வேல்விழி 37
காலையில் மெதுவாக கண் விழித்தவனோ தனது வெற்று மார்பில் தூங்கிக் கொண்டு இருந்தவளைக் கண்டதுமே அதிர்ந்து போனவன், பதறி எழுந்தபடி கட்டிலில் அமர்ந்து கொண்டே தலையில் கையை வைத்துக் கொண்டான்.
அவனால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை தாலி கட்டாமல் இப்படி ஒரு பெண்ணை ஆட்கொண்டு இருக்கின்றான் என்று. தாய் சொல்லிக் கொடுத்த அறிவுரை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டவனோ பதட்டத்தில் அருகே இருக்கும் நீரை எடுத்து பருகி விட்டு நேரத்தைப் பார்க்க, மணி ஆறை தொட்டு இருந்தது.
வெளியே பிரகாஷின் குரல் வேறு கேட்டது, "இன்னைக்கு ஏர்லியா போகணும், அக்ஷரா எந்திரிச்சிட்டாங்களா?" என்று கேட்க. நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவனோ அக்ஷரா அருகே குனிந்து அவள் காதில், "அக்ஷரா" என்று அழைக்க, "இன்னும் கொஞ்சம் தூங்கலாம்" என்று சிணுங்களாக சொல்லிக் கொண்டே திரும்பி படுக்க, "எந்திரிடி சீக்கிரம்" என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் கிள்ளி விட, அவளோ, "அவுச்" என்று சத்தம் போட்டுக் கொண்டே எழுந்தமர, பாய்ந்து அவள் வாயை பொத்தியவன், "சத்தம் போடாதே ப்ளீஸ்" என்றான்.
அவளோ அவன் கையை அகற்றி விட்டவள், "சரி போடல" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, அவனோ அவள் அமர்ந்து இருந்த கோலத்தைக் கண்டு சட்டென பார்வையை மறுபுறம் திருப்பியவன், விலகி இருந்த போர்வையை போர்த்தி விட, "அட பார்டா" என்று நக்கலாக சொல்லிக் கொண்டே தன்னை மறைத்துக் கொள்ள, அவளை நோக்கி திரும்பியவன், "கல்யாணம் பண்ணிக்கலாமா இப்போவே" என்றான்.
அவளோ, "என்னது? இப்போவேயா?" என்று அதிர்ந்து கேட்க, அவனோ, "என்னவோ போல இருக்கு அக்ஷரா, தாலி கட்டாம உன் கிட்ட அத்து மீறினத நினைக்கும் போது ரொம்ப குற்ற உணர்வா இருக்கு... இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றான் தவிப்பாக. அவளோ அடக்கப்பட்ட சிரிப்புடன், "கல்யாணமா? அதெல்லாம் என்னால முடியாது" என்று சொல்ல, அவளை அதிர்ந்து பார்த்தவன், "என்னது முடியாதா? அப்போ நடந்ததுக்கு என்ன பதில்?" என்றான் பதட்டத்துடன்.
"அத ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்திடலாம்" என்று சொல்ல. அவனோ, "மறக்கிறதா? அதெப்படி மறக்க முடியும்? போனது என் கற்பு" என்றான். அவளோ, "ஹலோ என் கற்பும் தான்" என்று சொன்னவள் இதழ்க் கடையில் இருந்த குறும்பு புன்னகையை அப்போது தான் கண்டு கொண்டவன், "விளையாடாத அக்ஷரா, எனக்கு உசிரே போற போல இருக்கு" என்று சொன்னதுமே அவனை நெருங்கி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தவள், "இந்த படம் முடிய கல்யாணம் பண்ணிக்கலாம்… இல்லன்னா கல்யாணம் பண்ணினத பெரிய இஸ்ஸு ஆக்கி படத்துக்கும் மார்க்கெட்டிங் குறைஞ்சிடும்" என்று சொல்ல.
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "படம் முடியும் வரைக்கும் தான் ஓகே?" என்று கேட்க, அவளோ, "அப்போ ஒரு கிஸ் பண்ணுங்க" என்றாள். அவனோ, "இப்போவா? பிரகாஷ் வேற லேட் ஆய்டுச்சுன்னு சொல்லிட்டே இருக்கான். நீ முதல் கிளம்பு" என்று சொல்ல, அவளோ, "கேட்டது கிடைக்கலன்னா போக மாட்டேன்" என்று முடிக்கவில்லை, கேட்டதை கொடுத்து விட்டே விலகியவன், "இப்போ கிளம்பு" என்றான்.
அவளோ அடக்கப்பட்ட சிரிப்புடன் எழ, அவனோ பார்வையை மறுபக்கம் திருப்ப, "ரொம்ப தான்" என்று முணுமுணுத்தபடி ஆயத்தமானவளோ அவனுக்கு பறக்கும் முத்தத்தை வழங்கி விட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே யார் கண்ணிலும் படாமல் வெளியற, அவள் முதுகை வெறித்துப் பார்த்தவனோ, "கையை கால வச்சிட்டு சும்மா இருக்காம என்ன எல்லாம் பண்ணி வச்சு இருக்கேன், ஐயோ ஐயோ ஐயோ" என்று தலையில் அடித்துக் கொண்டான்.
அன்று ஷூட்டிங்குக்கு சென்ற ராமின் விழிகளோ தன்னையும் மறந்து அக்ஷரா மீது தான் மொத்தமாக படிந்து இருந்தது. இதுவரை அவளை அத்து மீறி அவன் பார்த்ததே இல்லை... ஆனால் இன்றோ அவன் கண்கள் உரிமையாக அவள் மேனி முழுதுமே வலம் வர, "டேய் ரொம்ப நல்லவனா இருந்தியேடா இப்போ என்ன ஆச்சு?" என்று அவன் மனசாட்சியே காறி துப்பியது.
அக்ஷராவும் தன்னை மீறி நடிக்கும் போது ராமின் பக்கம் பார்வையை திருப்பி டேக் மேல் டேக் வாங்கி கொண்டு இருக்க, பிரகாஷோ, "அக்ஷரா என்ன தான் ஆச்சு?" என்று கேட்டு பிரகாஷே கடுப்பாகி விட்டான்.
ராமோ, "இதற்கு மேல் இருந்தால் சரியாக வராது" என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து அகன்றவன் எல்லா இடமும் சுற்றி இறுதியாக அக்கம் பக்கம் யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு அக்ஷராவின் கேரவேனுக்குள் புகுந்து கொண்டான்.
அந்த காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்ததுமே, "பிரேக்" என்று பிரகாஷ் சொல்லி விட, அக்ஷராவும் தனது கேரவேனை திறந்து கொண்டே நுழைந்தவள் அங்கே இருந்த ராமைப் பார்த்து அதிர்ந்து விழி விரித்துக் கொண்டே கேரவனை மூடியவள், "ராம் இங்க எதுக்கு வந்தீங்க?" என்று ஆரம்பித்தது மட்டும் தான் அவளுக்கு தெரியும், சிறிது நேரம் கழித்து ராமோ ஷர்ட் பட்டனை பூட்டிக் கொண்ட சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வெளியேற, உள்ளே இருந்து, "போட்ட மேக்கப் எல்லாம் கலைஞ்சு போச்சு... மறுபடி போடணும்" என்று அக்ஷரா சிணுங்க ராமோ இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டான்.
அன்று இரவும் கூட அனைவரும் தூங்கிய பின்னர் அவர்கள் காதல் யுத்தம் விடாமல் தொடர்ந்தது. அவனை தேடி அவளோ அல்லது அவளை தேடி அவனோ வந்து விடுவார்கள். தினமும் தொடர்ந்த அவர்கள் சந்திப்பினால் அவர்கள் காதல் மட்டும் அல்ல, அவள் கருவில் அவன் குழந்தையும் வளர ஆரம்பித்து இருந்தது.
இதே சமயம், யுவராஜ் சொன்ன வேலையை யாருக்கும் சந்தேகம் வராமல் முடிக்க, இரு வாரங்கள் கடந்த நிலையில், அவனுக்கு அழைத்து இருந்தான் அவனது கையாள். "சார், நிறைய இன்போர்மேஷன் ஷங்கர் பத்தி கிடைச்சு இருக்கு" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "நேர்ல வா பேசலாம்" என்று சொன்னான். அவனோ, "நாளைக்கே வரேன் சார்" என்று சொல்லி வைத்து விட, போனை வைத்து விட்டு கண் மூடி அமர்ந்தவனோ, "என் கிட்ட சீக்கிரம் வந்திடு நந்திதா" என்று உருக்கமாக தனக்குள் பேசிக் கொண்டே இருந்தான்.
அடுத்த நாள் அதிகாலையில் மழை வருவது போல இருந்ததால் ஷூட்டிங் தடைப்பட்டு இருக்க, அறைக்குள் இருக்க முடியாமல் தனியே வெளியே நடந்து செல்ல ஆயத்தமானான் யுவராஜ். மணி ஐந்து தான் இருக்கும், அவன் வெளியேறும் நேரம் இருளாக தான் இருந்தது அந்த இடம். குளிரும், பனியும் அதீதமாக இருக்க, ஜெர்க்கினை போட்டுக் கொண்டு நடந்து சென்றான் அவன்.
யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாதவனுக்கோ தனிமையும் தேவைப்பட, அங்கே இருக்கும் அருவியை நோக்கி சென்றவன் கண்களோ அப்போது தான் சூரியனின் மெல்லிய வெளிச்சத்தில் தென்படும் இயற்கையில் அழகை ரசித்துக் கொண்டு இருக்க, கைகளை உரசி குளிரை சமப்படுத்திக் கொண்டான்.
இதே சமயம், அந்த அதிகாலையில் அருவிக்கு அருகே இருந்த சோலையினுள் பூ கூடையுடன் நுழைந்து இருந்தாள் நந்திதா. வெள்ளிக் கிழமைகளில் கோவிலுக்கு மாலை கட்டி கொடுப்பவளோ பூக்களை பறிக்க வந்து இருக்க, அந்த சோலையின் அழகை ரசித்துக் கொண்டே யுவராஜ்ஜூம் உள்ளே நுழைய, அவன் கண்களோ எட்டி எட்டி பூக்களை பறித்துக் கொண்டு இருந்த நந்திதாவில் ரசனையாக படிந்தது. "அட நம்ம ஆள்" என்று நினைத்தவன் சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே இருவரை தவிர யாருமே இருக்கவில்லை.
அவன் கண்களோ மெல்லிய வெளிச்சத்தில் புடவையின் ஊடு தெரிந்த அவள் வெற்றிடையில் பதிய, ஆழ்ந்த மூச்செடுத்து தனது உணர்வுகளை அடக்க படாத பாடு பட்டவன், அவள் பின்னால் சென்று மூச்சு காற்று படும் அளவுக்கு நெருங்கி நிற்க, அவளோ பதறி திரும்ப பூக்கூடை விழுந்து பூக்கள் எல்லாம் புற்களின் மீது சிதறியது. அவனோ, ஹஸ்கி குரலில் "நான் தான்" என்க. அவளோ அதிர்ச்சியாக ரெண்டு அடி பின்னால் சென்றவள் சுற்றும் முற்றும் பார்க்க அங்கு யாருமே இருக்கவில்லை.
பதட்டத்துடன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவளுக்கு அவன் மோக விழிகள் வேறு பயத்தை அதிகரிக்க, "இங்க என்ன பண்ணுறீங்க?" என்று கேட்டபடி அங்கிருந்து நகர முற்பட, அவனோ அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். அவளும் அவன் மார்பில் மோதி நிற்க, கண நேரம் கூட தாமதிக்காமல் சத்தம் போட வந்தவளது இதழ்களை இதழ்கள் கொண்டு அடைத்து இருக்க, ஆரம்பத்தில் திமிறியவள், எப்போது அவன் தொடுகைக்கு உருக ஆரம்பித்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
புற்களில் விழுந்த பூக்களின் வாசத்திலேயே இருவரின் காதல் யுத்தமும் அரங்கேற ஆரம்பிக்க, அவன் தனது உரிமையை மொத்தமாக நிலைநாட்டி இருந்தான். குளிருக்குள் ஆடைக்குள் நுழைவதற்கு பதில் அவனுக்குள்ளேயே நுழைந்து கொண்டாள் பெண்ணவள், எங்கே இருக்கின்றோம் என்று மறந்து போனவளுக்கு அவனை தவிர எதுவுமே புலப்படவில்லை.
அவன் அவளை ஆட்கொண்டு முடிய, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே கண் விழித்தவளுக்கு அப்போது தான் அவள் யுவராஜ்ஜின் அணைப்பில் படுத்து இருப்பது தெரிய பதறி எழுந்து அமர்ந்தவாளோ, புடவையால் தன்னை மறைத்துக் கொண்டே, அவனை திரும்பி முறைத்துப் பார்த்தவள், "எதுக்கு இப்படி பண்ணுனீங்க?" என்று கண்ணீருடன் சீற, அவனோ கழுத்தை வருடிக் கொண்டே எழுந்தவன், "நான் என்ன பண்ணினேன்?" என்று சாவகாசமாக கேட்டான்.
அவளோ, "ஐயோ என் பாவாவுக்கு துரோகம் பண்ணிட்டேனே, அவர் கூட என் மேல கையை வைக்க மாட்டார்… கண்டவன் எல்லாம் கையை வைக்க விட்டு இருக்கேனே" என்று நெற்றியில் அடித்துக் கொண்டே கதற, அவனோ, "கண்டவனா? சரியா போச்சு" என்று நினைத்துக் கொண்டே, "உன் பாவா ஒண்ணும் உன் புருஷன் இல்ல, அதான் பக்கத்தில வரல… எத்தனை தடவை தான் சொல்றது நந்திதா" என்றான் கடுப்பாக.
அவளோ, "நந்திதா இல்ல பார்வதி" என்று அழுத்தமாக சொல்ல, நாடியை வருடிக் கொண்டே அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "உன்னை எப்படி தான் நான் நம்ப வைக்கிறதுன்னு தெரியல... போட்டோ பார்த்த தானே" என்று கேட்டான். அவளோ, "நீங்களும் போட்டோ பார்த்தீங்க தானே? இப்போ நானும் நீங்களும் பண்ணிட்டு இருக்கிறதுக்கு பெயர் கள்ள காதல்… உங்களுக்கு மனசே உறுதலையா? உங்களுக்கு ஏன் உறுத்த போகுது… எனக்கு தான் உறுத்துது, ரெண்டு வாரம் உங்கள பார்க்காம நிம்மதியா இருந்தேன்… இப்போ மொத்தமா போச்சு" என்று முகத்தினை மூடி அழ,
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனோ, "அப்போ நாம பண்ணுறது கள்ள காதலா?" என்று நக்கல் குரலில் கேட்க. கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள் பெண்ணவளோ, "அப்போ இது என்ன புனிதமான காதலா? ச்ச… எனக்கு என்னாச்சுன்னு தெரியல. பக்கத்தில வந்தா தள்ளி விடாம அப்படியே இருந்து இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே எழ போக, அவள் கையை பிடித்து இருக்க வைத்தவன், "கொஞ்சம் நேரம் பேசிட்டே போகலாம்" என்றான்.
அவளோ, "மாட்டேன், பாவா என்னை தேடுவார், எனக்கு மனசு என்னவோ பண்ணுது... ஏன் தான் இப்படி பண்ணி தொலைச்சேன்னு தெரியலயே" என்று தலையில் அடித்துக் கொண்டே கதற, அவனுக்கு பொறுமை எங்கோ பறந்து போக, "ஷாட் அப் நந்திதா" என்று சீறி இருந்தான்.
அழுது கொண்டு இருந்தவளோ அவனை விக்கித்து பார்க்க, "எதுக்குடி என்னை இப்படி படுத்துற? எத்தனை தடவை சொல்றேன் நான் தான் உன் புருஷன்ன்னு… மறுபடி மறுபடி இன்னொருத்தன புருஷன்னு சொல்லிட்டே இருக்க. எனக்கும் ஓரளவு தான் பொறுமை இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தை தாங்கி கண்களுடன் கண்களை கலக்க விட்டவன், "வலிக்குது நந்திதா, எத்தனை நாளைக்கு என்ன கஷ்டப்படுத்த போற? நானும் மனுஷன் தானே" என்று சொல்லிக் கொண்டே, அவள் செவ்வதரங்களை நெருங்க,
வழமை போலவே அவன் விழி அசைவில் தன்னை மறந்து போனவள் இதழ்களும் அவன் இதழ்களுக்கு அழைப்பு விடுத்து விரிந்து இருக்க, யுவராஜ்ஜின் போன் சட்டென அலறியது. அவளோ அவன் மார்பில் கையை வைத்து தள்ளிக் கொண்டே தன்னை சுதாகரித்து விலகிக் கொண்டவள், "இப்படி பேசி பேசி தான் என்னை மயக்கி வச்சு இருக்கீங்க… எதுக்கு என்னை நீங்க இவ்ளோ கஷ்டப்படுத்துறீங்க? " என்று கேட்க,
அவனோ போனை எடுத்து பார்த்து விட்டு, அவளை பார்த்தவன், "நான் உன்னை ஒன்னும் கஷ்டப்படுதலடி, நீ தான் என்னை வச்சு செஞ்சிட்டு இருக்க… உன்னை விட்டு கொடுக்கவும் முடியாம பக்கத்தில உரிமையா வரவும் முடியாம எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே போனை ஆன் பண்ணியவன், "சொல்லு ஸ்ரீ" என்றான்.
மறுமுனையில் இருந்த ஸ்ரீயோ, "டேய் எங்கடா போன? உன்னை தேடி உன்னோட ஸ்பை வந்து இருக்கான்" என்று சொல்ல. அவனோ, "இதோ வரேன்" என்று சொல்லி விட்டு வைத்தவனோ, தன்னையே அழுதபடி பார்த்துக் கொண்டு இருந்த நந்திதாவிடம், "நீ வீட்டுக்கு போ, இன்னைக்கு எல்லா உண்மையும் வெளிய வரும்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், ஆயத்தமானபடி அங்கே இருந்து சென்று விட, நிலத்தில் அமர்ந்து முகத்தை மூடி அழ ஆரம்பித்து இருந்தாள் நந்திதா.
சிறிது நேரம் கழித்து அங்கே இருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றவளுக்கு, மனம் உறுத்தலாக இருக்க, "என்ன பார்வதி இவ்ளோ நேரம்? பையன் அழுதுட்டே இருந்தான்" என்று குழந்தையுடன் நின்ற ஷங்கரின் விழிகளை பார்க்க முடியாமல் குழந்தையை வாங்கியவள் விறு விறுவென உள்ளே செல்ல, ஷங்கரின் விழிகளோ அவள் கொண்டு வந்த வெற்று பூக்கூடையில் யோசனையாக படிந்து மீண்டது. அறைக்குள் சென்றவளோ குழந்தையை தூங்க வைத்து விட்டு மீண்டும் குளிக்க சென்று விட, அதனையும் யோசனையாக பார்த்துக் கொண்டு இருந்தான் ஷங்கர்.