ஒரே ஒரு வானம் !!
ஒரே ஒரு வானத்தின் கீழ் வாழ்க்கையை எதிர்நோக்கும் எத்தனையோ மக்களுக்கு மத்தியில் தொடர்வண்டியில் சந்தித்து கொள்ளும் நான்கு சிநேகிதிகளின் எதார்த்தமான வாழ்க்கை பயணங்கள் தான் இந்த கதை ..!!
நான்கு சிநேகிதிகளான மாதவி பிரபா ரத்னா சிந்துஜா இவங்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளாக அமையுது இந்த பயணம்..
மாதவி -இவளது கதை இன்றைய நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை போன்றே.. இரண்டு குழந்தைங்க பிறந்தவுடன் கணவனுடன் சேரக்கூடாது அவளுக்கு தன் பையன் சப்போர்ட்டா இருக்க கூடாதுனு நினைக்கிற மாமியார் சிவகாமி.. அம்மா பேச்சை மீற முடியாமல் ஒரே வீட்டில் இருந்தும் கணவன் மனைவி பிரிவு...மாமியாரே வில்லியாகிபோன போதிலும் கணவன் சப்போர்ட் இல்லாமல் மாதவி என்ன பண்ண முடியும்? இதனால் அவளும் கணவன் கிட்ட மூஞ்சிய திருப்பிட்டு போறா .. தன்னுடைய அம்மா தன் விசயங்களை வேற குடும்பத்து கிட்ட சொல்லி தன் மனைவியை வில்லியா மாத்தும்போதுதான் தன்மனைவியின் அருமை சங்கருக்கு புரியுது..தவறு செய்து விடுவானோனு பயந்தேன் பட் தவறு செய்ய வழி இருந்தும் தன் மனைவிக்காக தவறு செய்யாமல் அவகிட்ட சங்கர் பேசின விதம் அருமை!!.தன் கணவரை புரிந்துகொண்ட மாதவியின் வாழ்க்கை
பிரபா - குடும்பத்தின் தலைமகள்..சின்ன வயசுல இருந்தே குடும்பத்து பாரத்தை தன் தோள்மேல் சுமக்கற பொண்ணு ..இதனால 30 வயசு வரஅவளுக்கு கல்யாணம் முடியல..இவளை காதலிக்கும் மதன் இவளைவிட இரண்டு வயது சிறியவன்..அவனின் காதலை ஏற்க முடியாது தவிக்கும் பிரபா அதற்கு கூறும் காரணங்களும் எதார்த்தமானவை..ஆனால் மதனின் பிரபா மீதான காதலும் அதற்காக அவன் எடுத்த முயற்சிகள் எல்லாமே சூப்பர்...! இறுதியில் மதனின் காதல் கைகூடியது!!!! மற்றவர்களுக்கு பிரபா கூறும் அறிவுரைகள் அருமை..
ரத்னா - கணவனை இழந்து ஒற்றை தாயாய் பெண் பிள்ளையை வளர்ப்பவள்..பிரபாவை போன்று நல்ல தெளிவு அறிவுரை கூறுவதில்..ஆனால் இவளுக்கும் வாழ வேண்டிய வயதுதான அவளுக்கும் தான் சாய ஒரு தோள் தேவைப்படும்தான..ஆனால் இன்றைய சமூகம் விதவை மறுமணம் செஞ்சா உடனே ஏற்றுக்கொள்ளாது.. ஆண்கள் மறுமணம் செய்துகொள்ளுற காலத்துல தன் மகளுக்காக ஒற்றை தகப்பனாய் போராடும் வேணுகோபால்.. இருவருக்கும் பிடித்து இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்காகவேண்டி இருவரும் சேராமல் இருந்தது அவர்களின் நிலை உணரக்கூடியாத இருந்தது..
சிந்துஜா - இவளுடைய கதைதான் ரொம்ப பாவம்

சின்ன வயசுல இவ உடம்புல ஏற்பட்ட காயத்தை மறைத்து அவளை கல்யாணம் பண்ணி வைச்சிடுறாங்க அவங்க அம்மா ..ஆனால் அது தெரியவரும் போது இவள் கணவன் மனோரஞ்சன் இவள் துரோகம் செஞ்சுட்டதா நினைச்சு அவளை விட்டு விலகிடுறான்.. எதிர்பாரத விதமா அவ வேலை பார்க்கிற இடத்துலதான் அவனும் வேலைக்கு வர்ரான்..விளைவு அவளை வார்த்தைகளால் வதைக்கும் மனோரஞ்சன் ..ஆனால் இவன் பண்ணுவதை பார்த்து கோவம் வராமல் இருந்தால் ஆச்சரியமே !!! இறுதியில் சிந்துஜாவை ரஞ்சன் புரிஞ்சிகிட்டான்..
இங்க ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை பயணமும் ஒவ்வொரு விதமான கதையை நமக்கு சொல்லுது.. எல்லோருக்கும் வாழ்க்கை ஒன்று போலவே இருப்பதில்லையே... ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அமையும் வித்தியாசமான எதார்த்தங்களையும் பல கசப்பான உண்மைகளையும் நாம் புரிந்து கொள்ள கூடிய வகையில் கூறிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்..
கதையின் போக்கு அதை சொல்லிய விதம் எல்லாமே நம்முடைய ரொட்டீன்மாதிரியே இருந்தது..
ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
