வேல்விழி 40
வீட்டுக்கு வந்ததுமே அனைவரும் அவளை விழி விரித்து நோக்க, ஸ்ரீயோ, "எல்லாம் ஓகேயா யுவா?" என்று கேட்டான். அவனோ, "ம்ம் அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும் ஸ்ரீ, இன்னுமே அந்த ஷாக்ல இருந்து அவ வெளிய வரல" என்று சொல்ல, யாரும் அவளை தொந்தரவு செய்யவே இல்லை. அவளும் வண்டியில் இருந்து இறங்கி யுவராஜ்ஜை தவிர யாரையுமே பார்க்காமல் இருக்க, அவனோ, "வா" என்று சொல்லி அவளை அறைக்குள் அழைத்து செல்ல போனவனோ, "நாளைக்கே ஊருக்கு கிளம்பலாம் ஸ்ரீ, ஏற்பாடு பண்ணிடு" என்றான்.
பிரகாஷோ, "இன்னும் ஷாட்ஸ் இருக்கே" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "அத ஊர்லயே பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்டா" என்று சொன்னவனோ அறைக்குள் நுழைந்து கொள்ள, அவனை தொடர்ந்து அவளும் நுழைந்து கொண்டாள்.
அவள் கையை பிடித்து இருக்க வைத்தவனோ அவள் கையில் இருந்த குழந்தையை வாங்கி நெற்றியில் முத்தம் பதித்து விட்டு கட்டிலில் படுக்க வைத்தான். அவளோ நிலை கொள்ளவே முடியாமல் அப்படியே அமர்ந்து இருக்க, அவள் மனமோ சொல்ல முடியாத உணர்வுகளில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. யாரோ ஒருவனுடன் ஒரு வருடத்துக்கு மேலே இருந்து இருக்கின்றாள். வார்த்தைக்கு வார்த்தை பாவா என்று அழைத்து இருக்கின்றாள்.
எப்படி அவளால் அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியும்? கோபமும் வலியும் போட்டி போட, கழுத்தில் இருந்த தாலியில் கையை வைத்து அறுத்து எடுக்க, கழுத்தில் காயம் உண்டானது. அவளையே பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜ்ஜோ அருகே வேகமாக வந்தவன், கழுத்தில் உண்டான காயத்தை பார்த்து வருடி விட்டு, "இப்போ எதுக்கு இப்படி பண்ணுன?" என்று கேட்க,
அவனை ஏறிட்டு பார்த்தவள், "என்னை பார்த்தா உங்களுக்கு அருவருப்பா இல்லையா?" என்று கண்ணீருடன் கேட்டாள். அவனோ புரியாமல் பார்க்க, "யாருன்னு தெரியாத ஒருத்தன் கூட இவ்ளோ நாள் இருந்து இருக்கேன்… பாவா பாவான்னு கூப்பிட்டு இருக்கேன், என்னை நினைச்சாலே அசிங்கமா இருக்கு, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு" என்று தலையில் அடித்துக் கொண்டே அழ,
அவளை இழுத்து இறுக அணைத்த யுவராஜ்ஜோ, "கொஞ்சம் அமைதியா இரு நந்திதா… நடந்தது நடந்து போச்சு, எனக்கு எப்படி இருந்தாலும் நீ என் பொண்டாட்டி தான், அருவருப்பெல்லாம் இல்லடி… அப்படி இருந்து இருந்தா உன் கூட இருந்திருக்கவே மாட்டேன்" என்று சொல்ல, அவளோ அவன் மார்பில் சரிந்து விம்மி வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள்.
அவனும் அவளை அணைத்துக் கொண்டே ஆறுதல் சொன்னவன் அப்படியே அவளை படுக்க வைக்க, அவளும் அழுது கொண்டே தூங்கி போனாள். அவளை பார்த்து விட்டு பால்கனியில் போய் நின்றவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டபடி நின்று இருந்தான். அவனுக்கும் அவளை எப்படி இயல்பு நிலைக்கு கொண்டு வருவது என்று தெரியவே இல்லை.
நீண்ட நேரம் தூங்கியவளோ கண் விழித்த போது அங்கே இருந்த சோபாவில் மகனை தூக்கி கொஞ்சிக் கொண்டு இருந்தான் யுவராஜ். அவளோ எழுந்து அமர, "ஏதும் சாப்பிடுறியா?" என்று யுவராஜ் கேட்க, அவளோ இல்லை என்று தலையாட்டியவள், "பையனுக்கு தான் பசிக்கும்" என்க. அவனோ, "நீ பீட் பண்ணு, நான் வெளியே போறேன்… உனக்கு தேவையான ட்ரெஸ் பையனுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கி அதோ வச்சு இருக்கேன்… ஒரு நாள் தான் இங்க இருக்க போறோம். நாளைக்கே கிளம்பிடலாம்" என்று சொல்ல. அவளும், "ம்ம்" என்று சொன்னவள், "உங்க பெயர் என்ன?" என்று கேட்க, அவனுக்கோ சுருக்கென்று வலித்தது.
உணர்வுகளை அடக்கிக் கொண்டே, "யுவராஜ்" என்று சொல்ல. அவளோ, "என்ன பண்ணுறீங்க? நமக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? அன்னைக்கு இன்னொரு குழந்தை இருக்குன்னு சொன்னீங்க தானே? அவ என்ன பண்ணுறா? இப்போ யார் அவளை பார்த்துகிறாங்க?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க,
"மூத்த பொண்ணு பெயர் ஆதித்ரி, அவ என் அம்மா கூட இருக்கா… ஊருக்கு போய் அவளை பார்த்துக்கலாம், நீ ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாத, கொஞ்சம் கொஞ்சமா பேசிக்கலாம்" என்று சொல்லி விட்டு குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு வெளியேறி விட, அவளும் இறுகிய மனதுடனேயே குழந்தைக்கு பசியாற்ற ஆரம்பித்தாள்.
அன்று முழுதும் அவளுக்கு அறைக்குள்ளேயே உணவு வந்தது, அவளை தொந்தரவு செய்ய கூடாது என்ற காரணத்தால். அன்றிரவு குழந்தையை அணைத்துக் கொண்டே தூங்கியவள் அடுத்த நாள் காலையில் அவர்களுடன் புறப்பட்டு விட்டாள். யாரையும் பார்க்கவோ பேசவோ முடியவே இல்லை… ஒரு வித்தியாசமான குற்ற உணர்வு அவளை ஆட்கொள்ள தன்னை நினைத்தே அசிங்கமாக உணர்ந்தாள்.
அவள் எந்த தப்பும் செய்யவில்லை என்றாலும் இப்படி ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம் என்கின்ற ஆதங்கம் அவளுக்கு. யார் வந்து பேசினாலும் ஆம், இல்லை என்று பதில் சொல்லி விட, யாருமே அவளை தொந்தரவு செய்யவே இல்லை. யுவராஜ் அவள் அருகே இருந்து இருக்க, அவன் மட்டுமே அவளுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுத்துக் கொண்டு இருந்தான்.
அவர்கள் வீட்டை வண்டி அடைந்ததும் நந்திதாவினை ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டே ஒரு கையில் குழந்தையுடன் உள்ளே வந்தவனை அதிர்ந்து பார்த்தார் நீலாம்பரி. "நந்திதா" என்று சத்தமாக கத்தியே விட்டார்.
நந்திதாவோ யுவராஜ்ஜை புரியாமல் பார்க்க, "என்னோட அம்மா, உன் மேல உயிரையே வச்சு இருகாங்க" என்று சொல்ல, அவளோ மென்மையாக புன்னகைத்தபடி நீலாம்பரியை நோக்கி செல்ல, அவரோ கையில் குழந்தையை தூக்கிக் கொண்டே ஓடி வந்தவரோ அவளை கையினால் தடவிக் கொண்டே கண்ணீருடன், "என்னடா ஆச்சு?" என்று யுவராஜ்ஜிடம் கேட்க,
அவனோ, "மலைல இருந்து விழுந்ததுல எல்லாமே மறந்துட்டா அம்மா, கேரளாவில் தெரிஞ்சவங்க வீட்ல இருந்து என் குழந்தையையும் பெத்து இருக்கா" என்று கையில் இருந்த மகனைக் காட்ட, அவரோ, "நினைவு இருந்தா என்ன இல்லைன்னா என்ன? என் மருமக கிடைச்சிட்டா அதுவே போதும்" என்று சொல்லிக் கொண்டே கையில் இருந்த ஆதித்ரியை அவளிடம் நீட்ட, அவளும் கண்ணீருடன் குழந்தையை வாங்கிக் கொண்டே அணைத்துக் கொண்டவள் அந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தாள்.
அனைவர் மனதிலும் நிம்மதி பரவ, யுவராஜ் அவளை அழைத்துக் கொண்டே தனது அறைக்குள் புக முதல் எட்டி அவள் படத்துக்கு போட்டு இருந்த மாலையை கழட்டி வீசினான். அவளோ கண்ணீரை துடைத்துக் கொண்டே குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தவளுக்கு இன்னுமே ஷங்கரினால் உண்டான குற்ற உணர்வு மனதை அரித்துக் கொண்டு இருந்தது.
அன்றில் இருந்து அவளுக்கு ஒரு புது வாழ்க்கை ஆரம்பமாக, ஒரு வாரம் அவளுடன் கூட இருந்தவன் அவர்களின் சந்தோஷமான பக்கத்தை மட்டுமே அவளிடம் கூறியவன் தடுமாறி தான் மலையில் இருந்து விழுந்ததாகவும் கூறினான். அவளுக்கு பிரச்சனைகளை சொல்லி இன்னுமே அவளை அழுத்தமாக்க கூடாது என்கின்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருந்தது.
அதன் பிறகு அவன் நாட்கள் ஷூட்டிங் என்று ஆரம்பிக்க, சமூக வலைத்தளங்கள் இஷ்டத்துக்கு எழுத அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவன் நாட்களை நகர்த்த, அவளோ குழந்தைகளுடன் நாட்களை நகர்த்தினாள்.
அவன் அவளை நெருங்கவே இல்லை காயப்பட்டு விடுவாளோ என்று. இப்படியான ஒரு நாளில் நீலாம்பரியிடம் பேசிக் கொண்டு இருந்த நேரம் அவரோ, "நீ இல்லன்னு சொன்னதுமே அவன் செத்துட்டான் நந்திதா… அவ்ளோ கோபம் மூர்க்கம் இருக்கும் அவன் கிட்ட, நீ இல்லன்னு சொன்னதுமே அவன் அழுத அழுகை மறக்கவே முடியாது" என்று சொல்ல,
மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கோ அவர் சொன்னதை கேட்டு கேட்டே அவன் மீது காதல் பிறந்தது. வலி இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் அதில் இருந்து வெளியே வர எத்தனித்தவளுக்கு இனியும் யுவராஜ்ஜை கஷ்டப்படுத்த கூடாது என்கின்ற எண்ணம் வர, அன்று ஷூட்டிங் விட்டு அறைக்குள் நுழைந்தவனிடம், "பசங்க ரெண்டு பேரும் அத்தை கிட்ட தூங்க போயிட்டாங்க" என்றாள்.
அவனோ, "ம்ம், இன்னைக்கு என்ன பண்ணுன? நாள் எப்படி போச்சு?" என்று கேட்டுக் கொண்டே குளிக்க போனவன், அவளுடன் சகஜமாக பேசிக் கொண்டே வந்து அவள் அருகே படுக்க, அவளோ அவனை நெருங்கி படுத்தாள். அவனோ புரியாமல் அவளை பக்கவாட்டாக திரும்பி பார்க்க, "இனியும் ஏன் இந்த விலகல்" என்று கலக்கமாக கேட்க, அவனோ, "நீ ஹேர்ட் ஆயிடுவேன்னு தான்" என்று சொன்னான்.
அவளோ, "விலகி போகும் போது தான் கஷ்டமா இருக்கு" என்று சொன்னதுமே அவன் ஆரம்பித்து விட்டான் அவன் லீலைகளை. அவர்கள் நாட்கள் ஓரளவு சுமூகமாக செல்ல ஆரம்பிக்க, இங்கே பிரச்சனை செய்வார் என்று எதிர்பார்த்த அக்ஷராவின் தந்தையோ, "அவள் வாழ்க்கை அவள் இஷ்டம்" என்று சொல்லி விட அந்த காதல் ஜோடிகளை கேட்கவே தேவை இல்லை.
அவர்கள் படப் பிடிப்பும் மொத்தமாக முடிந்து போஸ்ட் ப்ராடக்க்ஷன் வேலையில் இருக்க, ராமும் வீட்டில் விஷயத்தை சொல்லி தாயிடம் வாங்கி கட்டிக் கொண்டாலும் அக்ஷராவை திருமணம் செய்ய சம்மதமும் தாயிடம் இருந்து வாங்கி இருந்தான். இப்படியே அவர்கள் திருமணத்துக்கு பத்திரிகை அடித்து அனைத்தும் ஆயத்தமாகி இருக்க, இன்னும் ரெண்டு நாட்களில் திருமணம் என்ற நிலையில் யுவராஜ் வீட்டில் பரபரப்பாக உடைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருந்தாள் நந்திதா.
அப்போது ஆதித்ரியோ பவுடரை மாபிளில் போட்டு விளையாடிக் கொண்டு இருக்க, "இந்த சட்டை ஆதிக்கு நல்லா இருக்கும்ல" என்று கேட்டுக் கொண்டே ஹாலுக்குள் வந்த நந்திதாவோ பவுடரில் வழுக்கி பின் தலை அடிப்பட விழுந்து விட்டாள். அப்போது ஹாலில் இருந்த யுவராஜ்ஜோ, "நந்திதா" என்று அவளை நோக்கி சென்று கன்னத்தில் தட்டினாலும் அவள் எழும் அறிகுறி இல்லாமல் இருக்க, "அம்மா பசங்கள பார்த்துக்கோங்க" என்றவனோ தண்ணீரை எடுத்து தெளித்தாலும் அவள் எழவே இல்லை. ஆனால் சீரான மூச்சு வந்தது. நன்றாக பயந்து விட்டான் அவன்.
உடனே அவளை கையில் ஏந்தியவன், வெளியே தூக்கி வர அவனது காட்ஸ்ஸும் அவனை நோக்கி வர, அவர்கள் உதவியுடன் காரில் ஏற்றி அவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றான் அவசரமாக. அவளுக்கு மூச்சு வந்து கொண்டு இருப்பதால் பயம் இல்லை என்றாலும் கண் விழிக்காததால் பதட்டம் இருக்க தான் செய்தது.
அவளை பரிசோதித்த வைத்தியரோ, "கொஞ்சம் ஷாக்ல தான் இன்னுமே மயக்கமா இருக்காங்க, ஒரு இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன்… சீக்கிரம் சரி ஆய்டும்" என்று சொல்ல, இந்த விஷயம் அவர்கள் நண்பர்கள் மத்தியில் வேகமாக பரவியது. இதே சமயம் அக்ஷராவுடன் வெளியே சுற்றிக் கொண்டு இருந்த ராமுக்கும் விஷயம் தெரிய வர, "போய் பார்த்துட்டு வருவோம் அக்ஷரா" என்று சொன்னவன் நந்திதாவை பார்க்க ஹாஸ்பிடலை நோக்கி அக்ஷராவுடன் புறப்பட்டு இருந்தான்.
இதே சமயம், மயக்கத்தில் இருந்தவளது கையை தனது கைக்குள் அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்த யுவராஜ்ஜோ, "எவ்வளவு கஷ்டம்டி நமக்கு" என்று சொல்லிக் கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்ட கணம் அவன் கண்ணீர் அவளது நெற்றியில் பட்டு தெறிக்க அவள் கண்மணி மெதுவாக அசைந்தது.
அவனோ சட்டென விலகியவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவள் கண் விழிப்பதை எதிர்பார்த்து. அவளும் மெதுவாக கண்களை விழித்தவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கஷ்டப்பட்டு எழுந்து அமர, அவனோ சட்டென அவள் தோள்களை பிடித்து நிமிர்த்த, அவளோ பதறி விலகியவள் அவனை அதிர்ந்து பார்த்தபடி, "யுவராஜ்" என்றாள்.
அவனோ மென் புன்னகையுடன் கண்களை மூடி திறந்தவன், "ஆர் யூ ஓகே நந்திதா?? நான் யாருன்னு தெரியுதா??" என்று கேட்டான் எங்கே அவள் மறுபடி தலையில் அடிபட்டதால் மறந்து விடுவாளோ என்கின்ற பயத்தில். அவளோ, "ம்ம் நல்லாவே தெரியுது... ஆக்டர் யுவராஜ் தானே" என்றாள்.
அவனோ புருவம் சுருக்கி அவளை பார்த்தவன், "ஆக்டர் யுவராஜ் ஆஹ்??" என்று கேட்க. அவளோ, "அத விடுங்க... ஒரு முக்கியமான விஷயம், நம்ம கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துங்க… என் மனசில இன்னொருத்தர் இருக்கார், அவர் பெயர் ராம்" என்க. யுவராஜ்ஜின் கண்கள் மேலும் விரிய, "கல்யாணமா??" என்று கேட்டான்.
அதே சமயம் ராமோ அக்ஷராவுடன் உள்ளே வந்தவன், "எந்திரிச்சிட்டியா?? எப்படி இருக்க நந்திதா??" என்று கேட்க. சட்டென கட்டிலில் இருந்து எழுந்து அக்ஷராவை தள்ளி விட்டு ராம் அருகே சென்று அவன் கையை பிடித்தவள், "வா ராம் ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாம்... இல்லன்னா எங்கப்பா இவருக்கே என்னை கல்யாணம் பண்ணி வச்சிடுவார்" என்று யுவராஜ்ஜைக் காட்டி சொல்ல அனைவர்க்கும் தூக்கி வாரிப் போட்டது..