pommutamilnovels.com
pommutamilnovels.com
Thank u so much sis for ur review#priyareviews
கதை எண் 10
அனலுக்குள் தகித்தேனே
ரைட்டர் யாரு பா நீங்கஇதுக்கு மேல ஹீரோயின் ஆஹ் கொடுமை படுத்தவே முடியாது
மிருதுளா ரொம்ப பாவம் பா இவ கஷ்டப்படுவதற்கு என்றே பிறந்து இருப்பா போலவேவாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம் கஷ்டத்தில் தான் வாழ்க்கையே இருக்கு
பெண்ணாக பிறந்து விட்டு இவளுக்கு வரும் ஆபத்துகளும் இன்னல்களும் முடியல போதும் ரைட்டர் இவளை விட்டுடுங்க ன்னு கெஞ்சும் அளவுக்கு போட்டு பாடாய் படுத்தி இருக்கீங்க
நல்ல வேளை இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி கொண்டு அவ எந்த தப்பான முடிவு எடுக்கல
ராம் இவன் என்ன டிசைன் என்றே தெரியலமுதலில் இவன் மீது கோபம் மட்டும் தான் இருந்தது சில விஷயம் தெரிஞ்ச பிறகு நீ எல்லாம் ஏன் டா இன்னும் உயிரோட இருக்கு என்று தான் தோணுச்சு
விவரிகா இது லூசா லூசு மாதிரி நடிக்குதா வேண்டாம் என்று சொன்னவனை பிடித்து தொங்கி கொண்டு தானும் வாழாமல் பிறருக்கும் கஷ்டம் கொடுத்து கொண்டுஎன்ன பிறவியோ
அர்ச்சனா & சாரதி
இந்தர் இவனை பற்றி தெளிவான முடிவு எடுக்கவே முடியல இவன் நல்லவனா கெட்டவனா வில்லனா ஹீரோவா என்று யோசிச்சே மண்டை காயுதுஅதுவும் இவன் என்ன தான் விளக்கம் சொன்னாலும் சில விஷயம் எல்லாம் ஏற்று கொள்ளவே முடியல எதையும் முழுதாய் தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர் வாழ்க்கையில் முடிவு எடுக்கும் அதிகாரம் இவனுக்கு யாரு கொடுத்தது செய்வதையும் செய்து விட்டு அதற்கு விளக்கம் வேறு
லூசு மண்டையன்
வருண் விஷயத்தில் மட்டும் தான் சரியாக இருக்கிறான் மற்றது எல்லாமே
ஏகப்பட்ட எழுத்து பிழை அதுவும் முக்கியமா சரி (சேரி ) ரெண்டும் வெவ்வேறு வார்த்தைகள் வெவ்வேறு அர்த்தங்கள் கதை முழுவதும் இதே வார்த்தைகள் கொஞ்சம் சலிப்பை தருகிறதுசில விஷயங்கள் ரொம்பவே முரண்பாடாக இருந்தது
நிறைய குழப்பங்கள், நிறைய தடுமாற்றங்கள், கதை போக்கு கொஞ்சம் சரி செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது
இது என் மனதில் தோன்றிய விஷயம் தவறாக இருப்பின் மன்னிக்கவும்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
லிங்க்
![]()
"அனலுக்குள் தகித்தேனே" கதைத் திரி
அத்தியாயம் 1 அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள்.. "எனி ஒன் ப்ளிஸ் ஹெல்ப் மீ" "ஏய் பொண்ணே கொஞ்சம் சும்மா இரு" 'கடவுளே எப்படி ராம் இந்த கல்யாணத்திற்கு...pommutamilnovels.com
pommutamilnovels.com