ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

11 விழியோரம் சிறையானேன் கதைக்கான விமர்சனங்கள்

வணக்கம் சகோதரிகளே ..

பொம்முநாவல்ஸ்சின் போட்டிக் கதை

#விழியோரம் சிறையானேன்..

#கதைஎண் 11

விழிகளால் சிறை எடுத்தவனை தன் நெஞ்சத்தால்
பூஜித்து வாழ்ந்த மங்கை இவள்..
செதுக்கிய சிற்பமாய் ..அவன் உளியாக அவள் சிற்பமாய்
உருமாறி தனைமாற்றி உருகிய இரு உயிர்கள்..

விழியோரம் சிறையானேன் உன் பார்வையில்
நான் வாழ்கின்றபோது..
நானும் உன்னுள் சிறையாகி போகின்றேன்
உன் நேச நினைவுகளால்...

மிகவும் அருமையான கதை ஆசிரிய தோழியே.. எம் விழிகளையும் கட்டிப்போட்டு அழவைத்தும் சென்றீர்கள்..

நாயகன் தேவ் எமை அவனுள்ளே உள்நோக்கி பயணிக்க வைத்து பின்பு மாயமாய் மறைந்தும் போகிறான். அவன் வரும் இடமெல்லாம் காதல் சாமரம் வீசி சென்றது.இவனின் "ஸ்பார்க்கல்"
என்றுமே மறக்க முடியாத ஒன்று..இவனின் காதல் எமையும் அசைத்து சென்றது என்றால் மிகையாகாது.

நாயகி எழில் வேலியே பயிரை மேய விளையும் நேரம் .அதை முறியடித்து எப்படி தப்பித்து தன்னை செதுக்கி தன் உடன் உறையுள் உள்ளவர்களையும் செதுக்கி மீட்டு மீண்டு வருகிறாள் .என்பதை அழகாகவும் ஆழமாகவும் கொண்டு சென்றது அருமையோ அருமை.

நட்பு கட்டாயம் சொல்லவேண்டிய ஒன்று எமை எல்லாம் கண்ணீர் நிலையில் நிறுத்திய நட்பு. சாம் மற்றும் தேவ்.. மீண்டும் வந்த சாம் வருகையிலும் ஆனந்த கண்ணீரே.. அழகாக நட்பை விதைத்து சென்றது அழகு.

ஏனைய அனைத்து பாத்திரங்களும் மிகையில்லா நிலையில் கொண்டு சென்று கதையை அழகாகக்கியது ஆசிரிய தோழியே வாழ்த்துக்கள் மா.

உங்களின் எழுத்தில் ஆழமான அழகான நிலைகளை கண்டேன்.ஆத்மார்த்தமான ஒரு காதல் கதை. இப்படியும் காதல் செய்யலாம் என்பதை கூறி சென்றது மிகவும் அருமை.

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே.
 
  • Love
Reactions: T21
கதை எண் 11

விழியோரம் சிறையானேன் ?️?️
ஆர்யா சினிமா துறையில் பெண் இயக்குநராக வெற்றிநடை போடும் பெண் சிங்கம், சினிமா துறையில் மட்டுமில்லாமல், தன் வாழ்விலும் பெண் சிங்கமாக வலம் வருகிறாள்.... ஆர்யாவின் துணிச்சல், தைரியம் பார்ப்பதற்கு ஒரு பிரமிப்பை ஊட்டுகிறது இப்படி ஒரு பெண்ணா என்று......
அதிலும் சிம்மன்னிடம் துணிந்து நிக்கும் போது என்னடா பொண்ணு என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை .....
அம்முலுவிடம் காட்டும் அன்பு தாய் அன்புக்கு நிகரானது அருமை.... அம்முலு அம்முவின் மீது வைத்திருக்கும் அன்பு நிகரற்றது....
நெடுமாறனின் மறைமுக நட்பிற்கு அவன் தியாகம் செய்ய நினைப்பதும், ஆர்யாவின் புரிதலும் அருமை.....
தேவ், சாம்சன் உடைய நட்பிற்கு வார்த்தையே கிடையாது.... சாம் இருக்கும் இடமெல்லாம் கலகலப்பாக அருமையாக இருந்தது.... எந்த அளவுக்கு கலகலப்பாக வைத்தானோ அந்த அளவுக்கு அழுகவும் வைத்துவிட்டான்.... சாம் நட்பு கிடைத்ததற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும் தேவ்.....
தேவ் தொழில் சம்பந்தமாக ஒரு கிராமத்திற்கு செல்லும் பொழுது எழிலை சந்திக்கின்றான், பார்த்த முதல் பார்வையிலேயே ஈர்க்கப்படுகின்றனர்... ராஜா எழிலை எப்படியாவது அடையவேண்டும் என்று இருக்கும்போது, ராஜா இடமிருந்து எழிலை காப்பாற்றுவது அருமை......
எழில் தேவ் திருமணம், இப்படி ஒரு தருணம் நம்ப வாழ்க்கையில கிடைக்காத என்று ஏங்க வைக்கும் அழகான காட்சி..... ????
கலை குழலியை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுகிறான்... ஒரு அழகான லவ்லி பீஸ் ? குழலி இடம் தன் காதலைச் சொல்வதற்கு தடுமாறுவது அருமை, சூர்யா தன் நண்பனுக்காக குழலி இடம் கலை காதலை போட்டு உடைப்பது செம?...
? இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்டை வச்சாங்க நம்பர் ரைட்டர் சான்சே இல்ல ?
அழகாக மிக சுவாரசியமாக விறுவிறுப்பாக நகரும் கதை ❤? ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்?
அழகான விமர்சனம்?????? அளித்தமைக்கு நனி நன்றிகள் சகி???????????
 
விழியோரம் சிறையானேன்......
பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பி வரும் குழலிய, கலை காப்பத்தறான். அவன் துணை இயக்குனர் ஆர்யா கிட்ட. ஆர்யா ஒரு சிங்க பெண், திரை உலகில் சிம்ம சொப்பனம். ஆன ஒருத்தருக்கு மட்டும் குழந்தை பெண் அது???
எழில் பெயர் போலவே ரொம்ப அழகு, ஆன அது தான் அவளுக்கு ரொம்ப ஆபத்தும் கூட. அம்மா இல்லாத பெண் அவளுக்கு அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான் ???.
தேவ் - சாம், கிராமத்தில் லொகேஷன் பார்க்க வர, தேவ் பார்த்தது என்னவோ எழிலைத்தான் ???. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். தேவ் - சாம் நட்பு சிம்பிளி வாவ்???.
எழிலுக்கு இருக்கற ஆபத்து, தேவ்க்கும் தீங்கு விளைவிக்குமா, அது கதையில்.....
பிரகதி இவ குட்டி பட்டாஸ் தான்???.மாறன் அந்த பட்டாசுக்கு ஏத்த தீ பெட்டி☺️☺️☺️.
ராஜா & சிம்மன் எல்லாம் வாழவே தகுதி இல்லாதவர்கள்????.
கலை - குழலி, பிரகதி - மாறன் காதல் ரசனைக்கு உரியது???.
தேவ் - எழில் காதல் நம் உயிரை உருக வைப்பது????.
இவங்க எல்லாரையும் நம்ம மனசுள்ள சிறை வெச்ச ரைட்டர்ஜீக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்?????
அழகான விமர்சனம்???? அளித்தமைக்கு நனி நன்றிகள் சகி???
 
வணக்கம் சகோதரிகளே ..

பொம்முநாவல்ஸ்சின் போட்டிக் கதை

#விழியோரம் சிறையானேன்..

#கதைஎண் 11

விழிகளால் சிறை எடுத்தவனை தன் நெஞ்சத்தால்
பூஜித்து வாழ்ந்த மங்கை இவள்..
செதுக்கிய சிற்பமாய் ..அவன் உளியாக அவள் சிற்பமாய்
உருமாறி தனைமாற்றி உருகிய இரு உயிர்கள்..

விழியோரம் சிறையானேன் உன் பார்வையில்
நான் வாழ்கின்றபோது..
நானும் உன்னுள் சிறையாகி போகின்றேன்
உன் நேச நினைவுகளால்...

மிகவும் அருமையான கதை ஆசிரிய தோழியே.. எம் விழிகளையும் கட்டிப்போட்டு அழவைத்தும் சென்றீர்கள்..

நாயகன் தேவ் எமை அவனுள்ளே உள்நோக்கி பயணிக்க வைத்து பின்பு மாயமாய் மறைந்தும் போகிறான். அவன் வரும் இடமெல்லாம் காதல் சாமரம் வீசி சென்றது.இவனின் "ஸ்பார்க்கல்"
என்றுமே மறக்க முடியாத ஒன்று..இவனின் காதல் எமையும் அசைத்து சென்றது என்றால் மிகையாகாது.

நாயகி எழில் வேலியே பயிரை மேய விளையும் நேரம் .அதை முறியடித்து எப்படி தப்பித்து தன்னை செதுக்கி தன் உடன் உறையுள் உள்ளவர்களையும் செதுக்கி மீட்டு மீண்டு வருகிறாள் .என்பதை அழகாகவும் ஆழமாகவும் கொண்டு சென்றது அருமையோ அருமை.

நட்பு கட்டாயம் சொல்லவேண்டிய ஒன்று எமை எல்லாம் கண்ணீர் நிலையில் நிறுத்திய நட்பு. சாம் மற்றும் தேவ்.. மீண்டும் வந்த சாம் வருகையிலும் ஆனந்த கண்ணீரே.. அழகாக நட்பை விதைத்து சென்றது அழகு.

ஏனைய அனைத்து பாத்திரங்களும் மிகையில்லா நிலையில் கொண்டு சென்று கதையை அழகாகக்கியது ஆசிரிய தோழியே வாழ்த்துக்கள் மா.

உங்களின் எழுத்தில் ஆழமான அழகான நிலைகளை கண்டேன்.ஆத்மார்த்தமான ஒரு காதல் கதை. இப்படியும் காதல் செய்யலாம் என்பதை கூறி சென்றது மிகவும் அருமை.

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே.
அழகு விமர்சனம் பவானிம்மா???? மிக்க நன்றிகள் ????????????
 
விழியோரம் சிறையானேன்!

#போட்டிக் கதை

ஆசிரியர் : ட்விஸ்ட் ரைட்டர் (11)

ஹீரோ : ஆர்ய தேவ்
ஹீரோயின் : எழிலரசி (ஆர்யா)

ஆழமான காதல் கதை..

தாய் தந்தை இருந்தும் அனாதையாய் உணர்ந்திருந்தவளுக்கு தாயுமானவனாய் அவன்!

முதல் சந்திப்பிலேயே விழியோறம் சிறையானவன் வாழ்க்கை பயணம் முழுதும் அதிலே தஞ்சம் புகத் தான் ஆசைப்பட்டானோ???

மென் புயலாய் இருந்தவளை சூராவளியாய் மாற்றிய விதியை என்ன சொல்லி பாராட்ட???

தனக்கு கிடைக்கா பாசம் அடுத்தவர் வாழ்க்கையில் நடந்து விடக் கூடாது என்பதில் பாவை நெஞ்சம் அனைவரையும் அன்பில் நெகிழ்த்த அவளுக்கு மட்டுமாய் அவனே எல்லாமுமாய்!

உதவிக் கரம் நீட்டியவன் (கலையரசன்) காதலில் விழுந்த மாயையும் அன்பு தானோ???

அதிரடியாய் இறங்கியவள் (பிரகதி) காதலை கூட அதிரடியாய் நிகழ்த்திய விதமே தனி அழகு.

உயிர் கொடுப்பான் தோழன் என்ற இலக்கணம் அவனுக்கே (சாம்சன்) பாந்தமாய் பொருந்திப் போக நண்பன் காதல் கரை சேர உயிர் நீத்தே போனான் அவனுக்காக மட்டுமே!

உன்னதமான நட்பை கொடுத்தவனுக்காய் காளையிவன் (தேவ்) சிறைவாசம் செல்ல கணவனுக்காய் தன்னையே செதுக்கிக் கொண்டாள் பாவை!

அவனுக்காகவே காத்திருந்த வாழ்வு அவனுடனேயே பிணைக்கப்பட இருவரும் விரும்பியே விழியோரமாய் சிறையில்!!!

அருமையான படைப்பை கொடுத்ததற்கு நன்றிகளுடன் போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கா ❤️

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.

ரிஷி.

பி. கு - இன்றும் டேக் செய்ய தேடினால் திரும்பவும் முழிச்சு கிட்டு நின்னேன் ?‍♀️

8d337849.jpg
 
  • Love
Reactions: T21
Top