நேச முகம் மலராதோ!!
இந்த கதையோட நாயகன் அர்ஜூன்.தொழில்ல ரொம்ப சக்ஸஸா இருக்க அர்ஜூனுக்கு வீட்டுக்கு வந்தாலே பிரச்சினை வரிசைகட்டி நிக்குது..இதனால அவனுக்குவீட்டுல நிம்மதியே இல்ல.இதுக்கு எல்லாம் காரணம் அவளுடைய அக்கா சூர்யா..சில காரணங்களால் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிடுறாசூர்யா.சூர்யாவுடைய போதைப்பழக்கத்திலிருந்து அவளை விடுவிக்க பல்லவிய தேடிப்போறான் அர்ஜூன் ..தேடிப்போன இடத்துல அவளை கல்யாணம் பண்ணி கூட்டி வந்துடுறான்...அர்ஜூன் ஏன் இப்படி பண்ணான் ? பல்லவி யாரு? கல்யாணம் அப்புறம் அர்ஜூன் பல்லவி வாழ்க்கை எப்படி போகுது ? இதற்கான விடைகளை கதைல படிச்சு தெரிஞ்சுக்கலாம்.
சூர்யா அர்ஜூனுடைய அக்கா ..படிக்குற வயசுலயே காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க..மெச்சூரிட்டி இல்லாதவயசுல கல்யாணம் பண்ணதால கணவனுடன் சண்டை , குழந்தையும் வர அதைத்தொடர்ந்து விவாகரத்துனு முதல் திருமணம் தோல்வியாகிடுது..இதனால சூர்யா மனசு சரியில்லாமல் இருக்க அவங்க குழந்தையையும் சரியா கவனிக்க தவறிடுறாங்க.அவங்க அப்பா அம்மாக்கு மகளின் எதிர்கால பயம் .அதனால சூர்யாவுடைய குழந்தைய வேறு ஒருத்தவங்ககிட்ட கொடுத்துடுறாங்க..மறுமணமும் பண்ணி அதுவும் தோல்வில முடியுது..இதனால போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிடுறாங்க..எங்க போனாலும் வம்புனு அர்ஜூனுக்கு வீட்டுக்கு வந்தாலே ஒரே பிரச்சினை..இவங்க நடவடிக்கைகளால வீட்டில் யாருக்கும் நிம்மதி இல்லை.
அர்ஜூன் தொழில்ல ரொம்ப சக்ஸஸா இருந்தாலும் அவனுக்கு அக்காவை நினைச்சு கவலைபடுறான்..அவளை எப்படியாவது இதுல இருந்து மீட்கணும்னு நினைக்கிறான்..இதற்கு சொல்யூசனா அவளுடைய குழந்தையை தேடி போறான் ..அர்ஜூன் உடைய அப்பா அந்த குழந்தையை தன் நண்பர் மாணிக்கத்துகிட்ட கொடுத்து வளர்க்க சொல்றார் ..மாணிக்கத்தை தேடி செல்ற அர்ஜூன் அங்க நம்ம பல்லவியை பார்த்ததும் டோட்டல் ப்ளாட் ..



அவளுடைய சம்மதம் இல்லாமலேயே அவளுடைய கல்யாணத்தை நிப்பாட்டி அவ அப்பாவை நிர்ப்பந்தப்படுத்தி அவளை கல்யாணமும் பண்ணிடுறான்..
அர்ஜூன் கல்யாணம் பண்ண விதம் தப்புதான் ..அது எப்படி பல்லவி சீக்கிரமே ஏத்துப்பான்னு நினைச்சான் .. அவளும் சாத்வீக சுந்தரிலாம் கிடையாது.. சூர்யாவோட பொண்ணுல்ல.அவனை படாதபாடு படுத்திட்டா ..ஆனா அதுவும்படிக்க நல்லாதான் இருந்தது..


இதற்கிடையில் சூர்யாவும் திருந்த ஆரம்பிக்கிறாங்க ..பல்லவிக்கும் எதிர்பாராத விதமாக உண்மை தெரிய வருது.அவளும் அர்ஜூன் கிட்ட சண்டை போட்டு தன்னோட அம்மா வீட்டுக்கு போயிடுறா..சில பல கோட்பாடுகள் வச்சு இருக்க பல்லவிக்கு சூர்யாவின் நடவடிக்கைகள் ஆரம்பத்துல இருந்து பிடிக்கல .. இவங்கதான் தன்னை பெத்தவங்ன்றத ஏத்துக்க முடியல.இவங்களுக்காததான் அர்ஜூன் இப்படி பண்ணுனான்றதுதான் அவளுக்கு கோவம்..ஆனாலும் சரவெடி மாதிரி


பின்னாடியே போயி அர்ஜூன் சமாதானம் பண்ணுறான் ...ஆனா பல்லவி அவனை அலைய விடுறா

.. கடைசில பல்லவியும் சமாதானம்ஆகி ஒன்னா ஆகிடுறாங்க..கடைசியில நேசமுகமும் மலர்ந்தது !!
ஆரம்பத்துல சூர்யா மேல் கோவம் வந்தாலும் அவங்களுடைய மனநிலையையும் புரிந்தது..அவங்க பண்ண தப்புக்கு அடுத்தவங்க மேல பழி போட்டு எஸ்கேப் ஆகிட்டு இருந்தாங்க...ஆனாலும் கடைசில கொஞ்சம் கொஞ்சமா தன்னை மாத்தி கிட்ட விதம் எல்லாம் மனசு நிறைவா இருந்தது..
மொத்தத்துல ஒரு பீல் குட் ஸ்டோரிப்பா !!
ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!