வேல்விழி 41
உடனே அக்ஷராவோ வேகமாக வந்து ராமைப் பற்றி இருந்த நந்திதாவின் கையை தட்டி விட்டவள், "எனக்கும் ராமுக்கும் இன்னும் ரெண்டு நாளுல கல்யாணம்" என்றாள். ராமோ நந்திதா பேசியதையே அதிர்ந்து கேட்டவன் யுவராஜ்ஜை பார்த்து, "என்னாச்சு?" என்று கேட்க, அவனோ கண்களை மூடி திறந்து விட்டு, "ஐ திங்க் பாதி தான் நினைவு வந்து இருக்கு" என்று சொன்னான்.
அக்ஷராவுக்கு இப்போது தான் நந்திதா பேசியதின் அர்த்தம் புரிய ஒரு நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம், நந்திதாவோ, "என்னது? கல்யாணமா? என்னை விட்டுட்டு இந்த பொண்ண எப்படி ராம் கல்யாணம் பண்ணிப்ப? அப்போ நம்ம காதல் அவ்ளோ தானா?" என்று கேட்க, என்ன பேசுவது எப்படி பேசுவது என்று தெரியாமல் தவிர்த்து நின்ற ராமோ யுவராஜ்ஜை பார்க்க, "நந்திதா" என்று கர்ஜனையாக அழைத்தான் யுவராஜ்.
அவளும் கண்ணீருடன் யுவராஜ்ஜைப் பார்த்தவள், "எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல, நான் ராமை தான் விரும்புனேன்" என்று சொன்னது யுவராஜ்ஜின் இதயத்தில் ஊசியால் குத்தியது போல வலிக்க, உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே, "நமக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சு நந்திதா" என்றான் பெரிய சத்தமாக.
அவன் சத்தத்தில் அவள் அதிர்ந்து போய் நிற்க, "ராம் நீ கிளம்பு நான் பார்த்துகிறேன்" என்று சொல்ல, ராமுக்கும் அங்கே நிற்பது சங்கடமாக தான் இருந்தது. அடுத்த கணமே தலையாட்டி விட்டு அக்ஷராவின் கரத்தை பிடித்தவன் விறு விறுவென வெளியேற, "போகாத ராம் நம்ம காதல் அவ்ளோ தானா?" என்று அவன் பின்னால் போக எத்தனித்தவளை இழுத்து பிடித்து இருக்க வைத்த யுவராஜ்ஜோ கதவையும் தாளிட, "என்னை விடுங்க" என்று சத்தம் போட்டுக் கொண்டே திமிர ஆரம்பித்தாள்.
அவனோ அவள் தோள்களை பற்றி, "நந்திதா சொன்னா கேளு" என்று சொன்ன போதிலும், அவளோ, "ராம் என்னை விட்டு போறாரே" என்று கத்திக் கொண்டே திமிர, பொறுமை இழந்தவனோ அவளுக்கு ஓங்கி அறைந்து இருந்தான்.
அவளோ கன்னத்தை பொத்தியபடி நிமிர்ந்து பார்த்தவள் அவனது சிவந்த விழிகளைக் கண்டு ஸ்தம்பித்து நிற்க, அவனோ, "இங்க பாரு, எனக்கும் உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு… நீ இப்போ எல்லாமே மறந்துட்ட... புரியுதா?" என்று ஆக்ரோஷமாக கேட்டான்.
அவளுக்கோ பல கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டு இருக்க, கோபமாக நின்ற யுவராஜ்ஜை பயத்துடன் பார்த்தவள், "உங்கள பார்க்கவே பயமா இருக்கு" என்று சொல்ல, அவனோ இடையில் கையினை வைத்து இதழ் குவித்து ஊதியவன், "சாரி" என்று சொல்லிக் கொண்டே தலையை கோதியபடி அருகே இருந்த இருக்கையில் அமர, அவனையே அவள் யோசனையாக பார்த்துக் கொண்டு இருந்தாள். நீண்ட நேரம் இருவரிடத்திலும் மௌனமே ஆட்சி செய்ய, சிறிது நேரத்தில் எழுந்த நந்திதாவோ யுவராஜ்ஜை நோக்கி சென்றாள்.
யுவராஜ் அவளை பார்க்காமலே கைகளை முட்டியில் வைத்து கோர்த்தபடி அமர்ந்து இருக்க, அவன் அருகே யோசனையாக அமர்ந்த நந்திதாவோ, "நிஜமாவே நமக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்க, அவனோ பெருமூச்சுடன், "ம்ம்" என்றான்.
அவளுக்கோ அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் இருக்க, "ராமை விட்டுட்டு எப்படி உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்று கேட்க, அவளை சட்டென்று திரும்பி பார்த்து முறைத்த யுவராஜ்ஜோ, "எனக்கு வாயில ஏதாவது வந்திட போகுது" என்றான் கடுப்பாக.
நந்திதாவோ, "இப்போ எதுக்கு மிரட்டுறீங்க? சந்தேகம் கேட்டது தப்பா?" என்று கேட்க, அவனோ மௌனமாக அமர்ந்து இருக்க, "கல்யாணம் ஆய்டுச்சுன்னு பொய் தானே சொல்றீங்க?" என்று மறுபடி கேட்க, அவனுக்கோ எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
"ஆமா பொய் தான் சொல்றேன். போதுமா?" என்று கோபத்தில் பேசியதை உண்மை என்று நம்பியவளோ, "எஸ்! எனக்கு தெரியும்" என்று சந்தோஷமாக சொல்ல, அவனோ என்ன சொல்வது என்று தெரியாமல் அவளை வெறித்துப் பார்த்தான். அவளோ சந்தோஷமான முகத்துடன் அவன் அருகே வந்து மீண்டும் அமர்ந்தவள், "அந்த பொண்ணு கிட்ட என்ன இருக்குன்னு ராம் பின்னாடி போறான்னு தெரியல… எனக்கு ராம் இல்லாம வாழ முடியாது, பேசாம அவன் கல்யாணத்த நாம பிளான் பண்ணி நிறுத்திடலாமா?" என்று கேட்க,
அவளை அதிர்ந்து பார்த்தவனுக்கு என்ன உணர்வென்று தெரியவே இல்லை. கணவனிடமே வேறு ஒருவனை பிடித்து இருக்கின்றது என்று சொல்பவளை என்ன தான் செய்ய முடியும்... அவன் மனமோ, "என்னை எத்தனை தடவைடி நெஞ்சுலயே குத்துவ?" என்று தான் கேட்க, கண்களை மூடி திறந்தவன், "அதெல்லாம் தப்பு நந்திதா" என்றான்.
அவளோ, "அதுல என்ன தப்பு இருக்கு? என்னை காதலிச்சிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிறது தப்பு இல்லையா?" என்று கேட்க, அவளிடம் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்தவனுக்கு மௌனமே துணையாகி போனது.
அவளோ அவன் ஒற்றைக் கரத்தை தனது இருகைகளாலும் பற்றி பிடிக்க, அவனோ ஆழ்ந்த மூச்செடுத்தபடி அவனைப் பார்த்தான். "இந்த கல்யாணத்தை நிறுத்த எப்படியாவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் " என்க, விரக்தியாக சிரித்தபடி அவள் கரத்தை விலக்கி விட்டு எழுந்து கொண்டான்.
அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ, "சொல்லுங்க ப்ளீஸ்" என்று கேட்க, அவனோ அங்கிருந்த ஜன்னலினால் வெளியே வெறித்துப் பார்த்தவன், "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. அவனோ சட்டென்று திரும்பி பார்க்க, அங்கே தலையை பொத்தியபடி நிலத்திலேயே வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தாள் நந்திதா.
ஓடி வந்து அவள் தலையை இரு கைகளாலும் பற்றி பிடித்தவன், "ஆர் யூ ஓகே நந்திதா" என்று கேட்க, வாயை துடைத்தபடி நிமிர்ந்தவளோ கண்கள் சொருக, "தலை சுத்தலா இருக்கு… எனக்கு நிற்கவே முடியல" என்று சொல்லிக் கொண்டே அவன் மார்பில் சரிய, அவனோ அவளை தூக்கி வந்து படுக்க வைத்தவன், அடுத்த கணமே வைத்தியருக்கு விபரத்தை சொன்னான்.
வைத்தியரும் அந்த அறைக்குள் விரைந்தவர், அவளுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டார். சிறிது நேரம் கழித்து அவளே கண் விழிக்க, வைத்தியரோ மென் சிரிப்புடன் யுவராஜ் அருகே வந்து, "கங்ராட்ஸ் சார், அவங்க ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்காங்க" என்று சொல்ல, அவனோ வலுக்கட்டயமாக சிரித்தபடி, "தேங்க் யூ டாக்டர்" என்று சொன்னாலும் மனதுக்குள், "இதுக்கு என்ன எல்லாம் சொல்லி ட்ராமா பண்ண போறாளோ" என்று நினைத்த அடுத்த கணமே, "என்னது ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேனா?" என்று கேட்டபடி நந்திதா கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.
அவரோ, "ம்ம்" என்று சொன்னார். அவளோ அருகே நின்ற யுவராஜ்ஜை பார்த்தவள், "நான் சின்ன பொண்ணு, எனக்கு எப்படி குழந்தை வளர்க்கிறதுன்னு கூட தெரியாது" என்று சொல்ல, அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "என்னது சின்ன பொண்ணா?" என்று கேட்க, "ம்ம்" என்றாள் தோள்களை உலுக்கி.
அவள் அருகே அமர்ந்தவன், "உனக்கு இது மூணாவது குழந்தை" என்று நிதானமாக சொன்னதுமே அதிர்ந்து வாயில் கையை வைத்தவளோ, "என்னது மூணாவது குழந்தையா?" என்று கேட்க, அவனோ, "ஆமா" என்றான் நிதானமாக.
அவளோ தலையில் கையை வைத்தவள், "என்னால இதெல்லாம் நம்பவே முடியல... ஒரு சின்ன பொண்ணுன்னு பார்க்காம என்ன இப்படி பண்ணிடீங்களே" என்று சொல்ல, அவனுக்கோ பொறுமை எங்கோ பறந்து போனது. "மறுபடி மறுபடி சின்ன பொண்ணுன்னு சொல்லாத, நீ பெரிய பொண்ணு தான்" என்று சொல்ல, சிணுங்கியவள், "என்னை அப்பா கிட்ட கொண்டு விடுங்க, என்னால யாரையுமே நம்ப முடியல" என்று சொல்லிக் கொண்டே டாக்டரை பார்த்தவள், "நீங்களாவது உண்மைய சொல்லுங்க டாக்டர்" என்றாள்.
அவரோ, "என்ன உண்மை?" என்று கேட்க, அவளோ, "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? இரண்டு குழந்தை ஏற்கனவே இருக்கா? நான் நிஜமாவே இப்போ ப்ரெக்னன்ட் தானா?" என்று கேட்க, அவரோ, "கடைசி கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன்… நீ நிஜமாவே பிரேக்னன்ட் தான்" என்று சொன்னவரோ யுவராஜ்ஜிடம், "ஒரு வன் வீக் ப்ரீயா விடுங்க" என்று சொல்லி விட்டு செல்ல, அவனோ மனதுக்குள், "நான் அவளை ப்ரீயா விடுவேன், அவ தான் என்னை ப்ரீயா விட மாட்டா" என்று நினைத்துக் கொண்டே அவளைப் பார்க்க, நாடியை நீவியபடி காலெண்டரை பார்த்து யோசித்துக் கொண்டு இருந்தாள்.
யுவராஜ்ஜோ அவள் தோளில் தட்ட, "இப்போ என்ன வருஷம்?" என்று அவனிடம் கேட்க, அவனோ "2021" என்று பதில் அளிக்க, "என்னது 2021 ஆஹ்? அப்போ நான் டைம் மெஷின்ல இங்க வந்து இருக்கேனா?" என்று கேட்க, அவளை விசித்திரமாக பார்த்தவன், "என்னது டைம் மெஷினா?" என்று கேட்டான்.
அவளோ, "எனக்கென்னவோ அப்படி தான் தோணுது... இத எப்படியாவது நடக்க விடாம பண்ணனும், எனக்கு உங்கள பார்த்தாலே பிடிக்கல" என்று சொல்ல, அவனோ சலிப்பாக நெற்றியை நீவியவன், "பார்க்க பார்க்க பிடிச்சிடும்" என்றான். அவளோ அவனை முறைத்துப் பார்க்க, "டைம் மெஷின் மண்ணாங்கட்டி எல்லாம் ஒண்ணும் இல்ல, உனக்கு எல்லாமே மறந்து போச்சு... வேணும்னா நம்ம போட்டோ பாரு" என்று சொன்னவனோ போனை எடுத்து போட்டோவைக் காட்டினான்.
அவன் மனமோ, "இந்த போன் யாருக்கு யூஸ் ஆகுதோ இல்லையோ எனக்கு நல்லா யூஸ் ஆகுது" என்று நினைக்க, அவர்களின் கல்யாண போட்டோவில் ஆரம்பித்தவளோ, "அப்போ நிஜமா கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்டபடி ஒவ்வொரு புகைப்படமாக பார்த்தாள். அதில் யுவராஜ்ஜிக்கு நந்திதா திருமணம் அன்று முத்தமிட்ட புகைப்படம் இருக்க, சட்டென்று கைகளால் கண்களை மூடியவளோ, "ச்ச என்ன இது கருமம்" என்று சொன்னாள்.
அவனோ எட்டி புகைப்படத்தை பார்த்து, "ஓவரா பில்ட் அப் பண்ணாதே, இப்போ நீ மூணாவது தடவை ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்க" என்று சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே அனைத்தையும் பார்த்து முடித்தவளோ இறுதியாக நந்திதா, யுவராஜ், ஆதித்ரி மற்றும் திலீப் என்று நால்வரும் சந்தோஷமாக சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பார்த்து விட்டு ஆச்சரியமாக, "இவ்ளோ சந்தோஷமாவா உங்க கூட வாழ்ந்து இருக்கேன்" என்று கேட்க, அவனிடம் பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.
அவளோ அனைத்தையும் பார்த்து விட்டு போனை நீட்டியவளுக்கு குழந்தைகளின் முகத்தை பார்த்த பின்னர் சற்று கனிவு திரும்பி இருக்க, அவன் விழிகளை பார்த்தாள். அவனும் அவள் விழிகளை பார்த்துக் கொண்டே, "இப்போவும் கல்யாணத்தை நிறுத்த போறியா?" என்று கேட்க, அவளோ, "அது தான் கல்யாணம் பண்ணி மூணு தடவை ப்ரெக்னன்ட் ஆகி இருக்கேன்ல... கஷ்டப்பட்டாவது உங்களை லவ் பண்ணிடுவேன்" என்று சொன்னதுமே தலையை இரு பக்கமும் ஆட்டி இதழ் பிரித்து சிரித்தவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு விட்டான்.