ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 32- ஆழகாலனின் காதல் நேசம்

ஆழகாலனின் காதல் நேசம்


மதுஷா



நீயா நானா என தொழில் முறை போட்டியில் ,இருவரும்ஸஎதிரியாய் எதிர் எதிர் துருவமாய் எதிரில் நிற்கின்றனர் நந்தினியும் கரிகாலனும் , இவர்களுக்கிடையே திருமணம் பேசினால்,விளைவு விளையாட்டு பெண்தலையில் இடியாய் இறங்கி இதயத்தை சுக்கு நூறாய் மாற்றி வாழ்க்கையே தடம் புரள்கிறது.



ஒருவரின் மீது ஒருவர் கொண்ட கோபம் ,வன்மமாக மாறி ஒருவரை பழிதீர்க்க காத்திருக்க, இடையில் சிக்கி சிதலமடைகிறது,சின்ன சிறிய பெண்ணின் வாழ்க்கை.ஆம் நந்தினியின் வன்மத்திற்கு சிக்குவதோ என்னவோ கரிகாலனின் தங்கையே..அதுவும் மிக மோசமாக…பகை இருக்கலாம்…ஆனால் நந்தினிக்கு இருப்பது!!!!…என்னால் இவளை மன்னிக்கவே இயலாது.


நந்தினியை பழிவாங்க கரிகாலன் அவளது பாசமலர் மீது குறிவைக்க,தைத்தது என்னவோ கரிகாலனின் நெஞ்சை தான்.ஆம் அது அவனுக்கே தானே விரித்த வலை…அவள் மாட்டவில்லை ,அவன் தான் மாட்டினான்.




அவன் குறி வைத்த அம்பே ,அவனை தைத்தன் பின்னணி தான் என்னவோ…



பிடித்த பெண் தான் வாழ்க்கை தான் கரிகாலனுக்கு அமைகிறது…அவன் மையல் கொண்ட பெண் ஊ’மைய(யா)ள். பிடித்த பஆனாலும் அடித்து கொண்டும்,அழுது கொண்டு செல்வது எதனாலோ????



ஊமையாளின் தம்பியாக வீரா…எல்லாவற்றிலும் அவளுக்கு துணையாக, தூணாக, அவளை கவசமாக காத்து நிற்கிறான்.


ஊமையாளின் மீதான வீராவின் பாசம் , ஏதோ ஒரு புள்ளியில் கேள்விகுறியாக…விடைதான் என்னவோ????



உடன் பிறவா சகோதரனின் மீதான பாசம் , நம்பிக்கை உடைம உடைந்து போகிறாள் உமையாள். தனது உமையாளின் மீதான பாசம் உண்மையென எவ்வாறு புரியவைக்க போராட்டம் வெற்றி பெற்றதா???



கரிகாலனின் தங்கை இனியாவை கரம் பிடிக்க, ஆனால் இது பரிவா பாசாமா என குழம்புகிறாள் பேதை…தெளிய வைப்பது வீராவின் வேலை…குழப்பத்தில் இருந்தவளை நிலை தான் என்னவோ???




நந்தினி கரிகாலனின் பகையில் இனியா கயாக நகர்த்தப்பட்டாள் என்றால் சங்கரோ பகடையாக உருட்டப்பட்டான்.யார் இந்த சங்கர்???

இவனுக்கும் கரிகாலன் குடும்பத்திற்குமான தொடர்பு தான் என்ன….


வியனா…இவள் வாயே இவளுக்கு எதிரி…எதிரில் இருப்பவர் காயம் அறியாமல்…வார்த்தைகளை விட்டு வட்டியோடு வசுலித்து கொள்கிறாள்.

ஆனால் யாரோடு பகைக்கோ யாரோ பலியாவது போல் இவர்களதும் சிக்கிகொள்கிறது.




நந்தினி…அவள் கடந்த பாதையில் காயங்கள் அதிகம் தான் என்றாலும்…அவளுக்கு கிடைத்த நேசம் …சோ ஸ்வீட் ரோஹன்…ஆனால் அவனை காப்பாற்றற…தெரியவில்லை…


அவன் காதலே அவனை காப்பற்றட்டும்.


ஆழகாலனின் காதல் நேசம்.

இங்கு யாருடைய நேசமும் சற்றும் குறைந்ததில்லையென்றாலும் எனக்கு ரோஹனே ஆழகாதலனாக மூழ்கடிக்கிறான்.


இரண்டாவதோ மூன்றவதோ அள்ளிகொண்டு செல்கிறான் இவன் உள்ளத்தை அன்பால்.



ஆழகாதலன்…ஆழ்துளை காதல்..



வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி

💖💖💖💖
 
ஆழகாலனின் காதல் நேசம்


என்ன கதை என்ன கதை.. ஒவ்வொரு எபிலயும் ஒரு டிவிஸ்ட்.. செம போங்க..

கரிகாலன் நந்தினி ரெண்டு பேரும் முட்டிட்டு இருக்க.. அவங்க தாத்தாக ரெண்டும் இதுகளுக்கு கல்யாணம் பண்ணா வெக்க பிளான் பண்றாங்க..

ஆனா ரெண்டு பேருக்கும் இது பிடிக்கல..

பொண்ணுக வாய் அடங்காதுனு சும்மாவா சொன்னாங்க.. எப்பவும் போல நம் நாயகி வாயை விட... அண்ணனை தப்பா பேசிட்டானு தங்கச்சி பொங்கிட்டு போக.. கடைசில அவளே அவமானப்பட்டு தான் வந்து நிற்கறா..

அதோடு விட்டாளா.. அதுவும் இல்லைங்க.. அவளை வெச்சு செஞ்சு விட்டதுல அவளோட வாழ்க்கையே கேள்விக்குறியாகிருச்சு..

ஏன்ப்பா ஏன்.? முட்டிட்டு இருந்தா அதுகள விட வேண்டியது தானே.? இதுக ரெண்டும் தான் முதல்ல வில்லனுகளே..

தங்கை மேல உயிரா இருக்கற அண்ணங்காரனோட எதிர்பதில் என்னனு நீங்களே தெரிஞ்சுக்கோங்க..

இதற்கிடையில நம்ம கரிகாலன் உமை கல்யாணமாகிருச்சு.. அப்ப நந்தினியோட வாழ்க்கை.?

உமையை எனக்கு பிடிச்சுச்சு.. ஆனா என்ன நம்மளைய மாதிரி இதுவும் அவசரக்காரி தான்.. ஆனாலும் பாசக்காரிங்க..

கதை ஆரம்பத்துல வில்லியா தெரிஞ்ச நம்ம நந்தினி கதையோட முடிவுல ஹீரோயினாக நம்ம மனசுல பதிஞ்சுருவாங்க..

வீராவோட கேரக்டர் செம செம.. என்னால கெஸ் பண்ணவே முடியல..

ஆக மொத்தம் கதைல அத்தனை பேரும் செமையா ஸ்கோர் பண்ணிட்டாங்க..

போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் மதுஷா அக்கா..
 
ஆழகாலனின் காதல் நேசம்

கரிகாலன் நந்தினி 2 பேரும் தொழில் எதிரி. நந்தினி கரிகாலனை போட்டியா நினைச்சு பழி வாங்க நினைக்குறா. அவங்களுக்கு அவங்களோட தாத்தாக்கள் கல்யாணம் பண்ண யோசிக்குறாங்க.

நந்தினிக்கு விருப்பம் இல்ல கரிகாலனுக்கும் விருப்பம் இல்லாமல் இருக்குறான். இருந்தாலும் அவளை கல்யாணம் பண்ண முடிவு எடுக்குறான்.

சுனிதா கரிகாலன் தங்கச்சி சுட்டித்தனம் நிறைஞ்சவ. நந்தினி கரிகாலனை தப்பா பேசுறா. அதுல கோவம் வந்து சுனிதா நந்தினியை அடிச்சுடுறா. அதுல கோவம் வந்து நந்தினி சுனிதா லைப்பை அழிச்சி அவ மேல ஒரு பழி சுமத்தி அசிங்க படுத்துறா.

அதுல இருந்து எப்படி வெளிய வரா கரிகாலன் என்ன பண்ணினான். கரிகாலன் மனசுல உமையாள்னு ஒரு பொண்ணு இருக்கா. அது யாரு அவளை கல்யாணம் பண்ணினானானு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

நந்தினியை சுத்தமா பிடிக்கவே இல்ல. சுனிதாக்கு நந்தினி பண்ணினதை என்னால ஏத்துக்கவே முடியல. கரிகாலன் தங்கச்சிக்கு நடந்த அநியாயத்துக்கு பொங்கி நந்தினியை உண்டு இல்லைனு ஆக்குவானு பார்த்தேன்.

ஆனால் அவன் உமையாள் யாருனு தெரிஞ்சு தங்கச்சியை டீல்ல விட்டுட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்காக நந்தினியை விட்டுட்டான். அதை என்னால ஏத்துக்கவே முடியல 🤧🤧🤧🤧

சுந்தரும் பாதிக்க பட்டவன் தானே அவன் மேல சுனிதாக்கு ஏன் இவ்வளவு கோவம். நந்தினியை கூட ஒன்னும் சொல்லல அது ஏன் 🤔🤔

இதுல சுனிதாக்கு நடந்தது மட்டும் என்னால ஏத்துக்கவே முடியல.

கரிகாலனை மாஸ் ஹீரோனு நினச்சேன். ஆனால் அவனை டம்மி ஆக்குன பீல்😏😏😏

நிறைய விஷயம் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம். தவிர்த்தும் இருக்கலாம். நிறைய விஷயம் அங்க அங்க தொக்கி நிற்குது சரியான விளக்கம் இல்ல.

உமையாள் மட்டும் தப்பை தட்டி கேட்டது கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு.

ஆனாலும் அந்த நந்தினிக்காக உருகி அழுகுறது எல்லாம் பிடிக்கவே இல்ல. 😏😏😏 அவ ஒன்னும் அவ்வளவு நல்லவ இல்ல.

அவளை நல்லவளாக காட்ட கடைசியில் சொன்ன காரணத்தை கூட என்னால ஏத்துக்கவே முடியல.

அவ தங்கச்சினா தாங்க மாட்டா. அடுத்தவன் தங்கச்சினா அவளுக்கு தக்காளி தொக்கா 😤😤😤

இன்னும் நல்லா எழுதி இருக்கலாம்.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top