ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 36

pommu

Administrator
Staff member
வேல்விழி 36

அவளை தொடர்ந்து கீழே இறங்கி வந்த யுவராஜ் அருகே வந்த ராமோ, "கொஞ்சம் கூடவா நினைவு வரல?" என்று கேட்க, யுவராஜ்ஜோ பெருமூச்சுடன் இல்லை என்கின்ற தோரணையில் தலையாட்டிய கணம் அவன் போன் அலறியது. எடுத்தது வேறு யாருமல்ல ஜெய் தான்.

யுவராஜ்ஜூம், "சொல்லு ஜெய்" என்க. மறுமுனையில் இருந்தவனோ, "யுவா, அவன் ஊர் எதுன்னு கண்டு பிடிச்சிட்டேன்… இவ்வளவு சீக்கிரம் சிக்குவான்னு நானே எதிர்பார்ர்க்கல, காலைல தான் அவன் பிரெண்ட் கிட்ட பேசினான். ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு கேட்டான். அப்போ பிரென்ட் நம்பரை எடுத்து ட்ரேஸ் பண்ணி அவன் இருக்கிற இடத்தை கண்டு பிடிச்சிட்டேன்” என்றான். யுவராஜ்ஜோ மென் புன்னகையுடன், "பிரில்லியண்ட் டா, இடத்தை மட்டும் சொல்லு, நான் என் ஆட்களை வச்சு மீதியை பார்த்துகிறேன்" என்றான்.

"பெரும்பவூர்" என்று ஜெய்யும் இடத்தை சொல்ல, "ம்ம்" என்று சொல்லி விட்டு போனை வைத்த யுவராஜ்ஜிடம், "என்னடா ஆச்சு?" என்று கேட்டான் ஸ்ரீ. "ஷங்கரோட ஊர் தெரிஞ்சு போச்சு" என்று சொல்லிக் கொண்டே தனக்கு நம்பிக்கையான கேரளாவில் இருக்கும் ஒருவனுக்கு அழைப்பை மேற்கொண்டான்.

சினிமா நடிகன் அல்லவா? நிறைய தொடர்புகள் அவனுக்கு இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே? அவனிடம் இடத்தையும் ஷங்கரின் புகைப்படத்தையும் வாட்ஸ் அப் பண்ணியவன், "எல்லா டீட்டெயில்ஸ் உம் எனக்கு வரணும்" என்று சொல்லி விட்டு வைத்த பிறகே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

பிரகாஷோ, "இன்னைக்கு ஷூட்டிங் கேன்செல் பண்ணிடலாமா?" என்று யுவராஜ்ஜிடம் கேட்க, "நோ நோ, எடுத்துடுவோம்" என்று சொன்ன யுவராஜ்ஜோ மேலே சென்று விட்டான் ஆயத்தமாவதற்கு. இதே சமயம், அக்ஷராவோ, பெருமூச்சுடன் அறைக்குள் சென்று விட, ராமோ, "அப்போ நான் எங்கயாவது கிளம்புறேன்" என்று நழுவ முற்பட, அவன் தோளில் கையை போட்ட ஸ்ரீ, "நீ எங்க போக போற? ஷூட்டிங் வா" என்றான்.

ராமோ, "இல்லடா வேணாம்" என்க, ஸ்ரீயோ அவனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து ஷூட்டிங்குக்கும் அழைத்து சென்று இருந்தான். ஷூட்டிங் அருகே இருந்த பாறை அருகே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, யுவராஜ்ஜூம் அக்ஷராவும் அந்த பாடலுக்கு ஏற்ப நடனமாட ஆரம்பித்து இருக்க, ராமோ ஸ்ரீ அருகே யோசனையுடன் இருந்தவன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தான்.

மதனாவும் ஸ்ருதியும் அந்த இடத்தை சுற்றி பார்க்க சென்று விட, ராமை பார்த்த ஸ்ரீ, "என்னடா ஷூட்டிங்கை பார்க்காம எங்கயோ பார்த்துட்டு இருக்க?" என்று கேட்க, அவனோ, "பார்த்தாலே பிரச்சனை வரும் போல இருக்கு" என்று சலிப்பாக சொல்லிக் கொண்டான்.

"என்னடா பிரச்சனை?" என்று கேட்க, ராமுக்கும் அதனை மனதுக்குள் வைத்து இருக்கவே முடியவில்லை. ஏனோ உறுத்திக் கொண்டு இருக்க, பெருமூச்சுடன், "அன்னைக்கு ஷூட்டிங் பார்த்துட்டு இருந்தேன்ல, அந்த பொண்ணு லவ் பண்ணுறியான்னு கேக்குது" என்றான். ஸ்ரீயோ புருவம் சுருக்கி, "யாரு அக்ஷராவா?" என்று கேட்க,

ராமோ, "ம்ம்" என்று பதில் அளிக்க, "நீ என்ன சொன்ன?" என்று அவன் கேட்க, "அப்படி எல்லாம் இல்லன்னு சொன்னேன்" என்றான் ராம். "அதுக்கு அவ என்ன சொன்னா? நான் லவ் பண்ணுறேன், கல்யாணம் பண்ணிக்கலாம் வான்னு சொன்னா" என்று ராம் சொல்ல, இருமியபடி தனது தலையில் தட்டிய ஸ்ரீயோ, "என்னது? ப்ரொபோஸ் பண்ணினாளா?" என்று கேட்க, ராமோ, "ம்ம் அது தான் அவ இருக்கிற இடமே தலை வச்சு படுக்காம ஒளிஞ்சு ஓடுறேன். நீ தான் கூட்டி வந்து கோர்த்து விடுற" என்றான் ஆதங்கத்துடன்.

ஸ்ரீயோ, "சரி ஓபன் ஆஹ் கேக்கிறேன் உனக்கு அவளை பிடிக்காதா?" என்று கேட்க, அவனை மேலிருந்து கீழ் பார்த்த ராம், "இல்லை" என்றான். "நம்ப முடியலையே" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் ஸ்ரீ சொல்ல, "நம்பலன்னாலும் அது தான் நெசம்" என்று ராம் சொல்ல, "என் கிட்ட ஓபன் ஆஹ் பேசுடா, யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்" என்று அழுத்தமாக சொன்னான் ஸ்ரீ.

ராமுக்கும் மனம் நிலை இல்லாமல் இருக்க, மனதில் இருப்பதை பகிர்ந்து விட்டால் மனம் லேசாகி விடும் என்று தான் தோன்றியது. "நான் சொல்றத யார் கிட்டயும் சொல்ல கூடாது. முக்கியமா அந்த பொண்ணு கிட்ட சொல்லவே கூடாது" என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே சொன்னான் ராம். ஸ்ரீயோ அடக்கப்பட்ட சிரிப்புடன், "சொல்ல மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே போனில் ரெக்கார்டரை அவனுக்கு தெரியாமலே ஆன் பண்ணி இருந்தான்.

அவன் அப்போது விளையாட்டாக தான் பண்ணி இருந்தான். ஆனால் அதுவே எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை ஸ்ரீ உட்பட. "எனக்கு நிஜமாவே அக்ஷராவை ரொம்ப பிடிக்கும், காதலா இல்லையான்னு தெரியல… ஆனா அவ யுவராஜ் கூட க்ளோஸ் ஆஹ் நடிக்கும் போது கடுப்பா இருக்கும்" என்று சொல்ல. அதைக் கேட்டு அதிர்ந்து விழி விரித்த ஸ்ரீயோ, "அப்போ அது லவ் தானே ராம்" என்றான்.

ராமோ, "ஆனா அப்படி இருக்க கூடாதுன்னு தான் ஆசைப்படுறேன்" என்று கம்மிய குரலில் சொல்ல, ஸ்ரீ புரியாமல் பார்த்தான். குரலை செருமியவனோ, "நந்திதா விஷயத்தில என்ன ஆச்சுன்னு தெரியும் தானே? என் தகுதி எல்லாம் ரொம்பவே குறைவு ஸ்ரீ, என்ன தான் லவ் பண்ணினாலும் அக்ஷராவோட அப்பா இதுக்கெல்லாம் சம்மதிக்கவே மாட்டார். எதுக்கு மனசு காயப்படனும்னு தான் இதெல்லாம் விட்டு தள்ளி இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்… இன்னைக்கு காலைல கூட அந்த பொண்ணு முகம் ரொம்ப சோகமா இருந்திச்சு, நான் பேசாம இருக்கிறதால தான்னு தோணிச்சு, அத பார்த்ததுமே மனசு கஷ்டமா போச்சு" என்று சொல்ல,

அவனை விசித்திரமாக பார்த்த ஸ்ரீ, "இவ்ளோ லவ்வை வச்சிட்டு ஏன்டா? அவங்க அப்பா கிட்ட யுவாவை பேச வைக்கலாம், அவன் சொன்னா அவர் கேட்பார்" என்று சொல்ல, அவனை முறைத்த ராம், அது ஒன்னும் தேவல… அந்த பொண்ணு நாலு நாளைல என்ன மறந்தே போய்டும், இதோட முடிச்சுக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து செல்ல, அவன் முதுகை யோசனையுடன் பார்த்த ஸ்ரீயோ, "இவன் லைஃபை எப்படியாவது செட்டில் பண்ணி விடணும்" என்று நினைத்துக் கொண்டே அக்ஷராவை தேட,

அவளோ ஆடி முடித்து விட்டு கேரவேனுக்குள் நுழைந்து இருந்தாள். ஸ்ரீயோ, மென் சிரிப்புடன் வாட்ஸ் அப் இல் அவன் பேசிய ஆடியோவை அனுப்பி விட, அப்போது தான் களைப்பில் கண் மூடி அமர்ந்து இருந்த அக்ஷராவின் போன் அலறியது.

அவளோ போனை எடுத்தவள், "இந்த நேரத்தில ஸ்ரீ என்ன மெசேஜ் அனுப்பி இருக்கான்?" என்று யோசித்துக் கொண்டே அதனை கேட்டவளுக்கோ அதிர்ச்சியும் சந்தோஷமுமாக கண்கள் விரிய, "தேன்க் யூ சோ மச்" என்று பதில் அனுப்பி விட்டு, "ஹே ராம், இன்னைக்கு இருக்குடா உனக்கு" என்று சொல்லிக் கொண்டவள் அடுத்த ஷாட்டுக்கு கேரேவனில் இருந்து மென் புன்னகையுடன் தான் இறங்கினாள். அவள் விழிகளோ குறும்பு சிரிப்புடன் ஸ்ரீ மீது படிய, அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே அங்கே இருந்து நகர்ந்து விட்டான்.

அன்று ஷூட்டிங் முடிய அனைவரும் சாப்பிட்டு விட்டு தத்தமது அறைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்க, நீண்ட நேரம் ராமின் நினைவுடனேயே படுத்து இருந்த அக்ஷராவோ, "நேர்ல போய் பேசிடலாம்" என்று நினைத்துக் கொண்டே கதவை திறந்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ராமின் அறைக் கதவை திறக்க, லாக் பண்ணி இருக்காத கதவு சட்டென்று திறந்து கொண்டது.

ராமோ அப்போது தான் குளித்து விட்டு வந்தவன் இடையில் டவலுடன் நின்று இருக்க, "ஹேய் இங்க எதுக்கு வந்த?" என்று அவன் பதற, சட்டென கதவை தாளிட்டவள், "இப்போ எதுக்கு சத்தம் போடுற? நான் கொஞ்சம் பேசணும்" என்றாள்.

அவனோ, "என்னால இப்படி அரை குறையா நின்னு பேச முடியாது, உடுப்பு போட்டுட்டு கூப்பிடுறேன், முதல்ல வெளியே போ" என்க. விறு விறுவென அவனை நோக்கி அவள் வர, அவனோ, "வாசல் அந்த பக்கம்" என்றான். அவளோ பால்கனி கதவை திறந்து வெளியே போக எத்தனித்தவள், "இங்க நிக்கிறேன்… ட்ரெஸ் மாத்திட்டு கூப்பிடு" என்று சொல்ல, அவன் சொல்வதை அவள் கேட்கவே மாட்டாள் என்று அறிந்தவனும் உடையை மாற்றி விட்டு பால்கனிக்கு வந்தவன், "என்ன விஷயம்?" என்று கேட்டான்.

அவளோ போனை எடுத்தவள் அவனது ஆடியோவை போட்டுக் காட்ட அவன் விழிகள் விரிந்து கொள்ள, "அடப்பாவி" என்று ஸ்ரீக்கு திட்டியவன், "இப்போ என்ன?" என்று எதுவுமே நடக்காதது போல கேட்டான். அக்ஷராவோ, "நான் நல்ல நடிகையோ இல்லையோ நீங்க நல்லா நடிக்கிறீங்க சார், என்னை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லி ட்ராமாவா பண்ணிட்டு இருக்கீங்க" என்று சொல்ல, தனது மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தவன், "ம்ம் பிடிச்சு இருக்கு… ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்றான் அழுத்தமாக.

அவளோ, "ஏன் முடியாது?" என்று கேட்க, அவனோ, "அந்த ஆடியோவிலேயே காரணம் இருக்கே" என்று உண்மையை மறைக்காமல் சொல்ல, அவளோ, "இதெல்லாம் ஒரு காரணமா? எங்க அப்பா கிட்ட நான் போராடுவேன்... சொன்ன கேளுங்க" என்று கெஞ்சுதலாக தான் கேட்டாள்.

"எத்தனை தடவை கேட்டாலும் இது தான் என்னோட முடிவு… உனக்கு பொருத்தமான யாரையும் கல்யாணம் பண்ணிக்கோ" என்க. அவளோ, "எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு… உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்கு. இதுக்கு மேல என்ன பொருத்தம்?" என்று கேட்டாள்.

அவனோ கண்களை மூடி திறந்தவனோ, "சரி ஒரு சந்தேகம் கேட்கலாமா?" என்று கேட்க. அவளோ, "ம்ம்" என்றாள். "எனக்கு உன்னை பிடிக்க ஆயிரம் காரணம் இருக்கு, அழகா இருக்க, அன்பா பேசுற… வெளிய பார்க்க திமிரா தெரிஞ்சாலும் பழகும் போது ரொம்ப பிடிக்குது, ஆனா என் கிட்ட என்ன இருக்கு?" என்று கேட்க,

அவளோ இதழ் பிரித்து சிரித்தவள், "அழகா இருக்கீங்க, முகத்துக்கு நேரே பேசினாலும் ஜெனியூன் ஆஹ் பேசுறீங்க… காதலிச்ச பொண்ணு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறீங்க, இதுக்கு மேல என்ன வேணும் ராம்?" என்று கேட்டாள்.

"கேட்க நல்லா தான் இருக்கு, உங்க அப்பா சம்மதிப்பாரா?" என்று கேட்க, அவளோ, "சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு" என்றாள். சலிப்பாக நெற்றியை நீவியவனோ, "இதெல்லாம் கனவுல தான் நடக்கும் அக்ஷரா, நீ முதல் கிளம்பு, இரவு நேரத்தில என் ரூம்ல நிக்கிறத யாரும் பார்த்தா தப்பா நினைச்சிடுவாங்க, நந்திதா விஷயத்தில நல்லாவே அனுபவப்பட்டேன். எனக்குன்னு யாரும் மீனாட்சியோ காமாட்சியோ வருவா, அவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்ல,

அவனை முறைத்த அக்ஷரா, "நான் எவ்ளோ சொன்னாலும் என் மேல நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டாள். அவனோ, "சத்தியமா இல்ல, தயவு செய்து கிளம்பு" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் செல்ல முற்பட, "நான் இங்க இருந்து குதிச்சா நம்புவீங்களா ராம்?" என்று கேட்டுக் கொண்டே பால்கனி கம்பியில் ஏற முற்பட, அவளை திரும்பி பார்த்தவன், "லூசு போல பண்ணாம கீழ இறங்கு" என்று சொன்னான்.

அவளோ, "கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க, இறங்குறேன்" என்று சொல்ல, அவனோ, "முடியாது போடி, குதிக்கிறதுன்னா குதிச்சுக்கோ" என்று சொல்ல, அவளும் கம்பியில் ஏறி நின்றவளோ, "நிஜமாவே குதிச்சிடுவேன் ராம்" என்று சொல்லும் போதே அவள் கால் வழுக்க, சட்டென சறுக்கி விட்டாள் பால்கனியில் இருந்து. அவனோ, "ஏய்" என்று பதறியபடி பாய்ந்து வந்தவனோ, அவள் கையை கண நேரத்தில் பற்றி அதே வேகத்தில் மேலே இழுக்க, அவளோ கண நேரத்தில் மேலே வந்தவள் சமநிலையின்றி கீழே விழுந்தவன் மேலே விழுந்து இருந்தாள்.

அவனோ ஆக்ரோஷமாக அவள் கையை பிடித்துக் கொண்டே எழுந்தவனோ, "பைத்தியமா உனக்கு? கீழே விழுந்து இருந்தா என்ன ஆகி இருக்கும்?" என்று கேட்க, அவளோ, "செத்து போய் இருப்பேன். அவ்ளோ தானே" என்றாள்.

"அறைஞ்சேன்னா" என்று அவனும் கடுப்பின் உச்சத்தில் கையை ஓங்க, அவளோ கலங்கிய கண்களுடன் அவனையே பார்த்தவள், "எதுக்கு கோபப்படுறீங்க? அப்போ தானே, சந்தோஷமா நீங்க உங்களுக்கு பொருத்தமான யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியும்" என்றாள்.

அவளை பார்த்துக் கொண்டே ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே கையை இறக்கியவன், "நீ செத்தா நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்?" என்று கடுப்பாக கேட்டுக் கொண்டே, நெற்றியை நீவ, அவளோ, "அப்போ எப்படி என் லவ்வை ப்ரூப் பண்ணுறது?" என்று கேட்டாள்.

அவனோ, "செத்து தான் ப்ரூப் பண்ணனும்னு இருக்கா என்ன? அந்தளவுக்கு என்னை பிடிக்குமா என்ன?" என்று கடுப்பாக கேட்க. அவளும், "ம்ம் ரொம்ப பிடிக்கும்… நான் ரொம்ப அடம்னு நீங்க நினைக்கலாம், அதுக்கு ஒரே காரணம் உங்கள அவ்ளோ பிடிக்கும் ராம்… ஏன் எதுக்குன்னு எனக்கும் தெரியல, ரொம்ப புது உணர்வா இருக்கு. பசங்க அழகா இருக்கான்னு சைட் அடிச்சு இருக்கேன் தான்… இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்.

ஆனா யார் கூடவும் வாழ்க்கை முழுக்க வாழணும்னு நினைக்கல... அப்படி ஒரு பீலிங் உங்க மேல எனக்கு ஏன் வந்திச்சுன்னு தெரியல, என் கிட்ட எவ்ளோ பேர் ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க, நிறைய பணக்கார பசங்க, படிச்சா பசங்கன்னு நிறைய பேர்… ஆனா எனக்கு யாரையும் பிடிக்கல… அவங்க கூட வாழவும் தோணல. உங்கள மட்டும் தான் பிடிச்சு இருக்கு, ஐ டோன்ட் க்னோ வை? லவ் பண்ணுனா சந்தோஷமா இருப்பாங்கன்னு தான் கேள்விப்பட்டு இருக்கேன்… இவ்ளோ பெயினும் இருக்கும்னு இப்போ தான் தெரியுது" என்று சொல்லும் போதே அவள் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

இதுவரை அவள் பேசி கரையாத அவன் மனம் அவள் ஒற்றைக் கண்ணீரைப் பார்த்ததுமே கரைந்து விட, என்ன நினைத்தானோ தெரியவில்லை, அடுத்த கணமே அழுது கொண்டு இருந்தவளின் முகத்தை தாங்கி அவள் கீழ் அதரங்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.

இந்த திடீர் முத்தத்தை எதிர்பார்க்காத அவள் மேனியில் மின்சாரம் பாய அவள் மட்டும் அல்ல அவனும் கண்களை மூடி நீண்ட முத்தப் பரிமாற்றத்தை மேற்கொண்ட நேரம் முதலில் நிதானத்துக்கு வந்தது என்னவோ ராம் தான். இருவருக்குமான முதல் முத்தம் அது… அப்போது தான் முத்தமிட்டுக் கொண்டு இருக்கும் உணர்வே வர, சட்டென விலகியவனோ, "சாரி சாரி" என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தைப் பார்க்க முடியாமல், "ச்ச" என்று தன்னை தானே கடித்தபடி நெற்றியை நீவியவன் அறைக்குள் நுழைய, பின்னால் நுழைந்த அக்ஷராவோ பால்கனி கதவை அடைத்து விட்டு "ராம்" என்றாள்.

அவள் பக்கம் திரும்பி பார்த்தவன், "கிளம்பு அக்ஷரா, நாளைக்கு பேசிக்கலாம்" என்று சொன்னவனுக்கு அவளை முத்தமிடத்தில் இருந்தே நிலை கொள்ள முடியவில்லை. மிகவும் கட்டுப்பாடானவன் அவன். அடைத்து வைத்து இருந்த வெள்ளத்தை திறந்து விட்டால் எப்படி அது நிலை இல்லாமல் தறி கேட்டு ஓடுமோ அதே போல தான் அவன் மோக உணர்வுகளும் ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தது.

அவளோ அவன் முன்னே வந்து நின்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டே, "இப்போ எதுக்கு கிஸ் பண்ணுனீங்க?" என்று கேட்க. அவனோ இதழ் குவித்து ஊதியவன், "ஏதோ ஒரு நினைப்புல பண்ணிட்டேன்… சாரி" என்றான் தாழ்ந்த குரலில். அவளோ, "எனக்கு கடன் வச்சு பழக்கம் இல்ல" என்று சொல்ல, "என்ன கடன்?" என்று புரியாமல் கேட்டவன் அருகே காற்றுப் புக முடியாதபடி நெருங்கி நின்றவள் பெருவிரலில் எம்பி, அவன் கீழ் அதரங்களில் ஆழமான முத்தத்தைப் பதிக்க,

ஏற்கனவே உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தவன் கரமோ அவளை அழுத்தமாக அணைத்து தன்னுடன் மேலும் நெருக்கிக் கொள்ள, அவன் இதழ்களோ அவள் தொடங்கிய முத்த யுத்தத்தை தொடர, உணர்வுகளின் உச்சத்தில் இதழ்களில் ஆரம்பித்த இணைவு மஞ்சத்தில் தான் முற்றுப் பெற்றது.
 
Super sis
 
Top