#பூ_மஞ்சம்_தருவாயோ_விமர்சனம்
இது ஒரு கூட்டுக்குடும்பக் கதை.
அர்ஜுன் யாழினியை, தன் அண்ணன்கள் திருமணம் தடைப்படக் கூடாதுனு வேறு வழி இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறான். அதன் பிறகு மூவருக்குமான திருமண வாழ்வு எவ்வாறு செல்கிறது என்பதே கதை
நான்கு ஜோடிகளின் காதலும் பந்தமும் பிரச்சினைகளும் குடும்ப உறவினர்களுக்கான மதிப்பும்னு ஒவ்வொன்றும் தனித்தனியா அழகா சொல்லீருக்கீங்க



மூத்த மருமகளா அனைவரின் வாழ்வின் பற்றிய அக்கறையிலும் சரி ஒரு பிரச்சனை வரும்போதும் சமயோசிதமா செயல்பட்டதிலும் சரி கல்யாணி மனசுல நிக்கிறாங்க❤
ரேவதியின் வெளியபடையான பேச்சு, மனைவியின் பிரசவத்தின் போது கர்ணனின் காதலும் தவிப்பும், அனைத்து ஜோடிகளின் அன்யோன்யம்


, அண்ணன் தம்பி பாசம் எல்லாம் அருமை

கொஞ்ச நேரம் வந்தாலும் நாத்தனார் வேலைய சரியா செஞ்சுட்டு போய்ட்டாங்க கஸ்தூரி

தாரணி சுயநலவாதி எவ்வளவு பட்டாலும் கடைசி வரைக்கும் திருந்தல

ஆனால் தாரணியின் முடிவு எதிர்ப்பார்க்காத திருப்புமுனை.
அர்ஜுன் கோபக்காரனா வன்மம் பிடிச்சவனா எனக்கு எல்லாம் தெரியும்னு சுத்திட்டு இருந்தப்போ அவ்வளவு எரிச்சல் வந்தது


ஆனால் காதல் அவனை அப்படியே மாத்தினது நல்லா இருந்தது.
யாழினியின் பொறுப்பும் பொறுமையும் பிரம்மிக்கவைக்கிது. புதுமண தம்பதிகள் எல்லாரும் அன்பா அன்யோன்யமா இருக்கும் போது இவள் மட்டும் தனித்து இருந்தது எல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்தது

மொத்தத்தில் ரொம்ப நல்ல கதை❤
வாசகர்கள் மனதில் அர்ஜுன் யாழினிக்கு பூ மஞ்சம் தந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
