வேல்விழி 33
இதே சமயம், யுவ்ராஜ்ஜோ நந்திதாவின் விஷயத்தை அனைவருக்கும் சொல்ல, ஸ்ரீயோ, "என்னது கிஸ் பண்ணுனியா?" என்று அதிர்ந்து கேட்க, "அடிச்சு சொல்றேன் அது நந்திதா தான்" என்றான். ஸ்ரீயோ, "அது சரி டா, ஆனா இப்போ எதுக்கு இப்படி பண்ணுன? அவ ஷங்கர் கிட்ட சொன்னா சங்கு தான்" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "சொல்லட்டுமே பார்த்துக்கலாம்" என்று கூலாக சொல்லி விட்டு அறைக்குள் செல்ல, அனைவரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
ராமோ யோசனையுடன் அறைக்குள் செல்ல எத்தனிக்க, அவன் அருகே வந்த அக்ஷராவோ, "என்ன சார் நந்திதாவை நினைச்சு ரொம்ப பீலிங் ஆஹ்??" என்று கேட்க, அவனோ, "ஏன் இருக்க கூடாதா?" என்று கேட்டு விட்டு தனது அறைக்குள் செல்ல, அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளோ ஒரு மென் புன்னகையுடன் தனது அறைக்குள் நுழைந்தாள்.
அவளுக்கும் கொஞ்ச நாட்களாக ராம் மீது இனம் புரியாத ஈர்ப்பு உண்டாகி இருந்தது. காதலித்த பெண்ணாக இருந்தாலும் வேறு ஒருவனை மணந்த பிறகும் கூட சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மிக மிக அரிது அல்லவா? அந்த அரிதானவனில் ஒருவனே இவன்… அவர்களின் முன் ஜென்ம கதையை கேட்ட போது ராம் மீது சிறிய வருத்தம் இருந்தாலும் அவளுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக இருந்தது என்னவோ அவன் தான்.
நட்பாக பழகியவளுக்கு எப்போது அது காதலாக மாறியது என்று தெரியவும் இல்லை. இப்போதெல்லாம் அவனுக்கு தெரியாமலே அவனை ரசிக்க ஆரம்பித்து இருந்தவள் காதலை எப்போது சொல்வது என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு அதற்கான சந்தர்ப்பமும் அடுத்த இரு நாட்களில் வாகாக அமைந்து போனது.
ஆம் அன்று பாடலுக்கான ஷூட்டிங் ஒன்றுக்காக அருகே இருந்த சோலை ஒன்றினுள் அனைவரும் குழுமி இருக்க, யுவராஜ்ஜூம் அரச தோற்றத்தில் தளத்துக்கு வந்து சேர, அக்ஷராவோ கேரவேனில் இருந்து ராணியின் தோரணையில் தேவதையாக இறங்க, அவளை சட்டென திரும்பிப் பார்த்த ராம் கண் இமைக்க மறந்து தான் போனான். ராம் மட்டும் அல்ல செட்டில் இருந்த பலருக்கு அவள் அழகு அப்படி ஈர்த்தது.
ராமுக்கு அவள் மீது மெல்லிய ஈர்ப்பு ஒன்று அவனுக்கு தெரியாமலே இருந்தது. அதனால் தான் அவள் யுவராஜ்ஜுடன் முத்த காட்சியில் நடிப்பதை கூட அவன் விரும்பவே இல்லை. அவள் தளத்துக்கு வந்ததும் பாடலுக்கான காட்சி விவரிக்கப்பட, அவளும் அதனை உள்வாங்கி நடிக்க ஆரம்பிக்க, அங்கே ஸ்ரீ அருகே அமர்ந்து இருந்த ராமின் விழிகள் அவளை விட்டு நகரவே இல்லை.
ஸ்ரீ கூட ராமை திரும்பி பார்த்து விட்டு, "என்ன இவன் இப்படி முழுங்குற போல பார்க்கிறான்" என்று தான் நினைத்துக் கொண்டான். பாடலுக்கு நடனமாடிய அக்ஷராவின் விழிகள் கூட ராமில் சில கணங்கள் பதிந்து மீண்டன. பிரகாஷ், "கட்" சொன்ன அடுத்த கணமே வேகமாக அங்கே அமர்ந்து இருந்த ராமை நோக்கி வந்த அக்ஷராவோ, "உன் கிட்ட பேசணும் ராம்" என்றாள்.
அவனோ குரலை செருமிக் கொண்டே, "என்ன பேசணும்??" என்று கேட்க, அக்ஷராவோ அவன் அருகே இருந்த ஸ்ரீயை ஒரு கணம் பார்த்து விட்டு, "அந்த மரத்தடிக்கு போகலாம்" என்றாள். ராமோ, "இந்த இடம் நல்லா தானே இருக்கு" என்று சொல்ல,
ஸ்ரீயோ, "உன் கூட தனியா பேசணுமாம் டா" என்க. அக்ஷராவோ, "உனக்கு புரியுது... புரிய வேண்டியவங்களுக்கு புரியலையே, சரியான டியூப் லைட்" என்று சொல்லி விட்டு மரத்தடிக்கு செல்ல, அதைக் கேட்ட ஸ்ரீ சத்தமாக சிரித்தான். "போதும்" என்று அவனிடம் சொன்ன ராமோ, பெருமூச்சுடன் எழுந்து மரத்தடிக்கு சென்றதுமே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நின்ற அக்ஷராவோ, "நேரே விஷயத்துக்கு வரேன்… எதுக்கு என்னை அப்படி பார்த்துட்டு இருக்க? லவ் பண்ணுறியா??" என்று கேட்டாள்.
அவனோ, "ஹலோ ஒழுங்கா நடிக்கிறியான்னு பார்த்தேன் அவ்ளோ தான். லவ் அது இதுன்னு பேசிட்டு இருக்க" என்றான் கடுப்பான குரலில். அவள் கேட்டதுமே அவனுக்கு தூக்கி வாரிப் போட்டாலும் கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டு தான் இருந்தான்.
அவளோ அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "சோ சாருக்கு என்னை பிடிக்கல" என்றாள். அவனோ, "இல்லை" என்று அழுத்தமாக சொல்ல, "சரி ஓபன் ஆஹ் கேக்கிறேன், எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு… கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று கேட்டாள். அதைக் கேட்டு அவளை அதிர்ந்து பார்த்த ராமோ, "லூசா நீ?? என்ன பேசுற??" என்று கேட்க,
அவளோ, "ஓவரா பில்ட் அப் பண்ணாதே… உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றாள் நக்கல் குரலில். அவனோ, "முதல்ல கனவு காணுறத நிறுத்து, என் மனசில நந்திதாவை தவிர வேற யாருக்கும் இடம் இல்ல" என்க, அவளோ, "அட… அடுத்தவன் பொண்டாட்டிய மனசில வச்சுப்பியா நீ?? இரு யுவா சார் கிட்ட போட்டு கொடுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே நகர முற்பட,
அவள் கையை எட்டி பிடித்தவன், "இப்போ என்னடி??" என்றான் சலிப்பாக. அவளோ, "கல்யாணம் பண்ணிக்கலாம் வா" என்றாள் சாதாரணமாக. "கல்யாணம் என்ன சின்ன விஷயமா? உனக்கு என் மேல ஏன் லவ் வந்திச்சுன்னு எனக்கு தெரியல... ஆனா நான் உனக்கு பொருத்தமே இல்லை" என்றான் அழுத்தமாக.
அவளோ, "என்ன பொருத்தம் இல்ல? எனக்கு யார் பொருத்தம்னு எனக்கு தெரியும், நீ ஒண்ணும் சொல்ல தேவல, உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு… கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னை தான் பண்ணிப்பேன்" என்று சொல்ல, அவனுக்கு எரிச்சலாக தான் இருந்தது.
அவனுக்கு என்ன தான் அவளை பிடித்து இருந்தாலும் ஏற்கனவே தகுதி பார்க்காமல் நந்திதாவை காதலித்து உண்டான வடு அப்படியே இருக்க, அவள் காதலை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. "உனக்கு பிடிச்சா போதுமா? எனக்கு பிடிக்க வேணாமா?" என்று சற்று கோபமாகவே கேட்டு விட, அவளும் சற்று உயர்ந்த குரலில், "ஏன் ராம் என்ன பிடிக்கல?" என்று கேட்டாள்.
"வெளிப்படையாவே சொல்லிடுறேன் அக்ஷரா, உன்னோட தரம் வேற என்னோட தரம் வேற, ஏற்கனவே இதெல்லாம் பார்க்காம காதலிச்சு தான் நான் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன், என்னை லவ் பண்ணுவ… அப்புறம் வீட்ல சம்மதிக்காம வேற யாரையும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அது உனக்கும் கஷ்டமா இருக்கும் எனக்கும் கஷ்டமா இருக்கும். அதனால இதெல்லாம் வேணாம்… புரிஞ்சுக்கோ" என்றான் வெகு நிதானமாக அவளுக்கு புரிய வைத்து விடும் முனைப்பில்.
அக்ஷராவோ சலிப்பாக, "பேசி முடிச்சிட்டியா ராம்?" என்று கேட்க, அவனும் இறுகிய முகத்துடன், "ம்ம்" என்றான். அவளோ, "எனக்கு நீ சொல்றது புரியுது ராம், ஆனா நான் அப்படி எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… எத்தனை தடை வந்தாலும் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று சொல்ல,
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "டயலாக் எல்லாம் நல்லா தான் பேசுற… ஆனா செட் ஆகல, போடி" என்று சொல்லி விட்டு செல்ல, அவளோ அவன் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டே நிலத்தில் உதைத்தவள் வேகமாக கேரவேனுக்குள் நுழைந்து கொண்டாள். ராம் அதன் பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் நிற்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான் அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல்.
அன்றைய நாள் அப்படியே நகர, அன்று மாலை ஸ்ரீயை அழைத்த யுவராஜ்ஜோ, "இன்னைக்கு பக்கத்தில இருக்கிற கோவிலுக்கு போகலாம்டா" என்றான். அவனை அதிசயமாக பார்த்த ஸ்ரீயோ, "இதெல்லாம் நம்புற போல இல்லையே" என்று சொன்னான். ஆம் யுவராஜ் தான் அதிகமாக கோவில் செல்லவே மாட்டானே.
யுவராஜ்ஜோ, அடக்கப்பட்ட புன்னகையுடன், "நந்திதா ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கோவிலுக்கு போவா" என்று சொல்ல, ஸ்ரீயோ, "அதானே பார்த்தேன்" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "எல்லாரும் ஷாப்பிங் போகலாமான்னு கேட்டாங்க, அத தான் உன் கிட்ட கேக்க வந்தேன், அவங்கள அனுப்பிடலாம்... நாம கிளம்பலாம்" என்று சொன்னவன் அதன் படியே அவர்களை அனுப்பி விட்டு யுவராஜ்ஜுடன் கிளம்ப, ராம் மட்டும் எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தான்.
அன்று அக்ஷராவுடன் பேசியதில் இருந்தே அவனுக்கு மனதில் சலனம் உருவாகி இருந்தது. இதே சமயம், "சீக்கிரம் வா பார்வதி" என்று ஷங்கர் மகனை தூக்கிக் கொண்டே வாசலுக்கு வர, "இதோ வந்துட்டேன்" என்று சொன்னபடி வாசலுக்கு வேகமாக வந்த நந்திதாவோ, "திலீப்பை கொடுங்க" என்று குழந்தையை வாங்க கையை நீட்ட,
ஷங்கரோ, "நானே தூக்கி வரேன்" என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவளும் பின்னால் நடந்து சென்றாள். கோவிலுக்குள் பார்வதியுடனும், குழந்தையுடனும் நுழைந்த ஷங்கரோ அங்கே ஸ்ரீ மற்றும் பிரகாஷுடன் நின்ற யுவராஜ்ஜைக் கண்டதுமே, "பார்வதி… சினிமாக்காரங்க நிக்கிறாங்க" என்று சொல்லிக் கொண்டே அவர்களை நோக்கி நடக்க, பார்வதிக்கோ தூக்கி வாரிப் போட்டது.
"சாமி கும்பிடலாம் பாவா" என்று கெஞ்சுதலாக கேட்க, ஷங்கரோ, "பார்த்தும் பார்க்காத போல போறது சரி இல்ல பார்வதி" என்று மலையாளத்தில் பேசிக் கொண்டே குழந்தையுடன் அவர்களை நோக்கி நடக்க அவளும் வேறு வழி இல்லாமல் பின் தொடர்ந்தாள். யுவராஜ்ஜோ கோவில் சிற்பங்களை பார்த்துக் கொண்டு இருக்க ஸ்ரீ தான் இருவரையும் பார்த்து விட்டு, "யுவா" என்றான் சங்கடமான குரலில்.
அவனோ, "என்னடா" என்று சொல்லிக் கொண்டே குழந்தையுடன் ஜோடியாக வரும் ஷங்கரையும், நந்திதாவையும் பார்த்த கணத்தில் அவன் முகம் இறுகி போக, கஷ்டப்பட்டு உணர்வுகளை அடக்கிக் கொண்டே நின்று இருந்தான். யுவராஜ் அருகே வந்த ஷங்கரோ, "சார் எப்படி இருக்கீங்க? கோவிலை சுத்தி பார்க்க வந்தீங்களா??" என்று கேட்க, அவனோ, "ம்ம்" என்று சொன்ன கணமே அவன் விழிகள் நந்திதாவில் ஒரு கணம் படிந்து மீண்டது.
அத்துடன் நில்லாமல் அவன் கண்களோ ஷங்கரின் கையில் இருந்த குழந்தையில் ஆராய்ச்சியாக படிய, "உன் குழந்தையா?" என்று கேட்டான். ஷங்கரோ, "ஆமா சார்… அப்படியே என்னை போலவே இருக்குல்ல" என்க, அவன் மூக்கு விடைக்க கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டே குழந்தையை நோக்கி கையை நீட்ட குழந்தையும் அவனிடம் அழாமல் ஒட்டிக் கொள்ள, "அதிசயமா இருக்கே... அழாம இருக்கான்" என்று சொன்னான் ஷங்கர்.
அதுவரை அவர்கள் சம்பாஷனை மலையாளத்தில் இருக்க ஒரு கணம் தனது கையில் இருந்த குழந்தையை பார்த்த யுவராஜ், "பேர் என்ன?" என்று கேட்க, ஷங்கரோ, "திலீப்" என்றான். "ம்ம், திலீப்... எனக்கு தப்பாம பிறந்து இருக்க” என்று தமிழில் உரைக்க, ஷங்கரோ புரியாமல் பார்க்க, "அவன் அப்பா போலவே இருக்கான்னு சொன்னேன்" என்றான் மலையாளத்தில்.
ஷங்கரோ, "ஓஹ்" என்று புன்சிரிப்புடன் சொன்னபடி குழந்தையை வாங்கி கொண்டே, "சாமி கும்பிட்டு வர்றோம்" என்றபடி முன்னே செல்ல, பேயறைந்தது போல நின்றது என்னவோ பார்வதி தான். ஷங்கரின் முதுகை வெறித்த யுவராஜ் முன்னே நின்ற பார்வதியை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்க்க,
அவளோ, "என் குழந்தை எப்படி உங்களுக்கு தப்பாம பிறக்கும்??" என்று மலையாளத்தில் கேட்க, யுவராஜ்ஜோ, "பார்த்தியாடா" என்று ஸ்ரீயிடம் சிரித்தபடி கேட்டு விட்டு பார்வதியை பார்த்தவன், "பெண்குட்டிக்கு தமிழ் அறியுமோ??" என்று கேட்க, அவளோ அதிர்ச்சியுடன் விழிகளை விரித்துக் கொண்டபடி, "எனக்கெப்படி தமிழ் தெரியும்??" என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு குழப்பமாகவே நடந்து சென்றாள்.
வேல்விழி 34
நந்திதாவோ ஷங்கரை பின் தொடர்ந்து கோவிலுக்குள் செல்ல, அவள் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜ்ஜோ, "வாடா உள்ளே போகலாம்" என்று சொல்லிக் கொண்டே அவர்களை பின் தொடர முற்பட, ஸ்ரீயோ, "டேய்! வேணாம்டா, நீ வேற எப்போ என்ன பண்ணுவேன்னு வேற தெரியல" என்றான்.
யுவராஜ்ஜோ, "பச், ஒண்ணும் பண்ண மாட்டேன்… கோவில்ல வச்சு என்ன பண்ண போறேன்? நீ வா" என்று சொல்லிக் கொண்டே அவன் தோளில் கையை போட்டு அழைத்து சென்றான். நந்திதாவும் ஷங்கரும் அருகருகே சன்னிதானத்தில் நின்று இருக்க, வெளியே வந்த பூசாரியிடம், குடும்பத்தவர்கள் அனைவரினதும் பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் கூறினான் ஷங்கர்.
அவர்களுக்கு நேர் எதிரிலேயே யுவராஜ்ஜூம் ஸ்ரீயும் நின்று இருக்க, யுவராஜ்ஜின் விழிகளோ அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிணைப்பை தான் ஆராய்ந்து கொண்டு இருந்தது. அவன் பார்த்துக் கொண்டு இருந்ததாலேயே சங்கடப்பட்ட நந்திதாவோ, "பொறுக்கி, இங்க தான் பார்த்துட்டே இருக்கான்" என்று திட்டிக் கொண்டே கண்களை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்க, பூசையை முடித்து விட்டு சிந்தூரைக் கொண்டு வந்த பூசாரியோ, "இத வச்சு விடு" என்று ஷங்கரிடம் சொல்ல,
அவனோ, "பார்வதி" என்று மெதுவாக அழைக்க, அவளும் கண்களை திறந்தாள். பூசாரியோ, "இத நீ உன் மனைவிக்கு வச்சு பார்த்ததே இல்ல" என்று சொல்ல, அவனோ, "குழந்தையை கைல வச்சிட்டு நான் எப்படி ஐயா வைக்கிறது? அவளே வச்சுப்பா" என்று சொன்னதுமே நந்திதா எதுவும் பேசாமல் சிந்தூரை எடுத்து நெற்றியில் வைக்க, யுவராஜ்ஜோ, "ம்ம் ஹானெஸ்ட் ஆஹ் இருக்கானே" என்று நினைத்துக் கொண்டவன் இப்போது கிட்டத்தட்ட உறுதியே செய்து இருந்தான் அது நந்திதா என்று.
அவர்கள் கோவிலை சுற்றும் போதும் பின்னாலயே சுற்றி வர, ஸ்ரீயோ, "ஸ்கூல் பசங்க போல பண்ணிட்டு இருக்கோம் யுவா" என்றான். அவனோ, "வேற வழி இல்லடா, வா" என்று சொல்லிக் கொண்டே அவர்களை பின் தொடர்ந்தவனோ கோவில் வாசலுக்கு வந்ததுமே, "ஷங்கர்" என்று அழைக்க, அவனும் திரும்பிப் பார்த்தவன், "சொல்லுங்க சார்" என்றான்.
யுவராஜ்ஜோ, "வீட்டுக்கு தான் போறேன்… வா டிராப் பண்ணிடுறேன்" என்க, அவனோ, "இல்ல சார், பரவாயில்லை" என்று சிரித்தபடி சொல்ல, "வா ஷங்கர்" என்று அழுத்தமாக அழைத்தான் யுவராஜ். இந்த கணத்தில் நந்திதாவின் விழிகளோ யுவராஜ் மீது கோபமாக படிய, ஸ்ரீயோ மனதுக்குள், "முறைக்க வேண்டியவன விட்டுட்டு யாரை முறைக்கிறான்னு பாரு" என்று நினைத்துக் கொண்டான்.
ஷங்கரும் அவன் கோரிக்கையை தட்ட முடியாமல் அவர்கள் வண்டியில் ஏறி விட, யுவராஜ் தன் மனதில் இருந்த சந்தேகத்தை எல்லாம் நாசூக்காக கேட்டுக் கொண்டான். "அப்புறம், சொந்த ஊர் இது தானா ஷங்கர்?" என்று கேட்க, அவனோ, "இல்லன்னும் சொல்ல முடியாது ஆமான்னும் சொல்ல முடியாது" என்று மழுப்பலாகவே பேச,
யுவராஜ்ஜோ, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே பின்னால் திரும்பி நந்திதாவை ஒரு கணம் பார்த்து விட்டு, "பையனுக்கு எத்தனை வயசு?" என்று கேட்டான். ஷங்கரும், "ஆறு மாசம் ஆகுது சார்" என்று சொல்ல, "அப்போ இன்னும் ஆறு மாசத்தில பர்ஸ்ட் பேர்த் டே வந்திடும்ல, எப்போ பிறந்தான்?" எனறு கேட்க, ஷங்கரும் அவன் பிறந்த நாளை சொல்ல, யுவராஜ்ஜோ ஆழ்ந்த மூச்சுடன் முன்னால் திரும்பி கண்களை மூடி நாட்களை கணக்கு பார்க்க தொடங்கி விட்டான்.
குத்து மதிப்பாக, அவன் உருவாகிய நாளோ, அவனது மூத்த பெண் குழந்தையின் பிறந்த நாளை நெருங்கி இருக்க, அவனுக்கோ பிறந்த நாளுக்கு முன்னால் குடித்து விட்டு அவள் ரகளை செய்ததும் அவளை முத்தமிட்டு அடக்கி அவளுள் அடங்கி போனதுமே நினைவுக்கு வர, அவன் இதழில் மெல்லிய கீற்று போன்ற புன்னகை தோன்றி மறைந்தது.
இதற்கு மேல் அவனுக்கு என்ன ஆதாரம் வேண்டும்? இது வரை அவள் நந்திதா தான் என்று உறுதியாக தெரிந்தாலும் ஷங்கரின் மனைவியாக இருந்து விடுவாளோ என்று ஒரு சலனம் இருந்து கொண்டு தான் இருந்தது. இப்போது அதுவும் நீங்கி விட, லேசாக தன்னை உணர்ந்தவனோ, அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
அவர்களை வீட்டில் இறக்கி விட்ட கணத்தில், "சார் வீட்டுக்குள்ள வாங்க" என்று ஷங்கர் அழைக்க, ஸ்ரீயோ, "இல்லை" என்று ஆரம்பிக்க, "வர்றோம்" என்று சொல்லிக் கொண்டே யுவராஜ் வண்டியில் இருந்து இறங்க, நந்திதாவோ, "சும்மா பேச்சுக்கு கூப்பிட்டா வந்திட வேண்டியது" என்று நினைத்தபடியே உள்ளே செல்ல, ஸ்ரீயோ, "அட ஏன் டா" என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்றான்.
உள்ளே நுழைந்த யுவராஜ்ஜின் விழிகளோ அங்கே இருந்த திருமண புகைப்படத்தை தான் தேடி அலைந்தது. அந்த புகைப்படமும் ஹாலில் பெரிதாக மாட்டி வைக்கப்பட்டு இருக்க, அவனோ வலுக்கட்டாயமாக ஷங்கரை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, "கல்யாண போட்டோவா?" என்று கேட்டபடி அதன் அருகே சென்று நின்று கொண்டே அதில் இருக்கும் இருவரையும் ஆழ்ந்து பார்த்தான்.
ஷங்கரோ, "பார்வதி, பையன் தூங்கிட்டான், படுக்க வச்சிட்டு வந்து ரெண்டு பேருக்கும் காஃபி போட்டு கொடு" என்று மகனை கொடுக்க, அவளும் குழந்தையை தூக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தவள் அவனை தூங்க வைத்து விட்டு, சமயலறைக்குள் நுழைந்து காஃபி போட ஆரம்பித்து இருந்தாள். யுவரேஜ்ஜின் விழிகளோ அவர்கள் புகைப்படத்தை ஆராய்ந்த கணத்தில், கீழே அது ஈடுபட்டு இருந்த தினமும் அதில் இருக்க,
அவன் புருவமோ சுருங்கி போனது. "இது பல வருஷங்கள் முன்னாடி எடுக்கப்பட்டு இருக்கு… சோ இவனோட உண்மையான பைவ் போட்டோன்னு தோணுது, அந்த பொண்ணு இப்போ எங்க?" என்று யோசித்தவனுக்கு இப்போது தான் நடந்து இருக்கும் சம்பவங்களை இலகுவாக கோர்க்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னுமே விஷயங்களை கறக்கும் பொருட்டு, அங்கே இருந்த இருக்கையில் அமர, காஃபியுடன் வந்தாள் நந்திதா.
அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே காஃபியை எடுக்க, அவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவே இல்லை. யுவராஜ்ஜோ, "கல்யாண சேலை எங்க எடுத்தீங்க பார்வதி நல்லா இருக்கே" என்று கண்களால் போட்டோவைக் காட்டி கேட்க, அவளோ புகைப்படத்தை புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு…
திரு திருவென விழித்துக் கொண்டே, அங்கே நின்ற ஷங்கரை திரும்பிப் பார்க்க, அவனோ, "ஆஹ் அது ஊர்ல இருக்கிற கடை ஒண்ணுல தான் சார், கடையோட பெயர் ஆண்டாள் டெக்ஸ்டைஸ்ல்" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "பார்வதி மறந்துட்டாங்களா என்ன? நீங்க பதில் சொல்றீங்களே" என்று கேட்டான் சின்ன புன்னகையுடன்.
ஷங்கரோ பெருமூச்சுடன், "ஆமா சார், அவ எல்லாமே மறந்துட்டா, ஒன்றரை வருஷம் முன்னாடி அருவியில் குளிக்க போன நேரம் ஆக்சிடென்ட் ஆகி, அதுக்கப்புறம் எதுவுமே நினைவில இல்ல" என்றான். ஸ்ரீயோ அதனைக் கேட்டு விழிகளை விரிக்க, அவனை அர்த்தமுள்ள பார்வை ஒன்றைப் பார்த்து விட்டு மீண்டும் ஷங்கரைப் பார்த்த யுவராஜ்ஜோ, "ஐயோ பாவம்ல" என்றான்.
நந்திதாவோ எதுவும் பேசாமல் ஷங்கர் அருகே நின்று இருக்க, அவளை மேலிருந்து கீழ் ஒரு கணம் பார்த்து விட்டு, காஃபியைக் குடித்தவன் இதழ்கள் மெதுவாக விரிந்து கொண்டது. மனைவியின் கைப்பக்குவம் நன்கு அறிந்தவன் அல்லவா அவன்?
ஸ்ரீயும் கூட காஃபியைக் குடித்ததும் அது நந்திதாவின் கைப்பக்குவத்தை உணர்த்த, அவனுக்கும் நண்பனின் வாழ்க்கை சீரானதை நினைத்து மென் புன்னகை தோன்றினாலும் ஷங்கர் மேல் கொலைவெறி ஆத்திரம் உண்டானது. ஆனாலும் மௌனமாகவே காஃபியை குடித்து முடிக்க, யுவராஜ்ஜோ ஷங்கரிடம், "ஸ்ரீ உங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கும் தோட்டத்தை பார்க்கணும்னு சொன்னான்.
நான் ரெஸ்ட் ரூம் போகணும்" என்க. ஷங்கரோ, "பார்வதி, சாருக்கு ரெஸ்ட் ரூமைக் காட்டு, நான் இந்த சாரை அழைச்சிட்டு போறேன்" என்று சொல்லிக் கொண்டே, "வாங்க சார்" என்று ஸ்ரீயை அழைக்க, அவனோ, "நான் எங்கடா பார்க்கணும்னு சொன்னேன்" என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே ஷங்கருடன் வெளியே சென்றான்.
அப்போது தான் தானும் யுவராஜ்ஜூம் தனியாக இருப்பதை உணர்ந்த நந்திதாவோ, "பாவா" என்று நலிந்த குரலில் அழைக்க முற்பட, "ரெஸ்ட் ரூம் எங்க பார்வதி?" என்று யுவராஜ் கேட்டான் அவள் குரலுக்கும் மேலாக. அவளோ அவனை முறைத்தபடி, ரெஸ்ட் ரூமை நோக்கி செல்ல, அவளை பின் தொடர்ந்து சென்ற யுவராஜ்ஜோ சுற்றி யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டே முன்னே சென்றவள் கையை பிடித்து இழுக்க, அவளோ பதறி போனாள்.
சட்டென அவளை சுவற்றில் சாற்றி தனது மேனியால் அவள் மேனியை முற்றாக அழுத்தியவனோ, அவள் "பாவா" என்று சத்தம் போட முதலே அவள் இதழ்கள் தன்னிதழ் கொண்டு அடைத்து இருக்க, அவளோ அதிர்ச்சியுடன் விழிகளை திறந்து கொண்டாள். ஆழாமான முத்தம் அதில், அவளுக்கோ சத்தம் போட முடியாமல் போக, அவனோ கண்களை மூடி அவள் இதழ் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டே முத்தமிட்டவன் கரமும் சும்மா இருக்காமல் அவள் மேனியில் தடம் பதிக்க அவள் மேலும் பதறி போனாள்.
ஆறடி திடகாத்திரமான ஆண்மகனை அவளால் கொஞ்சம் கூட அசைக்கவே முடியவில்லை. அவனோ ஆசை தீர முத்தமிட்டுக் கொண்டு இருக்க, வெளியே சுற்றி பார்த்து விட்டு, "இன்னும் அவனை காணல, என்ன பண்ணிட்டு இருக்கானோ" என்று நினைத்த ஸ்ரீயோ, "நானும் ரெஸ்ட் ரூம் போகணும்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய,
அவர்கள் நல்ல நேரத்துக்கு ஷங்கருக்கு போன் வர, அவன் போனுடன் வெளியே நின்று விட்டான். வேகமாக உள்ளே வந்த ஸ்ரீயின் கண்ணில் பட்டது என்னவோ யுவராஜ் முத்தமிடும் காட்சி தான். நந்திதாவோ கண்ணீருடன் அவனை விலக்க போராடி கொண்டு இருக்க, அவனோ அதனை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை.
இந்த காட்சியை கண்ட ஸ்ரீயோ, "அடப்பாவி" என்று வாயில் கையை வைத்தவன், "யுவா" என்று அழைத்ததுமே அவளை விட்டு மெதுவாக விலகிக் கொண்டான் யுவராஜ். அவளோ கண்ணீருடன் அவனை முறைத்துப் பார்த்தவள், அவனை அறையை கையை ஓங்க, அவள் கையை பிடித்தவனோ, "இதுக்கே இப்படின்னா இன்னும் இருக்குடி" என்று சொல்லிக் கொண்டே ஒற்றைக் கண்ணை அடித்தவன்,
அந்த இடத்தை விட்டு அகன்று அங்கே அதிர்ந்து நின்ற ஸ்ரீயின் தோளில் கையை போட்டுக் கொண்டே வெளியேற போகவும் ஷங்கர் உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது. அவனைக் கண்டதுமே கண்களை துடைத்துக் கொண்ட நந்திதாவோ வாயையும் துடைத்து விட்டு கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொண்டே நின்று இருக்க,
ஷங்கரோ யுவராஜ்ஜிடம், "சரியா சார்?" என்று கேட்க, அவனோ, "பரம திருப்தி" என்று கண் சிமிட்டி சொல்லி விட்டு வாசலை தாண்ட போனவன் ஒரு கணம் திரும்பி அங்கே அவனை வெறித்தபடி நின்று இருந்த நந்திதாவிடம், "வரேன்" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லிக் கொண்டே ஷங்கரிடம், "உன் நம்பரை கொடு" என்று வாங்கியவன் வெளியேறி வண்டியில் ஏறிக் கொண்டான்.
அவனை தொடர்ந்து ஏறிக் கொண்ட ஸ்ரீயோ, "என்னடா இது?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "அது நந்திதான்னு உனக்கு தெரியவே இல்லையா?" என்று கேட்க, "நல்லாவே தெரியுது… ஆனா அவ எல்லாமே மறந்து போய் இருக்கா, இப்போ என்ன பண்ணுறது? போலீஸ் கிட்ட போகலாமா? அந்த ஷங்கரை சும்மா விட கூடாதுடா" என்று கேட்டான்.
யுவராஜ்ஜோ, "இல்லடா போலீஸ் வேணாம்… இவ்ளோ நாள் ஷங்கர் நினச்சு இருந்தா அவளை என்ன வேணும்னாலும் பண்ணி இருக்கலாம், ஆனா எதுவுமே பண்ணல. அவன் மனசில என்ன இருக்குன்னு தெரியணும், அவன் பொண்டாட்டிக்கு என்னாச்சுன்னு தெரியணும்… அதுக்கு அவன் ஊரை கண்டு பிடிச்சு விசாரிக்கணும். எல்லாத்துக்கும் மேல நந்திதாவுக்கு எதுவுமே நினைவுல இல்ல... இப்போ நான் போலீசை வச்சு என்ன பண்ணினாலும் என்னை வில்லன் போல தான் பார்ப்பா… என்னை மொத்தமா வெறுத்துடுவா டா” என்று சொன்னான்.
ஸ்ரீயோ, "உண்மையை சொன்னா அவ ஏன் வெறுக்க போறா?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "நாம சொன்னா நம்புவான்னு நினைக்கிறியா? கண்டிப்பா இல்ல. வேணும்னா செக் பண்ணி பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டே அவர்கள் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினார்கள்.