ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 22- கொஞ்சம் உள்ளம் சிந்திடு

pommu

Administrator
Staff member
APV 22- கொஞ்சம் உள்ளம் சிந்திடு
 
#கொஞ்சம்_உள்ளம்_சிந்திடு_விமர்சனம்

எதார்த்தமான கணவன் மனைவி உறவு பற்றின கதை ❤

பிரனேஷ் விதுலனுக்கும் நிதர்சனாவுக்கும் பெரியவங்க பார்த்து இவங்களும் சம்மதம் சொல்லி வெகு விமரிசையாக திருமணம் நடக்குது. அதன்பிறகான அவங்க இல்வாழ்க்கை எப்படி இருக்கு? என்னென்ன பிரச்சினைகள் வருது? அதை எப்படி சமாளிக்கிறாங்க?னு கதை நகருது ❤

ஆணவம், ஆணாதிக்கம், மனைவியை அவமதிப்பது, அவதூறான பேச்சு, மனைவிக்கு மரியாதை தராமல் நடத்துவது, சுயநலம், அவளின் நிலையில் இருந்து அவளை பற்றி சிந்திக்காதது, சுயபுத்தியில்லாதது, துணை இருக்க வேண்டிய சமையத்தில் இல்லாமல் இருப்பது இப்படி இன்னும் நிறைய சொல்லலாம் பிரனேஷ் விதுலனை பற்றி 😏😏

மொத்த எதிர்மறையான எண்ணங்களையும் குத்தகை எடுத்துறிருக்கான் இவன். இவனை திட்டி கோபபட்டு😡 எரிச்சல்ப்பட்டு🥶 அச்சோ முடியலடா சாமினு ஆகிடுச்சு 😰😰

இவனுக்கு அப்படியே எதிர் நிதர்சனா 😅 பணம் இருக்குனு திமிர் இல்லை, எல்லையற்ற பொறுமைசாலி, தன்னம்பிக்கை, முடிவு எடுக்கும் திறன், தன் அன்பாலையும் செயல்களினாலும் புகுந்தவீட்டு ஆட்களின் மனதை மாற்றுவதுனு இன்னும் நிறைய சொல்லலாம் ❤

இரண்டு கதாபாத்திரங்களும் செதுக்கியிருக்கீங்க 👏

ஒரு கட்டத்தில் இப்படி ஒருத்தன் கூட வாழனுமா இவனு தோணாமல் இல்ல 🙁 ஆனால் விவாகரத்து ஒன்னும் சாதாரணமான விஷயம் இல்லையே. அந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கு. அதை தவிர்க்க ரொம்பவும் போராட வேண்டி இருக்கு 😓

நிதர்சனாவும் இப்படிதான் பிரனேஷ் தான் கணவன்னு முடிவு எடுத்தப்பின் அந்த முடிவு சரிதான் அவன் நல்லவன்னு நம்பி அவனுக்கு அவள் குடுத்த வாய்ப்புகளும் மகிழ்வான வாழ்விற்கான போராட்டமும் என்ன பிரம்மிக்க வெச்சது 😲😲

நிதர்சனாவின் பெற்றோர்கள் எல்லா நேரங்களிலும் அவளுக்கு உருதுணையா நின்னது சிறப்பு ❤ முக்கியமான சம்பூர்ணத்தின் சரியான அறிவுரைகள் 👌👌

பழநி கொஞ்ச நேரமே வந்தாலும் மனசுல நிக்கறார்❤ ஆரம்பத்தில் பிரனேஷ் மாமியார் மற்றும் அக்காக்கள் நிதாவை படுத்துனது கோபம் வந்தாலும் இறுதியில் அவளுக்காக பிரனேஷிடம் சண்டையிட்டது சூப்பர் ❤

குரங்கு கையில் பூ மாலை கொடுத்து வெச்சிருக்கீங்களே என்ன ஆகுமோனு மனசு பக்கு பக்குனு அடிச்சுக்கிட்டாலும் நிதாவின் அன்பாலும் புரிதலாலும் பூமாலைக்கு பாதகம் வராமல் பார்த்துகிட்டது அழகு 😍💓

கதை எனக்கு மிகவும் பிடித்தது❤
கொஞ்சம் இல்ல இல்ல நிறையவே வாசகர்கள் உள்ளம் சிந்தி போட்டியில் வெற்றி பெற வைக்க வாழ்த்துக்கள்👍
 
#கொஞ்சம்_உள்ளம்_சிந்திடு…..
#கௌரிஸ்ரிவ்யூ…

கம்ப்ளீட் ஃபேமிலி டிராமா 🤩 🤩 🤩 🤩

நிதா & பிரனேஷ்க்கும் கல்யாணம் பண்ணி வைக்க வீட்டில் பேசறாங்க…..

நிதா குடும்பம் பிரனேஷ் குடும்பத்தை விட வசதியில் பெரிய இடம்…..

அதில்லாம நிதாவும் அவனை விட நிறைய சம்பாரிக்கர பொண்ணு….

பிரனேஷ் அம்மாக்கு பையனுக்கு நல்ல இடம் கிடைக்குதுனு நிதா குடும்பத்தை விட மனசில்லா…..

ஆன பிரனேஷ் கூட பிறந்த அக்காக்களுக்கு பிடிக்கல நிதா ஃபேமிலியை…..

காரணம் அவங்க வசதியில் பெரியவங்க….எங்க தங்களை மதிக்க மாட்டாளோ நிதானு அவங்களா நினைச்சிக்கிட்டாங்க…..

பிரனேஷ்க்கு நிதாவை ரொம்பவே பிடிச்சி போச்சி……

நிதாக்கும் தான்….

நிதா அம்மா அப்பா….அவள் கல்யாணத்தை பெருசா நடத்த நினைக்க….

அப்படியே நடக்கவும் செய்து…..

ஆன அங்க பிரனேஷ் ஓட ஈகோ பயங்கரமா அடிவாங்க…..

அதில் ஆரமிக்குது ப்ராப்ளம்…..அவனோட ஈகோவை satisfy பண்ண பல விசயங்கள் செய்ய…..

நிதா ஓட உணர்வுகளை புரிஞ்சிக்க மறந்து, மறுத்து…

நல்லா போக வேண்டிய வாழ்க்கையை கெடுத்துக்கரான்….

நிதாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தானா????

நிதாவின் பதில் என்ன????

அது எல்லாம் மீதி கதை…..

பிரனேஷ்….சரியான பைத்தியக்காரன்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️…. இவனை இப்படி தான் நினைக்க தோணுது…..

அவ கெஞ்சினா சந்தோஷச பட்டுக்கர அற்ப பதர் தான் இவன்😬😬😬😬😬😬….

பக்கி பய….நாட்டில் பாதி பேர் இப்படி தான் இருக்காங்க😏😏😏😏😏😏….

நிதா….பொறுமையின் சிகரம்…அதுக்காக அவன் பண்ணின எல்லாத்தையும் சகிச்சிட்டு போற பொண்ணும் இல்ல…..

இவ கேரக்டர் ரொம்ப நல்ல இருந்தது….

ஸ்ட்ராங் மைண்ட் & கூடவே ஒரு வேலை…..

இது ரெண்டும் தரும் தன்னம்பிக்கை வேற எதுவும், யாரும் தர முடியாது 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻…..

அது மட்டும் இல்லாம, அவளோட எதிர்பார்ப்பில்லா அன்பில் அவனோட குடும்பமே அவள் வசம் ஆகிட்டு…..

எந்த அளவுக்குனா அவளுக்காக….அவனை திட்டி & ஒதுக்கி வைக்கும் வரை….

கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

போட்டி
யில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
கொஞ்சம் உள்ளம் சிந்திடு....
நாயகன்: பிரணேஷ் விதுரன் நாயகி: நிதர்சனா.
நம்ம நாயகி நல்ல வசதியான குடும்பத்து பொண்ணு நாயகன் அவங்களை விட வசதி குறைவான இடம்.... இரண்டு குடும்பமும் சேர்ந்து பேசி முடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க பிரணேஷ்க்கு நிதாமேல ஒரு தாழ்வு மனப்பான்மை அவ எல்லாத் விஷயத்திலும் நம்மளை விட பெஸ்ட் அப்படிஎன்ற ஒரு ஈகோ சாடிஸ்ட் பர்ஷனா நடந்துக்கிறான்...
அவனோட அந்த தாழ்வு மனப்பான்மையினால் அவளை வார்த்தையால் ரொம்ப புண்படுத்தும் வகையில் நடந்துக்கிறான் நிதர்சனா பொறுமையா அவனை கையாளும் விதம் ஆச்சரியம் ஊட்டும் விதமாக அமைந்துள்ளது....

ப்ரெணேஷோட சகோதரிகள் தாங்கள் தான் பெரிய ஆளுங்கன்னு போடற சீன் எரிச்சலை கிளம்புது
நல்லா அன்பா அனுசரனையான அன்பான மனைவி அருமையான வாழ்க்கை அதை கோனல் மானலாக மாற்றும் ப்ரேணேஷை கொள்ளும்வெறி.. குரங்கு கையில் பூமாலை
நிதா நல்ல தன்னம்பிக்கையுடன் போல்டான பெண் அவங்க அம்மா அட்வைஸ் பண்ணும் போது சூப்பர்... கடைசியில் ப்ரேணேஷ் குடும்பமே நிலாவுக்கு ஆதரவாக வருவது வேற லெவல் அருமையான எதார்த்தமான குடும்ப கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 ❤️ 🧡 🧡 🧡
 
Last edited:
கொஞ்சம் உள்ளம் சிந்திடு

நாயகன் பிரனேஷ் விதுலனுக்கும் நாயகி நிதர்ஷனாக்கும்
பெற்றோர்கள் பார்த்து சம்மதித்து திருமணம் செய்து வைக்கிறாங்க.. திருமணத்திற்கு பின்‌இவங்க வாழ்க்கை எப்படி போகுதுன்றதுதான் கதை .

நிதர்சனா வசதியான வீட்டுப் பெண்..வசதியா இருந்தாலும் ரொம்ப பொறுமையான குணம் கொண்டவள்..தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட‌பெண்.. கல்யாணம் ஆன புதுசுல எல்லா பொண்ணுங்களும் சந்திக்க வேண்டிய கொடுமைகளை தான் இவளும் சந்திக்கிறா.. நாத்தனார் கொடுமை,
மாமியார் திட்டு , கணவனின் பாராமுகம்னு அவ வாழ்க்கையே இப்படி தான் போகுது..கண்ணீர் சிந்தினாலும் காலப்போக்கில் அவளுடைய அன்பால அவ மாமியார் நாத்தனார் கூட திருந்தி அவகிட்ட‌மன்னிப்பு கேட்டு அவளுக்கு ஆதரவாக இருக்காங்க..ஆனா அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அவள் கணவன்???


பிரனேஷ்க்கும் நிதர்சனாக்கும் அவளுடைய அப்பா ஒரே பொண்ணுண்ணு ரொம்ப விமரிசையாக கல்யாணம் பண்ணுறாரு...அவ தன்னைவிட வசதியானவன்ற இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்னால அவமேல வெறுப்பாமாறிடுறான் பிரனேஷ்..நிதர்ஷனாவோட கேரக்டருக்கு அப்படியே அப்போஸிட் கேரக்டர்..சுயபுத்தி இல்லாம அடுத்தவங்க பேச்சை கேட்குறது ஆணவம் ஈகோயிஸ்ட் தன்னை மட்டுமே எல்லாரும் உயர்வா பேசணும்னு நினைக்கிற குணம் . மனைவியை மதிக்கிறது இல்ல..அவளை கேவலமா பேசுறது, அவ உணர்வுகளை புரிஞ்சிகிறது இல்லை ... தன்னோட சுயநலத்துக்காக என்ன வேணா பண்றதுன்னு எல்லா எதிர்மறையான குணத்துக்கு சொந்தக்காரன்... யப்பா இவன்லாம் ஒரு‌மனுசனா , ஆனா இப்ப உள்ள ஆம்பளைங்க பெரும்பாலும் இப்படிதான் இருக்காங்க 😒😒😒.. இவனை திட்டி திட்டி வாய்தான் வலிச்சது 😬😬😬
நல்லா போக வேண்டிய தன்னுடைய வாழ்க்கையை தானே தலையில் மண்ணை அள்ளி கொட்டின மாதிரி அவனே அவனோட ஈகோனால மாத்திக்கிட்டான்..அந்த ஈகோனால நிதர்சனா பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல.. கிளியை வளர்த்து பூனைகையில கொடுத்தாங்கன்ற மாதிரி தான் நிதர்சனா படும் கஷ்டங்கள்..😒


தன்னுடைய திருமண வாழ்க்கைக்காக அவனுக்கு சான்ஸ் கொடுக்குறா , ஆனாலும் பிரனேஷ் அவளை வார்த்தைகளால் காயப்படுத்திட்டுதான் இருக்கான்.. பொறுமையான கடல் கூட சீற்றம் கொள்ளும் போது சுனாமி வர்ர மாதிரி இவன்மேல இருக்க உச்சகட்ட வெறுப்பு அதிகமாகி ஒரு கட்டத்தில் அவளே பர்ஸ்ட் (burst ) ஆகிட்டா..அவனை‌காயப்படுத்துற நிலைக்கு அவளை தள்ளியது வேற யாருமில்லை பிரனேஷ்தான்..அப்போதான் அவனுடைய தவறு புரிந்து திருந்தி அவகிட்ட தனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க சொல்லி கெஞ்சுறான் ..நிதர்சனா வாய்ப்பு கொடுத்தாலா ? பிரனேஷ் எப்படி தன் தவறை புரிந்துகொண்டான் விடை கதையில் வாசிச்சு தெரிஞ்சுக்கலாம்..

நிதர்சனாவின் பெற்றோர்கள் ரொம்ப அருமையான வங்க..அவளுக்கு எந்த சூழலிலும் துணை நின்னாங்க.. முக்கியமான நேரத்தில் அவளுடைய‌அம்மாவின் அறிவுரைகள் அவளை சரியான வழியில் நடத்தியது..

அம்பிகா வழக்கம் போல எல்லா மாமியார் போலத்தான்..ஆனா தன்னுடைய அன்பால நிதா அவங்களை மாத்தினா..எந்த அளவுக்குன்னா அவளுக்கு ஆதரவாக தன்னுடைய சொந்த பையனையே ஒதுக்கி வைக்கிற அளவுக்கு..!


கணவன் மனைவி உறவுன்றது வாழ்நாள் இறுதிவரை வரக்கூடியது..ஒருத்தவங்களுடைய ஈகோன்னால அவங்க வாழ்க்கை எவ்வளவு மோசமா மாறுதுன்றத ஆசிரியர் சரியா காட்டி இருக்காங்க..!!


கதை ரொம்ப நல்லா இருந்தது.. ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
Last edited:
Top