வேல்விழி 30
அடுத்த நாள் காலையில் ஸ்டூடியோவுக்கு நேரத்துக்கே வந்து விட்டான் ராம். அக்ஷரா தான் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர, அவளைக் கண்டதுமே, "டைமுக்கு வர தெரியாதா?" என்று முகத்துக்கு நேரே கேட்டு விட அவளுக்கோ சுர்ரென்று எகிறியது. "நான் யார் தெரியுமா? யார் கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா?" என்று கேட்க,
அவனோ, "இப்போ நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?" என்று கேட்க, அவளோ, "இவன் தெரிஞ்சு பண்ணுறானா தெரியாம பண்ணுறானான்னு தெரியலையே" என்று நினைத்துக் கொண்டே, "ஓகே லீவ் தட் ஸ்டார்ட் பண்ணலாம்" என்று சொல்லிக் கொண்டே ஹாலின் நடுவில் வந்து நிற்க அவனும் வந்து அவள் முன்னே நின்றான்.
அவளோ அவனை ஏறிட்டு பார்த்துக் கொண்டே, "எனக்கு ஓபன் ஆஹ் சொல்லுங்க... நான் என்ன விஷயம் தப்பா பண்ணுறேன்??" என்று கேட்டவளை நாடியை நீவியபடி பார்த்த ராமோ, "மிஸ் அக்ஷரா, நந்திதா எப்படி இருப்பா தெரியுமா??" என்று கேட்டான். அவளோ, "நான் ஒன்னும் உங்க முன் ஜென்மத்துல கூட பிறக்கல" என்றாள் கடுப்பாக.
அவனோ அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே, "எதுக்கெடுத்தாலும் இந்த பொண்ணு எரிஞ்சு விழுது" என்று நினைத்தவன் குரலை செருமியபடி , "நளினம்ன்னா அப்படி ஒரு நளினம்" என்க, அவளோ "அப்போ எனக்கு நளினம் இல்லன்னு சொல்றீங்களா?" என்று கேட்டாள்.
"இப்படி எடக்கு முடக்கா பேசுனா நான் என்ன பண்ணுறது??" என்று சலிப்பாக கேட்டான். அவளோ, "சரி பேசல சொல்லுங்க" என்க, "நீங்க பண்ணுறதுல அந்த நளினம் குறைவா இருக்கு… அது வந்திச்சுன்னா சரியா இருக்கும்" என்றான்.
அவளோ, "ஓஹ் காட்… நளினம் நளினம்னு சொல்லி வெறுப்பேத்துறீங்க, அப்படின்னா என்ன??" என்று கேட்க, அவனோ, "நடக்கும் போது மென்மையா பெண்மையா இருக்கனும்" என்றான் ரசனையான குரலில் அவளோ, "அப்போ நான் நடக்கும் போது அண்டர் டேக்கர் போல இருக்கேனா??" என்று கேட்க, "அவங்க யாரு தெரிஞ்சவங்களா??" என்று கேட்டான் ராம். அவனை முறைத்தவள், "ஆமா பக்கத்துக்கு வீட்டு காரங்க" என்றாள்.
அவனோ, "அவங்க நடந்து நான் பார்த்ததே இல்லை. வேணும்ன்னா என் முன்னாடி வந்து நடந்து காட்ட சொல்லுங்க" என்றான். அவளோ, "ஐயோ ஐயோ ஐயோ" என்று சொல்லிக் கொண்டே நெற்றியை சுவரில் மோத, அவளை விசித்திரமாக பார்த்தவனோ, "இந்த பொண்ணுக்கு பைத்தியமா இருக்குமோ" என்று நினைத்தான்.
அவளோ அடிபட்ட நெற்றியை நீவியபடியே அவன் முன்னே வந்து நின்றவள், "எனக்கு பேசி டயர்ட் ஆகுது... நான் நடக்கிறேன், எப்படி இருக்குன்னு சொல்லுங்க" என்று சொன்னவளோ இடையை அசைத்து நடக்க, அவனோ, "பத்தல பத்தல" என்றான்.
அவளோ அவனை திரும்பி பார்த்து முறைத்தவள், "பத்தலயா?" என்று கடுப்பாக கேட்க, அவனோ, "ஆமா பத்தல" என்றான் சாதாரணமாக. அவளோ வேகமாக அவன் முன்னாடி வந்து நின்று கொண்டே, "நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா தான் போறீங்க" என்று சொல்ல, அவனோ, "நான் என்ன ஓவரா போனேன்? உண்மையை தானே சொன்னேன்" என்றான்.
"எது உண்மை" என்று அவள் சீற, "நிஜமாவே உங்க நடைல நளினம் இல்ல, உங்க கிட்ட இருக்கிற திமீர் அப்படியே நடைல தெரியுது... உங்களுக்காக நல்லா இருக்குன்னு நான் சொன்ன அப்புறம் செட்டுல நல்லா இல்லன்னு வேற யாரும் சொல்லிட்டா உங்களுக்கு தானே அவமானம்" என்று அவளுக்கு வெகு நிதானமாக பதில் கொடுக்க, அவளோ அவனையே பார்த்துக் கொண்டே சிறிது நேரம் சிந்தித்தவள், "ஓகே எப்படி நடக்குறதுன்னு சொல்லி கொடுங்க" என்றாள்.
அவளோ நடக்க ஆரம்பிக்க, அவனோ அவள் இடையை பார்த்தவன், "கொஞ்சம் கூட அசைங்க" என்றான். அவளோ, "இதுக்கு மேல எப்படி அசைக்கிறது?" என்று கேட்க, அவனோ நெற்றியை நீவியபடி, "எப்படி சொல்றது?" என்று கேட்க, அவளோ, "இடுப்பை பிடிச்சு சொல்லிக் கொடுங்க" என்று சொன்னாள். அவனோ அதிர்ந்து விழி விரித்தவன், "இடுப்பை பிடிக்கணுமா?" என்று கேட்க,
அவளோ அவனை ஏறிட்டு பார்த்தவள், "ஆமா பிடிக்கணும்" என்றாள் அழுத்தமாக. அவனோ, "அதெல்லாம் என்னால முடியாது" என்று சொல்ல, அவளோ சட்டென்று திரும்பியவள், "ஏன் முடியாது? இது எல்லாம் சகஜம் தானே" என்றாள். அவனோ, "உங்களுக்கு சகஜம் எனக்கு சகஜம் எல்லாம் இல்ல, நாங்க ரொம்ப கண்ணியமா இருப்போம்" என்று சொல்ல,
அவன் முன்னே வந்து ஒற்றைப் புருவம் உயர்த்தியவள், "லவ்வர் கிட்டயும் கண்ணியமா இருப்பீங்களோ?" என்று கேட்டாள். அவனோ, "கண்டிப்பா, என் நுனி விரல் கூட நந்திதா மேல பட்டது இல்ல" என்று சொல்லும் போது அவன் குரல் அவனையும் மீறி தழுதழுத்து போக, மனதில் தோன்றிய வலியை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
அவன் குரலில் உண்டான மாற்றத்தையும் விழிகளில் உண்டான வலியையும் கண்டு கொண்டவளோ, "சாரி" என்றாள் மெல்லிய குரலில். அவனோ, "பரவாயில்லை, நாம பிராக்டிஸ் பண்ணலாம்" என்று சொல்ல, அவளோ மெலிதாக புன்னகைத்துக் கொண்டே, "சரி அவ மேனரிசம் எப்படி இருக்கும்னு சொல்லுங்க" என்று சொன்னவளோ சட்டென்று நிறுத்தி, "நீங்க, வாங்க போங்கன்னு சொல்ல கஷ்டமா இருக்கு... நீ வா போன்னு பேசலாமா?" என்று கேட்க, அவனும் தோள்களை உலுக்கி, "ஓகே" என்றான்.
அவளோ அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தவள், "நீயும் இரு" என்று சொல்ல, அவனும் வந்து அவள் அருகே அமர, "உன்னோட லவ் ஸ்டோரிய சொல்ல முடியுமா?" என்று கேட்க, அவனோ சங்கடமாக, "இப்போவா?" என்று கேட்டான். அவளோ, "கண்டிப்பா இப்போவே சொல்லுங்க, மனசு கஷ்டத்தோட பேசி முடிச்சிடலாம்" என்று சொல்ல, பெருமூச்சுடன், தனது முன் ஜென்ம கதையை ஆரம்பிக்க,
அவளோ, "அது எனக்கு பிரகாஷ் சொல்லிட்டான்... இந்த ஜென்மத்தில் என்னாச்சுன்னு சொல்லு" என்க. அவனோ அவளை வலி நிறைந்த புன்னகையுடன் பார்த்தவன் தனது கதையை சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லி முடியும் வரை அவனையே பார்த்துக் கொண்டு இருக்க, அவனோ, "அவ என் கூட இல்லைன்னாலும் சந்தோஷமா இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்…
அவளுக்கு அம்மாவோட அன்பும் கிடைக்கல, அப்பாவோட பாசமும் கிடைக்கல, அண்ணாவோட அக்கறையும் கிடைக்கல, எல்லாரும் இருந்தும் அனாதையா தான் இருந்தா… அவளை சந்தோஷமா நான் வச்சுக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல, இப்போ அவளே இல்ல" என்று சொல்லும் போதே அவன் ஒற்றைக் கண்ணில் இருந்து சட்டென்று நீர் வழிய,
அவளோ அருகே இருந்த டிஸ்ஸுவை எடுத்து நீட்ட, அவனோ அதனை வாங்கி கண்ணீரை துடைத்துக் கொண்டவனோ, "எனக்கே இப்படி இருக்குன்னா, யுவா ரொம்பவே கஷ்டப்படுவான்... அவன் கோபக்காரன் தான், ஆனா ரொம்ப நல்லவன்" என்று சொல்ல, அவளோ, "ம்ம்" என்று பெருமூச்சுடன் சொன்னவளோ, "எனக்கு இதுல என்ன சொல்றதுன்னு தெரியல... காலம் தான் மருந்து" என்று சொல்லிக் கொண்டே, "ஒரு காஃபி சாப்பிட்டு கன்டினியூ பண்ணலாமா?" என்று கேட்க,
அவனுமே, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அவளுடன் எழுந்து சென்றான். இருவருமே இது வரை ஏட்டிக்கு போட்டியாக இருந்தவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகி போக, இருவருக்கும் இடையே அழகான ஒரு மெல்லிய இழை உருவாகி இருந்தது. அக்ஷரா நிறைய ஆண்களுடன் சகஜமாக பழகி இருந்தாலும் முதல் முறை இப்படி ஒரு நல்லவனை பார்த்து இருக்கிறாள்.
அதனாலேயே அவனை பற்றி அறிய அவா உண்டாக, காஃபி அருந்திக் கொண்டே, "அப்போ இது வரைக்கும் யாரையுமே கிஸ் பண்ணது இல்லையா?" என்று கேட்க, அவனோ குடித்துக் கொண்டு இருந்த காஃபி புரையேற தலையில் தட்டியவன், "என்னது?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான். அவளோ, "அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்? இவ்ளோ வயசாச்சு ஒரு கிஸ் கூடவா பண்ணல?" என்று கேட்க,
அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "இவ்ளோ நேரம் என்ன சொல்லிட்டு இருந்தேன்?" என்று கேட்க, அவளோ, "அது சரி, கான்பெர்ம் பண்ணிக்க கேட்டேன்" என்றாள். அவனோ, "அது சரி, நீ நிறைய பேரை கிஸ் பண்ணி இருக்கியா?" என்று கேட்டு அடுத்த கணமே அவன் கையில் ஊன்றி கிள்ள, அவனோ, "ஆஹ் வலிக்குது" என்று சொல்லிக் கொண்டே கையை தடவ, "என்னை பார்த்து எப்படி நீ அப்படி கேக்கலாம்?" என்று கேட்க,
அவனோ, "நீ கேட்ட தானே" என்றான். அவளோ, "க்கும்" என்று இதழ்களை சுளித்தவள், "எனக்கும் பர்ஸ்ட் கிஸ் பத்தி பல கனவு எல்லாம் இருக்கு… ஆனா இது வரைக்கும் யாரையும் லவ் பண்ண தோணல, மனசுக்கு பிடிச்ச யாரும் கிடைச்சா கிஸ் பண்ணிடலாம்" என்று சொல்ல, அவனோ, "வெளிநாட்டுல படிச்சுமா இப்படி?" என்று சந்தேகமாக கேட்டான்.
அவளோ, "வெளிநாட்டுல படிச்சா கிஸ் பண்ணனும்னு சட்டமா? நான் சொல்றது சந்தேகமா தான் இருக்கும், இந்த இண்டஸ்ட்ரில இருந்துட்டு எப்படி இப்படின்னு கூட தோணும்... இப்போ தானே நடிக்க ஆரம்பிச்சு இருக்கேன், இனி ஆன் ஸ்க்ரீன் ல பண்ணிடலாம்" என்று சொல்ல, அவனோ அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு காஃபியை அருந்தினான்.
இப்படியே அவர்கள் மனதால் நெருங்கி விட, சிரித்து பேசி அடுத்தவர் வட்டத்துக்குள் சென்று இருந்தார்கள். இரு வாரங்கள் நந்திதாவின் மெனரிஸம் பற்றி சொல்லிக் கொடுக்க, அவளும் கடுப்பாகாமல் சினேகமாகவே அதனை கற்றுக் கொண்டாள்.
இரு வாரங்கள் முடிய மீண்டும் செட்டுக்கு நேரத்துக்கு வந்தவளோ, ஷூட்டிங்குக்கு வந்து நின்றதுமே, யுவராஜ்ஜோ அவளையே பார்த்துக் கொண்டு நின்றவன், "அக்ஷரா ஆர் யூ ரெடி?" என்று கேட்க, அவளும், "ஆமா சார்" என்றாள்.
அவளுக்கான டயலாக் பேப்பர் கொடுக்கப்பட, சிறிது நேரம் அதனை மனப்பாடம் செய்து முடிய, "ஆக்ஷன்" என்று சொன்னதுமே நந்திதாவைப் போல நடிக்க ஆரம்பித்தவளின் மெனரிசத்தைப் பார்த்து யுவராஜ்ஜின் விழிகள் விரிய, "அமேஸிங்" என்று சொல்லி கையை தட்ட, அவளுக்கோ அப்படி ஒரு சந்தோஷம். அடுத்த கணமே, "எல்லாத்துக்கும் ராம் தான் சார் ரீசன்" என்று சொல்ல,
அங்கே அவளையே பார்த்துக் கொண்டு நின்ற ராமை பார்க்க, ராமும் அவனைப் பார்க்க, "பெர்பெக்ட் டா" என்று பெருவிரலை உயர்த்தி காட்டினான். அன்றைய ஷூட்டிங் முடிய வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமான ராமை தேடி வந்த அக்ஷராவோ, "தேங்க்ஸ்" என்று கண் சிமிட்டி சொல்ல, அவனும் மென் புன்னகையுடன் தலையை ஆட்டி விட்டு புறப்பட்டு விட்டான்.
இப்படியே அவர்கள் நாட்கள் கழிய, அன்று அக்ஷராவின் கேராவினுக்குள் ஏறிய ராம் அவள் அழகில் மெய் மறந்து தான் போனான். ராணியின் அலங்காரத்தில் அழகின் உச்சத்தில் தனித்து அமர்ந்து இருந்தவளோ, "வா ராம்" என்றபடி எழுந்து நிற்க, அவள் அருகே வந்தவன், "ரொம்ப அழகா இருக்க அக்ஷரா" என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தை தாங்கி இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்ட சமயம் பதறி எழுந்தான் ராம்.
கேரவேனுக்குள் ஏறுவதில் இருந்து முத்தமிடுவது வரை கனவாக வந்து இருக்க, நடு ராத்திரியில் எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்ட நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவனோ, "எதுக்கு இப்படி ஒரு கனவு வரணும்?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு தூக்கம் தொலைந்து தான் போனது.
"நான் அவளை அப்படி பார்க்கலையே, இந்த கனவு எனக்கு சரியா படலயே" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டவன் நீரை அருந்தினாலும் தூக்கம் எங்கோ தொலைந்து தான் போனது. கண்ணை சும்மா மூடினால் கூட அவள் இதழ் கவ்வும் காட்சி தான் கனவாக வர, தூங்காமல் தான் விழித்து இருந்தான் ராம். அடுத்த நாள் எழுந்து பிரகாஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றதுமே, அவனை தேடி வந்த அக்ஷராவின் உதவியாளரோ, "மேடம் உங்கள வர சொன்னாங்க" என்று சொல்ல, அவனும் அவளை தேடி கேரவனுக்குள் நுழைந்தான்.
அவனைக் கண்டதுமே, "வா வா ராம்" என்று அவன் கையை பிடித்து அமர வைத்தவளோ, "இன்னைக்கு என்ன சீன் தெரியுமா?" என்று கேட்க, அவனோ அவளை புரியாமல் பார்த்தான். அவளோ விழிகளை விரித்து, "இன்னைக்கு கிஸ் ஸீன்" என்று சொன்னதுமே ராமின் மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்ற, "கிஸ்ஸா?" என்று கேட்க,
அவளோ, "ம்ம் யுவா சார் கூட" என்று கண் சிமிட்டி சொன்னவளோ அக்கம் பக்கம் பார்த்து விட்டு, "நான் அவரோட தீவிர ரசிகை தெரியுமா?" என்று ஆரம்பித்து யுவராஜ்ஜின் புராணம் பாட, அவளது முதல் முத்தம் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அவள் விளங்கினால் தானே…
இதே சமயம் யுவராஜ்ஜோ நீண்ட நேரம் தன்னையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டு நின்றவன், "என்னால எப்படி இன்னொரு பொண்ண கிஸ் பண்ண முடியும்? என்ன நினைப்புல ஓகே சொன்னேன்?" என்று தனக்கு திட்டிக் கொண்டே ஷாட்டுக்கு இறங்கினான்.
"ராம் ஒரே நேர்வர்ஸ் ஆஹ் இருக்கு" என்று இத்துடன் பத்தாவது தடவை சொல்லி இருந்தாள் அக்ஷரா... அவன் விழிகள் அவள் மீது அழுத்தமாக படிந்து மீள, "இதெல்லாம் சினிமாவில சகஜம் தானே? பிரகாஷ் எனக்கு எல்லாமே சொல்லி கொடுத்தான்" என்க, அவளோ, "சகஜம் தான். ஆனா இது என்னோட பர்ஸ்ட் கிஸ், அதுவும் யுவா சார் ஓட… ஐயோ ஐயோ! கையும் ஓடல… காலும் ஓடல" என்று சொன்னாள்.
ராமோ பெருமூச்சுடன், "பேசுனதையே பேசிட்டு இருக்கா" என்று முணுமுணுத்துக் கொண்டே, அங்கிருந்து நகர முற்பட, "ஷாட் ரெடி மேடம்" என்றான் அங்கு வேலை செய்பவன். அக்ஷராவோ கேரவேனில் இருந்து இறங்கிக் கொண்டே "விஷ் மீ " என்க, ராமோ, "அது தான் ஒரு குறை" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே, "வாழ்த்துக்கள்" என்று வேண்டா வெறுப்பாக சொல்லி விட்டு ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்றான்.
அங்கே யுவராஜ் ஏற்கனவே நின்று இருக்க, பிரகாஷும் ஆக்ஷன் சொல்லி விட அக்ஷரா அவனை காதல் பார்வை பார்த்துக் கொண்டே நிற்க அவளை நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான் யுவராஜ். ராமோ அவனையே பாத்தவன், "வர்றத பார்த்தா முத்தம் கொடுத்துடுவான் போலவே" என்று நினைக்க அக்ஷராவை நெருங்கி நின்ற யுவராஜ்ஜோ, ஒற்றைக் கையால் அவள் கழுத்தை பற்றிக் கொண்டே இதழ்களை நெருங்க அவள் கண்களோ மெதுவாக மூடிக் கொண்டன.
பிரகாஷோ, "வாட்ட எ ரொமான்டிக் ஆக்டிங்" என்று யுவராஜ்ஜை மனதுக்குள் மெச்ச அக்ஷராவின் இதழ்களை நெருங்கியவன் மனமோ நந்திதாவுடன் முத்தமிட்ட நினைவுகளை மீட்டியது. இதே சமயம் ராமோ தலையை குனிந்து கொள்ள யுவராஜ்ஜோ முத்தமிடாமல் விலக, பிரகாஷோ, "கட்" என்று சொல்லி விட்டு யுவராஜ்ஜை நோக்கி நடந்தவன், "சார்" என்றான்.
"பின் பக்க ஆங்கில் வச்சு சீன் எடுத்துக்கோ, நந்திதாவா நடிக்கிறா தவிர இவ நந்திதா இல்ல... சோ ஐ காண்ட் கிஸ் ஹேர்" என்று சொல்ல, அங்கே பெருமூச்சுடன் நிமிர்ந்து பேயறைந்தது போல நின்ற அக்ஷராவைப் பார்த்தான் ராம். யுவராஜ், "சாரி எவரிவன்" என்று சொல்லி விட்டு கேரவேனுக்குள் நுழைய, அக்ஷராவும் யாரையும் பார்க்காமல் விறு விறுவென கேரவேனுக்குள் நுழைந்து கொண்டாள்.
அவ்வளவு பேர் முன்னிலையில் இப்படி நடந்தது அக்ஷராவுக்கு சற்று அவமானமாக இருந்தாலும் உணர்வுகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டே அடுத்த ஷாட்டுக்கு தயராக இருந்தாள். ராமின் மனமோ, "அவ கிஸ் பண்ணுனா என்ன பண்ணலன்னா என்ன? நான் எதுக்கு அத பத்தி எல்லாம் கவலைப்படணும்?" என்று தன்னை தானே கேட்டவனுக்கு பதில் தான் கிடைக்கவே இல்லை.
இப்படியே ஷூட்டிங்கும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்க, ஸ்ருதி மற்றும் ஸ்ரீயின் திருமண நாளும் நெருங்கிக் கொண்டு இருந்தது. ஷூட்டிங் வீடு என்று அலைந்து திரிந்து கொண்டு இருந்த யுவ்ராஜ்ஜூக்கு வீட்டுக்கு சென்றால் ஆதித்ரியின் அருகாமை தான் இதமாக இருந்தது. ஸ்ருதி மற்றும் ஸ்ரீயின் திருமண நாளும் வந்து இருக்க, அனைவரும் குடும்பமாக சென்று அவர்களை வாழ்த்தி இருக்க,
அவர்கள் ஹனிமூன் என்று புறப்பட்டது என்னவோ கேரளாவுக்கு தான். போகும் போதே, "அங்கே ஷூட்டிங் ஸ்பாட் இருந்தா சொல்லுடா, அவுட் டோர் சாங் அண்ட் சீன்ஸ் எடுக்கலாம்" என்று பிரகாஷ் சொல்லி இருக்க, ஸ்ருதியும் பிரகாஷும் எல்லா இடமும் சுற்றியவர்கள் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தார்கள்.
அன்று ஷூட்டிங் இடைவேளை நேரம், யுவராஜ் அருகே வந்து அமர்ந்த பிரகாஷோ, "ஸ்ரீ போட்டோஸ் அனுப்பி இருக்கான், பார்க்கலாமா?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "கேரளா அழகான பிளேஸ் தான்… மோஸ்ட்லி எல்லா இடமும் தெரியும். நிறைய தடவை போய் இருக்கேன்... சரி போட்டோவை காட்டு" என்று சொல்ல, அவனும் ஒவ்வொரு புகைப்படமாக காட்ட, அதனை பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜ்ஜின் விழிகள் சட்டென்று விரிந்தன.
பிரகாஷோ எட்டி போட்டோவை பார்த்தவன், "ஆஹ் இந்த கோவில் சூப்பரா இருக்குல்ல" என்று சொல்ல, அவன் பார்த்தது ஒன்றும் கோவில் அல்ல, அங்கே எடுக்கப்பட்ட செல்பியில் பின்னால் தெரிந்த பார்வதி என்னும் பெயரில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நந்திதாவை தான்.
அவள் கையில் குழந்தை இருக்க, ஷங்கருடன் கோவிலுக்கு வந்தவளை கண்டவன் முகம் இறுகி போக, ஆழ்ந்த மூச்செடுத்தவன், "நாளைக்கே இங்க போறோம்… இடம் ஏற்பாடு பண்ணுல, இப்போ பேக் பண்ணு" என்று சொல்லிக் கொண்டே அந்த போட்டோவை எடுத்துக் கொண்டு விறு விறுவென காரில் வீட்டுக்கு கிளம்பி விட, அனைவருமே இந்த திடீர் முடிவால் அதிர்ந்து போனாலும் யுவராஜ்ஜை மீறி எதுவும் பண்ண முடியாது என்பதனால் அவசரமாக கிளம்ப ஆயத்தமானார்கள்.
இதே சமயம் வீட்டுக்கு வந்த யுவராஜ்ஜோ, அந்த போட்டோவை மெயிலில் கேரளாவில் தெரிந்த ஒருவருக்கு அனுப்பி விட்டு, "இவங்கள பத்தி எல்லா டீட்டெயில்ஸ் உம் இந்த வாரத்துக்குள்ள வேணும்" என்று சொல்லி இருந்தான்.
இதே சமயம் அவர்களின் வருகையை கேள்விப்பட்ட ஸ்ரீயோ, "என்ன திடீர்னு?" என்று கேட்டாலும் அவர்கள் தங்க ஏற்பாட்டை செய்து கொண்டு தான் இருந்தான். போக முதல் தூங்கிக் கொண்டு இருந்த மகளின் நெற்றியில் முத்தமிட்டவன், "வரும் போது உன் அம்மா கூட தான் வருவேன்" என்று சொல்லி விட்டு அனைவருடனும் புறப்பட்டு இருந்தான். அவன் தேடல் வெற்றி பெறுமா இல்லையா? என்று அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.