ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 26- ஒரே ஒரு வானம்

#ஒரே_ஒரு_வானம்_விமர்சனம்

ஒரே ஒரு வானத்தின் கீழ் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் நான்கு தொடர்வண்டி சினேகிதிகளின் கதை ❤

பிரபா, மாதவி, சிந்து மற்றும் இரத்தினா நால்வரின் வாழ்வின் பிரச்சனைகளுக்கான இளைப்பாறுதலா அமையுது இந்த பயணம் ❤

கதையின் பயணம் முதலில் இருந்து இறுதிவரை சுவாரஸ்யமாக இருந்தது சிறப்பு 👌

குடும்ப சுமையை மொத்தமாக சுமக்கும் பிரபா தனக்கான வாழ்க்கையை ஏற்கமுடியாமல் தவிப்பதும் அதற்கான காரணமும் எதார்த்தமானதாக இருந்தது.

மாதவி வாழ்வில் மாமியாரே எதிரினாலும் கணவனின் துணை இல்லாமல் என்ன செய்ய முடியும் அவளால். கிடைத்த சந்தர்ப்பத்தில் திசை மாறிடுவானோனு பயந்தேன் அப்படியில்லாமல் இருந்தது நல்லா இருந்தது.

சிந்து வாழ்க்கையில் கொடுமையின் உச்சம். ரஞ்சனின் பேச்சும் செயலும் சுத்தமா பிடிக்கல😡😡 என்ன கோபம் இருந்தாலும் அவன் அதை இப்படி காட்டி இருக்க வேண்டாம் 😓😓

இரத்தினா ஒற்றை தாயா இருந்து படும் கஷ்டமும். பிள்ளைகளை கருத்தில் கொண்டு பிரிந்து நிற்பதும் புரிஞ்சிக்க கூடியதா இருந்தது 💔

எதார்த்தமான விஷயங்கள் மற்றும் கசப்பான பல உண்மைகளை எளிமையா புரிஞ்சுக்க கூடிய வகையில் சொன்னது நல்லா இருந்தது 👏

இறுதியில் நால்வரின் பயணமும் அவசரமா முடிந்தது போல இருந்தது. சில உணர்வுகளை இன்னும் கொஞ்சம் ஆழமா சொல்லியிருந்தால் இன்னுமே இந்த பயணம் சிறப்படைந்திருக்கும்❤



வாசகர்கள் உங்கள் பயணத்தை இனிமையாக்கி போட்டியில் வெற்றி பெற வைக்க வாழ்த்துக்கள்👍
 
#ஒரே_ஒரு_வானம்….
#கௌரிஸ்ரிவ்யூ….
ரயிலில் சந்தித்து, தோழிகள் ஆகிய பிரபா, மாதவி, ரத்னா & சிந்து பற்றியும், அவங்க வாழ்க்கையும் சொல்லும் இயல்பான கதை🥰🥰🥰🥰🥰🥰
பிரபா…..எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் இந்த கதையில்…..
குடும்பத்தின் தலை மகள்…..மகன் அப்படினா மட்டும் தான்…கூட பிறந்தவர்களை படிக்க வெச்சி, ஆளாக்க முடியுமா என்ன?????
இதோ இந்த மகள் செய்கிறாளே,...”அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவை நியாபக படுத்துகிறாள்…..
தம்பி, தங்களுக்காக ஓடி ஓடி….அவளோ முப்பதுகளில் வந்து நிற்க…..கல்யாணம்?????
காதலனும்…. விட்டு போக…தேவன் அனுப்பிய தேவனா வர மதனையும் ஏற்க மறுக்கறா….
காரணம்?????
ரத்னா…..அடுத்து இவளை பிடிச்சது….பிரபா போல இவளும் தெளிவு…..
கணவனை இழந்து, பெண் பிள்ளையை வைத்து வாழும் பெண்…..
இவளுக்கும் இன்னும் வாழ்க்கை உள்ளதே….அதில் ஆசைகள் இல்லைனாலும்…. அரவணைப்புக்கு ஏங்கும் சின்ன இதயம் கொண்டவள் தானே….
ஏனோ, மனைவி இறந்து கணவன் பெண் பிள்ளையை வைத்து இருந்தால்….உடனே புது மணமகன் ஆகலாம்….
ஆனால் இதுவே மனைவி என்றால்?????
இந்த சமூகம் கட்டமைக்கும் கோட்பாடு தான் எவளோ விந்தை ஆனது?????
அதில் ரத்னாவும் விதிவிலக்கல்ல…..
ரத்னா போலவே…மனைவியை இழந்த கணவன்களும் மகளுக்காக வாழ்கிறார்கள் வேணுவை போலவே…..
மாதவி…..இன்றைய நடுத்தர வர்க்கத்தை, குடும்ப அமைப்பை எடுத்து காட்டுது இவ குடும்பம்…..
பிள்ளைகள் பிறந்துட்டா….. கணவனும், மனைவியுமாக வாழவே கூடாதுனு சொல்லும் மாமியார் சிவகாமி…..
ஆயிரம் சொல்லும் மாமியாரை அட்ஜெஸ்ட் பண்ணி போகும் நாம் தான்…கணவன் ஒரு சொல் சொல்லி விட்டால் முகம் திருப்புகிறோம் அவனிடம்…..
இங்கே மாதவியும் அதே போல தான் செய்கிறாள்…..
சிந்து….நிஜமா இவ மேல கோவம் தான் வருது….அப்படி என்ன????
ஒரு நாள் கூட வாழாத அவளை கல்யாணம் முடிந்த அன்னைக்கு வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறான்….
அவளின் குறையை காட்டி…..
அவள் மறைத்தது தவறு தான்…..அதற்காக….
அம்மா சொன்னாலும் சரி….கணவன் சொன்னாலும் எதற்கும் சரி தானா????
ரஞ்சன் மேல் செம்ம கோவம் தான்…. ஆன வீட்டை எல்லாம் எடுத்து குடி வர தெரிஞ்ச உனக்கு அவளிடம் உண்மையை சொல்லி இருந்தா….
அவளும் ஹேப்பியா இருந்து இருப்பா இல்ல…..
என்னமோ போடா……
கதை நகர்வு, அதை சொன்ன விதம் எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்
ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
 
ஒரே ஒரு வானம் ❤️❤️❤️❤️. கதை விமர்சனங்கள்
தொடர்வண்டி பயணத்தில் பயணிக்கும் நான்கு பெண்களின் கதையை சமூகத்தில் பல பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளையும் அதை அவர்கள் எப்படி எல்லாம் எதிர்த்து போராடுகின்ற ஆண்கள் என்பதையும் எழுத்தாளர் அழகான எழுத்துக்களாக செதுக்கி உள்ளார் 👏👏👏👏.
பிரபா, மாதவி, சிந்து மற்றும் ரத்தினா நாள்வரும் பயணத்தில் பயணிக்கும் பெண்கள் பிரபா குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்தவர் சகோதரசகோதரர்களுக்காக குடும்பச் சுமையை ஏற்றுக்கொண்டு தன் ஆசாபாசங்களை விட்டு குடும்ப பாரத்தை சுமக்கிறார் மதன் அவரை திருமணம் செய்ய விரும்ப ஏற்றுக்கொள்ளாமல் தன் குடும்பத்திற்க்காக வாழ்க்கையை துறக்கிறார்...
மாதவி மாமியார் நீயெல்லாம் என்ன பிறவியோ நீயும் ஒரு பொண்ணு தானே...அவளுக்கும் ஆசாபாசம் உணர்வு இருக்காதா புருஷன் தரவில்லை என்றால் இப்படி தான் பெண்களின் நிலை..
சிந்து அவளோட கணவன் ரஞ்சன் புரிந்து கொள்ளாமல் அவளை வார்த்தையால் வதைக்கிறான்
ரத்தினா ஒற்றை ஆளாக பெண் பிள்ளை வளர்ப்பு எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறது என்பதற்கு இவள் கதை உதாரணமாக இருக்கிறது....
பெண்கள் குடும்ப கட்டமைப்பில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்கள் எவ்வளவு பிரச்சினைகளை சமாளித்து வெற்றி பெறுகின்றனர் என்பதை எதார்த்தமான முறையில் எழுத்தாளர் சொல்லி இருக்காங்க.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 💐 💐 💐 💐 ❤️ ❤️
 
ஒரே ஒரு வானம் !!


ஒரே ஒரு வானத்தின் கீழ் வாழ்க்கையை எதிர்நோக்கும் எத்தனையோ மக்களுக்கு மத்தியில் தொடர்வண்டியில் சந்தித்து கொள்ளும் நான்கு சிநேகிதிகளின் எதார்த்தமான வாழ்க்கை பயணங்கள் தான் இந்த கதை ..!!


நான்கு சிநேகிதிகளான மாதவி பிரபா ரத்னா சிந்துஜா இவங்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளாக அமையுது இந்த பயணம்..


மாதவி -இவளது கதை இன்றைய நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை போன்றே.. இரண்டு குழந்தைங்க பிறந்தவுடன் கணவனுடன் சேரக்கூடாது அவளுக்கு தன் பையன் சப்போர்ட்டா இருக்க கூடாதுனு நினைக்கிற மாமியார் சிவகாமி.. அம்மா பேச்சை மீற முடியாமல் ஒரே வீட்டில் இருந்தும் கணவன் மனைவி பிரிவு...மாமியாரே வில்லியாகிபோன போதிலும் கணவன் சப்போர்ட் இல்லாமல் மாதவி என்ன பண்ண முடியும்? இதனால் அவளும் கணவன் கிட்ட மூஞ்சிய திருப்பிட்டு போறா .. தன்னுடைய அம்மா தன் விசயங்களை வேற குடும்பத்து கிட்ட சொல்லி தன் மனைவியை வில்லியா மாத்தும்போதுதான் தன்‌மனைவியின் அருமை சங்கருக்கு புரியுது..தவறு செய்து விடுவானோனு பயந்தேன் பட் தவறு செய்ய வழி இருந்தும் தன் மனைவிக்காக தவறு செய்யாமல் அவகிட்ட சங்கர் பேசின விதம் அருமை!!.தன் கணவரை புரிந்துகொண்ட மாதவியின் வாழ்க்கை 👍


பிரபா - குடும்பத்தின் தலைமகள்..சின்ன வயசுல இருந்தே குடும்பத்து பாரத்தை தன் தோள்மேல் சுமக்கற பொண்ணு ..இதனால 30 வயசு வர‌அவளுக்கு கல்யாணம் முடியல..இவளை காதலிக்கும் மதன் இவளைவிட இரண்டு வயது சிறியவன்..அவனின் காதலை ஏற்க முடியாது தவிக்கும் பிரபா அதற்கு கூறும் காரணங்களும் எதார்த்தமானவை..ஆனால் மதனின் பிரபா மீதான காதலும் அதற்காக அவன் எடுத்த முயற்சிகள் எல்லாமே சூப்பர்...! இறுதியில் மதனின் காதல் கைகூடியது!!!! மற்றவர்களுக்கு பிரபா கூறும் அறிவுரைகள் அருமை..


ரத்னா - கணவனை இழந்து ஒற்றை தாயாய் பெண் பிள்ளையை வளர்ப்பவள்..பிரபாவை போன்று நல்ல தெளிவு அறிவுரை கூறுவதில்..ஆனால் இவளுக்கும் வாழ வேண்டிய வயதுதான அவளுக்கும் தான் சாய ஒரு தோள் தேவைப்படும்தான..ஆனால் இன்றைய சமூகம் விதவை மறுமணம் செஞ்சா உடனே ஏற்றுக்கொள்ளாது.. ஆண்கள் மறுமணம் செய்துகொள்ளுற காலத்துல தன் மகளுக்காக ஒற்றை தகப்பனாய் போராடும் வேணுகோபால்.. இருவருக்கும் பிடித்து இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்காக‌வேண்டி இருவரும் சேராமல் இருந்தது அவர்களின் நிலை உணரக்கூடியாத இருந்தது..


சிந்துஜா - இவளுடைய கதைதான் ரொம்ப பாவம் 😒சின்ன வயசுல இவ உடம்புல ஏற்பட்ட காயத்தை மறைத்து அவளை கல்யாணம் பண்ணி வைச்சிடுறாங்க அவங்க அம்மா ..ஆனால் அது தெரியவரும் போது இவள் கணவன் மனோரஞ்சன் இவள் துரோகம் செஞ்சுட்டதா நினைச்சு அவளை விட்டு விலகிடுறான்.. எதிர்பாரத விதமா அவ வேலை பார்க்கிற இடத்துலதான் அவனும் வேலைக்கு வர்ரான்..விளைவு அவளை வார்த்தைகளால் வதைக்கும் மனோரஞ்சன் ..ஆனால் இவன் பண்ணுவதை பார்த்து கோவம் வராமல் இருந்தால் ஆச்சரியமே !!! இறுதியில் சிந்துஜாவை ரஞ்சன் புரிஞ்சிகிட்டான்..

இங்க ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை பயணமும் ஒவ்வொரு விதமான கதையை நமக்கு சொல்லுது.. எல்லோருக்கும் வாழ்க்கை ஒன்று போலவே இருப்பதில்லையே... ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அமையும் வித்தியாசமான எதார்த்தங்களையும் பல கசப்பான உண்மைகளையும் நாம் புரிந்து கொள்ள கூடிய வகையில் கூறிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்..

கதையின் போக்கு அதை சொல்லிய விதம் எல்லாமே நம்முடைய ரொட்டீன்மாதிரியே இருந்தது..

ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!❣️
 
Top