சின்ன வயசுல இருந்தே நிறத்தால ஒதுக்கப்பட்டவன் நம்ப திரு..அவனுக்காக நம்ப வெண்மதி எப்படி சப்போர்ட்டா இருந்தா ? இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்காமலயே புரிஞ்சுகனும்னு நினைக்கிறாங்க தங்கள் துணைகளை இருவரும் புரிஞ்சிகிட்டாங்களா?
அவங்களோட புரிதல் எப்படி இருத்தது ..தங்களோட மனத்தடைகள் எல்லாம்தாண்டி எப்படி ஒன்னு சேர்ந்தாங்கன்றது தான் கதை
திருச்சோழன்-சின்ன வயசுல இருந்தே அம்மாவால நிறத்தால ஒதுக்கப்பட்டவன்..கல்வி பணம்னு எல்லாமே இருந்தாலும் சின்னவயசுல ஏற்பட்ட வடுவால தன்னை வெறுக்காம தனக்கான ஒரு அன்பை தேடுற குழந்தை போல..வெண்மதியோட அய்யனார்!!


புத்திசாலித்தனமாக இருந்தாலும் அன்புக்கு ஏங்கறனால சின்ன சின்ன தப்பு பண்ணிடுறான்..ரொம்ப பாசக்காரன்..வெண் மதிய எங்கேயும் விட்டு கொடுக்கல ..தன்னோட பெரியப்பா பெரியம்மா மேல ரொம்ப பாசம் வச்சிருக்கான்..நல்லா இருந்துச்சு இவன் கேரக்டர்...சில சமயம் வெண்மதிய திட்டும்போது மட்டும் அவசரகுடுக்கை மாதிரி பண்ணுவான் மத்தபடி நல்ல பையன்

வெண்மதி- திருச்சோழனோட வாழ்க்கைல வந்த நட்சத்திரம்

..ஒரு மிடில் கிளாஸ் பேமிலியோட பிரின்சஸ்..எந்த இடத்திலயும் அவளோட ஐயனார விட்டுகுடுக்காம அவ பேசின விதம் சூப்பர்..


திருவோட பாசத்தை பகடைகாயா வச்சு அவங்க பெரியம்மா மூலமா அவங்க அண்ணண் காசு வாங்குறத அவ புரியவச்சது சூப்பர்...அதேபோலதான் அவனோட அம்மா ஜெயந்திக்கு புரியவச்சதும்...அவளுக்கு திருவோட நிலமை தெரியாததுனால எல்லாத்தையும் அனுசரிச்சு நடந்தா ..அப்றோம் தெரிய வந்ததும் அவள் திருவுக்காக தன்னை மாத்திகிட்டதும் சூப்பர்



...அது எல்லாமே நல்லா இருந்துச்சு படிக்க..அவ எல்லாரும் கூடவும் வச்சு இருக்கிற பாண்டிங் சூப்பர்..
கார்த்திக் - அஞ்சலி: திருவோட காலேஜ் நட்பு அவனுக்குன்னு இருக்க ரொம்ப நல்ல நட்பு..திரு அன்ட் கார்த்தி பாண்டிங் அல்ட்டி ..கார்த்திக்கு ஏற்ற மனைவி அஞ்சலி .. கார்த்தி - அஞ்சலி திரு - மதி இவங்க பார்ட் எல்லாம் நல்லா இருந்துச்சு..குட் ரிலெசன்ஷிப்...



குருபரன் - ஸ்வர்னாம்பிகை : இவங்க பேருக்கு பெரியப்பா பெரியம்மா வா இருந்தாலும் திருச்சோழனுங்கு உண்மையான அப்பா அம்மா வா இருந்தாங்க ..இவங்க சீன்ஸ் குட்...திருவுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தாங்க..
சதாசிவம் ஐயா - இவர் திருவோட கார்டியன்னு சொல்லலாம்..அவன்மேல நம்பிக்கை வைச்சி இவ்வளோ தூரம் அவன வளர்த்து விட்டவரு...
வேல்முருகன் - இவர் ஆரம்பத்தில அப்பாவா நடந்துக்கலானாலும் பின்னாடி திருவுக்கும் வெண்மதிக்கும் சப்போர்ட்டா இருந்தாங்க ..
அருட்சோழன் & தேவரதி - இவங்கள என்ன சொல்லலாம்

அருட் சோழன் ஒரு அண்ணணுக்கு தகுதி இல்லை..அவனுக்கு பணம் வேண்டும்னா அவங்க பெரியம்மா பாசத்தை பயன்படுத்தி திருகிட்ட பணம் வாங்குவானாம்..ஆனா திருப்பி கொடுக்க மாட்டானாம்..கடைசில திருந்திட்டாப்ல..
ஜெயந்தி - இவங்கல்லாம் என்ன அம்மா


அவங்க சுமந்து பெத்த பிள்ளைதான அதுல எப்படி ஒதுக்க முடிஞ்சது..நல்லாதான் திட்ட தோணுச்சு எனக்குலாம்.. தன்னோட பசங்க கிட்டயே பாரபட்சம் காட்றாங்க.. சேம் அதேதான் மருமகள்ங்க கிட்டயும்..பிடிச்ச பையனோடமனைவிய எதுவும் சொல்ல மாட்டாங்களாம்..அதே பிடிக்காத பையன் மனைவி மட்டும் எது பண்ணாலும் குறை..இவங்கள வெண்மதி சூப்பரா ட்ரீட் பண்ணா ..கடைசில திருந்திட்டாங்க..தன் பசங்க கிட்ட பண்ண தப்ப தன்னோட பேரபசங்க கிட்ட பண்ணல இவங்க...
கணவன் மனைவினு இருந்தா சின்ன சின்ன சண்டை வர்ரது சகஜம்தான் ஆனா ரெண்டு பேரும் பேசிக்காமலே புரிஞ்சுக்கனு நினைக்கிறது ரொம்ப தப்பு. கணவன் மனைவியை புரிஞ்சுகிறதும் மனைவி கணவனை புரிந்து நடந்துகிறதுலதான் வாழ்க்கை திருப்தி அடையுது...
ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!