#உன்னில்_ஒரு_நஷா_இராவணா_விமர்சனம்
பிரக்யா உமையாள் மருத்துவர், தன் கணவனைவிட்டு குடும்பத்தைவிட்டு சொந்த ஊரைவிட்டு மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு வாசம் ஏன்? அப்படி என்ன பிரச்சனை? என்பது கதையில்.
சிறுவயதிலேயே தாயை இழந்த பிரக்யாவிற்கு தன் தந்தையின் அன்பும் கிடைக்காதது கொடுமை அவளை தந்தையின் கொடுமையில் இருந்து காப்பற்றும் தாய்மாமன் கதிர்நயனன்
இராவணனா மாமனா கணவனா எல்லாமுமா கதிர் சூப்பர் அதுவும் ரொமான்ஸ்
பிரக் தம்பி தங்கையின் உடன் பட்டாம்பூச்சியா இருக்கும் போதும். தன்னவனை குற்ற உணர்ச்சியில் இருந்து மீட்கும் போதும் அபிராமியின் நாவின் விஷம் அவளை சிறுக சிறுக கொல்லும் போதும் அனைத்திலும் அருமையான காட்சிப்படுத்தல்.
அபிராமி உடம்பு முழுக்க விஷம்
உமையாவின் கர்ப்பத்திற்க்கு யார் காரணம் என்ற ட்விஸ்ட் மற்றும் அபிராமியின் கருமவினை இரண்டும் எதிர்ப்பார்க்காதது நல்லா இருந்தது
பெரும் காதலாய்
வளர் நேசமாய்
நனி மோகமாய்
நான் ரசித்த வரிகள் ❤❤❤சூப்பர்
மொத்தத்தில் குடும்ப அரசியலையும் காதலையும் அழகான எழுத்துக்களால் மனதை நிறைக்கிறார் இந்த இராவணன் ❤
அனைவருள்ளும் ஒரு நஷாவாக இருந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
கதிர் நயனன் உமையாள் பிரக்யா நம் கதையின் நாயகி.
பிரக்யா சின்ன வயசுல அம்மாவை இழந்து அப்பாவோட பாசம் கிடைக்காமல் வாழ்றா.
அவளுக்கு ஒரே சப்போர்ட் தாத்தா, பாட்டி அவளோட மாமன் நயனன் மட்டும் தான். ஒரு சூழ்நிலையில் நயனன் அவளை தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவளை வளர்க்கிறான்.
அவ செய்யாத ஒரு தப்புக்கு பழி சுமக்குறா அவளை கல்யாணம் பண்ணி காப்பாத்துறான். அதுக்கு அப்புறம் அவ லைப் என்னாச்சு. அவ ஏன் அந்த பழியை சுமக்குறா இது எல்லாம் கதையில் சூப்பரா சொல்லி இருக்காங்க
பிரக்யா செய்யாத தப்புக்கு எல்லாம் தண்டனை அனுபவிக்குறது. சித்தி அபிராமி அக்கா மேல உள்ள கோபத்தை இவ மேல காட்டுறது அவ அப்பா அவளை புரிஞ்சுக்காமல் அடிக்குறதுனு நிறைய கொடுமையை அனுபவுக்குறா பாவம் பிரக்யா
நயனன் அவளுக்கு சப்போர்ட்டா இருக்குறது. அவளை படிக்க வச்சி டாக்டர் ஆக்குறது. அவளை புரிஞ்சுகிட்டு அவ மேல தப்பு இருக்காதுனு அவளுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணுறதுனு மனசுல நிக்குறான்.
அந்த ராவணனை எனக்கு ரொம்பவே பிடிச்சுது
அபிராமி இவ எல்லாம் என்ன பொம்பளையோ அக்கா பொண்ணுனு கொஞ்சம் கூட இரக்கமே கிடையாது என்ன எல்லாம் பேசுறா
கடைசியில் அவ பிள்ளைகள் அவளுக்கு சரியான தண்டனை கொடுத்தது நிறைவாக இருந்துச்சு.
நீலகண்டம் மாதிரி ஆளுங்களை எல்லாம் யாரு வந்தாலும் திருத்த முடியாது
கடைசியில் வைச்சீங்க பாருங்க ட்விஸ்ட் செமயா இருந்துச்சு.
உன்னில் ஒரு நல்லா இராவணா ...
நாயகன்: கதிர் நயனன்
நாயகி: பிரக்யா உமையாள்
நாயகனோட அக்கா மகள்தான் பிரக்யா...நாயகிக்கு அம்மா இல்லை அப்பா அப்பனுங்களை எல்லாம் வெப்பன்ஸ் வச்சு தாக்கனும் இதுக்கு இந்த ஆள்தான் உதாரணம்.
பிரக்யா கல்யாணம் ஆகி சில பல எதிர்பாராத நிகழ்வுகளால் வெளிநாட்டுக்கு போகிடறா நம்ம பிரக்கு டாக்டரப்பு...
பிரக்யாவோட சொந்த சித்தி அபிக்கு அக்கா மேல இருந்த பொறாமை அக்கா மகளையும் ஓவரா டார்ச்சர் பண்றாங்க..... இந்த சிடுசிடு கதிர்கள் குள்ள இப்படி ஒரு காதல் மன்னன் அவள் மேல் பாசமா நடந்துக்கிறது பிரக்யாவை படிக்க வைத்து டாக்டர் ஆக்குவது ரொமான்ஸ் தூள்....இதுல கதிருக்கு பேசி வச்ச விஷப் பாட்டில் விஷாலினி இந்த கொசுவை அடிச்சு கொள்ளுங்கடாவ் ...... மொத்தத்தில் ப்ரக்கோடஇராவணன் ரொமான்ஸ் மன்னன் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்