்போ ஹாஸ்பிடலுக்கு போகணும் அவ்வளவுதானே! வாங்க போகலாம்" என்று அபியே காரை செலுத்த, அவன் பக்கத்தில் விழிகள் கலங்க அமர்ந்திருந்தான் ஹர்ஷத்.



அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆராதியா சுயநினைவுக்கு வந்து மெல்ல விழிகளைத் திறக்க, அவள் பக்கத்தில் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் ஹர்ஷா.



"ஆரு, ஆர் யூ ஓகே? ரொம்ப வலிக்குதா?" என்று மெல்லிய குரலில் அவன் கேட்க, அவளோ வேக மூச்சுக்களை இட்டவாறு அவனை பதற்றமாகப் பார்த்தாள்.



"ஹர்.. ஹர்ஷா... அவன் என்னை கொ.. கொல்ல வந்தான்... எனக்.. எனக்கு பயமா இருக்கு" என்று வார்த்தைகள் தடுமாற அவள் பேச, இவனுக்கோ கிட்டத்தட்ட எதுவுமே புரியவில்லை.



"என்ன.. என்ன சொல்லுற ஆரு? எனக்கு ஒன்னும் புரியல" என்று ஹர்ஷா அவளின் வார்த்தைகள் புரியாமல் கேட்க, "அவன் என்னை கொல்ல வந்தான் ஹர்ஷா" என்று ஆராதியா வார்த்தைகளைக் கோர்த்து சொன்னதும், "யா.. யாரு?" என்று கேட்டவனின் வார்த்தையில் அத்தனை அதிர்ச்சி.



"தெரியல ஹர்ஷா" என்றவள் நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடிக்க, அவனுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்து பின் கோபத்தீயைக் கக்கின.



மொத்தக் கோபத்தையும் சேர்த்து கை முஷ்டியை இறுக்கி சுவற்றில் ஓங்கிக் குத்தியவன், அடுத்தநொடி ப்ரணவிற்குதான் அழைத்தான்.



"ஹெலோ..." என்ற ப்ரணவின் குரலிலேயே அவன் ஏதோ வேலை விடயமாக வெளியில் இருப்பது தெரிய, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், "ப்ரணவ், நான் இப்போ உங்கள பார்த்தே ஆகணும். இப்போவே..." என்றான் ஹர்ஷா அழுத்தமாக.



ப்ரணவிற்கு ஒன்றுமே புரியவில்லை.



"மொதல்ல என்னாச்சுன்னு சொல்லுங்க ஹர்ஷா, நான் இங்க ஒரு முக்கியமான விஷயமா வெளியில வந்திருக்கேன்" என்று அவன் சொல்ல, அதையெல்லாம் கேட்கும் நிலையிலில்லை அவன்.



"எந்த வேலையா இருந்தாலும் இப்போ நீங்க வில்லியம் ஹாஸ்பிடலுக்கு வந்தே ஆகணும்" என்ற ஹர்ஷாவின் வார்த்தைகளில் சட்டென ஜீப்பை நிறுத்தியவன் அடுத்து ஹர்ஷா நடந்ததை சொன்னதும் வேகமாக ஹாஸ்பிடலை நோக்கி ஜீப்பை செலுத்தினான்.



அங்கு ஆராதியா ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, ஹர்ஷா தகவலை சொன்னதும் வேகமாக வந்த லலிதா மகளின் நிலையைப் பார்த்து அழுத வண்ணம் அமர்ந்திருக்க, அவரைத் தேற்றிக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி.



அவனோ ஒற்றைக் காலை மடக்கி சுவற்றில் சாய்ந்திருந்தவன் ப்ரணவைக் கண்டதும் அவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற, அதை நோட்டமிட்ட வைஷ்ணவிக்கு ஏனென்று தெரியாமல் இதயம் படுவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.



இங்கு வெளியில் உச்சகட்ட கோபத்தோடு நின்றிருந்த ஹர்ஷாவோ தன்னிலையை முழுதாக இழந்திருந்தான்.



"ஆருவ எதுக்காக அவன் கொல்ல ட்ரை பண்ணணும் ப்ரணவ்? உங்க டிபார்ட்மென்ட் அந்த கொலைகாரன கண்டுபிடிக்காம என்னதான் பண்ணிக்கிட்டு இருக்காங்க? என்ட், உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. அது என்னன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்" என்று அவன் அழுத்தமாக சொல்ல, ப்ரணவின் விழிகள் சற்று தடுமாறின.



"லுக் ஹர்ஷா, நானும் இந்த கேஸ் பத்திதான் இஸ்வெஸ்டிகேட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நேரம் வரும் போது சில விஷயங்கள உங்.. உங்க கிட்ட சொல்றேன். ஆனா இப்போ அதுக்கான சிட்டுவேஷன் இல்லை. ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட் மீ!" என்று அவன் ஹர்ஷாவுக்கு புரிய வைக்க, "வாட்! ஆருவ கொலை பண்ற அளவுக்கு போனதுக்கு அப்பறம் எப்படி எங்களால நிம்மதியா இருக்க முடியும்? இப்போவே என்ன நடந்துச்சு தெரிஞ்சாகணும்" என்றான் ஹர்ஷா ஒற்றைப் பிடியில்.



"அது... அது வந்து..." என்று ப்ரணவ் ஏதோ சொல்ல வர, வேகமாக அங்கு வந்த வைஷ்ணவி, "மாமா, அக்கா எழுந்துட்டாங்க" என்றாள் வேகமாக.



அதன்பிறகு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை அவன். தன்னவளைத் தேடி அறைக்குள் அவன் ஓடிச் செல்ல, வைஷ்ணவியை முறைத்துப் பார்த்தான் ப்ரணவ்.



"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே சமாளிக்க போற, நானும் ரொம்ப நாளைக்கு இதை மறைச்சு வைக்க போறதில்ல. நீயே நடந்தத சொல்றது பெட்டர்" என்று அவன் பற்களைக் கடிக்க, கலக்கமும் பயமும் கலந்த விழிகளோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள் வைஷ்ணவி.



ஏனோ அந்த பார்வை அவனை உள்ளுக்குள் ஏதோ செய்ய, தன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.



"மீராவ பத்தி நான் தெரிஞ்சுக்கணும், நந்தினியோட வீட்டுல அவ சம்பந்தப்பட்ட எதுவுமே இல்லை" என்று யோசித்தவாறு அவன் சொல்ல, "மீரா அவ்வளவா யார் கூடவும் பேச மாட்ட, அவளுக்குள்ள நிறைய ரகசியங்கள் இருக்கும். நந்தினி இல்லாம வேற ஒருத்தங்க அவ கூட ரொம்ப நெருக்கமா இருந்திருக்காங்க. ஆனா அது யாருன்னுதான் தெரியல" என்றாள் வைஷ்ணவி நெற்றியை நீவிவிட்டபடி.



"மே பீ அது அவளோட காதலனா கூட இருக்கலாம்ல!" என்று ப்ரணவ் சந்தேகமாகக் கேட்க, அதேநேரம் ஆராதியாவின் கரத்தைப் பற்றியிருந்த ஹர்ஷாவின் விழிகளிலிருந்து விழிநீர் ஓடி தரையைத் தொட்டது.



"இப்போ பெட்டரா ஃபீல் பண்றியா ஆரு?" என்று அவன் கேட்க, "ம்ம்.. எனக்கு வீட்டுக்கு போகணும் ஹர்ஷா. ப்ளீஸ்!" என்று தழுதழுத்த குரலில் சொன்னாள் அவள்.



"ஆமா தம்பி, எனக்கும் பயமா இருக்கு. நான் என்ன பாவம் பண்ணேன்னு தெரியல, ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்துட்டே இருக்கு. தயவு செஞ்சு தியாவ வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்" என்றார் லலிதா அழுகையோடு.



ஹர்ஷாவுக்கும் அதுவே சரியென்று தோன்ற, அப்போதே தன்னவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான் அவன்.



அன்றைய இரவு முழுக்க தன்னவளை விட்டு விலகவே இல்லை ஹர்ஷா. அவள் கட்டிலில் உறங்க, இவன் தலையை மட்டும் அவளின் முகம் தெரியுமாறு கட்டில் மெத்தையில் வைத்து அமர்ந்த நிலையில் உறங்கியிருக்க, லலிதாவும் அவனை தடுக்கவில்லை.



ஏனோ ஹர்ஷாவின் விழிநீர் அவனின் காதலை அவருக்கு உணர்த்தியதோ என்னவோ!



அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிய, தூக்கத்திலிருந்து மெல்ல கண் விழித்த ஆராதியாவுக்கு விழிகளைத் திறந்ததுமே ஹர்ஷாவின் முகம்தான் தெரிய, சற்று பதறியேவிட்டாள்.



பதற்றத்தில் சுற்றி முற்றி பார்த்தவள் தன் வீட்டிலிருப்பதை உணர்ந்ததுமே நிம்மதி பெருமூச்சு விட, அவளுடைய பார்வை அடுத்து குழந்தைப் போல் உறங்கிக்கொண்டிருந்த தன்னவனின் முகத்தில்தான் படிந்தது.



காற்றில் அவனுடைய அடர்ந்த கேசம் அசைந்தாட, ஏனோ அவனைப் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை அவளுக்கு. ஆறு வருடங்களுக்கு முன் அவனின் காதலை உணர்ந்த அந்த கணத்தில் மனதில் தோன்றிய அதே உணர்வும் காதலும்தான் இப்போது வரை...



அவனையே ரசித்தவாறு அமர்ந்திருந்தவளின் நினைவுகள் அவனுடனான முதல் சந்திப்பை நினைத்துப் பார்த்தது.



ஆறு வருடங்களுக்கு முன் கல்லூரியில்,



"தியா, ஃபர்ஸ்ட் டே காலேஜ், ரொம்ப பயமா இருக்கு. ரேகிங்ல மட்டும் சிக்கவே கூடாது கடவுளே!" என்று ஆராதியாவின் தோழி மித்ரா இருக்கும் எல்லா கடவுள்களையும் வேண்டியவாறு நடந்து வர, ஆராதியாவுக்கும் அந்த பயம் லேசாக இருக்கத்தான் செய்தது.



திடீரென, "ஏய் என்ன, சீனியர்ஸ்ஸ பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்க. இரண்டு பேரும் முன்னாடி வாங்க" என்று ஒருவன் கத்த, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்ட இருவரும் அவர்களின் முன்னே சென்று நின்று மலங்க மலங்க விழித்தனர்.



"அண்ணா, தயவு செஞ்சு எங்கள விட்டுருங்க. நாங்க க்ளாஸுக்கு போகணும்" என்று மித்ரா பயந்தபடி சொல்ல, "ஆஹான்! அதெல்லாம் போயிக்கலாம். அதுக்கு முன்னாடி சீனியர்ஸ்ஸ கண்டுக்காம போனதுக்கு பனிஷ்மென்ட் தர வேணாம்" என்றான் மற்றொருவன்.



"இப்போ நாங்க என்ன பண்ணணும்னு சொல்லுங்க" என்று ஆராதியா தானாக முன் வர, "அது... நின்னுக்கிட்டு விடாம ஓடணும். அதுவும் ரொம்ப வேகமா" என்றான் இன்னொருவன்.



"அது அண்ணா இவளுக்கு வீசிங் இருக்கு. இவளால பண்ண முடியாது. நான் வேணா இவளுக்கும் சேர்த்து பண்றேன்" என்று தோழியின் பிரச்சனையை சொல்லி அவளை காப்பாற்ற முயற்சித்தாள் மித்ரா.



ஆனால், அவர்களோ அவள் சொன்னதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.



கேலியாக சிரித்து சொன்னதை செய்யுமாறு மிரட்ட, வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்னதை வேகமாக செய்ய ஆரம்பித்த ஆராதியாவுக்கு ஒருகட்டத்தில் இழைக்க ஆரம்பித்து மூச்சுக்கே சிரமமாக அப்படியே தரையில் விழப் போனாள்.



ஆனால், ஏனோ அவளின் உடல் அந்தரத்தில் மிதக்க, அவளைத் தாங்கியிருந்தன ஹர்ஷத்தின் கரங்கள்.



விழிகளை பாதி மூடிய நிலையில் வேக மூச்சுக்களை இட்டவாறு தன்னைத் தாங்கியிருந்தவனை அவள் பார்க்க முயற்சிக்க, ஏனோ அவளுடைய கலங்கிய விழிகளுக்குள் மங்கலாகத்தான் தெரிந்தான் அவன்.



ஹர்ஷாவோ அவளையே இமை கொட்டாமல் பார்த்திருந்தவன், "ரிலாக்ஸ்" என்று சொல்ல, விழிநீர் கன்னத்தின் வழியே ஓட கண்களை முழுதாகத் திறந்துப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்துக்கொண்டன.



ஆனால் ஹர்ஷாவோ அவளை தன்னிடமிருந்து விலக்க மனமில்லாமல் தன் நண்பன் சங்கரிடம், "அடிங்க! வந்த மொதல் நாளே சீனியர்ஸ்ஸ ஏமாத்துறீங்களாடா! டேய் சங்கர், இவனுங்கள சும்மா விடாத, இன்னைக்கு அடிக்குற அடியில சீனியர்ஸ் இருக்குற பக்கம் தலை வச்சு கூட படுக்கக் கூடாது" என்று கத்த, வாயில் கை வைத்துவிட்டனர் இரு பெண்களும்.



"அடப்பாவிகளா! சீனியர்ஸ்னு பொய் சொல்லி ரேகிங் பண்ணிருக்கானுங்களா? அப்போ இவனுங்க சீனியர்ஸ் இல்லையா?" என்று அதிர்ச்சியோடு கேட்டவாறு எதேர்ச்சையாக திரும்பிய மித்ராவுக்கு அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியானது.



ஹர்ஷாவோ அவளை அப்போதும் கீழே விடாமல் கைகளில் தாங்கிக்கொண்டிருக்க, இருவரும் ஒருவரையொருவர் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.



அதன்பிறகு வந்த நாட்கள் பார்வையில் ஆரம்பித்து பின் காதலாக மாறிவிட அந்த முதல் சந்திப்பை நினைத்துப் பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் மெல்ல விரிந்துக்கொண்டன.



அவளுடைய கரம் தானாக எழுந்து மெல்ல அவனுடைய கேசத்தை வருடிக் கொடுத்தது.



அந்த தொடுகையில் ஹர்ஷத் சட்டென கண் விழித்துவிட, வேகமாக தன் கரத்தை இழுத்துக்கொண்டவள் எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்துக்கொண்டிருந்தாள்.



"ஆரு, யூ ஃபீல் பெட்டர்? சாப்பிடுறதுக்கு ஏதாச்சும் கொண்டு வரட்டுமா, இஸ் தெயார் எனிதிங் அர்ஜென்ட்? ஆன்ட்டியா கூப்பிடட்டுமா?" என்று பதற்றமாக அவன் கேட்டுக்கொண்டே போக, இல்லையெனும் விதமாக தலையசைத்தவள் தன்னவனை அருகே வரும்படி விழிகளாலேயே அழைத்தாள்.



அவனோ கேள்வியாக புருவத்தை நெறித்த வண்ணம் அவளை நோக்கிச் செல்ல, அவனின் சட்டைக் காலரைப் பற்றிய ஆராதியா அவனிழில் அழுந்த முத்தத்தைப் பதிக்க, விழி விரித்து நின்றிருந்தவனோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



அவளோ மெல்ல அவனை விட்டு விலகி இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் அமர்ந்திருக்க, சிலை போல் நின்றிருந்த ஹர்ஷத்திற்கு நடப்பை உணரவே நிமிடங்கள் தேவைப்பட்டன.



அன்றிரவு,



அன்று முழுவதும் வீட்டிலிருந்து எங்கும் வெளியே செல்லவில்லை ஆராதியா. ஹர்ஷாவும் அவளை விட்டு விலகாமல் அவள் பக்கத்திலேயே ஏதோ பாதுகாப்பு அதிகாரி போல் அமர்ந்திருக்க, அப்போதுதான் ஹர்ஷாவுக்கு அந்த கேள்வி மனதில் உதித்தது.



"ஆரு, நீ ஆஃபீஸ்ல இருக்கும் போதே ஃபீல் பண்ணேன்னா ஏன் எனக்கு கால் பண்ணல, பண்ணியிருக்கலாமே!" என்று அவன் சொல்ல, "சீக்கிரமா வீட்டுக்கு போனா போதும்னு மட்டும்தான் மனசுக்குள்ள தோனிக்கிட்டே இருந்துச்சு. ஆனா... அவன் என்னை கொல்ல ட்ரை பண்ணும் போது நான் சில விஷயங்கள நோட் பண்ணேன். அது... என்னை கொல்ல வந்தவன் எனக்கு ரொம்ப பழக்கமோன்னு தோனுச்சு. அவனோட வலது கையில ஒரு டாட்டூ இருந்துச்சு" என்று தான் கவனித்த விடயங்களை மூளையை பிழிந்து யோசித்தவாறு சொன்னாள் ஆராதியா.



தன்னவள் சொன்னதைக் கேட்டு ஹர்ஷாவின் விழிகள் அதிர்ச்சியோடு விரிய, அவனுடைய மனக்கண் முன் அந்த ஒருவனின் முகம்தான் வந்து போனது.


**************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க ஃப்ரென்ட்ஸ்...
 

Sheha zaki

Member
Wonderland writer

அத்தியாயம் 16





ஆராதியா தான் பார்த்ததை சொல்லி முடிக்க, ஹர்ஷாவின் மனக்கண் முன் ப்ரணவின் முகம்தான் தோன்றி மறைந்தது.



"வெயிட் ஆரு, முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. நான் போயிட்டு சீக்கிரம் வரேன்" என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறிய ஹர்ஷா ப்ரணவிற்கு அழைத்து அவன் ஸ்டேஷனில் இருப்பது தெரிந்து அவனைத் தேடிச் சென்றான்.



போலிஸ் ஸ்டேஷனுக்கு முன்னே வண்டியை நிறுத்தியவன், கைக் காப்பை ஏற்றிவிட்டவாறு ஸ்டேஷனுக்குள் செல்ல, அங்கு தன் கேபினில் முக்கியமான ஃபைலொன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்தான் ப்ரணவ்.



ஹர்ஷாவோ அவன் முன்னே சென்று நிற்க, அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தவன், "என்ன விஷயம் ஹர்ஷா, எதுக்கு என்னை பார்க்கணும்னு சொன்னீங்க?" என்று ஃபைலை மூடி ஓரமாக வைத்தவாறுக் கேட்க, அடுத்தகணம் மின்னல் வேகத்தில் அவனை நெருங்கி அவனுடைய முகத்திலேயே ஓங்கிக் குத்தியிருந்தான் ஹர்ஷா.



இந்த தாக்குதலை ப்ரணவ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்பது அவனுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்டியது.



"வாட் த ****... எதுக்குடா என்னை அடிச்ச?" என்று கேட்டுக்கொண்டே பதிலுக்கு ஹர்ஷாவை அவன் அடிக்க, மற்றவனுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது.



"தப்பெல்லாம் பண்ணிட்டு எப்படிடா உன்னால இப்படி இருக்க முடியுது? ச்சீ... கொலைகார நாயே! இத்தனை நாள் எங்கள ஏமாத்திட்டு இருந்திருக்க, ஆருவ கொல்ல கூட ட்ரை பண்ணியிருக்க. உன்னை சும்மாவே விடக் கூடாது, இப்போ உன்னை கொல்லாம விட்டா இன்னும் எத்தனையோ உசுரு போகும்" என்று கெட்ட வார்த்தைகளைக் கொண்டு ஆவேசமாகக் கத்தியவாறு ஹர்ஷா ப்ரணவை சரமாரியாக அடித்துக்கொண்டே போக, ஒருகணம் அவன் சொன்னதை கிரகிக்கவே ப்ரணவிற்கு சில கணங்கள் பிடித்தன.



அதேநேரம் வெளியிலிருந்த சில அதிகாரிகளோ சத்தம் கேட்டு ப்ரணவின் கேபினிற்குள் நுழைய, அங்கு கண்ட காட்சியில் மொத்தப் பேருக்குமே அதிர்ச்சிதான்.



"ஏய்... ஏய்..." என்று அங்கிருந்த அதிகாரிகள் ஹர்ஷாவை பிடித்து இழுக்க, அந்த பிடிவாதக்காரனோ தன்னிலையிலிருந்து கொஞ்சம் கூட இறங்கியபாடில்லை.



அவனை ப்ரணவிடமிருந்து பிரித்தெடுத்து நிறுத்துவதற்குள் அந்த அதிகாரிகளுக்குதான் போதும் போதுமென்று ஆகிவிட்டது.



ப்ரணவோ கசங்கிய சட்டையை சரிசெய்தவாறு எழுந்து நிற்க, "அதிகாரம் பதவி இருக்குன்னுதானே இத்தனையும் பண்ணியிருக்க. ஆதாரத்தோட நீதான் கொலைகாரன்னு நான் நிரூபிக்கிறேன், உன்னால இனி தப்பிக்கவே முடியாது" என்று ஹர்ஷா வெறிப்பிடித்தவன் போல் கத்த, அந்த அதிகாரிகள் கூட ப்ரணவை சந்தேகமாகப் பார்த்தனர்.



இதற்குமேல் அமைதியாக இருப்பது என்னவோ ப்ரணவிற்கும் சரியாகத் தோன்றவில்லை.



"ஹர்ஷா, ப்ளீஸ் காம் டவுன். நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசுறீங்க" என்று அவன் கோபத்தை அடக்கிக்கொண்டு நிதானமாக சொல்ல, "அட ச்சீ வாய மூடு! ஆருவ கொல்ல ட்ரை பண்ணியிருக்க, உன் கையில இருக்குற டாட்டூவே உன்னை காமிச்சு கொடுத்திருச்சு. போதுமா?" என்று தீப்பார்வை பார்த்தவாறு சொன்னான் மற்றவன்.



ஒருகணம் ப்ரணவிற்கு எதுவுமே புரியவில்லை.



"வாட்! என்ன டாட்டூவா" என்று தன் கையிலிருந்த டாட்டூவைப் பார்த்தவன், "இதைப் பத்தி தியா முன்னாடி பேசலாம், கண்டிப்பா இது ஒரு மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்" என்று உறுதியான குரலில் சொல்ல, அந்த அதிகாரிகளின் கரங்களை உதறிவிட்டு சட்டையை சரிசெய்தான் ஹர்ஷா.



"சரி, ஆருவே அவ வாயால சொல்லட்டும். அதுவரைக்கும் நீ இங்கயிருந்து எங்கேயும் போகக் கூடாது. புரியுதா? சார் இவன் பக்கத்துல ஒரு இரண்டு பேராச்சும் நில்லுங்க, இல்லன்னா நம்மளையே போட்டு தள்ளிருவான்" என்றவன் ஆராதியாவுக்கு அழைத்து விடயத்தை சொல்ல, அடுத்த பத்தே நிமிடங்களில் வைஷ்ணவியோடு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தாள் அவள்.



"ஹர்ஷா, என்னாச்சு? ஏன் ப்ரணவ அடிச்சடா?" என்று அவள் பதற்றமாகக் கேட்க, "ப்ரணவ்..." என்று கலங்கிய விழிகளோடு அவனை நெருங்கி அணைத்துக்கொண்டாள் வைஷ்ணவி.



அதைப் பார்த்த ஹர்ஷாவுக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..



"ச்சே! ஒரு கொலைகாரன போய் லவ் பண்ற. எல்லா வயசு கோளாறு" என்று தலையிலடித்துக் கொண்டவன் வேகமாக சென்று வைஷ்ணவியை அவனிடமிருந்து தள்ளிவிட்டு ப்ரணவின் கரத்திலிருந்த டாட்டூவைக் காட்டினான்.



அதைப் பார்த்த ஆராதியாவோ அப்போதும் ஹர்ஷாவை புரியாமல் பார்க்க, "லுக் ஆரு, நீ சொன்ன மாதிரி இவன் கையிலதான் டாட்டு இருக்கு. அன்னைக்கு உன்னை கொல்ல ட்ரை பண்ணதும் இவன்தான். என்ட், இதுவரைக்கும் நடந்த அத்தனை கொலைக்கும் இவன்தான் காரணம்" என்று அந்த ஸ்டேஷனே அதிரக் கத்தினான்.



இதைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்த இரு பெண்களுக்கும் தலை சுற்றாத குறைதான்.



"ஹர்ஷா, என்ன பேசுற. அது.. அது ப்ரணவ் கிடையாது" என்று ஆராதியா அதிர்ச்சி குறையாத குரலில் சொல்ல, "அப்போ... யாரு? ப்ரணவ்தான் உனக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஒருத்தன், இந்த இந்த டாட்டூ கூட நீ சொன்ன மாதிரி இருக்கே" என்று பதிலுக்கு அதிர்ச்சியாகக் கேட்டான் ஹர்ஷா.



'ஊஃப்ப்..' என பெருமூச்சுவிட்டவள், "டாட்டூ இருந்துச்சு, ஆனா அது வேற மாதிரி இருந்துச்சு. இட்ஸ் லைக் அ ஸ்னேக். கண்டிப்பா அது ப்ரணவ் கிடையாது. அவன்கிட்ட சாரி கேளு" என்று அழுத்தமாக சொல்ல, நெற்றியை நீவி விட்டுக்கொண்டவனுக்கு ப்ரணவின் முகத்தைப் பார்த்து பேசவே ஒரு மாதிரியாக இருந்தது.



"அதெல்லாம் வேணாம் தியா, இந்த மாதிரி நேரங்கள்ல இப்படி யோசிக்க தோனுறது சகஜம்தான்" என்று ப்ரணவ் பெருந்தன்மையாக சொல்ல, "அது.. அது வந்து... ஏற்கனவே ஆருவுக்கு இப்படி ஆனதுலயிருந்து கோபத்துலதான் இருந்தேன். ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டேன் ப்ரணவ். ஐ அம் சாரி!" என்று சிறு தயக்கத்தோடு மன்னிப்பை வேண்டினான் ஹர்ஷா.



ப்ரணவோ சிறு புன்னகையோடு தலையசைக்க, திடீரென அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.



திரையைப் பார்த்தவன், புருவ முடிச்சுகளோடு அழைப்பையேற்று காதில் வைக்க, மறுமுனையில் சொன்ன செய்தியில் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.



அழைப்பைத் துண்டித்தவன், "க்ரிஷ் இஸ் மிஸ்ஸிங்" என்று சொல்ல, அவனுக்கு குறையாத அதிர்ச்சியோடு மற்ற மூவரும் நின்றிருந்தனர்.



அதற்குமேல் காத்திருக்காமல் வேகமாக ஹர்ஷாவை அழைத்துக்கொண்டு யுகனின் வீட்டிற்கு சென்றான் ப்ரணவ்.



இவர்கள் உள்ளே நுழைய கண்ணீரோடு தலையில் கை வைத்து அமர்ந்திருந்த வேந்தன், "சார், பையன காணோம் சார். என்னாச்சு ஏதாச்சுன்னு ஒன்னுமே தெரியல. பயமா இருக்கு" என்று மகனுக்கு ஏதாவது நேர்ந்திடுமா என்ற பயத்தோடு பேச, "மொதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க" என்றான் ஹர்ஷா அழுத்தமாக.



"யார் எவன்னு தெரியல, திடீர்னு வந்தான். க்ரிஷ்ஷோட ஃப்ரென்டுன்னு சொன்னான், அவன் கூடத்தான் போனான், நானும் வந்துடுவான்னு நினைச்சேன். ஆனா.. ரொம்ப நேரமாகிடுச்சு. இன்னும் அவன காணோம்" என்று அவர் அழுதுக்கொண்டே சொல்லி முடிக்க, ப்ரணவோ வேகமாக அந்த ஃப்ளாட்டின் ஆஃபீஸ் அறையை நோக்கிச் சென்றான்.



"மே பீ சிசிடீவி கேமராவுல ஏதாச்சும் தெரியலாம்ல!" என்று ஹர்ஷாவிடம் சொல்லிவிட்டு ஃப்ளாட்டிற்கு பொறுப்பான காவலாளியிடம், "லாஸ்ட் டூ ஹவர்ஸ்கான சிசிடீவி ஃபுட்டேஜ் எனக்கு வேணும், அதுவும் இம்மீடியட்டா" என்று கட்டளையாக சொல்ல, அவரோ திருதிருவென விழித்தார்.



"சாரி சார்! சிசிடீவி கேமரா எதுவுமே வர்க் பண்ணாது. வெளியில இருக்குற ஒரேயொரு சிசிடீவி கேமரா மட்டும்தான் வர்க் பண்ணுது. ஃப்ளாட்டுல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்னு ஓனர் சொல்ல வேணாம்னு சொன்னாரு. அதான்..." என்று அசடுவழிந்தவாறு காவலாளி சொல்ல, "ச்சே! வர்க் பண்ற சிசிடீவி கேமராவோட ஃபுட்டேஜ மட்டுமாச்சும் காமிங்க" என்று கடுப்பாக சொன்னான் ஹர்ஷா.



அவர்களும் தேடிக் கண்டுபிடித்து போட்டுக் காண்பிக்க, அதிலோ ஃப்ளாட்டினுள் ஒரு மர்ம நபர் முகத்தை மறைத்தவாறு செல்லும் காட்சி சில செக்கன் கணக்குகளில் மட்டுமே இருக்க, ப்ரணவுக்கும் ஹர்ஷாவுக்கும் இதற்குமேல் என்ன செய்வதென்றே தெரியவில்லை.



"நாம தாமதிக்குற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான் ஹர்ஷா, மொதல்ல இங்கயிருந்து கெளம்பி தேட ஆரம்பிப்போம்" என்ற ப்ரணவ் தன் ஜீப்பில் ஏறி ஒரு பக்கமாக சென்று தேட ஆரம்பிக்க, இன்னொரு புறம் தன் புல்லட்டில் அங்குமிங்கும் க்ரிஷைத் தேடி அலைந்துத் திரிந்தான் மற்றவன்.



பல மணி நேரங்கள் கடந்திருக்கும், இவர்களின் தேடலின் முடிவு தோல்வியே! எங்கு தேடியும் அவனைப் பற்றி சிறு துரும்பு கூட கிடைக்கவில்லை.



"அய்யோ என் பையன்... அவனுக்கு என்னாச்சு? கடவுளே... அவனுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாதே!" என்று வேந்தன் அழுது புலம்பிக்கொண்டிருக்க, ஆடவர்கள் இருவரும் கையாலாகாத தனத்தோடு சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தனர்.



"அந்த நந்தினியோட இடத்தை சுத்தி முழு பாதுகாப்பு இருக்கு, அவன் அங்க போயிருக்குறதுக்கான வாய்ப்பே இல்லை. ச்சே!" என்று ஹர்ஷத் எரிச்சலாக சொல்ல, "சென்னை சிட்டியில இருக்குற எல்லா ஸ்டேஷனுக்கும் போலீஸுக்கும் க்ரிஷோட ஃபோட்டோ அனுப்பியிருக்கேன். சோ, யாராவது ஒருத்தர் பார்த்திருந்தா கூட கண்டுபிடிச்சிருவாங்க" என்று மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது போல் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டானோ என்னவோ!



வேந்தனோ எதையும் உணர்ந்துக்கொள்ளும் நிலையிலில்லை. தளர்ந்துப் போய் அந்த பெரியவர் அமர்ந்திருக்க, அன்றைய இரவு எல்லாருக்கும் தூங்கா இரவாக அமைந்தது என்றால் அடுத்தநாள் காலையோ அதிர்ச்சிக் குவியலோடு காத்திருந்தது அவர்களுக்கு.



இரவு முழுக்க ப்ரணவ் க்ரிஷைப் பற்றிய தேடலை முடித்து அரைமணி நேரத்திற்கு முன்தான் உறங்கியிருப்பான் போல! அமர்ந்திருந்த நிலையிலேயே அவன் உறங்கிக்கொண்டிருக்க, தொடர்ந்து அழைப்புக்கள் வந்துக்கொண்டே இருந்தன.



ஆரம்பத்தில் வந்த அழைப்புக்களை புறக்கணித்தவன், பின் ஒருகட்டத்தில் தூக்கக் கலக்கத்தோடு அழைப்பையேற்று பேச, அடுத்தகணம் மொத்தத் தூக்கமும் கலைந்தவனாய் எழுந்து நின்றுவிட்டான்.



அடுத்த நிமிடம் பக்கத்தில் தரையிலேயே உறங்கியிருந்த ஹர்ஷாவையும் வேந்தனையும் அழைத்துக்கொண்டு அந்த பிரபலமான கல்லூரிக்கு ப்ரணவ் செல்ல, அங்கோ மக்கள் கூட்டமும் அதிகாரிகளும் கூடியிருந்தனர்.



எல்லோர் முகத்திலும் ஒரு கலக்கமும் பதற்றமும் தெரிய, வேந்தனை ஜீப்பிலேயே வைத்துவிட்டு ஹர்ஷாவை மட்டும் அழைத்துக்கொண்டு கூட்டத்தை விலக்கியவாறு முன்னே சென்றான் அவன்.



"ப்ரணவ், கண்டிப்பா அவன்தானா?" என்று ஹர்ஷா சிறு பதற்றத்தோடு கேட்க, அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல் அவனின் விழிகளுக்கு எதிரே கிடந்தது அந்த சிதைக்கப்பட்ட உடல்.



அதைப் பார்த்த இரு ஆடவர்களும் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டனர். ஆம், அது சாட்சாத் க்ரிஷின் சடலம்தான்.



இதற்கு முன் அந்த நால்வரும் கொல்லப்பட்டது போல இவனும் கொல்லப்பட்டிருக்க, மூச்சு வாங்கியவாறு அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர் இருவரும்.



சரியாக பொறுமை காக்காமல் வண்டியிலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி வந்தார் வேந்தன்.



அவரோ ஆட்களை நகர்த்திவிட்டு ஹர்ஷாவின் அருகே வர, அவருடைய இதயமோ தன் மகனாக இருக்கக் கூடாதென்று வேகமாக பயத்தில் அடித்துக்கொண்டது.



ஆனால், அவருடைய வேண்டுதலைதான் கடவுள் ஏற்கவில்லையே!



தூக்கி வளர்த்த பிள்ளை கிடந்த நிலையைப் பார்த்து, "க்ரிஷ்..." என்ற பெரிய சத்தத்தோடு கதறியவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே மயங்கி சரிய, உடனே அவரைத் தாங்கிக்கொண்டான் ஹர்ஷா.



"அவர மொதல்ல இங்கயிருந்து அழைச்சுட்டு போங்க" என்ற ப்ரணவ் அடுத்து ஆக வேண்டியவைகளை செய்ய ஆரம்பிக்க, வேந்தனோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட, க்ரிஷின் மற்ற குடும்பத்தினருக்கும் தகவல் சொல்லப்பட்டது.



அதேநேரம் தகவலைக் கேள்விப்பட்ட வைஷ்ணவிக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்து கைக்கால்கள் நடுங்கத் தொடங்க, ஆராதியாவும் அதை கவனிக்காமலில்லை.



"வைஷு, ஆர் யூ ஓகே?" என்று அவள் கேட்டுக்கொண்டே சகோதரியின் தோளைத் தொட, திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தவளின் விழிகளிலிருந்து விழிநீர் அருவியாய் ஓடியது.



அடுத்தகணம் தமக்கையின் வயிற்றைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள் வைஷ்ணவி.



"சத்தியமா என் மேல எந்த தப்பும் இல்லைக்கா, கண்டிப்பா அவன் என்னை கொன்னுருவான், நான் செத்துருவேனோன்னு பயமா இருக்கு. நான் எதுவுமே பண்ணல, என்னை காப்பாத்து அக்கா! ப்ளீஸ்... நா.. நான் எதுவுமே பண்ணல" என்று அவள் ஏதேதோ உளறிக்கொண்டு கதறியழ, ஆராதியாவுக்கு கிட்டத்தட்ட எதுவுமே புரியவில்லை.



அறையில் உறங்கிக்கொண்டிருந்த லலிதாவை எட்டிப் பார்த்தவள் உடனே வைஷ்ணவியின் முழங்கையைப் பற்றி இழுத்துக்கொண்டு தனதறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.



ஏதோ ஒன்று தவறாக நடந்திருப்பது மட்டும் அவள் மனதிற்கு புரிய, அவளை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தவள், "என்னாச்சுன்னு நீயா சொல்லிரு" என்று பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.



எச்சிலை விழுங்கிக்கொண்டவளின் இதழ்கள், "மீரா" என்ற பெயரை மட்டும் உச்சரித்தன.



அன்று ப்ரணவும் இதே பெயரை சொன்னது அவளுக்கு ஞாபகத்திற்கு வர, ஆராதியாவின் விழிகள் சந்தேகத்தில் சுருங்கின.



"யார் மீரா?" என்று அழுத்தமாக அவள் கேட்டதும், "அது... அது வந்து... இறந்து போன நந்தினியோட தங்கச்சி. என்னோட ஃப்ரென்ட்" என்று தரையை வெறித்த வண்ணம் சொன்னாள் வைஷ்ணவி.



அதிர்ந்து விழித்த ஆராதியா பின் அமைதியாகி அவள் சொல்ல வருவதை கவனிக்கத் தொடங்கினாள்.



அதேநேரம், ஹாஸ்பிடலில் வேந்தனை அனுமதித்துவிட்டு வேகமாக ப்ரணவை தேடி இறந்த உடல் கிடந்த இடத்திற்கு மீண்டும் வந்த ஹர்ஷா, அங்கு ஜீப்பில் இறுகிய முகமாக அமர்ந்திருந்தவனை புரியாமல் பார்த்தான்.



"பாடிய போஸ்மாட்டத்துக்காக கொண்டு போயிட்டாங்க, நீங்க எதுக்கு இங்கேயே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீஙக ப்ரணவ்?" என்று அவன் கேட்க, நிமிர்ந்து அவனை ஒரு பார்வைப் பார்த்தவன் மீண்டும் பார்வையைத் திருப்பிக்கொள்ள, மற்றவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.



"உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு, இப்போவாச்சும் நடந்தத சொல்லுங்க ப்ரணவ்" என்று ஹர்ஷா சொன்னதும் ஜீப்பின் மற்ற கதவை திறந்து விட்டான் அவன்.



அதற்கான அர்த்தத்தைப் புரிந்து அவனுக்கு பக்கத்தில் ஏறி அமர்ந்துக்கொண்டான் ஹர்ஷா.



"யூ நோ வாட் ஹர்ஷா, அந்த கொலையாளி தன்னோட ஃபைனல் டார்கெட்ட கடத்துறதுக்குள்ள நாம அவன கண்டுபிடிக்கணும். இல்லன்னா பெரிய இழப்பு நமக்குதான்" என்று ப்ரணவ் சொல்ல, "பெரிய இழப்பா?" என்று அதிர்ந்துப் போய் கேட்டான் ஹர்ஷா.



"ஆமா, வைஷ்ணவி" என்று அழுத்தமாக சொன்னவன், "ஷீட் ஷீட் ஷீட்! அவ அப்படி விட்டிருக்க கூடாது" என்று பற்களைக் கடித்து ஸ்டீயரிங்கை ஆவேசமாக ஓங்கிக் குத்த, ஹர்ஷாவோ குறையாத அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.



"மீரா, நந்தினியோட சிஸ்டர். அன்னைக்கு நீங்க கெஸ் பண்ணது சரிதான் ஹர்ஷா, எல்லா கொலைகளுக்கும் பின்னால ஒரு இன்டன்ஷன் இருக்கு, டூ இயர்ஸ்க்கு முன்னாடி என்னாச்சுன்னா..." என்று அன்று நடந்ததை ப்ரணவ் சொல்ல ஆரம்பிக்க, வைஷ்ணவியின் நினைவுகளும் கூட விழிநீரோடு அந்த சம்பவத்தை மீட்டிப் பார்த்தன.



இரண்டு வருடங்களுக்கு முன்...



**************

தஷுரி, ரதியின் ரணதீரன் கதைகள் Kobo writing life ல இருக்கு... கிட்டத்தட்ட அமேசன் மாதிரி தான்.. Kobo plus subscription பண்ணா மன்த்லி ஃப்ரீயா எல்லா கதைகளும் ரீட் பண்ணலாம்...



என்னோட amazon terminated account ல இருந்த மற்ற எல்லா கதைளையும் Kobo la Publish pannuven.. இதுக்கும் உங்க சப்போர்ட்ட கொடுங்க ஃப்ரென்ட்ஸ்... Happy Reading 😍😍


IN link 👇
https://www.kobo.com/in/en/search?q...or=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


USA link 👇
https://www.kobo.com/ww/en/search?q...or=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 17






"மீரா என்னோட ஃப்ரென்டுதான் அக்கா. காலேஜ்ல க்ரிஷ், கரண், அனிதா, ப்ரீத்தி, வினய் என்ட் அபி நாங்க எல்லாரும் ஒன்னாதான் இருப்போம். ஆனா காலேஜ் முடிஞ்சதுலயிருந்து அவ்வளவா நானும் அபியும் அவங்க கூட பழகுறதில்ல. கொஞ்சநாள்ல கான்டேக்ட் கூட இல்லாம இருந்தோம்.



அப்போதான் எனக்கு மீரா வர்க் ஷாப் போனப்போ ஃப்ரென்ட் ஆனா. ரொம்ப சாஃப்ட் வெகுளின்னு கூட சொல்லலாம். அப்போதான் எங்க பேட்ச்ல கொஞ்ச பேர் டூர் ப்ளான் பண்றதா சொன்னாங்க. அங்க நான் போயிருக்கவே கூடாது, அதுவும் மீராவ அழைச்சுட்டு போயிருக்க கூடாது"



என்று நிறுத்திய வைஷ்ணவியின் நினைவுகள் டூரில் நடந்த அந்த கசப்பான சம்பவத்தை மீட்டின.



"ஏய் வைஷு, எந்த எக்ஸ்கியூஸும் எங்ககிட்ட சொல்லாத. நம்ம பேட்ச்ல எல்லாரும் வராங்க. நீ கண்டிப்பா வரணும்" என்று ப்ரீத்தி சொல்ல, "அது... அது வந்து..." என்று தயக்கமாக இழுத்த வைஷ்ணவி, "சரி, நான் வரேன். வெளியாளுங்கள அழைச்சுட்டு வந்தா எந்த பிரச்சனையும் இல்லல்ல" என்று கேட்டாள் ஆர்வமாக.



"நோ நோ... தாராளமா யாரை வேணா அழைச்சுட்டு வா, பட் ரொம்ப வயசானதுங்களா இருக்காம இருந்தா சரி" என்று கேலியாக அவள் சொல்ல, "ஓகே ப்ரீத்தி, டூர்ல பார்க்கலாம்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்த வைஷ்ணவிக்கு மீராவை தன்னுடன் வர சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.



அடுத்த இரண்டு வாரங்களில் சுற்றுலா செல்வதற்கான நாளும் வர, அவர்கள் படித்த கல்லூரி வாசலுக்கே அந்த பெரிய பஸ் கொண்டு வரப்பட, மொத்தப் பேரும் நேரத்துக்கு ஆஜராகினர்.



"இங்க எனக்கு யாரையுமே தெரியாது, ஏன் வைஷு? நான் அக்கா கூடவே இருந்திருப்பேன்" என்று மீரா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு புலம்ப, "என்னை தெரியும்ல, அது போதும் உனக்கு" என்ற வைஷ்ணவி பல நாட்கள் கழித்து பார்க்கும் தோழமைகளோடு பேச ஆரம்பிக்க, அவள் பக்கத்தில் நின்றிருந்தாள் மற்றவள்.



சரியாக யாரோ அவளையே பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு பிரம்மை. புருவத்தை நெறித்தவள் அந்த ஊசித் துளைக்கும் பார்வையில் மனம் சொன்ன திசைக்குத் திரும்பிப் பார்க்க, அங்கோ யாருமில்லை.



சுற்றிமுற்றி பார்த்துவிட்டு மீண்டும் அவள் வைஷ்ணவியின் புறம் திரும்ப, அப்போதுதான் அவர்களுக்கருகே வந்து நின்றனர் அந்த ஐவரும்.



"அட உன் ஃப்ரென்டா வைஷு, நைஸ் டூ மீட் யூ" என்ற அனிதா மீராவையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த கரணின் வயிற்றில் முழங்கையால் குத்த, அவனோ அசடுவழிந்துக்கொண்டான் என்றால் க்ரிஷ் மற்றும் வினய்யின் பார்வையோ அவளை மேலிருந்து கீழ் அளவிட்டது.



அந்த பார்வையில் உண்டான அருவருப்பில் முகத்தை சுருக்கியவாறு தோழியின் பின்னே அவள் ஒளிந்துக்கொள்ள, "ரொம்பதான்!" என்று சிறு பொறாமையோடு உதட்டைப் பிதுக்கிவாறு அங்கிருந்து நகர்ந்தாள் ப்ரீத்தி.



அவள் பின்னாலேயே மற்ற நால்வரும் செல்ல, ஆடவர்களின் பார்வைதான் மீராவையே சுற்றி வட்டமடித்தது. வண்டி செல்வதற்கான நேரமும் நெருங்க, நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் தோழியோடு வண்டியில் ஏறிக்கொண்டாள் மீரா.



மூன்று நாட்களுக்கான சுற்றுலா அது. அத்தனை பேரும் ஒவ்வொரு தருணங்களையும் முழு சந்தோஷத்தோடு அனுபவிக்க, அந்த மூன்று ஆடவர்களின் பார்வையிலிருந்தும் தொடுகையிலிருந்தும் விலகியேதான் இருந்தாள் மீரா.



வைஷ்ணவியின் பின்னாலேயே குட்டி போட்ட பூனைப் போல் சுற்றிக்கொண்டிருப்பவள் வைஷ்ணவியிடம் இதைப் பற்றி சொல்லாது விட்டிருக்க,எல்லாமே நன்றாகத்தான் சென்றுக்கொண்டிருந்தது, மூன்றாவது நாளுக்கான இரவு வரை.



அன்று மூன்று பேருக்கு ஒரு அறை என்ற கணக்கில் அத்தனை பேரும் தங்குவதற்காக ஆடம்பரமான ரிசார்ட் ஒன்று புக் செய்யப்பட்டிருக்க, இவர்களின் சுற்றுலா பேருந்தும் அந்த அழகிய இடத்திற்கு முன் நின்றது.



யாரையோ பின்னே திரும்பி அடிக்கடி பார்த்தபடி நடந்து வந்துக்கொண்டிருந்த மீராவை மற்றவளும் கவனிக்காமல் இல்லை.



"என்னாச்சு உனக்கு, யாரை பார்த்து பார்த்து வர்ற. இந்த மூனு நாள்ல உன் நடவடிக்கையே சரியில்ல" என்று வைஷ்ணவி குறும்புப் புன்னகையோடு சொல்ல, "அது... அப்படியெல்லாம் எதுவுமில்லையே!" என்று சிறு தடுமாற்றத்தோடு சமாளித்தவள் தங்களுக்கான அறையில் நுழைந்து கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.



வைஷ்ணவியோ குளியலறைக்கு செல்வதற்காக துணிகளை எடுத்துக்கொள்ள, மெல்லிய புன்னகையோடு யாருக்கோ அலைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள் மீரா.



இதைப் பார்த்த அவள் தோழியின் விழிகளோ சந்தேகத்தில் சுருங்கின.



"ஏதோ இருக்கு, காய்கறி முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்" என்று நொடிந்துக்கொண்டவாறு குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள் அவள்.



அதேநேரம் தங்களின் அறையில் கரண், வினய் மற்றும் க்ரிஷ் மூக்கு முட்ட குடித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் அனிதாவும் ப்ரீத்தியும் சிகரெட்டை ஊதித் தள்ளியவாறு அமர்ந்திருந்தனர்.



"என்னடா இது, ஏதோ ஸ்கூல் டூர் மாதிரி ஒரு கிக்கே இல்லாம இருக்கு. நாளைக்கு காலையில கெளம்புறதுக்குள்ள இந்த போதைய விட பெருசா ஒரு போதைய அனுபவிக்கணும்டா" என்று வினய் போதையில் குளறியபடி சொல்ல, அவனை விஷம சிரிப்போடு பார்த்தான் கரண்.



"எனக்கு தோனினதுதான் உனக்கும் தோனியிருக்குன்னு நான் நினைக்கிறேன். நீ என்னடா சொல்லுற க்ரிஷ்?" என்று அவன் ஆர்வமாகக் கேட்க, "இதனால பிரச்சனை எதுவும் வந்துடாதே, அவ நம்ம காலேஜ் கூட கிடையாது. வைஷ்ணவியோட ஃப்ரென்டு" என்று சிறு பயத்தோடு சொன்னான் க்ரிஷ்.



"ஓ காட்! காய்ஸ் ஆர் யூ சீரியஸ்? அவ என்ன அவ்வளவு அழகாவா இருக்கா?" என்று ப்ரீத்தி விழிகளில் வன்மத்தோடு கேட்க, "உங்க இரண்டு பேர விட சூப்பர் ஃபிகர் அவ" என்று சொல்லி மூன்று ஆடவர்களும், 'ச்சீயர்ஸ்ஸ்...' என்று மதுக்குவளைகளை மோதி அப்படியே சிரித்தவாறு வாயில் சரித்தனர்.



இதில் இந்த இருவருக்கும் வயிறு பற்றியெறிந்தது.



"சரி விடு அனி, உங்கள விட்டா எங்களுக்கு வேற யாரு இருக்கா. நீங்கதானே எப்படியாச்சும் அவள இங்க அழைச்சுட்டு வரணும்" என்று அனிதாவின் கன்னத்தைத் தடவியவாறு கரண் சொல்ல, "வாட்! என்னால முடியாது. நான் கூப்பிட்டா வந்துடுவாளா என்ன?" என்று அதிர்ச்சியாகக் கேட்டாள் அனிதா.



"அவள கூப்பிட்டு எங்கள வம்புல மாட்டி விட போறீங்களா இடியட்ஸ்" என்று ப்ரீத்தியும் பதிலுக்கு கத்த, "நோ நோ... சும்மா அந்த பொண்ண டீஸ் பண்ணதான், வேற எதுவும் இல்லை. ட்ரஸ்ட் மீ!" என்று போலியாக சத்தியம் செய்தான் வினய்.



"இப்போ வேணாம், எல்லாரும் தூங்கினதும் போய் அவள அழைச்சுட்டு வாங்க" என்று க்ரிஷ் சொல்ல, "அப்போ அந்த வைஷ்ணவி..." என்று அனிதா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.



"இது சிந்திக்க வேண்டிய விஷயம்தான்" என்று நாடியை நீவிவிட்டவாறு கரண் யோசிக்க, மற்றவர்களும் புரியாமல் பார்த்தனர்.



"இப்போ என்ன, அவள அழைச்சுட்டு வரணும். அவ்வளவுதானே! வைஷ்ணவிய நான் பார்த்துக்குறேன்" என்று ப்ரீத்தி சொல்லிவிட்டு சிகரெட் புகையை ஊதித் தள்ள, இதை அறியாமல் வைஷ்ணவி நிம்மதியாக உறங்கியிருக்க, குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் மூழ்கிப் போயிருந்தாள் மீரா.



நேரம் கடக்க, கிட்டத்தட்ட பாட்டு பாடி ஆட்டம் போட்டு களைத்துப் போய் எல்லாரும் தத்தமது அறைக்குள் நுழைந்திருந்தனர்.



எல்லோரும் உறக்கத்தை தழுவியிருந்த அதேநேரம் தனக்கு வந்த குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு வைஷ்ணவியை வேகமாகப் பார்த்தாள் மற்றவள்.



வைஷ்ணவி ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதை அவளுடைய சீரான மூச்சுக்காற்றே வெளிப்படுத்த, மெல்ல அறையிலிருந்து வெளியேறி சுற்றி முற்றி பார்த்தவாறு நடந்தாள் மீரா.



அதேநேரம் மீராவை அழைக்கவென வந்த ப்ரீத்தியின் விழிகளுக்கு இவள் சிக்க, அவளுடைய இதழ்களோ கேலியாக வளைந்தன.



'மீனே வந்து வலையில சிக்குதே!' என்று முணுமுணுத்தவாறு அவளை நோக்கிச் சென்றவள், "ஹாய் மீரா, என்ன இந்த பக்கம்?" என்று கேட்க, அங்கு அவளை எதிர்பார்க்காதவளாக அதிர்ந்து நின்றவள், "அது... அது வந்து... சும்மாதான்" என்று சமாளிக்க முயற்சித்தாள்.



"ஓஹோ... இஃப் யூ டோன்ட் மைன்ட் நாம வேணா கொஞ்சம் நேரம் பேசலாமா?" என்று ப்ரீத்தி விழிகள் மின்ன கேட்க, என்ன சொல்லி மறுப்பதென்று தெரியாமல் வேறுவழியில்லாமல் அவள் தலையாட்டி வைக்க, அதுவோ போதுமென்றானது ப்ரீத்தீக்கு.



அடுத்தகணமே அவளை அழைத்துக்கொண்டு தங்களின் அறைக்குச் சென்றவள், "காய்ஸ் நம்ம ரூமுக்கு விருந்தாளி வந்திருக்காங்க. லெட்ஸ் வெல்கம் ஹெர்" என்று சொன்னபடி கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே செல்ல, பின்னே சென்ற மீராவுக்கு அந்த அறையிலிருந்து வந்த நெடியும் மது போத்தல்களும் விழிகளில் சரியாக சிக்கின.



அதில் முகத்தை அஷ்டகோணலாக சுருக்கியவளுக்கு அந்த இடமே ஒரு பயத்தைக் கொடுக்க, அதற்கும் மேல் அங்கு போதையிலிருந்த மூன்று ஆடவர்களை பார்த்ததும் அவளுக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்தது.



ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் அவள் மனம் எச்சரிக்க, "நா.. நான் போகணும்" என்றுக்கொண்டே கதவை நோக்கி திரும்பியவளின் கரத்தைப் பற்றி இழுத்த கரண் அவளை மெத்தையில் தள்ளிவிட, கதவை தாழிட்டாள் அனிதா.



"எங்க பசங்க கொஞ்சம் உன் கூட விளையாடணுமாம், அதான்... பயப்படாத! நல்ல பசங்க மீரா" என்று ப்ரீத்தி சொல்ல, மீராவுக்கோ ஒருநொடியில் உலகமே தலை கீழானது போலிருந்தது.



"ப்ளீஸ் என்னை விடுங்க! ப்ளீஸ்... வைஷ்ணவி... வைஷு... அய்யோ! என்னை விட்டுருங்க, எனக்கு பயமா இருக்கு" என்று மீரா பயத்தில் கதறியழ ஆரம்பிக்க, "இவ கத்தியே நம்மள பிரச்சனையில இழுத்து விட்டுருவா போல, மொதல்ல இவ கைய கட்டிவிட்டு வாய மூடுங்கடா" என்று கத்தினான் வினய்.



உடனே ப்ரீத்தி அவளுடைய வாயில் ஒரு துணியை வைத்து அடைத்து விட, அவள் திமிற திமிற அவளுடைய கைகளை கட்டிவிட்டான் க்ரிஷ்.



கரணோ தன் அலைப்பேசியை அனிதாவிடம் நீட்டி விழிகளால் காமிக்க, அதை புரிந்துக்கொண்டவள் கேமராவை ஆன் செய்து நடப்பதை படம்பிடிக்க ஆரம்பித்தாள்.



மீராவுக்கு பயத்தில் உடல் வெடவெடக்க, விழிகளிலிருந்து விழிநீர் அருவியாக ஓடியது. ஆனால் அந்த மூன்று காமுகன்களுக்கு அந்த பெண்ணின் கண்ணீரும் வலியும் புரியவே இல்லை.



கரணோ அவளின் ஆடையிலுள்ள பட்டன்கள் ஒவ்வொன்றையும் கழற்றிக்கொண்டே அவளை நெருங்க, "ஏய் கரண், என்ன பண்றீங்க? ஜஸ்ட் அவள டீஸ் பண்றதுன்னுதானே சொன்னீங்க. இப்போ பண்றதா பார்த்தா அப்படி தெரியல்லையே!" என்று சிறு அதிர்ச்சியோடுக் கேட்டாள் ப்ரீத்தி.



"ப்ரீத்தி, ப்ளீஸ்! மூனு நாளா இந்த மூமென்ட்டுக்காக எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? நீ வீடியோ மட்டும் பண்ணு" என்றவன், "கொஞ்சநேரம்தான், அப்பறம் நீ உன் வைஷுகிட்டயே போகலாம்" என்றுவிட்டு அவளுடலை மேயத் தொடங்க, கதறித் துடித்தாள் பெண்ணவள்.



அடுத்தடுத்த மூன்று காமுகன்களும் தங்களின் வேட்கையை அவளிடம் தீர்த்துக்கொள்ள, எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தோடு கிடந்தவளுக்கு உடல் வலியை விட மன வலி கொல்லாமல் கொன்றது.



ஆனால் யாருமே எதிர்பார்க்காதது போல் திடீரென கதவு வேகமாகத் தட்டப்பட்டது.



"ஏய் யார் அது?" என்று க்ரிஷ் பதற்றமாகக் கேட்க, அனிதாவோ கதவை லேசாகத் திறந்தவள், வெளியில் நின்றிருந்தவளைப் பார்த்து கதவை மூடப் போக, அதைத் தடுத்தாள் வைஷ்ணவி.



அனிதாவை மூடி விடாது கதவை தன் மொத்த பலத்தையும் சேர்த்து தள்ளிவிட்டு வேகமாக உள்ளே நுழைந்த வைஷ்ணவி, தன் தோழி இருந்த நிலையைப் பார்த்து ஸ்தம்பித்துப் போய் நிற்க, கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் கத்த கூட முடியாமல் கிடந்திருந்தாள் மீரா.



வைஷ்ணவிக்கோ விழிகள் கலங்கி கண்ணீர் ஓட, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல சட்டையை சரிசெய்தவாறு எழுந்து நின்ற மூன்று ஆடவர்களும் கேலியாக சிரித்தனர்.



"மீரா... அய்யோ! மீரா..." என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தவள் வேகமாக சென்று அவளை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு வாயிலிருந்த துணியையும் எடுத்துவிட, மின்னல் வேகத்தில் தன் தோழியை அணைத்துக்கொண்டு கதறியழ ஆரம்பித்தாள் மீரா.



"இவங்க... இவங்க என்னை... என்னை கூட்டிட்டு போயிடு வைஷு... என்னால இந்த வலிய தாங்க முடியல" என்று அவள் கதறியழ, வைஷ்ணவிக்கு இது கனவாக இருக்கக் கூடாதா என்றுதான் இருந்தது.



"நான் உன்னை இங்க அழைச்சுட்டே வந்திருக்க கூடாது, என் தப்புதான்... என் தப்புதான் மீரா" என்று வேதனையோடு சொன்னவள், "ச்சீ... நீங்க எல்லாம் மனுஷங்கதானா! இதை நான் சும்மா விட போறதில்ல. இப்போவே எல்லார்கிட்டேயும் சொல்லி போலீஸுக்கு கால் பண்ண போறேன்" என்று அத்தனை பேரின் புறம் திரும்பி மிரட்டினாள்.



ஆனால், அவர்களின் முகத்தில் எந்த பயமோ பதற்றமோ இல்லை.



"ரியலி! போ.. போய் சொல்லிக்கோ... நீ போய் சொன்ன அடுத்த செக்கன் இந்த வீடியோதான் பார்ச் சைட்ல ட்ரென்டிங்ல இருக்கும்" என்று சொல்லி அந்த காணொளியைக் காட்ட, விழி விரித்து நின்றுவிட்டாள் வைஷ்ணவி.



எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தோடு முகமெல்லாமே வெளுத்துப் போய் அறையிலிருந்து வெளியே வந்த இரு பெண்களும், அன்றைய இரவை தூங்கா இரவாக கழிக்க, அடுத்தநாள் அங்கிருந்து வெளியேறுவதற்காக எல்லோருமே தயார் நிலையில் இருந்தன.



"வைஷு, இதுக்கு தண்டனை கிடைக்காதா? அப்போ அவ்வளவுதானா?" என்று வலி நிறைந்த குரலில் மீரா கேட்க, அவளை கலக்கமாக முகத்தோடு பார்த்த வைஷ்ணவிக்கு தன் மனதிலிருப்பதை சொல்லவே அத்தனை தயக்கமாக இருந்தது.



ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, "இதை இங்கேயே விட்டுருவோம் மீரா, இதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு" என்று அவள் சொன்னதும், தன் காதில் விழுந்த தோழியின் வார்த்தைகளை நம்ப முடியாமல் திகைத்துப் போய் பார்த்தாள் மற்றவள்.



"நீயா வைஷு இப்படி பேசுற?" அதிர்ச்சியோடு வெளிவந்தன மீராவின் வார்த்தைகள்.



"நான் சொல்றத புரிஞ்சுக்கோ மீரா, அவங்க கிட்ட உன் வீடியோ இருக்கு. ஒருவேள நாம ஏதாச்சும் பண்ண போய் அவனுங்க அதை ஷெயார் பண்ணிட்டாங்கன்னா உனக்குதான் வெளியில தலை காட்ட முடியாது. அதான் சொல்றேன். என்னை மன்னிச்சிரு மீரா, என்னால இதை தவிர வேற எதையும் யோசிக்க முடியல. இது உன் நல்லதுக்காகத்தான்" என்று விழிநீரோடு சொல்லி தோழியை அணைத்துக்கொண்டாள் வைஷ்ணவி.



அவளை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு வெறித்துப் பார்த்தவள், அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அடுத்த சில மணித்தியாலங்களில் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்து சேர்ந்த மீராவின் முகமோ இருண்டுப் போயிருந்தது.



தன் சகோதரியின் முகத்தை கவனித்த நந்தினி, "என்னாச்சு மீரா, ஏன் உன் முகமே சரியில்ல?" என்று சந்தேகமாகக் கேட்க, "அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா, டயர்ட் அதான்..." என்றுவிட்டு வழக்கத்திற்கு மாறாக அவளை அணைத்துக்கொள்ள, ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தாலும் புன்னகையோடு அவளை அணைத்து விடுவித்தாள் நந்தினி.



அதன்பிறகு அறைக்குள் நுழைந்தவள் இரவுணவுக்கு கூட வெளியில் வரவில்லை. நந்தினியின் மனதிற்கும் ஏதோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது.



"மீரா... மீரா கதவ திற! நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கதவைத் தட்ட, உள்ளே கட்டிலில் அமர்ந்திருந்தவளோ அலைப்பேசியில் ஒரு வாய்ஸை ரெக்கார்ட் செய்து அதை ஒரு எண்ணிற்கு அனுப்பி வைத்தாள்.



அடுத்தகணம் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வர, அதை விழிகள் கலங்க பார்த்தவள் அலைப்பேசியை கட்டிலில் தூக்கிப் போட்டாள்.



அடுத்த நிமிடம் தான் எடுத்த முடிவை அவள் அமுல்படுத்த, இத்தனை நேரம் கதவை தட்டியும் திறக்காததில் தமக்கையோ பதறிவிட்டாள்.



"மீரா... மீரா..." என்று அடித் தொண்டையிலிருந்து பயத்தோடு கத்தியவள் மொத்த பலத்தையும் சேர்த்து கதவை தள்ளிவிட, உள்ளே நுழைந்தவளுக்கு அங்கு கண்ட காட்சியில் சர்வமும் அடங்கிவிட்டது.



அங்கு மீராவின் உடல் தூக்கிலிடப்பட்டு உடலோ உயிர் பிரியும் வலியில் துடித்துக்கொண்டிருக்க, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை நந்தினி.



************


Waiting For Your Comments... 😍😍
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 18





உயிரற்ற சடலமாக மீராவின் உடல் தரையில் கிடக்க, தன்னிரு கால்களைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு தங்கையின் முகத்தையே பார்த்திருந்தாள் நந்தினி.



சுற்றி அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் தெரிந்த உறவினர்கள் என வீட்டினுள்ளும் வெளியிலும் சூழ்ந்திருக்க, எவருடைய வார்த்தைகளும் அவளுடைய காதில் விழவில்லை.



எல்லாமே சூனியமான உணர்வு!



உறவினர்களே முன்னே நின்று இறந்தவளுக்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்து முடிக்க, நந்தினியோ பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாளே தவிர ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.



சடலத்தையும் காரியத்துக்காக அங்கிருந்து எடுத்துச் செல்ல, அப்போதும் அசையாமல் அமர்ந்திருந்த நந்தினியின் முகம் அங்கிருந்த எல்லோரின் மனதிலும் ஆழமாகப் பதித்து போனதுதான் உண்மை.



நடந்தது அனைத்தையும் வைஷ்ணவி சொல்லி முடிக்க, அவள் சொன்னதைக் கேட்டு ஆராதியா அதிர்ந்துப் போய் நின்றிருந்தாள் என்றால், அங்கு ப்ரணவ் சொன்னதைக் கேட்டு உறைந்துப் போய்விட்டான் ஹர்ஷத்.



"நந்தினி அவங்கள கொன்னதுல தப்பே இல்லை" என்று அவனுடைய இதழ்கள் குறையாத அதிர்ச்சியோடு முணுமுணுக்க, "ஆனா, அதை சட்டம் ஏத்துக்காது ஹர்ஷா. என்ட், இன்னொரு விஷயம் என்னன்னா அந்த லிஸ்ட்ல இப்போ வைஷ்ணவியும் இருக்கா" என்றான் ப்ரணவ் அழுத்தமாக.



"வாட்! அவ.. அவ எதுக்கு? ஏன் வைஷ்ணவிய கொல்ல நினைக்கணும்?" என்று அதே திகைப்போடு அவன் கேட்க, "வைஷ்ணவி ஃபார்ஸ் பண்ணலன்னா மீரா அந்த டூருக்கு போயிருக்கவே மாட்டா. என்ட், இப்படி ஒன்னு நடந்தது தெரிஞ்சும் அமைதியா இருந்திருக்கா. அதான்..." என்ற ப்ரணவின் வார்த்தைகளில் ஹர்ஷாவுக்கு தலை சுற்றாத குறைதான்.



"இதை விடக் கூடாது ப்ரணவ், வைஷுவ காப்பாத்தணும். ஆனா... ச்சே! நந்தினி இல்லன்னா இதையெல்லாம் யார் பண்ணியிருப்பான்னு கொஞ்சம் கூட யூகிக்க முடியல. மீரா கூட வைஷ்ணவி பழகியிருக்கா, அவ காதலிச்ச பையன கூட அவளுக்கு தெரியல்லையா என்ன!" என்று ஹர்ஷா நெற்றி நரம்புகள் புடைக்க கேட்க, இல்லையெனும் விதமாக தலையசைத்தான் மற்றவன்.



இருவருக்கும் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பதென்று கூட தெரியவில்லை.



அங்கிருந்து வீட்டிற்கு சென்றவன், தளர்ந்த நடையாக அறைக்குள் செல்லப் போக, திடீரென அவனை அழைத்து நிறுத்தினான் அபிமன்யு.



"அண்ணா, என்னாச்சு? நியூஸ்ல பார்த்தேன். க்ரிஷையும் கொன்னிருக்கான்ல, நிஜமாவே சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியல. இதெல்லாம் என் ஃப்ரென்ட்ஸ்ஸா இருக்குறததான் என்னால ஏத்துக்க முடியல. கடைசியா அந்த டூர்லதான் நாங்க ஹேப்பியா ஒன்னா இருந்தோம். ச்சே!" என்று வார்த்தைகளில் வலியோடு அவன் சொல்ல, எதுவும் பேசாமல் அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அறைக்குள் சென்று அடைந்துக்கொண்டான் ஹர்ஷா.



கட்டிலில் அப்படியே பொத்தென்று விழுந்தவனுக்கு நடக்கும் சம்பவங்கள்தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.



"யார் அது?" என்ற கேள்வி மட்டும் அவனுடைய சிந்தனையில் சுழன்றுக்கொண்டிருக்க, விழிகளை மெல்ல மூடிக்கொண்டான் அவன்.



பல நிமிடங்கள் கடந்திருக்கும். திடீரென மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.



அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவனின் இதழ்கள், "க்ரிஷ் இருக்குற இடம் அந்த கொலைகாரனுக்கு எப்படி தெரிஞ்சது?" என்று கேள்வியோடு முணுமுணுக்க, உடனே ஆராதியாவுக்கு அழைத்தான்.



"ஹெலோ..." என்று ஆராதியா சொன்னதும்தான் தாமதம், அடுத்தகணம் "க்ரிஷ் இருக்குற இடத்தை யார்கிட்டயாச்சும் சொன்னியா ஆரு?" என்று கேட்டான் அவன் அழுத்தமாக.



"அது... இல்லை ஹர்ஷா, நான் யார்கிட்டேயும் சொல்லல. வைஷ்ணவிக்கு கூட" என்று அவள் சொல்ல, எந்த பதிலும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தவன் அடுத்த அழைப்பு ப்ரணவிற்குதான் அழைத்தான்.



அவனிடமும் ஹர்ஷா தன் சந்தேகத்தைக் கேட்க, "அதுக்கான ஏற்பாடு பண்ணதே நான்தான், நான் எப்படி அதை வெளியாளுங்ககிட்ட சொல்லியிருக்க முடியும்? ஆனா நீங்க சந்தேகப்பட்ட மாதிரி கண்டிப்பா எங்க மூலமாதான் க்ரிஷ் பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்கு. நீங்க நல்லா யோசிச்சு பாருங்க ஹர்ஷா" என்று ப்ரணவ் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, மற்றவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.



"ஆமா, என் மூலமா கூட போயிருக்கலாம்ல! நான் யார்கிட்ட சொன்னேன். எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குதே, யார் அது?" என்று அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டு அவன் தீவிரமாக யோசிக்க, அவனின் மனக்கண் முன் வந்து சென்றது அந்த ஒரு முகம்.



"அவனா இருக்குமா... இல்லை, வாய்ப்பே இல்லை. இருக்கக் கூடாது. ஆனா... ஒருவேள இருந்தா?"



அவனுக்குள் ஏகப்பட்ட கேள்விகள் எழ, தலையைத் தாங்கிக்கொண்டவாறு அப்படியே கட்டிலில் அமர்ந்தான் ஹர்ஷா. சில கணங்கள் அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை.



ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன் ஒரு முடிவெடுத்தவனாக அறையிலிருந்து வெளியேறியிருக்க, அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.



அன்று காலையிலயே ஹர்ஷா ப்ரணவின் வீட்டின் முன் நிற்க, ஸ்டேஷனுக்கு செல்வதற்காக தயாராகி கதவைத் திறந்தவனுக்கு வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.



"ஹர்ஷா! நீங்க இங்க..." என்று அவன் விழிகளில் கேள்வியோடு இழுக்க, "அனிதா இறந்தப்போ அவ உடம்புல அவளுக்கு சம்பந்தமே இல்லாத டீஎன்ஏ கிடைச்சதா சொன்னீங்க. இப்போ வரைக்கும் அந்த டீஎன்ஏ யார் கூடவும் மேட்ச் ஆகல. இது... இதுல ஒருத்தங்களோட ஹெயார் இருக்கு. இந்த டீஎன்ஏ கூட மேட்ச் ஆகுதான்னு பாருங்க. இதை இப்போவே லேப்புக்கு கொடுங்க" என்றான் ஹர்ஷா முகம் இறுக.



அவனுடைய சிவந்த விழிகளையும் இறுகிய முகத்தையும் பார்த்த ப்ரணவிற்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் புரிய, யோசனையோடு அதை வாங்கிக்கொண்டவன், "யாரோட சேம்பிள் இது?" என்று கேட்டான் விழிகளில் கேள்வியோடு.



"அது... அது வந்து.. நீங்க மொதல்ல டெஸ்ட் பண்ணுங்க. அப்பறமா சொல்றேன்" என்றுவிட்டு அதற்குமேல் அங்கு நிற்காமல் அவன் வெளியேறிவிட, ப்ரணவிற்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்றியது.



அடுத்தகணமே அதை எடுத்துக்கொண்டு லேபிற்கு சென்றவன் டீஎன்ஏ பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு வெளியேறியிருக்க, இங்கு ஆராதியாவோ சேனல்களை மாற்றியவாறு எங்கோ வெறித்துக்கொண்டு யோசனையில் அமர்ந்திருந்தாள்.



"என்னடீ எப்போ பாரு யோசனையிலயே இருக்க? இன்னைக்கு வேலை இல்லையா என்ன?" என்று லலிதா காய்கறிகளை நறுக்கியவாறு கேட்க, "ஒன்னும் இல்லைம்மா" என்றவளின் முகத்தை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தார் அவர்.



"ஏய் தியா, நீ அந்த பையன் கூட சரியா பேசுறது இல்லையா என்ன! ஆரம்பத்துல நான் கூட அந்த பையன தப்பா நினைச்சுட்டேன். ஆனா வெளித்தோற்றத்தை வச்சு ஒரு மனுஷன எடை போடக் கூடாதுன்னு சொல்வாங்க. அது நிஜம்தான் தியா, அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல மயங்கியிருந்தப்போ அந்த பையன் அழுத வண்ணமா இருந்தான். உன்னை விட்டு எங்கேயும் போகல. ராத்திரி கூட உன் பக்கத்துலயே இருந்தான்னா பாரேன். இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் ஒரு நல்ல நாளா பார்த்து அவங்க வீட்டால உன்னை பொண்ணு கேட்டு வர சொல்லு, பேசி முடிச்சிடலாம்"



என்று லலிதா பேசிக்கொண்டே போக, ஹர்ஷத்தைப் பற்றிய தன் தாயின் வார்த்தைகளில் மெல்ல புன்னகைத்தாள் ஆராதியா.



குழப்பங்கள் லேசாக குறைந்து தன்னவன் பற்றிய சிந்தனையில் மனதில் இதம் பரவ அவள் அமர்ந்திருக்க, அவளுடைய நிம்மதியை கலைப்பது போல் அவளுக்கு வந்தது ஒரு அழைப்பு.



திரையைப் பார்த்தவள் யாருடைய எண் என்ற கேள்வியோடு அதையேற்று காதில் வைக்க, மறுமுனையில் காதைக் கிழிக்கும் க்ரீச் என்ற சத்தத்தில் அதிர்ந்து விழித்தாள் ஆராதியா.



அந்த சத்தத்தோடு ஏகப்பட்ட அழு குரல்களும் கதறலும் மாறி மாறிக் கேட்க, இவளுக்கோ உடலெல்லாம் வியர்க்க ஆரம்பித்து வேகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தது.



மகளின் முகத்தையே பார்த்திருந்த லலிதாவுக்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்ற, அவள் மூச்சு வாங்க ஆரம்பித்ததும், "தியா... தியா..." என்ற அலறலோடு வேகமாக அறைக்கு ஓடி அவளுடைய இன்ஹேலரை தேடி எடுத்தார்.



அவளிடம் நீட்டியதும் வேகமாக அதை வாங்கி உபயோகித்தவள், தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு அமர்ந்திருக்க, "இப்போ பரவாயில்லையாடா? யார் ஃபோன்ல, ஏதாச்சும் பிரச்சனையா?" என்று பதற்றமாகக் கேட்டார் லலிதா.



"எனக்.. எனக்கு இப்போவே ஹர்ஷாவ பார்க்கணும்" என்று அவள் சொல்ல, உடனே ஹர்ஷாவுக்கு அழைத்து விடயத்தை சொன்னார் பெரியவர்.



அப்போதுதான் ப்ரணவிடம் டீஎன்ஏ பரிசோதனைக்காக சேம்பிளை கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தவன் விடயத்தை கேள்விப்பட்டதுமே தன்னவளின் வீட்டை நோக்கி வண்டியை பறக்கவிட்டான்.



இவன் உள்ளே நுழைய, தன் தாயை அணைத்து ஆராதியா அழுதுக்கொண்டிருக்கும் காட்சிதான் அவனுடைய விழிகளுக்கு தென்பட்டது.



"ஆரு..." என்றுக்கொண்டே வேகமாக அவளருகே ஓடியவன், "என்னாச்சு, என்னன்னு சொல்லு?" என்று பதற்றமாகக் கேட்க, "அது.. எனக்கு ஒரு கால் வந்துச்சு. அதுல ஏகப்பட்ட பேரோட கதறல் கேட்டிச்சு. எனக்.. எனக்கு பயமா இருக்கு ஹர்ஷா..." என்று அவன் மார்பில் புதைந்து அழத் தொடங்கினாள் ஆராதியா.



இவனுக்கோ ஒருகணம் அவள் சொல்வது எதுவும் சுத்தமாகப் புரியவில்லை.



அவளை புரியாமல் பார்த்தவன், "ஆரு, உன் ஃபோன்ல எந்த கால் வந்தாலும் ஆட்டோ ரெக்கார்ட் ஆன்லதானே இருக்கு?" என்று கேட்க, அழுத வண்ணமாக அவளும் தலையாட்டி வைக்க, அடுத்தகணம் இறுதியாக வந்த அழைப்பின் ரெக்கார்ட்டை தேடி எடுத்தான் ஹர்ஷா.



அதை ஆன் செய்து காதிற்கு அருகில் வைத்ததும்தான் தாமதம், உயிரை நடுங்க வைக்கும் கதறல் ஒலிகளில் அவனுக்கே திக்கென்று இருந்தது.



"வாட் த ****...." என்று கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு அலைப்பேசியை தள்ளி வைத்தவனுக்கு அந்த கதறல்களுக்கு மத்தியில் ஒரு குரல் மட்டும் ஏதோ பழக்கப்பட்ட குரலாகத் தோன்ற, அதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் அவன்.



அதைக் கேட்டுக்கொண்டிருந்தவனின் விழிகள் அது யாரென்று உணர்ந்ததுமே ஆச்சரியத்தில் விரிய, "ப்ரீத்தி..." என்று இதழ்கள் முணுமுணுத்தன.



"என்ன ஹர்ஷா?" என்று ஆராதியா விழிகளை சுருக்கிக் கேட்க, "இது ப்ரீத்தியோட வாய்ஸ் ஆரு, ஐ நோ தட். ஆனா... அது எப்படி? அப்போ இதுல கேக்குற எல்லா வாய்ஸும் இறந்து போனவங்களோட கதறல்தானா? ஹவ் டேர் இஸ் ஹீ..." என்று பற்களைக் கடித்தான் அவன்.



இப்போதுதான் அவளுக்கும் அவன் சொல்ல வருவது புரிய, அதிர்ந்துப் போய் பார்த்தவள், தலையைத் தாங்கிய வண்ணம் அப்படியே அமர்ந்தவாறு, "அவ.. அவன் எதுக்கு எனக்கு கால் பண்ணணும்? ஏன் ஹர்ஷா, நா.. நான் என்ன பண்ணேன்?" என்று திகைத்துப் போய் கேட்டாள்.



அவனோ லலிதாவை ஒரு பார்வைப் பார்த்தவன், "அது.. ஆரு இது நமக்கான ஒரு வார்னிங். எனக்கு எப்படி இதை உன்கிட்ட சொல்றதுன்னு தெரியல, ஆமா.. வைஷு... வைஷு எங்க?" என்று அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக சுற்றிமுற்றி பார்த்தபடி கேட்க, "அவ வெளியில போயிருக்கா ஹர்ஷா" என்றாள் ஆராதியா குழப்பத்தோடு.



"வெளியிலயா! எங்கன்னு சொன்னாளா?" என்று ஹர்ஷா பதற்றமாகக் கேட்க, "அது... வழக்கமா போற அவ ஃப்ரென்ட் வீடுதான். ப்ரணவ் கூட தங்கியிருக்காரே, அந்த ஃப்ளாட்தான்" என்று அவள் சொல்ல, அவனோ வேகமாக வைஷ்ணவிக்கு அழைத்தான்.



ஆனால், அழைப்பு ஏற்கப்பட்டால்தானே!



"என்னாச்சு ஹர்ஷா, என்னன்னு சொல்லு" என்று ஆராதியா பயத்தோடுக் கேட்க, கோபத்தில் கை முஷ்டியை இறுக்கி சுவற்றில் ஓங்கிக் குத்தியவன், "வைஷ்ணவி ஆபத்துல இருக்கா ஆரு, நான் உடனே போய் அவள பார்க்கணும்" என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியேறிவிட, இங்கு லலிதாவோ நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே தரையில் விழுந்தார்.



"என் பொண்ணு... என் பொண்ணுக்கு என்ன? என்ன நடக்குது தியா இங்க? அந்த பையன் என்ன சொல்லிட்டு போறாரு, எனக்கு பயமா இருக்குடீ" என்று பெரியவர் அழ ஆரம்பிக்க, தன் தாயை தேற்றும் வழி தெரியாது திணறியவளுக்கு உலகமே சூனியமான உணர்வு.



ஹர்ஷாவோ வேகமாக அந்த ஃப்ளாட்டிற்கு சென்றவன், லிஃப்டிற்கு கூட காத்திருக்காமல் படிகளில் மூச்சிறைக்க தாவி குதித்து வேகமாக ஓடி வைஷ்ணவியின் தோழி தங்கியிருக்கும் ஃப்ளாட்டின் முன் நின்று தடதடவென கதவைத் தட்டினான்.



அடுத்த சில கணங்களிலேயே கதவு திறக்கப்பட, "நீங்க..." என்று அவன் முன்னாலிருந்த இளம் பெண் அவனை கூர்ந்து பார்த்தபடி இழுக்க, "வைஷ்ணவி... வைஷ்ணவி..." என்று அந்த கட்டிடமே அதிரக் கத்தினான் ஹர்ஷா.



அவன் கத்திய கத்தலில் அறையிலிருந்த வைஷ்ணவி வேகமாக வெளியில் வந்து எட்டிப் பார்த்து, "மாமா, நீங்க இங்க என்ன பண்றீங்க?" என்று அதிர்ச்சியோடுக் கேட்க, முட்டியில் இரு கைகளை ஊன்றி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்படியே நின்றிருந்தவனுக்கு அப்போதுதான் உயிரே வந்த உணர்வு.



அவளோ அவனையே விக்கித்துப் போய் பார்த்தவாறு நின்றிருக்க, எதுவும் பேசாமல் அவளின் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு சென்றவன் அந்த கட்டிடத்திலிருந்து வெளியில் வரும் வரை அவள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவே இல்லை.



தன் பைக்கை உயிர்ப்பித்தவன் மின்னல் வேகத்தில் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றிருக்க, யோசனையோடு உள்ளே நுழைந்தவளைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை அணைத்துக்கொண்டார் லலிதா.



"அந்த கடவுள் புண்ணியத்தால உனக்கு எதுவும் ஆகல வைஷு, நாங்க ரொம்ப பயந்தே போயிட்டோம்" என்று ஆராதியா விழிகள் கலங்க சொல்ல, வைஷ்ணவியோ எதுவும் பேசவில்லை, அமைதியாக நின்றிருந்தாள்.



"அந்த கல்ப்ரிட்ட கண்டுபிடிக்குற வரைக்கும் நீ வீட்டுலயே இரு, ப்ரணவ்கிட்ட சொல்லி பாதுகாப்புக்கு நான் ஏற்பாடு பண்றேன். புரியுதா?" என்று ஹர்ஷா சொல்ல, தலையாட்டியவள் தனதறைக்குள் சென்று கதவடைத்துக்கொள்ள, 'ஊஃப்ப்...' என நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு சுவற்றில் சாய்ந்துக்கொண்டான் அவன்.



அவனை விழிநீரும் இதழில் புன்னகையுமாக பார்த்திருந்த ஆராதியா இடம் பொருள் பாராது வேகமாகச் சென்று அவனை இறுக அணைத்திருக்க, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ஹர்ஷா.



"ஆரு..." என்று அவன் அதிர்ச்சியோடு அழைக்க, "லவ் யூ ஹர்ஷா, இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல" என்றவள் லலிதா சமையலறையில் இருப்பதை பார்த்துவிட்டு அவனிதழில் இதழ் பதித்திருந்தாள்.



அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கியவாறு விழிகளை மூடிக்கொண்டான் ஹர்ஷா.



அதன் பின் சில மணித்தியாலங்களில் ஹர்ஷா அங்கிருந்து வெளியேறியிருக்க, வெளிச்சம் மறைந்து உலகை இருள் சூழ ஆரம்பித்தது.



அதேநேரம் கால்களைக் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த வைஷ்ணவியின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வர, திரையைப் பார்த்தவளின் விழிகள் சந்தேகத்தில் சுருங்கின.



************

தஷுரி, ரதியின் ரணதீரன் கதைகள் Kobo writing life ல இருக்கு... கிட்டத்தட்ட அமேசன் மாதிரி தான்.. Kobo plus subscription பண்ணா மன்த்லி ஃப்ரீயா எல்லா கதைகளும் ரீட் பண்ணலாம்...


IN link 👇
https://www.kobo.com/in/en/search?q...or=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


USA link 👇
https://www.kobo.com/ww/en/search?q...or=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta



 
Status
Not open for further replies.
Top