ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 35

pommu

Administrator
Staff member
வேல்விழி 35

வீட்டுக்கு வந்து நேரே அறைக்குள் புகுந்த யுவராஜ்ஜோ, பால்கனியில் நின்று நீண்ட நேரம் யோசித்தவனுக்கு நினைவில் வந்தது என்னவோ ஜெய் தான். போலீஸுக்கு நேரடியாக போகாமல் மறைமுகமாக அவனை வைத்து பிரச்சனையை தீர்க்க நினைத்தவனோ ஜெய்க்கு அழைத்து இருந்தான்.

போனை எடுத்த ஜெய்யோ, "ஹாய் யுவா. எப்படி இருக்க? கேரளா என்ன சொல்லுது?" என்று கேட்க, அவனோ குரலை செருமியவன், "இங்க நான் நந்திதாவை பார்த்தேன்" என்றான் அழுத்தமாக.

ஜெய்யோ, "வாட்?" என்று அதிர, யுவராஜ்ஜோ, "யெஸ் டா" என்று ஆரம்பித்தவன் அனைத்தையும் சொல்லி முடிக்க, ஜெய்யோ, "அவன சும்மாவா விட்ட? அங்க போலீஸ்ல கம்பிளைன் பண்ணி உள்ள தள்ள வேணாமா?" என்று ஆத்திரத்துடன் கேட்க, யுவராஜ்ஜோ, "இல்லடா அவன் இன்டென்ஷன் என்னன்னு தெரியணும்… நந்திதா மேல அவன் உரிமை எடுத்துக்கவே இல்லை,

ஆனா நந்திதா பக்கத்தில இருக்கணும்னு ஆசைப்படுறான்… போலீஸ் கேஸுன்னு போனா அது கண்டிப்பா பெரிய நியூஸ் ஆஹ் மீடியாவில் வரும், ஷங்கர் அப்புறம் ஜென்மத்துக்கும் வெளிய வர முடியாது… அண்ட் அவன் இன்டேன்க்ஷன் என்னன்னு தெரியாம அவனை தண்டிக்கவும் எனக்கு பிடிக்கல" என்று நிதானமாக பேச, ஜெய்யோ, "ம்ம், முதல் முறை நமக்கு தீங்கு செய்யுறவனுக்கு நன்மை செய்ய நினைக்கிறவன பார்க்கிறேன்" என்று சொல்ல,

யுவராஜ்ஜோ இதழ் பிரித்து சிரித்தவன், "வாழ்க்கைல மன்னிக்க முடியாத தப்பெல்ல்லாம் செய்தவன்டா நான், அதுவே எனக்கு ஒரு பாடமா இருக்கு… இப்போ எல்லாமே ரொம்ப நிதானமா யோசிக்கிறேன்" என்று சொன்னான். ஜெய்யோ, "ம்ம், ஓகே இப்போ சொல்லு நான் ஏதும் ஹெல்ப் பண்ணனுமா?" என்று கேட்க, அவனோ, "ஷங்கரோட நம்பர் இருக்கு… நீ அவன் கால்ஸ் எல்லாம் ட்ரேஸ் பண்ணி அவனோட சொந்த ஊர் எதுன்னு கண்டு பிடிச்சு சொல்லணும். லீகல் ஆஹ் போகாம மறைமுகமா பண்ணனும், மீதி நான் பார்த்துகிறேன்" என்று சொல்ல.

ஜெய்யோ, "வேற ஸ்டேட், அது தான்" என்று இழுக்க, யுவராஜ்ஜோ, "கஷ்டம்னா சொல்லுடா, வேற ஏதும் ஐடியா பண்ணலாம்" என்றான். ஜெய்யோ, "தட்ஸ் ஓகே டா, பார்த்துக்கலாம்" என்று சொன்னபடி நம்பரை வாங்கி விட்டு வைத்து விட, பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்தவனுக்கு நந்திதா கிடைத்து விட்டாள் என்று முழுதாக சந்தோஷப்படவும் முடியவில்லை.

இந்த பிரச்சனையில் இருந்து யாருக்கும் பாதிப்பு வராமல் மீள வேண்டும் என்று மட்டுமே அவன் மொத்த எண்ணமும் இருந்தது. அன்று இரவு யுவராஜ்ஜூக்கு நிம்மதியாக தூக்கம் வந்த போதிலும் தூக்கத்தை தொலைத்தது என்னவோ நந்திதா தான். அவன் முத்தமிட்ட இடத்தை வருடும் போது குறுகுறுக்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

"அவன் முத்தமிட்டது எனக்கு அருவருக்கவில்லையா?" என்கின்ற கேள்வி அவள் மனதில் ஓட, குற்ற உணர்வில் தவித்து போனவளது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே நிற்காமல் வழிந்தது. அவள் நினைவுகள் அழிந்தாலும் அவன் மட்டுமே அவளை உள்ளும் புறமும் தீண்ட உரிமை உடையவன் என்று அவள் ஆழ் மனதுக்கு தெரியும் அல்லவா? அப்படி இருக்கும் போது எங்கனம் அருவருப்பு தோன்றும் அவளுக்கு?

அவன் முத்தமிட்ட சமயம் அவனை தள்ளி விட அவள் போராடி தோற்றாலும் இப்போது அவளுக்கு அருவருத்து இருக்க வேண்டும் அல்லவா? ஏன் அருவருக்கவில்லை? என்கின்ற கேள்வியே அவள் நிம்மதியை குலைத்து விட, "என்னை மன்னிச்சுடுங்க பாவா" என்று ஷங்கரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டவளோ நாளைக்கே யுவராஜ்ஜை சந்தித்து பேசி விடும் முடிவுடன் கண்ணயர்ந்து போனாள்.

அடுத்த நாள் காலையில் ஷங்கர் வேலைக்கு கிளம்பியதுமே குழந்தையை பக்கத்து வீட்டு சேச்சியிடம் கொடுத்தவளோ, "மனசு கொஞ்சம் சரி இல்லாம இருக்கு சேச்சி கோவிலுக்கு போயிட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே கிளம்பியவள் கோவிலில் சென்று நீண்ட நேரம் அமர்ந்து கண்ணீர் வடித்தாள். நிஜம் அறியாத பெண்ணவளோ நிழலை நம்பி நிஜத்தை வெறுத்தாள்.

இறுதியாக கண்ணீரை துடைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பியவள் நேரே சென்றது என்னவோ யுவராஜ்ஜின் வீட்டுக்கு தான். அங்கே வாசலில் ராம் நின்று இருக்க, நடந்து வந்தவளை விழி விரித்து அதிர்ந்து பார்த்தவனோ, "நந்திதா" என்க. அவளோ அவனை புரியாமல் பார்த்தவள், "சார் இருக்காரா?" என்று மலையாளத்தில் கேட்க, அவனோ, "புரியல" என்றான் தமிழில்.

"நான் பேசுறது புரியலையா?" என்று அவள் இப்போது தமிழில் சரளமாக கேட்க, "இப்போ புரியுது" என்று ராம் பதிலளிக்க, அப்போது தான் உணர்ந்து கொண்டாள் தான் சரளமாக தமிழ் பேசுவதை. சட்டென்று தலையை உலுக்கியவள், "எனக்கு எப்படி சரளமா தமிழ் வருது?" என்று யோசித்துக் கொண்டே, "சினிமாவுல நடிக்கிற சார் இருக்காரா?" என்று கேட்க,

அவனோ, "யுவராஜ் ஆஹ்?" என்று கேட்க, அவளோ, "அவர் பெயர் தெரியல" என்றாள். ராமோ பெருமூச்சுடன், "உள்ளே தான் இருக்கார்" என்று சொல்ல, அவளோ விறுவிறுவென உள்ளே செல்ல, ராமோ அவள் முதுகை வெறித்துப் பார்த்தான்.

உள்ளே வந்தவளை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்க, ஆளாளுக்கு, "நந்திதா" என்று தான் அவளை விளித்தார்கள். அவளோ யாரையும் சட்டை செய்யாமல் நேரே ஸ்ரீயிடம் வந்தவள், "நேத்து உங்க கூட வந்தவர் எங்க?" என்று கேட்க, அவனோ அவள் தமிழ் பேசுவதை வியந்து பார்த்துக் கொண்டே, "மேலே" என்க. அவளும் விறு விறுவென மேலே ஏறி சென்றாள்.

ஸ்ருதியோ, "என்ன ஸ்ரீ, நம்ம யாரையுமே அவளுக்கு தெரியல போல" என்று சொல்ல, அவனோ, "நேற்றே சொன்னேன்ல, மொத்தமா மறந்துட்டா" என்று சொன்னான். ஸ்ரீ முதல் நாள் நடந்த அனைத்தையும் அங்கிருந்தவர்களிடம் சொன்னதால் யாருமே குழப்பம் அடையவில்லை. என்றாலும் அவளை நேரில் கண்டதுமே அதிர்ச்சி இருக்க தான் செய்தது.

யுவராஜ்ஜோ, பால்கனியில் நின்று சிகெரெட்டை புகைத்துக் கொண்டு நின்று இருந்தவன் அவளது சலங்கை சத்தத்தைக் கேட்டதுமே சிகரெட்டை கீழே போட்டு விட்டு சட்டென திரும்பி பார்த்தான். அவளோ நேரே அவன் முன்னே கலங்கிய கண்களுடன் நின்றவள், "உங்க கிட்ட பேசணும்" என்றாள் தமிழில்.

அவனோ, "அழகா தமிழ் பேசுற" என்றான் அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே. அடுத்த கணமே யுவராஜ் முன்னால் கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீருடன் நின்ற நந்திதாவோ, "என்னை விட்ருங்க… எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, கைக்குழந்தை கூட இருக்கு, பாவா கிட்ட சொல்லவும் முடியாம மறைக்கவும் முடியாம தவிப்பா இருக்கு…

அவருக்கு துரோகம் பண்ணுற போலவே இருக்கு” என்று விம்மி அழ அவளையே பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜ்ஜூக்கு அவள் மீண்டும் மீண்டும் பாவா என்று ஷங்கரை விளிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அது அவனது கோபத்தை அதிகரிக்க, "பாவா பாவான்னு சொல்லாதே… கடுப்பா இருக்கு" என்றான் எரிச்சலாக.

அவளோ கண்ணீரை துடைத்துக் கொண்டே அவனை முறைத்துப் பார்த்தவள், "நான் என்ன பேசிட்டு இருக்கேன்? நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? கொஞ்சம் கூட உங்களுக்கு உறுத்தலையா??" என்று சீறுதலாக கேட்க, "இல்லை" என்றான் அழுத்தமாக.

"ஐயோ" என்று தலையில் கையை வைத்துக் கொண்டே கீழே அமர்ந்தவள், "உங்களுக்கு என்ன தான் வேணும்??" என்று கலங்கிய கண்களுடன் கேட்க, அவள் விழிகளையே பார்த்துக் கொண்டே, "நீ தான் வேணும்" என்றான். "நான் கல்யாணம் ஆனவ" என்று ஆக்ரோஷமாக வெளியில் வந்தது அவள் பதில்.

"நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே” என்று அவன் சாதாரணமா கேட்க, சட்டென்று எழுந்தவள் அவன் அருகே வேகமாக வந்து அவன் ஷர்ட்டை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டே, "இப்படி பேச அசிங்கமா இல்லையா??" என்று கேட்டாள்.

அவனோ, "பொண்டாட்டி கிட்டே பேச என்ன அசிங்கம்??" என்று கேட்க, "இத உங்க பொண்டாட்டி கிட்ட பேசணும்… அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட பேச கூடாது, என்ன ஜென்மமோ?? பாவா கிட்ட சொன்னா உங்கள கொன்னுட்டு அவர் ஜெயிலுக்கு போய்டுவாருன்னு பயமா இருக்கு" என்க. அவனோ அவள் கழுத்தை சட்டென்று இறுக பற்றியவன், "இன்னொரு தடவை பாவான்னு சொன்ன சாவடிச்சிடுவேன்" என்றான் வெறி கொண்ட வேங்கையாக.

அவன் சீற்றத்தில் புள்ளி மானவளோ நடுங்கி தான் போனாள்.அவளோ அவன் கையை விலக்க போராட, சட்டென கையை அவள் கழுத்தில் இருந்து எடுத்தவன், தலையை கோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, "இங்க பாரு, நீ ஒண்ணும் அவன் பொண்டாட்டி இல்ல, என் பொண்டாட்டி, என் குழந்தைங்களுக்கு அம்மா, இப்போ உன் கைல இருக்கிற குழந்தை கூட எனக்கு பிறந்தது தான்” என்று கண்களை விரித்துக் கொண்டே ஆக்ரோஷமாக சொல்ல, அவளோ அவனை அதிர்ச்சியுடன் புரியாமல் பார்த்தாள்.

அவனோ, "நம்ப முடியலைல, இப்போ பாரு" என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்தவன், அதில் அவளுடன் நடந்த திருமணம் தொடக்கம் அனைத்து புகைப்படங்களையும் காட்ட, அவளோ வாயில் கையை வைத்துக் கொண்டே ரெண்டடி பின்னால் சென்றவளுக்கு உடல் நடுங்கி தான் போனது.

தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாத நிலையில் இருந்தவளோ மாயைக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாமல் தவித்து போனாள். அதே அதிர்ச்சியுடன் அவன் கையில் இருந்த போனை வாங்கி பார்த்தவள் கண்ணீர் அந்த போனை நனைக்க, புடவை முந்தானையால் போனை துடைத்து விட்டு மீண்டும் பார்த்தாள்.

ஆம் அது அவளே தான். அவனோ, "உன் பெயர் பார்வதி இல்ல நந்திதா, ஷங்கருக்கு தமிழ் தெரியாது… ஆனா உனக்கு தெரியும், எப்படின்னு யோசிச்சு இருக்கியா? உங்கள சுத்தி அவன் சொந்தம் யாருமே இல்ல, ஏன்னு கேட்டு இருக்கியா?" என்று கேட்க, அவளோ இல்லை என்று தலையாட்டிக் கொண்டே அவனை ஏறிட்டுப் பார்க்க, அவள் அருகே வந்தவனோ அவள் கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி காட்டி, "இது ஷங்கர் கட்டினதா?" என்று கேட்டான்.

அவளோ நடுங்கிய குரலில், "அவர் கட்டுன தாலி அருவில போய்டுச்சு… ரெண்டாம் தடவை தாலி கட்ட கூடாதுன்னு நானே கட்டிகிட்டேன்" என்று சொல்ல, இப்போது யுவராஜ்ஜூக்கு எஞ்சி இருந்த மன பாரமும் குறைந்த உணர்வாக, "இப்போ புரியுதா நான் என் உன்னை சுத்தி வரேன்… இவ்ளோ உரிமையா இருக்கேன்னு? ஏன்னா நீ என் பொண்டாட்டி நந்திதா" என்றான் அழுத்தமாக.

அவளோ போனை அவனிடம் கொடுத்து விட்டு கண்ணீரை துடைத்தவள், "பாவா ஒண்ணும் மோசமானவர் இல்ல, எங்க வீட்லயும் கல்யாண போட்டோ இருக்கு" என்று அவன் நினைத்த படியே நம்பாமல் பேச விரக்தியாக சிரித்தவன், "இருக்கிற குழப்பம் எல்லாம் தீர்த்துட்டு உன்னையும் என் குழந்தையையும் என் கூடவே அழைச்சு போவேன்" என்றான்.

அவளோ அவனை முறைத்துப் பார்த்தவள், "அது நடக்கும் போது பார்த்துக்கலாம், அதுவரைக்கும் என் மேல கை வைக்க கூடாது" என்று ஒற்றை விரல் நீட்டி சொன்னாள். அவளை பொறுத்தவரை யுவராஜ் புதியவன், இவ்வளவு நாள் கையில் வைத்து தாங்கிய ஷங்கரை அவளால் சந்தேகப்பட முடியவே இல்லை.

அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "அதுக்கு வாய்ப்பே இல்ல, பார்க்கிற நேரம் எல்லாம் கிஸ் பண்ணுவேன் தோணுற நேரம் எல்லாம் கட்டி பிடிப்பேன்" என்று கண் சிமிட்டி சொல்லி அடுத்த கணமே அவளை இறுக அணைத்து முத்தமிட்டு விலக, "போடா பொறுக்கி" என்று கடுப்பாக திட்டியவளோ இதழ்களை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டே போக எத்தனிக்க, "ஆமாடி பொறுக்கி தான்... நீ என் பொண்டாட்டின்னு நிரூபிக்கிற இன்னொரு அடையாளம் சொல்லவா?" என்று கேட்க,

அவளோ அவனை கேள்வியாக பார்க்க, குரலை செருமிக் கொண்டே தலையை கோதியவன், "உன்னோட கழுத்துக்கு கீழ ஒரு மச்சம் இருக்கு" என்று சொன்ன அடுத்த கணமே கையால் மார்பை மறைத்தவள், "ச்சீ" என்று அருவருப்பாக சொல்லிக் கொண்டே விறு விறுவென ஓடிச் செல்ல, அவன் இரு பக்கமும் தலையாட்டி இதழ் பிரித்து சிரித்துக் கொண்டான்.

அவள் மனமோ, "அதெப்படி தெரியும்? உண்மையாவே பொண்டாட்டியா இருப்பேனோ?" என்று தான் நினைத்துக் கொண்டே வேகமாக இறங்கி சென்றவள் யாரையுமே பார்க்காமல் விறுவிறுவென வீட்டை நோக்கி நடந்தாள்.
 
Super sis
 
Top