#அன்பிலே_அசுரனடி_விமர்சனம்
சுய ஒழுக்கம் இல்லாமல், கோபகாரனா சுத்தீட்டு இருந்த நாயகன் ஜெய வீரபத்ரனை நாயகி உமையாள் திருமகளின் வருகை எப்படி மாற்றிவிடுகிறது என்பதே கதை ❤
இந்த வட்டார வழக்கில் கதை படிப்பது எனக்கு இது தான் முதல் முறை. அதுனாலயோ என்னமோ என்ன இப்படி பேசிக்கிறாங்கனு ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது

ஜெய வீரபத்ரன் இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட நாயகனை நான் பார்த்ததில்லை


அடேய் நீ பண்ணுற வேலையை பெருமையா ஒரு பொண்ணுகிட்ட சொல்லுறே கருமம் கருமம்


பொண்டாடிய கை நீட்டி அடிக்கிறது என்னடா வீரம் அடிக்க மட்டுமா செஞ்சே கடிச்சு வேற வெச்சுருக்கே


பாட்டி பரமேஸ்வரி பேரன் வீரனை எங்கையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கறது இல்லை ❤ ஆனால் பேரனை கொஞ்சம் ஒழுக்கமா வளர்த்திருக்கலாம் பாட்டி
லிங்கேஷ்வரன் தாய்மாமன், அம்மா பெரிய நாயகி மற்றும் அவனின் தந்தை வீரன் செய்யும் தவறை சுட்டிக்காட்டி நல்லா மனசுல நிக்கறாங்க.
உமையாளின் கோபம் ரொம்ப நியாயமானது ❤ இருந்தாலும் இந்த மஞ்சள் கயிறு மேஜிக் இப்படி டக்குனு உமையாள் மனசை மாத்தும்னு எதிர்ப்பார்க்கல

வீரனை இவ்வளவு மோசமா காட்டியிருக்க வேணாம்னு தோணுச்சு.
அன்பு அது எப்பேர்பட்டவனையும் மாத்தும் வல்லமை கொண்டதுனு நல்லா சொல்லீட்டீங்க ❤
அன்பான அசுரன் வாசகர்கள் நெஞ்சை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
