என் மரணமும் உனக்காக !!
இந்த கதையின் நாயகி குழலி ..இவ ஒரு pathologist .இவ போஸ்ட்மார்ட்டம் பண்ண இளைஞன் சத்ரியனே அடுத்தநாள் இவள பொண்ணு பார்க்க வர்ரான்..எல்லாருடைய கண்களுக்கும் மனிதனா தெரியுறவன் இவளுடைய கண்களுக்கு மட்டும் ஆன்மாவா தெரியுறான்.. அவனை பார்த்து இவ பயப்படுறா இவளை ஏன் அவன் தேடிவரனும் ? இவளுடைய பிரச்சினைகளுக்கு உதவி செய்றான் பாரி ? பாரி யார்? குழலிக்கும் ஆன்மாவுக்கும் என்ன தொடர்பு ? சத்ரியனின் கொலைக்கான காரணம் என்ன ? இதற்கான விடைகளை கதைல படிச்சு தெரிஞ்சுக்கலாம்..
குழலியும் அவ பிரெண்ட்ஸ் லியா அன்ட் வேதாவுடைய சீன்ஸ் நல்ல காமெடியா இருந்துச்சு



அதுவும் அந்த பூஜை ரூம் கான்வோ லாம் சிரிப்புதான்..இவங்க மூணு பேரோட நட்பும் சூப்பர்..ஆனாலும் குழலி அட்டாப்ஸி பண்ணுன சத்ரியனே அடுத்தநாள் பொண்ணு பார்க்க வர்ரான். சும்மா அல்லுவிடுது பாருங்க நம்ம குழலிக்கு..அதுவும் அவன் அவனுடைய உண்மையான தோற்றத்தை அவளுக்கு மட்டுமே காட்டுறான்.. ஆரம்பத்தில அவளை பயமுறுத்தினவன் அவகிட்ட உதவி கேட்டுதான் வர்றான்..இவங்க கான்வோ நல்லா இருந்தது..குழலியின் கடந்தகால வாழ்க்கை ரொம்ப கஷ்டம்ப்பா
பாரி - மாயா வித்தைகள் தெரிஞ்சவன்..குழலியுடைய பிரச்சினைக்காக அவளுக்கு உதவி பண்ண வர்ரான்...இருக்கு இங்க பேய் இருக்குன்ற கதையா நெறயா பேய் ஆன்மாக்கள்னு நல்லா இருந்தது படிக்க.. பாரி கிட்ட குழலி வாயடிக்கிறதுலாம் நல்லா இருந்தது.ஆனா இவனுடைய மந்திர வித்தைகள் அதை அவன் உபயோகப்படுத்தும் விதம்னு எல்லாமே சூப்பர்.. இவனின் குழலி மீதான காதலும் அருமை

சத்ரியன் - ஒரு ஆன்மாவாலயும் இவ்ளோ காதலிக்க முடியுமானு தோணிச்சு.. அன்புக்கு உருவம் தேவையில்லைனு நிரூபிச்சிட்டான்.. ஆரம்பத்துல குழலியை பயம் காட்டினாலும் பின்னாடி அவளுக்கு சப்போர்ட்டா இருந்தான்..இவன் ஸ்டோரி படிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்தது..இவனுக்கு இப்படி ஒரு முடிவு வந்து இருக்க வேண்டாம்னு ரொம்ப பீல் ஆச்சுப்பா

பாரியுடைய காதலிக்கு எந்த விதத்திலும் சலிச்சது இல்லே இவனுடைய காதலும்.. இறுதியில் குழலியை விட்டு பிரியும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது
விதுர் - இவனும் இவன் ப்ரெண்ட்ஸூம் ச்சே மனித மிருகங்கள்.. எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் இருக்க மாதிரி , பாரி தன் மந்திர வித்தைகளை எப்படி நல்ல விதமாக பயன்படுத்தினானோ அதுக்கு எதிர்பதமா தீய காரியங்களுக்கு அதை பயன்படுத்தினான் விதுர்.அந்த நீலம் ஹைவேஸ் பார்ட்தான் படிக்க ரொம்ப வருத்தமா இருந்தது...இவனுங்க பொண்ணுங்களே படுத்திய கஷ்டத்திற்கு சரியான முடிவாக அமைந்தது இவங்க முடிவு...
ஆனால் லியாவுக்கும் விதுர்க்கும் காதல் எதிர்பாராதது.. எல்லா தப்பும் பண்ணுவானாம் விதுர் ஆனால் லியாமேல காதலாம்..இது காதலே இல்லை.. நல்லவேளை லியாவுக்கு அந்த நினைவேயை அழிச்சுட்டான் பாரி..
காதல் என்பது எல்லாருக்குமே பொதுவானது..அது மனிதனோ இல்லை ஆன்மாவோ யாராக இருந்தாலும் சரியே.. மனிதனான பாரியின் காதலுக்கு நிகரானது ஆன்மாவான சத்ரியனின் காதல்...அதை ஆசிரியர் சிறப்பாக சொல்லி இருக்காங்க ..!!
ஆனால் பாரிக்கு சின்ன வயசுல மந்திர சக்தி கிடைச்சதுன்னு சொன்ன ஆசிரியர் விதுர்க்கு எப்படி இப்படி மந்திர சக்தி கிடைச்சதுன்னு கொஞ்சம் சொல்லி இருக்கலாம்..
கதை நகர்வும் சரி , கதையில் வரும் நபர்களின் கோபம் பயம் வருத்தம் அன்பு காதல் என எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தது...!!
ஒரு நல்ல பேன்டஸி ஹாரர் கதை..இமேஜினேசன் லாம் நல்லா இருந்தது..!!
ஆசிரியர் வெற்றி பெற
வாழ்த்துக்கள்!!