ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 16- என் பெண்மையை வென்றான் இவன்

pommu

Administrator
Staff member
APV 16- என் பெண்மையை வென்றான் இவன்
 
என் பெண்மையை வென்றான் இவன்..



தன் கணவனை போன்ற உருவம் கொண்டவனை நாயகி எதற்காக தேடுகிறாள் ?? தேடிக் கண்டுபிடித்தவன் அவளுக்கு உதவினானா இல்லையா ? அவளது நம்பிக்கையை அவன் காப்பாற்றினானா இல்லை உடைத்தானா என்பதே கதை....



பிரபஞ்சன் - நம்ம பிக்பாக்கெட் ஹீரோ🤭🤭🤭 ஆரம்பத்துல மைன்ட் வாய்ஸ்ல பேசுனதுலாம் கேட்டு சிரிப்பு வந்துச்சு..நல்லா கோஆப்ரேட் பண்ணிட்டு இருந்தவன் திடீர்னு ரெட் சிப்‌பொருத்துன ரோபோ மாதிரி ஆன்ட்டி ஹீரோவா மாறிட்டான் 🤔அவளுக்கு டக்குன்னு தாலி கட்டி மனைவி ஆக்கிட்டான் ..அவளை குழந்தை போல பார்த்துகிட்டு அவளோட தேவைகளை அவனே நிறைவேத்துனான் ..இது எல்லா படிக்க நல்லா இருந்துச்சு ‌‌..பட் பிடிச்ச‌மனைவினாலும்கூட அவளோட அனுமதி இல்லாமல் தொடுறது தப்பு.. அதுலதான் பிரபஞ்சன் மேல கோபம் வந்துச்சு..😏 ஆனால் அதுக்கு அப்புறம் பிரபஞ்சன் நடந்து கொண்ட விதம் அவங்க எஸ்டேட்ட அகைய்ன் லாபமா கொண்டு வந்தது ..அதுக்கு‌போட்ட‌ முயற்சினு எல்லாமே சூப்பர்..👍👍அவனுக்கு அவனோட நிரா மறுபடியும் பழைய மாதிரி நடக்கனும்றதுக்காக அவன் எடுத்த முயற்சி , அவளை விட இவன்தான் குணமாகிடனும்னு ரொம்ப ஈகரா இருந்ததுன்னு எல்லாமே சூப்பர்...பட் லாஸ்ட்ல தான் தெரிஞ்சது அவதான் இவனோட மனசுல பதிஞ்ஞ பொண்ணுண்ணு.




நிராலினி -டான்சரான இவள் ஒரு ஆக்சிடென்ட் னால நடக்க முடியாம போயிடுது...ஒரு உதவிக்காக தன்னோட கணவன் மாதிரி உருவம் உள்ளவனை தேடுறா ..அவ தேடும் மாதிரி கிடைச்ச உடனே அவளுடைய சூழ்நிலை சொல்லி உதவி பண்ண சொல்லி கேக்குகறா ..அவனும் ஒத்துக்கிட்டு அவளுக்கு உதவிபண்ண வர்றான். அவளோட பாஸ்ட்ட அவ மூலமா தெரிஞ்சுகிட்டு அவள கல்யாணம் பண்ணிடுறான் மிரட்டி ‌. நிரா நிலைமைல பார்த்தா அது ரொம்ப கஷ்டமாக இருந்தது.. பிரபஞ்சன‌‌ அவள் சில நேரம் கேள்வி கேட்கும் போது அவளோட ஆதங்கத்தை புரிஞ்சுக்க முடிஞ்சது.. ஆனாலும் அவளோட மனசும் பிரபஞ்சனை தேடும்போது நீயே திட்டுற அப்றோம் நீயே தேடுறனு தோணுச்சு..அட் லாஸ்ட் அவ பிரபஞ்சன யாருன்னு கண்டுபிடிச்ச விதம் அன்ட் அவனோட லவ்வ புரிஞ்சி கிட்ட விதம் அருமை..


இன்ஸ்பெக்டர் சிவதாசன் - நிராவோட பிரண்ட்..அவளுக்கு எப்பேற்பட்ட சூழ்நிலையிலயும் அவளுக்கு உதவியா இருக்கக்கூடிய ஒரு நண்பன்..இவள ஒன்சைட்டா லவ் பண்ணவனும் கூட .. இவங்க நட்பு படிக்க ரொம்ப ஆத்மார்த்தமான நட்பாக இருந்துச்சு... அவன் பிரபஞ்சனை ஆரம்பத்துல மிரட்டுற விதம் அதுக்கு பிரபஞ்சன் மைன்ட் வாய்ஸ்ல குடுக்கற ரியாக்ஷன் எல்லாம் சிரிப்பா இருந்துச்சு...ஆனா இவங்க இரண்டு பேருக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியத்தை தெரிஞ்சு வச்சுகிட்டு பிரபஞ்சன் மிரட்டும் போது நிரா நண்பணுக்காக அமைதியா இருந்தது அவங்க நட்போட அன்பை காட்டுது‌..கடைசில பிரபஞ்சன நிராகூட சேர்த்து வச்சதும் குட்...👍👍👍👍



மீனா - தாஸோட மனைவி ..சின்னப்போண்ணுதான் ஆனா ரொம்ப மெச்சுவர்ட்..தாஸை புரிஞ்சிகிட்டு அவனுக்கு ஏத்த சரியான ஜோடி..இவங்க லவ்ஸ் அன்ட்‌ ரொமான்ஸ்லாம் படிக்க 🙈🙈🙈🙈...நிரா தாஸோட நட்ப புரிஞ்சி கிட்ட விதம், பிரபஞ்சன் லவ்வ கண்டுகிட்டு தாஸ் கிட்ட அவனை விளக்குன‌விதம் எல்லாமே சூப்பர்....


நிரஞ்சன் - இவன்லாம் என்ன மனுசன் ச்சைக்😤..காசுக்காக நிராவோட அப்பாகிட்ட நடிச்சு அவகிட்டயும் நல்லவன் மாதிரி நடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான்... கல்யாணம் அப்றோம் அவளுக்கு உண்மையா இல்லாம‌ இருந்து இருக்கான் அதுவும் அவளோட சொத்து சாப்பிட்டு கிட்டே‌

. ஃப்ளாஷ் பேக் வரும்போதுலாம் நிரஞ்சன போட்டுத் தள்ளலாம்லனு தோணும்..போதைல ஒரு சின்னப் பொண்ணு கிட்ட தப்பா நடக்க பாத்த இவன கொண்ணதுலாம் தப்பே இல்ல.. குட் ஜாப் நிரா அன்ட் சிவதாசன் 👍



கமலா & தாமினி - சரியான சுயநலம் புடிச்ச குடும்பம்..அடுத்தவங்க காசு பணத்துக்கு ஆசைப்பட்டு அதுல பொழப்பை ஓட்டுறதுங்க..சாப்பிடுறது அடுத்தவங்க காசு ஆனா ஓனர் என்னவோ அவங்கன்னு நினைக்கிறது...சொத்தே அடுத்தவங்களோடது‌..இதுல சொத்துல அவன் தம்பி தங்கச்சிக்கு பங்கு வேற கேக்குது..ச்சைக் மானங்கெட்டதுங்க😤பட் அவங்கள‌ஆரம்பத்துல இருந்து பிரபஞ்சன் ட்ரீட் பண்ண விதம் அருமை.. கடைசில துரத்தி விட்டதும் அருமை...


கடைசில தான் தெரிஞ்சது நிரஞ்சன் பிரபஞ்சன் ட்வின்ஸ்னு ம் .. பிரபஞ்சனோட மனசுல இருக்க பொண்ணு நிராலினி தான்னு..அவ எதுக்காக தன் கிட்ட உதவிக்கு கேட்டாளோ அதை நிறைவேத்திட்டு கிளம்பலாம் நினைக்கிறான் பிரபஞ்சன்...தன்னோட‌அண்ணண் ஒரு கேடுகெட்டவன் அதனால நிரா தனக்கு வேண்டாம்னு நினைக்கிறான்...ஆனா அண்ணணோட தப்புக்காக தம்பி பிரபஞ்சனை தண்டிக்கிற அளவு நிரா கல்நெஞ்சம் கொண்டவ இல்லை... கடைசில பிரபஞ்சனுடைய காதலை புரிஞ்சி கிட்ட விதம் அருமை..!!!


இவங்க காதல் கொஞ்சம் கொண்டு போயி இருக்கலாம்‌..சீக்கிரமா முடிஞ்சது மாதிரி இருந்தது..

ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!👍👍👍
 
#என்_பெண்மையை_வென்றான்_இவன்
#விமர்சனம்

நாயகன்: பிரபஞ்சன்

நாயகி: நிராலினி

விபத்தால கால் முடமாக்கப்பட்ட பணக்கார பொண்ணான ஹீரோயின் நிராலினி பணத்துக்காக மட்டும் அவளை கல்யாணம் பண்ணின அவனோட கணவன் நிரஞ்சனாலேயும், அவனோட குடும்ப ஆட்களாலேயும் பலவித கஷ்டங்களை அனுபவிக்குறா. திடீர்னு அவளோட புருஷன் காணாம போக அந்த இடத்தில நடிக்கிறதுக்கு வர்றான் உருவத்தில அவனையே உரிச்சு வைச்சு இருக்கிற ஹீரோ பிரபஞ்சன். அம்மாவோட சிகிச்சைக்காக பிக்பாக்கெட்டா திரியிற ரஞ்சன் நிரா வாழ்க்கைல நுழைஞ்சு கணவனோட ரோலை அத்து மீறி எடுத்துக்குறான் எல்லா விதத்திலேயும் அவளோட சம்மதம் இல்லாம. ஏற்கனவே நிரஞ்சனோட துரோகத்தால மனம் வெதும்பி இருந்த நிரா ரொம்ப நம்பின ரஞ்சனும் துரோகம் பண்ணவே அவன் மேல ரொம்ப வெறுப்பை வளத்துக்குறா. ஆனா ரஞ்சனோ நிரஞ்சன் குடுக்காத அன்பையும் அன்யோனியத்தையும் அவளுக்கு குடுக்குறான். கடைசில நிரா அவனை ஏத்துக்கிட்டாளா? நிரஞ்சனுக்கு என்ன ஆச்சு? நிரஞ்சனும் பிரபஞ்சனும் எப்படி ஒரே உருவத்தில இருக்காங்க? இதெல்லாம் கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்.

இதில நிரஞ்சன் எந்தளவுக்கு மோசமா இருந்தானோ அந்தளவுக்கு பிரபஞ்சன் நல்லவனா அறிமுகமாகும் போது இனி நிரா வாழ்க்கை நல்லா போகும்னு நினைக்கும் போதே பிரபஞ்சனோட மிரட்டல், அதை வைச்சு அவளுக்கு கட்டாய தாலி கட்டி அவளோட குடும்பம் நடத்தும் போது நிரா மாதிரியே பிரபஞ்சன் மேல வெறுப்பு வருது நமக்கு. அப்புறம் பாம்புன்னும் ஒதுங்க முடியாம பழுதுன்னும் தள்ள முடியாம நம்மளை ஒரு விருப்பு வெறுப்பு மனநிலையிலேயே வைச்சிருக்கான் அவன். கடைசியில அவளோட சிகிச்சைக்காக அவ வாழ்க்கையை விட்டு மொத்தமா ஒதுங்குறேன்னு சொல்லும் போது பரிதாபப்பட வைக்கிறான். நிரா அவனை ஒதுக்கும் போது அவனுக்கு வர்ற வலியை நமக்கும் கடத்துறான். ஒரு பக்கத்து மனசு உனக்கு நல்லா வேணும்னு நினைச்சாலும் இன்னொரு பக்கம் அத்து மீறுனாலும் அவளை உள்ளங்கைல தாங்குறானேன்னு நினைக்குது. நிரஞ்சன் குடும்பம் நிராவுக்கு செய்ததை அவன் திருப்பி அவங்களுக்கு செய்யும் போது சபாஷ் போட வைக்குறான்.

நிரா ஒரு அப்பாவி பொண்ணு. தாயில்லாம தகப்பனோட அரவணைப்பில வாழ்ந்து பருவ வயசில விபத்து நடந்து நடக்க முடியாம முடங்கும் போது ஆறுதலா இருந்த நிரஞ்சனோட நடிப்பை அப்படியே நம்பி அவனை கல்யாணம் பண்ணி அதனால தினம் தினம் அவனோட குடும்பத்தால தீ*யில குளிக்கிறவ உருவத்தில நிரஞ்சனை மாதிரி இருந்து அவன் காமிக்காத அன்பை காமிச்ச பிரபஞ்சன் கிட்ட ஈஸியா விழும் போது நமக்கு பரிதாபமா இருக்கு. அவனோட துரோகத்தால இறுகி போற நிராவுக்கு அவன் மேல இருந்த வெறுப்பையும் தாண்டி அவன் அவளுக்காக செய்ற செயல்கள் எல்லாம் அவன் சைடு அவளை ஈர்க்கும் போது நமக்கும் இந்த ஜோடி ஏன் சேர்ந்து வாழக்கூடாதுன்னுதான் தோணுது.

இவங்களுக்கு அடுத்த ரொம்ப ஈர்த்த ஜோடி சிவதாஸன் - மீனா.போலீஸான சிவாவுக்கு எல்லா வகையிலும் துணை நிக்குற மீனா. அவன் நிராவோட பழகினாலும் துளியும் அவங்க நட்பை பத்தி சந்தேகப்படாம அவனுக்கு பக்கபலமா இருக்கிற மீனா ரொம்ப நல்ல கேரக்டர். அவங்களோட ரொமான்ஸும் தூக்கலாவே இருந்தது. நிரா சிவா நட்பும் ரொம்ப நல்லா இருந்திச்சு.

நிரா பணத்திலேயே குடும்பமா உக்காந்து தின்னுக்கிட்டு அவளையே தாழ்வா பேசுற அக்மார்க் மாமியார் கமலா, தன்னை உலக அழகின்னு நினைச்சுக்கிட்டு நிராவை மட்டமா பேசுற நாத்தனார் தாமினி, தூணுக்கு புடவை கட்டினாலும் துகிலுரியிற புருஷன் நிரஞ்சன், அண்ணனுக்கு தப்பாத கொழுந்தன் காமேஷ் இப்படி குடும்பமா அவ சொத்துல கும்மியடிச்சிட்டு இருந்த கும்பலை ரஞ்சன் மொத்தமா பேக் அப் பண்ணி அனுப்பும் போது நமக்கு குத்தாட்டம் போடத் தோணுது. அந்த நிரஞ்சனோட அப்பான்னு ஒரு கேரக்டர் வருது கதை தொடக்கத்தில படுக்கைல இருக்கிற மாதிரி. அந்தாளை பத்தி மொதல்ல அவ்வளவா யோசிக்கல. பெருசா கதைல வரவே இல்லையேன்னு விட்டுட்டோம். ஆனா அந்த ஆளை பத்தி கடைசில தெரியும் போது அந்தாளுக்கு எதுக்கு ராஜ வைத்தியம் கொண்டு போய் தெருவில போடுங்கன்னு சொல்லத் தோணுது.

மொத்தத்தில அவ பெண்மையை வென்றவன் எங்க எண்ணத்தையும் வென்றிட்டான்.போட்டில வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி❤️❤️❤️❤️
 
என் பெண்மையை வென்றான் இவன்..... நாயகன் ..பிரபஞ்சன் நாயகி.. நிராலினி
நம்ம நாயகி நடக்க முடியாத ஒரு ஊனமுற்ற ஆள் அவங்களுக்கு வாழ்க்கையில மிகவும் பக்கபலமாக இருக்கும் ஒரு நல்ல தோழன் நம்ம சிவதாசன்... தாஸ் நிராவும், நிராவோட கணவன் நிரஞ்சன் போலவே உருவ ஒற்றுமையுள்ள ஒருத்தரை தேடி அழைகிறார்கள் அது எதற்காக அழையறாங்க அவங்க வாழ்க்கையில என்ன நடந்தது என்று ரைட்டர் நல்லா விருவிருப்பாக சொல்லி இருக்காங்க.... நிரஞ்சனா மாதிரியே பிரபஞ்சன் அப்படி என்ற ஒருத்தன தேடி கண்டுபிடிக்கிறார்கள்... அவன வெச்சி அவங்க சொத்துல உள்ள நிறைய பிரச்சனைகளை சால்வ் பண்ண முயற்சி பண்றாங்க பிரபஞ்சன் நிலாவுக்கு உதவி பண்ற மாதிரி அவளோட பிரச்சனை என்ன நிரஞ்சனை என்ன பண்ணாங்க எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அவளை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிறாரு அது மட்டும் இல்லாம அவ விருப்பம் இல்லாம அவ கூட வாழ ஆரம்பிச்சிடுறாரு... அவங்க அப்பாவோட தங்கை பையன் தான் நிரஞ்சன் அத்தையே பணத்துக்காக அவளை கஷ்டப்படுத்துறாங்க ... இதுல நிரவுக்கு ஒரே ஆறுதல் நம் சிவதாசன் தான் சிவதாசன் நம்ம மீனா ஜோடி ரொம்ப ரொமான்டிக் கபில்.. பாக்கியம்மா அவளுக்கு இன்னொரு அம்மாவா எவ்வளவோ உதவிகள் செய்றாங்க.. பிரபஞ்சன் நிராவோட பிரச்சனையை சரி பண்ணரா அவங்களோட உடம்பு உடல் இல்லையே சரி பண்ணி அவங்களுக்கான சொத்தை நல்லபடியா வாங்கி கொடுத்தாரா அப்படிங்கிற தான் கதை.. இதுல ஒரு டவுட் ஒன்னு இருந்தது அது என்னன்னா அது எப்படிடா ஒரே மாதிரி ரெண்டு பேரு குரல் கூட மாற்றம் இல்லாம இருக்கேனு பார்த்தா நம்ம பிரபஞ்சனும் நிரஞ்சனும் ட்வின்ஸ் .... நல்ல வித்தியாசமான முயற்சி அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 💐 🧡 🧡 🧡
 
Last edited:
#என்_பெண்மையை_வென்றான்_இவன்_விமர்சனம்
வித்தியாசமான கதை களம் ❤

தன் கணவன் நிரஞ்சன் போல் உருவம் கொண்ட ஒருவனை தேடி கணவனாக நடிக்க வைக்க முயலும் நிராலினி.

அவள் தேடலின் பயணாய் கிட்டும் பிரபஞ்சன். நிரஞ்சனுக்கு என்ன ஆனது? ஏன் நிரஞ்சனுக்கு பதில் பிரபஞ்சன்? பிரபஞ்சனால் நிராவிக்கு நன்மை நடந்ததா? இல்லையா? என்பதே கதை.

கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யமாக இருந்தது சிறப்பு ❤

சிவதாஸன்- நிரா நட்பு நல்லா இருக்கு ❤ சிவதாஸன்- மீனா அன்யோன்யமான ஒளிவுமறைவற்ற நல்ல தம்பதியர்கள் ❤ மீனாவின் புரிதலும் இருவரின் பினணப்பும் அருமை 😍

நிரஞ்சனுக்கு என்ன ஆனதுனு பிரபஞ்சன் நிராவிடம் பேச்சு கொடுத்து தெரிஞ்சுகிட்டது காட்சி சிறப்பு👏 இவன் ஏன் இப்படி பண்ணுறான்? இவனுக்கு என்ன வேணும்? இவன் நல்லவனா? கெட்டவனா? இப்படி பல கேள்விகள். அதுவே கதை தொடர்ந்து படிக்க உந்துதலா இருந்தது❤

பிரபஞ்சனின் காதல் நிராவிற்காக அவன் செய்வது அனைத்தும் நெகிழ வைக்குது. ❤❤

நிறைய காட்சிகளில் நிரா பார்க்க பாவமா இருந்தது 😞 நிரா பிரபஞ்சன் உணர்வுகளை அழகா சொல்லீருக்கீங்க❤
நிரஞ்சனும் அவனின் குடும்பமும் கேடு கெட்ட ஜென்மங்கள் 🥵🥵
இறுதில் பிரபஞ்சன் யாருங்குற ட்விஸ்ட் எதிர்ப்பார்க்காதது நல்லா இருந்தது.

கணவன் மனைவிக்கு உள்ள நெருக்கமாக காட்சிகளை இலை மறை காயா சொல்லிருக்கலாம்.
பிரபஞ்சன் நிராவிற்கு தாலி கட்டுனதும் சரி அதன் பிற்பாடு அவனின் நடத்தையும் சுத்தமா சரியில்லை ,அப்போ அவனின் செயலுக்காக சொன்ன காரணம் இன்னுமே வலுவா இருந்திருக்கலாம்.

பிரபஞ்சன் யாருங்கறது இன்னும் கொஞ்சம் நல்லா சொல்லீருக்கலாம். கதை சட்டுனு முடிஞ்சது போல இருந்தது . இதையெல்லாம் தவிர்த்திருந்தா இன்னும் சிறப்பான கதையா அமைந்திருக்கும் ❤❤

பிரபஞ்சன்-நிரா வாசகர் மனதை வென்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
Top