ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 21- உயிரின் உறைவிடம்

உயிரின் உறைவிடம்
The story follows சத்யன்
a police officer, and தமிழ் பாரதி a college student living in his house. Radhi, traumatized after being assaulted at seventeen, continues her studies with mental health support, with Sathyan as her pillar of strength.
Sathyan fights to bring to justice the men who exploit women under the guise of love. Along the way, reporter Manasa develops feelings for him. Sathyan helps Radhi face her fears and heal from her past, showing his pure and selfless love.
The story beautifully portrays courage, love, and healing, culminating in Radhi’s marriage to Sathyan, supported by his parents, and the hope that their child, Jancy, will grow up brave and strong.
Apart from a few areas where some backstory could be explored more deeply, it’s a touching and well-crafted story of resilience and compassion.
✨❤️✨
 
உயிரின் உறைவிடம் விமர்சனம்


சிட்டாக பறந்து திரியும் வயதில் நடந்த கொடுமையினால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கா நம்ம நாயகி தமிழ் பாரதி ... அவளின் கசப்பான நிகழ்வுகளில் இருந்து அவளை வெளிக்கொண்டு வர முயலுகிறான் நம் நாயகன் சத்யன் ...அப்படி தமிழ் பாரதி வாழ்வில் நடந்தது என்ன ? சத்யனுக்கும் பாரதிக்குமான உறவு ? பாதிப்பிலிருந்து பாரதி எப்படி மீண்டு வந்தாள் ? விடை கதையில்...


ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதை நல்லா இருந்தது..பாரதியின் எல்லா விசயங்களுக்கும்அவளுக்கு தூணாக நிற்கும் சத்யன் ..அவளை அவன் முழுவதுமாக மீட்டெடுக்க பண்ண விசயங்கள் , அவளின் சந்தோஷத்திற்கு துணை நின்றது, அவளுக்கு அறிவுரை சொல்வதாகட்டும், அவளின் கடின நேரங்களில் உடன் இருந்ததாகட்டும் , அவ ஃபேமிலி கூட போய் இருக்க சொன்ன விஷயம், அவளுக்கு நடந்த கொடுமைக்கு அவன் சரியான விதத்தில் பழி தீர்த்ததனு இப்படி எல்லா விசயத்திலும் சத்யன் மனதை கவர்ந்துட்டாங்கப்பா 😍😍

பாரதியின் தனிமை பயத்தை போக்கி அவளை தைரியமானவளாக மாற்றிய சத்யன் , கொலையாளியை சத்யன் கண்டுபிடித்து அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தது எல்லாமே சூப்பர் 👍👍👍


சத்யனின் அவனின் ரதி மீதான காதல் , அவனின் பிரத்யேக அழைப்பான' ரதி' , ரதி சத்யன் திருமண நிகழ்வு எல்லாமே ரொம்ப பிடிச்சது ...❤️


பாரதியின் கடந்தகாலம் ரொம்ப கொடுமை... உறவுகள் இருந்தும் இல்லாததுபோல் இருப்பது கொடுமையின் உச்சம் 😞 அதற்காக அவள் செய்த செயல்கள்😒‌ தனிமை பயத்தில் சிக்கிக்கொண்டு அவள் தவிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது..அவள் அம்மா & 4 அண்ணணுங்களும் தண்டம்னு‌தான் தோணுச்சு .. செம்ம கோவம் வந்தது அவங்க மேல...பொண்ணு 2 வருடமா வீட்டுலயே இல்லைனு அப்போதெல்லாம் தேடாம அவ சத்யன் கூட இருந்த பார்த்துட்டு அவளை கூப்பிட்டு விசாரிக்கிறாங்க 😏 அவள் அவர்கள் ஒவ்வொருவரையும் கேள்வி கேட்ட விதம் அருமை..


மீண்டும் மன்னிப்பு கேட்டு வந்த குடும்பத்தை சத்யன் அவளுக்காக பேசி அவ குடும்பத்தோட சேர்த்து வைத்தது 👍👍


அவள் பிரச்சினையிலிருந்து அவள் மீண்டு‌வந்த விதம் இவளைப்போல பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு‌ உதாரணம்.. ஆரம்பத்தில் சத்யனின் காதலை ஏற்காமல் தன் தாழ்வு மனப்பான்மையால் இருந்த பாரதி பிறகு சத்யனின் காதலை ஏற்று சத்யனின் ரதியாக மாறியது ரொம்ப பிடித்தது❣️❣️❣️


ரதி சத்யன் காதல் அழகு..அவர்கள் காதல் பரிசான ஜான்சியின் பெயர் காரணமும் பிடித்தது..


சத்யனின் விருப்பமான அவனின் காவல்வேலையை மீண்டும் அவனுக்கு பரிசாக கொடுத்த ரதியின் காதல்❣️❣️❣️



பாரதியின் கடந்த காலம் தெரிந்தும் தன் மகனுக்கு பாரதியை திருமணம் செய்து வைத்த சாருமதியும் மனதில் நின்னாங்க ..சினேகாவும் நல்ல தங்கை சத்யனுக்கு..❤️❤️



பாரதியை போன்ற பெண்களுக்கு சத்யனை போல ஆண்கள் தூண்களாக இருந்தால் எந்த சூழலிலும் தைரியமாக சாதிக்கலாம்னு ரைட்டர் சொல்லிருக்காங்க...


இடையிடையே எழுத்துப்பிழைகள் உள்ளன..அதனை தவிர்த்து இருந்தால் கதை இன்னும் அருமையா வந்திருக்கும் 😍😍


சத்யனும் அவனின் ரதியும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
 
Top