ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 28

pommu

Administrator
Staff member

வேல்விழி 28

அவர்கள் வீட்டில் இருக்கும் யுவராஜ் நந்திதாவின் பெரிய திருமண புகைப்படத்தில் யாருக்கும் தெரியாமல் முத்தம் பதிப்பாள். புகைப்படத்தில் இருக்கும் நந்திதாவின் முகத்தில் கம்பியால் கீறல்களை உண்டாக்கி, குழந்தை உண்டாக்கியதாக கூறி வேறு இருந்தாள்.

இதற்கு மேல் ரேகாவும் பொறுமை இழந்து இருக்க, நந்திதாவை கடத்தி வந்து கொன்று விட்டால் தனது தடைகள் நீங்கி விடும் என்று நினைத்தவளோ, நந்திதாவை அழைக்க வரும் போதே நந்திதா இருக்கவில்லை என்று சொல்வதற்கு ஏற்ப கதை எல்லாம் தயாரித்து வைத்து இருந்தாள். அவள் துரதிஷ்டம் அந்த திட்டம் ஜெய்யினால் தவிடு பொடி ஆனது.

வீட்டுக்கு வந்து நந்திதாவை அழைத்து செல்ல எத்தனித்தவள், அவள் காரில் ஏறியதும் மயக்க மருந்தை அடிக்க, அவளும் காரில் குழந்தையுடன் மயங்கி விட்டாள். குழந்தையும் ஸ்ப்ரேயின் வீரியத்தால் மயங்கி இருக்க, மெதுவாக கண் விழித்த நந்திதாவுக்கு நிதானம் வரவே இல்லை. அரை மயக்கத்திலேயே, "எங்க அண்ணி கொண்டு போறீங்க?" என்று கேட்க, ரேகாவோ, "அண்ணி இல்லடி மித்ரா, இந்த ஜென்மத்திலயும் என் யுவராஜன் கூட வாழலாம்னு நினைக்கிறியா? உன்னை கொன்னுட்டு உன் இடத்துக்கு நான் வருவேன்” என்று ஆக்ரோஷமாக சொல்ல சற்று பதறி தான் போனாள் நந்திதா. ஆனால் அதனை காட்ட

முடியாமல் மயக்கமாக இருக்க, "என்னை என்னவாவது பண்ணிக்கோ, என் குழந்தையை விட்ரு" என்று தட்டு தடுமாறி சொன்னவளுக்கு அழவும் முடியவில்லை, மயக்கத்தில் இருக்கும் குழந்தையை அணைக்கவும் முடியவில்லை. அவள் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. ரேகாவோ, "இந்த சனியனையும் உன்னையும் விடவே மாட்டேன்… இன்னைக்கு ரெண்டு பேருக்கும் சமாதி கட்டணும்.

அப்புறம் உன் அண்ணாவுக்கும் எனக்கு பிறந்த சனியனுக்கும் சமாதி கட்டணும், அதுக்கு பிறகு தான் யுவராஜ் கூட நான் சந்தோஷமா வாழ முடியும்" என்று சொல்ல, நந்திதாவுக்கோ, "என்ன பெண் இவள்? பெற்ற குழந்தையை கூட உடல் ஆசைக்காக கொள்ள துணிந்து விட்டாளே" என்று தான் தோன்றியது. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில், "என் குழந்தையை விடு" என்று மட்டும் தான் புலம்ப முடிந்தது.

இதே சமயம், நந்திதாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று கூறி பிறந்தநாள் விழாவை நிறுத்தி ஆட்களை அனுப்பிக் கொண்டு இருந்தார்கள் நீலாம்பரியும் ஸ்ரீயும்… அனைவர்க்கும் தடுமாற்றமான நிலை தான் இருந்தது. என்ன நடக்கின்றது என்றும் புரியவே இல்லை. அனைவரும் சென்றால் தான் இதனை பற்றி பேச முடியும் என்பதால் அமைதியாகவே யுவராஜ் சொன்னதை செய்து கொண்டு இருக்க, அப்போது தான் விஷ்வா ரேகாவை தேடினான்.

அவள் இருந்த அடையாளமே இல்லாமல் இருக்க, அவளுக்கு அழைத்தால் அவளும் போனை எடுக்கவே இல்லை. இதே சமயம், ரேகாவின் கார் எண்ணை யுவராஜ்ஜிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஜெய்யோ, அதனை டிராஃபிக் போலீசிடம் கொடுத்து ட்ரேஸ் பண்ண சொல்லிக் கொண்டே யுவராஜ்ஜின் வீட்டுக்கு இரு போலீசாருடன் விரைந்து இருந்தான். யுவராஜ்ஜோ வீட்டுக்கு விரைந்தவன், அங்கே நின்ற காவலாளியிடம், "எந்த பக்கம் நந்திதாவை ஏத்திட்டு கார் போச்சு?" என்று கேட்க,

அவனும், "இந்த பக்கம் சார்" என்று வழியை காட்ட, உடனே ஜெய்க்கு அழைத்தவன், "வீட்டுக்கு வந்து யூஸ் இல்ல ஜெய், எங்க கொண்டு போய் இருக்கான்னு பார்க்கணும்" என்று சொல்ல, ஜெய்யும், "அத தான் நானும் சொல்ல நினைச்சேன், இப்போ தான் டிராஃபிக் போலீஸ் கிட்ட இருந்து இன்போர்மேஷன் வந்திச்சு… பறங்கி மலை ரோட்ல கார் போறதா சொன்னாங்க” என்று சொன்னதும், "நானும் போறேன் நீயும் வா" என்று அவசரமாக யுவராஜ் சொன்னான்.

ஜெய்யோ, "தனியா இந்த நைட்ல போக போறியா? பாடி காட்ஸ் இருக்காங்களா?" என்று கேட்க, அவனோ, "ஜெய் அண்டர்ஸ்டாண்ட், கொஞ்சம் கூட டைம் இல்ல, எனக்கு என் நந்திதா வேணும்" என்று சத்தமாக சொல்லி விட்டு போனை வைத்தவன், ஜெய் சொன்ன பாதையை நோக்கி வண்டியை செலுத்தினான்.

யுவராஜ்ஜின் இதயமோ வேகமாக துடித்துக் கொண்டே இருக்க, "அவளுக்கு ஒன்னும் ஆக கூடாது" என்று தான் நினைத்துக் கொண்டு உயர் வேகத்தில் வண்டியை செலுத்தினான்.

இதே சமயம், கெஸ்ட் ஹவுசில் இருந்து ஆட்களை அனுப்பி விட்டு, யுவராஜ் மற்றும் நந்திதாவின் குடும்பமும் நண்பர்களும் வீட்டை நோக்கி விரைந்தார்கள். யுவராஜ், நந்திதா, ரேகா என்று யாருக்கு அழைத்தாலும் பதில் வராமல் இருக்க பயந்து தான் போனார்கள்.

இதே சமயம், மலை உச்சியை அடைந்த ரேகாவுக்கோ தன்னை தேடி ஆட்கள் வருவது தெரியாமல் இருக்க சாவகாசமாக தான் வண்டியை ஓட்டினாள். அதுவே யுவராஜ் மற்றும் ஜெய்க்கு வசதியாகி விட அவர்கள் வண்டியும் மலை உச்சியை நெருங்கி இருந்தது. காரை அங்கே நிறுத்தி விட்டு இறங்கிய ரேகாவோ, "முதலில உன்னை தள்ளி விடுறேன், அப்புறம் இந்த சனியனை தூக்கி போடுறேன்" என்று சொல்லிக் கொண்டே அவளை மட்டும் இழுத்து எடுக்க, குழந்தையோ மயக்கத்திலேயே காரினுள் இருந்தது.

அவளோ, "என் குழந்தை" என்று அரை மயக்கத்தில் கத்தியவளுக்கு நடக்கவும் முடியாமல் இருக்க, அவளை கஷ்டப்பட்டு தள்ளி விடும் பொருட்டு உச்சிக்கு அழைத்து சென்றது என்னவோ ரேகா தான். உச்சியில் வைத்து தள்ளி விடும் இடத்துக்கு வந்து சேர்ந்த நேரமே அங்கே யுவராஜ்ஜின் காரும் ஜெய்யின் ஜீப்பும் ஒரே நேரத்தில் வந்து சேர, ரேகா சற்று அதிர்ந்து தான் போனாள்.

நந்திதாவோ அரை மயக்கத்திலேயே, "என் யுவா உன்னை சும்மா விட மாட்டார்" என்று சொல்ல, "வாய மூடுடி" என்று சொன்ன ரேகா, "பக்கத்தில வந்தா இவளை தள்ளி விடுவேன்" என்று சத்தமாக கத்த, யுவராஜ்ஜோ, "அவளை விடு ரேகா" என்று தழு தழுத்த குரலில் கேட்க, ஜெய்யோ, பாக்கெட்டில் இருந்து பிஸ்டலை வாகனங்களில் வெளிச்சத்தில் தெரிந்த அவர்களை நோக்கி நீட்டியவன், "நந்திதாவை விடு" என்று சீறினான்.

ரேகாவுக்கோ இதற்கு மேல் தப்பிக்க முடியாது என்று தெளிவாக தெரிய, "நான் செத்தாலும் பரவாயில்லை, இவளை வாழ விட மாட்டேன்… எனக்கு யுவராஜ் வேணும்" என்று கத்த, யுவராஜ்ஜோ, "உனக்கென்ன பைத்தியமா? உன் மேல ஆக்ஷன் எடுக்காம உன்னை காப்பாத்துறேன், ப்ளீஸ் அவளை விடு" என்று கெஞ்ச, "அதெல்லாம் முடியாது, எனக்கு நீ தான் வேணும்" என்றாள்.

ஜெய்யோ, "என்னடா குடும்ப பிரச்சனையா?" என்று கேட்க, அவனோ, "இது வேற பிரச்சனை ஜெய், நான் உன் கிட்ட அப்புறம் சொல்றேன், நந்திதாவை காப்பாத்து ப்ளீஸ்" என்று சொல்ல, அவனோ, "நான் கிட்ட போனா தள்ளி விட்ருவாளோன்னு பயமா இருக்குடா" என்று யுவராஜ்ஜூக்கு மட்டும், கேட்கும் குரலில் சொன்னவனோ, "ரேகா, நான் எதுவும் பண்ண மாட்டேன், அவளை விடு" என்றான் மீண்டும்.

ரேகாவோ, "முடியாது, எனக்கு யுவராஜ் வேணும்… இவ உயிரோட இருந்தா அது நடக்காது, சோ இவ சாகணும்" என்றாள் குரூரமாக. யுவராஜ்ஜோ, "அவ செத்தா மட்டும் உன் கூட வாழ்ந்துடுவேனா? பைத்தியம் போல உளறாத, நான் நந்திதாவுக்கு மட்டும் தான் சொந்தம்" என்றான் அழுத்தமாக.

நந்திதாவுக்கு அரை மயக்கத்தில் கூட அவன் சொன்னதை கேட்டு மெல்லிய புன்னகை தோன்ற, "எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை யுவா, நம்ம குழந்தையை காப்பாத்துங்க" என்றாள் நலிந்த குரலில். அப்போது தான் பதறி போய் அக்கம் பக்கம் குழந்தையை தேடிய சமயம், ரேகாவுக்கோ இனி தான் தப்பிக்க முடியாது என்று தோன்ற வன்மத்தின் உச்சத்தில் நந்திதாவை பிடித்து தள்ளி விட, அவளோ, "யுவா" என்று கத்தியபடி கீழே விழுந்தாள்.

குழந்தையை தேடிக் கொண்டு இருந்தவனுக்கோ அவள் குரலைக் கேட்டதுமே இதயமே நின்று விட்ட உணர்வு. வேகமாக மலை உச்சியை நோக்கி ஓடிச் சென்றவனோ, "நந்திதா" என்று மலை உச்சியில் நின்று கண்ணீருடன் கத்த அவனை தொடர்ந்து ஓடி வந்த ஜெய்யோ, "ஷீட்" என்றபடி எட்டிப் பார்க்க, ரேகாவோ, சத்தமாக சிரித்தபடி, "அவ போனா என்ன யுவராஜ், நாம வாழலாம்" என்று சொன்ன அடுத்த கணமே ஜெய்யின் கையில் இருந்த துப்பாக்கியை கண நேரத்தில் பறித்து ரேகாவின் நெற்றியை குறி பார்த்து சுட்டு இருந்தான்.

ஏற்கனவே படங்களுக்காக துப்பாக்கியால் சுடும் பயிற்சி எல்லாம் எடுத்து இருந்தவனுக்கு இது பெரிய விஷயமாக தெரியவே இல்லை. ரேகாவோ அந்த இடத்திலயே இறந்து விட, கோபமாக அவள் நெஞ்சில் உதைத்தவன், "எதுக்கு இப்படி பண்ணுன" என்று ஆக்ரோஷமாக கத்த, ஜெய் தான், "யுவா வா" என்று சொல்லி சொல்லி அவனை இழுத்து வந்தான்.

அவனால் நிலை கொள்ளவே முடியவில்லை, "இந்த பணம், அந்தஸ்து எல்லாம் எதுக்கு ஜெய்? என் நந்திதாவை என்னால காப்பாத்த முடியலையே" என்று முட்டியில் அமர்ந்து ஆக்ரோஷமாக கத்தியவனை எப்படி சமாளிப்பது என்று ஜெய்க்கும் தெரியவே இல்லை. இதே சமயம், மழை வேறு பெய்து, பாதி திறந்து இருந்த கதவினூடு மயங்கிய குழந்தையின் மீது நீர் தெறிக்க, குழந்தையோ வீறிட்டு அழ ஆரம்பிக்க, மழையின் நீருடன் கண்ணீரையும் கலக்க விட்டு இருந்த யுவராஜ் அப்போது தான் நிதானத்துக்கு வந்தான்.

சட்டென்று எழுந்து குழந்தையின் அழுகை வரும் திசையை நோக்கி சென்றவனோ, காருக்குள் இருந்த குழந்தையை தூக்கிக் கொண்டே, தன்னை பாவமாக பார்த்துக் கொண்டே வந்த ஜெய்யை பார்த்தவன், "என்னை அரெஸ்ட் பண்ண போறியா?" என்று கேட்க, அவனோ, இல்லை என்று தலையாட்டியவன், யுவராஜ் சுட்ட துப்பாக்கியை எடுத்து கையினால் தனது ரேகையை அதன் மீது பதித்தவன், "உன் குழந்தை அநாதை ஆக நான் விரும்பல" என்று சொல்ல,

அவனோ ஜெய்யை கண்ணீருடன் பார்த்தான். அப்படி ஒரு வலி, ஆனாலும் கையில் குழந்தையுடன் வாழ்வையும் முடித்துக் கொள்ள முடியாத நிலை அவனுக்கு. ஜெய்யின் உதவியுடன் குழந்தையை தூக்கிக் கொண்டே வைத்தியசாலைக்கு விரைந்தான். இதே சமயம், விஷயம் அனைவர்க்கும் தீ போல பரவ, யுவராஜ் செய்த கொலையை தான் செய்ததாக வாக்குமூலம் கொடுத்து சஸ்பென்ஷன் வாங்கி இருந்தான் ஜெய்.

விஷ்வாவோ அவமானத்தின் மத்தியில் குழந்தையுடன் நாட்டை விட்டே கிளம்பி விட, ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து போய் இருந்தது. போலீசார் நந்திதாவின் உடலை தேடி தோற்றுப் போக, யுவராஜ்ஜை நேரில் அழைத்து பேசிய கமிஷனரோ, "எல்லா இடமும் தேடிட்டோம் சார், மழை நேரம் பள்ளத்தாக்குல இருக்கிற ஆறு வேற வேகமா ஓடிட்டே இருக்கு… பாடி எங்கயும் அடிபட்டு போய் இருக்கும், இன்னும் தேடணும்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்க,

அவனோ விரக்தியாக சிரித்தவன், "தட்ஸ் ஓகே சார், இத விட முக்கியமான கேஸ் எல்லாம் இருக்கும், அவளே போய்ட்டா இனி பாடிய தேடி என்ன பயன்" என்று பெருமூச்சுடன் சொல்லி விட்டே எழுந்து கொண்டான். நண்பர்கள், குழந்தை, பெற்றோர், நடிப்பு என்று அவன் வாழ்க்கையை ஒரு வருடம் கழித்து மீண்டும் ஆரம்பித்து இருந்தான் யுவராஜ்.

அவன் இழப்பினால் அவன் ரசிகர்களும் அவனை சார்ந்தவர்களும் கூட துடித்து போய் இருக்க, அவன் மீள் வருகை அனைவர்க்கும் உற்சாகம் தான்... அவனுக்கும் தனிமை வலிக்க, தன்னை நிலைப்படுத்த நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியவும் இல்லை. மனம் எல்லாம் ரணமாக இருந்தாலும் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருந்தான்.

இதே சமயம், கேரளாவில் உள்ள ஒரு சிற்றூரில்…

"ஷங்கர், நான் குளிக்குன்னு, குன் கரையுன்னு, குன்னின்னே பரிபாலிக்குக்கா" (குழந்தை அழுது, நான் குளிச்சிட்டு இருக்கேன்… என்னன்னு பாருங்க) என்று பார்வதி குளியலறைக்குள் இருந்து சத்தம் போட்டாள்.

அவர்களின் மலையாள வசனங்கள் தமிழில்...

"சீக்கிரம் வா பார்வதி, எவ்ளோ நேரமா குளிச்சிட்டே இருப்ப?" என்று கேட்டுக் கொண்டே குழந்தையை தூக்கிக் கொண்டான் அவள் கணவன் ஷங்கர். குளியலறைக்குள் இருந்து அவசரமாக தலையில் துணியை கட்டிக் கொண்டே வெளியே வந்தது வேறு யாருமல்ல, யுவராஜனின் நந்திதாவே தான்…

இன்று ஷங்கரின் பார்வதியாக ஒரு குழந்தைக்கு தாயாகவும் இருந்தாள்.
 
Wow super sis
 
Top