ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 14

pommu

Administrator
Staff member

வேல்விழி 14

கதிரவன் கீற்றில் ஜொலித்துக் கொண்டு இருந்தது கூரிய வாள், அந்த வயலின் கூர்மையே தோற்றுவிட்டு இருந்தது அதனை ஏந்தி இருந்தவனது கூரிய விழிகளின் உக்கிரத்தில். அதனை ஏந்தி இருந்தவன் வேறு யாருமல்ல, ராஜகோட்டையின் முடிக்குரிய இளவரசன் யுவராஜன் தான். ராஜ்கோட்டையின் அரசன் விக்கிரமராஜனின் ஏக புதல்வன்.

யானை பலம் பொருந்திய புஜங்களும், இதழில் திமிருடன் கூடிய மென்னகையுமாக வாளை வீசி எதிராளியின் வாளை வீழ்த்தி இருந்தான். அவன் எதிரில் நின்று சண்டையிட்டுக் கொண்டு இருந்தது வேறுயாருமல்ல, ராஜகோட்டையின் தளபதி கீர்த்திவர்மனின் ஒரே மகன் ராமவர்மன். யுவராஜனின் சிறு வயது தோழன், அவன் வலது கரம் என்று கூட கூறலாம்.

எப்படி விக்ரமராஜனுக்கு கீர்த்தி வர்மனோ அதே போல யுவராஜனுக்கு ராமவர்மன். தனது கையில் இருந்த வாள் பறந்ததை கண்டு சற்று திகைத்தாலும், யுவராஜன் முன்னே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தான் நின்றான் அவன். அவனைக் கண்டதுமே தனது இதழ்களை பிரித்து சத்தமாக சிரித்த யுவராஜனோ, "ராமா, நிராயுதபாணியுடன் போரிட நான் ஒன்றும் கோழை அல்ல" என்று சொல்லிக் கொண்டே வாளை சுழட்டி நிழற்றில் ஊன்றியவனோ வேகநடை போட்டு அவனை நோக்கி வர,

அவனோ, "இளவரசே, தங்கள் வீரம் கண்டு வியக்கின்றேன், இந்த ராஜ்கோட்டையில் உங்களை மீறி யாருமே பாதம் பதிக்க முடியாது" என்று உரைத்தவன் முகத்தில் பெருமையுடன் கலந்த பூரிப்பு. யுவராஜனோ, "ராமா, எனக்கு இந்த புகழ்மாலையை கேட்டு கேட்டே சலித்து விட்டது, வா நாம் அருவியின் அழகை ரசித்து விட்டு வரலாம், உனக்கு தான் இயற்கை என்றால் கொள்ளை பிரியம் ஆயிற்றே" என்று கூறியபடி அருகே இருந்த வெண்குதிரையில் பாய்ந்து ஏற, ராமவர்மனும் தனது குதிரையில் மென் புன்னகையுடன் ஏறிக் கொண்டான்.

இருவரும் அசுவங்களும் அசுர வேகத்தில் பயணிக்க ஆரம்பித்து இருந்தது. யுவராஜன் வருவதைப் பார்த்த அனைவரும் அவனுக்கு வணக்கம் தெரிவிக்க, அவனோ மென் புன்னகையுடன் அருவி இருக்கும் அழகிய சோலையை நோக்கிச் சென்றான். அருவியை நெருங்க நெருங்க அதன் அழகில் லயித்து போயினர் யுவராஜனும், ராமவர்மனும். அருவியின் கரையில் பேரிளம்பெண்கள் குழுமி நின்று சிரித்து விளையாடிக் கொண்டு இருந்த தருணமது.

அவர்கள் நடுவே பேரழகிப் பெண்ணொருத்தியின் கொலுசு ஒலி கேட்க, காதில் விழுந்த கொலுசின் ஒலியை கேட்டு பேரழகியை பார்க்க வேண்டும் என்று யுவராஜனின் அசுவம் கூட விரும்பியது போலும். அதுவே தனது வேகத்தை குறைத்து விட, யுவராஜனின் விழிகளோ கொலுசின் ஒலிவந்த திசையை ஆராய ஆரம்பித்தது. பேரழகியவளோ தோழிகளுடன் சிரித்து பேசியபடி அருவியின் அருகே வந்திருந்த மான்குட்டியை அணைத்துக் கொள்ள, அவள் அழகில் மொத்தமாக விழுந்து இருந்தான் இளவரசன்.

அவன் அருகே வந்த ராமவர்மனின் விழிகளும் அவளையே நோக்கி இருக்க, யுவராஜனோ, b"யாரிந்த அழகி ராமா?" என்று தான் அவனிடம் கேட்டான். "நமது மந்திரியார் திருமூலரின் புதல்வி நந்திதா இளவரசே, மேலும்" என்று அவன் முடிக்கவில்லை, "மணந்தால் இந்த அழகியை தான் மணக்க வேண்டும்" என்று யுவராஜன் சொன்ன வார்த்தையில் "மேலும் அவள் நான் காதலிக்கும் பெண்ணாவாள்" என்று சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான் ராமவர்மன்.

மான்குட்டியை வருடிக் கொண்டே பேரழகி நந்திதாவின் விழிகளோ பரவசத்துடன் பதிந்து மீண்டது ராமவர்மனின் மீது தான். அவனோ அவள் தன்னை பார்க்கின்றாள் என்றுணர்ந்து முழுமையாக மரைந்து கொண்டான் யுவராஜனின் பின்னால்… அன்று ராமவர்மன் சொல்ல தவறிய வார்த்தைகளின் விளைவால் இஷ்டம் இல்லாமலே ராஜகோட்டையின் அரசியாக அவள் யுவராஜன் அருகே அமரும் நாள் வெகுவிரைவிலேயே வந்து சேர்ந்தது

அவளை சிரிப்புடனேயே யுவராஜன் கடந்து சென்றாலும் அவனால் அவள் நினைவுகளை அவ்வளவு சீக்கிரம் கடந்து விட முடியவே இல்லை. மருண்ட விழிகளும், கூரிய நாசியும், கொவ்வைப்பழம் போன்று சிவந்த இதழ்களும் என இருந்தவளது கேசமோ பாதத்தை தொட்டு விடும் அளவுக்கு நீண்டு இருந்தது. அவள் கொடியிடையும் அங்க வனப்புகளும் செதுக்கியது போல இருக்க, அவளை விட பேரழகி இந்த வையகத்தில் இல்லை என்று தான் யுவராஜன் நினைத்து இருந்தான்.

அரண்மனைக்கு திரும்பியவன் மனதிலும் அவள் எண்ணமே நீக்கமற நிறைந்து இருக்க, அரண்மனைக்கு திரும்பியவனை அழைத்து இருந்தார் அவன் தந்தையும் அரசருமான விக்ரமராஜன். அவனும் தந்தையை தேடி சென்றவன், "வணங்குகிறேன் அரசே" என்று வணக்கம் தெரிவிக்க, அவனை உற்று நோக்கிய விக்ரமாஜனோ, "யுவராஜா உனக்கு விரைவில் பட்டாபிஷேகம் நடக்க இருக்கின்றது" என்றார் கம்பீரமான குரலில்.

அவனோ, "அறிவேன் அரசே" என்று பதிலளித்து இருக்க, "அதற்கு முதல் உனக்கான விவாகம் நடந்தாக வேண்டும் என்று அரண்மனை ஜோதிடர் உரைத்து இருக்கின்றார்" என்று சொன்ன கணமே அவன் மனதில் நந்திதாவின் முகம் வந்து போனது. ஒரே நாளில் அவனை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தாள் பெண்ணவள். அவன் கனவை குலைக்கும் பொருட்டு, "நமது அரசசபையின் அமைச்சரும் உனது மாமாவுமான வேந்தநாதனின் புதல்வி மித்ரகுமாரியுடன் உன் திருமணத்தை நடத்தலாம் என்று உத்தேசித்து உள்ளேன்" என்று சொல்ல,

அவரை அதிர்ந்து பார்த்த யுவராஜனோ அழுத்தமாக இல்லை என்கின்ற ரீதியில் இருபக்கமும் தலையசைத்தான். விக்ரமாஜனோ, "ஏன் யுவராஜா? மித்ரகுமாரிக்கும் உனக்கும் திருமணம் செய்து வைப்பதாக நான் எனது சகோதரியிடம் வாக்களித்து விட்டேன்" என்றுரைக்க, யுவராஜனோ, "தாங்கள் வாக்களித்ததன் காரணமாக என்னால் என் மனம் கவர்ந்த பெண்ணை விடுத்து வேறு பெண்ணை மணக்க முடியாது" என்று சொன்னவன் கூற்றில் அத்தனை அழுத்தம்.

அவன் சொல்லில் விக்ரமராஜன் திகைத்து தான் போய் விட்டார். மகனை நம்பி வாக்கு கொடுத்து அவர் இருக்க, அவனோ வேறு பெண்ணை அல்லவா மணக்க போவதாக கூறுகின்றான். அவனை வற்புறுத்தியும் விவாகம் செய்து வைக்க முடியாது. சிந்தனையுடனேயே அவனை நோக்கியவர், "உன் மனம் கவர்ந்த பெண் யாரென்று அறிந்து கொள்ளலாமா?" என்று கேட்க, அவனோ மென் புன்னகையுடன், "தாராளமாக!!! தங்கள் அமைச்சர் திருமூலரின் புதல்வி நந்திதா தான் என் மனதை கொள்ளை கொண்ட பேரழகி" என்று கூற அவர் முகம் சற்று நிதானம் அடைந்தது.

எங்கே குலம் தாழ்ந்த பெண்ணை விரும்புகின்றேன் என்று சொல்லி விடுவானோ என்கின்ற ஐயத்தில் இருந்தவருக்கு இது சற்று நிம்மதியாக தான் இருக்க, வேறு வழி இன்றி மகன் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்து இருந்தார் விக்ரமராஜன். அவனும் தந்தையிடம் இருந்து விடைபெற்று பூரிப்புடன் புறப்பட்டு இருந்தான். இதே கணம் தனது அறையில் மஞ்சத்தில் படுத்து இருந்த மித்ரகுமாரியோ, "எத்தனை வருட ஆசையும் கனவும் விரைவில் நிறைவேற போகின்றது" என்று பூரிப்புடன் உரைத்தவளுக்கு இன்று தான் அரசர் யுவராஜனை தனக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக கூறியது செவிகளை எட்டி இருந்தது.

சிறிய வயதில் இருந்தே யுவராஜனை ரசித்தவள் அவள். அவன் திண்ணிய தேகத்தை நினைத்து அவளுக்கு உஷ்ண பெருமூச்சு வெளியேற, "அந்த தேகத்தில் எப்போது நான் குடியேறுவேன்" என்று நினைத்துக் கொண்டவளுக்கு தான் அடுத்த பட்டத்துராணி ஆக போகும் பெருமிதமும் சேர்ந்து இருந்தது.

"ராஜகோட்டையின் அரசி மித்ரகுமாரி" என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவள் இதழ்கள் பூரிப்பில் விரிந்து கொண்ட சமயம், அவள் அன்னை விக்ரமாதேவி கண்ணீருடன் அவள் அறைக்குள் நுழைந்தவர், "நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம்" என்று சொல்ல, பதட்டத்துடன் எழுந்து அமர்ந்த மித்ரகுமாரியோ "என்ன ஆயிற்று தாயே" என்று கேட்டாள். அவரோ ஒரு விம்மலுடன், "இளவரசர் வேறு பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறி விட்டாராம்" என்று சொன்னதுமே அனைத்து கனவுகளும் சில்லு சில்லாக நொறுங்கிய உணர்வு தான் மித்ரகுமாரிக்கு உண்டானது.

அதிர்ச்சியுடன் தாயை நோக்கி வந்தவளோ, "என்ன உளறுகிறீர்கள்" என்று அவர் தோள்களை பற்ற, அவரோ "உளரவில்லை மித்ரா, உண்மையை தான் உரைக்கின்றேன். அரசர் இப்போது தான் விஷயத்தை கூறி மன்னிப்பும் வேண்டினார்" என்று சொல்ல, அவளது முகம் செந்நிறமாகி போனது. கோபம், ஆக்ரோஷம், வலி, வேதனை என்று பல வித உணர்வுகளின் பிடியில் தள்ளாடிய பெண்ணவளோ, "நான் இதனை அனுமதிக்க மாட்டேன்" என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினாள்.

"உன் அனுமதியை யார் வேண்டியது" என்று அக்கணம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தது வேறு யாருமல்ல, அவள் தந்தை வேந்தநாதன் தான். மித்ரகுமாரியோ தந்தையை வெறித்து நோக்க, அவரோ அவளை நோக்கி அடிமேல் அடி வைத்து வந்தவர், "உன் வலி புரிகின்றது மித்ரா, ஆனால் உன்னை திருமணம் செய்ய பிடிக்காத ஒருவரை நீ வலுக்கட்டயமாக திருமணம் செய்ய முடியாது அல்லவா? உன் அழகுக்கு ராஜகுமாரன் தேடி வருவான்" என்று மகளை சாமாதானப்படுத்த முயன்றார் அவர்.

ஆனால் சமாதானம் ஆகி விடும் அளவுக்கு நிதானம் உள்ளவள் அல்லவே அவள். "எனக்கு எந்த ராஜகுமாரனுக்கு வேண்டாம் தந்தையே, யுவராஜன் தான் வேண்டும், இந்த ராஜகோட்டையின் அரசன் தான் வேண்டும்" என்று விழி விரித்து சொன்னவளது குரலே அவள் அழுத்தத்தை உரைத்தது. "இப்போது அரசரை மீறி என்ன செய்திட முடியும்? ஆக வேண்டியதை பார்க்கலாம்" என்று திசைதிருப்பும் முயற்சியில் அவர்,

அவளோ, "இன்னும் திருமணம் நடக்கவில்லை தானே? அதுவரை எனக்கு அவகாசம் இருக்கின்றது அல்லவா? என்று உரைத்தவள் விழிகளில் வன்மம் இழையோடி இருக்க, திகைத்து போன அவள் தாய்க்கும், தந்தைக்கும் என்ன சொல்வது என்றும் தெரியவே இல்லை. தனிமயிலாவது அவள் நிதானமாக சிந்திக்கட்டும் என்னும் எண்ணத்தில் அவளை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் தமது அறைக்குள் புறப்பட்டு இருக்க, அவள் சிந்தனையோ திசை மாறி தான் பயணித்துக் கொண்டு இருந்தது.

அடுத்த நாள் பொழுது புலர்ந்து அரச சபை கூடி இருக்க, விக்ரமராஜனோ சிம்மாசனத்தில் அமர்ந்து அரச சபை விஷயங்களை அலசி ஆராய்ந்து முடித்து இருந்தார். அனைத்தும் முடிய எழுந்தவரோ அங்கே நின்று இருந்த திருமூலரிடம், "அமைச்சரே தங்களிடம் நான் சிறிது தனிப்பட்ட விஷயங்கள் பேச வேண்டும், இன்று மாலை என்னை சந்திக்க வாருங்கள்" என்று சொல்லி விட்டு செல்ல, திருமூலரோ, "என்ன விஷயமாக இருக்கும்?" என்று சிந்தனையில் ஆழ்ந்து தான் விட்டார்.

அன்று மாலை சொன்ன நேரத்துக்கே அரசரை பார்க்க அவர் சென்று இருக்க, அரசரோ, "இந்த எழில் கொஞ்சும் சோலையில் நடந்து கொண்டே பேசலாமே" என்று அழைக்க, அவரும் அரசரை பின் தொடர்ந்தார். அரசரோ, "யுவராஜனுக்கு பட்டாபிஷேகம் நடக்க இருக்கின்றது, அறிவீர் தானே" என்று கேட்க, அவரும், "அறிவேன் அரசே" என்று பதிலளிக்க, அவரோ, "அதற்கு முதல் இளவரசருடைய விவாகம் நடந்தாக வேண்டும், அதற்காக நான் இளவரசரிடம் விவாகம் பற்றி பேசினேன், இளவரசர் மனதில் ஒரு பெண் இருக்கின்றாளாம்" என்று சொல்ல, திருமூலரோ, "சந்தோஷமான விஷயம் அரசே, இளவரசரை விவாகம் செய்ய அந்த பெண் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

அந்த பெண் யாரென்று அறிந்து கொள்ளலாமா?" என்று பவ்வியமாக ஆர்வத்துடன் கேட்டார். அவரை திரும்பி பார்த்து புன்னகைத்த அரசரோ, "தமது புதல்வி அதிகமாக புண்ணியங்கள் செய்து இருப்பாள் போலும்" என்று மறைமுகமாக கேட்டு விட, திகைத்து போன திருமூலரோ வாயில் இரு கைகளையும் வைத்துக் கொண்டவர், "இதனை பற்றி நான் எதுவுமே அறியிலேன் அரசே" என்று சொல்லும் போதே பயத்தில் அவர் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து இருந்தது.

விக்ரமராஜனோ, "எதற்கு இந்த பதட்டம் அமைச்சரே... யுவராஜன் கேட்டு நான் எதையும் மறுத்தது இல்லை, இப்போது உமது புத்திரியை விவாகம் செய்ய கேட்கின்றான். இதற்கு உமது பதில் யாதோ?" என்று கேட்க, அவரோ தாழ்மையாக புன்னகைத்தவர், "என் புதல்வி புண்ணியம் செய்தவள் என்றால் அது எனக்கு சந்தோஷமான விஷயம் தான் அரசே" என்று தனது சம்மதத்தையும் தெரிவித்து விட, அரசரோ, "அப்போது பட்டாபிஷேகம் அன்றே விவாகத்தையும் நடத்தி விடலாம்" என்று சொல்ல, "ஆகட்டும் அரசே" என்று உரைத்து அவர் விடைபெற்று இருந்தார்.

தனது இல்லத்திற்கு வந்தவருக்கோ நிலை கொள்ளவே முடியவில்லை. தனது புத்திரி ராஜ்கோட்டையின் அரசி என்று எண்ணும் போதே அப்படி ஒரு பரவசம். இல்லத்தினுள் நுழைந்ததுமே தனது மனைவியை அழைத்தவர், அங்கே இறைவனுக்கு பூக்களை கோர்த்துக் கொண்டு இருந்த நந்திதாவை ஒரு கணம் பார்த்து விட்டு, "இன்று அரசர் என்னை அழைத்து பேசினார்" என்று சொன்னார்.

அவர் முகத்தில் இருந்த பூரிப்பை கண்ட அவர் மனைவியோ, "தங்கள் இவ்வளவு ஆனந்தமாக இருக்க காரணம் என்ன ஐயனே?" என்று கேட்க, அவரோ, "நமது புதல்வி நந்திதாவை யுவராஜனுக்கு திருமணம் செய்து வைக்க கேட்டு இருக்கின்றார். நமது புதல்வி, இனி ராஜகோட்டையின் அரசி" என்று சொல்ல,

அவர் மனைவியோ சந்தோஷமாக, "நிஜமாவா ஐயனே" என்று கேட்க, இதனைக் கேட்ட நந்திதாவின் முகம் இறுகி போக, அடுத்த கணமே எழுந்தவள், "இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் தந்தையே" என்றாள் அழுத்தமான குரலில். திருமூலருக்கோ தலையில் இடி விழுந்த உணர்வு. "என்ன உளறல் இது?" என்று மகளை கடியும் குரலில் கேட்க, அவளோ, "என் மனதில் வேறு ஒருவர் இருக்கும் போது நான் எப்படி இளவரசரை திருமணம் செய்ய முடியும்?" என்று அடுத்த கேள்வியை கேட்க, மேலும் அதிர்ந்து விட்டார் திருமூலர்.

அவரோ, "உன் மனதில் இருப்பவன், இளவரசரை விட மேன்மையானவனாக இருக்க வாய்ப்பே இல்லை" என்று சொல்ல, அவளோ, "எனக்கு தாங்கள் இந்திரனை மணாளனாக கொண்டு வருவதாக கூறினாலும் என்னுடைய பதில் இது தான்" என்று சொன்னாள். "உன் மனதில் இருப்பவன் யார்?" என்று அவருடைய அடுத்த கேள்வி தொடுக்கப்பட்டு இருக்க,

"தளபதியார் கீர்த்திவர்மனின் புதல்வன் ராமவர்மன்" என்றுரைத்தாள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு. வேறு யாரும் என்றால் மிரட்டியாவது காரியத்தை சாதித்து இருப்பார் திருமூலர். தளபதியாரின் மகனை மிரட்ட முடியுமா? மேலும் அவர் நெருங்கிய நண்பர் அல்லவா தளபதியார். சற்றே அதிர்ந்தாலும் அதனை காட்டிக் கொள்ளாமல், ஏளனமாக நகைத்தவர், "சிம்மசனத்தில் இருக்கும் வாய்ப்பை விடுத்து, கை கட்டி வேலை பார்ப்பவனின் மனைவியாக ஆசை படுகிறாயா?" என்று கேட்க,

அவளோ, "தாங்கள் எள்ளி நகையாடினாலும் எனது முடிவு இது தான் தந்தையே" என்று சொல்ல, அவரோ, "எனது முடிவையும் கேட்டுக் கொள், நீ இந்த விவாகத்துக்கு சம்மதிக்கும் வரை நான் ஆகாரம் உண்ண போவது இல்லை, அப்படியே சமாதி ஆகி விடுகிறேன்… அரசரிடம் கொடுத்த வாக்கை காப்பற்ற முடியாமல் தோற்று விட்ட எனக்கு அதுவே முடிவு" என்று சொல்லி வேகமாக தனது அறைக்குள் புகுந்து கதவை தாழிட, திகைத்து விட்டாள் நந்திதா. "தந்தையே" என்று அவள் அழைத்த போதும், "ஐயனே" என்று அவர் மனைவி கதறிய போதுமே கதவு திறக்கப்படவே இல்லை.

அன்று முழுதும் அவர் ஆகாரம் உண்ணவே இல்லை. அவளோ கதறி பார்த்தும் பலன் இல்லாமல் போக, அடுத்த நாள் பொழுது புலர்ந்ததுமே சந்திக்க சென்று இருந்தாள் ராமவர்மனை. அவன் காலையில் அருவியில் ஸ்நானம் செய்து விட்டு குதிரையை நோக்கி நடந்து சென்ற கணம் அவனை மறித்தபடி நின்று இருந்தாள் நந்திதா. அவள் அழகில் மயங்கி அவளிடம் காதலை ராமவர்மன் உரைத்து இருக்க, அவளும் சம்மதித்து இருந்தாள். அடிக்கடி சந்திப்பு நிகழவில்லை என்றாலும் விழிகளால் பார்த்தே காதலை வளர்த்தவர்கள் அவர்கள்.

இன்று தன் முன்னே வந்து நின்றவளை விழி விரித்து பார்த்தவனோ, "என்னை சந்திக்க வந்த காரணம்?" என்று கேட்க, அவளோ, "என்ன ஆயிற்று தெரியுமா" என்று நடந்ததை ஒன்று விடாமல் உரைக்க, அவனோ அனைத்தையுமே இறுகிய முகத்தில் கேட்டுக் கொண்டே இருந்தவன், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று தான் கேட்டான். நந்திதாவோ, "என்ன கேள்வி இது? தங்களிடம் மனதை பறிகொடுத்தவள் நான்… என்னால் வேறு ஒருவரை திருமணம் செய்யவே முடியாது, இதற்கு தாங்கள் தான் ஏதாவது முடிவை உரைக்க வேண்டும்" என்று சொல்ல,

அவனோ அவள் விழிகளை நோக்கியவன், "உன் தந்தை இறந்து விட்டால் உனக்கு பிரச்சனை இல்லையா?" என்று கேட்க, "என்ன உளறுகிறீர்கள்" என்று பதறிவிட்டாள் அவள். அவனோ வெகு நிதானமாக, "உன் தந்தை உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இளவரசரை மணந்து கொள்" என்று கூறி விட்டு நகர போக, "அப்போது நம் காதல்?" என்றாள் அவள். அவனோ ஒரே வார்த்தையில், "மறந்து விடு" என்று உரைக்க நொறுங்கி போனவளோ, "உங்கள் இளவரசருக்கு என்னை விட்டு தர பார்க்கிறீர்களா?" என்று அவன் மனதில் இருந்ததை உடைத்து விட,

கண்களை மூடி திறந்து கொண்டே அவளை திரும்பி பார்த்தவன், "அப்படியும் வைத்துக் கொள்ளலாம்" என்று சொல்லி அவள் மனதை வதைத்து இருந்தான். அவள் கண்களோ கலங்கி போக, "நான் உங்களை திருமணம் செய்து இருந்து, இளவரசர் என் மீது ஆசைப்பட்டால் என்னை விட்டு கொடுத்து விடுவீர்களா?" என்று வலிக்கும் கேள்வியை அவனை நோக்கி வீச, அவன் கோபப்படாமல் இதழ் பிரித்து சிரித்தவன், "இளவரசர் ஒன்றும் தரம் தாழ்ந்தவர் அல்ல நந்திதா" என்று சொல்லிக் கொண்டே தனது அசுவத்தில் பாய்ந்து ஏற அது உயர் வேகத்தில் கிளம்பியது. அவனது அசுவத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்த நந்திதாவின் விழிகளில் இருந்த கண்ணீர் இப்போது அவள் கன்னத்தை நனைத்து இருந்தது.

கண்களை துடைத்துக் கொண்டே வேகமாக வீட்டை நோக்கி சென்றவளோ தனது தந்தையின் அறையின் முன்னே வந்து நின்று, "விவாகத்துக்கு சம்மதிக்கிறேன் தந்தையே" என்று சொன்ன அடுத்த கணமே கதவை புன்னகையுடன் திறந்த திருமூலரோ புதல்வியை அணைத்துக் கொண்டார்.

இந்த விவாகத்தினால் யுவராஜனுக்கு பூரிப்பும், நந்திதாவுக்கும் ராமவர்மனுக்கும் வலியும் இருக்க, மித்ரகுமாரியோ கோபத்தில் தகித்துக் கொண்டு இருந்தாள்.
 
Waiting for next epi sis
 
Top