ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 11- அன்பிலே அசுரனடி

அன்பாலே அசுரனடி

ஜெய வீரபத்ரன் நம்ம ஹீரோ ஒரு கொலை பண்ணிடுறான். அதை நம்ம ஹீரோயின் உமையாள் திருமகள் பார்த்துடுறா. அவ போலீஸ் கிட்ட சொல்லலாம்னு இருக்கும் போது அதிரடியா அவளுக்கு தாலி கட்டி அவளை மிரட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறான். அதுக்கு அப்புறம் அவனோட சேர்ந்து வாழ்ந்தாளா ஏன் கொலை செய்தான்னு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

வீரபத்ரன் ஒரு அதிரடி வீரன். பயபுள்ளக்கு பொண்ணுங்க தான் உயிர் மூச்சு 🤣🤣🤣😜😜
அதை பொண்டாட்டி கிட்ட பெருமையா வேற சொல்றது.
கடைசியில் அவ கிட்ட விழுந்து அவளையே சுத்தி சுத்தி வரது. அவளுக்காக மாறுறது.

அவ விட்டுட்டு போனாலும் அவ நினைப்போட வாழுறது மனசுல நின்னுட்டான். இந்த அதிரடி நாயகனை ரொம்பவே பிடிச்சது 🤩🤩🤩

உமையாள் அவன் எதுக்கு கொலை எல்லாம் பண்றான்னு தெரிஞ்சு அவனை ஏத்துகிட்டு சந்தோசமா வாழும் போது அவளோட அவசரத்துனால அவனை விட்டு பிரிஞ்சு போய் அப்புறம் பீல் பண்ணும் போது அடி வெளுக்க தோணுது 😒😒😒

கொஞ்சம் அவசரபடாமல் அவன் கிட்ட பேசி இருந்தா எல்லாம் சரி ஆகி இருக்கும்.

பரமு பாட்டியை ரொம்பவே பிடிச்சது. பேரனுக்காக எல்லாம் இடத்துலயும் அவனை விட்டு கொடுக்காமல் பேசுறது நல்லா இருந்துச்சு.

கடைசி யில் 2 பேரையும் சேர்த்து வைச்சு ஹாஸ்பிடல் என்றும் பாராமல் சம்பவம் செய்தது எல்லாம் வேற லெவல்🤣🤣🤣

இவன் போற ஸ்பீட்க்கு ட்வின்ஸ் எதிர் பார்த்தேன் அது மட்டும் கொஞ்சம் மிஸ்ஸிங் 🤭🤭🤭

ஸ்டோரி ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் நல்லா விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
அன்பிலே அசுரனடி
நாயகன்: ஜெய வீரபத்திரன்
நாயகி: உமையாள் திருமகள்
நம்ம ஹிரோ ஒரு ப்ளே பாய் பெண்கள் மட்டுமே அவனுடைய கண்கள்.... நாயகன் செய்ற கொலையை நம்ம நாயகி பார்த்துடறாங்க ஏன்டா ஊருக்குள்ள வந்தது ஒரு குத்தமா என்னடா கொலை எல்லாம் பண்றிங்க....
அதை போலீஸ்ல சொல்லி நாயகனுக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு நினைக்கும்போது நாயகன் நாயகியை மிரட்டி திருமணம் செஞ்சுக்கிறான் பயபுள்ள மினிஸ்டர் மவன் அந்த திமிர்.
நம்ம உமையாள் அவனை ஒரு பொருட்டாக்கூட மதிக்க மாட்டா.... நாயகன் ஊருக்குள்ள வந்த கரகாட்டக்காரி மை கரெக்ட்பண்ணா நம்ம பாட்டி பரமேஸ்வரி ஆட்டக்காரியை ஓட ஓட விரட்டி விட்டுட்டாங்க நாங்களும் ரௌடியாக்கும்....
நாயகன் ஏன் கொலை செஞ்சார்னு தெரிஞ்சு உமையாள் நாயகனை ஏத்துக்கிட்டு சந்தோஷமா வாழும் நேரம் நாயகி சரியான புரிதல் இல்லாமல் விலகி போகும்போது இந்த பொண்ணு சரியான லூசு டா கரகாட்டக்காரியை கரெக்ட் பண்ணுவோம் வா ஃபீல்.... நாயகன் நாயகி சேர்ந்தாங்களா நம்ம போலீஸ் செந்தமிழ் செல்வனுக்கு கேஸ் கிடைச்சிச்சா என்பதை எழுத்தாளர் அருமையான முறையில் சொல்லி உள்ளார்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤️ ❤️
 
#அன்பிலே_அசுரனடி_விமர்சனம்
சுய ஒழுக்கம் இல்லாமல், கோபகாரனா சுத்தீட்டு இருந்த நாயகன் ஜெய வீரபத்ரனை நாயகி உமையாள் திருமகளின் வருகை எப்படி மாற்றிவிடுகிறது என்பதே கதை ❤

இந்த வட்டார வழக்கில் கதை படிப்பது எனக்கு இது தான் முதல் முறை. அதுனாலயோ என்னமோ என்ன இப்படி பேசிக்கிறாங்கனு ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது 😧😧

ஜெய வீரபத்ரன் இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட நாயகனை நான் பார்த்ததில்லை 😓😓 அடேய் நீ பண்ணுற வேலையை பெருமையா ஒரு பொண்ணுகிட்ட சொல்லுறே கருமம் கருமம் 😰😰 பொண்டாடிய கை நீட்டி அடிக்கிறது என்னடா வீரம் அடிக்க மட்டுமா செஞ்சே கடிச்சு வேற வெச்சுருக்கே 😡😡😡

பாட்டி பரமேஸ்வரி பேரன் வீரனை எங்கையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கறது இல்லை ❤ ஆனால் பேரனை கொஞ்சம் ஒழுக்கமா வளர்த்திருக்கலாம் பாட்டி 😟

லிங்கேஷ்வரன் தாய்மாமன், அம்மா பெரிய நாயகி மற்றும் அவனின் தந்தை வீரன் செய்யும் தவறை சுட்டிக்காட்டி நல்லா மனசுல நிக்கறாங்க.

உமையாளின் கோபம் ரொம்ப நியாயமானது ❤ இருந்தாலும் இந்த மஞ்சள் கயிறு மேஜிக் இப்படி டக்குனு உமையாள் மனசை மாத்தும்னு எதிர்ப்பார்க்கல 😍😍

வீரனை இவ்வளவு மோசமா காட்டியிருக்க வேணாம்னு தோணுச்சு.
அன்பு அது எப்பேர்பட்டவனையும் மாத்தும் வல்லமை கொண்டதுனு நல்லா சொல்லீட்டீங்க ❤

அன்பான அசுரன் வாசகர்கள் நெஞ்சை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
#அன்பிலே_அசுரனடி

#கௌரிஸ்ரிவ்யூ

ஜெய் & அவனோட டீம் சேர்ந்து ஒருத்தனை துரத்தி துரத்தி வெட்டிராரங்க…..

அதை பார்த்துட்டு பதறி ஓடமா, பயபுள்ள அங்கேயே மயங்கி விழுந்தரா உமை….

மயங்கி விழுந்தாலும்….சிங்க பெண் இல்லையா…..அது இல்லாம இன்னும் கொஞ்ச நாளில் இன்ஸ்பெக்டர் மனைவி வேற ஆக போறா….

அப்பறம் பயம் என்ன????

ஆன அங்க தான் டுவிஸ்ட்…..அவ கல்யாணம் செய்ய இருக்கும் செல்வம் தான் ஜெய் ஓட பரமா எதிரி🤭🤭🤭🤭🤭🤭…..

ஜெய்யை பிடிக்க இது தான் சான்ஸ் அப்படினு செல்வம் காத்திருக்க…..

அவனோட ஆளை ஜெய் தூக்கி கல்யாணமே பண்ணிட்டான்😆😆😆😆😆…..

உமை கல்யாணம் ஆகி ஜெய் கிட்ட எதுக்குமே அடங்கலா…..

பின்ன பிடிக்காத கல்யாணம்….அவனுக்கு நிகர வம்புக்கு நிக்கரா…..

கேஸ் முடிய அவளை வீட்டில் விடும் எண்ணத்தில் இருக்கும் ஜெய்…..

கொ****லைக்காரனுக்கு தான் மனைவியானு உமை…..

இவர்களை இணைக்கும் பாலமாக பரமு பாட்டி…..ஆன சரியான கேடி பாட்டி…..

இவர்கள் எப்படி சேர்ந்தார்கள்?????

கதை நல்லா இருக்கு…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐


 
Top