#உயிர்_வாங்கிடும்_மோகினி_நீயடி_விமர்சனம்
வசுந்தரா என்ற பெண்ணை மையப்படுத்தின கதை❤
நிறத்தை காரணமா வெச்சு தன் தாய் மற்றும் உடன்பிறப்புகளே வசுந்திராவை ஒதுக்கீடுறாங்க. அவளின் தந்தை ரகு மட்டுமே அவளின் துணை❤ நல்ல தந்தை ❤
வசுந்தரா தன் சொந்த வீட்டுலேயே வேலைக்காரியா இருக்குறா

என்ன ஒன்னு எல்லாரும் சம்பளம் வாங்கிட்டு வேலை பார்ப்பாங்க ஆனால் இங்க இவள் சம்பாதிக்கிறதும் வீட்டுக்கு கொடுத்துட்டு வீட்டு வேலையும் பார்க்கிறா. ரொம்பவே பாவமா இருந்தது பார்க்க

வசுந்தரா அம்மா அடடா அம்மானா இப்படில்ல இருக்கனும்


கல்யாணம் ஆனதுக்கு அப்பறமும் விடுல வசுந்தராகிட்ட பணம் புடுங்கறதே குறியா இருக்காங்க

வசுமதி வசந்தி இரண்டும் சுத்த மோசம். என்ன பண்ணாலும் திருத்த முடியாத ஜென்மங்கள் அம்மாவும் அக்காவும்.
வசுந்தராவின் பயந்த சுபாவம் புரியுது. அவளுக்காக அவதானே பேசனும் அது செய்யமா இருக்கிறது எரிச்சல் வந்தது சில இடங்களில்
வசுந்தரா சஞ்சய் திருமணத்திற்கு பிறகு ஒரு திருப்புமுனை எதிர்ப்பார்த்தேன்.
எதிர்ப்பார்த்தது வீண்ணாகல ❤❤
யாரும் வெளியிடங்களில் பேச தயங்குற களத்தை எடுத்து அதை சரியா எந்த முகசுழிப்பும் இல்லாமல் படிக்க கூடிய வகையில் தந்ததற்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்


இந்த காலகட்டத்தில் பல விவாகரத்துக்கள் இதை காரணமா வெச்சுதான் நடக்குது. ஆண்ணும் பெண்ணும் சமம்னு சொல்லுறோம் அது எல்லா விஷயத்திலும் தானே


முக்கியமா பெண்கள் தன் கணவனிடம் தன் தேவையை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லனும் அதில் எந்த தப்பும் இல்லை. இது இயற்கையா எல்லாருக்கும் இருக்கும் உணர்வுதான்னு சொன்னது எல்லாமே அருமை


நிச்சயம் இந்த கதையை படிக்கறவங்களுக்கு கணவன் மனைவி உறவை பற்றி நல்ல புரிதல் வரும்னு நம்புறேன்❤
அனுபமா நல்ல அம்மாவா மாமியாரா மனசுல நிக்கிறாங்க❤ ஒரு மருத்துவராவும் பெண்ணாவும் வசுந்திரவின் உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டு அதை தன் மகன்கிட்ட கொண்டு சேர்த்த விதம் அருமை


கவல் கொஞ்ச நேரமே வந்தாலும் நல்ல இருக்கு அவளின் வருகை இந்த கதையில் ❤
சஞ்சய் ஒரு பெண்ணை பார்த்தோம் கல்யாணம் பண்ணோம் குழந்தை பொறந்தாச்சு அவளுக்கு மாதம் செலவுக்கு காசு கொடுக்குறோம் இதுக்கு மேல என்ன


அப்படினு கேக்கும் போது மூஞ்சிலயே குத்தலாம்னு கோவம் வந்தது

ஆனால் அவன் தவறை சொன்னா அதை அவன் திருத்திக்கிட்ட விதம் மற்றும் இறுதியா அவளுக்காக அவளின் இடத்தில் இருந்து யோச்சது நல்லா இருக்கு ❤❤ நல்ல கணவன் ❤
கடைசி வரை நம்ம கூட வரும் உறவு கணவன் மனைவி உறவு. அவங்களுக்கான நேரம் ஒதுக்கி எந்த தயக்கமும் இல்லாமல் மனம் விட்டு பேசி புரிஞ்சுகிட்டாலே இல்வாழ்க்கை சிறக்கும்னு சொல்லுறாங்க இந்த மோகினி ❤❤
கதை களம் அதை சொன்ன விதம் ரொம்ப பிடிச்சது ❤ நல்ல கதை ❤ எனக்கு ரொம்ப பிடிச்சது ❤❤ சமூகத்துக்கு தேவையான கதையும் கூட ❤
மோகினி அனைவர் மனதிலும் இடம் பெற்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
