ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 38

pommu

Administrator
Staff member
வேல்விழி 38

இதே சமயம் வீட்டுக்கு வந்த யுவராஜ்ஜோ தான் அனுப்பிய ஸ்பையான தீபனிடம், "அவன் வைஃப்புக்கு என்னாச்சு?" என்று கேட்க, அவனோ, "பிரேக்னன்ட் ஆஹ் இருக்கும் போது இறந்துட்டாங்க சார், அவனுக்கு அவன் வைஃப்போட தங்கச்சியான மீனாட்சியை பேசி வச்சு இருந்தாங்க... ஆனா அவன் வேற பொண்ண அழைச்சிட்டு வந்து அந்த பொண்ணு கூடவே ஊரை விட்டு போயிட்டான்னு பேசிக்கிட்டாங்க.

அந்த மீனாட்சி பொண்ணு இன்னுமே கல்யாணம் பண்ணிக்காம ஷங்கரை தான் நினச்சுட்டே இருக்கா" என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்ல. "அந்த பொண்ணு தான் நந்திதா" என்று சொன்ன யுவராஜ்ஜோ ஸ்ரீயிடம், "இதுக்கு மேல வெய்ட் பண்ண முடியாது டா, நந்திதா இப்போவே ரொம்ப டிப்ரெஷன்ல இருக்கா… இதுக்கு மேல அவளை டாச்சர் பண்ண முடியாது, இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுப்போம். அவனுக்குன்னு ஒரு பொண்ணு வேற காத்துட்டு இருக்கா… ஆனா அவன் பைத்தியம் போல பண்ணிட்டு இருக்கான்" என்று சொல்லிக் கொண்டே தீபனையும், ஸ்ரீயையும் அழைத்துக் கொண்டு கிளம்பியது என்னவோ ஷங்கரின் வீட்டுக்கு தான்.

ஷங்கரும் அந்த நேரம் வேலைக்கு செல்ல ஆயத்தமானபடி பைக்கை தள்ள, நந்திதாவோ அவனை வழி அனுப்ப வாசலில் நின்று இருந்தவள், வீட்டின் முன்னே வந்து நின்ற யுவராஜ்ஜின் வாகனத்தை பார்த்ததுமே அதிர்ந்து விழிகளை விரித்துக் கொண்டாள்.

ஷங்கரோ புரியாமல் பார்த்தவன், "சினிமாக்காரனுங்க வண்டி தானே இது.. எதுக்கு இப்போ வந்து இருக்காங்க?" என்று நினைத்துக் கொண்டே வண்டியை நிறுத்தி விட்டு வாசலுக்கு செல்ல, வண்டியில் இருந்து இறங்கிய யுவராஜ்ஜோ நேரே ஷங்கரின் முன்னால் வந்து நின்றவன் தனது கையில் இருந்த போனை எடுத்து அவன் முன்னே நந்திதாவுக்கு தனக்கும் நடந்த திருமண புகைப்படத்தைக் காட்ட ஷங்கரின் கண்களோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

கஷ்டப்பட்டு உணர்வுகளை அடக்கிக் கொண்டே அவனைப் பார்க்க, யுவராஜ்ஜோ, "என் பொண்டாட்டிய என் கூட அனுப்பு" என்றான் நேரடியாக. ஷங்கரோ கண நேரத்தில் சுதாரித்தவன், "யாருக்கு யார் பொண்டாட்டி? அவ என்னோட மனைவி, இங்க வந்து பிரச்சனை பண்ணுனா வெளியூர் கார்ன்னு பார்க்காம சீவிடுவேன்" என்று மிரட்டலாக சொல்ல,

யுவராஜ்ஜோ, "ரொம்ப நடிக்காத ஷங்கர், உன் பூர்வீகம் என்னன்னு எனக்கு மொத்தமா தெரியும்" என்று சொன்னவன் அவன் சொந்த ஊரை சொல்ல, ஷங்கருக்கு தூக்கி வாரிப் போட்டாலும் உணர்வுகளை காட்டாமல் அடக்கியவன், "எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க? பெரிய ஐயா கிட்ட சொன்னா சீவிடுவார்" என்று சொன்னான்.

யுவராஜ்ஜோ அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, "போலீஸ்ல சொல்லி உன்னை உள்ள தூக்கி வைக்க இப்படின்னு ரெண்டு செகண்ட் போதும்" என்று கையை சொடக்கிட்டு காட்டியவன், "பிரச்சனை வேணாம்னு நினைக்கிறேன் ஷங்கர், அவளையும் என் குழந்தையையும் என் கூட அனுப்பு" என்றான் அழுத்தமாக.

இவர்கள் சலசலப்பில் அக்கம் பக்கத்தவர்கள் கூடி நிற்க, நந்திதாவோ பதட்டத்துடன் ஷங்கரின் பின்னே வந்து நின்றபடி, "பாவா இவங்க என்ன பேசுறாங்க? இதே போல அன்னைக்கும் சொன்னார். எது பாவா நிஜம்?" என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள். நிஜம் எது பொய் எது என்று தெரியாமல் தவிப்பாக நின்று இருப்பவள் மீது பரிதாபமாக யுவராஜ்ஜின் பார்வை படிய, "அவளுக்காக பார்க்கிறேன் ஷங்கர், இல்லன்னா இங்க நடக்கிறது வேற… அவ கிட்ட இப்போ நீ உண்மைய சொல்லணும்" என்றான் அழுத்தமாக.

ஷங்கர் சற்று தடுமாறினாலும் அவளை விட்டுக் கொடுக்கவே கூடாது என்ற எண்ணத்தில் சுதாரித்தவன், "பார்வதி, நீ என் மனைவி தான்.. இவங்க ஏதோ தில்லு முல்லு பண்ணுறாங்க.. நீ உள்ளே போ, நான் பார்த்துகிறேன்" என்று சொல்ல, பொறுமை இழந்த யுவராஜ்ஜோ ஷங்கரின் ஷேர்ட்டை ஒற்றைக் கையால் பிடித்து விட்டான்.

ஸ்ரீயோ, "டேய்" என்று பதற, அவனோ, "நானும் பார்த்துட்டு இருக்கேன்.. ரொம்ப ஓவரா போறான்டா, என்னால முடியல" என்று சொன்னவனோ ஷங்கரிடம், "இப்போ நீ உண்மைய சொல்ல போறியா இல்லையா?" என்று கேட்க, அவனோ யுவராஜ்ஜின் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "உண்மையை தான் சொல்லிட்டே இருக்கேன். பார்வதி என் பொண்டாட்டி, திலீப் என் பையன்" என்று சொல்லி முடிக்க முதல் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஓங்கி குத்தி விட்டான் ஷங்கரின் முகத்தில்.

அவன் குத்தியதில் ஷங்கரின் மூக்கில் இருந்து ரத்தம் வடிய, நிலை தடுமாறி பின்னால் விழ போனவனை, "பாவா" என்று தாங்கி பிடித்து நிறுத்திய நந்திதாவோ, கோபமாக யுவராஜ்ஜை பார்த்துக் கொண்டே சேலையை இழுத்து சொருகி விட்டு, அவனை நோக்கி வேகமாக வந்தாள்.

அவனோ அவசரப்பட்டு அடித்ததற்கு தன்னை தானே கடிந்தபடி நெற்றியை நீவியவன், "ச்ச என்ன பண்ணி வச்சு இருக்கேன்" என்று நினைத்துக் கொண்டே நந்திதாவை பார்த்து, "நந்திதா அது" என்று இழுக்க ஒற்றை கையை நீட்டி பேச வேண்டாம் என்று தடுத்து இருந்தாள் நந்திதா. அவள் விழிகளோ கோபத்தை அப்பட்டமாக காட்ட, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "போய்டுங்க" என்றாள் அழுத்தமான குரலில்.

அவனோ, "நீ இல்லாம எப்படி நான் போவேன்..?" என்று கேட்க, அவளோ, "உங்களுக்கும் எனக்கும் எந் சம்பந்தமும் இல்ல. நான் பாவா கூட தான் இருப்பேன்" என்று சொல்ல, அவளுக்கு பின்னால் நின்ற ஷங்கரின் இதழில் குரூர புன்னகை தோன்ற, அவள் வார்த்தைகள் யுவராஜ்ஜை உயிருடன் வதைக்க, "என்னடி பேசுற?" என்று கேட்டவனுக்கு குரல் தழுதழுத்தது.

நந்திதாவோ, "ஆமா நான் அவர் கூட தான் இருப்பேன்.. அவர் தான் என் புருஷன்.. அவர் சொல்லட்டும் உங்க கூட வாரேன் போதுமா? உங்களுக்கு என் உடம்பு தானே தேவைப்பட்டிச்சு, அது தான் இன்னைக்கு கிடைச்சிடுச்சுல்ல,, இனியும் என்ன?" என்று ஆக்ரோஷமாக சொன்னவளோ, "உள்ள வாங்க பாவா" என்று சொல்லிக் கொண்டே ஷங்கரின் முகத்தில் இருந்த ரத்தத்தை தனது புடவை முந்தானையால் துடைக்க மொத்தமாக நொறுங்கி போனான் யுவராஜ்.

அவள் தமிழில் சொன்னதால் அங்கே இருந்த யாருக்கும் பேசியது விளங்கவில்லை, யுவராஜ், தீபன் மற்றும் ஸ்ரீயை தவிர… அவன் குரலோ தழுதழுக்க, "நந்திதா" என்று கையை நீட்டி அழைத்தவனது தோளில் கையை வைத்த ஸ்ரீ, "எல்லாரும் நிக்கிறாங்கடா, முதல் இங்க இருந்து கிளம்பலாம் வா, இல்லன்னா பெரிய பிரச்சனை ஆய்டும்" என்று சொல்ல,

அவனோ ஸ்ரீயை கலக்கமாக பார்த்தவன், "என்னடா பேசிட்டு போறா?" என்று கேட்ட கேள்வியிலேயே மொத்த உயிர்ப்பும் இல்லை. அவள் உடலுக்காக தான் என்றால் இத்தனை கஷ்டம் அவன் ஏன் பட வேண்டும் என்கின்ற ஆதங்கமும் அவள் நம்பவில்லை என்கின்ற ஏமாற்றமும் தோன்ற, பேச முடியாமல் தடுமாறியவனை இழுத்து சென்றது என்னவோ ஸ்ரீ தான்.

வண்டியில் ஏறியவனோ ஸ்ரீயை பார்த்தவன், "எதுக்குடா என்னை பார்த்து அப்படி பேசிட்டு போனா?" என்று கேட்க, ஸ்ரீயோ, "காலைல என்ன ஆச்சு?" என்று கேட்க, அவனோ குரலை செருமிக் கொண்டே, "மார்னிங் சும்மா அவுட்டிங் போனேன்.. அங்கே அருவிக்கு பக்கத்தில இருக்கிற சோலைல நந்திதா பூ பறிச்சிட்டு இருந்தா. வி மேட் லவ்" என்று எங்கோ பார்த்துக் கொண்டே சொல்ல, ஸ்ரீயோ, "இப்போ இருக்கிற நிலைமைக்கு இது தேவையா?" என்று கடுப்பாக கேட்டான்.

"ஹேய் அவ என் வைஃப் தானே" என்று ஆதங்கமாக வெளி வந்தது அவன் பதில்.. ஸ்ரீயோ, "நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே.. இப்போ அவ இப்படி பேச அது தானே காரணம்.. யுவா யூ ஆர் ஸ்பாயிலிங் எவெரிதிங்,.. எனக்கே உன் மேல கோபம் வருது" என்று சொல்ல, அவனோ, "நீயும் ஏன்டா புரியாம பேசுற? பார்க்கிற பொண்ணுங்க மேல எல்லாமா நான் பாயுறேன்… அவளை தவிர எந்த பொண்ணையும் கிஸ் பண்ணினதே இல்ல, எஸ் எனக்கு லஸ்ட் இருக்கு… ஆனா அவ மேல மட்டும்,லவ்வோட சேர்ந்த லஸ்ட்…

அவளும் காலைல தடுக்கவே இல்லடா... ஆனா இப்போ எப்படி பேசுறா பாரு, அவளுக்கு அப்போவாவது புரிய வேணாமா நான் அவ புருஷன்னு, ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீ, என் முன்னாடி இன்னொருத்தன புருஷன்னு சொல்லும் போது செத்துடலாம் போல இருக்கு" என்று சொன்னவன் கண்கள் கலங்கி போக, அவனை அணைத்துக் கொண்ட ஸ்ரீக்கு அவன் வலியை புரிந்து கொள்ள கூடியதாக இருக்க, "போலீசுக்கு போகலாம் யுவா" என்றான்.

யுவராஜ்ஜோ சற்று விலகி அவனை ஏறிட்டு பார்த்தவன், "போனா போல என்ன ஆகும்? நான் தான் ஷங்கர் உள்ளே இருக்க காரணம்னு சொல்லி என்னை மொத்தமாவே வெறுத்துடுவா… அப்படி வேறுப்போட அவ என் கூட இருக்கணுமா? அவளுக்கு உண்மை தெரிஞ்சா கூட அவன் வாயால சொல்லாம அவ நம்ப மாட்டா. எனக்கு இன்னைக்கு அது தெளிவா தெரிஞ்சுது" என்று சொல்ல,

ஸ்ரீயோ, "அவன் தான் சொல்ல மாட்டேன்னு சொல்றானே" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "சொல்ல வைக்கணும்" என்று அழுத்தமாக சொல்லி விட்டு சிறிது நேரம் கண்களை மூடி இருந்தவன், "தீபன் அந்த மீனாட்சியை நான் சந்திக்கணும்" என்றான் ஒரு முடிவுடன்.

இதே சமயம், ஷங்கரின் ரத்தத்தை பஞ்சினால் துடைத்துக் கொண்டு இருந்த நந்திதாவை ஏறிட்டுப் பார்த்த ஷங்கர், "தமிழ்ல என்ன பேசுன?" என்று கேட்க, அவளோ கலங்கிய கண்களுடன், "என்னை மன்னிப்பீங்களா பாவா?" என்று கேட்டபடி அவன் அருகே மண்டியிட்டு அமர, அவனோ "என்னாச்சு?" என்று கேட்டான்.

அவளோ கண்ணீர் வழிய, "நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் பாவா, மனசு உறுத்திட்டே இருக்கு.. இன்னைக்கு காலைல" என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடிய, அவளையே பார்த்துக் கொண்டு இருந்த ஷங்கருக்கு தான் குற்ற உணர்வால் மனதில் பாரம் ஏறி போனது.

கணவன் மனைவியை பிரித்து இருக்கும் வீரியம் இது வரை தெரியவே இல்லை. ஆனால் இப்போது புரிய, "நான் வேலைக்கு போய்ட்டு வரேன்" என்று சொன்னவனோ அவளைப் பார்க்காமல் வெளியேற, அவளோ தான் செய்த தப்பினால் மனம் காயப்பட்டு ஷங்கர் வெளியே செல்கின்றான் என்று நினைத்து இருக்க, உண்மை என்னவோ வேறு தான்.

அறைக்குள் சென்று அழுது கொண்டே இருந்தவளுக்கோ எல்லாமே குழப்பமாக தான் இருந்தது. எது நிஜம் எது நிழல் என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால் தன்னுடைய மகனை மட்டுமே நம்பியவளோ அவனை அள்ளி முத்தமிட்ட சமயம், அவனும் சிறுநீர் கழித்து இருக்க, அதனை உணர்ந்தவள் அவனை சுத்தம் செய்யும் பொருட்டு உடைகளை அகற்றினாள்.

உடைகளை அகற்றிக் கொண்டு இருந்தவள் கண்ணில் அவனது இடது பக்க இடையில் இருந்த வேங்கை மச்சம் கண்ணில் பட்டது.. விழிகள் கலங்க அதனை வருடியவளுக்கு அதே இடத்தில் காலையில் யுவராஜ் மேனியில் கண்ட மச்சம் நினைவு வந்தது. அவன் வெற்று மார்பில் இருந்த வேங்கை டாட்டூ மற்றும் இடது கை முழுதும் வரையப்பட்டு இருந்த டாட்டூவை பார்த்தவள், "ஏன் இப்படி உடம்பு முழுக்க வரைஞ்சு வச்சு இருக்கார்" என்று நினைத்துக் கொண்டதை நினைவு கூர்ந்தவளுக்கு அவன் படிக்கட்டு தேகத்தின் இடப்பக்க இடையில் இயற்கையாக அமைந்து இருந்த சின்ன வேங்கை மச்சம் கண்களை உறுத்தியது.

"இது வரையல, இயற்கையான மச்சம் தான்" என்று அதனை உறுதி செய்து கொண்டதால் என்னவோ இப்போது வரை அது நன்றாக நினைவில் இருக்க, மகன் இடையிலும் அதே இடத்தில் இருந்த மச்சம் அவள் மனதை பிசைய ஆரம்பிக்க, "அப்போ நான் யாரோட மனைவி?" என்கின்ற கேள்வி தான் அவள் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. "எந்த பெண்ணுக்கும் வரக் கூடாத நிலை இது" என்று கண்ணீருடன் சொல்லிக் கொண்டாள்.

இதே சமயம், ராமின் அறைக்குள் நுழைந்த அக்ஷராவோ தூங்கிக் கொண்டு இருந்தவனின் கன்னத்தில் முத்தம் பதிக்க, அவனோ சட்டென கண்களை விரித்து அவளை இழுத்து கட்டிலில் போட்டு மேலே படர்ந்தவன், அவள் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொள்ள, அவன் கரமோ அவள் மேனியில் அத்து மீற ஆரம்பிக்க, அவன் கரத்தை பிடித்தவளோ, "ராம் ப்ளீஸ் வேணாம்" என்றாள் கெஞ்சுதலாக.

அவனோ ஏறிட்டு அவள் முகத்தைப் பார்த்தவன், "ஏன் வேணாம்?" என்று கேட்க, அவளோ வெட்கமாக முகத்தை பக்கவாட்டாக திருப்பியவள், "நான் ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன்" என்று சொல்ல, அவனோ அவள் முகத்தை ஒற்றைக் கையால் தன்னை நோக்கி திருப்பி, "என்ன சொல்ற?" என்று அதிர்ச்சியுடன் கேட்க,

அவளும், "பீரியட் வரல... சோ செக் பண்ணி பார்த்தேன்" என்று சொன்னதுமே விலகி அமர்ந்தவனோ, "வா கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று அவள் கையை பிடித்தான். அவளோ, அவன் கையில் இருந்து கையை உதறியவள், "ஹையோ ராம், படம் முடியட்டும், கொஞ்சம் தானே ஷூட்டிங் மீதம் இருக்கு" என்று சொல்ல, அவனோ, "படம் முடிய முதல் குழந்தையே பிறந்திடும்" என்றான் கடுப்பாக.

அவளோ பெருமுச்சுடன், "ப்ளீஸ் ராம் புரிஞ்சுக்கோங்க,, கமிட் ஆய்ட்டு இடைல வர்றது சரி இல்ல" என்று சொல்ல, அவளை முறைத்துக் கொண்டே எழுந்தவன், "என்னவோ சொல்ற போ" என்று சொல்லிக் கொண்டே அவள் மீது கோபத்தை காட்ட கூடாது என்கின்ற எண்ணத்தில் குளியலறைக்குள் நுழைய, அவள் இதழ்களோ மெதுவாக புன்னகைத்துக் கொண்டது.

அன்று மாலை ஷூட்டிங்குக்கு அவள் ஆயத்தமாக, அவள் அறைக்குள் வந்தவனோ, "முதல் போல பாய்ஞ்சு பாய்ஞ்சு ஆடாதடி.. நினைச்சாலே பக்குன்னு இருக்கு” என்று சொல்லிக் கொண்டே அவள் வயிற்றில் ஆசையாக கையை வைக்க, அவளோ அவனையே பார்த்துக் கொண்டே எம்பி அவன் இதழில் முத்தமிட்டு விலகியவள், "ஓகே" என்று சொன்னாள். அன்று ஷூட்டிங்கில் அவன் அவளை விட்டு விலகவே இல்லை.. அவளுக்கு நிழலாக இருந்தான் என்றும் கூறலாம்.
 
Super sis
 
Top