ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 39

pommu

Administrator
Staff member
வேல்விழி 39

அன்று பாறை ஒன்றில் இருந்து பாயும் சீன் அடுத்தது என்று சொன்னதுமே ராமுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது. ஸ்பாட்டுக்கு சென்றவன் அங்கேயே நின்று இருக்க, அக்ஷராவை பார்த்த பிரகாஷ், "இந்த சீன்ல இங்க இருந்து பாயணும்" என்று சொல்ல, எட்டி பார்த்த அக்ஷராவோ, "இங்க இருந்தா??" என்று தயாராக கேட்ட சமயம் அவள் பின்னால் வந்து எட்டி பார்த்த ராமோ, "இவ்வளவு தூரம் பாயணுமா??" என்று அதிர்ச்சியாக கேட்டான்.

பிரகாஷோ இருவரையும் விசித்திரமாக பார்த்து விட்டு, "என்னடா இப்படி ஷாக் ஆகி எனக்கு ஷாக் கொடுக்கிறீங்க?? இதென்ன அவ்ளோ தூரமாவா இருக்கு... ரெண்டு ஸ்டெப்ஸ் ஹெய்ட் தானே" என்றான். ராமோ "அதெல்லாம் முடியாது, வேணும்னா டூப் வச்சு எடுத்துக்கலாம்" என்க, பிரகாஷுக்கு கோபம் வந்து விட்டது.

"நீ டைரக்டரா நான் டைரக்டரா?? இதுக்கெல்லாம் டூப் வச்சு எடுக்க முடியாது, அக்ஷரா தான் பாயணும்… அவளே சும்மா இருக்கா, உனக்கென்ன பிரச்சனை??" என்று கேட்க, அக்ஷராவை திரும்பி ராம் முறைத்து பார்க்க, அவளோ இதுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்கின்ற ரீதியில் எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தாள். ராமோ, "இத எப்படி நிறுத்தணும்னு எனக்கு தெரியும்" என்று சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து நேரே சென்றது என்னவோ யுவராஜ்ஜிடம் தான்.

அவன் சென்றதுமே அக்ஷராவை பார்த்த பிரகாஷ், "என்ன அக்ஷரா இது???" என்று கேட்க, அவளோ "கூல் டியூட்” என்று கண்ணடித்து சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தவள் சிரிப்பை கட்டுப்படுத்த படாத பாடு பட்டு போனாள். அவள் இதழ்களோ, "சோ கியூட் ராம்" என்று முணுமுணுத்துக் கொண்டது.

இதே சமயம் யுவராஜ்ஜிடம் நேரே வந்த ராமோ, "அந்த பாயுற சீன் டூப் வச்சு எடுக்க சொல்லு" என்க, இருக்கையில் அமர்ந்தபடி அவனை ஏறிட்டு பார்த்த யுவராஜ்ஜோ, "இதுக்கெல்லாம் எதுக்குடா டூப்?? சின்ன உயரம் அது" என்றான்.

ராமோ, "அதெல்லாம் தெரியாது, அவ பாய கூடாது" என்க, யுவராஜ்ஜோ, "அவ பாயுறதுல அவளுக்கே பிரச்சனை இல்ல… உனக்கென்ன பிரச்சனை ??" என்று கேட்டுக் கொண்டே எழ, "நான் கேட்டதை பண்ண முடியுமா இல்லையா?" என்று அழுத்தமாக கேட்டான் ராம். யுவராஜ்ஜோ, "சரியான ரீசன் சொல்லு பண்ணிடலாம்" என்க, அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே அவன் அருகே வந்த ராமோ, "அவ கர்ப்பமா இருக்கா??" என்று சொல்ல யுவராஜ்ஜின் கண்கள் விரிய, "எத??" என்றான் அதிர்ச்சியாக.

ராமோ, "இப்போ சொல்லு டூப் போட்றலாமா ??" என்று கேட்க, யுவராஜ்ஜோ "அது போட்ரலாம்... அவ பிரேக்னன்ட்ன்னு உனக்கெப்படி தெரியும்?? அவ சொல்லவே இல்லையே” என்று சொல்ல, "அவ தான் சொல்லணும்னு இல்ல... நான் கூட சொல்லலாம்" என்றான் ராம்.

யுவராஜ்ஜோ, "அதெப்படி சம்பந்தம் இல்லாம நீ சொல்லலாம்??" என்று கேட்க, ராமோ, "சம்மந்தம் இல்லன்னு யார் சொன்னா?? குழந்தையோட அப்பாவே நான் தான்" என்றான். யுவராஜுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகி போக, "உன்னை நல்லவன்னு நினச்சேன்டா, என்னடா சொல்ற??" என்று கேட்க, ராமோ, "ஏன் நல்லவன் குழந்தை பெத்துக்க கூடாதா??" என்றான்.

யுவராஜ்ஜோ நெற்றியை நீவியவன், "நான் அப்படி சொல்ல வரல… கல்யாணம் ஆகாம எப்படி??" என்று கேட்க. ராமோ புருவம் சுருக்கி அவனை பார்த்தவன், "கல்யாணத்துக்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்??" என்று கேட்டான்.

யுவராஜ்ஜோ, "அது சரி… ஆமா நீ தான் தொடாம லவ் பண்ணுற ஆள் ஆச்சே.. இதெப்படி ??" என்று மனதில் இருந்ததை கேட்டு விட்டான். ராமோ, "ஆமா நான் பத்தடி தள்ளி நின்னு லவ் பண்ணுவேன், அப்புறம் உன்னை போல ஒருத்தன் வந்து அவளை கல்யாணம் பண்ணுவான்... நான் மறுபடியும் சோக கீதம் வாசிக்கணுமா?" என்று கேட்க. குரலை செருமிய யுவராஜ்ஜோ, "சரி சரி அத விடு… ஆனா ராம் நான் உன்னை தயிர்சாதம்ன்னு நினச்சேன். நீ என்னடான்னா பிரியாணியா இருக்க” என்று சொன்னான்.

ராமோ, "என்னாலேயே நம்ப முடியல" என்று சொல்லும் போதே இதழில் மெல்லிய வெட்க புன்னகை படர, அவனை கட்டி அணைத்த யுவராஜ்ஜின் போன் அலறியது. மறுமுனையில் இருந்தது என்னவோ தீபன் தான். "மீனாட்சியை அழைச்சிட்டு வந்து இருக்கேன் சார், உங்க வீட்ல தான் இருக்கேன்" என்க,

யுவராஜ்ஜோ, "இதோ வரேன்" என்று சொல்லிக் கொண்டே, போனை வைத்தவன், "பிரகாஷ்" என்று சத்தமாக அழைக்க, அவனும், கையை உயர்த்தி "சொல்லுங்க சார்" என்றான். "எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, என் சீன் நாளைக்கு ஷூட் பண்ணிக்கலாம், முக்கியமா அக்ஷ்ராவுக்கு பதிலா டூப் வச்சு சீனை எடு" என்று சொல்லி விட்டு அக்ஷராவை பார்த்தவன், "கங்கிராட்ஸ்" என்க,

அவளோ வெட்கத்துடன் "தேன்க் யூ சார்" என்று சொல்லிக் கொண்டாள். உடனே ராமிடம், "பத்திரமா பார்த்துக்கோ" என்று சொன்னவனோ மீனாட்சியை சந்திக்க தனியாக கிளம்பி இருந்தான்

மீனாட்சியோ தீபனுடன் அவர்கள் வீட்டில் அமர்ந்து இருக்க, காரில் வந்து இறங்கிய யுவராஜ்ஜோ வேகமாக உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதுமே தீபன் மற்றும் மீனாட்சி எழுந்து நிற்க, "சிட் சிட்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவனோ அங்கே இருந்த இருக்கையில் அமர அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.

அவர்கள் மலையாளத்தில் உரையாடிய உரையாடல் தமிழில்.

மீனாட்சியை பார்த்தவனோ, "சுத்தி வளைச்சு பேச விரும்பல மீனாட்சி.. தீபன் எல்லாம் சொல்லி இருப்பான்னு நினைக்கிறன்” என்று சொல்ல, அவளோ, "ம்ம் சொன்னார்” என்று சொன்னவளது கண்கள் கலங்கி போக, "உன் மாமா பண்ணினது சரின்னு நினைக்கிறியா?" என்று கேட்டான் யுவராஜ்.

"இல்லை" என்று தலையாட்டிய மீனாட்சியோ, "அக்கா மேல மாமாவுக்கு அவ்ளோ விருப்பம்… அதனால தான் இப்படி பண்ணிட்டாருன்னு நினைக்கிறன். அவரை நான் பேசி சம்மதிக்க வச்சு அழைச்சு போறேன், போலீஸ் அது இதுன்னு போய்டாதீங்க சார்… இவ்ளோ நாள் எங்க இருக்காருன்னு கூட தெரியல, இப்போ தான் தெரிஞ்சு இருக்கு" என்று சொல்லும் போது குரல் கம்மி போனது வலியினால்.

பெருமூச்சுடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜ்ஜோ, "சரி கிளம்பு, உன் மாமாவை பார்த்துட்டே வந்திடலாம்" என்று சொல்லிக் கொண்டே இருவரையும் அழைத்துக் கொண்டு ஷங்கரின் வீட்டுக்கு சென்றவனோ அவளை வண்டியில் இருக்க வைத்து விட்டு அவன் மட்டுமே உள்ளே செல்ல, அப்போது தான் மதிய சாப்பாட்டுக்கு வந்த ஷங்கரோ அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

நந்திதாவோ ஷங்கருக்கு உணவை பரிமாறிக் கொண்டு இருந்தவள் உள்ளே வந்த யுவராஜ்ஜை மிரட்சியாக பார்க்க, ஒரு கணம் அவளைப் பார்த்து விட்டு சாப்பிடாமல் கையை துடைத்துக் கொண்டே எழுந்தான் ஷங்கர்.

நந்திதாவோ, "பாவா" என்று அழைக்க, அவன் எந்த பதிலும் கூறாமல் யுவராஜ்ஜூன் முன்னே வந்து நிற்க, அவனை அழுத்தமாக பார்த்த யுவராஜ்ஜோ, "உன் கிட்ட சண்டை போட வரல ஷங்கர்… நிறையவே பேசணும், உனக்கு எப்படி பார்வதியோ, எனக்கு அப்படி தான் நந்திதா... பார்வதி இல்லாமல் நீ எப்படி கஷ்டப்படியோ ஒரு குழந்தையோட நானும் நந்திதா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன். என் நிலமைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு... எனக்கு இதுக்கு மேல எப்படி கேக்கிறதுன்னு கூட தெரியல. நினச்சா உன்னை அடிச்சு போட்டு கூட அவளை அழைச்சு போக முடியும், ஆனா என் மனசு இடம் கொடுக்கல ஏன் தெரியுமா?

அவளை பொண்டாட்டின்னு சொல்லிட்டு தான் இருந்த தவிர அவ மேல நீ எந்த உரிமையும் எடுத்துக்கல, நீ மட்டும் அன்னைக்கு அவளை அருவிழா இருந்து காப்பாத்தலன்னா அவ நிஜமாவே உயிரோட இருந்து இருக்க மாட்டா, அந்த நன்றிக் கடனுக்காக இப்போ வரைக்கும் உன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன்" என்று சொன்னவனை பார்த்து விரக்தியாக சிரித்தவன், "உன் பொண்டாட்டியையும் குழந்தையையும் அழைச்சிட்டு போ" என்று சொல்லும் போதே அவன் கண்ணில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் வழிய, நந்திதாவோ கண்ணீருடன் அவன் முதுகையே வெறித்துக் கொண்டு இருந்தாள்.

கோபமா ஆதங்கமா வலியா என்று தெரியாத பல்வேறு உணர்வுகளில் தத்தளித்தவளோ வேகமாக ஷங்கர் முன்னாடி வந்து நின்று, "எதுக்கு பாவா இப்படி பண்ணுனீங்க?" என்று கேட்கும் போதே கண்ணீர் வழிய, அவளை ஏறிட்டுப் பார்த்தவன், "என்னை மன்னிச்சுடு பார்வதி" என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தி, "நந்திதா! அவளை போலவே நீ இருந்ததால கூடவே வச்சு இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.

என் தப்பை நான் நியப்படுத்த விரும்பல.. நேற்று தான் நிதானமா யோசிச்சேன்... நான் பார்வதியை இழந்து கஷ்டப்பட்ட போல தானே இவரும் உன்னை இழந்து கஷ்டப்பட்டு இருப்பார். உன் புருஷன் கூடவே போயி டு" என்று சொல்ல, அவனை இறுக அணைத்துக் கொண்ட யுவராஜ்ஜின் இறுகிய அணைப்பே அவன் மனதில் இருந்ததை எடுத்து உரைக்க, ஷங்கரோ, "குழந்தையை தூக்கிட்டு கிளம்பு நந்திதா" என்றான்.

அவனை வெறித்துப் பார்த்த நந்திதாவோ கண்ணீரை துடைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தவள் தூங்கிக் கொண்டு இருந்த மகனை கண்ணீருடன் அள்ளி அணைத்துக் கொண்டே வெளியே வந்தாள். நேரே யுவராஜ்ஜிடம், "நான் இவரை என் வாழ்க்கைல மறுபடி சந்திக்கவே கூடாது" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, "நந்திதா" என்று யுவராஜ் கத்தியது அவள் காதிலேயே விழவில்லை..

ஷங்கரோ, "நீங்க போங்க சார்" என்று சொல்லும் போதே அவனை மீறி கண்ணீர் வழிய, அவனை இறுக அணைத்து விடுவித்தவன் வெளியேறி நந்திதாவை தொடர்ந்து வர, அவளோ வண்டியில் குழந்தையுடன் ஏறிக் கொள்ள,அவளையே அதிர்ச்சியாக பார்த்த மீனாட்சியோ, “அப்படியே என் அக்கா போலவே இருக்கீங்க" என்று சொன்னாள்.

விரக்தியாக சிரித்தபடி கண்களை மூடி திறந்தவளோ, "பார்வதி தங்கச்சியா?" என்று கேட்க, அவளோ, "ம்ம்" என்று தலையாட்டிக் கொண்டே இறங்க, அவ்விடம் வந்த யுவராஜ்ஜோ உள்ளே இருந்த நந்திதாவை ஒரு கணம் பார்த்து விட்டு, "உள்ளே போ மீனாட்சி" என்று சொல்ல, அவளும் கையெடுத்து கும்பிட்டு விட்டு ஷங்கரின் வீட்டை நோக்கி நடந்தாள்.

ஷங்கரோ உள்ளே இருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்து இருந்தவனோ, "என்னோட திலீப்" என்று சொல்லிக் கொண்டே முகத்தை மூடி வாய் விட்டு அழுதான்… என்ன தான் அவனால் நந்திதாவை பார்வதியாக முற்றாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் கருவில் இருந்தே திலீப்பை அவன் மகனாக பாவித்து வந்தவன் அவன்.

இந்த பிரிவை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. ஆனால் யுவராஜ் முன்னால் வலியை காட்டுவது அநாகரிகம் என்று கருதியவன் அவன் புறப்பட்டதுமே கண்ணீரில் கரைய, உள்ளே அடியேடுத்து வைத்து வந்த மீனாட்சியோ அழுது கொண்டு இருந்த ஷங்கரை பரிதாபமாக கண்ணீருடன் பார்த்துக் கொண்டே அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.

அவனோ தலையை குனிந்தபடி கண்ணீரில் இருக்க, "ரொம்ப கஷ்டமா இருக்கா மாமா?" என்று கேட்டதுமே விலுக்கென நிமிர்ந்து பார்த்தவன் கண்களை துடைத்துக் கொண்டே, "நீ எங்க இங்க?" என்று கேட்டான். அவளோ, "உங்களை தேடி தான் வந்தேன்" என்று சொல்ல, அவனோ பெருமூச்சுடன், "என்னை தேடி எதுக்கு வந்த? " என்று கேட்டுக் கொண்டே எழ போக, அவளோ அவன் கரத்தை பற்றி எழ விடாமல் தடுத்தவள், "நிறைய பேசணும் மாமா" என்றாள்.

அவனோ அவளை புரியாமல் பார்த்தவன், "பேச என்ன இருக்கு?" என்று கேட்க, அவளோ, "நிறையவே இருக்கு, எப்படி உங்களுக்கு பார்வதியோ அப்படி தான் எனக்கும் நீங்க, இவ்ளோ நாள் உங்களையே நினைச்சிட்டு கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்… அது தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்க,

அவனோ "கேள்விப்பட்டேன்" என்றான் எங்கோ பார்த்தபடி குற்ற உணர்வு கலந்த குரலில். அவளோ, அவன் முகத்தை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவள், அவன் கண்ணோடு கண்ணை கலக்க விட்டபடி, "எனக்கு அக்காவோட இடத்தை நிரப்ப முடியுமான்னு தெரியல, ஆனா உங்க இன்பத்துலயும் துன்பத்திலயும் கூட இருப்பேன்… கல்யாணம் பண்ணிக்கலாமா மாமா?" என்று கேட்க,

அவனோ விரக்தியாக சிரித்து விட்டு, "நான் ஆசைப்பட்டது தான் எனக்கு கிடைக்கல, நீ ஆசைப்பட்டதாவது இவ்ளோ நாள் காத்து இருந்ததுக்காக உனக்கு கிடைக்கட்டும்" என்று சொல்ல, அவளோ கண்ணீருடன் புன்னகைத்துக் கொண்டாள்.

இதே சமயம் காரில் ஏறிய யுவராஜ்ஜிடம், "மீனாட்சி?" என்று தீபன் இழுக்க, "அவன அவ பார்த்துப்பா, அவளை அவன் பார்த்துப்பான்" என்று சொன்னவனோ, "வண்டியை எடு" என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் இருந்த நந்திதாவைப் பார்க்க, அவளோ பாதையை வெறித்தபடி அமர்ந்து இருந்தவள் எதுவுமே பேசவே இல்லை. அவனும் அவளை தொந்தரவு செய்யவும் இல்லை.
 
Super and intresting sis
 
Top