வேல்விழி 43
அவர்கள் பேசிக் கொண்டு இருக்க, குளித்து ஆயத்தமாகி நந்திதா வெளியே வந்த நேரம் ஸ்ருதியும் வந்திருக்க, அவளோ ஸ்ருதியை மேலிருந்து கீழ் பார்த்து மெலிதாக புன்னகைக்க, ஸ்ருதியும், "குட் மார்னிங் நந்திதா" என்றாள்.
இருவரும் சாதரணமாக பேசிக் கொண்டே சாப்பிட செல்ல அங்கே ஆண்களும் வந்து சேர, ஜெய்யின் மனைவியுடன், ஸ்ருதியும், நந்திதாவும் பேசி நெருக்கமாகிக் கொண்டார்கள். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டதுமே சாப்பிட ஆரம்பித்து இருந்தார்கள். அப்போது யுவராஜ் ஆர்டர் பண்ணி இருந்த அன்னாசி ஜூஸை நந்திதா எடுக்க, அவள் கையை பிடித்த யுவராஜ்ஜோ, "என்னடி?" என்று கேட்டான்.
அவளோ புரியாமல் பார்க்க, அவள் கையில் இருந்த ஜூஸை வாங்கி வைத்தவன், "ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கும் போது இதெல்லாம் குடிக்க கூடாதுன்னு தெரியும்ல" என்று சொல்ல. அவள் புருவம் யோசனையாக சுருங்கியது.
ஸ்ருதியோ, "முதல் தடவை ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கிற நானே எவ்ளோ தெரிஞ்சு இருக்கேன்… நீ மூணாவது தடவை ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க" என்று சொன்னதுமே அவளையும் யோசனையாக பார்த்தவளோ வலுக்கட்டாயமாக சிரித்தபடி சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.
சாப்பிட்டு முடித்து கையை கழுவிய ஜெய்யை கண்களால் அழைத்தான் யுவராஜ். அவனும், "எக்ஸ்கியூஸ்மீ" என்று சொல்லிக் கொண்டே அருகே இருந்த பூங்காவுக்குள் செல்ல, அங்கே வந்த ஜெய்யோ, "என்னடா?" என்று கேட்க, அக்கம் பக்கம் பார்த்து விட்டு, "ரேகா கேஸ் என்னாச்சு? ஒன்னும் ப்ராப்லம் இல்லைல" என்று கேட்டான்.
ஜெய்யோ அவன் தோளில் கையை போட்டவன், "ஒரு பிரச்சனை கூட இல்ல, கேஸை க்ளோஸ் பண்ணியாச்சு. நீ தான் ஷூட் பண்ணின என்று யாருக்கும் தெரியாது... நான் பண்ணின போல தான் கேஸை முடிச்சு இருக்கேன். எப்போவுமே உன்னை நான் காட்டி கொடுக்க மாட்டேன் யுவா" என்று சொன்னதுமே இறுக அணைத்துக் கொண்ட யுவராஜ்ஜோ, "தேங்க்ஸ் மச்சி, உண்மையாவே எனக்கு என்னை சொல்றதுன்னு தெரியல" என்று தழுதழுத்த குரலில் சொல்லிக் கொண்டான்.
ஜெய்யோ, "நிஜமாவே நீ நந்திதா மேல வச்சு இருக்கிற லவ்வை பார்த்து பிரமிச்சு போய்ட்டேன்டா, அவ இறந்துட்டான்னு நினைச்சு ஒரு வருஷம் நீ பட்ட பாடு நான் என் கண்ணால பார்த்தேன், அவ எல்லாம் மறந்து போய் இருந்த நேரம் கூட அவளை மீட்டெடுக்க நீ எவ்ளோ கஷ்டப்பட்டன்னு நினைக்கும் போதே பிரம்மிப்பா இருக்கும்… எல்லாத்துக்கும் மேல பாதி நினைவு வந்த நேரம் ராமை தான் லவ் பண்ணுறேன்னு சொன்னதுமே எவ்ளோ வலிக்கும்னு எனக்கும் தெரியும். ஆனாலும் அவளை பத்தி தான் நினச்ச தவிர உன்னை பத்தி நினைக்கவே இல்லை… உண்மைவே சொல்றேன்டா, யூ ஆர் கிரேட்" என்று சொல்ல,
மென்மையாக புன்னகைத்தவன், "இப்போ கூட அவளுக்கு எல்லாமே நினைவு வந்து ஏத்துக்கிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்… இல்லன்னா ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கும், நிஜமாவே அவளை இப்படி விழுந்து விழுந்து லவ் பண்ணுவேன்னு கனவுல கூட நினைச்சது இல்ல. முதல் எல்லாம் அவ என்ன பண்ணினாலும் கோபம் வரும்… இப்போலாம் அவ என்ன பண்ணினாலும் மேல மேல லவ் பண்ண தான் தோணுது" என்று சொல்ல, ஜெய்யும் சேர்ந்து சிரித்துக் கொண்டான்.
இருவரும் பேசிக் கொண்டே வந்தவர்கள் மீண்டும் சாப்பிட்ட இடத்தை அடைந்து இருக்க, நந்திதா இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது. யுவராஜ்ஜோ, "நந்திதா எங்க?" என்று கேட்க, ஸ்ருதியோ, "வாஷ்ரூம் போறேன்னு சொல்லிட்டு போனா" என்று சொல்ல, அவளும் அங்கே வந்து சேர நேரம் சரியாக இருந்தது.
யுவராஜ்ஜோ, "வா, நந்திதா" என்று சொல்ல, அவளும் வந்து யுவராஜ் அருகே அமர்ந்த போதிலும் முகத்தில் சலனம் மட்டுமே மீதம் இருந்தது. ஒவ்வொருவரும் பேசுவதை உன்னிப்பாக கவனித்தாள் தவிர அவள் பேசுவது குறைந்து போனது.
அப்படியே ஸ்ருதியிடம், "ஒரு வாக் போகலாமா?" என்று கேட்க, அவளும், "சரி வா" என்று சொல்ல, இருவரும் பூங்காவை நோக்கி நடந்தார்கள். ஜெய்யின் மனைவி குழந்தைகளுடன் இருந்ததால் அவர் வராமல் போனது நந்திதாவுக்கு வசதியாக போக, "ஸ்ருதி நான் கேக்கிறதுக்கு நீ உண்மையை மட்டும் சொல்லணும்" என்று கையை பற்றிக் கொள்ள, அவளும் புரியாமல் நந்திதாவை பார்த்தாள்.
குரலை செருமிய நந்திதாவோ, "நான் மலைல இருந்து விழுந்தப்புறம் என்னாச்சு?" என்று கேட்க, ஸ்ருதியோ, "மலைல இருந்து விழுந்தது நினைவு வந்துடுச்சா?" என்று கேட்க, அவசரமாக இல்லை என்று தலையாட்டிய நந்திதாவோ, "யுவராஜ் சொன்னார்" என்றாள்.
ஸ்ருதியோ, "இத சொல்றதா இல்லையான்னு தெரியல" என்று இழுக்க, நந்திதாவோ, "ப்ளீஸ் ஸ்ருதி, எனக்கு தெரிஞ்சாகணும்" என்று தழுதழுத்த குரலில் சொல்ல, அங்கே அமர்ந்த ஸ்ருதியும் மலையில் இருந்து விழுந்ததில் இருந்து மீண்டும் இந்த இடத்துக்கு வந்தது வரை சொல்லி முடித்து இருக்க, நந்திதாவின் ஒற்றைக் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் விழுந்தது.
ஸ்ருதியோ அவளை அணைத்துக் கொண்டவள், "இப்போ தானே எல்லாம் ஓகே ஆயிடுச்சு… எதுக்கு அழுற?" என்று கேட்க, கண்களை துடைத்துக் கொண்டே நிமிர்ந்தவள் ஒன்றும் இல்லை என்கின்ற ரீதியில் தலையை ஆட்டி விட்டு எழுந்து கொண்டவளோ, "அப்போ நாம கிளம்பலாமா?" என்று கேட்க, அவளோ, "இதுக்கு தான் என்னை அழைச்சிட்டு வந்தியா?" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே அவளுடன் கூட நடந்தாள்.
நந்திதா வருவதை பார்த்துக் கொண்டே இருந்த யுவராஜ், "ஹெல்த் ஓகே யா?" என்று கேட்க, அவளும், "ம்ம்" என்று மட்டும் சொல்லி விட்டு அமர்ந்தவளோ அவன் ஸ்ரீயுடன் சிரித்துப் பேச ஆரம்பித்த கணம் அவனை பக்கவாட்டாக திரும்பி ஆழ்ந்து பார்த்தாள். அவன் இதழ்களில் தவழும் புன்னகையை பார்த்துக் கொண்டே இருந்தவளது இதழ்களும் மெலிதாக புன்னகைத்துக் கொள்ள, அப்படியே மென் புன்னகையுடன் குனிந்தவளோ கண்களை மூடி திறந்து கொண்டாள்.
யுவராஜ்ஜோ நந்திதாவிடம், "நேற்று போன மலைக்கு இன்னைக்கு போகலாமா? இல்ல" என்று இழுக்க, அவளோ, "வீட்டுக்கு போகலாம் ப்ளீஸ்" என்றாள் கெஞ்சும் குரலில். அவனும் பெருமூச்சுடன், "ஓகே" என்று வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி சொன்னவனோ தோள்களை உலுக்கிக் கொண்டான்.
அன்று நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்து விட்டு அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு இருந்தார்கள். நந்திதாவோ அந்த இடங்களையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டு வந்தவளோ வீட்டுக்குள் நுழைந்ததுமே அங்கே தவழ்ந்து கொண்டு இருந்த மகனை விசித்திரமாக பார்த்துக் கொண்டே வந்து அள்ளி அணைக்க, அவளது மூத்த பெண்ணும், "அம்மா" என்று அழைத்துக் கொண்டே அவளிடம் வர, அவளையும் மண்டியிட்டு அமர்ந்தபடி அணைத்துக் கொண்டவளுக்கு நிற்காமல் கண்ணீர் மட்டும் வழிந்தது.
நீலாம்பரியோ, "ரெண்டு நாள் தானே விட்டுட்டு போன நந்திதா? ஏதோ வருஷ கணக்குல பிரிஞ்ச போல விம்மி விம்மி அழுற?" என்று கேட்க, யுவராஜ்ஜின் தந்தையோ, "மருமகளுக்கு ரெண்டு நாளே ரெண்டு யுகம் போல இருக்கும்" என்று சொல்லிக் கொள்ள அவளும் சிரித்துக் கொண்டாள்.
இப்படியே இரு நாட்கள் கழிய, அவனது பட வேலையும் மும்முரமாக முடிந்து இருக்க, பிரீமியர் ஷோவுக்காக அவனுக்கும் நந்திதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவனும் குழந்தைகளை பெற்றோரிடம் விட்ட பின்னர் நந்திதாவை அழைத்துக் கொண்டு படத்துக்கு சென்று இருந்தான்.
நந்திதாவுக்கு அந்த படம் ஆரம்பிக்கும் போதே இதய துடிப்பு ஏகத்துக்கும் எகிற, திரையையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு ஒவ்வொரு காட்சிக்கும் கண்ணீர் வழிய, யுவராஜ்ஜுக்கும் இதயம் கனத்து போனது. நடிப்பை தாண்டி அது அவனுடைய முன் ஜென்ம வாழ்க்கை அல்லவா? படத்தில் அவன் யுவராஜன் ஆகவே வாழ்ந்து இருந்தாலும் அவனால் இறுதி காட்சிகளில் நிலை கொள்ளவே முடியவில்லை.
சட்டென்று எழுந்து அவன் வெளியேறி இருக்க, அவன் வெளியேறியது கூட தெரியாமல் படத்தையே கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்த நந்திதாவுக்கு மேனி சிலிர்த்து போனது. வலிக்கிறது ஆனாலும் அவள் எழாமல் மொத்தமாக பார்த்து முடியும் வரைக்கும் அமர்ந்து இருக்க, அந்த படத்தில் கூட அவள் கதாபாத்திரத்தை யுவராஜ் சாக வைக்க விரும்பவில்லை.
சாபம் போட்டு விட்டு வீரநடையுடன் அரண்மனையை விட்டு வெளியேறுவது போல இறுதி காட்சியை காட்டி இருக்க, "வேல்விழியாள் உன்னிடம் மன்னிப்பு யாசிக்க கூட தகுதி அற்று உன் மன்னிப்புக்காக காத்துக் கொண்டு இருக்கும் யுவராஜன் நான்" என்று அந்த வரி அவன் இறப்புடன் முடிந்து இருக்கும். படம் முடிய ப்ரீமியர் ஷோவுக்கு வந்த முக்கியஸ்தர் கண்களில் எல்லாம் கண்ணீர் மட்டுமே எஞ்சி இருக்க, மின் விளக்குகள் அனைத்தும் போடப்பட்டது.
அவசரமாக அனைவரும் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொள்ள, மின் விளக்குகளின் வெளிச்சத்தை பார்த்த பின்னரே யுவராஜ் உள்ளே வந்தான். நடந்து வந்து நந்திதா அருகே அமர்ந்தவன் அவள் கரம் மீது கரத்தை பதித்து, "படம் எப்படி இருக்கு" என்று கேட்க,
அவளோ அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவளோ, "ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றாள். அவன் மனமோ, "இது நம்ம கதை தான்" என்று சொல்ல விரும்பினாலும், எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவனோ, "அப்போ நாம கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே எழ, அவளும் எழுந்து கொண்டாள். நேரே வந்து பிரகாஷை அணைத்து, "உனக்கு பெரிய எதிர்காலம் இருக்குடா" என்று சொல்ல, அவனும் மென்மையாக சிரித்துக் கொண்டான்.
அங்கே ராம் அருகே நின்று இருந்த அக்ஷராவை நோக்கி வந்த நந்திதாவோ, அவள் கையை பற்றி, "சூப்பரா நடிச்சு இருக்க" என்று சொல்ல, அவளும் மென்மையாக புன்னகைத்துக் கொள்ள, ராமும் அக்ஷராவின் கரத்தை பெருமையுடன் பற்றிக் கொண்டான். இப்படியே அவர்கள் ஒன்றாக சாப்பிட்டு விட்டு புறப்பட்டு இருந்தார்கள். வீட்டுக்கு வந்ததும் அன்று இரவு நீலாம்பரியுடனேயே இரு குழந்தைகளும் தூங்கி விட, அறைக்குள் வந்து முதலில் குளிக்க சென்றாள் நந்திதா.
அவள் வந்த பின்னர் யுவராஜ்ஜூம் குளித்து விட்டு வந்து விட, அவனுக்காக கட்டிலில் அமர்ந்து காத்துக் கொண்டு இருந்தவளோ படுக்க போனவனிடம், "இப்போவே தூங்கணுமா?" என்று கேட்டாள்.
அவனோ, "முழிச்சு இருந்து என்ன பண்ணுறது?" என்று கேட்க, அவளோ, "என்ன பண்ணனும்னு நான் சொல்லி தரேன்" என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் இருந்து எழுந்து அவனை நெருங்க, அவனோ அன்று படம் பார்த்ததில் இருந்தே நிலையாக இருக்கவில்லை. இப்போது வரைக்கும் அந்த தாக்கம் மனதில் இருக்க, தடுமாறிக் கொண்டு இருந்தவனோ அருகே வந்தவளது தோள்களை பற்றி தள்ளி நிறுத்தியவன், "இன்னைக்கு கொஞ்சம் மனசு சரி இல்ல நந்திதா" என்று சொன்னான்.
அவளோ, "அதென்ன சரி இல்ல?" என்று கேட்க, அவனோ, "ஒரு மாதிரி இருக்கு நந்திதா, நாளைக்கு ஓகே ஆயிடும்" என்று சொல்லி விலக போனவனின் கையை பற்றியவளோ, "என்னாச்சுன்னு சொல்லுங்க" என்றாள். அவனோ, "ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… ரொம்ப கில்டியா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே அவள் கரத்தை உதற முற்பட, அவளோ, "சொல்லிட்டு போங்க" என்றாள்.
அவனோ, "சொன்னா தாங்க மாட்ட" என்று சொல்லும் போது அவன் குரல் கரகரக்க, "இல்ல சொல்லிட்டு போங்க" என்று அவள் அடம் பிடிக்க, பொறுமை இழந்தவன், "இன்னைக்கு நீ பார்த்தது நம்ம முன் ஜென்ம கதை… உன்னை அவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கேன், நம்ம குழந்தை இறக்க நானே காரணம் ஆகி இருக்கேன், இதுக்கு மேல எப்படி என்னால நிதானமா இருக்க முடியும்? நீ மறந்து போனதை சாதகமா வச்சு என்னால சந்தோஷமா வாழ முடியல, உறுத்திட்டே இருக்கு… உனக்கு எல்லாம் நினைவு வந்து மன்னிச்சு ஏத்துக்கிட்டா தான் எனக்கு நிம்மதி" என்று சொன்னவனை அழுத்தமாக பார்த்தவள் முகத்தில் எந்த சலனமும் இருக்கவே இல்லை.
அவள் அருகே வந்து அவள் தோள்களை இறுக பற்றியவன், "இப்போ சொல்லு, இப்படிப்பட்ட மோசமானவன் கூட நீ இனி சந்தோஷமா வாழ முடியுமா?" என்று கேட்க, அவளோ, "முடியுமே" என்றாள். அவனோ இரு பக்கமும் இல்லை என்று தலையாட்டியவன், "எல்லாம் மறந்து இருக்கிறதால உனக்கு அப்படி தோணும்.. எல்லாமே நீ மறந்துட்டே... ஆனா எல்லாமே நினைவு வந்தா உன்னால என் கூட சந்தோஷமாவே வாழ முடியாது" என்றான் விரக்தியாக.
அவளோ, "அப்படினு யார் சொன்னா? போன ஜென்மத்தில் எந்த மித்ரா கூட சேர்ந்து என்னை கஷ்டப்படுத்தினீங்களோ அதே மித்ராவை இந்த ஜென்மத்துல இந்த கையால கொன்னு இருக்கீங்க" என்று சொல்லி அவன் கையை பிடிக்க, அவனோ அவளை அதிர்ந்து பார்த்தான்.
அவளோ அவனை மேலும் நெருங்கியவள், "மொத்தமா மறந்து இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்த என் மேல சின்ன சந்தேகம் கூட படாம மீட்டு எடுத்து இருக்கீங்க… அப்போவும் பாதி நினைவு வந்து ராம கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னதுக்கு கொஞ்சமும் கோபப்படாம் என்னை மீட்டெடுக்க இப்போ வரைக்கும் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க, எல்லாத்துக்கும் மேல எனக்காக அந்த படத்தை எடுத்து இருக்கீங்க... இதுக்கு மேல நான் முடியாதுன்னு சொல்வேன்னு நினைச்சீங்களா?" என்று கேட்ட போதே அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய,
அவனோ அவளை அதிர்ந்து பார்த்தவன், "எல்லாமே நினைவு வந்திடுச்சா நந்திதா?" என்று கேட்க, அவளோ கண்ணீருடன், "ஆம்" என்று தலையாட்டியவள், "பிக்னிக் போன அடுத்த நாளே எல்லாமே நினைவு வந்திடுச்சு, வாஷ் ரூம் போன நேரம் நீங்களும் ஜெய்யும் பேசிட்டு இருந்ததை கேட்டேன்.. உங்களை எவ்ளோ வெறுத்தேனோ இப்போ அவ்ளோ லவ் பண்ணுறேன் யுவா" என்று சொல்ல, அவனை இறுக அணைத்துக் கொண்டவன் கண்ணிலும் கண்ணீர் தான்.
அப்படி ஒரு நெகிழ்ச்சியான தருணம் அது. அவன் ஆசைப்பட்ட மன்னிப்பு கிடைத்து விட்டது அல்லவா? அவள் குரல்கள் கம்ம அவள் அணைப்பும் இறுகி கொள்ள, நீண்ட நேரம் அப்படியே இருந்தார்கள் ஆறுதல் தேடி... அவளோ, "முன் ஜென்மத்தில நீங்க தப்பானவரா இருக்கலாம் யுவா, அத வச்சு இந்த யுவாவை இனி தண்டிக்கிறதா இல்ல, வேற யாரும்னா போடின்னு போய் இருப்பாங்க, ஆனா நீங்க" என்று சொன்னவளுக்கு விம்மலே வந்து சேர,
அவளை நிமிர்த்தி அவள் முகத்தை தாங்கியவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். அவளோ கண்களை மூடி அவன் முத்தத்தை அனுபவித்துக் கொண்டே அவன் கன்னத்தில் பதில் முத்தம் வழங்கினாள். கொடுக்கல் வாங்கலில் ஆரம்பித்த அவர்கள் முத்தம் மஞ்சத்தில் முற்றுப் பெற,
அவளோ அவன் மார்பில் படுத்து இருந்தபடியே, "என்ன நடந்தாலும் இந்த விஷயத்தில மட்டும் ரொம்ப மோசம் நீங்க" என்று சொல்ல, அவள் தலையை கோதியபடியே, "உன்ன பார்த்தாலே சும்மா இருக்க முடியல… என்ன பண்ண சொல்ற?" என்று கேட்க, அப்படியே அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவளோ அவன் கன்னத்தை கிள்ளிக் கொண்டாள்.
அவனோ, "அத விடு, நம்ம அரண்மனைக்கு போவோமா? அன்னைக்கு நீ பார்க்கவே இல்லைல" என்று சொல்ல, அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவள், "எனக்கு அந்த யுவா வேணாம்... இந்த யுவா மட்டுமே போதும், ரொம்ப சந்தோஷமா இருப்பேன்" என்று சொல்ல, அவளை நெகிழ்ச்சியாக இறுக அணைத்து இருந்தான் அவன்.
தொலைத்த பொக்கிஷங்களை பல ஜென்மங்கள் கழித்து பெற்றுக் கொண்ட வேங்கை யுவராஜ்ஜும் அவன் வேல்விழியாள் நந்திதாவும் புது வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தார்கள்.
சில வருடங்கள் கழித்து,
கண்ணாடி முன்னே நின்று ஜிம்மிக்கியை அணிந்து கொண்டு இருந்த நந்திதாவின் பின்னே வந்து நின்றான் யுவராஜ். அவள் விழிகளோ கண்ணாடியூடு அவளை காதலுடன் நோக்க, அவனோ கையை நீட்டி மேடிட்ட அவள் வயிற்றை வருடிக் கொண்டே அவள் கழுத்தில் முத்தம் பதித்தான். அவளோ கண்களை மூடி உணர்வுகளை அடக்கிக் கொண்டே, "நாலாவது குழந்தை வயித்துல இருக்கு… இன்னுமே ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க… சோஷல் மீடியாவில ஸ்கூல் நடத்த போறாரா யுவராஜ்ன்னு கிண்டலா பண்ணுறாங்க" என்று சொல்ல,
அவனோ அவள் வாசத்தை நுகர்ந்தபடி, "யார் என்ன பேசினாலும் எனக்கு கவலையே இல்லடி, நம்ம வாழ்க்கையை நாம வாழணும்" என்று சொல்ல, பெருமிதமாக புன்னகைத்தவள், "சார் தான் என்னை பிரியாணி சாப்பிட விடாம பண்ணி இருக்கீங்க… நினைவிருக்கா?" என்று கேட்டாள்.
அவனோ கண்ணாடியூடு அவளைப் பார்த்தவன், "இப்போ கேளு பிளேட் பிளேட் ஆஹ் கொண்டு இறக்குறேன்" என்று சொல்ல, இதழ் பிரித்து சத்தமாக சிரித்தவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் யுவராஜ். அவர்கள் வெளியே வந்த போது அவர்கள் இரு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் என மூவரும் ஆயத்தமாகி இருக்க,
அவர்களை அழைத்துக் கொண்டே சென்றது என்னவோ மதனா மற்றும் பிரகாஷின் திருமணத்துக்கு தான். அங்கே ஏற்கனவே ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டே ஸ்ரீ நிற்க, அவன் அருகே ஸ்ருதி மேடிட்ட வயிற்றுடன் நின்று இருந்தாள். அதே போல ராமும் கையில் ஆண் குழந்தையுடன் நின்று இருக்க அவன் அருகே அக்ஷராவும் மேடிட்ட வயிற்றுடன் நின்று இருந்தாள்.
யுவராஜ்ஜோ நர்சரி ஓனர் போல வந்து இறங்க, ஸ்ரீயோ, "டேய் உன்னை நினைச்சாலும் பீட் பண்ண முடியாது போல, நந்திதாவுக்கு அம்னீசியா வந்தாலும் வரலைன்னாலும் வாந்தி வர வச்சிடுற" என்று சொல்ல, "டேய் போதும்டா" என்று சிரித்தபடி சொன்ன யுவராஜ்ஜோ, "ஆனாலும் இந்த சண்டை கோழிங்க இப்படி கல்யாணம் பண்ணுவாங்கன்னு நான் நினைச்சே பார்க்கல" என்று சொல்ல,
ஸ்ருதியும், "எனக்கும் கல்யாண பத்திரிகையை நீட்டினதும் ஷாக் ஆயிடுச்சு" என்று சொன்னாள். ஸ்ரீயோ, "ரெண்டும் சரியான அமுசடக்கி" என்று கலாய்க்க அனைவரும் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். அங்கே பிரகாஷ் மதனாவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து தன்னில் சரி பாதியாக்கி இருக்க, நான்கு ஜோடிகளும் தமது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
முற்றும்