ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 24

pommu

Administrator
Staff member

வேல்விழி 24

இந்த சம்பவத்துக்கு பிறகு நந்திதாவுக்கு தான் நிலை கொள்ளவே முடியவே இல்லை. படுத்தாலும், எழுந்தாலும் அதே எண்ணம் வர சாப்பிட கூட மறந்து தான் போனாள். அதுவரை நந்திதா தான் முட்டாள் தனமாக யோசிக்கிறாள் என்று எண்ணிய யுவராஜ்ஜூக்கு கூட இந்த விஷயம் உறுத்தலாக இருக்க, ஸ்ரீயிடம் ஷூட்டிங் முடிய மனம் விட்டு பேசினான்.

ஸ்ரீயோ, "அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பு இல்ல டா, நீ சொன்ன போல நான் ஜெய்யை பார்த்து பேசிட்டு வந்திட்டேன், இன்னைக்கே விசாரணையை ஆரம்பிக்கிறதா சொல்லி இருக்கார். சி.சி.டி.வி ல பார்த்தா தெரிஞ்சிட போகுது, அதுக்கப்புறம் அடுத்த ஸ்டெப் பத்தி பார்க்கலாம்" என்று சொல்ல, யுவராஜ்ஜூம், "ம்ம்" என்று சம்மதமாக தலையாட்டிக் கொண்டான்.

இதே சமயம், நந்திதா சென்ற புடவைக் கடைக்குள் நுழைந்து இருந்தான் ஜெய். அவனைக் கண்டதுமே மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்ற கடை முதலாளியோ, "சொல்லுங்க சார்" என்று சொல்ல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "கொஞ்சம் தனியா பேசலாமா சார்" என்று அழைத்து சென்றான். அவரும் தனது பிரத்தியேக அறைக்குள் அழைத்து செல்ல, "இங்க தானே ஆக்டர் யுவராஜ் ஓட மனைவி சமீபத்துல புடவை எடுத்தாங்க?" என்று கேட்க, அவருக்கும் பிரபலம் என்பதால் ஆணி அடித்த போல நினைவிருக்க, "ஆமா சார்" என்றார்.

அவனோ, "இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் சார், அவங்களுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு… இங்க வச்சு தான் அவரோட ஹாண்ட் பேக்ல வைக்கப்பட்டு இருக்கணும், கொஞ்சம் உங்க சி.சி.டி.வி யை பார்க்கலாமா?" என்று கேட்க, அவரும், "ம்ம் இருங்க" என்று சொல்லிக் கொண்டே தனது உதவியாளரிடம் சி.சி.டி.வி ரெக்கார்டுகளை கொடுக்க சொல்லி உத்தரவு இட்டார்.

ஜெய்யும் அங்கே வைத்து அலசி ஆராய நேரம் இல்லாமல் அனைத்தையும் எடுத்து பென் ட்ரைவில் போட்டவன், "தான்க் யூ சார்" என்று கையை குலுக்கி விட்டு புறப்பட்டு வாசலுக்கு வந்த நேரம் அவன் போன் அலறியது. மறுமுனையில் எடுத்து இருந்தது வேறு யாருமல்ல அவன் மனைவி தான். "என்னங்க, அத்தைக்கு நெஞ்சு வலின்னு ஹாஸ்பிடல் கொண்டு போறேன்" என்று சொல்ல,

அவனோ பதட்டமாக, "எந்த ஹாஸ்பிடல்" என்று கேட்டுக் கொண்டே அங்கே விரைந்து இருந்தான். இதே சமயம் பிறந்த நாள் ஏற்பாடு எல்லாமே கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்க, அதற்காக அவன் ஆயத்தப்படுத்தி இருந்த அவனது பிரத்தியேக கெஸ்ட் ஹவுஸ் அலங்காரங்கள் நடுவே ஜொலிக்க ஆரம்பித்து இருந்தது. இதே சமயம் ராமும் அவன் வீட்டில் இருந்து புறப்பட்டு, யுவராஜ் ஆயத்தப்படுத்தி இருந்த ஹோட்டலில் தங்கி இருந்தவனோ, "எப்படி யுவராஜ்ஜை காண்டாக்ட் பண்ணுறது? பிசியா இருப்பானோ" என்கின்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டே இருந்தது.

இதே சமயம், கெஸ்ட் ஹவுசில் அலங்காரங்களை பார்த்துக் கொண்டு இருந்த நந்திதாவை நோக்கி வந்த அவளுக்கு துணையாக இருக்கும் பெண்ணோ, "மேடம் வாசலில பைக்ல வந்த ஒருத்தங்க இத உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க" என்று சொல்ல, அவளோ, "யாரு?" என்று கேட்க, அந்த பெண்ணோ, "தெரியல மேடம், ஹெல்மெட் போட்டு இருந்தாங்க" என்று சொல்ல, அவளும் யோசனையாக, "ம்ம் சரி நான் பார்த்துகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அந்த கடிதத்தை பிரித்தாள்.

அதிலோ, "இந்த மித்ராவை சந்திக்க விரும்புனா ஹில்டன் ஹோட்டல் ரூம் நம்பர் 224 க்கு தனியா வா நந்திதா" என்று இருக்க, அவள் முகமோ வெளிறிப் போனது. அவளுக்கோ மீண்டும் மீண்டும் குழந்தையை பற்றி பேசிய எண்ணம் வர, "நேரில் சந்தித்து பேசி தீர்த்து கொண்டால் என்ன? யுவராஜா தான் அவளுக்கு வேணும்னா நான் அவரை விட்டு விலக கூட தயார்" என்று நினைத்துக் கொண்டவள், எதையும் பற்றி யோசிக்காமல் காரை எடுத்துக் கொண்டு தனியாக புறப்பட்டு இருந்தாள். அவளுக்கு எதையும் யோசித்து செய்யும் மன நிலையும் இருக்கவே இல்லை.

இதே சமயம், முக்கியமான காட்சியை நடித்துக் கொடுத்து விட்டு கேரவேனுக்குள் இருந்த யுவராஜ்ஜை தேடி வந்த ஸ்ரீயோ, "யுவா, இன்னைக்கு ஹில்டன் ஹோட்டல் ல உனக்கு கெஸ்ட் இன்விடேஷன் இருக்கு… லன்ச்சுக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க" என்று சொல்ல, அவனோ, நெற்றியை நீவியவன், "ஆமால மறந்தே போயிட்டேன்… ரெடி ஆகிட்டு வரேன் கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே ஆயத்தமானவன் சற்று நேரத்திலேயே கிளம்பி விட்டான்.

அவர்கள் வண்டியோ ஹோட்டல் வாசலில் நிற்க, அதில் இருந்து இறங்கியவன் கண்களோ அருகே பார்க் செய்யப்பட்டு இருந்த நந்திதாவின் வண்டியின் பதிய, "இவ எங்க இங்க வந்தா?" என்று நினைத்துக் கொண்டே உள்ளே திரும்பிப் பார்க்க, அவன் கண்ணுக்கோ லிப்ட்டில் ஏறிக் கொண்டு இருந்த நந்திதா தான் தென்பட்டாள். அவனும் புரியாமல் உள்ளே நுழைய, "வெல்கம் சார்" என்று அவனுக்கு கரத்தை கொடுத்து முதலாளி வரவேற்க, அவனும் கையை கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தான்.

அவன் கண்டிப்பாக சொன்ன காரணத்தினால் அவரை தவிர யாரும் அங்கே வரவேற்க நிற்கவே இல்லை. அவனுக்கு தான் ரசிகர்களை சந்திக்கும் மனநிலை இல்லை அல்லவா? அவனோ ஸ்ரீயிடம், "டேய் நீ உள்ள போ நான் வரேன், காட்ஸ் ஸ்டெ ஹியர்" என்று காவலாளிகளிடமும் சொல்லிக் கொண்டே வேகமாக லிப்டை நோக்கி செல்ல,

ஸ்ரீயோ, யோசனையாக அவன் முதுகை வெறித்து விட்டு, "தெரிஞ்சவங்கள சந்திக்க போறார்" என்று சொன்னான் யுவராஜை பற்றி. அவரோ, "வாட்? சாருக்கு தெரிஞ்சவங்க இங்க இருக்காங்களா? சொல்லி இருந்தா ஸ்பெஷல் ஆஹ் கவனிச்சு இருப்போமே" என்று சொல்ல, ஸ்ரீயும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்தே சாமாளித்தான். இதே சமயம் சன்க்ளாஸ் ஷார்ட்ஸ் என்று லிப்டுக்குள் ஏறியவனை கண்டு கொண்ட அருகே இருந்த பெண்ணோ, "சார் நீங்களா?" என்று கேட்டு அவனை செல்பீ எடுத்து ஒரு வழி பண்ணி இருக்க, அவனுக்கோ போதும் போதும் என்று ஆகி இருந்தது.

இதே சமயம், அறை எண் 224 இன் கதவை தட்டிக் கொண்டு நின்று இருந்தாள் நந்திதா. உள்ளே இருந்தது வேறு யாருமல்ல ராம் தான். அவனோ, "கமின்" என்று சொல்ல, கதவை திறந்து கொண்டே உள்ளே சென்றவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. அங்கே கட்டிலில் படுத்து இருந்த ராமோ பதறி எழுந்தவன், "நந்து நீயா? நான் ரூம் சர்விஸ்ன்னு தானே நினச்சேன்" என்று சொல்ல, அவளோ அவனை விழி விரித்து பார்த்தவள், "ராம் நீங்களா?" என்று கேட்டுக் கொண்டே அதிர்ச்சியாக கையில் இருந்த கடிதத்தை நீட்ட, அதனை வாங்கி வாசித்தவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

"என்னது மித்ரா பிறந்து இருக்காளா?" என்று கேட்க, அவளோ கலங்கிய கண்களுடன், "பயமா இருக்கு ராம்… அன்னைக்கு என்னாச்சு தெரியுமா?" என்று கேட்டு நடந்ததை சொன்னவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்கின்ற பதட்டத்தில் விம்மி விம்மி அழுதவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.

முகத்தினை மூடி அழுதவளோ நிலை தடுமாற, ராம் உடனே அவள் கீழே விழாமல் இடையினை பிடிக்க, அவன் மார்பில் நிலை இன்று அவள் சரிந்து கொண்ட கணத்தில் அந்த அறையை தாண்டி சென்ற யுவராஜ்ஜூக்கு அவள் அழுகை சத்தம் கேட்டது. "இது நந்திதா குரல் தானே" என்று யோசித்துக் கொண்டே அந்த அறை வாயிலை பார்க்க, கதவோ மூடாமல் மெலிதாக திறந்து இருக்க, கதவை யோசனையாக திறந்து கொண்டே உள்ளே சென்றவன் கண்ணுக்கு தெரிந்தது என்னவோ ராமும் அவன் மார்பில் சாய்ந்து நின்ற நந்திதாவும் தான்.

யுவராஜ்ஜோ மார்புக்கு குறுக்காக ஒரு கையை கட்டிக் கொண்டு அடுத்த கையால் நாடியை நீவிக் கொண்டே இருவரையும் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் ஆழ்ந்து பார்த்தவனோ, "க்கும்" என்று குரலை செரும சட்டென அவனை நோக்கி திரும்பிய ராமின் விழிகள் அதிர்ச்சியிலும் பயத்திலும் மேலும் விரிந்து கொண்டன.

ராமும் நந்திதாவும் சட்டென விலகியவர்கள் அவனை அதிர்ந்து பார்க்க, நந்திதாவோ, "இல்ல நான்" என்று தடுமாற ஆரம்பித்து இருந்தாள். ராமும் அந்த சந்தர்ப்பத்தில் பேச முடியாமல் வாயடைத்துப் போக, பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டே அவர்களை நோக்கி வந்தவனோ ராமிடம், "ஒரே ஒரு கேள்வி ராம்" என்றான் அழுத்தமான குரலில்.

அவனும் எச்சிலை விழுங்கிக் கொண்டே, "கேளுங்க" என்க, "உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு வச்சுக்கோ, உன் நுனி விரல் கூட உன் பொண்டாட்டி மேல பட விடுறா இல்ல ஆனா அவளோட பழைய காதலனை கட்டி பிடிச்சிட்டு ஒரு ரூமுக்குள்ள நிக்கிறா... நீ என்ன நினைப்ப?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க, அவனோ பேச்சு வராமல் மௌனித்து போனான்.

ஆழ்ந்த மூச்செடுத்தவன், "ஆனா எந்த தப்பான எண்ணத்துலயும் அவ என் மேல சாயல சார், விழ போனா பிடிச்சுக்கிட்டேன் அவ்ளோ தான்" என்று சொல்ல, அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு அருகே நின்ற நந்திதாவைப் பார்த்தவன், "டைவர்ஸ் வேணுமா?" என்று கேட்டான். அவளோ ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள் அவனை மேலும் அதிர்ந்து பார்க்க,

அவனோ, "நீ தானே கேட்ட" என்று சொன்னவன் குரலில் ஆதங்கம் இருந்தது என்னவோ உண்மை தான். அவளோ, "அது குழந்தைக்காக கேட்டேன்… நீங்க நினைக்கிற போல இல்ல" என்று சொன்னவளுக்கு தன்னை நிரூபித்து விடும் அவசரம். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கூட வழிய, அவனோ இதழ் குவித்து ஊதியவன், "எதுக்கெடுத்தாலும் அழாதடி, நான் ஒண்ணும் உன்னை சந்தேகப்படல, கதவு திறந்துட்டு கட்டிபுடிச்சிட்டு யாரும் நிற்க மாட்டாங்க,

தப்பு பண்ணுறவங்க முதலில சேஃப்டி தான் பார்ப்பாங்க, நீ கதவை மூடிட்டு நின்னு இருந்தாலும் நான் சந்தேகப்பட்டு இருக்க மாட்டேன்... மறுபடி என்னால ஜென்மம் ஜென்மமா தண்டனை அனுபவிக்க முடியாது" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே கூறியவன், அவள் பதிலளிக்க முதல் பார்வையை ராம் பக்கமாக திருப்பி, "நீ என்னடா இங்க? வந்தது நல்லதுக்கு தான், நான் கூட மறந்தே போயிட்டேன், நாளை மறுநாள் என் பொண்ணோட பேர்த் டே, வந்திடு" என்று சொல்லிக் கொண்டே நெற்றியை நீவியவன், "இன்விடேஷன் பாஸ் இல்லடா, ஆஹ் நந்திதா உன் கிட்ட இருக்கா?" என்று கேட்டான்.

அவளோ அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, இல்லை என்று தலையாட்ட, "சரி விடு, நான் ஸ்ரீ கிட்ட கொடுத்து அனுப்புறேன்" என்று பேசிக் கொண்டு இருந்தவனை இமைக்காமல் அதிர்ந்து பார்த்த ராமோ, "சார்" என்றான் அதிர்ச்சியாக. யுவராஜ்ஜூம் பேசுவதை நிறுத்தி விட்டு அவனை புருவம் சுருக்கிப் பார்க்க,

அவனோ சட்டென்று அருகே இருந்த பையினை திறந்து அவனிடம் வந்த கார்டை எடுத்து நீட்ட, புருவம் சுருக்கியபடி அதனை வாங்கிப் பார்த்தான் யுவராஜ். அவன் அடித்த அதே கார்ட், பாஸ் என்று அனைத்தும் இருக்க, அவன் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. அடுத்த கணமே, "இது எப்படி உனக்கு வந்திச்சு? நான் அனுப்பலையே" என்று சொல்லிக் கொண்டே ராமையும் நந்திதாவையும் அதிர்ந்து பார்க்க, அதே அதிர்ச்சி தான் அவர்கள் முகத்திலும்.

நந்திதாவோ, "நானும் அனுப்பல, எனக்கு இவர் இங்க இருக்காருன்னே தெரியாது" என்று சொல்லிக் கொண்டே பையில் இருந்த சற்று முன் அவளுக்கு வந்த கடிதத்தை தூக்கி காட்டினாள். அதிலோ அவளை இந்த அறைக்குள் வர சொல்லி அழைத்து இருக்க, அதிர்ச்சியுடன் அந்த கடிதத்தை பார்த்துக் கொண்டே அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தவனோ, "நம்மள வச்சு யாரோ விளையாடுறாங்க" என்றான் யோசனையுடன்.

நந்திதாவோ, "யாரோ இல்ல உங்க மித்ரா தான்" என்று சொல்ல, அவளை முறைத்தவன், "அதென்னடி என் மித்ரா? சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ" என்றான். அவளும் சளைக்காமல், "அது தான் நீங்க வேணும்னு இந்த லெவல் கு இறங்கி வேலை பார்க்கிறா... அப்படி என்ன தான் உங்க கிட்ட இருக்கோ" என்றாள் கடுப்பாக. அவனோ அவளை அனல் தெறிக்க பார்த்தவன், "என் கிட்ட என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதா?" என்க,

ராமோ குரலை செருமி தனது இருப்பைக் காட்ட, மீதி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே கண்களை மூடி தலையை கோதிக் கொண்டான் யுவராஜ். நந்திதாவோ அவனை முறைத்துக் கொண்டே ராம் முன்னால் பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கிக் கொள்ள, ராமோ, "இந்த பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு பேசலாமா?" என்று கேட்டான்.

யுவராஜ்ஜோ, "முதலில யார் இந்த மித்ரான்னு கண்டு பிடிச்சாகணும்” என்று சொல்ல, நந்திதாவோ, "எதுக்கு? சேர்ந்து வாழ போறீங்களா?" என்று கேட்க, அவனோ ஆக்ரோஷமாக எழுந்தவன் சுற்றும் முற்றும் அவசரமாக தேடிக் கொண்டே அங்கே இருந்த சிலையை தூக்கி விட்டான் அவள் தலையில் போடுவதற்கு. அவளோ, அவனை அதிர்ந்து பார்க்க, "இன்னொரு தடவை வாய திறந்த, உன்னை சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ" என்று அதனை ஓங்கியபடி சொல்ல,

ராமோ அவன் பின்னால் வந்து யுவராஜ்ஜை இழுத்து எடுத்தவன், "என்ன சார் இதெல்லாம்?" என்று கேட்டான். யுவராஜ்ஜோ, "விடு" என்று அவன் கையை அகற்றி விட்டு பெருமூச்சுடன் சிலையை இருந்த இடத்தில் வைத்தவன், "எப்படி பேசுறா பாரு" என்றான் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே. நந்திதாவோ, "அப்போ என்னை சாக வைக்க ரெடி ஆயிட்டிங்க, அப்போ தானே அவ கூட வாழலாம்" என்று சொல்ல, யுவராஜ்ஜோ ராமை திரும்பி பார்த்தவன், "பார்த்தியா?" என்னும் தோரணையில் கண்களை காட்ட,

ராமோ, "புரியுது சார் உங்க மனநிலை" என்று சொல்லிக் கொண்டே நந்திதாவை பார்த்தவன், "கொஞ்சம் சும்மா இரு நந்திதா, எனக்கே நீ பேசுறத கேட்டா கோபம் வருது" என்று சொல்ல, நந்திதாவோ, "கடைசில ராமையும் மயக்கிடீங்களா? இவ்ளோ நேரம் என் பக்கம் தானே பேசிட்டு இருந்தார், இப்போ உங்க பக்கம் பேசுறார்" என்று சொன்னாள்

கலங்கிய கண்களுடன். யுவராஜ்ஜோ, "அவனை மயக்கி நான் என்னடி பண்ணுறது? இப்போ எதுக்கு லூசு போல பேசிட்டே இருக்க" என்று கடுப்பாகி போனவனோ, கழுத்தை வருடிக் கொண்டே மீண்டும் அமர்ந்து விட்டான். ராமோ, "நந்து கொஞ்சம் சும்மா இரு, இது யார்னு முதல் கண்டு பிடிக்கணும்" என்று சொல்ல, அவளோ, "புரியுது ராம், கண்டு தான் பிடிக்கணும், ஆனா இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?

அவ பின்னாடியே போயிடுவார்… உங்களுக்கு தெரியாது ராம் எப்போ பார்த்தாலும் பின்னாடி பொண்ணுங்க தான் வர்றாங்க, எரிச்சலா இருக்கு, ஒரு போட்டோ எங்கயாவது போட்டா போதும், ஐ லவ் யூ, யூ ஆர் ஹாட், மண்ணாங்கட்டின்னு அவ்ளோ கமெண்ட்ஸ் வரும்" என்று சொன்னவளோ கண்களை துடைத்துக் கொண்டே, அவளையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜ்ஜைப் பார்த்தவள், "எனக்கு புரியுது, இது தான் சினிமா பீல்ட், இப்படி தான் இருக்கும்னு, ஆனா ரொம்ப இன்செக்கியோர்ட் ஆஹ் பீல் பண்ணுறேன்… பயமா இருக்கு,

என் குழந்தைக்கு ஏதும் ஆயிடுமோன்னு வேற பதட்டமா இருக்கு, நான் லூசு போல பேசுறேன்னு தோணலாம்… ஜஸ்ட் என் இடத்தில இருந்து யோசிச்சு பாருங்க" என்று சொன்னவளோ அழுதபடியே அங்கே இருக்கும் இருக்கையில் அமர, அவளை யுவராஜ்ஜூம் ராமும் பரிதாபமாக தான் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
 
என் குழந்தைக்கு ஏதும் ஆயிடுமோன்னு வேற பதட்டமா இருக்கு, நான் லூசு போல பேசுறேன்னு தோணலாம்… ஜஸ்ட் என்su இடத்தில இருந்து யோசிச்சு பாருங்க" என்று சொன்னவளோ அழுதபடியே அங்கே இருக்கும் இருக்கையில் அமர, அவளை யுவராஜ்ஜூம் ராமும் பரிதாபமாக தான் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
 
Top