ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வந்தியதேவனும் குந்தவையும் by கிருத்திகா கிருஷ்ணன் (touchscreen writer) - கதை திரி

Status
Not open for further replies.
வந்தியதேவனும் குந்தவையும்

அத்தியாயம் 6

இரவுதான் ராம் வீட்டிற்கு வந்தான், ஹாலில் எல்லோரும் இருந்தனர். அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து எல்லாரிடமும் சகஜமாக பேசினாலும் அவன் கண் அங்கு இல்லாத ஒரு ஆளை தேடியது. அது எல்லோருக்கும் தெரிய இப்போது அவன் முன் கிண்டல் செய்து சிரிப்பதை யாரும் முன்னெடுக்கவில்லை.

ராஜி, "ராம் சாப்ட்டியா" என்றபடி சமையலறையில் இருந்து கேட்க, அவன் திரும்பி, "ஆமாம்மா, வெளிய சாப்பிட்டேன், எனக்கு எதும் செஞ்சி வச்சிருந்தீங்களா என்ன" என்று எல்லோரும் அவனையே பார்ப்பது புரிந்து கொஞ்சம் சங்கடமான குரலில் கேட்டான்.

ராஜி உடனே, "துர்காமா நீங்க எல்லாரும் போய் தூங்குங்கமா காலைல எழுந்து இருப்பீங்க, பிரியா நீயும் தான் ரகு கூட்டிட்டு போ, ராம் ஒரு நிமிஷம் இங்கவா இந்த பாலை உன் ரூம்க்கு கொண்டு போ அங்க தான போற?" என்று சொல்ல அனைவரையும் சிரித்துவிட்டனர்.

அவன் அதிர்ச்சியும் அவமானத்திலும், "அம்மா…" என்று கத்தியே விட்டான். ரகு, "என்னைக்கு லேட்டா வரணும்னு தெரியாதாடா… ஆல்ரெடி தேவி உன் ரூம்ல வெயிட்டிங் அப்போ நீ தான பால் எடுத்துட்டு போனும்" என்று சிரிக்க, ராம் அவனை முறைத்தான். அதை பார்த்த அனைவரும் அங்கிருந்து வேகமாக தங்கள் அறைக்கு சென்றனர்.

ராஜி அருகில் முறைத்தபடியே ராம் சென்றான், "அம்மா இது உங்களுக்கே ஓவரா இல்ல"

"அப்படிதான்டா பண்ணுவேன், சாந்திரம் அவ்வளவு வேகமா சொல்ல சொல்ல கேக்காம போற… தேவி என்ன நினைப்பா… அவங்க இருக்காங்க அப்படிங்குறதுக்காகவாவது பாத்து நடந்துக்க மாட்டியா"

"ப்ச்… நான் இப்படித்தான் அவங்களும் தெரிஞ்சுக்கட்டும் என்னால எப்பவும் பாத்து பாத்து நடிச்சுட்டே இருக்க முடியாது"

"நடிப்பா… என்னடா பேசுற, நீ கல்யாணம் வச்சதுல இருந்து சரியே இல்லடா"

"அம்மா அது எல்லாம் விடுங்க இப்போ அப்பா எங்க அவர தான் வந்ததுல இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்"

"அவர் ஃபோன் பேச மாடிக்கு போனார்"

"சரி நான் போறேன், பால் எனக்கு வேணாம் அவளுக்கு கொண்டு போறேன் தாங்க" என்று அவன் கேட்க அவர் முகத்தில் சந்தோசம் படர்ந்தது.

அவனுடையது மாடி அறை படி ஏறும் போதே மூர்த்தி எதிரில் வந்தார். அவன் தேடியது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளத்தான், பார்த்துவிட்டான் எதுவும் பேசாமல் படி ஏறினான்.

மூர்த்தி, "ராம் உன்ன பாக்கத்தான் இவ்வளவு நேரம் இங்க சோஃபால வெயிட் பண்ணிட்டு இருந்தேன், ஏண்டா இவ்வளவு நேரம் வர்றதுக்கு" என்றவரின் குரல் கடுமை காட்டியது.

"ஜஸ்ட் ஸ்டக் வித் வொர்க் வேற என்ன சொல்ல" என்றான் சாதாரணமாக.

"சொல்லலாம் தப்பில்ல ஆனா தேவிகிட்ட எதையும் சொல்லிராத" அவர் சொல்ல அவன் கேள்வியாக பார்த்தான்.

"உனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு தெரியுது அதுக்காக அவகிட்ட உண்மையா இருக்கணும்ன்னு நினைச்சி அவள ராஜமாணிக்கம் சொல்லித்தான் கல்யாணம் பண்ணன்னு சொல்லிராத, இட்ஸ் ரியலி டேங்ஜரஸ் ஃபார் யுர் பியுச்சர், அவ அப்பாவியாவும் தெரியல ஈஸி கோயிங் ஆவும் தெரியல, சோ உனக்கு புரியும்னு நினைக்கிறேன், பெட்டர் அவளுக்கு எதும் தெரியாம இருக்கிறதுதான் நல்லது" அவர் மெதுவாக அவனுக்கு புரிய வைக்க முயன்றார்.

அவன் அவரை ஆழமாக பார்த்துவிட்டு, "இதையே எவ்வளவு காலம் மெயின்டேன் பண்றது" என்றான் குரலை செருமிக்கொண்டு.

அவர் பெரிதாக சிரிக்கத் தொடங்கிவிட்டார், "ராம் இது எல்லாம் ஒரு குழந்தை வந்தா சரியாயிடும் நீ அதை பத்தி வோரி பண்ணிக்காத" என்று முடிக்குமுன் அவன் அவ்விடம் விட்டு சென்றிருந்தான்.

அவன் முகம் முழுக்க எரிச்சலும் கோபமும் போட்டி போட்டு தன் இருப்பை காட்டிக் கொண்டிருந்தது. அவன் அறைக்கதவில் கை வைக்கும் போது தேவியின் ஞாபகம் வர, பெருமூச்சு விட்டான். கஷ்டப்பட்டு முகத்தில் சிரிப்பை கொண்டு வந்து, அறைக்குள் நுழைந்தான்.

அங்கு சோஃபாவில் தேவி கால்மேல் கால் போட்டப்படி ஃபோன் பார்த்துக் கொண்டிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவள், ராம்மை கண்டு மெதுவாக புன்னகைத்தாள். அவன் அவளிடம் பால் தம்ளரை நீட்டினான், "உனக்கு பசிக்குமேனு அம்மா குடுத்து விட்டாங்க, ஆமா ரொம்ப நேரமா இங்க வெயிட் பண்றியா"

"ஆமா 2 ஹார்ஸ் முன்னாடியே வந்துட்டேன், பால்கனில இருந்து ரெஸ்ட்ரூம் வரைக்கும் சுத்தி பாத்துட்டேன், எல்லா போட்டோஸ்லயும் உங்களை அளந்து பாத்துட்டேன், எதுதெது எங்க இருக்கும்னு மனப்பாடம் பண்ணிட்டேன், பால்கனி ஊஞ்சல்ல கூட ஆடிட்டேன், அப்பவும் போர், இங்க உக்கார்ந்து ஃபோன் நோண்ட ஆரம்பிச்சேன்…" என்று பேசியபடி அவன் அருகே வந்து பாலை வாங்கியவள், "உங்களுக்கு?" என்றாள் கேள்வியாக.

"வேண்டாம்… ரூம் கம்பட்டபிள்லா இருக்கா, இல்லன்னா சொல்லு ரூம்ம இடிச்சி மாத்தி கட்டிரலாம்" என்று கிண்டல் பேசினான்.

"நான் சொல்ல மாட்டேன்னு தைரியமா, இருந்தாலும் பரவால்ல நல்ல தான் இருக்கு" என்று பாலை குடித்தபடி பேச, அவன் இயல்பாக வாட்ச், பெல்ட், ஷர்ட் பட்டன் என்று ஒவ்வொன்றாக கழற்றிக் கொண்டிருந்தான். அவளுக்கு இதை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை, முயன்றவரை தன்னை இயல்பாக வைத்துக் கொள்ள முனைந்தாள். ஆனால் அவள் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்த ராம், ஷர்ட்டின் இரு பட்டன்களை திறந்துவிட்டபின் அப்படியே நிறுத்தி, "எதுக்கு என்ன ஒரு மாதிரி பாக்குற என்கிட்ட எதும் கேக்கனுமா" என்றான்.

'ஐயையோ இப்ப என்ன நான் சொல்றது… ஒன்னுமில்லைனு சொன்னா அப்பறம் எதுக்கு அப்படி பாத்தன்னு கேப்பான், ஆமா கேட்கணும்னா என்ன கேள்வின்னு கேப்பானே இப்ப என்ன கேள்வி கேக்குறது' என்று அவள் யோசிக்க, அவன், "இவ்வளவு நேரம் நல்லா தான பேசிட்டு இருந்த, இப்ப எதுக்கு இப்படி முழிக்குற… இப்படித்தான் காலைலயும் பண்ண நான் மெட்டி போடுறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்" என்று நொந்தான்.

அவள் இப்போது சிரித்தாள், "அதானே எவ்வளவு நேரம் தான் ஒரு மனுஷன் கிரின்ஜ் பண்றது, ஆனாலும் உங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் கொஞ்சம் கூட கண்டேபிடிக்க முடியாதபடி நடிக்குறீங்க" என்று கண்களை சுருக்கி அவனை கோபமாக பார்ப்பது போல் போலியாக பாவனை செய்தாள்.

அவனிடம் இப்போது நிம்மதி பெருமூச்சு, "தெங்க் காட் உனக்காவது தெரியுதே அது ஆக்டிங்னு இனி நான் ரொம்ப சிரமப்பட வேண்டாம்… ஆனா உன் மாமா பொன்ன மறக்கவே மாட்டான் மூக்க உடைப்போம்னு சொல்லி எனக்கு ஒரு செகண்ட் மரண பயத்த காட்டிட்டா… என் மரியாதைய காப்பாத்திக்க எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு. சரி இப்ப நீ கிரிஞ் பண்ண போறியா வித் கொஸ்டீன் லைக், 'என்ன பிடிச்சுதான் கல்யாணம் பண்ணீங்களா' அப்படின்னு கேக்க போறியா" என்று அவன் சிரித்தான்.

தேவி புரியாமல் அவனை பார்க்க, அவனே பேசினான், "இந்த சிட்டுயேஷன் அதான் கேப்பாங்க கேக்க தோணும்… டூ பி ஃபிராங்க், இந்த கேள்விக்கு நான் இல்லன்னு சொன்னா கவலை பட போறியா ஆர் ஆமா நான் பிடிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னாலும் நீ நம்பத்தான் போறியா… சீ இது பக்கா ஃபேமிலி அரெஞ் பண்ண மேரேஜ் வீ ஆர் கோயிங் வித் தி ஃப்லோ, அவ்வளவு தான் நான் ஃபீல் பண்றேன், வாட் இஸ் யுவர் ஒப்பினியன் இன் இட்"

தேவியின் இதழில் மென்புன்னகை தவழ்ந்தது, "என்ன ஓரளவு புரிஞ்சி வச்சிருக்கீங்க சிறப்பு, எனக்கு எப்பவும் கோயிங் வித் தி ஃபிளட் தான் டில் திஸ் மோமெண்ட் இன்கிளுடிங் யுவர் ஒப்பீனியன்… லெட் இட் கோ, இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" இப்போது பற்கள் தெரிய சிரித்தாள். அவனுள் ஒரு பெரிய நிம்மதி பரவியது அவனும் புன்னகைத்தான், அவள் ஈஸி கோயிங் ஆக அவனுக்கும் தெரியவில்லை ஆனால் அவள் அதிகம் சென்சிடிவ் இல்லை பிரக்டிகல் பெண் என்று அவனுக்கு புரிய அதுவே இப்போதைக்கு போதும் என்று இருந்தது. அவளுக்கு புரிந்தது, அவன் ஏதோ ஒரு கட்டாயத்தில் திருமணம் செய்திருக்கின்றான் என்று ஆனாலும் அதை துறுவ அவள் விரும்பவில்லை இவ்வளவு வெளிப்படையாக பேசியவன் அதையும் சீக்கிரம் சொல்வான்
என்கிற நம்பிக்கை அவளுள் வர, முழு மனதோடு சிரித்தாள்.
 
வந்தியதேவனும் குந்தவையும்
அத்தியாயம் 7

இருவரும் அமர்ந்து நிறைய பேசினார்கள், அவன் அவனுடைய வேலையை பற்றி ஆசை பொங்க சொன்னான், எதிர்கால திட்டம் பற்றி எல்லாம் சொன்னான். அதை எல்லாம் தன்னிடம் பகிர மாட்டானோ என்ற ஒரு மனநிலையில் இருந்த தேவி இதை அவனிடம் எதிர் பார்க்கவில்லை. அவன் சொல்லும்போது தான் உணர்ந்தாள், அவன் அவளை அவனுள் தான் பார்க்கிறான் என்று, திருமணத்தை மதிக்கிறானா தெரியவில்லை, ஆனால் அவளை மதித்து பேச மறக்கவில்லை. இதனாலே அவனிடம் ஒதுக்கம் காட்ட அவள் விரும்பவில்லை, எது எப்படியோ அவனிடம் ஒரு நேர்மை இருக்கிறது என்று நம்பினாள் அதற்காகவே மற்றவர்களிடம் வரும் குரல் பேதம் கூட அவனிடம் பேசும் போது வரவில்லை, கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைக்கும் வந்திருந்தாள் பெண்ணவள்.

"இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா அதுக்கு தான் சொல்றேன், சத்தியமா உங்கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது… பொருத்துக்கொன்னு சொல்ல மாட்டேன், இட்ஸ் அப்டூ யூ, இட்ஸ் அ டிஸ்கிளைமெர், இந்த நாள அடுத்த வருஷம் கண்டிப்பா மறந்துருவேன்… என் வேலை அப்படின்னு பொய் சொல்லமாட்டேன், ஆனா நான் அப்படி, வேர்கஹாலிக்… நினைச்சது அச்சிவ் பண்ற வர இப்படி இருப்பேன் அதுக்கு பிறகு மாறிருவேன்னு நினைக்கிறேன் ஐ டோண்ட் நோ… ஃபர்ஸ்ட் நான் நினைச்சது நடக்கணும்" அவன் முடிக்கும் போது கண்களில் ஒரு கவலை அப்பட்டமாக தெரிந்தது, எங்கோ பார்த்து பெருமூச்சு வேறு விட, அவன் மனநிலை அவளுக்கு புரிந்தது, ஏதோ கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறான் என்று அவளுக்கு தோன்ற, உண்மையாக கவலைப்படுபவனை ஆறுதல் படுத்த வேண்டும் என்று அவள் சட்டென தோள்கள் மட்டும் உரச அவனை கட்டியணைத்து, "எல்லாம் சரி ஆகிரும்" என்று விடுவித்தாள்.

அவள் சாதாரணமாக நெருக்கமான நண்பர், உறவினரிடம் நடந்து கொள்வது போல அவனிடம் நடந்து கொள்ள காரணம் அவனும் அவளிடம் நெருங்கி விட்டான். அவனுக்குத்தான் அது வித்தியாசமாக தோன்றியது அவனுக்கு இந்த மாதிரி பெண்களிடம் பழகுவது புதிதல்ல ஆனால் அவளிடம் எல்லாமே புதிது. அவள் கிராமத்து பெண் எனும் நினைப்பே அவனுக்கு இருக்க அவளிடம் அவன் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவன் அதிர்ச்சியில் கண்களை விரித்து அவளை பார்க்க, அவளுக்கு இப்போது தான் நிதர்சனம் புரிந்தது. அவன் அவளை தப்பாக எடுத்துக் கொண்டானோ என்று பதறி, "சாரி… நான் கேட்காம…" தடுமாறி தொடர, இப்போது அவனுக்கு அவள் பதற்றத்தை குறைக்க அவன் கைகள் பரபரக்க, அவளை இழுத்து அணைத்தான். மனைவியிடம் காட்டும் நெருக்கம் அது அவள் அணைப்பு போல தோள் மட்டுமா உரசி இருக்கும்? அவள் அப்போது கூட அதிரவில்லை, ஆனால் அதன் பிறகு அவன் அவள் முகம் நோக்கி கண்களில் ஊடுருவி, "இட்ஸ் ஓகே தேவிகா இது ஒன்னுமில்லை" என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தம் பதித்தான். அவள் கண்கள் பட்டென்று மூட இதயம் தான் படபடத்தது. இப்போது அவள் அவனை நம்புவதன் காரணமாக அவளின் மூளை கொஞ்சம் வேலை செய்யவில்லை, இது தெரிந்ததும் இதயம் துள்ளி குதித்து மொத்த கட்டுப்பாட்டையும் தனதாக்கியது, விளைவு, அவன் என்ன செய்தும் அவள் தடுக்கவில்லை.

அவனுக்கு அவள் கண்கள் மூடியிருப்பதே ஏதோ செய்ய, அதில் முத்தமிட்டான், கண் திறக்கவில்லை, மூக்கோடு மூக்கை உரசினான், அவளிடம் ஒரு எதிர்வினையும் இல்லை. அவன் இதழ் மெல்ல விரிந்தது, மூக்கிற்கு கீழே அவன் கண் செல்ல, அவள் மனமோ, 'சீனியர் வச்சிட்டான்டி கண்ணு' என்று வசனம் பேச, அவள் கண்ணை திறந்தாள். அவன் கண்கள் கீழிருந்து மேலே வந்தது.

இருவர் கண்களும் சந்தித்துக் கொள்ள, அவள் கண்ணில் கோவம் போல அவனுக்கு தோன்றியது, அவன் பயந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அப்போது அவள் ஃபோன் மணியடித்தது. அது ராம் பக்கம் இருக்க, அதை எடுத்து தர சொல்லி கண்களால் செய்கை காட்டினாள். அவனும் அவள் கண்ணில் கட்டுண்டு செய்தான்.

"ஏதோ தெரியாத நம்பர்ல இருந்து கால் வருது, அதுவும் இந்த நேரத்துல" என்று சொல்லிக்கொண்டே அவளிடம் நீட்டினான்.

"சரி அப்ப நான் ஸ்பீக்கர்ல போடவா, உங்களுக்கும் அது யாருன்னு தெரியணும்ல" இது அவள் குத்தலாக.

"அப்போ நான் சந்தேகப்படுறேன்னு சொல்றியா, அப்படியே வச்சுக்கோ, சிவ பூஜைல நுழைஞ்ச அந்த கரடி யாருன்னு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா" என்று சொல்ல அவள் கண்களை விரித்து முறைத்தாள். அவனிடம் சிரிப்பு, அப்படியே போனை ஸ்பீக்கரில் போட்டான்.

"ஹலோ தேவி நான் கீர்த்தி பேசுறேன் கல்யாணம் ஆகிடுச்சுல்ல, ரொம்ப சாரி இன்னைக்கு நைட்டு உன்ன கூப்பிட்டேன். ஒரு பிரச்சினை அதான்…"

"சரி சொல்லு நீ பத்திரமா இருக்கல்ல"

"ஆமா ஆனா நாளைக்குள்ள கல்யாணம் ஆகலைன்னா நிலைமை கஷ்ட்டமாயிடும், ரெண்டு பேரும் வேற வேற ஜாதி அதுவும் எலியும் பூனையுமா இருக்குறவங்க… நாங்க ஒன்னு சேர்ந்தா குறிப்பா எங்க வீட்டுல சும்மா இருக்க மாட்டாங்க. அதான் நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண கோயம்புத்தூர் வந்தோம் சொல்லி வச்ச ஆபீசர் சரியா ரெஸ்பாண்ட் பண்ணல அதான் உங்க சுரேஷ் அண்ணன் அங்க தான வேலை பாக்குறார் அவர் சொன்னா வேலை நடக்கும்ல அதான் அவர்கிட்ட ஹெல்ப் கேக்கலாம்ன்னு உனக்கு கால் பண்ணேன், உண்மையிலேயே சாரிடி ராம் அண்ணா கோவபடுவாரா…"

"ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் சிட்டுவேஷன் பட் ஏன் எங்க மேரேஜ்ல, எந்த நம்பிக்கைல இத செஞ்சிங்க" ராம் பேசினான்.

"தேவி எப்பவும் என் சீக்ரெட்ட யார்கிட்டேயும் சொல்ல மாட்டா அந்த நம்பிக்கை தான்… சாரி அண்ணா" இது கீர்த்தி. அவள் சொல்ல ராம் தேவியை பார்த்து புன்னகைத்தான், அவளிடம் இன்னும் ஒரு இறுக்கமிருந்தது, அதனால் அவன் சிரிப்பை கண்டுக் கொள்ளவில்லை.

"பரவால்ல… இன்னும் போலீஸ் கம்பிளைன்ட் குடுக்கல போல அதான் என் ஃபோன் ரொம்ப அமைதியா இருக்கு. நான் சுரேஷ் அண்ணன்கிட்ட பேசுறேன், நான் நம்பரும் அனுப்புறேன் காலைல கால் பண்ணிக்கோ லவ்ன்னா கண்டிப்பா உதவுவான், நீ நிம்மதியா இரு" என்று போனை வைத்தாள்.

"யார் மேல கடுப்பு முகம் ரொம்ப சீரயஸா வச்சிகிட்டு இவ்வளவு சுவீட்டா பேசி ஹெல்ப் பண்ண ஒத்துகிட்ட, திறமை தான். சரி உதவிக்கு காரணம் காதலுக்கு மரியாதையா, இல்ல ப்ரெண்ட்காகவா"

அவனை முதலில் முறைத்தவள் பின் லேசாக சிரித்து, "விஜய் படமா சொல்றீங்க… ரெண்டுமே இல்ல, உதவி கேட்டா சரின்னு தோனுனா செஞ்சிருவேன் ரொம்ப யோசிக்க மாட்டேன். பெரியப்பா என்ன எப்பவும் அப்படியே எங்க ஐயா மாதிரின்னு சொல்லுவாரு. எனக்கு தெரியல இப்படி சொன்னதால நான் குணத்துல தாத்தா போலதான் இருக்கேன்னு நானே மணிஃபெஸ்ட் பண்ணிக்கிட்டேன்னு நினைக்கிறேன்" என்று அவள் சொல்லி சிரிக்க, ராமின் முகத்தில் சிரிப்பு போய், கண்கள் அதற்கு மேல் அவள் கண்களை பார்க்க முடியாமல் நிலத்தில் இறங்கியது.

காலையில் ராம் கண் விழிக்கும் போது தேவி அருகில் இல்லை, இரவின் நினைவில் சிரித்தபடி எழுந்து அமர்ந்து தன் மேலிருந்த ரோஜா இதழ்களை தட்டிவிட்டு போனை எடுத்தான். ஒரு நபரிடமிருந்து எண்ணற்ற குறுஞ்செய்திகள் வந்துருந்தன, 'இம்மெடியட்லி வான்ட் டூ மீட் யூ'. இப்போது ராமின் சிரிப்பு மறைந்தது, உடனே குளித்து தயாராகி அந்த நபரை பார்க்க கிளம்பிவிட்டான்.

அந்த வீட்டு வாசற்கதவு அருகே இருந்த காலிங் பெல்லை அழுத்திவிட்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு கதவு திறப்பதற்காக காத்திருந்தான். ஒரு பெண் கதவை திறந்து, "யூ… ராம்" என்று கேள்வியாக கேட்க, அவன் ஆம் என்பதை தலையசைப்புடன் முடித்துக்கொண்டான். அந்த பெண் அவனை உள்ளே அழைத்துச் செல்ல அங்கே இன்னொருத்தி இவன் வருவுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

அவனை பார்த்ததும் கண்ணில் ஏக்க பார்வையும் உதட்டில் நக்கல் சிரிப்பும் காட்டி, "வாங்க புது மாப்பிள்ளை உக்காருங்க, ரொம்ப கடுப்புல வந்துருப்பீங்க தெரியும். பட் என்ன பண்றது புதுசா ஒரு பிரச்சினை முழச்சுட்டே உங்க கல்யாணத்துல… அதான் உங்களை காலைல கூப்பிட வேண்டியதா போச்சு, உங்க மேரேஜ் நைட் பத்தி கூட யோசிக்காம"

"நத்திங் ட்டூ டாக் அபவுட் இட் வித் யூ, எதுக்கு வர சொன்னீங்க மிஸ்…" அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டான், ராம்.

"அதுக்குள்ள பேர் கூட மறந்துடுச்சா, வோவ் வாட் அ மஞ்சள் கயிறு மகிமை… இந்த மனுஷன் தானா எனக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு மும்பை போய் தலைமறைவு ஆனார் ன்னு ஆச்சிரியப்பட வச்சிட்டீங்க. சரி உங்க லைஃப் செட்டில் பண்ணதுக்கு இப்ப எனக்கு ஏதாவது கிரெடிட்ஸ் கிடைக்குமா? இல்ல தேவிக்கு மட்டும் தானா?" என்று கண்ணடித்து கேட்க, ராம் கடுப்பாகி விட்டான்.

"மிஸ். தேனாண்டாள் வேலைக்காக வெளியூர் போனால் யாரும் அதை தலைமறைவுன்னு சொல்ல மாட்டாங்க பெட்டர் இம்புரோ யுவர் தமிழ் நாலஜ், கிரெடிட்ஸ் நிச்சியம் கிடைக்கும் உங்க எல்லாருக்கும் திரும்ப நிறைய குடுக்க வேண்டியது இருக்கு… கம் டூ த பாய்ண்ட்"

"வெல்… எனக்கு தேவி ஃபோன் ஹேக் பண்ணனும் ஆர் பக் செட் பண்ணி தரணும் அதான் உன்கிட்ட கேக்க கூப்ட்டேன். கண்டிப்பா அவகிட்டயிருந்து நீங்க டிவோர்ஸ் வாங்கிக்குற அளவுக்கு நான் கன்டன்ட் எடுத்து தர்றேன், இந்த சர்விஸ் முற்றிலும் இலவசம்" என்று சிரிக்க அவன் கொலைவெறியோடு முறைத்தான்.

"ஜஸ்ட் கிட்டிங், காரணம் சொல்லிடுறேன், நேத்து கீர்த்தின்னு ஒரு பொன்ன கானம் அவங்க அப்பா பொன்ன தேடித்தர சொல்லி போலீஸ் கிட்ட போல எங்க கம்பெனி கிளையண்ட் ராஜமாணிக்கம் கிட்ட போயிருக்காரு, அவரும் கண்டுபிடிக்க ஒத்துகிட்டாரு சும்மாவா 50% வோட் அவங்க ஆளுங்களோடது ஆச்சே விடுவோமா, நாங்களும் களத்துல குதிச்சிட்டோம், இப்பதான் தேவி தான் கீர்த்தியோட பெஸ்ட் ப்ரண்ட் ன்னு தெரிஞ்சி உன்ன கூப்பிட்டேன்"

"வாட் த ஹெல் ஆர் யூ டாக்கிங்… ஒரு ஃபேமிலிக்கு ஹெல்ப் பண்ணா 50% வோட் கிடைக்குமா, அதுக்கு தேவி பிரிவசில தலையிடுவீங்களா, எல்லை மீறி போறீங்க" என்று சீறினான்.

"ரிலக்ஸ்… இது ஒரு குடும்பப் பிரச்சனை இல்லை பொண்ணு வேற ஜாதி பையனோட ஓடி போயிருக்கா இது அந்த இனத்தோடா மானப் பிரச்சனை, மானத்தை காப்பாத்தி தர்றவங்களுக்கு சொத்தையே தருவாங்க ஓட்டு போட மாட்டாங்களா, அது எல்லாம் உனக்கு புரியாது. ஐ நீட் எஸ் ஆர் நொ"

"உங்க அரசியல் போதைக்கு அவங்க அறிவிலித்தனம் ஊருகா… நீ கேட்ட எதுவும் நான் செய்ய போறது இல்ல அண்ட் அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன், அந்த பொண்ணு என்னையும் தேவியையும் முழுசா நம்பியிருக்கா, சோ என்னால இந்த விஷயத்துக்கு எல்லாம் உங்களுக்கு உடந்தையாக இருக்க முடியாது"

"அப்போ உனக்கும் அந்த பொன்ன பத்தி தெரிஞ்சிருக்கு அப்படித்தான… எனக்கு இப்போ வேலை ரொம்ப ஈசி ஆயிடுச்சு. தேவிகிட்ட கூட கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணனும் பட் உன்கிட்ட இப்பவே விஷயத்த வாங்கிடுவேன் பிக்காஸ் உனக்குத்தான் எங்க தயவு நிறைய வேணும் டூ மூவ் நெக்ஸ்ட்" அவள் ஏளனப் புன்னகையோடு சொல்ல அவன் அவளை அனல் தெறிக்கப் பார்த்தான்.
 
வந்தியத்தேவனும் குந்தவையும்

அத்தியாயம் 8

அன்று இரவு சென்னையில் ராம் மற்றும் சந்திரமூர்த்தியின் தொழில் நண்பர்களுக்காக ஒரு ஹோட்டல் ஹாலில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக ஊரிலிருந்து சொந்த பந்தங்களும் வந்திருக்க தேவிக்கு சாயங்காலம் வரை அவர்களுடனே நேரம் போனது, அனைவரையும் வரவேற்று சென்ற ராம்மை அதன் பின்னர் கண்ணில் கூட பார்க்க முடியவில்லை.

மாலை நேரம் எல்லோரும் ஹோட்டல் செல்ல அங்கு ஒரு அறையில் தேவிக்கு அலங்காரம் நடக்க, பெரியவர் முதல் சிறியவர் வரை அவளை, 'யார்ரா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுட்டு' என்று கலாய்த்து கொண்டிருக்க, அந்த அறை வாசலில் வந்து நின்றான் ராம்.

மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டு சிரித்துக் கொண்டு இருந்தவனை பார்த்த வேலம்மாள், "புது மாப்பிள்ளை என்ன வாசலையே நிக்குறீங்க, உள்ள வா ராம்"

"அவனுக்கு தேவிய பாக்க வெக்கமா இருக்கு போல அதான் காலைல இருந்து ஓடி ஒழிஞ்சிட்டு இருக்கான்" என்று சீதாலட்சுமி சொல்லி சிரிக்க, அர்ஜுன், "நான் சொன்னேன்ல நைட் ட்ரெயின்ல வரும்போது தேவிய விட ராம் தான் வெக்கப்படப் போறான்னு கேட்டிங்களா இப்போ பாருங்க" என்று இளசுகளிடம் அவனை நிரூபிக்கும் முனைப்பில் பேசிவிட்டான். ஆக அத்தனை பேரும் இளையவர்கள் புதுமண தம்பதிகளின் அந்தரங்கம் பற்றி பேசி இருக்கிறார்கள் என்று தெரிந்ததும், எல்லோரும் நெளிந்தார்கள்.

ராம் முகம் கடுமையாக மாறி அர்ஜுனை பார்த்து, "நீ என்கிட்ட ஒரு நாள் செம்மயா வாங்கபோர அது உறுதி. நாங்க சேர்ந்து போலாமேன்னு அவளை கூப்பிட வந்தேன். அர்ஜுன் கலாய்க்குறது எல்லாம் ஒரு அளவுதான், ஸ்டே அவே ஃப்ரம் அதர்ஸ் பெர்சனல் பட்டிகுளர்லி ஆர்ஸ் (stay away from others personal particularly ours)" என்று அவனை எச்சரிப்பது போல அனைவருக்கும் சொன்னான். அது அவர்களுக்கு புரிந்து அமைதிக்காக்க, தேவி முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் ராமை நோக்கி நடந்தாள். அவளுக்கு ராமின் இந்த கோவம் தேவையற்றது என்று தோன்றியது, அவன் சிரித்தபடி பேசி இருந்தால் கூட அது அவளுக்கு வித்தியாசமாக தெரிந்து இருக்காது, காரணம் திருமணத்தின் போது அத்தனை பேர் முன்னிலையில் அவளுக்கு மெட்டி அணிவிக்கும் போது அவர்கள் கலாய்க்க கண்டென்ட் (content) கொடுத்தவனும் அவன் தான், இப்போது அவர்கள் கலாய்ப்பதை கண்டிப்பதும் அவன் தான், அவன் இப்போது அவளுக்கு புதிதாக தெரிந்தான். அவன் இதற்கு முன் நடித்தான் என்று தெரியும் ஆனால் ஏன் இப்போது நடிக்கவில்லை என்று தெரியவில்லை, அவன் மனநிலை மாற்றம் அவளுக்கு ஏனோ ஒரு கவலையை கொடுத்தது. எதுவும் பேசாமலே இருவரும் பாதையை பார்த்தபடி நடந்தனர்.

ரிசப்ஷன் ஹால் நுழைந்ததும் எல்லோரும் தன் இயல்புக்கு வந்திருந்தனர். ராமும் தேவியும் கட்டாயமாக சிரித்து விருந்தினர்களை வரவேற்றனர். ஒவ்வொருவராக மேடை ஏறி மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்க, அவர்களுள் லேசாக தள்ளாடியபடி வந்து சேர்ந்தாள், ஷ்ரத்தா. இத்தனை நேரம் வழுக்கட்டையமாக சிரித்துக் கொண்டு இருந்த ராமுக்கு அவளை பார்த்தவுடன் சப்தநாடியும் அடங்கியது. அவன் முகம் அதிர்ச்சி காட்ட, அவளோ மென்சிரிப்புடன் அவர்கள் அருகே வந்து அவனை கட்டியனைத்தாள்.

தேவி மற்றும் குடும்பத்தார் இதை எல்லாம் சட்டை செய்யவில்லை நாகரீகத்தின் முதிர்ச்சி நிலையை அவர்களும் புரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் ராமுக்கு தான் சங்கடமாகிப் போனது, ஏற்கனவே குற்றவுணர்வில் இருப்பவனுக்கு இது மேலும் என்னவோ செய்தது.

அவள் அதோடு நில்லாமல் தேவியை பார்த்து, "இனி என்னால இது மட்டும் தான் செய்ய முடியும், எனிவே காங்கிரட்ஸ்" என்று கை குலுக்க, தேவி அவள் வார்த்தைகளின் அர்த்தத்தை தேடியபடி கை குலுக்கினாள். தேவியை அதற்கு மேல் யோசிக்க விடாமல் அவள் சொந்தங்கள் ஊருக்கு கிளம்புகிறோம் என்று வந்து நிற்க, அவள் அழுது வழியனுப்ப அந்த ஹோட்டல் வாசல் வரை சென்றுவிட்டாள். ராம் அந்த இடைவெளியை பயன்படுத்தி, ஷ்ரத்தாவை அங்கிருந்து அப்புறப்படுத்த அவள் கை பிடித்து மெதுவாக வெளியே இழுத்து சென்றான். அவளை அங்கு இருக்கவிட்டால் மேலும் ஏதாவது உளறி அவனுக்கு பாரம் ஏற்றிவிடுவாளோ என்ற பயமே இப்படி அவன் சூழ்நிலை மறந்து நடக்க காரணம்.

தேவி அனைவரையும் வழியனுப்பி விட்டு உள்ளே வர கூடவே வந்தாள், ரேஷ்மா. இருவரும் முதல் தளத்தில் இருக்கும் வரவேற்பு ஹால்லுக்கு படியில் ஏறியபடி பேசிக் கொண்டே நடந்தனர்.

"அழாதடி ராத்திரி சரியாக போற அதுக்கு இவ்வளவு சீன், பாரு மேக் அப் எல்லாம் கலஞ்சி போச்சி உண்மையிலேயே பேய் மாதிரி இருக்க" என்று அவளை இயல்பாக்கும் பொருட்டு பேசினாள், ரேஷ்மா.

அவள் பேச்சை கேட்டு தேவி சிரிக்கவில்லை ஆனால் அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்தது, ஒரு வெற்று புன்னகை வீசி, "போடி என் நிலமை புரியாம பேசிக்கிட்டு, நீ சென்னைல வேலை பாக்கிறதால எனக்கு கொஞ்சம் ஆறுதல் இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன். நிஜமா பேய் மாதிரியா இருக்கேன், சரி வா ரூம் போய் இத சரிப்பண்ணிட்டு திரும்ப வரலாம்"

"அதுக்கு 3 புளோர் ஏறனுமே லிஃப்ட்ல போலாம் வா" என்று இருவரும் லிஃப்ட் அருகில் சென்று அதன் பட்டனை அழுத்திவிட்டு காத்திருக்க, லிஃப்ட் கதவு திறக்கப்பட்டது. கதவு திறந்ததும், அவர்கள் கண்ட காட்சியில் இருவரும் நிலைகுழைந்து போயினர்.

கதவு திறந்த அடுத்த விநாடி முன்னின்ற தேவியின் கண்களுக்கு தெரிந்த காட்சி, ராமும் ஷ்ரத்தாவும் முத்தமிட்டு கொண்டிருந்தது தான். அதை பார்த்ததும் தேவி சட்டென கண்களை மூடி, அங்கிருந்து நகர்ந்து அருகில் இருந்த சுவற்றில் முதுகு பட சாய்ந்து நின்றிருக்க, அவள் பின்னால் இருந்த ரேஷ்மாக்கு ஆத்திரம் பொங்கியது, ஆனால் அவள் தேவியின் எதிர்வினை என்ன என்று ஆராய்வதற்குள் லிஃப்ட் மறுபடியும் மூடிக்கொண்டது.

"தேவி பிராந்தா நினக்கு நீ கண்ண மூடிட்டா நாம பாத்தது இல்லன்னு ஆயிடுமா… லிஃப்ட் பேஸ்மெண்ட் (lift basement) போகுது வா நீ என்கூட அவன் சட்டைய புடிச்சி என்னன்னு கேப்போம்" என்று ரேஷ்மா உச்சக்கட்ட கோபத்தில் கத்தி அவள் கையை பிடித்து இழுக்க, தேவி பெருமூச்சு விட்டபடி மெதுவாக கண்களை திறந்து, இல்லை என்பது போல தலை ஆட்டினாள்.

"வீட்டுக்கு போலாம்… ராஜி அத்தை வீட்டுக்கு என்ன கூட்டி கொண்டு போய் விட்டுட்டு நீ உன் பிஜி ஹாஸ்டல் போ பிளீஸ்" அவள் கண்களில் நீர் சுரந்து இருந்த நிலையில் கெஞ்சினாள், ரேஷ்மாவால் தாங்கவே முடியவில்லை தேவியின் கோபம் கூட தாங்கிக் கொள்வாள் ஆனால் அவள் அழுகையை அவளால் ஜீரணிக்கவே முடியாது, அதனால் ராமின் மீது கொலைவெறி ஆத்திரம் வந்ததை கட்டுப்படுத்திக் கொண்டு, "சரி நான் உள்ள போய் யார்கிட்டயாவது சொல்லிட்டு வர்றேன், வெயிட் பண்ணு" என்று ராமின் வீட்டாரை தேடிச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்டது பிரியா தான், எல்லோரும் விருந்தினருடன் பேசி கவனிப்பதில் பிஸியாக இருந்தனர். தேவியை அழைத்து போகிறேன் என்றால் நிச்சியம் நிறைய கேள்வி வரும் இந்த நிலையில் விடவும் மாட்டார்கள், ஆனால் பிரியா கேள்வி கேட்கும் இடத்தில் இல்லை என்று புரிந்து கொண்ட ரேஷ்மா அவளிடம் சென்று, "தேவிக்கு தலைவலி நான் அவளை கூட்டிட்டு போய் உங்க வீட்டுல விட்டுருறேன் நீங்க உங்க அத்தை மாமா கிட்ட சொல்லிடுங்க" என்று கூறிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் வெளியேறினாள். பிரியா அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் அவளை நிற்க சொல்லி களைத்து ரகுவிடம் விஷயத்தை கொண்டு போனாள்.

அதற்குள் தேவியும் அவளும் கேபில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு இருந்தனர். வழியில் தேவி ஒரு வார்த்தைக் கூட கதைக்கவில்லை, ரேஷ்மாவால் அவள் மனநிலையை கணிக்க முடியவில்லை. அவள் மனதை கொட்டி அழுதுவிட்டால் கூட ரேஷ்மாவுக்கு நிம்மதியாக இருந்திருக்கும் போலும் அவள் அமைதியான ஸ்வருபம் எல்லாவிதத்திலும் பயத்தை உண்டாக்கியது. அவளை சிறுவயதில் இருந்து பார்த்திருக்கிறாள், அவளுடன் நெருக்கமாக நட்பு பாராட்டி இருக்கிறாள். இருப்பினும் இன்றுவரை தேவியை அவளால் எளிதாக கணித்துவிட முடியாது, அவளை பொறுத்தவரை தேவி எந்த வகையான பெண்களுக்காக படைக்கப்பட்ட உணர்ச்சி டெம்ப்ளேட் (template) குள் சிக்காத பெண். எனினும் அவளை அதற்குள் அடைப்பது சரவணனின் சென்டிமென்ட் பேச்சுக்கள் மட்டுமே. ஒருவேளை இவள் இதற்காக ராமிடம் பிரச்சனை செய்தால் குடும்பம் கெட்டு போகும் என்று எண்ணி அமைதி காக்கிறாளோ என்ற எண்ணம் எல்லாம் வர்ற, அதற்கு மேல் முடியாமல், "இப்ப என்ன பண்ண போற, ஃபேமிலி பத்தி யோசிக்குரியா… தேவி திஸ் ஈஸ் ஸ்டுபிடிடி (stupidity), இது உன் லைஃப் நீதான் டிசைட் (decide) பண்ணனும், அவன் உன்ன சீட் (cheat) பண்றான்…"

அவள் முடிக்கும்முன், தேவி சட்டென அவள் முகத்தை பார்த்து, "சீட்டிங்கா… சட்டம் திருமணமான பெண்களுக்கு என்ன சொல்லுது தெரியுமா, இட்ஸ் ஓகே டூ ஹாவ் தொடர்பு (affair), அவளுக்கு பிடிச்சதை செய்றதுக்கு அவளுக்கு உரிமை உண்டு… இதே சட்டம் ஆம்பிளைங்களுக்கும் பொருந்தும்ல, நாம சம உரிமை குடுக்கணும்ல" என்று சிரிக்க, ரேஷ்மாக்கு அவள் பைத்தியமாக
தான் தெரிந்தாள். ஆனால் அவளுக்கு இது ஒன்றும் புதுசு இல்லை நிறைய முறை இப்படி கோவம் வருவது போல் காமெடி பண்ணி அடுத்தவரின் இரத்தக் கொதிப்பை ஏற்றி விட்டுருக்கின்றாள், அந்த வகையில் அவர்களுக்கு அவள் ஒரு சைக்கோபேத் (psychopath) தான்.

தேவியை முறைத்த ரேஷ்மா, "இன்னொரு தடவ இப்படி பேசுன உன்ன எதை வச்சி அடிப்பேன்னு எனக்கே தெரியாது. ஆனா ராம் உனக்கு அந்நியம் தான் உன் பேச்சில இருந்தே தெரியுது பிகாஸ் அவன் மேல உனக்கு ஏதாவது ஒரு சின்ன ஃபீலிங்ஸ் இருந்தாலும் இப்படி பேசி இருக்க மாட்ட. நீ என்ன யோசிக்கிற என்ன பிளான்ல இருக்குறன்னு தெரியல, ஆனா நான் அந்த பொண்ணுமோன்ன பாக்கும் போது 'தேவியவிட அவகிட்ட உனக்கு என்ன பிடிச்சது'ன்னு கிரீன் கிரீன்னா கேப்பேன்"

"என்ன இன்ஃபீரியரா (inferior) ஃபீல் பண்ண வைக்கணும்ன்னு நினைக்குறியா… மகிழ்ச்சி மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டு அவள் இறங்கும் இடம் வந்ததால் உடனே இறங்கிச் சென்றாள். ரேஷ்மாக்கு தேவி எதற்கு நன்றி சொன்னாள் என்று புரியவில்லை ஆனால் வேறொன்று விளங்கியது,
தேவியை ராம் அதிகம் பாதித்துவிட்டான்.
 
வந்தியதேவனும் குந்தவையும்

அத்தியாயம் 9

ராம் சாலையை வெறிக்க பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டு இருந்தான். முகத்தில் வெறுமை குடிக்கொண்டு இருக்க, கண்களில் மனதின் வலி அப்பட்டமாக தெரிந்தது. அருகில் ஷ்ரத்தா கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள். வீட்டில் அதிகமாக மது குடித்ததால், அவளால் கார் ஓட்ட முடியாமல் போக, கேபில் ராம் வரவேற்புக்கு அவள் வந்திருக்க, ராம் அவளுக்கு கேப் புக் செய்து காத்திருந்து அவளை அனுப்பும் அளவுக்கு பொறுமை இல்லாதவன், அவனே தன் காரில் அவளை வீட்டில் விட புறப்பட்டான். கேள்வி வரும் 'நீ ஏன் விடப் போன?'… 'தா பாத்துக்கலாம்' என்று கிளம்பிவிட்டான். லிஃப்ட்டில் அவள் நடந்து கொண்டதை கடந்து வர முடியாமல் அவன் உள்ளுக்குள் வெதும்பிக் கொண்டிருக்க, அவன் கைகள் தானாக எழுந்து அடிக்கடி அவன் இதழை அழுந்தத் துடைத்தது.

அதை பார்த்து ஷ்ரத்தாவுக்கு மேலும் கண்ணீர் சொறிந்தது, கண்களை துடைத்துக் கொண்டே, "சாரி ராம், கொஞ்சம் போதை அதிகமாகிடுச்சி அதான் அப்படி நடந்துகிட்டேன் உன் சிட்டுவேக்ஷன் எனக்கு புரியுது இருந்தாலும் என்னால இத ஏத்துக்க முடியல, பட் சூன் ஐ வில் பீ பேக், சோ டோண்ட் வொர்ரி இந்த நிலமைல கூட என்ன பத்திரமா கொண்டு விடனும்ன்னு நினைக்கிற பாரு இந்த குணம் தான் நான் உன்கிட்ட இப்படி நடந்துக்க காரணம்" இப்போதும் போதையில் தான் உளறிக் கொண்டிருந்தாள். தெளிவாக இருந்திருந்தால் அவனிடம் இப்படி பேச அவளுக்கு தைரியம் ஏது? அவனிடம் பேசும் போது கண்ணை மட்டும் தான் பார்த்து பேச வேண்டும் அதுவும் பிசினஸ் விஷயங்கள் தவிர வேறு எது பேசினாலும் அவனுக்கு கவனம் இருக்காது. உதவி என்றால் அது அவனுக்கு எவ்வளவு அசௌகரியத்தை கொடுத்தாலும் ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல் செய்துவிடுவான். அந்த குணம் தான் அவனிலிருந்து எந்த உறவையும் பிரியவிடாமல் வைத்திருக்கிறது, இப்படி சிலரை அவனின் பால் ஈர்க்கவும் வைத்திருக்கிறது.

ராம் உச்சக்கட்ட கோபத்தில் அவள் பேசுவதை கேட்கவும் முடியாமல் காதை பொத்தவும் முடியாமல் உட்கார்ந்திருந்தான். அவள் பேசுவதை நிறுத்த ஆளே இல்லாத தெருவில் சத்தமாக மறுபடி மறுபடி ஹார்ன் அடித்தான். ஷ்ரத்தா அவன் புறம் திரும்பிப் பார்த்து, "கோவம் வந்தா சொல்லு ஐ நோ யூ ஆர் டிஃபரெண்ட் (different) என் எக்ஸ் ஹஸ்பண்ட் மாதிரி பண்ணாத ஐ கெட் இரிட்டேட்டெட் (irritated)" என்று எரிச்சல் பட்டுவிட்டு கண்களை மூடி தலையை கையால் பிடித்தாள்.

ராம் சட்டென அவளை அனல் தெறிக்க பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டவனின் மனதோ, 'எது நமக்குள்ள இல்லன்னு ப்ருவ் (prove) பண்ண இவ்வளவு தூரம் இறங்கி போராடிக்கிட்டு இருக்கேனோ அது இருக்கு, நாங்க அப்படித்தான்னு சொல்லாம சொல்லுரியே நான் நல்ல ஃப்ரெண்ட்ன்னு தான நினைச்சி சப்போர்டிவ்வா இருந்தேன் என்ன அசிங்கப்படுத்திட்ட ச்சை, பிசினஸ் பார்ட்னர் மேஜர் ஷேர் ஹோல்ட் (share hold) பண்ற அப்படிங்குறதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்னு நினச்சுட்டியா யூ பி…' என்று அவள் கேள்விக்கு திட்டினாலும் மனதால் கூட அவளை அசிங்கமாக நினைக்கவில்லை, அப்படி செய்தால் அது அவன் இல்லையே, யாரையும் எடைபோடும் குணம் கொண்டவனல்ல, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். சிலர் மேல் கோபம் வந்தால் கூட தன் மனதிற்கு நெருக்கமானவர்களைத் தவிர யாரையும் திட்டமாட்டான். அதனால் தான் இப்போது கூட அவளை திட்ட தயங்கி மனதில் திட்டி, இருக்கும் கோபத்தை கார் ஹார்ணில் காட்டி கொண்டு இருந்தான்.

இசிஆரில் பெரிய பங்களா அவளுடியது கார் அந்த இடத்தில் நின்றதும், அவள் தலையை பிடித்தக்கொண்டே இறங்கி விறுவிறுவென சென்றுவிட்டாள். ராம்க்கு அப்பொழுது தான் மூச்சு சீராக வந்தது. டாஷ்போடில் இருந்த ஃபோன் நீண்ட நேரமாக அலறியது அவனுக்கு இப்போது தான் கேட்டது. அவன் எடுக்கவில்லை என்றதும் கட் ஆகி மறுபடியும் அலறியது. 'அட இருங்களேன்டா நான் கொஞ்சம் மூச்சி வீட்டுக்குறேன்' என்று தலைவெடிக்க அமர்ந்திருந்தான். ஃபோன் மறுபடியும் அலற, ராம் அதை கையில் எடுத்துவிட்டான், ராஜமாணிக்கம் அழைத்துருந்தார்.

"ராம் ஃபோன் எடுக்கமாட்டிங்களா அவ்வளவு தூரம் போய்ட்டீங்க போல. கல்யாணம் முடிஞ்சா உங்க கடமை முடிஞ்சுபோச்சுன்னு அர்த்தமா என் வேலை முடியுர வரை என் ஃபோன் அழைப்ப எடுக்கணும் இல்லை உங்களுக்கு தான் கஷ்டம், கல்யாணம் பண்ணியாச்சு ஹனிமூன் போங்க அப்பக் கூட என் கால்ல எடுக்க மறந்துடாதீங்க புரிஞ்சுதா"

"எனக்கு இன்னைக்கு ரிசப்ஷன் நடந்துட்டு இருக்கு அடுத்தவங்க நிலையும் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க மினிஸ்டர் இல்ல கிடைச்ச ஒரு ஏமாளியும் நக்கிட்டு போயிரப்போறான் அப்பறம் வெறும் கைய நக்கிட்டு தான் இருக்கணும்"

அவன் இருந்த கடுப்பில் பொறுமை இழந்து நக்கல் பேசிவிட்டான். மறுமுனையில் பெரிய சிரிப்பு சத்தம், "உனக்கும் அதே நிலைமைதான் ராம், அதை அடிக்கடி மறந்துறுர… உனக்கு உன் அப்பா அளவுக்கு சாணக்கியத்தனம் இல்ல, உன் அப்பா காரியம் ஆகனும்ன்னா எந்த எல்லைக்கும் போவான், பெத்த பசங்களுக்கே சிபாரிசு செய்யாத எங்க ஆறுமுகம் ஐயாவ அவர் பொன்ன காட்டி மனச மாத்தி அவர் கையால தொழில் தொடங்க வச்சி ரோடு காண்ட்ராக்ட் எடுக்க அவனுக்காக சிபாரிசு பண்ண வச்சான், அவனுக்கு இருக்குற ஸ்டேட் லெவல் ஆளுங்கட்சி எதிர்கட்சி செல்வாக்கே சொல்லும் அவன் தந்திர புத்திய, ஆனா உனக்கு எதுக்கு எடுத்தாலும் கோவம் வருது ரொம்ப கஷ்டம். சரி நான் எதுக்கு உனக்கு கூப்பிட்டேன்ன்னு சொல்லிருறேன், அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பாட்டுக்கு உன் பொண்டாட்டியோட வந்துரு, இப்படி எல்லாம் செஞ்சா தான் நீயும் நானும் ரொம்ப க்ளோஸ்ன்னு அந்த சரவணன் நம்புவான், இத இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணிக்கோ அப்பதான் உன் கம்பெனி தப்பிக்கும் ஞாபகம் வச்சிக்கோ" என்றுவிட்டு ஃபோன் வைக்கப்பட்டது.

ராம் இதழில் ஏளனப் புன்னகை, 'எலி ரொம்ப அம்மணமா ஓடுது… அதுவும் என்கிட்டையே இவ்வளவு இறங்கி பேசுறத பாத்தா அந்த பொண்ணு கீர்த்தி மாட்டல போல சந்தோஷம் இதுல தேவிய வேற மீட் பண்ண கூட்டிட்டு வரணுமாம்மே உங்க பாடு திண்டாட்டம் தான் மினிஸ்டர், ஆனா என் எதிர்கால கனவு…' என்று நினைத்த மனது கவலையுடன் அவன் பிரச்சனை தொடங்கிய நாட்களுக்கு சென்றது.
 
அத்தியாயம் 9 - தொடர்ச்சி

ராம் ஆரம்ப நாட்களில் சென்னையில் ஒரு அனிமேஷன் அண்ட் கேமிங் கம்பெனியை நிறுவி வெற்றிகரமாக நடத்தினான். அதன் பின் படங்களுக்கு சிஜி (computer graphics) வேலைகளை செய்யும் பிரிவையும் உருவாக்கி அதிலும் வெற்றி கண்டான். அப்போது தான் அவனுடன் படித்த தீரஜ் ஓபராய் ராமிடம் உதவி என்று வந்து நின்றான். அவனும் ராமை போல் மும்பையில் கம்பெனி ஆரம்பித்து அதில் வெற்றி காண முடியாது திணறி கொண்டு இருக்கிறான். அங்கு மார்கெட்டும் பெரிது போட்டியும் பெரிது, கருத்தாக இல்லாவிட்டால் காணாமல் போய்விடுவோம். அதை நன்கு உணர்ந்த ராம் நண்பனுக்காக ரிஸ்க் எடுக்க தயாரானான், அதில் கொஞ்சம் சுயநலமும் உண்டு. நண்பனின் செயல் திறனை ஆராய்ந்தவனுக்கு அவன் வேலையில் எந்த பிழையும் இல்லை ஆனால் நிர்வாகத்தில் தான் கோளாறு என்று புரிந்தது. அதை சரி செய்துவிட்டாலே பாதி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது அதனால் ராம் இது அவன் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான வழி என்று நன்கு உணர்ந்து நண்பனுக்கு உதவுவதாக ஒத்துக்கொண்டான்.

கூடவே, "தீரஜ் ஐ அம் ரெடி டூ ஹெல்ப் யூ நாட் அஸ் அ ப்ரெண்ட் பட் அஸ் ஒன் ஆப் தி மெனேஜிங் டிரக்டர் (I am ready to help you not as a friend but as one of the managing director). உன் எம்பிலாய்ஸ (employees) கொஞ்சம் ட்ரெயின் பண்ண என் எம்பிலாய்ஸ இங்க கூட்டிட்டு வரணும் அவங்க யாரோ ஒருத்தரோட கம்பனிக்கு சும்மா நான் சொல்றதுக்காக வரமாட்டாங்க அண்ட் யாரோ ஒருத்தர் சொல்றத உன் எம்பிலாய்சும் கேக்க மாட்டாங்க அதுக்கு நாம பிரக்காஷன்ஸ் (precautions) எடுத்துரணும். இப்போ இருக்குற மெஸ் கிளியர் (mess clear) ஆக 6 மாசம் தேவை அண்ட் ப்ராஃவிட்டபுளா (profitable) மாத்த மேலும் 6 மாசம் ஆகலாம், அது வர்ற வேலைப் பாக்குறவங்களுக்கு சம்பளம் குடுக்கணும் இதை எல்லாம் பொருத்துகிட்டு நமக்கு பணம் தர்ற ஒரு இன்வெஸ்டர புடி. இதுக்கெல்லாம் சரின்னா ஐ அம் இன் (I am in)" என்று தன் யோசனையை சொன்னான் ராம்.

இதை எல்லாம் கேட்டுவிட்டு சென்ற தீரஜ்க்கு பணம் கொடுப்பவரை பிடிப்பதில் பெரிய கஷ்டமில்லை காரணம் அவன் குடும்பமே பெரிய தொழில் அதிபர்களை உள்ளடக்கியது தான். எல்லாரும் சேர்ந்து தொழில் செய்ய இவன் மட்டும் புதிதாக செய்ய போகிறேன் என்று குடும்பத்தை எதிர்த்து தனியாக வந்துவிட்டான். அப்போது அவர்களின் ஏளனம் இப்போதும் அவன் மனதை அரித்துக் கொண்டிருக்க வெற்றிக்கான பொறுமையை இழந்து ராம் முன் வந்துவிட்டான். ராமிடம் அவனுக்கு நம்பிக்கை அதிகம் அதனால் அவன் சொன்ன அனைத்திற்கும் மறுப்பு தெரிவிக்காமல் அடுத்த நாளே ராமிடம் ஷ்ரத்தாவை அழைத்து வந்தான்.

"ராம் திஸ் இஸ் ஷ்ரத்தா ஓபராய் மெரா பாபி, மீன் அண்ணி, லாஸ்ட் மந்த் தான் என் இஷாந்த் அன்னாக்கும் இவளுக்கும் கல்யாணம் ஆச்சு. அக்சுவலி ஷீ இஸ் மை ஸ்கூல் ப்ரெண்ட் (actually she is my school friend)சோ ரொம்ப மரியாதை குடுத்து எல்லாம் பேசமாட்டேன் அண்ட் சொல்ல மறந்துட்டேன் ஷீ இஸ் ஆர் இன்வெஸ்டர் (she is our investor)"

ராம்மும் நண்பனின் மேல் இருந்த நம்பிக்கையில் எதுவும் யோசிக்காமல் புன்னகை வீசி, "வெல்கம் மிஸஸ் ஓபராய் தேங்க்யூ ஃபார் ஜாயினிங் (thank you for joining)" என்று கைகளை நீட்ட அவளும் அவன் கையை பற்றி கைக் குழுக்கிவிட்டு, அவன் இருக்கையை காட்ட அமர்ந்து கொண்டாள்.

"ஜஸ்ட் ஷ்ரத்தா இஸ் இனாஃப் (enough), சரி நான் இன்வெஸ்ட் பண்ணனும்னா உங்க ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரி எனக்கு தெரியணும் சோ டம் சரட் (dumb charades) விளையாடி காட்டுங்க அப்போதான் நீங்க எப்படி சின்க் (sync) ஓட வேலை பாக்குறீங்கன்னு நான் பாக்க முடியும்" என்று அவள் கூற, ராம் அதிர்ச்சியாக தீரஜ்ஜை பார்த்தான். அவனுக்கு அல்லு இல்லை.

"பீ சீரியஸ் பாபி உன் வேலைய என்கிட்ட மட்டும் காட்டு, உன்னால அவன் என்னையும் லூசுன்னு நினைச்சி வெளிய தொறத்த போறான்" என்று தீரஜ் அவளிடம் கெஞ்ச, அவள் சிரித்துக் கொண்டே, "ஜஸ்ட் கிட்டிங் பாய்ஸ் (just kidding boys), நான் தீரஜ்ஜ ரொம்ப நம்புறேன் அதுனால உங்களையும்… லெட்ஸ் மேக் இட் ரைட் (let's make it right) சோ ராம் உங்களுடைய வேலை ஐடியா, பிளானிங், பிருப்பரேஷன் அண்ட் பிரசன்டேஷன் (giving ideas, planning, preparation and presentation), தீரஜ் வேலை எக்சீக்யூக்ஷன் (execution), மைன் அட்மினிஸ்டரேஷன் (mine administration) ஓகே னா டீல்" என்று அவள் முடிக்கவில்லை ராம் டீல் என்று கைகளை நீட்டி இருந்தான். தெளிவாக பேசும் அவளை ஒரு சக தொழில் செய்பவனாக அவனுக்கு மிகவும் பிடித்து போனது தான் அதற்கு காரணம்.

மூவரும் கடினமாக உழைத்து கொண்டிருந்தனர். ராமுக்கு வேலை இரட்டிப்பானது, சென்னையிலும் வேலை செய்ய வேண்டும் மும்பையிலும் முழு ஈடுபாடு செலுத்த வேண்டும், அவனுக்கு அதுதான் ரொம்ப பிடிக்குமே உடலின் அசதி மறந்து வேலை செய்தான். கம்பெனியை மீட்டெடுத்தப்பின் ஒரு பிரபல கார்ட்டூன் சேனலில் ஒரு சீரியசை உருவாக்கும் வாய்ப்பு வந்தது. அதை சிறப்புடன் செய்து முடித்து, மேலும் மேலும் வாய்ப்பு வந்து லாபம் ஈட்டும் கம்பனியாக மாற்றியாகிவிட்டது.

இது எல்லாம் நடந்து ஒரு வருடம் இருக்கும், சந்தோஷமான நாட்கள் அவை, தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் தாங்கள் உருவாக்கிய கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் பற்றி பேசிக்கொண்டு திரிவதை கேட்டாலே தீரஜ்ஜுக்கு மகிழ்ச்சி பொங்கும்.

"நம்ம ஒரு பிராண்ட்டா மாறனும் ராம் லைக் ஃபாரின் பிராண்ட் புரொடக்ஷன் (like foreign brand production) நம்ம புரொடக்ஷன்னாலே அது தனியா தெரிஞ்சி மக்களுக்கு குவாலிட்டியா ஃபீல் ஆகனும்" என்று கனவுகளோடு பேச ராமும் அதே கனவை கானுபவன் தானே, புன்னகையால் அவனுக்கு நம்பிக்கை அளித்தான்.

இப்படியே நாட்கள் செல்ல, ஒரு இரவில் ராமும் தீரஜும் தீவிரமாக வேலை பற்றி பேசிக்கொண்டிருக்க, ஷ்ரத்தாவோ அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளை திரும்பி பார்த்த தீரஜ், "உங்களுக்கு வேலை முடிஞ்சுது தான பாபி அப்பறம் எதுக்கு இங்க உக்காந்துகிட்டு இருக்கணும். இட்ஸ் 9 தெரியலையா வீட்டுக்கு போங்க" என்று கத்தினான். அவளும் முக சுழிப்புடன் எழுந்து செல்ல, ராம், "எதுக்கு இப்படி பேசுற தீர் ஆபீஸ் உள்ள ஷீ இஸ் நாட் யுவர் பாபி, ஷீ ஹஸ் எவெரி ரைட்ஸ் டூ ஹீயர் அஃபிஷியல் திங்க்ஸ் தட் வீ டிஸ்க்கஸ் ஹுர் (office ulla she is not your bobi, she has every rights to hear official things that we discuss here)" என்று கண்டிப்புடன் கூறினான்.

தீரஜ், "எனக்கு தெரியும்டா ஏற்கனவே அவளுக்கும் அண்ணனுக்கும் பிரச்சனை, அவன் என்ன கூப்ட்டு அவளை பத்தி விசாரிக்கிறான் லூசுப்பையன், அவங்க பிரச்சனைக்குள்ள நான் சிக்கிருவேனோ பயமா இருக்கு, இதுல அவ வேற வேணும்ன்னு உக்காந்துட்டு இருந்தா எனக்கு கோவம் வருமா இல்லையா" அவன் புலம்பி தீர்க்க, ராமோ, "டேய் என்னடா ஹிந்தி சீரியல்ல விட கேவலமா அழுவுற" என்று கிண்டல் அடித்தான்.

அவனோ ராமின் சட்டையை பிடித்து, "ஏண்டா உங்க சீரியல்ல யாரும் அழ மாட்டாங்களா" என்று கேட்க, இராமோ அவன் கையை பிடித்து சட்டையை எடுத்தபடி, "எதுக்கு போய் சட்டைய பிடிக்குற, இவ்வளவு விஷயத்துல உனக்கு அது மட்டும் தான் குறை இல்ல, எனக்கு வேலை இருக்கு சென்னை போறேன் ஒழுங்கா நாளைக்கு கிளையண்ட் மீட்டிங் அட்டென்ட் பண்ணு"

"டேய் எத்தனை தடவ சொல்லுவ செத்தா கூட மறக்க மாட்டேன்" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு சொல்ல, ராம் சிரித்தான்.

அப்போதுதான் ராம் அவனை கடைசியாக பார்த்தது, அதிகாலையில் சென்னையில் வீட்டில் குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்த ராமின் ஃபோன் ஒலிக்க, எடுத்து பார்த்தால் ஷ்ரத்தாவின் கால், "தீரஜ் நோ மோர் ராம் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு" என்று கதறி அழுதாள்.

ராம் நண்பனின் உடல் வைக்கப்பட்டிருந்த அவன் வீட்டுக்கு கண்ணீருடன் சென்றான். அவன் உடலை பார்த்ததும், தீரஜ் கடைசியாக சொன்ன வார்த்தை அவன் காதில் ஒலிக்க, கதறி அழுது கீழே விழப்போனவனை தோளோடு பிடித்து அவனை நிலைப்படுத்தி நிறுத்தினாள் ஷ்ரத்தா. அப்போது இருந்துதான் ராம் லைம் லைட்க்குள் (limelight) வந்தான், அப்போது இருந்து தான் அவனுக்கு பிரச்சனைகளும் ஆரம்பமாயின. காரணம் ஷ்ரத்தா பெரிய தொழில் குடும்பத்தின் மருமகள் மட்டுமல்ல அவள் தந்தை சித்தார்த் ரைசாதா மாநிலங்களவை உறுப்பினராக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்து வருபவரும், மத்தியில் ஆளும் கட்சியின் துணைத் தலைவரும் ஆவார்.
 
Status
Not open for further replies.
Top