ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 23- ஓய்வதில்லை காதல் மழை!

#ஓய்வதில்லை_காதல்_மழை_விமர்சனம்


இந்த காலகட்டத்திற்க்கு ஏற்ப எதார்த்தமான கதைகளம்❤❤


பருவவயதில் வரும் காதல் இயல்பானது ஆனால் அந்த வயதிலேயே திருமணம்? படிக்கும் வயதில் திருமணம் செய்து இரண்டு வீட்டாரின் கோபத்தை சம்பாதித்து அதனால் வரும் விளைவுகளை சொல்லுது கதை ❤❤❤


காதல், திருமணம் அதன் விளைவாக வரும் உயிர் அதர்வா 💙 பதினொரு வயது வரை தாய் ஈழைநிதி அதர்வாவின் தந்தையின் பெயரைகூட சொல்லாமல் வளர்க்கிறாள் 🥺
அதர்வா தன் தந்தையை கண்டுபிடித்தானா?
பிரிந்த காதலர்கள் ஒன்றிணைந்தார்களா? என்பது முற்பாதி கதை ❤


விவாகரத்து ரொம்பவே கொடுமையானது அதனால் பாதிக்கப்படைவது பிள்ளைகள்.


கட்டியவன் கயவனாக இருந்தால் விவாகரத்து என்பது ஏற்ப்புடையது ஆனால் இங்கு செம்பரிதி மற்றும் ஈழநிதியின் சூழ்நிலை, பெற்றவர்கள் மற்றும் வயது பிரிவுக்கு காரணம் ஆகிவிடுகிறது😥😥


அதர்வா 💙செம்பா முதல் சந்திப்பே அழகு.
தந்தை யாரென்று அரியாமல் செம்பாவிடம் அப்பாவை கண்டுபிடிச்சு கொடுங்க அங்கிள் னு சொன்னது எல்லாம் கொடுமை 😭😭


தந்தையின் பெயர் கூட தெரியாமல் அப்பு படும் வேதனை ஆகட்டும், நீதிமன்றத்தில் ஏன் எதற்கு என்று அறியாமல் தனித்து இருந்தது ஆகட்டும், அப்பாவை அறிந்தபின் அவன் வீட்டில் இருந்து சென்றது ஆகட்டும் அப்பப்பா கொடுமையின் உச்சம் 😭😭😭


முதல் பாதி முழுக்க அதர்வா அலை 💙 அவனின் தனிமை, தேடல் ,அப்பா அம்மாவை சேர்க்க அவன் படும்பாடு 😅மற்றும் அவன் செய்யும் சின்ன சின்ன குறும்புகள்😍, அப்பா மகனின் உரையாடல்கள்😜 இப்படியெல்லாம் அழகு 😍😍


ஈழநிதி செம்பா இரண்டுபேரையும் பார்க்க பாவமா இருக்கு சுத்தி இருக்கவங்க செய்யும் சூழ்ச்சி தெரியாமல் அவங்க வலையில் சிக்கிக்கிறாங்க 😰😰


ஈழநிதி கல்யாணம் பண்ணி அனுபவிச்சது கொடுமை 😟 குழந்தை பிறந்த பிறகு அவனை வளர்க்க அவளின் போராட்டம் எல்லாம் ஒற்றை தாயா படும் கஷ்டத்திற்க்கு எடுத்துகாட்டு❤


செம்பரிதி பெற்ற பிள்ளைகிட்ட அப்பானு சொல்ல முடியாமல் நின்னது ரொம்பவும் கஷ்டமா இருந்தது🙁🙁 அக்காவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்த பதிலடி அருமை 👏👏👏


பருவக்காதல் பக்குவகாதல் இரண்டிலும் இருவிரின் காதலும் நெருக்கமும் அடிதூள் 🙈🙈🙈 கதையில் வரும் உவமைகள் எல்லாம் உங்கள் எழுத்துக்கு வலுசேர்க்கிறது ❤❤


காதல் மழையை ரொம்ப பிடிச்சிருக்கு ❤💙


வாசகர்களின் மனதிலும் ஓயாமல் காதல் மழை பெய்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
ஓய்வதில்லை காதல் மழை நாயகன்: செம்பரிதி
நாயகி: ஈழ நிதி.
நம்ம நாயகன் ரௌவுடி வக்கீலுப்பா அவருபாட்டுக்கு சாப்பிட தூங்கன்னு நிம்மதியா இருக்கார் அவரு நிம்மதியை குலைக்கவே சூறாவளி மாதிரி நம்ம நாயகி பதினோரு வயது பாலகனோட என்ட்ரி ஆகுறாங்க நாயகி கீழே விழுந்தா பரிதி பயபுள்ள இடுப்பை புடுச்சேத்தான் தூங்குவான் நான் கூட என்னடா இவன் அடுத்த வீட்டு நிலத்தில் கை வைக்கிறான்னு பார்த்தேன் பட்டா போட்டு விளைச்சல் முடிச்ச நிலத்தோடு ஓனரே அவன்தான் டால்ஸ் அங்கே வச்சான் பாரு எனக்கு ட்விஸ்ட் அவ்வ்வா🤣🤣🤣🤣🤣....

நாயகன் நாயகி பதின்பருவ காதல்❤️பிரித்துவிடுவார்களோ❤️❤️❤️ என்ற பயத்தில் அவசர அவசரமாக இரண்டு குடும்பத்திற்க்கும் தெரியாமல் திடீர் திருமணம் இரண்டு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு நாங்க உங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுவோம்னு சூர்ய வம்சம் ரேஞ்சுக்கு போய் பசி அரைகுறை படிப்பில் அடிபட்டு நாயகன் வீட்டிற்கு வருகிறார்கள் அங்கே சூனியக்கார கும்பல்கள் இருவரையும் பிரித்து நாயகி கர்மத்தை நாயகனுக்கு தெரியாமல் குழந்தை பெற்று டைவர்ஸ் வாங்க பதினோரு வயது பாலகனோட என்ட்ரி பையனுக்கு அப்பா யார்னு தெரியும் தேடினான் அப்பன் கிட்டயே அப்பாவை கண்டு பிடிச்சி தர சொல்லும் இடம் மிகவும் கஷ்டமான விஷயம்....பிரிவு சட்டென தீர்மானிக்கின்ற ஓம் அதில் குழந்தைகளின் மனநிலையை எழுத்தாளர் செதுக்கி உள்ளார்...இவர்கள் இருவரும் சேர்ந்தவரா சூனியக்கும்பல் நிலை என்ன என்பதை நோக்கி கதை நகர்கிறது.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 💐 💐 ❤️ ❤️ 🧡 🧡 🧡
 
#ஓய்வதில்லை_காதல்_அலை….
#கௌரிஸ்ரிவ்யூ….

காதல் தப்பு இல்ல….ஆனா அதை எப்படி எடுத்துட்டு போய் கல்யாணம் செய்து காதலோடு ஒரு வாழ்வு வாழ நிறைய பொறுமை வேணும்….

அப்ப தான் வாழ்வும் நல்லா இருக்கும்…..

ஆன இங்க செம்பா - நிதுக்கும் அந்த பொறுமையும் இல்ல….அந்த வயதுக்கே உள்ள பக்குவமும் இல்ல….

பள்ளி படிப்பின் போதே காதல்…..

கல்லூரி முடிக்க முதல் கல்யாணம்…..

நிதி ஓட பெற்றோர் விலகி போக….

படிப்பும் இல்ல, பெற்றோர் உம் விலகி கொள்ள….நிதியின் நிலை????

காதலனை தவிர யாரை அறியா பாவை அனுபவிச்ச துன்பம் எல்லாம் அறியாமையால் தானே……

மகனுக்கு கல்யாணம் ஆகும் வரை அவன் சொன்ன பேச்சை கேட்கலைனா விட்டு தள்ளும் பெற்றோர்…..

இதே கல்யாணத்திற்கு பின் அவன் அப்படி செய்த….ஏதோ தாங்கள் பெரும் அவமானம் அடைந்ததா நம்பி கொண்டு…..

வரும் பெண்களை துன்ப படுத்துகின்றனர்…..

இதுவே இங்கேயும் நிதி நிலைமை ஆகிறது…..

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியா பெண்ணவளும் அவன் வாழ்க்கை விட்டு செல்ல….

அவள் வயிற்லோ கரு…..

பெற்றோர் துணை இல்லாமல், கட்டினவனை கெஞ்ச பிடிக்காமல், படிப்பும் இல்லாமல் நிதியின் நிலை??????

குழந்தை பெற்று, அதையும் வளர்த்து தன்னையும் வளர்த்து கொண்டவளுக்கு அன்று இல்லாத நிதானம் இன்று…..

தகப்பன் பேர் தெரியாமலே வளரும் அப்பு…..

எங்கே தந்தையை பற்றி கேட்டால் அம்மா காயப்படுவாளோனு அமைதியா இருக்கும் பையனின் பக்குவம்…..

குழந்தை கருவில் இருந்ததும் தெரியாமல், பையன் இருப்பது அறியாமல் இருக்கும் செம்பாவின் நிலை…..

அதை அறியும் சமயம்….. அப்புவின் முழு வெறுப்புக்கு ஆளாகி இருக்கும் நிலை தெரிகையில் செம்பாவின் துன்பம்…..

போதும் என விலகி நின்ற காதல்…. அப்புவின் வடிவில் செம்பா - நிதியை சேர்க்க…..

மகிழ்ச்சியாக போய் கொண்டு இருக்கும் வாழ்க்கையில்….

திரும்ப பெற்றோர்களால் வரும் பிரச்சனை…..

ரெண்டு பக்க பெற்றோரும் ஓயாது பிரச்சனைகளை கொடுத்து கொண்டு இருந்தாலும்…..

இறுதியில்…செம்பா - நிதியின் காதல் அலை ஓயாமல் அடித்து….

ஒய்யாரமாய் வீற்றுருக்கறது இருவரின் மனதிலும்…..

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர்……

போட்டியில் வெ
ற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
 
ஓய்வதில்லை காதல் மழை

செம்பருத்தி நம் நாயகன். ஈழந்தி நம் நாயகி. 2 பேரும் படிக்குற வயசுல லவ்ல விழுந்து ஒரு கட்டாயத்துல கல்யாணம் பண்ணிக்கிறாங்க. 2 குடும்பமும் அவங்கள ஒதுக்கி வைக்குது.

செம்பருத்தி அப்பா மட்டும் அவங்கள கூட்டிட்டு வந்துடுறாங்க அங்க நித்தியா குடும்பமே அவ்வளவு கஷ்டம் படுத்துறாங்க. 2பேரையும் பிரிக்க அவ்வளவு சதி வேலை பண்றாங்க 2 குடும்பமும்.

வயசு பக்குவம் இல்லாததுனால 2 பேரையும் அவங்க குடும்பம் பிரிச்சுடுறாங்க.

நிதி வயத்துல அதர்வா இருக்குறது தெரியாமல் பரிதி அவங்கள விட்டு பிரிஞ்சு இருக்கான்.

அதர்வா அப்பா பாசம் இல்லாமல் வளருறான். அப்பா யாருனு அவனுடைய தேடல் மனசுக்குள்ள அதிகமா இருக்கு. ஒரு சூழ்நிலையில் அதர்வா பரிதியை பார்க்குறான்.

பரிதிக்கும் தனக்கு ஒரு பையன் இருக்குறது தெரியுது. அதர்வா அப்பா அம்மா 2 பேரும் சேர்ந்து இருக்கணும்னு அவ்வளவு ஆசை படுறான்.

பையனுக்காக 2 பேரும் குடும்பத்தை எதிர்த்து வாழ முடிவு பண்றாங்க. அவங்கள ஒன்னா வாழ விட்டாங்களா அதர்வா ஏங்குன அப்பா பாசம் அவனுக்கு கிடைச்சுதானு அழகா சூப்பரா சொல்லி இருக்கீங்க 😍😍😍

அதர்வா அப்பா யாருனு தெரியாமல் பரிதி கிட்ட போய் என் அப்பாவை கண்டு பிடிச்சி தாங்க அங்கிள்னு சொல்லும் போது இந்த வயசுல தனிமையை தேடி போகும் போது எல்லாம் அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு

அப்பா அம்மா சேர்ந்து இல்லனா பசங்க எவ்வளவு பாதிக்க படுவாங்கனு அழகா சொல்லி இருக்கீங்க 👌👌👌
நித்தி செம்பா லவ் அவ்வளவு அழகா இருந்துச்சு. அவ்வளவு லவ் இருந்தும் 2 பேரும் பிரிஞ்சு இருந்தது கஷ்டமா இருந்துச்சு.

பெத்தவங்களோட ஈகோவால அநியாயமா 3 பேரையும் பிரிச்சு வைச்சுட்டாங்க.

இளவரசு & கோ காந்திமதி இதுங்க தான் இந்த கதையோட வில்லனுங்க இதுங்கள சுத்தமா பிடிக்கவே இல்ல 😡😡😡😡

கடைசியில எங்க பிரிச்சு விட்டுருவாங்களோனு இருந்துச்சு. அப்படி இருக்காதுனு மனசு சொன்னாலும் படிக்கும் போது அவ்வளவு பீல் ஆச்சு.

நித்தி செம்பா கடைசியில் அவங்க வைச்ச நம்பிக்கை ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சி அவங்க பெத்தவங்க கிட்ட பேசிட்டு வந்தது அவ்வளவு சூப்பரா இருந்துச்சு 🫶🫶🫶

கடைசியில் அதர்வாவுக்கு ஒரு தங்கச்சி பாப்பாவை கொண்டு வந்து இருந்தா இன்னும் மீ ஹாப்பி அண்ணாச்சி தான் 😍🥰🥰😜😜

ஒரு எபிலாக் கொடுத்து இருந்தா நல்லா இருக்கும் ரைட்டர் அவர்களே 😉😉

ஸ்டோரி படிக்க சூப்பரா இன்ட்ரெஸ்ட் ஆஹ் இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top