ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 30- அவளது நீங்கா நினைவுகள்

அவளது நீங்கா நினைவுகள்
ஆசிரியர்:இமயா
இந்த உலகில் ஏதோ ஒரு இடத்தில் நொடிக்கு நொடி நிமிடத்திற்கு நிமிடம் வண்புணர்வில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள போராடிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு பெண்களின் வலிக்கும் இந்த கதை எடுத்துக்காட்டு....😥😥😥. எதிர்பாராத விதமாக நகரத்தில் நடக்கும் கொலைகள் கொலைகளை கண்டுபிடிக்க போலீஸ் ஆபிசர்ஸ் துருவ், கார்த்திக், ருத்ரா விசாரிக்கின்றனர்... கொலைகாரன் யார் கொலைக்கான காரணம் என்ன என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்து எழுத்தாளர் சொல்லி உள்ளார்... இவர்களுக்கு தடயவியல் துறை உதவியாக டாக்டர் தியா வருகிறார் இவர்களுக்கு இடையே மெல்லிய காதலுடன் சுவாரஸ்யமான கதை... இதற்கு நடுவே கிராம பிண்ணனியில். ஈஸ்வர்- லெட்சுமி , கயல்-செல்வம் இந்த இரண்டுஜோடிகளின் பருவ வயது காதல்.. இந்த இரண்டு ஜோடிகள் யார் கதைக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை எதார்த்தமான முறையில் எழுத்தாளர் சொல்லி உள்ளார்.
. வரதராஜன் நீ எல்லாம் மனுசனே இல்லை.
பருவ வயதில் பகட்டுக்காக தன் ஆசையை நிறைவேற்ற எப்படி வேண்டுமானாலும் குறுக்கு புத்தியில் கீழ்த்தரமாக வாழலாம் என்று நினைத்து வாழ்ந்த அன்பரசிக்கு இந்த முடிவு தேவைதான்... அந்தஸ்து ஆடம்பரத்துக்கு ஆசைப்படாத மாணிக்கம் அன்பரசியின் தவறுக்கு ஒன்றுமறியாத பட்டாம்பூச்சி சிறகை ஒடித்து சிதைத்தது நியாயமே இல்லை😭😭😭😭😭. ஜாதி வெறி பிடித்த மாணிக்கத்திற்க்கு ஒழுக்கமாக வாழ தெரியவில்லை 😡😡😡😡 . அந்த மூன்று மனித மிருகங்கள் உடன் பெண் இனத்திற்க்கே கேவலமான அசிங்கம் இதைவிட கொடூரமான முறையில் இறந்து இருக்கவேண்டும்... அதைவிட கொடுமையாக ஹைப்பர்தைமேசியா வேற அது தியாகம் வந்து வந்து எவ்வளவு சித்திரவதை அனுபவிச்ச இருப்பதால்🥺🥺🥺🥺🥺சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை சேர்த்து வைத்து எழுதப்பட்ட எழுத்துக்கள்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
 
Last edited:
#அவளது_நீங்கா_நினைவுகள்….
#கௌரிஸ்ரிவ்யூ….

கிரைம் திரில்லர்+ அழுத்தமான காதல் கதை….

இரண்டு காலங்களில் நடக்கும் கதைக்களம்….எப்படி ஒன்னா சேருது?????

லக்ஷ்மி….அம்மா & அவள் என அழகிய குட்டி குடும்பம்….அப்பா இருந்தும் இல்லாதது போல தான்….

அவள் அப்பாவின் முறையற்ற செயலில்….அவள் அம்மாக்கும் அங்கீகாரம் கிடைக்கலா…..

அவளுக்கும் உரிமை கிடைக்கலா,....

அம்மாவின் அன்பை தவிர வேற ஏதும் கிடைக்க பெறாத பெண்ணவளுக்கு காதல்….

அதையும் கூட தன் நிலை கருதி வெளிபடுத்த தயங்க….

ஆனால் அவளுக்கு நேர்ந்ததோ 🥺🥺🥺🥺🥺🥺…..

நகரத்தில் நடக்கும் தொடர் கொ****லைகள்…..

கொ****லையாளியை தேடும் துருவ், ருத்ரா & கார்த்திக் டீம்…..

லக்ஷ்மிக்கு நடந்த கொடுமைக்கும், நடக்கும் தொடர் கொ****லைக்கும்

தொடர்பு உண்டா?????

கொ****லையாளி யார்??????

அடுத்து என்ன அப்படினு விறுவிறுப்பா போச்சி கதை…..

கயல் - லக்ஷ்மி நட்பு ரொம்ப cute…..

கிளைமாக்ஸ்….அழுக வெச்சிட்டிங்க ரைட்டர் 🤧🤧🤧🤧🤧…..

ஏன் இப்படி🥺🥺🥺🥺…..அது ஒரு வகையில் அவளுக்கு விடுதலை தான்…..ஆனாலும்…..

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

போட்டியில் வெற்றி பெற வாழ்
த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
க்ரைம் த்ரில்லர் கதை 🤩


ஒரு நகரத்தில் நடக்குற தொடர் கொலைகளை துருவ் ருத்ரா மற்றும் கார்த்திக் இணைந்து கண்டுபிடிக்கிறார்களா? மறுபுறம் லட்சுமி, ஈஸ்வர்,கயல் மற்றும் செல்வம் இவர்களின் பள்ளிகால நட்பு மற்றும் காதல்னு மாறி மாறி கதை நகருது. இவர்களின் காதல் கைகூடியதா? யாரு அந்த கொலையாளி? ஏன் இந்த கொலைகள்? விடை கதையில்.


இரு கதைகளையும் ஒரு புள்ளியில் இனணத்து சஸ்பன்ஸ் ப்ரேக் பண்ணது அருமை 👏👏


லட்சுமியின் இந்த நிலைக்கு காரணமானவர்களுக்கு இந்த தண்டனை சரிதான். சமூகத்திற்க்கு தேவையில்லாத விஷக்கிருமிகள் 😡😡 சாதி அழிக்க அழிக்க வளர்ந்துட்டுதான் இருக்கு 😓😓


கயல் லட்சுமி நட்பு அழகு 😍💓 கயல் செல்வம் வரும் இடங்கள் எல்லாம் ரசிச்சு படிக்க கூடியதா இருக்கு ❤ ஈஸ்வர் லட்சுமி காதல் நல்லா இருக்கு🫰 லட்சுமி நிலை ரொம்ப கொடுமை 😭😭


ஒரு சில காட்சிகளை இன்னும் தெளிவா விளக்கி இருக்கலாம். நல்ல விறுவிறுப்பாக கதை ❤ கதைக்கு பொருத்தமான தலைப்பு 🫶


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
அவளது நீங்கா நினைவுகள் விமர்சனம்

இருவேறு சூழ்நிலைகளில் நடக்கும் நிகழ்வுகள் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையதா இருக்கு அப்படின்றதுதான் கதை..


ஒரு நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகள்..அந்த கொலையாளியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரிகளான துருவ் கார்த்திக் ருத்ரா , இவங்களுக்கு மருத்துவ ரீதியாக உதவி பண்ணுறாங்க டாக்டர் தியா , எதற்காக இந்த கொலைகள் நடக்குது? கொலையாளி யார் அப்படின்றத சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் கலந்து சொல்லிருக்காங்க ஆசிரியர்..


ஒரு பக்கம் கொலை நடக்க கொலையாளியை தேடன்னு போக இன்னொருபக்கம் அழகான பள்ளிக்கால நட்பு காதல்னு போறது நல்லா இருந்தது படிக்க ❣️❣️


லக்ஷ்மி கயல்‌ நட்பு செம்ம ❤️ லக்ஷ்மியின் மேல் ஈஸ்வர் கொண்ட‌ காதலும் செல்வத்தின் சாப்பாட்டு ராமியான கயல் மீதான காதலும் சூப்பரா இருந்தது .. இறுதியில் லக்ஷ்மியின் முடிவு கேட்டு கயலின் கதறல் இருவரின் நட்பின் ஆழத்தை காட்டுது...


லக்ஷ்மியின் அவள் அம்மா மீதான‌ ஆதங்கம் ,அவள்‌ தந்தை மீதான கோபங்கள் எல்லாம் சரியே... எவ்வளவு காலங்கள் மாறினாலும் எவ்வளவு நாகரீகங்கள் வந்தாலும் இந்த ஜாதி என்ற விஷமுள் இன்னும் நிறைய பேருடைய வாழ்க்கையில் தைத்துக்கொண்டுதான் இருக்கு...🤬மாணிக்கம் வரதராஜன் போன்றவர்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றனர்..


லஷ்மிக்கு நடந்தது ரொம்ப கொடூரம்தான் 😢😥😥 ஒரு பாவமும் அறியா லக்ஷ்மியின் வாழ்க்கை திசைதிருப்பல் நம்மை கண்கலங்க செய்தது...அவள் விஷக்கிருமிகளை அழித்தது சரியே...👍


கொலையாளி யார் ? லஷ்மி யார் ? ஈஸ்வர் யார் ? அப்படின்றத ப்ரேக் பண்ண விதம் அருமையா இருந்தது..


துருவ் மீதான ருத்ரா வின் காதலும் அழகு 🧡 லஷ்மிக்கு இப்படி இறுதியில் நடந்து இருக்க வேண்டாம்னு தோணிச்சு ஆனால் அவளுக்கு அதுவும் ஒரு வகையான விடுதலை தான் ...😒😒


பணம் ஒருத்தவங்களை எப்படி மாற்றும்ன்றதுக்கு உதாரணம் கயலின் அப்பா ..தன் பெண் போல நினைக்கும் லக்ஷ்மிக்கு நடந்த கொடூரத்திற்கு சாட்சியாக நின்றதற்கு லக்ஷ்மி கொடுத்த முடிவும் நியாயமாகவே பட்டது...😕


லக்ஷ்மியின் இறுதி முடிவில் ஈஸ்வர் அழுத அழுகை நம்மையும் கண்கலங்கவே செய்தது...சில உறவுகள் சேரமுடியாமல் நீங்காது நினைவுகளாவே இருக்கும்ன்றதுக்கு உதாரணம் லஷ்மி ஈஸ்வரின் காதல்💔


மாய்ந்துபோன லஷ்மி மீண்டும் அவ்வீட்டின் இளவரசியாய் வந்தது திருப்தியாக இருந்தது ❤️


இரண்டு கதைகளையும் அழகா கோர்த்து சொல்லிருக்காங்க ரைட்டர்..நல்ல விறுவிறுப்பாக இருந்தது கதை...செல்வம் ஏன் தியாவ பார்த்துட்டு அதிர்ச்சி ஆகல அவனுக்கு முன்னரே தெரியுமான்றத ரைட்டர் சொல்லி இருக்கலாம் 🧐


ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
Top