ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 25- நெஞ்சிலாடும் நினைவலைகள்

pommu

Administrator
Staff member
APV 25- நெஞ்சிலாடும் நினைவலைகள்
 
#நெஞ்சிலாடும்_நினைவலைகள்

நாயகன் : விக்ரமாதித்தன்

நாயகி : ப்ரியம்வதா

மருத்துவ மாணவியான ரியா,அதே மருத்துவக் கல்லூரியில படிக்கிற அவ அக்கா ப்ரீத்திகா, ரித்துவோட நண்பர்களான பரணி, சோமு, சுமதி, அபிநயா, ரேணு, கௌதம், சுவாதி இவங்க ஒன்பது பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா போன இடத்தில பரணி ஏரியில மூழ்கி இற*ந்திடுறான்.அப்போ அவன் கூட இருந்த ரியாவுக்கு ஆக்*ஸிடெண்ட் ஆகி கோ*மாவுக்கு போய் உயிர் பிழைச்சு வர்றா. ஆனா அந்த ஒரு வருஷ நினைவுகள் அவளுக்கு மறந்து போயிடுது. இந்த நிலைமையில அவளுக்கு வரன் பாக்குறாங்க வீட்ல. மூணு வரன்கள் தகைஞ்சு வந்த நேரத்தில அவளையும், பரணியையும் பத்தி அவதூறா கடிதமும், ஃபோட்டோவும் அவங்களுக்கு கெடைக்கவே மூணு சம்பந்தமும் கை நழுவி போகுது. இந்த நேரத்தில டிடெக்ட்டிவ்வா இருக்கிற விக்ரமுக்கு பொண்ணு கேக்குறாங்க ரியாவை. விக்ரமோட கொலீக் மற்றும் உற்ற நண்பனான பிரபு ரியாவுக்கு உடன்பிறவா அண்ணன் மாதிரி. அவன் மூலமா ரியாவைப் பத்தின எல்லா விஷயமும் விக்ரம் காதுக்கு வருது. அதுக்கு முன்னே கல்யாணத்தில ஆர்வமில்லாம இருக்கிற விக்ரமுக்கு ரியாவோட உதவும் மனப்பான்மையும், தைரிய குணமும் ரொம்ப பிடிச்சு போகவே அவளை கல்யாணம் பண்ணிக்குறான். பரணியோட மர*ணம் கொ*லையா, தற்*கொ*லையான்னு கண்டுபிடிச்சு,பரணியோட இற*ப்புக்கும்,ரியாவோட நிலைமைக்கும் காரணமானவங்களை சட்டத்துக்கு முன்னால நிறுத்துறான். அதை யாரு பண்ணியிருப்பான்னு கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க தோழிகளே👍👍👍

இதில ரியாவோட குணத்தை பத்தி சொல்லியே ஆகணும். தான் இருக்கிற இடத்தை கலகலப்பா வைச்சிட்டு எதையுமே தைரியமா ஃபேஸ் பண்ணி, முகத்துக்கு நேரா எதையுமே சொல்ற தைரியமுள்ள, அடுத்தவங்களை காயப்படுத்தாத, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அடுத்தவங்களுக்கு உதவி பண்ற ரொம்ப ஸ்வீட்டான பொண்ணு. அவளை எந்த நிலையிலேயும் வருத்தப்படுத்தாம, அவளை சந்தேகப்படாம அவளோட கஷ்டத்தை தன்னோட கஷ்டமா நினைச்சு அதில இருந்து வெளிய கொண்டு வர போராடுற விக்ரம் ரியாவுக்கு கொஞ்சமும் சளைச்சவனில்லை. ரியா தளர்ந்து போற ஒவ்வொரு நேரமும் தன் காதலால, அரவணைப்பால அவளுக்கு மிகப்பெரிய சப்போர்ட் குடுத்து அவளோட பயத்தில இருந்தும், துன்பத்தில இருந்தும் வெளிய கொண்டு வர்ற விக்ரம் ஒரு பக்கா ஹீரோ மெட்டீரியல். இதில வர்ற எல்லா கதாபாத்திரங்களுமே ரியாவை ஒரு குழந்தை மாதிரி நடத்துறத பாக்கிறப்போ அவ்வளவு அருமையா இருக்கு.😍😍😍

பரணி-ரியா-சோமு இவங்களோட பாண்டிங் ரொம்ப சூப்பர். அதை விக்ரமும், சோமுவோட மனைவி கீதாவும் உணர்ந்து அங்கீகரிச்சது அதை விட அருமை. ரியா மற்றும் விக்ரமோட அம்மா வசு இவங்க பாண்டிங் செம. தோழியைப் போல மாமியார் கெடைக்குறது வரம். கணடிப்பான ஆளா இருந்தாலும் விக்ரமோட அப்பா கல்யாண சுந்தரம் அவரோட பாசத்தை வெளிய கொட்டலைனாலும் நல்லா உணர வைக்குறாரு. மகளுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு அவளை மூலைல உக்கார வைக்காம அவளுக்கு அதை விட்டு வெளியே வர்றதுக்கு உதவி செஞ்சு அதே நேரத்தில அவளோட உயிருக்கு இருக்கிற அச்சுறுத்தல் தெரிஞ்சு பாதுகாக்கிற சிறந்த பெற்றோர் வேதாச்சலம், வாசவி. ரொம்ப பாசமான அதே சமயம் கொஞ்சம் வெகுளித்தனமான அக்கா ரித்து அவளோட காதல் கணவன் ஆகாஷ்.ரியாவுக்கு தன்னோட நட்புனாலதான் பிரச்சனைன்னு தெரிய வரும் போது ரித்து துடிக்கிறதும், ஆகாஷோட புரிந்துணர்வோடு கூடிய ஆறுதலும் ரொம்ப அருமை.😍😍😍

பிரபு கூடப்பிறக்காத அண்ணனா ரியாவுக்கும், உற்ற நண்பனா விக்ரமுக்கும் தோள் குடுக்கிற ஒரு அருமையான மனிதன். ரியாவோட உற்ற தோழி ரம்யாவுக்கு ரியாவை மீட்டெடுத்ததில பெரிய பங்கு இருக்கு. ரியா, ரம்யா ரெண்டு பேருக்குமே ரெண்டு விதமான பிரச்சனைகள். ரெண்டு பேரும் நட்புங்குற ஒற்றை படகுல அதை கடந்து வர்றது அருமை. பரணியோட அம்மா திலகவதி பரணியோட குணம் எங்கிருந்து வந்திச்சுன்னு அவங்களை பாத்தா புரிஞ்சுக்கலாம். ஆனா ஒரு கண்மூடித்தனமான, மூர்க்கமான அவசியமே இல்லாத கோபத்தால நல்லவனான பரணி இல்லாம ஆகிட்டான். அது ரொம்ப வருத்தம். 🥺🥺

நண்பர்கள்னு நினைச்சு பழகினவங்களே துரோகிகளா மாறுறது அதிர்ச்சியா இருக்கு. புரிதல் இல்லாம தனக்குத்தான் எல்லாமும் கெடைக்கணும் தான் நினைச்சது நடக்கணும்னு அகங்காரத்தில ஒரு உயிர் போயிடுச்சு. ஆனா அதுக்கப்புறமும் அது தெரிஞ்ச ரியா அவ நினைவுகளை மீட்டெடுக்கக்கூடாதுன்னு நினைச்சு அவங்க செய்த செயல்களும் அவ கல்யாணம் நடக்கவே கூடாதுன்னு வன்மமா செஞ்ச செயல்களும் அதை செஞ்சவங்க யாருன்னு தெரிய வரும் போதும் பயங்கர ஷாக் குடுக்குது நமக்கு. 😱😱 அதிலேயும் அந்த குற்றவாளியோட பெற்றோர் வந்து ரியாவை அந்த குற்றவாளியை மன்னிச்சு அவங்ககூட பேசணும்னு சொல்லும் போது அவ்வளவு கோபம் வந்தது எனக்கு. வளர்க்கத் தெரியாம வளர்த்து இப்படி அடுத்த குடும்பத்து பிள்ளைங்க வாழ்க்கையை கெடுத்த தன் புள்ளையை மன்னிச்சு கேஸை வாபஸ் வாங்கணும்னு கேக்குறதுக்கு எப்படி மனசு வருது. பாதிக்கப்பட்டவங்க மனுஷங்க இல்லையா? மனசில வன்மம் வைச்சுக்கிட்டு ஒரு தப்பு பண்ணி அதை உணராம பிடிபடுற வரை தப்பு பண்ணின அந்த குற்றவாளிக்கு பரிஞ்சு பேசின மனசாட்சி கெட்ட மனுஷங்க அந்த குற்றவாளியை பெத்தவங்க😡😡😡

இதில ரைட்டரை பாராட்டியே ஆகணும்.மொதல்ல இருந்தே பாக்குறவங்க எல்லார் மேலயும் நம்மளை சந்தேகப்பட வைச்சுக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்தில ஒரு ஆளை நாம உறுதியா நம்புவோம் இவங்கதான் பண்ணியிருக்காங்கன்னு ஆனா அது அப்படியே வேற ட்விஸ்ட்டுக்கு கொண்டு போய் நம்மளை அதிர்ச்சியடைய வைக்குது. கடைசி வரை விறுவிறுப்பா கொண்டு போயிருக்காங்க. இடையிடையே குடும்ப பாசம், விக்ரம் ரியாவோட விரசமில்லாத ரொமான்ஸுன்னு ரொம்ப அழகா கதையை நகர்த்தியிருக்காங்க. இந்த கதையோட நினைவுகள் எங்கள் நெஞ்சிலும் ஆடும் எப்போதும். போட்டியில வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.❤️❤️❤️❤️❤️
 
நெஞ்சிலாடும் நினைவலைகள்
நாயகன்: விக்ரமாதித்தன் சீஃப் டிடெக்டிவ்
நாயகி: ப்ரியம்வதா மெடிக்கல் ஸ்டூடெண்ட்
ப்ரியம்வதா அவங்க அக்கா ப்ரீத்திகாவை விட நான்கு வயது சிறியவள் வீட்டுக்கு செல்லப்பெண்....
ப்ரீத்திகா அவங்க நண்பர்கள் பரணி, சோமு, அபிநயா,சமாதி,ரேணு, கௌதம்,சுவாதி இவங்களோட நம்ம நாயகி சேர்த்து ஒன்பது பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா போறாங்க....
நம்ம நாயகி இவர்களைவிட வயதில் சிறியவள் என்பதால் நல்லா இயற்க்கையை ரசிச்சு எல்லாரோட உம் கலகலப்பாக சந்தோஷமா அந்த சுற்றுலா தளத்தை என்ஜாய் பண்ணுராங்க....
பரணி நல்ல கலகலப்பான அன்பான ஜெனியூன் பர்ஸன் அவனை அவங்க தோழிகள் அபிநயாவும் சுமதியும் ஒரு தலையா காதலிக்கிறாங்க....ஆனா பரணி நாயகியோட அக்கா ப்ரீத்திகாவை விரும்புறார்...அதை நாயகியிடம் சொல்லி தன் காதலை ப்ரப்போஸ் பண்ண போவதாக சொல்லி நாயகி தன் அக்கா மாமா மகன் ஆகாஷை ஒன்பது வருடங்களாக விரும்புவதாகவும் அவர்களுக்கு பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவாகியுள்ளதையும் பற்றி சொல்கிறார்....இதை பார்த்த அபிநயா தவறான புரிதலால் பரணி நம் நாயகி ரிதாவை விரும்புவதாக சுமதியிடம் கூற அவள் கோவத்தில் ரிதாவை அடிக்க பார்க்கிறாள் தடுக்க நினைக்கும் பயணியை ஆவேசமாக தாக்க பரணி சுமதியை கட்டுப்படுத்த முடியாமல் நண்பர்களை அழைக்க சொல்ல பதட்டத்தில் ஓடும் நாயகி விபத்தில் சிக்கி சுய நினைவை இழக்கிறார்...
விபத்தில் ஒரு வருட நினைவு இழந்து மீண்ட ரிதுவுக்கு பழைய நினைவு திரும்பியதா பரணி சுமதியின் பிரச்சினை என்ன ஆனது என்பதை கதையில் எழுத்தாளர் விறுவிறுப்பான முறையில் பல திருப்பங்கள் உடன் சொல்லி இருக்கிறார்... இந்த சுற்றுலா சென்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை நிகழ்வினை சில்வர் ஐ சீனப் டிடெக்டிவ் ஆபிசர் நம் நாயகன் விக்ரம் கண்டுபிடித்தாரா அது தற்கொலையா கொலையா என்பதை விக்ரம் ரிது காதல் கலந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 💐 💐 💐 💐
 
நெஞ்சிலாடும் நினைவலைகள்

விக்ரம் நம் நாயகன். பிரியம்வதா நம்மளோட நாயகி.

பிரியம்வதா மெடிக்கல் காலேஜ் ஸ்டுடென்ட். தன்னோட அக்கா பிரித்திகா படிக்கிற காலேஜ்ல சேருறா. முதல் நாள் பிரித்திகா பிரண்ட்ஸ் எல்லாம் ரேகிங் பண்ணுறாங்க அவ யாருனு தெரியாமல்.

பிரித்திகா தங்கச்சினு தெரிஞ்சதும் எல்லாரும் பிரண்ட் ஆகுறாங்க. பரணி, சோமு இவங்க எல்லாம். பிரித்திகாவை விட அவ தங்கச்சி கூட எல்லாரும் கிளோஸ் ஆகுறாங்க.

அது அவங்க கூட படிக்குற அபி, சுமதி இவங்களுக்கு எல்லாம் பிடிக்காமல் அவளை தப்பா பேசுறாங்க. அபி, சுமதி இவங்க ரெண்டு பேரும் பரணியை ஒரு தலையா காதலிக்குறாங்க.

ஆனால் பரணிக்கு வேற ஒருத்தர் மேல லவ். பிரித்திகா பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டூர் போக பிளான் பண்றாங்க. அதுக்கு பிரியம்வதாவை எல்லாரும் கம்பெல் பண்ணி கூட்டிட்டு போறாங்க.

அங்க யாரும் எதிர்பார்க்காமல் பரணி மரணம் அடைகிறான். பிரியம்வதாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஒரு வருஷம் நடந்த எல்லாத்தையும் மறந்துடுறா.

விக்ரம் வதனாக்கு பார்க்கும் வரன். வதனாக்கு யாருனு தெரியாதவங்க மூலமாக அவளுக்கு கல்யாணம் பேசி இருக்க வீட்டுக்கு எல்லாம் அவளை பத்தி தப்பு தப்பா போட்டோ, லெட்டர் போகுது.

அவளை கொலை பண்ணவும் ட்ரை பண்றாங்க. விக்ரம் அது எல்லாம் மீறி அவளை கல்யாணம் பண்ணி பிரியம்வதா சுத்தி நடக்குறதை கண்டு பிடிக்குறது தான் கதை.

கதை ஃபுல்லா ஒரே சஸ்பென்ஸ் ஆஹ் மர்மான கொண்டு போய் ஆர்வமா படிக்க வைச்சீங்க. 👌👌👌👌

பரணி பாவம் அவனுக்கு இப்படி நடந்து இருக்க வேண்டாம்.

பரணி பச்சை சட்டை குட்டி சாத்தான் இவங்க பாண்டிங் சூப்பரா இருந்துச்சு.

ரம்யா, வது இவங்க பிரண்ட்ஷிப் சூப்பரா இருந்துச்சு.

விக்ரம், பிரபு 2 பேரும் எல்லாத்தையும் கண்டு பிடிச்சி தப்பு பண்ணினவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தது நிறைவாக இருந்திச்சு.

விக்ரம் பிரியம்வதா லவ் அவ்வளவு அழகா இருந்துச்சு. அவ மேல அவ்வளவு நம்பிக்கை லவ் வைச்சு அவளை சுத்தி இருக்குற மர்மத்தை வெளிய கொண்டு வரதுனு விக்ரம் மனசுல நின்னுட்டான் 😍😍😍

ஸ்டோரி படிக்க நல்லா சுவாரஸ்யமா திரில்லிங் ஆஹ் சூப்பரா இருந்துச்சு 👏👏👏👏

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
நெஞ்சிலாடும் நினைவலைகள்
A gripping story that perfectly mixes romance and mystery. The love between விக்ரமாதித்தன் and ப்ரியம்வதா is sweet, mature, and full of warmth. Their understanding and emotional bond make their moments truly enjoyable. ❤️
Every character is well shaped, especially the friends and family, adding depth to the story. The mystery keeps the pace engaging, and the emotional twists hold your interest till the end.
 
Top