ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 13-மன வானின் விண்மீனே

சின்ன வயசுல இருந்தே நிறத்தால ஒதுக்கப்பட்டவன் நம்ப திரு..அவனுக்காக நம்ப வெண்மதி எப்படி சப்போர்ட்டா இருந்தா ? இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்காமலயே புரிஞ்சுகனும்னு நினைக்கிறாங்க தங்கள் துணைகளை இருவரும் புரிஞ்சிகிட்டாங்களா?
அவங்களோட புரிதல் எப்படி இருத்தது ..தங்களோட‌‌ மனத்தடைகள் எல்லாம்‌தாண்டி எப்படி ஒன்னு சேர்ந்தாங்கன்றது தான் கதை

திருச்சோழன்-சின்ன வயசுல இருந்தே அம்மாவால நிறத்தால ஒதுக்கப்பட்டவன்..கல்வி பணம்னு எல்லாமே இருந்தாலும் சின்னவயசுல ஏற்பட்ட வடுவால தன்னை வெறுக்காம தனக்கான ஒரு அன்பை தேடுற குழந்தை போல..வெண்மதியோட அய்யனார்!! 😍😍 புத்திசாலித்தனமாக இருந்தாலும் அன்புக்கு ஏங்கறனால சின்ன சின்ன தப்பு பண்ணிடுறான்..ரொம்ப பாசக்காரன்..வெண் மதிய எங்கேயும் விட்டு கொடுக்கல ..தன்னோட பெரியப்பா பெரியம்மா மேல‌ ரொம்ப பாசம் வச்சிருக்கான்..நல்லா இருந்துச்சு இவன் கேரக்டர்...சில சமயம் வெண்மதிய திட்டும்போது மட்டும் அவசரகுடுக்கை மாதிரி பண்ணுவான் மத்தபடி நல்ல பையன்😉😉


வெண்மதி- திருச்சோழனோட வாழ்க்கைல வந்த நட்சத்திரம் 🌟..ஒரு மிடில் கிளாஸ் பேமிலியோட பிரின்சஸ்..எந்த இடத்திலயும் அவளோட ஐயனார விட்டுகுடுக்காம அவ பேசின விதம் சூப்பர்..👍👍திருவோட பாசத்தை பகடைகாயா வச்சு அவங்க பெரியம்மா மூலமா அவங்க அண்ணண் காசு வாங்குறத அவ புரியவச்சது சூப்பர்...அதேபோலதான் அவனோட அம்மா ஜெயந்திக்கு புரியவச்சதும்...அவளுக்கு திருவோட நிலமை தெரியாததுனால எல்லாத்தையும் அனுசரிச்சு நடந்தா ..அப்றோம் தெரிய வந்ததும் அவள் திருவுக்காக தன்னை மாத்திகிட்டதும் சூப்பர் 👍👍👍...அது எல்லாமே நல்லா இருந்துச்சு படிக்க..அவ எல்லாரும் கூடவும் வச்சு இருக்கிற பாண்டிங் சூப்பர்..


கார்த்திக் - அஞ்சலி: திருவோட காலேஜ் நட்பு அவனுக்குன்னு இருக்க ரொம்ப நல்ல நட்பு..திரு அன்ட் கார்த்தி பாண்டிங் அல்ட்டி ..கார்த்திக்கு ஏற்ற மனைவி அஞ்சலி ‌.. கார்த்தி - அஞ்சலி திரு - மதி இவங்க பார்ட் எல்லாம் நல்லா இருந்துச்சு..குட் ரிலெசன்ஷிப்...👍👍👍👍

குருபரன் - ஸ்வர்னாம்பிகை : இவங்க பேருக்கு பெரியப்பா பெரியம்மா வா இருந்தாலும் திருச்சோழனுங்கு உண்மையான அப்பா அம்மா வா இருந்தாங்க ..இவங்க சீன்ஸ் குட்...திருவுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தாங்க..

சதாசிவம் ஐயா - இவர் திருவோட கார்டியன்னு சொல்லலாம்..அவன்மேல நம்பிக்கை வைச்சி இவ்வளோ தூரம் அவன வளர்த்து விட்டவரு...


வேல்முருகன் - இவர் ஆரம்பத்தில அப்பாவா நடந்துக்கலானாலும் பின்னாடி திருவுக்கும் வெண்மதிக்கும் சப்போர்ட்டா இருந்தாங்க ‌‌..

அருட்சோழன் & தேவரதி - இவங்கள என்ன சொல்லலாம் 🤔அருட் சோழன் ஒரு அண்ணணுக்கு தகுதி இல்லை..அவனுக்கு பணம் வேண்டும்னா அவங்க பெரியம்மா பாசத்தை பயன்படுத்தி திருகிட்ட பணம் வாங்குவானாம்..ஆனா திருப்பி கொடுக்க மாட்டானாம்..கடைசில திருந்திட்டாப்ல‌..

ஜெயந்தி - இவங்கல்லாம் என்ன அம்மா 👊👊 அவங்க சுமந்து பெத்த பிள்ளைதான அதுல எப்படி ஒதுக்க முடிஞ்சது..நல்லாதான் திட்ட தோணுச்சு எனக்குலாம்.. தன்னோட பசங்க கிட்டயே பாரபட்சம் காட்றாங்க.. சேம் அதேதான் மருமகள்ங்க கிட்டயும்..பிடிச்ச பையனோட‌மனைவிய எதுவும் சொல்ல மாட்டாங்களாம்..அதே பிடிக்காத பையன் மனைவி மட்டும் எது பண்ணாலும் குறை..இவங்கள வெண்மதி சூப்பரா ட்ரீட் பண்ணா ..கடைசில திருந்திட்டாங்க..தன் பசங்க கிட்ட பண்ண தப்ப தன்னோட பேரபசங்க கிட்ட பண்ணல இவங்க...

கணவன் மனைவினு இருந்தா சின்ன சின்ன சண்டை வர்ரது சகஜம்தான் ஆனா‌ ரெண்டு பேரும் பேசிக்காமலே புரிஞ்சுக்கனு நினைக்கிறது ரொம்ப தப்பு. கணவன் மனைவியை புரிஞ்சுகிறதும் மனைவி கணவனை புரிந்து நடந்துகிறதுலதான் வாழ்க்கை திருப்தி அடையுது...

ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!
 
#மன_வானின்_விண்மீனே_விமர்சனம்


பெற்ற தாயே நிறத்தை காரணம் காட்டி நாயகன் திருச்சோழனை ஒதுக்கீடுறாங்க 😕
எல்லா சூழ்நிலையிலும் அவனுக்கு உறுதுணையாக இருக்கும் உறவை எதிர்நோக்கி காத்திருக்கும் திரு. அவனின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியதா? அவனின் தாய் மனம் மாறினாங்களா ? இந்த கேள்விகளுக்கான விடை கதையில் 😍


இது ஒரு ஃபீல் குட் ஸ்டோரி ❤


திரு ஆளுமையான கதாபாத்திரம் ❤ இரத்த உறவை தாண்டி தனக்கே தனக்குனு சில உறவைகளை உருவாக்கிட்டது சிறப்பு. முக்கியமா "நண்பேன்டா" திரு கார்த்திக் நட்பு நல்லா இருக்கு 👌👌
திரு அஞ்சலி, குரு மற்றும் அம்பிகை மீதான பாசம் சூப்பர்.
வெண்மதியை ஒவ்வொரு இடத்திலும் கேர் பண்ணிக்கிட்டது நல்லா இருந்தது ❤ நல்ல கணவன் ❤❤


வெண்மதியின் புத்திசாலித்தனம், குணம், அய்யனாரே மற்றும் சோழானு கணவனை அழைக்கிறது மற்றும் மற்றவங்க செய்த தவற அழகா சுட்டி காட்டுனதுனு எல்லாமே ரொம்ப பிடிச்சது❤


நம்ம என்ன நினைக்கிறோம் என்கிறத நம்ம இணையிடம் மனசுவிட்டு பேசனும், நம்ம சொல்லாமலே அவங்க புரிஞ்சுப்பாங்க நினைக்கிறது ரொம்ப தப்புனு அழகா சொல்லீட்டீங்க ❤


கதாபாத்திரத்தின் பெயர்கள் நிறை இடங்களில் மாறி மாறி இருக்கு அதை தவிர்த்திருக்கலாம்.
நல்ல கதை ❤ வாசகர்கள் நெஞ்சிலும் விண்மீனாய் மாறி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
#மன_வானின்_விண்மீனே….
#கௌரிஸ்ரிவ்யூ

நிறத்தினால் சொந்த தாயே வெறுக்க படும் ஹீரோ திரு….அவன் நிறம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்பது போல இருக்கும் மதி…..

அவளின் மேல் திரு காதல் கொள்ள….மதியும் விரும்பியே கல்யாணம் செய்துக்கறா….

நல்லா போன வாழ்க்கையில்…. தன்னை வெறுக்கும் தாய் பேச்சை கேட்டு தன் மனைவி நடப்பதா?????

மனைவியும் தன்னை ஒதுக்குவதா????

என்று திருவின் கோவம் ஒரு பக்கம்….

மதியும், கணவன் தன்னையும் , தான் சொல்லாமல் தன் சூழ்நிலையை புரிஞ்சிக்கணுன்னு நினைக்க…..

அந்த கோவம் மதிக்கு…..

இவங்க கோவம் தீர்ந்தா?????

அது மீதி கதை…..

திரு….சுயம்பு தான்….தாய் இடம் அன்புக்காக ஏங்கி ஏங்கி ஒரு கட்டத்தில் அவர்களை விட்டு ஒதுங்கியும் போறான்…

ஆன தாயா அவன் பெரியம்மா தாங்கிறாங்க….

அவங்க மட்டுமா…அவன் பெரியப்பா….சதா அப்பா, ப்ரெண்ட் கார்த்தி அப்படினு அவனிடம் உயிராவே இருக்காங்க…

மதி…கேரக்டர் நல்லா இருந்தது….அவளோட துடுக்கு தனம், நிரஜனை கலாய்ச்சது எல்லாம் சூப்பரா இருந்தது….

ஆர்ப்பாட்டம் இல்லாம கதை அழகா போச்சு…

முக்கியமா போர் அடிக்கல….

கதை எனக்கு ரொம்பவே பிடித்தது ♥️ ♥️ ♥️ ♥️ ♥️

போட்டியில் வெற்றி பெற வாழ்
த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
மன வானின் விண்மீனே

திருசோழன் நம் நாயகன் நிறத்தின் காரணமாக அவன் அம்மாவால வெறுக்க படுறான். அவனோட பெரியப்பா குருபரன் பெரியம்மா அவங்க பாசத்துல வளர்ந்து பெரிய ஆளா இருக்கான்.

வெண்மதி நம் நாயகி அவளை விரும்பி கட்டிக்குறான். அவனுக்கு எல்லாமா இருக்கணும்னு நினைக்குறான். அவனை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க கூடாதுனு நினைக்குறான். அவனுக்கு வெண்மதி எல்லாமா இருந்தாளா அப்படினு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

ஜெயந்தி என்ன ஒரு அம்மானு தெரியல. 2 பசங்களும் அவ பெத்தது தானே ஆனா கருப்பா இருக்கான்னு திருவை மட்டும் வெறுக்குறது அவனுக்கு அம்மா பாசம் கொடுக்காமல் தவிக்க விடுறது திருவை ரொம்ப கஷ்டம் படுத்துறது அவளை பிடிக்கவே இல்ல.

திரு பாவம் அன்புக்கு ஏங்குறது அவன் வீட்டுக்கு வந்தா கூட கண்டுக்காமல் இருக்கிறது ஆனால் அவன் கட்டுன வீட்ல மட்டும் இருப்பாங்க. அவன் கிட்ட காசு வாங்குது என்ன ஜென்மமோ. அவன் அண்ணா அவனை சுத்தமா பிடிக்கவே இல்ல.

மதி அவனை புரிஞ்சு ஜெயந்தி கிட்ட விட்டு கொடுக்காமல் பேசுறது நல்லா இருந்துச்சு.

குருபரன் மூகாம்பிகை அவங்க திருவை பாசமா பார்த்துக்குறது அவனுக்கு அம்மா அப்பாவா எல்லாம் பண்றதுனு அவங்க எல்லாம் மனசுல நின்னுட்டாங்க.

அழகான ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு.
 
Top