"லியோ..." என்று க்ரிஸ்டியின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "ஐ வோன்ட் டூ டோக் டூ யூ" என்று இறுகிய குரலில் சொன்னவன் அவளுடைய அனுமதியைக் கூட கேட்காது வீட்டிற்குற் நுழைந்தான்.
க்ரிஸ்டியும் யோசனையோடு கதவை சாற்றிக்கொள்ள, அடுத்த அரைமணி நேரம் என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ!
அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவளின் இதழ்கள் புன்னகைத்தாலும் விழிகள் அத்தனை வலியை பிரதிபலித்தன.
"சீ யூ க்ரிஸ்டி" என்று தான் வந்த வேலை முடிந்ததென அவன் அங்கிருந்து சென்றுவிட, விழியோரம் கசிந்த விழிநீரை துடைத்தெறிந்து விட்டு போகும் தன் முன்னால் காதலனை ஏக்கத்தோடு பார்த்திருந்தாள் அவள்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கழிந்த நிலையில்,
அன்று காலையில் எழுந்ததிலிருந்து வழமை போல் மற்ற பணிப்பெண்களின் குத்தல் பேச்சுகளோடே யாழ்மொழியின் நேரம் கடக்க, இருந்த மொத்த வேலைகளையும் முடித்துவிட்டு வெளியே செல்வதற்கு தயாரானாள் அவள்.
"உன் காதலன்தான் இங்கு இல்லையே, பிறகு எதற்கு வெளியே செல்கிறாய் யாழ்? ஓஹோ... ஒருவேளை இது வேற ஒரு ஆங்கிலேய அதிகாரியோ? கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதும் எதிர்காலத்துக்கு நல்லதுதானே" என்று ஒருத்தி நாக்கில் விஷத்தை தடவியது போல் சொல்ல, முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கியவாறு அவளை திரும்பிப் பார்த்தாள் யாழ்மொழி.
ராதாவும் மற்ற பணிப்பெண்களும் உள்ளுக்குள் சிரித்தவாறு நின்றுக்கொண்டிருக்க, "உங்களிடம் பேசி புரிய வைப்பதில் எந்த பயனுமில்லை" என்று விரக்தியாக சொன்னவள் கண்ணீரைத் துடைத்தவாறு அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.
ஆனால், அப்போதும் அந்த பெண்கள் விட்டார்களா என்ன!
தன் வாழ்க்கையில் எல்லாமே தலை கீழாக மாறிவிட்டதை எண்ணி உடைந்துப் போய் தளர்ந்த நடையாக யாழ் சென்றுக்கொண்டிருக்க, திடீரென பின்னால் ஒரு ஹார்ன் சத்தம் கேட்டது.
அது காதில் விழுந்ததுமே, "வந்துவிட்டீர்களா.." என்று ஆனந்த அதிர்ச்சியோடு வாய்விட்டே சொன்னவள் குறையாத சந்தோஷத்தோடு வேகமாகத் திரும்பிப் பார்க்க, அடுத்தகணம் அவளுடைய மொத்த சந்தோஷமும் வடிந்துப் போயிற்று.
காரணம், அங்கு வந்து நின்றது அவளின் மனதைக் கொள்ளையடித்தவன் அல்ல
மாறாக வில்லியம்தான்.
காரிலிருந்து இறங்கியவன், "உனக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்ல, உனக்காக ஆஃபீசர் கடிதம் அனுப்பி இருக்காரு, ஆனா நீ..." என்று சலிப்பாக இரு பக்கமும் தலையாட்ட, வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டாள் யாழ்மொழி.
"கடிதத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை, கடவுளே..." என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டவள், "இப்போது கொடுங்கள்" என்று கரத்தை நீட்ட, விஷம சிரிப்போடு காருக்குள்ளிருந்து ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினான் வில்லியம்.
"சுற்றி பல பிரச்சனைகள், இதை பற்றி சுத்தமாக மறந்தே போய்விட்டேன். ஆனால், எனக்காக இதை கொண்டு வந்து கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி" என்று உணர்ச்சி பூர்வமாக சொன்னவள் வேகவேகமாக அந்த கடிதத்தைப் பிரித்து வாசிக்க, மறுகணம் அவளுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
வில்லியமோ அவளுடைய முகபாவனையை அமைதியாக கவனித்துக்கொண்டிருக்க, "அது... அதிகாரி இன்றிரவு தேசத்தில் இருப்பதாக எழுதியிருக்கிறாரே! அது எப்படி? இந்.. இந்த கடிதம் எப்போது எழுதப்பட்டது?" என்று பதற்றமாகக் கேட்டாள் அவள்.
"அது... அது வந்து யாழ்மொழி.. நேத்துதான் இந்த கடிதம் என் கைக்கு வந்து சேர்ந்துச்சு. அப்படின்னா இந்நேரம் அவர் இங்க வந்துக்கிட்டு இருக்கலாம். மே பீ இன்னைக்கு ராத்திரி அரண்மனைக்கு வந்துடுவாரு. அங்க எங்க நாட்டு நேரமும் இந்த தேசத்து நேரத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. எங்களுக்கு எழுதின கடிதத்துல கூட ஆஃபீசர் வரதா சொல்லியிருக்காரு"
என்று ஏதேதோ சொல்லி அவள் மூளையை அவன் சலவை செய்ய, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.
"அவர் வந்த உடனே வந்து சந்திக்குமாறு சொல்லியிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று நெற்றியை நீவி விட்டவாறு அவள் குழம்பிப் போய் நிற்க, "இதுல என்ன குழப்பம்? ஆஃபீசர்தான் வராருல்ல, நான் சொல்ற இடத்துக்கு ராத்திரி நீ வந்து நில்லு. அவர நான் அழைச்சுட்டு வரேன். ஆங்... எப்படியும் உன்ன இந்த ஊர் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. அதனால எல்லாத்துக்கும் தயாராவே வா புரியுதா?" என்று சொல்லி அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் வில்லியம்.
இன்று தன் தோழிகள் பேசிய வார்த்தைகளையும் தன்னை சுற்றி நடப்பதையும் நினைத்துப் பார்த்தவளுக்கு ஏனோ அவன் சொல்வதே சரியென்று தோன்ற, மெல்ல சம்மதமென தலையாட்டினாள் யாழ்.
"இதற்குமேல் என்னாலும் அரண்மனையில் இருக்க முடியவில்லை. அதிகாரியே என்னை அழைத்துவிட்டார், இதன்பிறகு வேறெதுவும் வேண்டாம் எனக்கு" என்று அழுத்தமாக சொன்னவள் கடிதத்தை தன் நெஞ்சோடு அணைத்தபடி அரண்மனையை நோக்கிச் செல்ல, காமப் பார்வையோடு அவளைப் பார்த்து நின்றிருந்தவனுக்கு எல்லாமே கைக் கூடி வருவது போலிருந்தது.
இன்றிரவு தனக்கு கிடைக்கப் போகும் சுகத்தை எண்ணி சந்தோஷத்தோடு அவன் செல்ல, தன்னவனை காணப் போகும் சந்தோஷத்தோடு அரண்மனைக்கு வந்தவள் நேராக இந்திராவின் முன்னே சென்று நின்றாள்.
"என்ன இது?" என்று யோசனையோடு கேட்டவாறு அதை வாங்கிப் படித்த இந்திராவுக்கும் பேரதிர்ச்சியாக இருக்க, "யாழ், முடிவு செய்து விட்டாயா?" என்று கேட்டாள் குறையாத அதிர்ச்சியோடு.
"ஆம் இளவரசி, எனக்கு வேறு வழித் தெரியவில்லை. என் காதல் விவகாரம் தெரிந்தலிருந்து எல்லாரும் எனக்கு எதிராக திரும்பி விட்டனர். இத்தனைநாள் அவராக என்னை அழைக்கும் வரை காத்திருந்தேன், இப்போது நான் சென்றாக வேண்டும்" என்று அவள் கண்ணீரோடு சொல்லி முடிக்க, புருவ முடிச்சுகளோடு தோழியைப் பார்த்தாள் இந்திரா.
"உன்னவரோட நீ தாராளமாக செல்லலாம், அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இன்றிரவு நீ தனியாக செல்வதில் எனக்கு விருப்பமில்லை முதலில் விடியட்டும், காலையில் அரண்மனைக்கு வந்து உன்னை அவர் அழைத்துக்கொண்டு செல்லட்டும்" என்று இந்திரா முடிவாக சொல்ல, யாழ்மொழி இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"ஆனால் இளவரசி.. அது..." என்று அவள் தயக்கமாக இழுக்க, "எதுவும் பேசாதே! உன் காதலுக்கு நான் தடை போடவில்லை, ஆனால் இதுதான் என் இறுதி முடிவு" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள் அவள்.
மீண்டும் ஏதோ பேச வந்தவள் அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்க, தன்னவனைப் பற்றிய யோசனையில் அன்றைய நாள் முழுக்க அவளால் எதிலும் முழுதாக ஈடுபட முடியவில்லை.
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக அவளுக்குத் தோன்ற, அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தவளுக்கும் அதே யோசனைதான்.
'அய்யோ இப்போது நான் என்ன செய்வேன்? இத்தனை நாட்கள் கழித்து இன்றுதான் என்னை சந்திப்பதற்காக வந்திருக்கிறார், எனக்காக அந்த இடத்தில் காத்திருக்கிறாரோ? ஆனால் இளவரசி வேறு செல்லக் கூடாதென்று எனக்கு கட்டளை இட்டிருக்கிறார்களே, அதையும் என்னால் மீற முடியவில்லை. என்னவரையும் காக்க வைக்க பிடிக்கவில்லை. எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது'
என்று விட்டத்தைப் பார்த்து தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தவள், "ஏய்..." என்ற அழைப்பில் உடனே திரும்பிப் பார்த்தாள்.
அங்கிருந்த சில பணிப்பெண்களோ தங்களுக்குள் கிசுகிசுக்க, "வா, அரசர் உன்னை அழைத்திருக்கிறார்" என்றாள் அவர்களில் ஒருத்தி.
"அரசரா..." என்று அதிந்து விழித்தவள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அரசர் வேந்தனின் அறைக்குச் செல்ல, அங்கு மற்ற சில பெண்களும் கூடவே ராதாவும் நின்றிருக்க, யாழ்மொழிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது.
உடலெல்லாம் பயத்தில் வியர்க்கத் தொடங்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு வேந்தனின் சிவந்த விழிகளையும் கோபப் பார்வையையும் பார்த்து வார்த்தைகள் வர மறுத்தது.
"நான் சொல்வது பொய் என்றால் யாழ்மொழியிடமே கேளுங்கள் அரசே" என்று ராதா சொல்ல, 'ஏன் இப்படி ஒரு துரோகத்தை செய்தாய் ராதா?' என்ற கேள்வியை தாங்கிய வண்ணம் வலி நிறைந்த பார்வைப் பார்த்த யாழ்மொழி வேந்தனின் முன்னே தலை குனிந்து நின்றிருந்தாள்.
சரியாக தகவலை அறிந்து அங்கு வேகமாக வந்த இந்திரா, நடப்பதைப் பார்த்து பதறி "தந்தையே, என்ன செய்கிறீர்கள், யாழ் மீது எந்த தவறும் இல்லை" என்று தோழிக்காகப் பேச, ஏளனமாக இதழை வளைத்தார் அவர்.
"அவள் மீது தவறில்லை என்று அவளே சொல்லட்டும்" என்று யாழ்மொழியை உறுத்து விழித்தவாறு வேந்தன் சொல்ல, "யாழ்..." என்று இந்திரா அவளுடைய கரத்தில் அழுத்தம் கொடுத்து வேண்டாம் என்பது போல சைகை செய்ய, "என்.. என்னை மன்னித்து விடுங்கள் அரசே" என விம்மி விம்மி அழுதவாறு தன் தவறை ஒப்புக்கொண்டாள் மற்றவள்.
"இதற்குமேல் நிரூபிக்க தேவையில்லை, நீ அந்த சாதாரண வியாபாரியை காதலிப்பதை கூட ஏற்றுக்கொண்ட என் மனம் ஒரு ஆங்கிலேயனை இவள் காதலிப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்திரா. நம்மை அடிமைப்படுத்தி நம் தேசத்தை சூரையாடியை அந்த ஆங்கிலேயனிடம் மனதை பறிகொடுத்த இவளைப் பார்க்க எனக்கே அருவருப்பாக இருக்கிறது.
நாட்டுக்கே துரோகம் செய்தவளுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் நிகராகாது. ஆனால் உன் தந்தை நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர். அவருக்காக உன்னை அரண்மனையை விட்டு ஒதுக்கி வைப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். உயிர் பிச்சை போட்டதாக நினைத்து இங்கேயிருந்து ஓடிவிடு! என் கண் எதிரிலும் வந்துவிடாதே!" என்று அவர் முடிவாக சொல்ல, மொத்தப் பேருமே அதிர்ந்துவிட்டனர்.
இது தான் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும், தன்னை மீறிய அதிர்ச்சியில் "தந்தையே..." என்று இந்திரா கத்திவிட, "காவலர்களே..." என்று கத்தி அழைத்த வேந்தன் யாழ்மொழியைக் காட்டி அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்.
யாழ்மொழியோ ராதாவை விழிகளை மட்டும் உயர்த்தி ஒரு பார்வைப் பார்க்க, யாழ்மொழியின் மீதிருக்கும் கோபத்தில் இதை செய்திருந்தாலும் இப்போது 'அவசரப்பட்டு விட்டோமோ?' என நினைத்து அவளின் பார்வையில் குற்றவுணர்ச்சியில் கூனி குறுகிப்போய் நின்றாள் அவள்.
"வேண்டாம் தந்தையே, இது தவறு. காதலித்ததை குற்றமாக எண்ணி அவளை அரண்மனையை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டாம்" என்று இந்திரா தன் தந்தையின் கரத்தைப் பற்றி கெஞ்சி அழ, அவரோ கொஞ்சமும் மனம் இறங்கவில்லை.
அவளின் கரத்தை உதறிவிட்டவர் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றிருக்க, காவலர்களோ யாழ்மொழியின் இரு கரங்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.
"யாழ்... யாழ்மொழி..." என்று கத்தியவாறு இந்திரா பின்னாலேயே செல்ல, அரண்மனை வாயில் வரை அமைதியாக சென்றவள் சட்டென நின்று இந்திராவை திரும்பிப் பார்த்தாள்.
"அவளை விடுங்கள், ஏதோ கைதி போல அவளை நடத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்று இந்திரா காவலர்களை தள்ளி விட்டு கத்த, விரக்திப் புன்னகையோடு அவளைப் பார்த்த யாழ்மொழி, "நன்றி இளவரசி, அனைத்துக்கும்" என்றாள் தழுதழுத்த குரலில்.
தோழியை தாவி அணைத்துக்கொண்டவள், "என்னை மன்னித்துவிடு யாழ், என்னால் தந்தையை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால்.. ஆனால் நீ உன் காதலனோடு சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்று அழுதுக்கொண்டே சொன்னவள், உடனே தன் மோதிரமொன்றை அவளிடம் நீட்டினாள்.
"வேண்டாம் இளவரசி" என்று அவள் மறுக்க, வற்புறுத்தி அவளுடைய கரத்தில் திணித்தவள், "எதையும் மறுக்காதே! மீண்டும் உன்னை எப்போது சந்திப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் உனக்காக எப்போதும் காத்திருப்பேன் யாழ், சந்தோஷமாக இரு" என்று சொல்ல, வெடித்து அழுதுவிட்டாள் யாழ்மொழி.
இந்திராவை இறுக அணைத்துக்கொண்டவள், "நான் தங்களுக்கு எப்போதும் கடைமைப்பட்டிருக்கிறேன் இளவரசி" என்று அழுதுக்கொண்டே சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து வெளியேற, போகும் அவளை வேதனையோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் இந்திரா.
பல முறை அரண்மனையிலிருந்து வெளியில் சென்றிருக்கிறாள். ஆனால் இப்போது...
இந்த நடு ராத்திரியில் கண்ணைக் கட்ட காட்டில் விட்டது போல இருந்தது. இத்தனை வருடங்கள் தாய் தந்தை இல்லாமல் வளர்ந்தும் உணராத தனிமையை இப்போது யாழ் உணர, அவளுடைய கால்கள் தானாக நகர்ந்து தன்னவனைத் தேடி ஆங்கிலேய அரண்மனையை நோக்கி நகர்ந்தன.
இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் அவளவன்தான்.
தளர்ந்த நடையாக அந்த இருளில் அவள் நடந்துச் செல்ல, இங்கு தன் திட்டத்தை நிறைவேற்ற எண்ணி தயாராகிக்கொண்டிருந்த வில்லியம் உள்ளுக்குள் அவளை நினைத்து பல கனவுகளோடு அரண்மனையிலிருந்து வெளியேறப் போக, சரியாக அவன் முன் வந்து நின்றான் ஜேம்ஸ்.
"சார், ஒரு முக்கியமான விஷயம். இப்போவே என் கூட ஆஃபீஸ்க்கு வாங்க" என்று அவசரமாக அவன் சொல்ல, "இப்.. இப்போவேவா? அது... அது வந்து ஜேம்ஸ் நான் ரொனேல்ட் சாரோட பேளஸ்க்கு போகணும். நாம அப்பறமா பேசலாமே" என்று ஏதேதோ சமாளிக்கப் பார்த்தான் மற்றவன்.
"நோ சார், இட்ஸ் அர்ஜென்ட். கொஞ்ச நேரம்தான். நம்மளோட வெபன்ஸ்ஸோட க்வாலிட்டிய கொஞ்சம் செக் பண்ணிட்டு நீங்க போங்க. அதுக்கப்பறம் ஐ வில் நொட் டிஸ்டர்ப் யூ" என்று சொல்லி ஜேம்ஸ் கையோடு இழுத்துக்கொண்டே போக, வேறு வழியில்லாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்ற வில்லியமுக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது.
'எப்படியும் அவ நான் சொன்ன இடத்துல வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா, சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு போயிரணும்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் ஜேம்ஸ்ஸோடு வேகமாக செல்ல, இங்கு ஆங்கிலேய அரண்மனைக்கு பக்கத்தில் மறைவாக நின்றிருந்த யாழ்மொழி உள்ளே செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என சுற்றி முற்றி தேட ஆரம்பித்தாள்.
அப்போது அவளிருந்த மனநிலைக்கு வில்லியம் காத்திருக்க சொன்னதெல்லாம் நினைவிலேயே இல்லை அவளுக்கு. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வந்துவிட்டாள், அவளுக்கு எப்படியாவது தன்னவனை சந்தித்து அவனிடம் தஞ்சம் புகுந்தாள் போதும்.
பயத்தில் கைக்கால்கள் நடுங்கினாலும் அந்த பெரிய மரத்திற்கு பின்னே இருந்து மறைந்து பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் அங்கு பெரிய வாசற்கதவுகளுக்கு பக்கத்திலிருந்த சிறிய கதவு தென்பட, உடனே காவலர்களை கவனிக்க ஆரம்பித்தாள் அவள்.
அங்கு வாசலில் காவலுக்கு நின்றிருந்த ஒருவன் தன்னை மீறி அமர்ந்த நிலையிலேயே உறக்கத்திலிருக்க, மற்ற இருவரோ மதுவை வாயில் சரித்து முழு போதையில் நின்றிருந்தனர்.
'பாதுகாப்புக்கு இப்படி ஒருசிலர் இருந்தாலே போதும், திருடன் கூட முன் வாசல் வழியாக தைரியமாக நுழையலாம்' என்று தனக்குள்ளேயே சலிப்பாக நினைத்துக்கொண்ட யாழ்மொழி மரத்திற்கு கீழே இருந்த விறகுக் கட்டையை எடுத்து எதிர்திசைக்கு எறிந்து திசைதிருப்ப, உடனே போதையிலிருந்த காவலர்களின் கவனமும் அந்த திசைக்கு சென்றது.
"வூ இஸ் தட்.. ஒருவேள ப்ரொடெஸ்ட் பண்றவங்களா இருக்கும். இன்னைக்கு ஒருத்தரையும் விடாம கொல்லணும்" என்று அவர்கள் புலம்பிக்கொண்டே அந்த திசைக்கு ஓட, உடனே பதுங்கிச் சென்று அந்த சிறிய கதவு வழியே அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்துக்கொண்டாள் அவள்.
************
மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க..
மையவிழிப் பார்வையிலே Is now available in kindle store >>>
அரண்மனை வளாகத்துக்குள் மறைந்திருந்தவள் அங்கிருந்த நீண்ட ஜன்னலின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து வேகமாக அதை நோக்கி ஓட, அங்கு சுற்றியிருந்த காவலர்களின் விழிகளுக்கு சிக்கிக்கொண்டாள் அவள்.
"ஹேய்.. வூ ஆர் யூ? ஸ்டாப்! கார்ட்ஸ்... கார்ட்ஸ்..." என்று அவன் எல்லோருக்கும் குரல் எழுப்பி கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடி வர, அதிர்ந்து விழித்தவள் உடனே சுதாகரித்து ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து ஜன்னல் கதவை வேகமாக மூடிக்கொண்டாள்.
சுற்றி பரபரப்பு நிலவ, ஜன்னல் கதவை அவர்கள் வேகமாக தட்ட ஆரம்பிக்கவும் இவளுக்கு ஏன்தான் இங்கு வந்தோம் என்று அந்த நொடி தோன்றியது.
வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவளுக்கு பயத்தில் உடலெல்லாம் நடுங்க, எதுவும் யோசிக்கக் கூட தோன்றவில்லை.
உடல் முழுவதும் பதற்றத்தில் வியர்க்க ஆரம்பிக்க, உடனே அந்த அறைக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தவள் எந்த பக்கம் செல்வதென்று கூட தெரியாமல் கால் போன திசைக்கு அந்த வராண்டாவில் ஓட ஆரம்பித்தவள்.
திடீரென சில அதிகாரிகளின் காலடி சத்தம் கேட்க, பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துக்கொண்டாள் யாழ்மொழி.
'அய்யோ கடவுளே! இப்படி அநியாயமாக வந்து சிக்கி விட்டோமே, இது தேவைதானா யாழ் உனக்கு? இத்தனை பெரிய அரண்மனையில் என்னவரை நான் எங்கு சென்று தேடுவது?'
என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு வேக மூச்சுக்களை விட்டவாறு அவள் கதவில் சாய்ந்திருக்க, அப்போதுதான் அவளுடைய விழிகள் அந்த அறையை சுற்றி ஆராய்ந்தன.
சுற்றி ஏகப்பட்ட புத்தகங்களும் கோப்புகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, மெல்ல நடந்துச் சென்றவள் அனைத்தையும் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.
'என்ன அறை இது, இவ்வளவு நிறைய புத்தகங்களா?' என்று ஆச்சரியத்தோடு ஒவ்வொன்றையும் தடவிப் பார்த்தவள், மேசை மீதிருந்த தாள்களை கையிலெடுத்து அதை புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, திடீரென கதவு வேகமாக திறக்கப்பட்டது.
கையில் துப்பாக்கியோடு வேகமாக உள்ளே வந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவளுடைய கையிலிருந்த தாள்களைப் பறித்து அவளை கோபமாக நோக்க, இதை எதிர்பார்க்காதவளாய் திகைத்துப் போய்விட்டாள் யாழ்மொழி.
"இவ அரசரோட ஸ்பைன்னு நினைக்கிறேன், நம்மளோட ரகசிய அறைக்குள்ள இருக்கா. அதுவும் இதை திருடியிருக்கா" என்று அந்த அதிகாரி ஏதேதோ பேச, அவர்களின் ஆங்கில மொழி இவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
"என.. எனக்கு அதிகாரியை பார்க்க வேண்டும், அவர் எங்கு இருக்கிறார்?" என்று யாழ் பதற்றமாக சொல்லிக்கொண்டு சுற்றி முற்றி தேட, "வாட் த ஹெல் ஆர் யூ டோக்கிங், யூ ****..." என்று கத்திக்கொண்டு அந்த காவலாளியோ அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
சரியாக ஜேம்ஸ்ஸோடு ஆஃபீஸ் அறையிலிருந்த வில்லியமிற்கு தகவல் கொடுக்கப்பட, "ஜெம்ஸ், யூ கேர்ரி ஆன். நான் என்னன்னு பார்க்குறேன்" என்றுவிட்டு வேகமாக சென்றான்.
தலையசைப்போடு ஜன்னல் வழியே எதேர்ச்சையாக பார்த்த ஜேம்ஸின் விழிகளுக்கு சிறு வெளிச்சம் தெரிய, அவனுடைய புருவங்களோ புரியாமல் முடிச்சிட்டன.
வில்லியயோ அந்த அறைக்கு வேகமாக வந்தவன், அங்கு யாழ்மொழியைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றாலும் இன்னொரு புறம் வன்மமாகப் புன்னகைத்துக்கொண்டான்.
அதே விஷம புன்னகையோடு அவன் அவளை நோக்கி நடந்து வர, அவனைப் பார்த்ததும்தான் பெண்ணவளுக்கு நிம்மதி பெருமூச்சே வெளியானது.
கண்ணீரைத் துடைத்தவள் வேகமாக வில்லியமை நோக்கிச் சென்று, "தங்களுக்கு என்னை தெரியும் அல்லவா! அதிகாரி தேசத்துக்கு வந்துவிட்டாரா, அவர் என்னை சந்திக்க காத்திருப்பதாக தாங்கள்தானே கூறினீர்கள், அவர் எங்கே? தயவு செய்து கூறுங்கள்" என அழுகையை அடக்கிய குரலில் கேள்விகளைத் தொடுக்க, அவனோ அவளை அந்நியப் பார்வைப் பார்த்து வைத்தான்.
"வூ இஸ் ஷீ? ஏதேதோ என்கிட்ட உளறிக்கிட்டு இருக்கா, சரியான பைத்தியமா இருப்பா போல ஹாஹாஹா..." என்று ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தவன், "அதிகாரியா! எந்த அதிகாரி? ஒருவேள ஆஃபீசர் லியோவ சொல்றியா? அவர்தான் இன்னும் இங்க வரவே இல்லையே... அப்பறம் எதுக்கு நீ இங்க வந்திருக்க? அதுவும் இந்த அறையில இருக்கன்னா எங்க ரகசியங்கள திருடுறதுக்காக வந்திருக்கியா?"
"என்ன?" என்றவளின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "தெரியாத மாதிரி நல்லாவே நடிக்குற உன்ன..." என்று துப்பாக்கியால் அவளை அடிக்க கையை ஓங்கிய வில்லியமின் கரம் திடீரென பின்னாலிருந்து கேட்ட குரலில் அந்தரத்தில் நின்றது.
அங்கிருந்த மொத்த அதிகாரிகளும் திரும்பிப் பார்க்க, பயத்தில் விழிகளை மூடியிருந்தவளுக்கும் அந்த பழக்கப்பட்ட குரலில் பேரதிர்ச்சியாக இருந்தது.
மொத்தப் பேரின் பார்வையும் வாசல் புறம் திரும்ப, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நெற்றி நரம்புகள் புடைக்க நின்றிருந்தான் லியோ ஜார்ஜ்.
அவனைப் பார்த்ததுமே யாழ்மொழியின் இதழ்கள் புன்னகைக்க, இதை எதிர்பார்க்காத வில்லியமிற்கு அவனின் வருகை பேரிடியாக இருந்தது.
அவனின் கோபத்தைப் பற்றி தான் இவன் அறிவானே!
உடனே வில்லத்தனமாக யோசித்தவன், "சார், வந்துட்டீங்களா! இதோ இவ நம்ம ரகசியங்களயே திருட பார்த்திருக்கா. இது கண்டிப்பா அரசரோட வேலையாதான் இருக்கணும். வீ ஹேவ் டூ டேக் ஆக்ஷன்" என்று கதையை திசைத்திருப்ப, விழிகளை சுருக்கியவாறு தன்னவளைப் பார்த்தான் அவன்.
ஆனால், யாழ்மொழிக்கு தான் மொத்த உலகத்தையும் அடைந்த உணர்வு.
வில்லியமின் கரத்தை உதறிவிட்டு லியோவை நோக்கி ஓடியவள் கோழிக் குஞ்சு தன் அம்மாவிடத்தில் தஞ்சம் புகுவது போல் அவனுடைய பரந்த மார்பில் முகத்தை புதைத்து அழ ஆரம்பிக்க, சிலையாகி நின்றுவிட்டான் ஆடவன்.
"இப்போதுதான் தங்களுக்கு என்னை நியாபகமே வந்ததா அதிகாரி? உங்களை காணாமல் நான் தவித்து போய்விட்டேன், இது ஒன்றும் கனவில்லையே, தாங்கள் சொன்னது போல நானே தங்களை காண வந்துவிட்டேன்" என்று சந்தோஷத்தில் ஏதேதோ பிதற்றிக்கொண்டு அவனுக்குள் மூழ்குவது போல் அவனை மேலும் மேலும் தன்னோடு நெருக்கிக்கொள்ள, லியோவோ ஒருகணம் திக்குமுக்காடி விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்த அதிகாரிகளும் நடப்பதை அதிர்ச்சியாகப் பார்க்க, வில்லியமிற்கு இதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
"ஓஹோ... அப்போ இவ பண்ண காரியத்துக்கு உங்களுக்கும் சம்பந்தம் இருக்கா. சரியா நீங்க இங்க வரும் போது இவ வந்திருக்கான்னா அப்போ கண்டிப்பா இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. நீங்க நம்ம அரசாங்கத்துக்கு துரோகம் பண்றீங்க" என்று வில்லியம் இப்போது மொத்த பழியையும் லியோவை நோக்கித் திருப்ப, அவனோ விழிகள் சிவக்க வில்லியமைப் பார்த்தான்.
அங்கிருந்த அதிகாரிகளும் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பிக்க, யாழ்மொழிக்கு அவர்கள் பேசிக்கொள்வது சுத்தமாகப் புரியவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் அவளால் நன்கு உணர முடிந்தது, வில்லியம் அவளுக்கெதிராக ஏதொ சதி செய்கிறான் என்று.
லியோவோ தீவிரமாக யோசித்தவன் விழிகளை அழுந்த மூடித் திறந்து தன்னை அணைத்திருந்த பெண்ணவளின் கரங்களை உதறிவிட, சற்று தள்ளி நின்றவள் தன்னவனின் செய்கையை புரியாமல் பார்த்தாள்.
"என்.. என்ன நடந்தது, ஏன் என்னை விலக்குகிறீர்கள்?" என்று பதறியபடி யாழ்மொழி கேட்டுக்கொண்டே மீண்டும் அவனை நோக்கிச் செல்ல, பின்னால் நகர்ந்தவன், "பக்கத்துல வராத, மொதல்ல யார் நீ?" என்று இறுகிய குரலில் ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.
சில கணங்கள் அவனின் வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் சிலையாகி நின்றவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிக்க, "என்ன? நான் யாரா?" என்று கேட்டாள் வேதனை நிரம்பிய குரலில்.
வில்லியமோ இப்போது நடப்பதை புரியாமல் பார்க்க, "யார் வந்து என்ன சொன்னாலும் நம்பிடுறதா? இந்த சின்ன பொண்ண போய் அரசர் உழவாளியா வச்சிருப்பாருங்குறத என்னாலயே நம்ப முடியல. அப்படியே இவ உழவாளியா இருந்தாலும் இவகிட்ட நம்ம வீரத்தையும் கோபத்தையும் காமிச்சு என்ன ஆக போகுது. நாம அரசர் வேந்தன் கூட தான் நம்ம பேச்சு வார்த்தைய நடத்தணும். சோ... ஒரு ஹையர் ஆஃபீசரா சொல்றேன், இவள விட்டுருங்க. இதை பத்தி நான் நாளைக்கு பார்த்துக்குறேன்" என்று அழுத்தமாக சொன்னான் லியோ.
அதிகாரிகளோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு மறுபேச்சு பேச முடியாமல் சம்மதமாக தலையசைக்க, இரு அதிகாரிகளோ வேகமாக வந்து யாழ்மொழியை இருபுறமும் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.
முழு பலத்தையும் பயன்படுத்தி அவர்களை தள்ளிவிட்டு மீண்டும் லியோவிடமே ஓடி வந்தவள், அவனின் கன்னத்தை இரு கரங்களால் தாங்கி அவன் விழிகளை ஏக்கத்தோடு பார்த்தாள்.
"அதிகாரி.. நான் யாரென்றா கேட்கிறீர்கள்? அவ்வளவு இலகுவாக என்னை மறந்துவிட்டீர்களா என்ன? தங்களுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்த என்னை இப்படி நிர்க்கதியாக்கி விட்டீர்களே! நிஜமாகவே தங்களுக்கு என் மேல் துளியும் காதல் இல்லையா" என்று கண்ணீரோடு யாழ் பேச, தன்னவளின் விழிகளைப் பார்த்தவனுக்கு இதயத்தை கசக்கிப் பிழியும் வலி.
ஆனால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவன், அவளின் தோள்களைப் பற்றி தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தி "இவள இங்கயிருந்து வெளியில துரத்தி விடுங்க" என உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் சொல்ல, ஸ்தம்பித்துப் போய் அவனைப் பார்த்தாள் அவள்.
லியோவோ அவளின் விழிகளைக் காண தயக்கப்பட்டு எங்கோ பார்வையைப் பதித்தபடி நின்றுக்கொண்டிருக்க, அதிகாரிகளோ மீண்டும் வந்து அவளை இழுத்துக்கொண்டே சென்றனர்.
பெண்ணவளின் பார்வை கொஞ்சமும் நகரவில்லை. கண்ணிலிருந்து மறையும் வரை அவனையே திரும்பி பார்த்தபடி அவள் செல்ல, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன் வேகமாக தனதறைக்குச் சென்றான்.
வில்லியமோ அந்த நொடி தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டிக்கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறியிருக்க, கதவைக் கூட மூடாது இருந்த கோபத்தில் அறையிலிருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்தான் லியோ.
"ஏன்... ஏன் நான் இப்படி பண்ணேன், இப்போ கூட பதவி போயிருமேங்குற பயத்துல அவள விட்டுட்டியே! யூ ப்ளடி ****... அவளோட பார்வை.. என்னை அக்யூஸ்ட் பண்ற மாதிரி பார்க்குற அந்த கண்கள நேருக்கு நேரா பார்க்க முடியல. ச்சே! இப்படி பண்ணியிருக்க கூடாது, அவள இப்படி விட்டிருக்க கூடாது"
என்று தன்னை மீறிய ஆதங்கத்தில் ஏதேதோ புலம்பியவாறு பைத்தியம் பிடித்தவன் போல் அவன் நடந்துக்கொள்ள, "சார்..." என்ற ஜேம்ஸின் குரல் வாசலிலிருந்து கேட்டது.
மூச்சு வாங்கியவாறு லியோ திரும்பிப் பார்க்க, "யூ லவ் ஹெர் ரைட்?" என்று சட்டெனக் கேட்டான் மற்றவன்.
அவனோ பதிலெதுவும் சொல்லாமல் ஜேம்ஸ்ஸை சில கணங்கள் வெறித்துப் பார்த்தவன், விரல்களை அசைத்து அவனை உள்ளே வரும்படி சொன்னான்.
மற்றவனும் எச்சிலை விழுங்கியவாறு அவன் பக்கத்தில் வர, "யூ நோ வாட் ஜேம்ஸ், இப்போன்னு இல்ல. மார்கெட்ல நான் அவள துரத்திட்டு போனப்போ இல்லன்னா அவளோட முகத்த ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ.. அதுவும் இல்லன்னா மே பீ பேளஸ்ல நடந்த டான்ஸ் அப்போ கூட இருக்கலாம். சரியா தெரியல. சின்ஸ் தட் டைம், ஐ லவ் ஹெர். அவள காதலிச்சிருவேனோன்னு பயத்துலதான் இங்கயிருந்து போனேன். இப்போ கூட நான் அவளுக்காக தான் இங்க திரும்ப வந்தேன். அவளுக்காக மட்டும்தான் எல்லாமே... ஆனா நான்.. ஐ டோன்ட் டிசெர்வ் ஹெர் லவ்" என்றவனின் விழிகள் கலங்க குரல் அழுகையை அடக்கியிருந்தது.
முதல் முறை லியோவிடத்தில் இத்தகைய மாற்றத்தை காண்கிறான் ஜேம்ஸ்.
அவன் பேசுவதில் திகைத்துப்போய் அவன் சிலையாக நிற்க, லியோவோ அப்படியே முட்டி போட்டு தரையில் அமர்ந்தவன், "ஐ டோன்ட் டிசெர்வ், மத்த ஆஃபீசார்ஸ் முன்னாடி எனக்கு அவமானமாகிரும், என்னோட பதவி போயிருமேங்குற ஒரு பயத்துல அவ யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன். ச்சீ... எனக்கே என்னை நினைச்சா அருவருப்பா இருக்கு.
எதுவானாலும் ஃபேஸ் பண்ணலாம்னு ஒரு தைரியத்துல வந்தேன். பட் ஐ அம் நொட், நான் ஒரு கோழை ஜேம்ஸ். எனக்காக வந்தவள நான் விட்டுட்டேன். ஐ டிட் இட் அகைன். என்ன பண்றதுன்னு தெரியல" என்று விழிகளில் வலியோடு ஒரு பார்வைப் பார்த்தான்.
ஜேம்ஸிற்கு அவனின் நிலை நன்றாகவே புரிந்தது.
பதற்றமாக அவரை பார்த்துக்கொண்டு நின்றவன், தன்னைத்தானே நிதானப்படுத்தி மெல்ல லியோவின் அருகே அமர்ந்தான்.
அவனோ தலையைத் தாங்கிக்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாமல் குழம்பிப் போய் அமர்ந்திருக்க, "சார், நான் ஒன்னு சொல்லட்டுமா?" என்று ஜேம்ஸ் சிறு தயக்கத்தோடு கேட்க, அவனை கேள்வியாகப் பார்த்தான் மற்றவன்.
"நம்ம அரசாங்கத்த பொருத்த வரைக்கும் இவங்க நம்மளோட அடிமைங்க, யூஸ் என்ட் த்ரோவா தான் நாம இவங்கள நினைக்கணும். ஒருவேள அது காதல் கல்யாணம்னு போனா நம்ம அரசாங்கத்துல நடக்குற அவமானங்கள் உங்களுக்கு தெரியாம இருக்காது. நீங்க அந்த பொண்ண கல்யாணம் பண்ணீங்கன்னா மே பீ உங்க பதவிய விட்டு விலக வேண்டியிருக்கும். இல்லன்னா பதவிக்காக அவள விடணும்.
இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னதான் உங்களால தேர்ந்தெடுக்க முடியும். அது என்னதா இருக்கணும்னு நீங்கதான் முடிவு பண்ணணும். ஒருவேள என்னை கேட்டீங்கன்னா நான் உங்க லவ்வ தான் சொல்லுவேன், பிகாஸ் ஷீ இஸ் யூவர் ஹேப்பினஸ், ஷீ இஸ் யூவர் ஸ்மைல். ஷீ இஸ் எவ்ரிதிங்"
என்று ஜேம்ஸ் அவனின் மொத்த குழப்பத்திற்கும் பதிலளிக்க, விழிகளில் கண்ணீரோடு சில கணங்கள் அவனை வெறித்துப் பார்த்தான் மற்றவன்.
அவளுடனான முதல் சந்திப்பிலிருந்து அவனுடனான முத்தம் வரை அவனுக்கு நினைவு வர, இதழில் புன்னகையோடு ஜேம்ஸை உடனே அணைத்துக்கொண்டான் லியோ.
"ஆமா.. ஆமா ஜேம்ஸ் என்ன வேணா நடக்கட்டும், ஐ லவ் ஹெர் தட்ஸ் இட். என.. எனக்கு இப்போவே அவள பார்க்கணும்" என்று சொன்னவனுக்கு அப்போதுதான் யாழ்மொழி சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன.
'தங்களுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்த என்னை இப்படி நிர்க்கதியாக்கி விட்டீர்களே!'
அவளின் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தமும் புரிய, அதிர்ந்துப் போய் விழி விரித்தவன் புயல் போல் தன்னவளை தேடி ஓட ஆரம்பித்தான்.
'என் மீது அவருக்கு காதலே இல்லையா, என்னை யாரென்றே தெரியாதா அவருக்கு? ஏன்.. ஏன் கடவுளே எனக்கு இத்தனை சோதனை? நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்? பிறக்கும் போதே அம்மாவை இழந்தேன், அதன் பின் தந்தையை இழந்தேன். என் வாழ்க்கையில் முதல் முறை என் மனதை கவர்ந்த ஆண்மகன் இவர். இப்போது இவருக்கும் நான் வேண்டாவதளாகி போய்விட்டேன். காதலுக்காக அரண்மனையை விட்டே வெளியேறிவிட்டேன். இப்போது எனக்காக ஒரு நாதியுமில்லை. இருக்க இடமுமில்லை. இதற்குமேல் நான் உயிரோடு இருந்து என்ன பயன்?'
என்று விம்மி விம்மி அழுதவாறு கால் போன போக்கிற்கு யாழ்மொழி நடந்துச் செல்ல, சட்டென மழையும் அடித்துப் பேய்தது.
நிமிர்ந்துப் பார்த்தவள், "என்னை தேற்றுவதற்காக இந்த மழையா?" என்று கடவுளிடம் கேட்டுவிட்டு விரக்திப் புன்னகைப் புரிய, சரியாக அவள் முன்னே வந்து நின்றது வில்லியமின் கார்.
இரண்டடி பின்னே நகர்ந்து அவள் பயந்தபடி பார்க்க, காரிலிருந்து இறங்கிய வில்லியமோ, "ஓ காட்! உன்ன சார் இப்படி பேசிட்டாரே, என்னாலயே தாங்கிக்க முடியல. நீ அதை பத்தி கவலைப்படாத நான் உனக்காக இருக்கேன். சீக்கிரம் கார்ல ஏறு" என்று நல்லவன் போல் பேச, அவனை முறைத்துப் பார்த்தாள் யாழ்மொழி.
"நடிக்காதே! உன்னை பற்றி நன்றாகத் தெரியும். இதன் பிறகு நான் உன்னிடம் ஏமாற போவதில்லை. புரிகிறதா? என் வழியை விட்டு நகரு" என்று அவள் கோபமாகக் கத்த, "என்னை தப்பா நினைக்காத! நான் அப்படி நடந்துக்கலன்னா என் மேல மத்த அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கும். அதான், நீ மொதல்ல கார்ல ஏறு" என்று அவசரப்படுத்தியவாறு உடனே அவள் கரத்தைப் பற்றியிழுத்தான்.
அதில் அதிர்ந்தவள் அவனின் பிடியிலிருந்து கரத்தை உறுவ முயற்சித்தவாறு, "என்னை விடு, நான் உன்னுடன் எங்கும் வரப் போவதில்லை. என்னை விடு!" என்று கத்த, மற்ற கரத்தால் அவளின் தாடையைப் பற்றி தன்னை நோக்கி முகத்தை நிமிர்த்திய வில்லியமின் விழிகள் சிவந்திருந்தன.
யாழ்மொழியோ பயத்தில் உறைந்துப் போய் நிற்க, "யூ ப்ளடி ****... உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுருவேன்னு நினைச்சியா!" என்று அவன் பேய் போல் சிரித்துக்கொண்டே அவளை தரதரவென இழுத்து காருக்குள் தள்ளி வண்டியை பறக்க விட, "யாழ்..." என்று கத்திக்கொண்டு காருக்கு பின்னே ஓடினான் வீரா.
சற்று நேரத்திற்கு முன்னேதான் அரண்மனையில் வேலைப் பார்க்கும் வேலையாள் ஒருவனிடம் நடந்ததைப் பற்றி தகவல் சொல்லி வீராவை சந்திக்க அனுப்பி வைத்திருந்தாள் இந்திரா.
விடயம் கேள்விப்பட்டதுமே ஆங்கிலேய அரண்மனையை நோக்கி காட்டு வழியே வரவும் வில்லியம் யாழ்மொழியின் கரத்தைப் பற்றி கோபமாக பேசவும் நேரம் சரியாக இருந்தது.
அதைப் பார்த்ததுமே திகைத்துப் போய் அவர்களை நோக்கி இவன் வருவதற்குள் வில்லியம் சென்றிருக்க, குறிப்பிட்ட தூரம் வரை பின்னாலேயே அந்த மழையில் துரத்திச் சென்றவனுக்கு ஒருகட்டத்தில் அவர்களை பிடிக்க முடியவில்லை.
முட்டியில் கையை ஊன்றி மூச்சு வாங்கியவாறு நின்றிருந்த வீராவுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.
"அய்யோ யாழ்மொழிய அவன் கடத்திட்டு போறானே, இப்போ என்ன பண்றது? எங்க போயிருப்பான்னு கூட தெரியலயே ச்சே!" என்று வாய்விட்டே சொல்லி கோபத்தில் காலை தரையில் உதைத்துக்கொண்டு தீவிரமாக யோசித்தவனுக்கு அப்போதுதான் லியோவின் முகம் மனக்கண் முன் வந்தது.
உடனே அந்த மழையில் ஆங்கிலேயை அரண்மனையை நோக்கி ஓடியவன் உள்ளே செல்லப் போக, அங்கிருந்த அதிகாரிகளோ அவனை உள்ளே விடாமல் தடுத்துப் பிடித்தனர்.
"வூ த ஹெல் ஆர் யூ!" என்று அவர்கள் அவனைப் பிடித்து துப்பாக்கியை அவனை நோக்கி குறி வைக்க, "நான் உயரதிகாரிய சந்திக்கணும், அவர்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். என்னை விடுங்க! சொல்றேன்ல.. என்னை விடுங்க" என்று கத்திக்கொண்டு திமிற ஆரம்பித்தான் வீரா.
அந்த அதிகாரிகளோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு அவனை கோபமாகப் பார்த்தபடி தாக்கப் போக, "ஸ்டாப்!" என்ற லியோவின் குரல் பின்னாலிருந்து கேட்டது.
அரண்மனையிலிருந்து யாழ்மொழியை தேடி வேகமாக வெளியில் வந்தவனுக்கு சரியாக இந்தக் காட்சி தென்பட, புருவ முடிச்சுகளோடு உடனே வீராவின் அருகே வந்திருந்தான்.
லியோவைப் பார்த்ததும் வீரா நிம்மதி பெருமூச்சு விட்டவாறு தன்னை பிடித்திருந்த அதிகாரிகளின் கரத்தை உதறிவிட, "என்கிட்ட என்ன சொல்லணும்?" என்று இறுகிய குரலில் கேட்டான் லியோ.
"யாழ்.. யாழ்மொழிய அவன் கடத்தி கூட்டிட்டு போறான்" என்று மூச்சு வாங்கியவாறு அவன் வார்த்தைகளைக் கோர்த்து சொல்லி முடிக்க, மற்றவனின் அதிர்ச்சி எல்லாம் ஒரு சில கணங்கள்தான்.
உடனே முகபாவனையை மாற்றியவனின் கை முஷ்டி இறுக, நெற்றி நரம்புகள் புடைத்தெழுந்தன. அவன் பற்களைக் கடிக்கும் சத்தம் சுற்றியிருந்தவர்களுக்கே கேட்க, அங்கிருந்த அதிகாரிகளே பயத்தில் ஒரு அடி பின்னே நகர்ந்தனர்.
"இப்போ எப்படி யாழ்மொழிய கண்டுபிடிக்குறது?" என்று அவன் பதற்றமாகக் கேட்க, "அவ எங்க இருப்பான்னு எனக்கு தெரியும்" என்று அழுத்தமாக சொன்னவன் தன் காரை உயிர்ப்பித்து வீராவின் அருகே வந்து நிறுத்த, அவனும் காரில் ஏறிக்கொண்டான்.
இதற்கிடையில், தன் முன்னே கால்களைக் கட்டிக்கொண்டு அழுது கரைபவளை விழிகளில் காமத்தோடு ரொனேல்ட் பார்த்திருக்க, வெற்றிப் புன்னகையோடு நின்றிருந்தான் வில்லியம்.
"வாவ்! க்ரேட் வில்லியம். நான் இதை எதிர்பார்க்கவே இல்ல. எங்க இவள டேஸ்ட் பண்ணவே முடியாம என் வாழ்க்கை முடிஞ்சிருமோன்னு ரொம்ப பயந்துட்டேன். பட் ஃபைனல்லி ஷீ இஸ் ஹியர்" என்று சொல்லிக்கொண்டே அவளின் அருகே சென்றவர் அவள் தலை முடியைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்த, "ஆஆ..." என்று வலியில் கத்த ஆரம்பித்தாள் யாழ்மொழி.
"பொண்ணுங்கள கவர் பண்ணா எனக்கு பிடிக்காது, திறந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும். நான் வேணா உனக்கு ஹெல்ப் பண்றேன், எனக்கு கோப்பரேட் மட்டும் பண்ணு" என்று அவர் அவளின் ஆடையை கழற்றப் போக, "வேண்டாம், என்னை விட்டு விடுங்கள். தங்களின் கால்களில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன். என்னை விடுங்கள்" என்று கையெடுத்துக் கும்பிட்டு கதறியழுதாள் யாழ்.
ஆனால் அந்த காமுகன்களுக்கு அவளின் அழுகை மனதை கொஞ்சமும் கரைக்கவில்லை.
"ஓ காட்! அதை எப்படி எங்களால விட முடியும். வன் நைட்.. ஐ மீன் ஒரே ராத்திரிதான் அதுக்கப்பறம் யூ ஃப்ரீ பர்ட்" என்று ரொனேல்ட் சொல்ல, "எதுக்கு சார் பேசிக்கிட்டு... இவள மாதிரி பொண்ணுங்க இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. நாமளாவே எடுத்துக்கிட்டா தான் உண்டு" என்று கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் பேசிய வில்லியம் உடனே அவளின் ஆடையை இழுத்து தன் கத்தியால் கிழித்து விட்டான்.
"கடவுளே..." என்று அலறிக்கொண்டு யாழ்மொழி தன் மார்பை இரு கரங்களால் மறைத்த வண்ணம் சுருண்டு படுத்துக்கொள்ள, இந்த நொடி இறந்தால் என்ன என்று கூட அவளுக்குத் தோன்றியது.
"ஹாஹாஹா... இந்த தேசத்து பொண்ணுங்களுக்கே இருக்குற வெக்கம். ஐ லைக் இட்" என்ற ரொனேல்ட் தன் ஆடையை கழற்றி எறிந்து விழிகளுக்கு விருந்தாகும் அவளின் இடையை தொடப் போக, அப்படியே தரையில் மயங்கி சரிந்தாள் அவள்.
சரியாக, "சார்..." என்ற வில்லியமின் அலறல் பெரிதாக ஒலித்தது.
ரொனேல்ட் வேகமாகத் திரும்பிப் பார்க்க, அந்த அறை வாசலை முழுதாக அடைத்துக்கொண்டு தன் ஆஜானுபாகுவான உயரத்தில் நெற்றி நரம்புகள் புடைக்க லியோ நின்றுக்கொண்டிருக்க, அவனுக்கு பின்னால் நின்றிருந்தான் வீரா.
"ஹேய் மை பாய், இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற? ஓஹோ... ஒருவேள இன்னைக்கும் இவள காப்பாத்த வந்தியா? பட் நோ நீட் டூ வொர்ரி, பேளஸ்க்கும் இவளுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல. சோ..." என்று ரொனேல்ட் சொல்லிக்கொண்டு மீண்டும் யாழ்மொழியை நோக்கித் திரும்ப, அப்போதுதான் தன்னவளின் நிலையை பார்த்தான் அவன்.
ஆடை கிழிக்கப்பட்டு சுயநினைவின்றி அவள் தரையில் கிடப்பதைப் பார்த்தவனுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருக்க, அந்த மொத்த கோபமும் அந்த இருவரின் மீது திரும்பியது.
சிங்கத்தின் உறுமலோடு அவர்களை நோக்கி அவன் செல்ல, வீராவுக்கு இவர்கள் எல்லாம் மனித ஜென்மங்கள் தானா என்றுதான் நினைக்கத் தோன்றியது.
தான் எப்போதும் கூடவே வைத்திருக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு வீரா நிற்க, வில்லியமோ கோபம் கொப்பளிக்க லியோவை பார்த்தவன், "இங்கயிருந்து போயிரு, போயும் போயும் இவளுக்காக எங்கள எதிர்த்து நிக்குற" என்று முகத்தை அருவருப்பாக வைத்துக்கொண்டு சொன்னான்.
"ஆமா லியோ, சேம் தோட் ஹியர். இவ எல்லாம் நம்ம தகுதிக்கு பொருத்தமே இல்லாதவ. படுக்கையில யூஸ் பண்ணோமா த்ரோ பண்ணோமான்னு இருக்கணும். லவ் மேரேஜ்னு இதுங்கள கூடவே வச்சுக்க நினைக்க கூடாது. புரியுதா? என்ட் நான் உன்னோட ஹையர் ஆஃபீசர். டூ யூ ரிமெம்பர் தட், எங்க கூட என்ஜாய் பண்றேன்னா ஐ டோன்ட் ஹேவ் எனி ஆப்ஜக்ஷன் இல்லன்னா கெட் அவுட் ஃப்ரொம் ஹியர்" என்று முடிவாக சொல்லி அழுத்தமாக அவர் பார்க்க, லியோவோ கேலியாக இதழை வளைத்தான்.
"நீங்க எனக்கு ஆஃபர் பண்றீங்களா, இனி நோ ஆப்ஷன்ஸ். என் வழிய விட்டு நகருங்க" என்று லியோ பதிலுக்கு கத்த, தன் வாளை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி அடிக்கப் பாய்ந்தான் வில்லியம்.
அவனின் தாக்குதலிலிந்து லாவகமாக தப்பித்தவன் அவனோடு வாள் சண்டை போட ஆரம்பிக்க, அவர்கள் ஆங்கில மொழி சம்பாஷனை புரியாவிட்டாலும் நடப்பதைப் பார்க்கும் போது ஓரளவுக்கு வீராவால் சில விடயங்களை புரிந்துக்கொள்ள முடிந்தது.
அவனுடைய பார்வை யாழ்மொழியின் மீது படிய, "ஐயா, நான் அவன கவனிச்சுக்குறேன். நீங்க யாழ இங்கயிருந்து அழைச்சுட்டு போங்க" என்று வீரா சொல்ல, தன் வாளினால் வில்லியமின் வாளை சுழற்றி தூக்கியெறிந்தவன் தன்னவளை நோக்கி ஓடினான்.
ரொனேல்டடோ சுவற்றில் மாட்டி வைத்திருந்த தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தவர் அவனை நோக்கி குறி வைத்து, "ஒரு இன்ச் நகர்ந்தாலும் உன்னை கொன்னுடுவேன்" என்று அடித்தொண்டையிலிருந்து மிரட்ட, விழிகள் சிவக்க முறைத்துப் பார்த்தவாறு இரு கைகளை மேலே உயர்த்தி எழுந்து நின்றான் லியோ.
வில்லியமோ அந்த இடமே அதிர பேய் போல் சிரித்தபடி, "நீயெல்லாம் என்னை எதிர்த்து நிக்குறியா, பிச்சைக்கார நாய் உனக்கெல்லாம் என்னடா தகுதி இருக்கு யூ ப்ளடி ****... அன்னைக்கே உன்னை கொன்னிருப்பேன், பட் அதுக்கான பழிய இன்னைக்கு தீர்த்துக்குறேன்" என்று வீராவைப் பார்த்து சொல்ல, கத்தியின் பிடியை இறுக்கிப் பிடித்திருந்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.
யாழோ நடப்பது எதுவும் தெரியாமல் தரையில் கிடக்க, வீராவையும் லியோவையும் நோக்கி குறி வைத்தவாறு, "நான் உன்ன சுட்டு போட்டாலும் கேக்க நாதியில்ல. ஹவ் டேர் யூ! இதுக்கப்பறம் நீ நினைச்சாலும் ப்ரிட்டிஷ் அரசாங்கத்துல வேலை பார்க்க முடியாது. உன்ன உயிரோடயாச்சும் விடணும்னா என் முன்னாடி மண்டி போட்டு மன்னிப்பு கேளு!" என்று அழுத்தமாக சொன்னார் ரொனேல்ட்.
விழிகளை அழுந்த முடித் திறந்தவன் வேறு வழியில்லாமல் அவர் முன் மண்டியிட, "டேய் நாயே! உனக்கும்தான்..." என்று கத்திக்கொண்டு வந்த வில்லியம் அவனின் முட்டியில் ஓங்கி உதைக்க, "ஆஆ..." என்று அலறிக்கொண்டு மண்டியிட்டான் வீரா.
அவனின் முடியைப் பிடித்து இழுத்து அவன் முகத்தை தன்னை நோக்கி காண செய்தவன், "ப்ரிட்டிஷ் அரசாங்கத்தோட அடிமை நீ. எங்கள எதிர்த்து நிக்குற. நீ கெடக்க போற நிலைமைய பார்த்து இதுக்கப்பறம் எந்த நாயும் எங்கள எதிர்த்து பேச துணிய கூடாது" என்று ஆக்ரோஷமாக சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தான் அவன்.
"என்னடா முறைக்குற?" என்று வீராவின் முகத்தில் அவன் ஓங்கிக் குத்த, இங்கு லியோவோ அமைதியாக ரொனேல்டை வெறித்துப் பார்த்தான்.
"இதெல்லாம் எதுக்கு லியோ, உன்னை மாதிரி ஒருத்தன் என் பக்கம்தான் நிக்கணும். ஆனா நீ... ச்சே!" என்று எரிச்சலாக சொல்லி துப்பாக்கியை அவனின் நெற்றியில் வைக்க, வீராவோ அதிர்ந்து விழித்தான்.
ஆனால் லியோவின் முகத்தில் அப்போதும் அதிர்ச்சிக்கான பயத்திற்கான சாயல் கொஞ்சமும் இல்லை. அதைப் பார்க்கும் போது வில்லியமால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
"சார் இவன்கிட்ட எதுக்கு பேசிக்கிட்டு இப்போவே இங்கேயே ரெண்டு பேரையும் சுட்டு தள்ளுவோம். என்னையே மட்டமா நடத்தினல்ல, உன்ன என்ன பண்றேன் பாரு" என்று ரொனேல்டின் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கி அவன் சுடப் போக, திடீரென துப்பாக்கி குண்டின் சத்தம் அந்த இடத்தையே நிரப்பியது.
வீராவோ விழிகளை மூடி முகத்தை திருப்பிக்கொள்ள, ரொனேல்டின் விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு தன் எதிரே நடந்த காட்சியில் விரிந்திருந்தன.
அங்கு வில்லியமின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி குண்டு துளைத்திருக்க, தரையில் உயிரற்று கிடந்தான் அவன்.
"வில்லியம்..." என்றவரின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, உடனே திரும்பிப் பார்த்த வீராவுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
ரொனேல்ட் மற்றும் வீரா இருவரின் பார்வையும் லியோவை நோக்க, வில்லியமின் சடலத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தவனின் நினைவுகள் ஒரு சில நிமிடங்களுக்கு முன் நடந்ததை நினைத்துப் பார்த்தது.
வில்லியம் லியோவை நோக்கி குறி வைத்து சுடப் போக, பற்களைக் கடித்தவன் தன் எதிராளி எதிர்பார்க்காத கணத்தில் மின்னல் வேகத்தில் செயற்பட்டு துப்பாக்கியை அவன் கரத்திலிருந்து தட்டிவிட்டான்.
வில்லியமோ அதிர்ந்துப் போய் அதை எடுக்கப் போக, உடனே சுதாகரித்து கையிலெடுத்த லியோ அவனின் நெற்றிப் பொட்டை நோக்கி குறி வைத்திருக்க, அந்த நொடியே சடலமாக தரையில் விழுந்தான் வில்லியம்.
இறந்துக் கிடந்தவனின் உடலை லியோ வெறித்துப் பார்த்திருக்க, மற்ற இருவருக்கும் ஒருசில கணங்களில் நடந்ததை நம்பவே முடியவில்லை.
ரொனேல்டிற்கு இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
"இதோட விளைவு என்னன்னு தெரிஞ்சும் எங்களுக்கு எதிரா இப்படி பண்ணியிருக்க. இதுக்கப்பறம் நீயே கெஞ்சினாலும் ப்ரிட்டிஷ் அரசாங்கத்துல உனக்கு இடம் இல்ல. அதுமட்டுமில்ல, ஒரு ப்ரிட்டிஷ் ஆஃபீசர கொன்னதுக்காக உன்ன கொல்ல சொல்லி ஆர்டர் போட போறேன். அப்போதான்டா நான் யாருன்னு.."
என்று பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகள் லியோ அவரை நோக்கி துப்பாக்கியை குறி வைக்கவும் அடங்கிப் போக, எச்சிலை விழுங்கியபடி இரண்டடி பின்னே நகர்ந்தார்.
"நோ லியோ... நீ இப்படி பண்ண கூடாது" என்று ரொனெல்ட் ஒவ்வொரு வார்த்தைகளாக கோர்த்து பயந்தபடி சொல்ல, ஏளனமாகப் புன்னகைத்தவன் துப்பாக்கியை சுழற்றி அதன் கைப்பிடியியால் ஓங்கி அவர் தலையில் அடித்தான்.
ரொனேல்ட்டோ அந்த இடத்திலேயே மயங்கி சரிய, "நாம இங்கயிருந்து போகணும் ஐயா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா நீங்களும் யாழும் எங்க இடத்துக்கு வந்திருக்கலாம். அங்க உங்களுக்கு பாதுகாப்பா இருக்கும்" என்றான் வீரா சிறு தயக்கத்தோடு.
சில கணங்கள் யோசித்தவன், "ம்ம்..." என்றவாறு யாழ்மொழியின் அருகே செல்ல, அவளோ தரையில் சுயநினைவின்றி கிடக்க, "சாரி யாழ்" என்று அவளையே பார்த்தவாறு சொன்னவனின் குரல் கரகரத்தது.
"மத்த அதிகாரிங்க வரதுக்கு முன்னாடி நாம இங்கயிருந்து போகணும்" என்று வீரா துரிதப்படுத்த, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் உடனே தன்னவளை கைகளில் ஏந்திக்கொண்டு வேகமாக முன்னே நடக்க, கோழிக் குஞ்சைப் போல் அவனுடைய கைகளுக்குள் சுருண்டுப் படுத்திருந்தாள் பெண்ணவள்.
ஒருசில மணித்தியாலங்களின் பின்,
"என்ன வீரா இது, யாருக்கு போய் அடைக்கலம் கொடுக்க சொல்ற. இது அரசருக்கு தெரிஞ்சா இவள ஒதுக்கின மாதிரி நம்மளயும் ஊரை விட்டே ஒதுக்கிருவாரு. என்னால இதை பண்ண முடியாது. அவள கூட்டிட்டு அவன போக சொல்லு" என்று வைதேகி வீராவிடம் கத்திக்கொண்டிருக்க, தன் குடிசையை பார்த்துவிட்டு தாயை முறைத்துப் பார்த்தவன், "அவருக்கு நல்லாவே தமிழ் தெரியும், கொஞ்சம் அமைதியா பேசு" என்றான் பற்களைக் கடித்தபடி.
வைதேகியோ மகனை எரிச்சலாக ஒரு பார்வைப் பார்த்தவர், "உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா வீரா, நீ இவங்கள அழைச்சுட்டு வந்தத எல்லாரும் பார்த்துட்டாங்க, கண்டிப்பா யாராலயும் இதை ஏத்துக்க முடியாது. இந்த வெள்ளைகாரனுங்களால நாம அனுபவிச்ச கொடுமைய நீ மறந்துட்டியா என்ன! எனக்கு பயமா இருக்கு" என்று இறுதியில் அழுகையோடு முடிக்க, விழிகளை சலிப்பாக உருட்டினான் அவன்.
"அம்மா கொஞ்சம் புரிஞ்சுக்கோ! அந்த பொண்ணுக்கு இப்போ யாருமே இல்ல, அவளுக்காக சண்டை போட்டு இப்போ அவருக்கு எதிரா எல்லா அதிகாரிகளும் இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கம்மா. எனக்கு புரியுது, இதை நம்ம யாராலயும் ஏத்துக்க முடியாதுன்னு. ஆனா... நாம இதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். பாவம்மா, அதுமட்டுமில்லாம இந்திராவுக்கு யாழ் ரொம்ப ரொம்ப முக்கியம். அவங்களுக்காக இல்லன்னாலும் இந்திராவுக்காக நான் அவங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்"
என்று அழுத்தமாக அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, வேகமாக ஓடி வந்தான் பாலா.
"வீரா, ஊர் முழுக்க அந்த வெள்ளைக்கார துரையோட கொலைய பத்திதான் பரபரப்பா பேசுறாங்க. இவங்க இங்கேயே இருக்குறதான் இப்போ பாதுகாப்பு. ஆமா.. அவர் உள்ளதான் இருக்காரா?" என்று ஆர்வமாக அவன் கேட்க, "ம்ம்" என்று தலையசைத்தான் வீரா.
"ஒன்னும் பிரச்சனை இல்ல, நம்ம ஆளுங்க எல்லாம் நமக்கு சாதகமாதான் இருக்காங்க. நம்மகிட்ட உதவிக்காக வந்திருக்காங்க, பழைய பகைய வச்சு விரட்டியா அடிக்க முடியும். அவங்க இங்கயிருந்து போற வரைக்கும் நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணலாம்" என்று பாலா தீவிர முகபாவனையோடு சொல்ல, தன் அம்மாவை ஒரு பார்வைப் பார்த்தான் மற்றவன்.
வைதேகியோ சங்கடத்தோடு தலை குனிந்துக்கொள்ள, அவரைத் தேடி வந்த அவரின் குடிசையிலிருந்து இரண்டு குடிசைகள் தள்ளியிருக்கும் மேகலை கஞ்சி நிரப்பப்பட்டிருந்த சட்டியை அவர் கையில் திணித்து, "யக்கோவ், இதை கொண்டு போய் அந்த துரைகிட்ட கொடுங்க. ரொம்ப நேரமா அந்த பொண்ணையே பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்கு. பாவம் பசிக்கும்ல" என்றார் வெகுளியாக.
"பார்த்தீங்களாம்மா, இதுதான் நம்ம பண்பாடு. எதிரியா இருந்தாலும் தாகத்துக்கு தண்ணி கொடுக்கணும்" என்று வீரா உரைப்பது போல் சொல்ல, சங்கடத்தை விட்டு கஞ்சிக் கோப்பையை வாங்கிக்கொண்டவர் லியோ இருந்த குடிசைக்குள் நுழைந்தார்.
அவனோ யாழ்மொழியோடு இங்கு வந்ததிலிருந்து ஒருநொடி கூட கண்ணயரவில்லை.
அவளையே இமை மூடாமல் பார்த்த வண்ணம் அப்படியே அமர்ந்திருக்க, சிறு பயமும் தயக்கத்தோடும் உள்ளே நுழைந்தவர், "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. ஐயா.." என்று குரல் கொடுக்க, உடனே நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.
விழிகளை சுருக்கி அவன் சாதாரணமாக பார்ப்பதே அவருக்கு பயங்கரமாக இருக்க, "அது.. அது வந்து துரை ஐயா, ரொம்ப நேரமா சாப்பிடாம இருக்கீங்க. கஞ்சி இருக்கு, சாப்பிடுறீங்களா?" என்று கஷ்டப்பட்டு வார்த்தைகளைக் கோர்த்து திக்கித்திணறிக் கேட்டார் வைதேகி.
"கொடுங்க" என்று அவன் சொன்னதுமே அவருக்கு அத்தனை சந்தோஷமாக இருக்க, உடனே சிறிய கோப்பையில் கஞ்சை ஊற்றி அவனிடம் நீட்டினார் பெரியவர்.
அதை வாங்கி ஒரு கரண்டி சாப்பிட்ட லியோவின் மனக்கண் முன் கடந்த காலத்தில் அவன் நடந்துக்கொண்ட விதமும் சில சம்பவங்களும் ஞாபகத்திற்கு வர, தொண்டைக்குழியில் உணவு இறங்கவே மறுத்தது.
ஆரம்பத்தில் யாரை துன்புறுத்த எண்ணினானோ இன்று அவர்கள்தான் அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.
அதை நினைத்துப் பார்த்தவன் கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்த வைதேகியை நிமிர்ந்துப் பார்த்து, "தேங்க் யூ" என்று சொல்ல, "என்ன ஐயா?" என்று அதற்கான அர்த்தம் புரியாமல் கேட்டார் அவர்.
"அது.. ரொம்ப நன்றி" என்று லியோ மீண்டும் சொன்னதும் வைதேகிக்கு ஆச்சரியம் தாளவில்லை.
ஆச்சரியம் அதிர்ச்சி கலக்க குடிசையிலிருந்து வெளியே வந்தவர், "அந்த வெள்ளைக்கார துரை நன்றி சொன்னாரு மேகல" என்று துள்ளிக்குதிக்காத குறையாக சொல்ல, அதைப் பார்த்துக்கொண்டிருந்த வீராவின் இதழ்களும் புன்னகையில் விரிந்தன.
இங்கு லியோவோ கஞ்சியை சாப்பிட்டுக்கொண்டிருக்க, சரியாக உணர்வுக்கு வந்து மெல்ல விழிகளைத் திறந்தாள் யாழ்மொழி.
தன்னவள் விழித்ததை பார்த்ததும் உணவை ஓரமாக வைத்தவன், "யாழ்..." என்றழைத்தவாறு அவளை நெருங்க, தலையை தாங்கியவாறு எழுந்தமர்ந்த பெண்ணவளோ தன்னை நெருங்கியவனை அதிர்ந்துப் பார்த்துவிட்டு விழிகளை சுழல விட்டு சுற்றி முற்றிப் பார்த்தாள்.
"யாழ், நவ் யூ ஆர் சேஃப்.. ஐ மீன் நீ இப்போ பாதுகாப்பா இருக்க" என்று சொல்லிக்கொண்டே லியோ தன்னவளின் கரத்தைப் பற்றிக்கொள்ள, பட்டென்று அதை உதறிவிட்டவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.
"என்னை தொடாதீர்கள், அதுதான் என்னை தெரியவில்லை என்று சொல்லி என்னை நிர்க்கதியாக நிற்க வைத்தீர்களே, இப்போது மட்டும் என்ன?" என்று யாழ் படபடவென பொரிந்துத் தள்ள, "ஆமா சொன்னேன்தான், என்னை மன்னிச்சிரு! அதுக்காக உன்ன நான் அப்படியே விடல யாழ், உனக்காகதான் வந்தேன்" என்றான் லியோ வேகமாக.
"இது என்ன என் மேல் புது அக்கறை, அன்று முத்தம் கொடுத்துவிட்டு காதலே இல்லையென்று சொன்னீர்கள் பின் என்னை தவிக்க விட்டு தங்களின் தேசத்திற்கு சென்றீர்கள். இப்போது தங்களுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்த என்னை யாரென்றே தெரியவில்லை என்றீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொல்வதற்கு தங்களின் துப்பாக்கியால் என்னை மொத்தமாக கொன்றுவிடுங்கள். தங்களின் நினைவுகளோடு நான் நிம்மதியாக இறந்துவிடுவேன். இந்த வேதனை வேண்டாம்"
என்று விழிநீரோட அவள் பேசிக்கொண்டே போக, லியோவுக்கு தன்னவளின் வேதனையும் வலியும் புரியாமல் இல்லை.
அவளை மனதளவில் அத்தனை காயப்படுத்தி இருக்கிறான். தன் செயலை எண்ணி அவனுக்கே மனம் குற்றவுணர்ச்சியில் தவிக்க, ஒருவித தயக்கத்தோடு தன்னவளை நெருங்கினான் அவன்.
"என் பக்கத்தில் வராதீர்கள்! சொல்வது புரிகிறதா இல்லையா.. தமிழையும் தாண்டி தங்களின் மொழியில் வேறு சொல்ல வேண்டுமோ" என்று அவள் கோபம் தெறிக்கப் பேச, அவள் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டான் லியோ.
"அதான் நானும் உன் மொழியிலயே மன்னிப்பு கேட்டேனே, என் மொழியில வேற மன்னிப்பு கேக்கனுமா! அப்போதான் அம்மணி என்னை மன்னிப்பீங்களோ..." என்று அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்க, அவனின் பிடியிலிருந்து விடுபட முயன்றவாறு மூக்கு விடைக்க முறைத்துப் பார்த்தாள் யாழ்மொழி.
"நான் தங்களை மன்னிக்கவே போறதில்லை" என்று அவள் பற்களை கடித்தவாறு சொல்ல, "அதையும் பார்க்கலாம், நீ மன்னிக்கலன்னாலும் பரவாயில்ல, நவ் யூ ஹேவ் நோ சாய்ஸ், என் கூடதான் உன்னோட மீதி வாழ்க்கைய கழிச்சாகனும்" என்றான் லியோ கொடுப்புக்குள் சிரித்தவாறு.
ஒரு பக்கம் அவன் மீது கோபம் இருந்தாலும் இன்னொரு புறம் அவனின் பார்வையிலும் வார்த்தைகளிலும் அவளுக்கு வெட்கம் பீறிட்டது.
"எதுவும் தேவையில்லை" என்று அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, லியோ தன்னவளின் கன்னத்தில் அழுந்த முத்தத்தைப் பதிக்கவும் வீரா உள்ளே நுழையவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
அதைப் பார்த்தவன், "அய்யய்யோ..." என்று அலறியவாறு குடிசையிலிருந்து வேகமாக வெளியேற, லியோவின் மார்பில் கை வைத்துத் தள்ளிவிட்டு பதறியபடி விலகியமர்ந்தாள் யாழ்.
"என் மானமே போய்விட்டது. இதற்குப் பிறகு எப்படி அவர் முகத்தை பார்ப்பேன்" என்று அவள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அவனை பார்த்து கேட்க, "கண்ணாலதான்..." அலட்சியமாக பதில் சொன்னவாறு எழுந்து நின்றவன், "வீரா..." என்றழைத்தான் சத்தமாக.
"ஹ்ர்ம் ஹ்ர்ம்.." என்று குரலை செருமியவாறு சிறு சங்கடத்தோடு உள்ளே வந்தவன், "அது... அது வந்து... இதுக்கப்பறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சிருக்கீங்க?" என்று தயங்கித் தயங்கிக் கேட்க, லியோவிடமோ அதற்கு பதிலே இல்லை.
"தெரியாது, ஆனா... இங்க இருக்குறத விட யாழ கூட்டிட்டு என்னோட தேசத்துக்கு நான் போறது நல்லது. அங்க எனக்கு உதவி பண்ண நிறைய பேர் இருக்காங்க. இங்க இருந்து எங்க நாட்டுக்கு அனுப்புற பொட்கள் அடங்கிய கப்பல்ல எப்படியாச்சும் நாங்களும் ஏறிக்கணும். இதை விட்டா வேற வழி தெரியல" என்று அவன் தன் திட்டத்தை சொல்ல, யாழ் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"என் நாட்டை விட்டு செல்வதா...' என்று அதிர்ந்துப் போய் அவள் தன்னவனைப் பார்க்க, வீராவுக்குமே லியோவின் இந்த முடிவில் அதிர்ச்சிதான்.
"உங்க முடிவு ஐயா. நீங்க பாதுகாப்பா உங்க தேசத்துக்கு போறதுக்கான ஏற்பாட நாங்க பண்றோம்" என்று வீரா சிறு நம்பிக்கையோடு சொல்ல, திடீரென உள்ளே நுழைந்தார் வைதேகி.
"ஐயா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே" என்று அவர் தயக்கத்தோடுக் கேட்க, "கேளுங்க.." என்றான் அவன் புருவ முடிச்சுகளோடு.
அவனின் கழுகுப் பார்வை அவரின் வயிற்றுக்குள் பயபந்தை உருளச் செய்தாலும் முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நீங்க நிஜமாவே இந்த பொண்ண ரொம்ப காதலிக்கிறீங்களா?" என்று கேட்க, ஒருகணம் அவரை புரியாமல் பார்த்தவன் பின் யாழ்மொழியைப் பார்த்தவாறு, "ம்ம்.. ஐ லவ் ஹெர்" என்றான் சிறு புன்னகையோடு.
அவருக்கு அவன் சொன்னதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவனின் விழிகளே அவன் காதலை அப்பட்டமாக உணர்த்த, "அப்போ... அப்போ நீங்க யாழ்மொழிய கல்யாணம் பண்ணிட்டு உங்க மனைவியா அவள இங்கயிருந்து அழைச்சுட்டு போங்க" என்று சொல்ல, மற்ற மூவருமே இதை எதிர்பார்க்கவில்லை.
"அம்மா என்ன பேசுற நீ..." என்று வீரா அதிர்ச்சியோடு சொல்ல, லியோவும் யாழ்மொழியும் உடனே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"நான் என்னடா தப்பா சொன்னேன், எங்க கலாச்சாரம் இதுதான். நீங்க தாராளமா அந்த பொண்ண அழைச்சுட்டு போகலாம், ஆனா உங்க மனைவியாதான் அவ உங்க கூட வரனும். எங்க ஊர் பொண்ணு மேல இதுக்கும் மேல கலங்கம் வரக் கூடாது. நா.. நான் ஏதாவது தப்பா சொன்னேனா?" என்று அவர் தலை குனிந்தவாறுக் கேட்க, லியோவோ கொஞ்சமும் யோசிக்கவில்லை.
"எனக்கு இதுல சம்மதம்" என்று அவன் சொல்லிவிட, யாழ்மொழிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
இப்போது வைதேகியின் பார்வை அவளின் மீது படிய, யாழ்மொழியின் விழிகளிலிருந்து கண்ணீர் மட்டும் அருவியாய் ஓடியது.
"யாழுக்கு இதுல விருப்பம் இல்ல போல, கல்யாணம் தேவையில்லன்னு..." என்று வீரா வேண்டுமென்றே சொல்ல, பதறிப் போனவளாக உடனே, "இல்லை அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்.. எனக்கு இதில் முழு சம்மதம்" என்றாள் அவசரமாக.
லியோவோ அவளை சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்க்க, "அப்போ நாளைக்கே கோயில்ல வச்சு இவங்க கல்யாணத்த ஊருக்குள்ள நடத்திரலாம். அய்யோ கடவுளே, தலைக்கு மேல வேலை இருக்கு. வீரா... சீக்கிரம் என் கூட வா, கல்யாணத்துக்கான ஏற்பாட ஆரம்பிக்கலாம். மேகலா... அடியே மேகலா..." என்று கத்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் வைதேகி.
"அம்மா கொஞ்சம் அப்படிதான், நீங்க எதுவும் நினைச்சுக்க வேணாம்" என்று வீரா அசடுவழிந்தவாறு சொல்ல, அன்றே யாழ்மொழி மற்றும் லியோவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.
"ஏய் பாலா.. காலையிலயிருந்து பார்க்குறேன். நீயும் வீராவும் பரபரப்பா இருக்கீங்க. என்ன விஷயம்?" என்று அந்த ஊரிலுள்ள பெரியவரான பாண்டியன் கேட்க, அவர் பக்கத்திலுள்ள நான்கு அள்ள கைகளும் பாலாவை கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
"அதுவா... அந்த வெள்ளைக்கார துரையும் நம்ம யாழ்மொழியும் காதலிக்கிறாங்கல்ல! அவங்களுக்கு இன்னைக்கு கல்யாணம். அதான்.. இன்னும் நிறைய வேலை கெடக்கு. நாமதானே எல்லாத்தையும் பார்த்து பண்ணணும்" என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் பாலா.
போகும் அவனை உறுத்து விழித்த பாண்டியனுக்கு இதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
"என்ன கருமம் இது! நம்ம நாட்ட நாசமாக்கின அந்த வெள்ளைக்காரனுக்கு இவனுங்க உதவி பண்றானுங்களா, என்னால இதை ஜீரணிக்கவே முடியல" என்று அவர் கத்த, "ஆமா அண்ணே, அவங்களால அதிகமா வரிய கட்டி நாம இப்படி ஒரு நிலைமையில இருக்கோம். நம்மள அடிமைப்படுத்தி வற்புறுத்தி நம்ம உழைப்ப திருடினாங்க. ஆனா நடந்தது எல்லாத்தையும் மறந்து அவனுங்களோடயே உறவு கொண்டாடுறானுங்க" என்றார் பாண்டியனுக்கு பக்கத்திலிருந்த ராசு.
"அந்த வெள்ளைக்காரன நம்ம ஊர் புள்ள காதலிக்கிறது தெரிஞ்சதுமே அரசர் ஊரை விட்டு ஒதுக்கினதுக்கு பதிலா கொன்னு போட்டிருந்தா மனசுக்கு நிம்மதியா இருந்திருக்கும். ஒழுங்கக் கெட்ட நாய் த்தூ..." என்று இன்னொரு பெரியவர் தன் ஆதங்கத்தை கொட்ட, தீவிரமாக யோசித்தார் பாண்டியன்.
"இதை இப்படியே விட்டா நம்ம நாட்டுக்கு நாமளும் துரோகம் பண்ண மாதிரி ஆகிரும். என்கிட்ட ஒரு யோசனை இருக்கு. டேய் ராசு, அந்த வெள்ளைக்காரனுங்க அரண்மனை எங்கடா இருக்கு?" என்று அவர் கேட்க, முதலில் புரியாது விழித்த ராசுக்கு சில கணங்கள் கழித்துதான் மூளைக்கு உரைக்க, விஷமமாக இதழை வளைத்தார் அவர்.
அடுத்த சில மணித்தியாலங்களில் அந்த ஊரிலுள்ள பெரிய கோயிலில் சிறிய கூட்டம் கூடியிருக்க, ஐயரின் மந்திர வார்த்தைகள் மட்டுமே அந்த இடத்தை நிரப்பியிருந்தது.
லியோவோ மஞ்சள் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறை கையில் ஏந்தியிருந்தவன், தன்னவளின் விழிகளைப் பார்க்க, அவளின் விழிகளில் விழிநீர் நிரம்பியிருந்தது கிட்டத்தட்ட அழுகையின் விளிம்பில் நின்றிருந்தாள் யாழ்மொழி.
"தாலிய கட்டுங்க தம்பி.." என்று ஐயர் சொன்னதும் வைதேகி சொல்லிக் கொடுத்தது போல மூன்று முடிச்சுகளைப் போட்டவன் கொடுத்த குங்குமத்தையும் அவளுடைய நெற்றி வகுட்டில் வைத்தான்.
யாழ்மொழியின் விழிகளிலிருந்து ஏனென்றே தெரியாமல் விழிநீர் ஓடிக்கொண்டிருக்க, அதைத் துடைத்துவிட்டவன் அவளுடைய நெற்றியில் அனைவருக்கும் முன்னிலையில் அழுந்த முத்தமொன்றைப் பதித்தான்.
உடனே தன்னவனை நிமிர்ந்துப் பார்த்தவள் அவனின் மார்பில் முகத்தை புதைத்து கதறியழ, "இந்த நொடியில இருந்து நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி, என்னைக்கும் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கணும். ரெண்டு பேரும் போய் பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க" என்றார் ஐயர்.
லியோவோ அதன் அர்த்தம் புரியாமல் விழிக்க, அவனின் கரத்தை பற்றி வைதேகியின் முன்னே அழைத்துச் சென்றவள் தான் மண்டியிட்டு அமர்ந்து தன்னவனை இழுக்க, அவள் சொல்வது போல் செய்தான் லியோ.
லியோ காலில் விழுந்ததுமே பதறிய வைதேகி உடனே, "ரெண்டு பேரும் என்னைக்கும் நல்லா இருக்கணும், மொதல்ல எழுந்திருங்க" என்று பதற்றமாக சொல்ல, சிரித்தவாறு அவர்களுக்கு அருகே வந்தான் வீரா.
"நீங்க உங்க தேசத்துக்கு போறதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன். விடியற்காலையில ஒரு கப்பல் புறப்பட இருக்கு. எங்க ஆளுங்கள்ல ஒருத்தன் அங்க வேலை பார்க்குறான். யாருக்கும் தெரியாம இன்னைக்கு ராத்திரியே நீங்க கப்பல்ல ஏறிடுங்க. உங்க தேசத்துக்கு போய் சேருற வரைக்கும் ரொம்ப ஜாக்கிரதை!"
என்று வீரா எச்சரிக்கும் குரலில் சொல்ல, யாழ்மொழியின் முகம்தான் வாடிப் போனது.
"எனக்கென்று இருந்த ஒரே உறவு இளவரசிதான். இன்று அவர்கள் என் பக்கத்தில் இருக்க வேண்டுமென்று எண்ணினேன். ஆனால்..." என்று வேதனையோடு பேசிய யாழ்மொழி விழியோரம் கசிந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்ள, லியோவோ ஆறுதலாக அவள் கையைப் பற்றியிருந்த தன் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.
"எனக்கு புரியுது யாழ், ஆனா.. அரசருக்கு இந்திரா என்னை காதலிக்கிறது தெரிஞ்சப்போவே அவளுக்கான பாதுகாப்ப ரொம்ப பலப்படுத்திட்டாரு. இப்போ உன்னை அரண்மனையை விட்டு வெளிய அனுப்பினதுலயிருந்து இந்திராவ ரொம்ப கண்காணிக்க ஆரம்பிச்சிருக்காரு. அவளால எதுவுமே பண்ண முடியல. உன் கல்யாணத்தை பத்தி அவளுக்கு நான் அனுப்பின செய்தி அவள போய் சேர்ந்திருக்குமான்னே எனக்கு சந்தேகமா இருக்கு"
என்ற சொல்லி முடித்து வீரா ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட, "என்ன இங்க மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க. அங்க உங்களுக்கான விருந்து தயாரா இருக்கு. சீக்கிரம் வாங்க.." என்று அழைத்துச் சென்றார் வைதேகி.
"ஏதோ எங்களால முடிஞ்சது" என்று வைதேகி கைகளைப் பிசைந்தவாறு தயக்கமாக சொல்ல, "தாங்கள் எதைக் கொடுத்தாலும் எங்களுக்கு அது பெரும் அமிர்தம்தான் அம்மா" என்று யாழ்மொழி சொல்லிக்கொண்டிருக்கும் போதே பதறிக்கொண்டு வந்தார் மேகலை.
"ஏய் வைதேகி, அரசர் வந்திருக்காரு. உன் குடிசைய நோக்கிதான் வர்றாரு. சீக்கிரம் ஏதாச்சும் பண்ணு" என்று அவர் பதட்டமாகச் சொல்ல, "அய்யோ கடவுளே! இப்போது நான் என்ன செய்வேன்" என்று பதற ஆரம்பித்துவிட்டாள் யாழ்மொழி.
"எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன்" என்று லியோ சட்டைக் கையை மடித்து விட்டவாறு சொல்ல, வேகமாக யோசித்த வீரா, "இப்போ வெளியில போக முடியாது சீக்கிரம் போய் அந்த இடத்துக்குள்ள ஒளிஞ்சுக்கோங்க.. சீக்கிரம்..." என்றான் வேகமாக.
"இல்ல அது..." என்று லியோ அப்போதும் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு ஏதோ சொல்ல போக, அவன் கரத்தைப் பற்றி நாலுபுறமும் ஓலைகளால் குடிசைக்குள் அமைக்கப்பட்டிருந்த சிறிய சமையலறைக்குள் இழுத்துக்கொண்டே சென்றாள் அவள்.
அவர்கள் ஒளிந்துக் கொள்ளவும் அரசர் குடிசைக்குள் தன் காவலாளிகளோடு நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
"வணக்கம் அரசே" என்று வீரா மரியாதை நிமித்தமாக தலை வணங்க, வைதேகியோ இதயம் படபடக்க கைகளைப் பிசைந்தவாறு மகனின் அருகே நின்றிருந்தார்.
"உன்னுடன் முக்கியமான விடயம் பற்றி கலந்துரையாடவே நான் இங்கு வந்தேன். தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம். என் மகளை உண்மையாகத்தான் காதலிக்கிறாயா?"
என்று வேந்தன் கூரிய பார்வையோடுக் கேட்க, ஒருகணம் அவரை அதிர்ந்துப் பார்த்தவன், "ம்ம்.. இந்திராவ நான் ரொம்ப காதலிக்கிறேன்" என்றான் அழுத்தமான பார்வையோடு.
"பெண்ணிற்காகவா.. பொன்னிற்காகவா?" என்று அவர் தன் அடுத்த சந்தேகத்தைக் கேட்க, தன் காதலை சந்தேகிக்கும் அவர் மீது வீராவுக்கு கோபம் உச்சத்தை தொட்டாலும் அதை முயன்று அடக்கிக்கொண்டு, "சொத்துக்காக தான் நான் காதலிச்சேன்னா இந்நேரம் இந்த குடிசையில நான் இருந்திருக்க மாட்டேன்" என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.
அவனின் வார்த்தைகளில் இருந்த உஷ்ணம் அவருக்கு புரிய பதிலுக்கு கோபப்படாமல் மெல்லிய புன்னகை சிந்தியவர், "ஒருவேளை என் மகள் தவறான ஒருவனை வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்திருந்தால் என் எதிர்வினையும் இப்படி இருந்திருக்காது" என்று சொல்ல, "புரியல அரசே..." என்ற வீராவின் புருவங்கள் கேள்வியாக முடிச்சிட்டன.
அவரின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவனுக்கு சுத்தமாக புரியவில்லை.
"இந்திராவிடம் நீ ஆட்சியை முழுதாக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொன்னது உன்னை பரீட்சிக்கதான். நீ பொன்னிற்கு ஆசைப்படுபவனாக இருந்திருந்தால் நான் கேட்டதும் நீ மறுத்திருக்க மாட்டாய். ஆனால் சுயமரியாதைக்காக நீ ஏற்க மறுத்த உன் குணம் என்னை வியக்க வைத்தது வீரா" என்று வேந்தன் மெச்சுதலாக சொல்ல, வைதேகிக்கு தன் மகனை நினைத்து அத்தனை பெருமையாக இருந்தது.
"கூடிய விரைவில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கலாம்" என்று அவர் சொல்லிவிட்டு வெளியேறப் போக, "அரசே ஒரேயொரு நிபந்தனை" என்று குறுக்கிட்டு சொன்னான் அவன்.
"வாய மூடு, என்ன காரியம் பண்ற?" என்று வைதேகி மகனை அதட்ட, "என்னை பத்தி உங்க மனசுல இருக்குற அபிப்பிராயத்துக்கு ரொம்ப நன்றி. ஆனா.. இந்திராவை நான் திருமணம் செஞ்சாலும் நான் நானாதான் இருப்பேன். அதுல என்னைக்கும் மாற்றம் இருக்காது" என்று வீராவோ வேந்தனின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தவாறு சொன்னான்.
சில கணங்கள் அவனை வெறித்துப் பார்த்தவர் ஒரு மெல்லிய புன்னகையுடனான தலையசைப்போடு அங்கிருந்து சென்றிருக்க, வீராவுக்கு மனதிலுள்ள பெரிய ஒரு பாரமே இறங்கிய உணர்வு.
இதற்கிடையில், ஒளிந்திருந்த யாழ்மொழிக்கு பயத்தில் தன் இதயம் துடிக்கும் சத்தம் தன் காதிற்கே கேட்கும் உணர்வு.
"கடவுளே! இப்போது நான் என்ன செய்வேன், அரசர் மட்டும் என்னை பார்த்துவிட்டால் என் மீதிருக்கும் கோபத்தில் மொத்த கிராமத்தையும் அல்லவா கொளுத்து விடுவார்! எனக்கு ஏன்தான் இத்தனை சோதனையோ?"
என்று அவள் புலம்பிக்கொண்டிருக்க, கிட்டத்தட்ட நூலிடைவெளியில் அவளோடு நெருங்கி நின்றிருந்த லியோவோ தன்னவளையே இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
நெற்றியில் குங்குமம், கழுத்தில் மஞ்சள் தாலியோடு உதடுகள் துடிக்க நின்றிருந்த தன் மனைவியிடமிருந்து அவனால் விழிகளை அகற்றவே முடியவில்லை.
"யாழ்.." என்று அழைத்தவனின் குரல் காற்றுக்கே வலிக்காதது போல் வெளிவர, உடனே அவனை நிமிர்ந்துப் பார்த்தவளோ கேள்வியாக இரு புருவங்களை ஏற்றி இறக்கினாள்.
அதில் மொத்தமாக விழுந்தவன், "உன் நெத்தியில நான் வச்சுவிட்ட இந்த குங்குமத்துக்கும் உன் கழுத்துல நான் போட்டு விட்ட இந்த மஞ்ச கயிறுக்கும் எனக்கு சத்தியமா அர்த்தம் தெரியல. ஆனா ஒன்னு மட்டும் என்னால ஃபீல் பண்ண முடியுது. நீ என்னோட யாழ். நீ எனக்கு சொந்தமாகிட்ட" என்று ஹஸ்கி குரலில் விழிகளில் காதலைத் தேக்கிக்கொண்டு சொல்ல, அந்த வார்த்தைகளில் பெண்ணவளின் முகமோ குப்பென்று சிவந்தது.
இருந்தும் அதை மறைக்க முயன்றவாறு, "அப்படியா.. ஆனால் தங்களின் மீதுள்ள கோபம் எனக்கு குறையவில்லை. என்னையே யாரென தெரியாதென்று சொல்லி என்னை எப்படியெல்லாம் தவிக்க விட்டீர்கள். இதற்கெல்லாம் சேர்த்து தங்களுக்கு தண்டனை உண்டு" என்று போலி கோபத்தோடு சொல்ல, அவளை கொடுப்புக்குள் சிரித்தவாறு பார்த்தான் அவன்.
"ஆஹான்! எனக்கு இப்படி கூட தண்டனை கொடுத்துக்கலாம்" என்று லியோ பொடி வைத்து பேச, அதை அறியாமல் "எப்படி?" என்று வெகுளியாய் அவள் கேட்க, அடுத்தகணம் அவளிதழை கவ்விக்கொண்டான் ஆடவன்.
யாழ்மொழியோ தெறித்து விடுமளவிற்கு விழி விரிக்க, மெல்ல அவளிதழை சுவைத்துவிட்டு மெல்ல விலகியவன், "இப்படிதான், உனக்கு எப்போ எல்லா கோபம் வருதோ அப்போ எல்லா இப்படி தண்டனை கொடுத்துக்கலாம்" என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னான்.
அவனை முறைக்க முயன்று முடியாமல் அவள் கீழுதட்டைக் கடித்த வண்ணம் தலை குனிந்துக்கொள்ள, "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. அரசர் போய் அரை மணித்தியாலம் ஆகிருச்சு. சாப்பிட வருவீங்களா இல்லன்னா..." என்று வெளியிலிருந்து கேலியாக குரல் எழுப்பினான் வீரா.
அவனின் கேலியில் இருவருக்குமே வெட்கமாக போய்விட, மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியில் வந்தவர்களுக்கு தடல்புடலாக ஏற்பாடு செய்திருந்த விருந்து காத்திருந்தது.
வயிறார உண்டு முடித்துவிட்டு சிரித்து பேசிக்கொண்டிருந்தவர்களின் குடிசைக்குள் நுழைந்த பாலாவின் முகம் பயத்தில் வெளுத்துப் போயிருந்தது.
அதைக் கவனித்த வீரா, "என்னாச்சு பாலா, ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று புரியாமல் கேட்க, "அந்த வெள்ளைக்காரனுங்க இங்கதான் வரானுங்க. இவங்க இங்க இருக்குற விஷயத்த பாண்டியன் ஐயா அவனுங்ககிட்ட காட்டி கொடுத்துட்டாருடா வீரா" என்று சொல்லி முடிக்க, அங்கிருந்த மொத்த பேரும் விக்கித்துப் போய்விட்டனர்.
"என்னப்பா சொல்லுற?" என்று வைதேகி நெஞ்சில் கை வைத்துக்கொள்ள, "ச்சே! அவங்க எல்லா மனுஷங்கதானா" என்ற வீராவுக்கு கோபம் உச்சகட்டத்தில் எகிறியிருக்க, ஆனால் அடுத்து என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.
"இப்போ என்ன பண்றது?" என்று அவன் கேட்க, தீவிரமாக யோசித்தான் லியோ.
"ஒரு வழி இருக்கு. வீரா நீங்க யாழ கூட்டிக்கிட்டு இங்கயிருந்து போங்க. அவங்க கையில யாழ் மாட்டிக்க கூடாது. முக்கியமா அந்த ரொனேல்ட் கிட்ட. அவங்ககிட்ட நானே போய் சரண்டராகி அவங்கள நான் திசை திருப்புறேன். சீக்கிரம் பாதுகாப்பான இடத்துக்கு போங்க"
என்று அவன் சொல்லிவிட்டு வெளியேற எத்தனிக்க, அவன் கரத்தைப் பற்றிக்கொண்ட யாழ்மொழி தன்னவனை இறுக அணைத்து அழ ஆரம்பித்தாள்.
"இல்லை.. தங்கள் என்னை விட்டு போங்க கூடாது. தாங்கள் இல்லாமல் நா.. நான் என்ன செய்வேன். என்னால் முடியாது. முடியவே முடியாது" என்று அவள் பிடிவாதமாக நிற்க, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்ட லியோவிற்கு தன்னவளின் அழுகையை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அவளின் இரு கன்னங்களை தாங்கிக்கொண்டவன், "யாழ், எனக்கு உன்னை விட்டு போகணும்னு ஆசையில்ல. ஆனா ஐ ஹேவ் நோ சாய்ஸ். இதை நான் பண்ணிதான் ஆகனும். நான் உனக்கு சத்தியம் பண்றேன். கண்டிப்பா நான் உன்னை தேடி வருவேன்" என்று உறுதியான குரலில் சொல்லி அவள் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தான்.
"வீரா, நான் வர தாமதமாகலாம். ஆனா நம்ம திட்டத்துல எதுவும் தவற கூடாது. நேரத்துக்கு யாழ் அந்த கப்பல்ல இருக்கனும். இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு ஆபத்துதான்"
என்ற லியோ மீண்டும் தன்னவளின் இதழில் அழுந்த முத்தத்தைப் பதித்துவிட்டு அங்கிருந்து வெளியேற, தன் கையை விட்டு செல்லும் அவனின் கரத்தை அழுகையோடு பார்த்திருந்தவளின் மற்ற கரத்தைப் பற்றினான் வீரா.
"யாழ் நமக்கு நேரமில்ல, சீக்கிரம்" என்று அவன் அவளை இழுத்துக்கொண்டு பின் வழியாக ஓட, சரியாக ஆங்கிலேய அதிகாரிகளோ கிராமத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
லியோவோ சட்டைக் கையை மடித்துவிட்டவாறு அவர்களின் எதிரே சென்று நிற்க, உடனே அதிகாரிகளோ கையில் துப்பாக்கியோடு அவனை சுற்றி வளைத்தனர்.
ஆனால், லியோவின் முகத்தில் பயத்திற்கான சாயல் கொஞ்சமும் தெரியவில்லை.
காரிலிருந்து இறங்கிய ரொனேல்டிற்கு அவனைப் பார்க்கப் பார்க்க கொலைவெறி அதிகரிக்க, வேகமாக சென்று லியோவின் நெற்றிப் பொட்டை நோக்கி துப்பாக்கியை குறி வைத்தார் அவர்.