#பொய்_பூசாத_நேசங்களே_விமர்சனம்
நல்லா மாஸ் ஹீரோ , சாஃப்ட் ஹீரோயின் இப்படியே படிச்சு பழகி போன எனக்கு அதிரடி நாயகி❤மென்மையான நாயகன் படிக்க ரொம்பவே நல்லா இருந்தது

கதையின் நாயகி -தேன்நிலா பெயரில் மட்டும்தான் இனிமையிருக்கும் மற்றபடி பேச்சு செயல் எல்லாமே அதிரடி அமர்களம் தான்
தேன்நிலாவின் ஆளுமையிலும் காதலிலும் அசந்து போய்டேன் ❤ நிலா மித்ரன் பாண்டிங் மற்றும் புரிதலும் ரொம்ப நல்லா இருக்கு ❤ ஆண் பெண் பேதம் இல்லாமல் இரு பிள்ளைகளையும் ஒரே போல வளர்த்த நிலா அப்பா அம்மாக்கு என் பாராட்டுக்கள்

தேன்நிலா கதிரவனை பழிவாங்குனது கொஞ்சம் பயமா தான் இருந்தது


. என்ன ஒரு வில்லத்தனம்

விதுரகவிதன் கதையின் நாயகன் ❤ மிகவும் நல்லவன் மென்மையானவன் ❤ அம்மா அப்பா தம்பிகள் தங்கைகள்னு மொத்த குடும்பமும் அவன் காசுல வாழ்ந்துட்டு அவனையே ஏமாற்றுவது கொடுமை


விதுவின் குடும்பத்தை மொத்தமா சுத்தமா பிடிக்கல

விது ரொம்பவும் ஏமாளியா இருந்தது எரிச்சல் வந்தது


அவன் காசையும் வாங்கிட்டு அவனுக்கு மரியாதையே தராதது கஷ்டமா இருந்தது இன்னும் அந்த ஆதங்கம் மனசுவிட்டு போகவில்லை

விதுவின் தாய்மாமா மற்றும் பிரபு இரண்டு பேரும் நல்ல கதாபாத்திரங்கள் ❤
கதையில் வரும் எல்லா கதாபாத்திர அமைப்பும் அதை கடைசிவரை அழகா அப்படியே கொண்டு போனதும் நல்லா இருந்தது. முக்கியமா நிலா விது totally two extremely opposite characterisation
ஆரம்பத்தில் நிலா விதுவை சுயநலத்திற்காக தானே திருமணம் பண்ண போகிறாள் பாவம் விது

பிரபுவை தவிர யாரும் அவனுக்கு உண்மையானவங்களா இல்லையேனு தோனுச்சு ஆனால் விதுகாக அவள் ஒவ்வொன்றும் பண்ண போது அவளின் காதலை உணரக்கூடியதா இருந்தது❤ முக்கியமா விதுவின் குடும்பத்தை கையாண்ட விதம் அருமை


புதுசா திருமணமான பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை ஆண்களும் எதிர்க்கொண்டா எப்படி இருக்கும்னு ரொம்பவே அழகா காட்டீட்டீங்க


விதுக்கு நான் ஒரு ஆண் அப்படிங்கற ஈகோ எங்கயும் அவனுக்கு வராதது மற்றும் மனைவிக்கு அவன் கொடுத்த மதிப்பும் மரியாதையும் காதலும் சிறப்பு ❤
மொத்தத்தில் இது ஒரு அழகான கதை ❤எனக்கு கதையை பிடிச்சிருக்கு❤
அனைத்து வாசகர்களிடமும் பொய் பூசாத நேசங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
