ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 16- என் பெண்மையை வென்றான் இவன்

என் பெண்மையை வென்றான் இவன்

நிரலினி நம் கதையின் நாயகி. நிரஞ்சன் அவளோட புருஷன். அவளை ஏமாத்தி அவளோட சொத்துக்காக அவளை மேரேஜ் பண்ணிக்கிறான். அவளுக்கு நடந்த ஒரு ஆக்சிடென்ட்னால நடக்க முடியாமல் இருக்கா. அவளுக்கு வாழ்க்கை தர மாதிரி அவளை ஏமாத்தி கட்டிக்கிறான்.

அவனோட நடிப்பை நம்பி சொத்து எல்லாம் அவன் பெயருக்கு அவளோட அப்பா எழுதி வைச்சுடுறாரு.

நிரஞ்சன் அவனோட குடும்பமே நிராவை வார்த்தையால கஷ்டப் படுத்துறாங்க. நிரஞ்சனோட முழு சுயரூபம் அவளுக்கு தெரியுது.

ஒரு சூழ்நிலையில் நிரஞ்சன் போயிடுறான். அவனை மாதிரியே ஒரு ஆளை தேடிட்டு இருக்கா நிரா அவளோட போலீஸ் பிரண்ட் சிவதாஸ் கூட சேர்ந்து. அப்போ கோவில்ல பிரபஞ்சனை பார்க்குறா நிரஞ்சன் மாதிரியே இருக்க அவன் கிட்ட நடிக்க கேட்குறாங்க.

அவனும் அம்மாவோட ட்ரீட்மென்ட்காக நடிக்க ஒத்துக்குறான். நிரஞ்சன் என்ன ஆனான். பிரபஞ்சன் அவளுக்கு ஹெல்ப் பண்ணினானா அப்படினு ஸ்டோரில அழகா சொல்லி இருக்காங்க.

நிரஞ்சன் இவன் எல்லாம் என்ன மனுஷனோ 😬😬😬அதுக்கும் மேல அவனோட குடும்பம் நிரா சோத்தை தின்னுட்டு அவளையே கண்டபடி பேசிட்டு இருக்குதுங்க இதுங்கள சுத்தமா பிடிக்கவே இல்ல 🤐🤐🤐🤐

நிரஞ்சனோட முடிவு சூப்பரா இருந்துச்சு. அவனுக்கு இது தேவை தான் 😏😏

பிரபஞ்சன் ஸ்டார்ட்டிங்ல நிராவை அப்படி எல்லாம் பண்ணும் போது கொஞ்சம் கோபமா இருந்துச்சு. ஆனால் ஏதோ காரணம் இருக்கும்னு தோணுச்சு. ஆனால் இதை எதிர் பார்க்கல.

அவ மேல எம்புட்டு லவ் பயபுள்ள. அதை படிக்க நிறைவாக இருந்துச்சு.

அவளை நடக்க வைச்சு பேக்டரி எல்லாம் சரி பண்ணி அவளுக்காக அவன் பண்றதெல்லாம் பார்க்கும் போது நிறைவாக இருந்துச்சு.

தாஸ் நிரா பிரண்ட்ஷிப் நல்லா இருந்துச்சு.

தாஸ் மீனா இந்த ஜோடி சூப்பரா இருந்துச்சு.

பயபுள்ள போலீஸ் வேலை பார்த்ததை விட பொண்டாட்டி கூட பார்த்த வேலை தான் அதிகம் 🙈🙈🙈

ஸ்டோரி படிக்க விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
#என்_பெண்மையை_வென்றான்_இவன்…
#கௌரிஸ்ரிவ்யூ

நிரா அவளோட நண்பன் தாஸ்….அவளோட அப்பா எஸ்டேட்டை கணவன் என்ற கயவன் கிட்ட விட்டு போயிட்டார்….

அதை எப்படியும் தன் பேருக்கு மாற்றம் செய்து, அந்த எஸ்டேட்டை காப்பாற்ற போராடராங்க ரெண்டு பேரும்….

அதற்கு அவங்களுக்கு தேவை….அந்த கயவன் நிரஞ்சன் போலவே இருக்கும் நபர்…..

அது எப்படி முடியும்னு யோசிச்சாலும்….. அவங்களை காப்பாற்றவே வரான் ரஞ்சன்….நிரஞ்சன் போலவே இருக்கும் ஒருத்தன்……

ரஞ்சனை …..கணவனாக நடிக்க கேட்க அவனும் அவன் தாயின் உடல் நிலைக்காக ஒத்துக்கிறான்…..

கணவனாக இருந்த நிரஞ்சன் கயவனாகி போக….

கணவனாக நடிக்க வந்தவன் கயவனாகினான இல்ல காதலனாகினான?????

இது மீதி கதை…..

நிரஞ்சன் & அவன் குடும்பம்🤮🤮🤮🤮🤮🤮

ரஞ்சன்….ஆரம்பத்தில் இவன் ஏன் இப்படி எல்லாம் செய்யறான் அப்படினு சந்தேகம் வந்தாலும்….அவனின் மனம் புரியவே செய்கிறது…..

நிரா மேல இவனின் காதல்…. Just wow….

நிரா…. பாவபட்ட ஜீவன்…. காதல்னு நம்பி கயவனை கல்யாணம் செய்து இவள் பட்ட துன்பம்🥺🥺🥺🥺🥺…..

ரஞ்சனை சந்தேகப்படுவதில், அவனை காயப்படுத்துவதில் நியாயமே இருக்கு….அவளின் முன் வலிகள் அப்படி….

தாஸ்…. சூப்பர் நண்பன் & வாவ் கணவன்🙈🙈🙈🙈🙈

மீனா….தாசுக்கு ஏத்த பீசு இவ🫣🫣🫣🫣🫣

இவங்க காதலும் 🙈🙈🙈🙈 நல்லாவே இருக்கு….. மீனாவின் நம்பிக்கை 👌👌👌👌👌…..

கதை நல்லா இருந்தது ரைட்டர்…..

போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
என் பெண்மையை வென்றான் இவன்

நிராலினி searches for a husband who looks like Niranjan and finds பிரபஞ்சன், a pickpocket who resembles him. What happened to Niranjan? Why does Prabanjan take his place? And does he bring any good to Nira?

Prabanjan starts as a playful, witty character, providing humor and charm
The story takes a daring turn when Prabanjan’s behavior shifts

Surprisingly, the character evolves again. He transitions into a protective figure who treats Nira with care, fulfilling her needs and handling her challenges like a mature partner. His efforts to restore Nira to her former self show a deep, selfless commitment
The suspense surrounding Niranjan’s disappearance and Prabanjan’s true identity keeps the pages turning.
The unexpected twist at the end adds a layer of sophistication to the plot, rewarding the reader for sticking through the emotional ups and downs.

It is a highly engaging read that explores the thin line between acting and reality. It portrays how a person who starts as a "replacement" can end up becoming the very foundation of someone’s life. ❤️✨
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP16
Kalai varshini அவர்கள் எழுத்தில்
"என் பெண்மையை வென்றான் இவன்"
நிராலினி.. செல்வ சீமாட்டி. ஒரு விபத்தால் நடக்க முடியாமல் போகிறது இவளுக்கு . இவள் கணவன் நிரஞ்சன். அவனோடு இவள் வாழ்வு எப்படி இருந்தது என்பது கதையில். கணவனின் உருவத்தில் யாரேனும் இருப்பார்களா என தேடிக் கொண்டிருக்கிறாள் தன் போலீஸ் நண்பன் சிவதாசன் உதவியுடன். அப்படி வருபவன் தான் பிரபஞ்சன்.
ஆரம்பத்தில் அப்பாவியாக இவர்கள் சொல்வதற்கு தலையாட்டுகிறான். தன் அன்னையின் மருத்துவ செலவிற்கு இவனுக்கு பணம் தேவைப்படுகிறது அதற்காக நடிக்க ஒப்புக்கொள்பவன். பின் ஒரு பெரும் உண்மையை கண்டுபிடித்து பெண் அவளை மிரட்டி அவளை மனைவியாக்கி கொள்கிறான். அவளின் சொத்தை அடைவதற்கா அல்லது பெண் அவளையே அடைவதற்கா என்பது கதையில்.
நிரஞ்சனின் அம்மா தம்பி தங்கைகள் எல்லாம் என்ன ஜென்மங்களோ 😡
சிவதாசன் மீனா ஜோடி அழகு. கொஞ்சம் ஓவர் ரொமான்ஸ் தான் 🙈
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
Top