என் பெண்மையை வென்றான் இவன்..
தன் கணவனை போன்ற உருவம் கொண்டவனை நாயகி எதற்காக தேடுகிறாள் ?? தேடிக் கண்டுபிடித்தவன் அவளுக்கு உதவினானா இல்லையா ? அவளது நம்பிக்கையை அவன் காப்பாற்றினானா இல்லை உடைத்தானா என்பதே கதை....
பிரபஞ்சன் - நம்ம பிக்பாக்கெட் ஹீரோ



ஆரம்பத்துல மைன்ட் வாய்ஸ்ல பேசுனதுலாம் கேட்டு சிரிப்பு வந்துச்சு..நல்லா கோஆப்ரேட் பண்ணிட்டு இருந்தவன் திடீர்னு ரெட் சிப்பொருத்துன ரோபோ மாதிரி ஆன்ட்டி ஹீரோவா மாறிட்டான்

அவளுக்கு டக்குன்னு தாலி கட்டி மனைவி ஆக்கிட்டான் ..அவளை குழந்தை போல பார்த்துகிட்டு அவளோட தேவைகளை அவனே நிறைவேத்துனான் ..இது எல்லா படிக்க நல்லா இருந்துச்சு ..பட் பிடிச்சமனைவினாலும்கூட அவளோட அனுமதி இல்லாமல் தொடுறது தப்பு.. அதுலதான் பிரபஞ்சன் மேல கோபம் வந்துச்சு..

ஆனால் அதுக்கு அப்புறம் பிரபஞ்சன் நடந்து கொண்ட விதம் அவங்க எஸ்டேட்ட அகைய்ன் லாபமா கொண்டு வந்தது ..அதுக்குபோட்ட முயற்சினு எல்லாமே சூப்பர்..


அவனுக்கு அவனோட நிரா மறுபடியும் பழைய மாதிரி நடக்கனும்றதுக்காக அவன் எடுத்த முயற்சி , அவளை விட இவன்தான் குணமாகிடனும்னு ரொம்ப ஈகரா இருந்ததுன்னு எல்லாமே சூப்பர்...பட் லாஸ்ட்ல தான் தெரிஞ்சது அவதான் இவனோட மனசுல பதிஞ்ஞ பொண்ணுண்ணு.
நிராலினி -டான்சரான இவள் ஒரு ஆக்சிடென்ட் னால நடக்க முடியாம போயிடுது...ஒரு உதவிக்காக தன்னோட கணவன் மாதிரி உருவம் உள்ளவனை தேடுறா ..அவ தேடும் மாதிரி கிடைச்ச உடனே அவளுடைய சூழ்நிலை சொல்லி உதவி பண்ண சொல்லி கேக்குகறா ..அவனும் ஒத்துக்கிட்டு அவளுக்கு உதவிபண்ண வர்றான். அவளோட பாஸ்ட்ட அவ மூலமா தெரிஞ்சுகிட்டு அவள கல்யாணம் பண்ணிடுறான் மிரட்டி . நிரா நிலைமைல பார்த்தா அது ரொம்ப கஷ்டமாக இருந்தது.. பிரபஞ்சன அவள் சில நேரம் கேள்வி கேட்கும் போது அவளோட ஆதங்கத்தை புரிஞ்சுக்க முடிஞ்சது.. ஆனாலும் அவளோட மனசும் பிரபஞ்சனை தேடும்போது நீயே திட்டுற அப்றோம் நீயே தேடுறனு தோணுச்சு..அட் லாஸ்ட் அவ பிரபஞ்சன யாருன்னு கண்டுபிடிச்ச விதம் அன்ட் அவனோட லவ்வ புரிஞ்சி கிட்ட விதம் அருமை..
இன்ஸ்பெக்டர் சிவதாசன் - நிராவோட பிரண்ட்..அவளுக்கு எப்பேற்பட்ட சூழ்நிலையிலயும் அவளுக்கு உதவியா இருக்கக்கூடிய ஒரு நண்பன்..இவள ஒன்சைட்டா லவ் பண்ணவனும் கூட .. இவங்க நட்பு படிக்க ரொம்ப ஆத்மார்த்தமான நட்பாக இருந்துச்சு... அவன் பிரபஞ்சனை ஆரம்பத்துல மிரட்டுற விதம் அதுக்கு பிரபஞ்சன் மைன்ட் வாய்ஸ்ல குடுக்கற ரியாக்ஷன் எல்லாம் சிரிப்பா இருந்துச்சு...ஆனா இவங்க இரண்டு பேருக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியத்தை தெரிஞ்சு வச்சுகிட்டு பிரபஞ்சன் மிரட்டும் போது நிரா நண்பணுக்காக அமைதியா இருந்தது அவங்க நட்போட அன்பை காட்டுது..கடைசில பிரபஞ்சன நிராகூட சேர்த்து வச்சதும் குட்...



மீனா - தாஸோட மனைவி ..சின்னப்போண்ணுதான் ஆனா ரொம்ப மெச்சுவர்ட்..தாஸை புரிஞ்சிகிட்டு அவனுக்கு ஏத்த சரியான ஜோடி..இவங்க லவ்ஸ் அன்ட் ரொமான்ஸ்லாம் படிக்க




...நிரா தாஸோட நட்ப புரிஞ்சி கிட்ட விதம், பிரபஞ்சன் லவ்வ கண்டுகிட்டு தாஸ் கிட்ட அவனை விளக்குனவிதம் எல்லாமே சூப்பர்....
நிரஞ்சன் - இவன்லாம் என்ன மனுசன் ச்சைக்

..காசுக்காக நிராவோட அப்பாகிட்ட நடிச்சு அவகிட்டயும் நல்லவன் மாதிரி நடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான்... கல்யாணம் அப்றோம் அவளுக்கு உண்மையா இல்லாம இருந்து இருக்கான் அதுவும் அவளோட சொத்து சாப்பிட்டு கிட்டே
. ஃப்ளாஷ் பேக் வரும்போதுலாம் நிரஞ்சன போட்டுத் தள்ளலாம்லனு தோணும்..போதைல ஒரு சின்னப் பொண்ணு கிட்ட தப்பா நடக்க பாத்த இவன கொண்ணதுலாம் தப்பே இல்ல.. குட் ஜாப் நிரா அன்ட் சிவதாசன்
கமலா & தாமினி - சரியான சுயநலம் புடிச்ச குடும்பம்..அடுத்தவங்க காசு பணத்துக்கு ஆசைப்பட்டு அதுல பொழப்பை ஓட்டுறதுங்க..சாப்பிடுறது அடுத்தவங்க காசு ஆனா ஓனர் என்னவோ அவங்கன்னு நினைக்கிறது...சொத்தே அடுத்தவங்களோடது..இதுல சொத்துல அவன் தம்பி தங்கச்சிக்கு பங்கு வேற கேக்குது..ச்சைக் மானங்கெட்டதுங்க

பட் அவங்களஆரம்பத்துல இருந்து பிரபஞ்சன் ட்ரீட் பண்ண விதம் அருமை.. கடைசில துரத்தி விட்டதும் அருமை...
கடைசில தான் தெரிஞ்சது நிரஞ்சன் பிரபஞ்சன் ட்வின்ஸ்னு ம் .. பிரபஞ்சனோட மனசுல இருக்க பொண்ணு நிராலினி தான்னு..அவ எதுக்காக தன் கிட்ட உதவிக்கு கேட்டாளோ அதை நிறைவேத்திட்டு கிளம்பலாம் நினைக்கிறான் பிரபஞ்சன்...தன்னோடஅண்ணண் ஒரு கேடுகெட்டவன் அதனால நிரா தனக்கு வேண்டாம்னு நினைக்கிறான்...ஆனா அண்ணணோட தப்புக்காக தம்பி பிரபஞ்சனை தண்டிக்கிற அளவு நிரா கல்நெஞ்சம் கொண்டவ இல்லை... கடைசில பிரபஞ்சனுடைய காதலை புரிஞ்சி கிட்ட விதம் அருமை..!!!
இவங்க காதல் கொஞ்சம் கொண்டு போயி இருக்கலாம்..சீக்கிரமா முடிஞ்சது மாதிரி இருந்தது..
ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!


