ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 14- பூ மஞ்சம் தருவாயோ

#பூமஞ்சம்_தருவாயோ

நாயகன் : அர்ஜுன்

நாயகி: யாழினி

ஒற்றுமையான கூட்டுக்குடும்பத்தில அண்ணன் தம்பிக்கு பிறந்த பிள்ளைங்க ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப பாசமா இருக்கிறாங்க. ஆதவன், ராகவன், கர்ணன், அர்ஜுன், ஒரே ஒரு சகோதரி கஸ்தூரி. ஆதவனுக்கு கல்யாணியோட கல்யாணமாகி அனுன்னு ஒரு குட்டி பொண்ணு இருக்கா.ஹீரோ அர்ஜுனுக்கும் அவனோட ரெண்டு சகோதரர்களான ராகவன், கர்ணனுக்கும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணலாம்னு முடிவெடுத்து ஏற்பாடு பண்றாங்க. ராகவனுக்கு ரேவதி, கர்ணனுக்கு சுகந்தி, அர்ஜுக்கு ரேவதியோட தங்கை தாரணின்னு இருக்கும் போது தாரணி கல்யாணம் அன்னைக்கு ஓடிடுறா லவ்வரோட. சுகந்தியோட தங்கை முறையில இருக்கிற யாழினி மனைவியாகுறா அர்ஜுக்கு. அதி மேதாவி அங்குராசுன்னு தன்னை நினைச்சுக்குற அர்ஜு யாழியை படிக்காதவ, நாகரீகம் இல்லாதவன்னு இவனே முடிவெடுத்து அவளோட வாழாம தள்ளி வைக்குறான். அவ மேல காதல் வந்து காதலை சொல்லலாம்னு நினைக்கும் போது அவ IAS பாஸாகி ட்ரெயினிங் போறதுக்கு ரெடியாகுறா. இடைல அவன் தாரணியை பாத்து அவளை நடுத்தெருவுக்கு கொண்டு வர்றான். அப்புறம் அவ மேல பரிதாபப்பட்டு அவளுக்கு உதவ அவன் உதவியை காதல்னு தப்பா நினைச்சுக்கிற தாரணி யாழி வாழ்க்கையை அழிக்க பாக்குறா. அது நடந்ததா? அர்ஜு யாழியோட வாழ்ந்தானான்னு கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்.❤️❤️❤️

ஆதவன்-கல்யாணி ஒரு குடும்பத்தோட மூத்த மக்களா ரொம்ப பொறுப்பா இருக்கிறாங்க. அவங்களோட காதலும், ஆதவோட சீமாட்டிங்குற அழைப்பும் ரொம்ப நல்லா இருக்கு. மூத்த அண்ணனா ஆதவன் தம்பிகளுக்கு அறிவுரை சொல்றதும் மூத்த மருமகளா கல்யாணி அவ ஓரகத்திகளை அரவணைச்சு போறதும் அருமை. ராகவன் ரேவதி இவங்களுக்கு முரட்டுக்காதல். சில இடங்கள்ல ராகவன் தம்பி மேல வைச்சிருக்கிற அதீத அன்பால மனைவிக்கிட்ட சிலபல அடிகள் வாங்குனாலும் அதை திருத்தி அவனோட முரட்டுக்காதலால ரேவதியை சமாதானப்படுத்துற இடங்கள் அருமை. ரேவதி யாழியை சொந்த தங்கை மாதிரி நடத்தினாலும் கடைசியா அவ சொந்த தங்கைக்காக அர்ஜு மேல கோபப்பட்டப்போ எனக்கு அவ மேல அவ்வளவு எரிச்சல். என்னதான் முதுகுல குத்தினாலும் தாரணிதான அவளோட தங்கச்சி. யாழி யாரோதான அதை நிரூபிச்சிட்டா. கர்ணன்- சுகந்தி யதார்த்தமான தம்பதி. கர்ணன் அவனோட காதலை ரொம்ப மென்மையா அதே சமயம் அழுத்தமா காமிக்குறான். தம்பி மேல ரொம்ப பாசம் இருந்தாலும் நிதர்சனத்தை ஏத்துக்கிட்டு அவன் நடக்குறது நல்லா இருக்கு. சுகந்தியோட ஒண்ணு விட்ட தங்கை யாழி போக அவங்க கல்யாணம் நடக்க காரணமா இருந்ததால அவ யாழி மேல ரொம்ப பிரியமா இருக்கா.👏👏

அர்ஜுன்-யாழினி. அந்த வீட்லேயே ரொம்ப படிச்சவன் ங்குற அகங்காரம், தான் செய்றது எல்லாமே சரியாத்தான் இருக்குங்குற ஆணவம், அவனுக்கு யாழி பொருத்தமில்லைங்குற நெனைப்பு இதனால யாழியை ரொம்ப அவமானப்படுத்துற அர்ஜுன் அவ்வளவு கோபப்படுத்துறான் நம்மளை. தாரணியை பழி வாங்குறது, அப்புறம் வீட்டுக்கு தெரியாம அவளுக்கு ஹெல்ப் பண்றது எல்லாம் பாக்கும் போது வாத்தி மேல அவ்வளவு எரிச்சல் வருது. யாழி அவளோட வருத்தத்தை விழுங்கிட்டு அந்த குடும்பத்தோட ஒன்றி எல்லாருக்குமே செல்லப்பிள்ளையாகி கணவனோட காதலுக்கு காத்திருந்து அவளோட லட்சியத்தில ஜெயிச்சு அப்படின்னு ஒரு பர்ஃபெக்ட் கேரக்டர்.😍😍😍

கஸ்தூரி ரெண்டு எபிக்கு வந்தாலும் கதை முழுசுக்குமான பொங்கலை வாங்கிடுறா.தாரணி ரொம்ப மோசமான கேரக்டர் இந்த கதையில. அப்பட்டமான சுயநலவாதி அவ. யாரைப்பத்தியும் கவலைப்படாம யாரு வாழ்க்கையையும் கெடுத்து அவ நல்லா இருக்கணும்னு நினைக்குற குணங்கெட்டவ. ஆனா இவ பிரச்னைக்கு யாழி காரணம்னு நினைச்ச அவளோட அம்மா ரொம்ப கோபப்படுத்திட்டாங்க என்னை. பொண்ணை வளக்கத் தெரியாம வளத்து ஊரு மேய விட்டிட்டு யாரு வாழ்க்கையை அவ அழிக்க நினைச்சாளோ அவக்கிட்ட கோபப்படுறது என்ன நியாயம். அண்ணன் தம்பிகளுக்கிடையே இருக்கிற பாசம் அது யதார்த்தமானது. ஆனா இங்க ஓரகத்திகள் கூடப்பொறந்தவங்க மாதிரி ஒற்றுமையா இருக்கிறது செம.👌👌👌

இதில நாலு ஜோடிகளோட காதலும், ரொமான்ஸும், கலகலப்பும், பாசமும், ஒற்றுமையும் படிக்கும் போதே குட்ஃபீல் குடுக்குது நமக்கு. மொத்தத்தில காதலோட சேர்ந்த பக்கா கூட்டு குடும்ப கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே❤️❤️❤️❤️❤️
 
பூ மஞ்சம் தருவாயா.....
நல்ல கூட்டு குடும்பக் கதை அண்ணன் தம்பிங்க எல்லாம் ஒரே வீட்ல ஒண்ணா சந்தோஷமா இருக்காங்க அவங்க பசங்களுக்கு ஒரே மேடையில கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைபடுறாங்க... வீட்டோட பெரிய பையன் ஆதவன் அவங்களோட பொண்ணு மனைவி பேரு கல்யாணி ரெண்டு பேரும் நல்ல ஒரு அண்டர்ஸ்டாண்டிங் கப்பிள்.. ராகவனுக்கு ரேவதியையும் கர்ணனுக்கு சுகந்தியையும் அர்ஜுனுக்கு தாரணியையும் பேசி முடிச்சு கல்யாண மேடை வரைக்கும் வந்துடறாங்க... இதுல ஹீரோ நம்ம அர்ஜுன் அர்ஜுனுக்கு பார்த்து வச்சிருக்குற தாரணி ரேவதியோட சொந்த தங்கச்சி தாரணி கல்யாணத்தில் அன்னைக்கு அவளோட லவ்வரோட ஓடிப்போயிடறா... ஒரு கல்யாணத்தை நிப்பாட்டிட்டு ரெண்டு கல்யாணம் நடத்த முடியாது குடும்ப சந்தோஷத்துக்காக வேண்டி கர்ணனுக்கு பார்த்த சுகந்தி இருக்காங்கல்ல அவங்களோட சித்தி பொண்ணு தங்கச்சி யாழினியை திடீர் பொண்ணா மாத்துறாங்க.. அர்ஜுன் கல்யாணம் பண்ணிட்டு யாழினி ஊரிலேயே விட்டுட்டு சென்னைக்கு வந்துடுறாரு ஏன்னா நம்ம ஹீரோ ப்ரொபசர்...

அவருக்கு யாழினி மேல ரொம்ப பெருசா எந்த இன்ட்ரஸ்ட் இல்ல ஏன்னா யாழினியை பத்தி அவருக்கு எதுவுமே தெரியாது. அவருக்கு தாரணி நல்ல படிச்ச பொண்ணு மார்டனான பொண்ணு அதனால மட்டும்தான் கல்யாணத்துக்கு ஒத்துப்பாரு யாழினிஒரு கிராமத்து பொண்ணுன்னு அவரா நினைச்சுக்குவாரு.. சென்னையில தாரணி அவங்க காதலனோட லிவிங் ரிலேஷன்ஷிப்ல வாழ்ந்துட்டு இருப்பாங்க அதனால் அதை பார்த்துட்டு அர்ஜுனுக்கு கோவம் வந்து அவங்கள காதலன்க்கிட்டேருந்து இருந்து பிரிச்சு அவங்கள ஒன்னும் இல்லாம ஆக்கிடறார்... யாழினிய அர்ஜுன் ஒதுக்கி வச்சாலும் அவங்களுக்கு அர்ஜுன் மேல் காதல் வந்திடுது.. அதான் மஞ்ச கயிறு மேஜிக் யாழினி ஐஏஎஸ் கலெக்டருக்கு தேர்வாகி எக்ஸாம் எழுத கிளம்புவாங்க.. அர்ஜுன் தாரணி பார்த்து ரொம்ப கஷ்டப்படும்போது மனிதாபிமான உதவியா? அவங்களுக்கு நிறைய உதவி செய்வார் உடனே அர்ஜுன் மறுபடியும் அர்ஜுன் வாழ்க்கையில நுழையணும்னு அவங்க என்ன நிறைய தில்லுமுல்லு பண்ணுவாங்க இதுக்கு அவங்க அக்கா ரேவதியும் உடந்தை.. இந்த அர்ஜுன் முட்டா பயலுக்கு அது தெரியாது யாழினி அர்ஜுன் மறுபடியும் கைப்பிடித்தார் அவங்க காதுல புரிஞ்சுகிட்டாரா அப்படின்றத கதையில் அழகா குடும்ப சலசலப்பு சச்சரவுகளுடன் நல்லாவே சொல்லி இருக்காங்க.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐❤️❤️❤️🥰
 
#பூ_மஞ்சம்_தருவாயோ_விமர்சனம்

இது ஒரு கூட்டுக்குடும்பக் கதை.
அர்ஜுன் யாழினியை, தன் அண்ணன்கள் திருமணம் தடைப்படக் கூடாதுனு வேறு வழி இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறான். அதன் பிறகு மூவருக்குமான திருமண வாழ்வு எவ்வாறு செல்கிறது என்பதே கதை ❣️

நான்கு ஜோடிகளின் காதலும் பந்தமும் பிரச்சினைகளும் குடும்ப உறவினர்களுக்கான மதிப்பும்னு ஒவ்வொன்றும் தனித்தனியா அழகா சொல்லீருக்கீங்க 💞💞💞💞

மூத்த மருமகளா அனைவரின் வாழ்வின் பற்றிய அக்கறையிலும் சரி ஒரு பிரச்சனை வரும்போதும் சமயோசிதமா செயல்பட்டதிலும் சரி கல்யாணி மனசுல நிக்கிறாங்க❤

ரேவதியின் வெளியபடையான பேச்சு, மனைவியின் பிரசவத்தின் போது கர்ணனின் காதலும் தவிப்பும், அனைத்து ஜோடிகளின் அன்யோன்யம் 🙈🙈, அண்ணன் தம்பி பாசம் எல்லாம் அருமை 😍😍

கொஞ்ச நேரம் வந்தாலும் நாத்தனார் வேலைய சரியா செஞ்சுட்டு போய்ட்டாங்க கஸ்தூரி😡
தாரணி சுயநலவாதி எவ்வளவு பட்டாலும் கடைசி வரைக்கும் திருந்தல 😡 ஆனால் தாரணியின் முடிவு எதிர்ப்பார்க்காத திருப்புமுனை.

அர்ஜுன் கோபக்காரனா வன்மம் பிடிச்சவனா எனக்கு எல்லாம் தெரியும்னு சுத்திட்டு இருந்தப்போ அவ்வளவு எரிச்சல் வந்தது 😨😨 ஆனால் காதல் அவனை அப்படியே மாத்தினது நல்லா இருந்தது.

யாழினியின் பொறுப்பும் பொறுமையும் பிரம்மிக்கவைக்கிது. புதுமண தம்பதிகள் எல்லாரும் அன்பா அன்யோன்யமா இருக்கும் போது இவள் மட்டும் தனித்து இருந்தது எல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்தது😓😓

மொத்தத்தில் ரொம்ப நல்ல கதை❤
வாசகர்கள் மனதில் அர்ஜுன் யாழினிக்கு பூ மஞ்சம் தந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
#பூ_மஞ்சம்_தருவாயோ….
#கௌரிஸ்ரிவ்யூ

ஃபேமிலி டிராமா+லவ்+ரொமான்ஸ் 🥰🥰🥰🥰🥰

ராகவன் & கர்ணன் ரெண்டு பேருக்கும் இப்ப கல்யாணம் நடக்க இருக்க…அவங்க தம்பி அர்ஜுனுக்கு இப்ப கல்யாணம் நடக்காட்டி இன்னும் நாள் ஆகும்னு அவனுக்கும் சேர்த்து பண்ண….

அவனுக்கு பார்த்து இருக்கும் பெண் மண்டபத்தில் இருந்து அவன் காதலன் உடன் போக…..

கர்ணனுக்கு பார்த்து இருக்கும் பெண் சுகந்தியின் தங்கை திடீர் மண பெண் ஆகிறாள்….

அர்ஜுனுக்கு கல்யாணம் ஆகாட்டி நாங்களும் கல்யாணம் பண்ண மாட்டோம் ராகவன் & கர்ணன் சொன்னதே இந்த திடீர் கல்யாணத்துக்கு காரணம்….

அர்ஜுக்கு பார்த்து இருக்கும் பெண் யாழை பார்த்து இவள் படிக்காதவள், நாகரிகம் தெரியாதவள் அப்படினு அவனா நினைச்சி அவளை வாழ்க்கையை விட்டு தள்ளி வைக்கரான்…..

இனி அவங்க வாழ்க்கை எப்படி போச்சி அப்படிக்கறது மீதி கதை,...

ராகவன் - ரேவதி…..காதலும், ரொமான்ஸ் உம் கொஞ்சம் துக்கலாவே இருந்தது🙈🙈🙈🙈🙈🙈….

ஆதவன் - கல்யாணி…காதல் கல்யாணம் பண்ணினவங்க….ரொாம் understanding ஜோடி 🤩🤩🤩🤩🤩…அதும் ஆதவன் ஓட அந்த செல்ல பேரு🫰🫰🫰🫰🫰…..

கர்ணன் - சுகந்தி….ரேவதி ஜோடி போல ரொம்ப expressive இல்லைனாலும் இவங்களும் செம்ம cute தான்🥰🥰🥰🥰🥰…..

அர்ஜுன் - யாழ்…..கிராமத்தில் இருந்தா யாரும் படிக்காம, நாகரிகம் தெரியாத இருப்பாங்கன்னு இந்த அதி மேதாவி ப்ரோபெசொருக்கு நினைப்பு😏😏😏😏😏😏…..

ஆன அதுக்கு ஆப்பு அடிக்கற மாறி யாழ் ஓட கல்வி தகுதி🔥🔥🔥🔥🔥

அப்ப அவன் முகத்தை பார்க்கணுமே…..இன்பமாய் இருக்குதையா moment🤣🤣🤣🤣….

தாரணி….வாழ தெரியாம வாழ்ந்து என்ன சாதிச்சிட்ட?????🤷🤷🤷🤷🤷

எல்லா கேரக்டர் உம் நல்லா இருந்தது 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

கதையும் ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ❤️❤️❤️❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்
த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
Top