வேல்விழி 32
யுவராஜ்ஜூம் படக் குழுவினரும் அவர்களுக்கான பிரமாண்ட வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, பயணக் களைப்பில் தூங்கி எழுந்த யுவராஜ்ஜோ கையில் காஃபியுடன் பால்கனியில் நின்று இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தான். ரம்மியமான சூழல் அதில் அவன் மனம் நிலை கொள்ள மறுத்தது.
நந்திதாவைக் கண்டு கொண்டதற்காக சந்தோஷப்படுவதா இல்லை அவள் வேறு ஒருவன் மனைவியாக இருப்பதை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியாத சங்கடமான நிலை அவனுக்கு. அங்கிருந்த மரத்தினை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றவனை அழைத்தான் ஸ்ரீ.
"டேய் யுவா உன்னை தேடி ஒருத்தன் வந்து இருக்கான்" என்க, அவனுக்கு புரிந்து விட்டது தான் நந்திதாவை பற்றி ஆராய நியமித்த நிதிஷ் தான் வந்து இருக்கின்றான் என்று. "வரச் சொல்லு, நீங்களும் எல்லாரும் வாங்கடா, கொஞ்சம் பேசணும்" என்றான்.
அதனைக் கேட்டு ஸ்ரீ புரியாமல் பார்த்தாலும் அவன் சொன்னதால் அனைவரையும் அங்கே இருந்த முன்னறைக்குள் அழைத்து வர, கால் மேல் கால் போட்டு கண் மூடி அமர்ந்து இருந்த யுவராஜ்ஜை தான் அனைவரும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
அவனோ பெருமூச்சுடன் கண்களை திறந்தவன், "நந்திதா கிடைச்சுட்டா" என்று சொல்ல, அனைவரும் ஒருங்கே, "வாட்?" என்று அதிர்ந்தே விட்டார்கள். நிதிஷைப் பார்த்த யுவராஜ்ஜோ, "சொல்லு" என்க, அவனோ குரலை செருமிக் கொண்டே, "அது நந்திதா மேடம் தான்னு உறுதியா சொல்ல முடியல சார், ஆனா நந்திதா மேடம் மலை உச்சியிலே இருந்து கீழே விழுந்த அப்புறம் தான் இவங்க இந்த ஊருக்கு வந்து இருக்காங்க. ஷங்கரோட உண்மையான ஊர் எதுன்னு தெரியல… ஒவ்வொருத்தங்க கிட்டயும் ஒவ்வொரு ஊர் சொல்லி இருக்கான்" என்று சொல்ல,
யுவராஜ்ஜோ, "தப்பு பண்ணுறவன் தான் அடையாளத்தை மறைக்க பொய் சொல்லுவான்" என்று முடித்து இருந்தான். அங்கே இருந்த யாருக்கும் எதுவும் புரியவே இல்லை. ஸ்ருதியோ, "கொஞ்சம் க்ளியர் ஆஹ் சொல்லு யுவா" என்க, அவனோ நாடியை நீவிக் கொண்டே, "அன்னைக்கு நீங்க அனுப்புன போட்டோல தான் நந்திதாவை பார்த்தேன்" என்றான்.
ஸ்ரீயோ, "எங்க போட்டோல பார்த்தியா? நாங்க பார்க்கலையே" என்று சொல்ல, பிரகாஷோ, "ஹனிமூனுக்கு வந்த உனக்கு ஸ்ருதியை தவிர யாருமே தெரிஞ்சு இருக்க மாட்டாங்க" என்று சொல்ல, மதனாவோ அடக்க முடியாமல் சிரிக்க, அவனை முறைத்த ஸ்ரீ, "சும்மா இருடா, விளையாடுற நேரமா இது?" என்று கடிந்தவன், "நீ சொல்லு யுவா" என்றான்.
யுவராஜ்ஜோ, "ஆனா அவங்க கல்யாண போட்டோ பார்த்ததா நிதிஷ் சொன்னான். அது தான் ரொம்பவே குழப்பமா இருக்கு… ஒன்னு அவ பழசை மறந்து இருக்கிறதால அவளை கல்யாணம் பண்ணி இருக்கணும்" என்று சொல்லும் போதே அவன் குரல் தழுதழுக்க அனைவருக்குமே அவன் அனுபவித்துக் கொண்டு இருக்கும் வலி புரிந்தது.
ஒரு கணம் நிறுத்தியவன் குரலை செருமிக் கொண்டே, "அப்படி மட்டும் இருந்துச்சுன்னா அவன் சாவு என் கையால தான்" என்று சொன்னவன் குரலில் அப்படி ஒரு அழுத்தம். ஸ்ரீயோ, "நீ பீல் பண்ணாதே, அப்படி இருக்க வாய்ப்பே இல்ல… முதலில என்ன ஆச்சுன்னு விசாரிக்கலாம், சட்டுன்னு அவன் மேல கையை வைக்கவும் முடியாது, இது நம்ம ஊர் இல்ல… யார் எவர்ன்னு பார்க்காம தலையை சீவிடுவானுங்க, விசாரிக்காம போலீசை அழைக்கவும் முடியாது…
பெரிய பிரச்சனை ஆக வாய்ப்பிருக்கு" என்று சொல்ல, ஆமோதிப்பாக தலையாட்டிய யுவராஜ்ஜோ, "வெய்ட் பண்ணி தான் காய் நகர்த்தணும் ஸ்ரீ, முதலில் அந்த ஷங்கர் பத்தி தெரிஞ்சுக்கணும், அவன் இன்டென்ஷன் என்னன்னு அறியனும்" என்று சொல்லிக் கொண்டான். அங்கு இருந்தவர்களும் தத்தமது ஆலோசனைகளை சொல்ல, இறுதியாக விசாரித்து உண்மையை அறிந்த பிறகு தான் அடுத்த கட்டத்துக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
ராம் தொடக்கம் அனைவர்க்கும் நந்திதா மீண்டும் வந்தது சந்தோஷமாக இருந்தாலும் உண்மை எது என்று தெரியாததால் குழப்பத்திலேயே இருந்தார்கள். இப்படியே அந்த நாள் கழிந்து விட, அடுத்த நாள் காலையிலேயே அவர்கள் வீட்டினுள் நுழைந்த ஷங்கரோ அங்கே நின்று இருந்த பிரகாஷிடம், "வணக்கம், நீங்க தான் சினிமா ஷூட்டிங்குக்கு வந்தவங்களா?" என்று மலையாளத்தில் கேட்க,
அவனோ புரியாமல் விழித்தவன் அருகே நின்ற மதனாவிடம், "மதனா இங்க வாயேன்" என்றான். அவளும் அவன் அருகே செல்ல, ஷங்கரோ, "என் பெயர் ஷங்கர், பெரிய ஐயா கிட்ட வேலை பார்க்கிறேன்… அவர் தான் உங்கள எல்லாம் கவனிக்க சொன்னார், வசதியா இருக்கா?" என்று கேட்க, மதனாவோ, "ரொம்ப நல்லா இருக்கு, மேல வாங்க" என்று அவனை மலையாளத்தில் பேசி அழைத்து செல்ல, பிரகாஷோ, "என்னவாம்?" என்று மதனாவிடம் கேட்டான்.
"டைரக்டர் சார், பல ஊருக்கு ஷூட்டிங் எடுக்க வேண்டி இருக்கும்… எல்லா மொழியும் கத்துக்கோங்க" என்று நக்கலாக சொல்ல, அவளை முறைத்துக் கொண்டே படி ஏறினான் பிரகாஷ். மேலே ஸ்ரீ மற்றும் யுவராஜ் பேசிக் கொண்டு இருக்க, அவர்களை நோக்கி வந்த மதனாவோ, "நம்மள பார்த்துக்க சொல்லி அனுப்பி இருக்கார் இந்த ஊர் பெரியவர்" என்று அவர்களுக்கு ஷங்கரை அறிமுகப்படுத்த, அவனை ஆழ்ந்த பார்த்துக் கொண்டே எழுந்தவனோ, "நமஸ்காரம் ஷங்கர்" என்று சொல்ல,
அவனோ அதிர்ந்து யுவராஜ்ஜைப் பார்த்தவன், "என்ன எப்படி தெரியும்?" என்று கேட்டான். அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே அவனை மேலிருந்து கீழ் பார்த்தவன், "உன்னை தெரியாம இருக்குமா?" என்று கேட்க, ஷங்கர் யோசனையாக பார்க்க, யுவராஜ்ஜோ, "உங்க பெரிய ஐயா சொன்னார்" என்று பதில் அளித்தான்.
ஷங்கரோ, "ஓஹ், ஏதும் தேவைன்னா என் கிட்ட கேளுங்க, வீடு அடுத்த தெருவுல தான்" என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் பேசி விட்டு செல்ல, ஸ்ரீயோ, "இவன் தான் ஷங்கரா?" என்று யுவராஜ்ஜிடம் கேட்க, "ம்ம்" என்று சொன்னான் யுவராஜ். ஸ்ருதியோ, "பார்க்க நல்லவன் போல இருக்கானே" என்று சொல்ல, ராமோ, "இவனா நல்லவன்?" என்று கடுப்பாக கேட்டான்.
இப்படியே அன்றைய நாள் நகர, மாலை நேரம் வீட்டுக்குள் நுழைந்த ஷங்கரிடம் தட்டில் கும்பிளாப்பம் வைத்து பார்வதி என்னும் பெயரில் இருக்கும் நந்திதா நீட்ட, மென் புன்னகையுடன் அதனை சாப்பிட்டவனோ, "நல்லா இருக்கே" என்றான். அவளோ, "பக்கத்துக்கு வீட்டு சேச்சி சொல்லி கொடுத்தாங்க" என்க, ஏதோ நினைவு வந்தவனாக, "சினிமாக்காரங்க வீடு தெரியும் தானே பார்வதி" என்று கேட்க, அவளோ, "பெரிய ஐயா வீடு தானே" என்று கேட்டாள்.
அவனோ, "ம்ம், பையன் எங்க?" என்று கேட்க, அவளோ, "பக்கத்து வீட்டு சேச்சி கிட்ட இருக்கான்" என்று பதில் அளிக்க, "நல்லதா போச்சு… பெரிய ஐயா குடோனுக்கு போய் சில கணக்குகள் பார்க்க சொன்னார், நான் மறந்துட்டேன், நீ இத கொண்டு சினிமாக்காரனுங்களுக்கு கொடு... இது வரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க, விரும்பி சாப்பிடுவாங்க" என்று சொல்ல, அவளுக்கு சற்று தயக்கமாக இருந்தாலும் ஷங்கர் சொல்வதைக் கேட்டே பழகி போனவளோ, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டு இருந்தாள்.
இதே சமயம், யுவராஜ் உடன் கூட வந்தவர்களில் சிலர் லொகேஷன் பார்க்க சென்று விட, சிலர் வீட்டினுள் தூங்கிக் கொண்டு இருக்க, யுவராஜ்ஜோ பால்கனியில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து நந்திதாவைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான். அவன் மனமோ, அவளை சந்திக்க போவதாகவே சொல்லிக் கொண்டு இருக்க, அவளும் பெரிய வீட்டுக்குள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நுழைந்தாள்.
அவள் வீட்டின் படியில் காலை வைத்த கணம், அவன் மேனி சிலிர்த்து அடங்க, அவன் இதழ்களோ, "ஏன் இப்படி வித்தியாசமா பீல் ஆகுது" என்று நினைத்துக் கொண்டான். அவள் கையில் இருந்த பாத்திரத்தில் இலைக்குள் சுற்றப்பட்டு இருந்த உணவு பதார்த்தமான கும்பிளாப்பம் இருக்க, "யாராச்சும் இருக்கீங்களா?" என்று மலையாளத்தில் கேட்டுக் கொண்டே மெல்ல மெல்ல உள்ளே வர,
அவள் குரலைக் கேட்டு ஒரு கணம் மெல்லிய புன்னகையுடன் கண்களை மூடி திறந்த யுவராஜ்ஜோ, "குரலே சொல்லுதுடி இது நீ தான்னு" என்று நினைத்துக் கொண்டே, "மேல வா" என்று குரல் கொடுத்தான். அவளும், பயந்து பயந்தே படியேறி போக, அங்கே பால்கனியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்த யுவராஜ்ஜோ அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தபடி, ஒற்றை விரலை நீட்டி வரும்படி அழைக்க, அவளும் பாத்திரத்துடன் அவனை நோக்கி அடிமேல் அடி வைத்து வந்தாள்.
மலையாள பெண்கள் போல வெண்ணிற சேலை அணிந்து இருந்தவளோ முதல் இருந்ததை விட சற்று பூசிய போல தான் இருந்தாள். முதல் குழந்தை பிறந்த போது இருந்த அதே தோற்றம். முடியை பின்னி இருந்தவளது தோற்றத்தை மேலிருந்து கீழ் ரசித்தவனுக்கோ அவளை இழுத்து அணைத்து ஆசை தீர முத்தமிட வேண்டும் என்கின்ற ஆசை… ஆனால் இப்போது இருக்கும் நிலையில் அவன் தன்னை கட்டுபடுத்த கட்டாயம் இருக்க, கஷ்டப்பட்டு முகத்தை உணர்ச்சிகளை காட்டாமல் வைத்து இருந்தான்.
இதே சமயம், "சினிமாக்காரங்கன்னு பாவா சொன்னாரே" என்று நினைத்துக் கொண்டே அவனை நோக்கி நடந்து வந்தவளிடம், "கைல என்ன?" என்று கேட்டான் யுவராஜ். அவளோ, "கும்பிளாப்பம்" என்று நலிந்த குரலில் சொல்ல, அவனோ, "என்ன பிலாப்பழம்?" என்று கேட்க, அவளோ, "பிலாப்பழம் இல்ல, கும்பிளாப்பம்" என்றாள் மலையாளத்தில்.
அவனோ, "ஓஹ் மேடம் மலையாளம் தான் பேசுவாங்க போல" என்று நினைத்தவனுக்கு தெளிவாக தெரிந்தது அவளுக்கு பழைய நினைவு எதுவுமே இல்லை என்று. அவனோ பெருமூச்சுடன், "வாட் எவர்! இங்க வை" என்று முன்னே இருந்த மேசையைக் காட்ட, அதில் வைத்தவளோ, "பாவா கொடுத்துட்டு வர சொன்னார்,
அப்போ நான் கிளம்புறேன்" என்றாள் மலையாளத்தில். அவள் தட்டை வைக்கும் போதே அவன் அருகே செல்ல வேண்டி இருக்க, கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்து அவள் வாசத்தை நுகர்ந்தவனோ, "நந்திதா" என்றான் மனதினுள். அவளை அகமும் புறமும் முற்றாக அறிந்தவனுக்கு அவள் தோற்றம், குரல், வாசம் என்று அனைத்துமே அது நந்திதா தான் என்று எடுத்துரைக்க, அவள், "பாவா" என்று ஷங்கரை விழித்தது எரிச்சலாக தான் இருந்தது.
அவனுக்கும் மலையாளம் தெரியும் என்பதால் அவளுடன் பேசுவது கஷ்டமாக இருக்கவே இல்லை. "வார்த்தைக்கு வார்த்தை பாவா பாவான்னு சொல்ற… பாவான்னா ரொம்ப பிடிக்குமோ?" என்று கேட்க, அவளோ, "அவர் தான் என்ற உயிர் மூச்சு" என்று சொன்னதுமே அவன் பார்த்த பார்வையில் அவள் பஸ்பம் ஆகாதது தான் மிச்சம்.
அவளுக்கோ அவன் தன்னிடம் ஒரே வார்த்தையில் நெருங்கி பேசுவது விசித்திரமாக இருக்க, "இப்போ எதுக்கு முறைச்சு பார்க்கிறீங்க?" என்று மனதில் தோன்றியதை கேட்க, அவனோ, பின்னங்கழுத்தை வருடி தன்னை நிலைப்படுத்தியவனோ, "இனி பாவா மண்ணாங்கட்டின்னு சொன்ன சீவிடுவேன்" என்றான் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல்.
ஷங்கரின் மனைவி என்ற நினைவிலேயே வாழ்ந்து கொண்டு இருப்பவளுக்கு அவன் பேசியது கோபத்தை வரவழைத்தது. அவளோ, "என்ன சாரே மிரட்டுறீங்க? என் புருஷன நான் பாவான்னு சொல்லாம உங்களையா பாவான்னு சொல்லுவேன்?" என்று கேட்க, அவளை நோக்கி குனிந்து அவள் முகத்துக்கு நேரே தனது முகத்தைக் கொண்டு வந்தவன், "என்னை தான் பாவான்னு சொல்லணும், புரியுதா என்ற ஓமன பெண்ணே?" என்று கேட்க,
அவள் விழிகளோ அதிர்ந்து விரிய, "நீங்க தப்பா பேசுறீங்க? பாவா கிட்ட சொல்லுறேன்" என்று சொல்லிக் கொண்டே போக எத்தனிக்க, அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவனோ, நினைத்ததை அவள் இதழுக்கு பரிசாக கொடுத்து விட்டு விலகியவன், "இதையும் உன் பாவா கிட்ட சொல்லு" என்றான்.
அவனும் தன்னை கட்டுப்படுத்த தான் நினைத்து இருந்தான்… ஆனால் நீண்ட நாள் கழித்து அவள் அருகே கிடைத்த அருகாமையில் தன்னை தானே கட்டுப்படுத்த தவறி இருக்க, நடைபெற்ற முத்த சம்பவத்தினால் அதிர்ந்தவளோ வாயில் கையை வைத்தபடி கண்கள் கலங்க, அவனை முறைத்து விட்டு விறுவிறுவென ஓடிச் செல்ல, அவனோ அவள் முதுகை வெறித்துப் பார்த்தான்.
ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி வந்தவளோ நேரே குளியலறைக்குள் புகுந்து குளிக்க ஆரம்பித்து இருந்தவள் கரமோ தனது இதழ்களை அழுந்த தேய்த்துக் கொண்டது. முத்தமிட்ட தடத்தை தேய்த்தால் அழிந்து விடும் என்று நினைத்த பாவையவள் அறியவே இல்லை. அவன் அவளை முத்தத்துடன் நிறுத்தியவன் அல்ல மொத்தமாக கொள்ளையிட்டவன் என்று.
அவள் அறியாமையின் விளைவால் அவளுக்கு இந்த முத்தத்தை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.அவள் அறிந்து ஷங்கர் கூட அவளை முத்தமிட்டது கிடையாது. அப்படி இருக்கும் போது எப்படி இன்னொரு ஆடவன் முத்தமிட முடியும் என்று நினைத்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. ஷங்கரிடம் சொல்லி விட ஒரு மனம் துடிக்க, அது பிரச்சனையை உருவாக்கி விடும் என்று அடுத்த மனம் தடுத்துக் கொண்டு இருக்க,
குளித்து விட்டு பக்கத்து வீட்டுக்கு சென்று குழந்தையை வாங்கிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவளோ, "பொறுக்கி" என்று ஆரம்பித்து யுவராஜூக்கு இஷ்டத்துக்கு அழுதழுது திட்டிக் கொண்டவளோ ஷங்கரின் மோட்டார் வண்டி சத்தத்தைக் கேட்டதுமே கண்களை துடைத்துக் கொண்டாள்.
அன்று முழுதும் அவளால் நிலை கொள்ளவே முடியவில்லை. சாப்பிட்டு விட்டு அன்று இரவு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே அங்கே அமர்ந்து பத்திரிக்கை வாசித்துக் கொண்டு இருந்த ஷங்கரைப் பார்த்தவளோ, "பாவா" என்று அழைக்க அவனும், "ம்ம்" என்றான்.
"அந்த சினிமாக்காரன் பண்ணினத சொல்லுவோமா?? சொன்னா என்னை தப்பா நினைச்சிடுவாரா??" என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே, "நம்ம பக்கத்து வீடு சேச்சி ஒரு கதை சொன்னாங்க" என்றாள். அவனோ, "என்ன கதை??" என்று கேட்டான். "யாரோ கல்யாணம் பண்ணின பொண்ணுக்கு ஒருத்தன் முத்தம் கொடுத்துட்டானாம்" என்று சொல்ல,
சட்டென அவளை அனல் தெறிக்க பார்த்தவன், "எவன்னு சொல்லு சீவிடுறேன்" என்று சொன்னதுமே நெஞ்சில் கையை வைத்தவள், "அப்போ உண்மையா சொன்னா சினிமாக்காரனை வெட்டிட்டு இவர் ஜெயிலுக்கு போயிடுவார்" என்று நினைத்தவள், "எனக்கென்ன தெரியும்?? சேச்சி கிட்ட தான் கேக்கணும்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து உள்ளே சென்றாள். உள்ளே சென்றவளுக்கு தூக்கி வாரிப் போட்டது…
அங்கே ஜன்னலுக்கு வெளிப்பக்கம் நின்று இதழ் குவித்து முத்தமிடுவதை போல சைகை செய்தது வேறு யாருமல்ல யுவராஜ் தான்… அவளோ அதிர்ந்து அவனைப் பார்த்து விட்டு கண்களை கசக்கிப் பார்க்க, அங்கே யாருமே நிற்கவே இல்லை.
"ச்ச பிரம்மையா?" என்று நினைத்துக் கொண்டே குழந்தையுடன் படுத்தவளுக்கு தூக்கம் வந்தால் தானே? அவள் அறிந்தவரை ஷங்கர் வெளியே ஹாலில் தான் படுப்பான். அவள் அதற்கான காரணம் கேட்கும் நேரங்களில், "அங்கே படுத்தால் தான் தூக்கம் வரும்" என்று சொல்லி சமாளித்து விடுவான்.