ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 15- அகம் கொய்தாய் காவலனே

#அகம்_கொய்தாய்_காவலனே_விமர்சனம்

நாயகன் : விக்ரம் பிரதாப்

நாயகி: தேன்குழலிஸ்ரீ

மலைக்கிராமத்தில அண்ணன் மாறனோட வசிக்கிற நாயகி குழலிக்கு மாறன் பாத்த வரன் தினேஷோட கல்யாணம் நிச்சயமாயிருக்கு. அந்த நேரத்தில கொலைப்பழியை சுமந்துக்கிட்டு மாறன் காணாம போறான். அவனை பிடிக்க வந்த நாயகன் ஏசிபி விக்ரம் மாறனை கண்டுபிடிக்க முடியாததால குழலியை கூட்டிட்டு போய் அவன் கஸ்டடில வைச்சுக்குறான். மொதல்ல மொறைச்சுக்கிட்டு திரியிற விக்ரமுக்கும் அவனை பாத்து பயந்து பம்முற குழலிக்கும் போக போக காதல் வருது. விக்ரம் மாறனை கண்டுபிடிச்சானா? மாறன்தான் உண்மையான குற்றவாளியா? எப்படி விக்ரம் அதை வெளிய கொண்டு வர்றான். குழலியும் விக்ரமும் சேருவாங்களா? இதையெல்லாம் கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க தோழிகளே.

மாறன் குழலி பாசம் மொதல்ல ரொம்பவே நல்லா இருந்தாலும் ஒரு கட்டத்தில அண்ணனா காதலனான்னு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில மாறனோட பாசம் நிக்கும் போது நமக்கு கொஞ்சம் எரிச்சல் வருது மாறன் மேல. எதையுமே யோசிக்காம அவளோட பாசத்தை வைச்சு அவளை ப்ளாக்மெயில் பண்ணி கஷ்டப்படுத்துறானேன்னு ரொம்ப கோபம் எனக்கு மாறன் மேல. நண்பர்கள் மேல வைச்ச நம்பிக்கை அவன் வாழ்க்கையை பொரட்டி போட்டது பாக்கும் போது ரொம்ப பரிதாபமா இருந்திச்சு. ஒரு அண்ணனா விக்ரம் மேல அவனுக்கிருந்த கோபம் நியாயம்னாலும் குழலியோட மனசுக்கு மதிப்பே குடுக்காம ரொம்ப ரூடா நடக்குற மாறன் எரிச்சல்படுத்துறான். தாமரை நல்ல விதமா மாறன் செய்த தப்பை சுட்டிக்காட்டி அவனுக்கு புத்தி சொல்லி குழலிக்கு நல்ல தோழி மட்டுமில்ல அவளுக்கு நல்ல அண்ணின்னும் நிரூபிச்சிட்டா.

குழலி மாறன் மட்டுமே உலகம்னு வாழ்ந்து அவன் சொல்லே வேதம்னு நெனைச்ச பொண்ணு விதிவசத்தால விக்ரம் மேல காதல் வயப்படுறா. அவளோட அண்ணன் மேலான பாசம் நெகிழ வெச்சாலும் அதுக்கப்புறமும் அண்ணனுக்கு பயந்து அவளோட காதலை மாறன்கிட்ட ஸ்ட்ராங்கா எடுத்து வைக்கலையோன்னு தோணி கோபப்படுத்திச்சு. ஆனா அவ மாறன்கிட்ட வாதாடுனதும் விக்ரமுக்கு லெட்டர் குடுத்து விட்டதும் பாத்ததும் கோபம் போயிடுச்சு. அதுக்கப்புறம் அந்த பொண்ணை ரெண்டு பேரும் சேர்ந்து கஷ்டப்படுத்துனது பாத்தப்போ ரொம்ப கஷ்டமாயிடுச்சு. மாறன் பாச பை*த்தியம் விக்ரம் காதல் கிறு*க்கன் ரெண்டு லூ*சுங்களுக்கிடையிலே அந்த பொண்ணு சிக்கி வருத்தப்படும் போது அவ்வளவு கோபம் வருது அவனுங்க மேல.

விக்ரம் வெறப்பான போலீஸா வந்து அந்த பொண்ணை பயமுறுத்தி பயமுறுத்தி ஒரு கட்டத்தில காதல் மன்னனா மாறுற அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் சூப்பரா இருந்திச்சு. சந்தோஷ் விக்ரமுக்கு நல்ல நண்பனாவும் குழலிக்கு நல்ல அண்ணனாவும் மனசை நிறைக்குறான். பார்வதி குழலிக்காக ரிஸ்க் எடுத்தது அவளோட நட்போட ஆழத்தை காமிக்குது. சந்தோஷ் பார்வதி காதலும் அழகு.

நட்புக்கு இலக்கணமா எப்படி சந்தோஷ், பாரு, தாமரை இருக்காங்களோ அதுக்கு எதிர்மறையா இருக்காங்க மருதுவும் அவன் நண்பர்களும். நட்புக்கே களங்கம் இவங்க. ரகுவரன் மதியழகி ரொம்ப நல்ல பெற்றோர்.

குழலியோட அகம் கொய்த காவலன் எங்க அகத்தையும் கொய்துட்டான் ரைட்டரே. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍👍👍❤️❤️❤️❤️
 
அகம் கொய்தாய் காவலனே ::::
‌நம்ம நாயகன் விக்ரம் போலீஸ் ஆபிசர்... சிரிப்பு போலீஸ் இல்லிங்கோ சரியான ரவுடி போலீஸ்.. அவருக்கு ஒரு முக்கியமான கொலை கேசு விசாரணைக்கு வருது அதுல எதிர்பாராத விதமா நம்ம நாயகி தேன்குழலிஅண்ணன் மாறன் தான் குற்றவாளி அப்படின்ற மாதிரி சாட்சிகள் அமையிது. தங்கச்சி பாசத்துக்கு கொஞ்சம் கூட குறையுமில்லை பாசமலர் சிவாஜி கணேசன் சாவித்திரி தோத்துருவாங்க. நம்ம விக்ரம் என்ன பண்றார்னா மாறன்ன புடிக்க முடியாதது காரணத்தினால் தேன்குலழியோட கல்யாணத்தை நிப்பாட்டி கடத்திட்டு வந்து மாறனை வெளியே வரவைக்க பாக்குறாரு...மாறனை நண்பன் என்ற பேரில் துரோகியாக மருது கடத்தி அடைச்சு வச்சிருக்கார்.... இடைப்பட்ட கால கட்டத்தில் விக்ரமுக்கு தேன் குழலி மேல காதல் வந்துடுது... அவர் மாறன கண்டுபிடிச்சாரா உண்மையான குற்றவாளி யாரு இவங்க காதல் கை கூடுச்சா என்பது தான் கதை... ஆனா இந்த விக்கி பய புள்ளையோடதான் கண்ணாலம் கட்டுவேனு முடிவோடு இருந்திருக்கிறான்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 ❤️ ❤️ 🧡 🧡
 
Last edited:
#அகம்_கொய்தாய்_காவலனே_விமர்சனம்

விக்ரம் காவல் அதிகாரி , மேகமலை கிராமத்தில் நடக்கும் கொலையில் குற்றவாளியா கருதப்படுற மாறனை தேடும் படலத்தில் மாறனின் தங்கை குழலியை கடத்திடுறான் 😓 மாறனை கண்டுப்பிடிச்சாங்களா? மாறன்தான் உண்மையான குற்றவாளியா?
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தா பத்திக்கிச்சா?❤️‍🔥❤️‍🔥 இப்படியான கேள்விகளுக்கு பதில் கதையில்

தேன்குழலிக்கு அம்மா அப்பா இல்லை அண்ணன் மாறன் தான் வளர்க்கிறார். அதனாலயோ என்னவோ இருவரின் பாசம் நெகிழ வைக்கிறது 💕💕💕

குழலியின் பயந்த சுபாவம், பார்வதி குழலி நட்பு எல்லாம் நல்லா இருக்கு ஆனால் பயந்த குழந்தை பிள்ளையா இருந்துட்டு அவள் பண்ணி வெச்ச வேலையில் நான் கொஞ்சம் ஷாக்காகிட்டேன் 🙄🙄🙄

விக்ரம் போலீஸா வெரப்பா சுத்திட்டு இருந்துட்டு காதல் வந்தபின் எப்படி மாறிப்போய்ட்டான் 🫣🫣 விக்ரம் சந்தோஷ் நட்பு நல்லா இருக்கு ❤ அப்பாவை அம்மாவைனு யாரையும் மிச்சம் வைக்காமல் மிரட்டுறது🫤🫤

மாறனுக்கும் விக்ரமிற்க்கும் இடையில் இருக்கும் ஈகோவிற்கு குழலி பலியானது பாவமா இருந்தது 😥😥
குழலியின் காதலயை விக்ரமிற்க்கு புரிய வைக்க மாறன் பண்ணது சற்றும் எதிர்பாராதது நல்லா இருந்தது❤❤

கதையின் இடையில் கொஞ்சமே கொஞ்சம் தொய்வா இருந்தது போல இருந்தது. மற்றபடி அழகான கதை ❤❤

இந்த காவலன் வாசகர்கள் மனதை வென்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
அகம் கொய்த காவலனே

தேன்குழலி நம் கதையின் நாயகி. மாறன் குழலி அண்ணா. அண்ணா தங்கை அவ்வளவு பாசமா இருக்காங்க. தேனுவோட உலகமே மாறன் தான்.

தேனுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணுறான் மாறன்.ஒரு சந்தர்ப்பம் சூழ்நிலையால செய்யாத கொலை பழி விழுந்து தலை மறைவாகிடுறான். இது தெரியாமல் தேனு அண்ணன் தன்னோட கல்யாணத்துக்கு வருவான்னு காத்துக்கிட்டு இருக்கா.

விக்ரம் பிரதாப் நம் நாயகன். போலீஸ் ஆபீஸர் மாறனை தேடி வரான். மாறன் கிடைக்காமல் குழலியை தூக்கிட்டு போய் அவன் வீட்ல வைச்சுக்குறான்.

அவளை அம்புட்டு பயமுடுத்துறான். ஒரு கட்டத்துல பயபுள்ள அவ மேல லவ்ல விழுந்துடுறான். மாறன் மேல தப்பு இல்லனு தெரிஞ்சு அவனை எப்படி கொலை கேசுல இருந்து விடுவிக்கிறான்.

குழலி விக்ரம் லவ் என்னாச்சு அப்படினு அழகா கதையை கொண்டு போய் இருக்காங்க. மாறன் தங்கச்சிக்கு ஒரு பாசமான அண்ணன். ஆனால் அவ மனசை புரிஞ்சுக்காமல் விக்ரமை தப்பா புரிஞ்சுகிட்டு அவங்கள பிரிச்சு குழலியை கஷ்டம் படுத்திட்டான்.

அது மட்டும் தான் பிடிக்கல 😏😏😏

செய்யாத தப்புக்கு தலை மறைவாகி தங்கச்சிக்காக உருகுறது அவனோட பாசம் அவ்வளவு பிடிச்சது.
விக்ரம் மாஸ் ஹீரோ 😎😎😎
முதல்ல குழலி மேல கோவபட்டு கத்துறது அப்புறம் அவ மேல லவ் வந்து உருகுறது அவ வீட்டுக்கு போனதும் கோவபடுறதும் அவளுக்காக அடிபட்டு இருக்குறதுனு மனசுல நின்னுட்டான் 😍😍😍😍

குழலி மாறன் மேல அவ்வளவு பாசமான தங்கச்சி. அவனுக்காக விக்ரமை விட்டுட்டு போகும் போது மட்டும் அவ மேல அவ்வளவு கோபம் வந்துச்சு. ஆனால் கடைசியில் விக்ரம் மேல எம்புட்டு பாசம்னு காட்டிட்டா 🥰🥰🥰
சந்தோஷ் பார்வதி இவங்க ஜோடி நல்லா ரசிக்கும் படியா இருந்துச்சு.
விக்ரம் சந்தோஷ் பிரண்ட்ஷிப் நல்லா இருந்துச்சு.
கடைசியில் பிள்ளையோட கல்யாணம் பண்ணி வைச்சது சூப்பர் 🤣🤣
தாமரை மாறன் ஜோடியும் நல்லா இருந்துச்சு.
ஸ்டோரி படிக்க விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு 👌👌👌
வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Top