ஜீவானந்தினி (J) யின்

பயணம் ❤ அடைமழையும் சாரல் மழையினூடே இவளின் பயணம் இலக்கை அடைந்ததா? என்பதே கதை ❤ அதுவும் படிக்க படிக்க தெவிட்டாத இலங்கை தமிழில்

எத்தனை தடைகள் வந்தாலும் தன் இலக்கை அடையாமல் காட்டாற்று வெள்ளம் ஓய்ந்ததில்லை❤ அதுபோலவே ஜீவானந்தி
எத்தகைய கடுமையான சூழ்நிலையும் அவள் கையாளும் விதமும் அதை கடந்து வரும் துணிவும் பிரம்பிக்க வைக்கிறாள்

சீதேவியின் கொடுமையில் இருந்து தப்பித்த அவளின் சமயோசித புத்தி, பிரச்சனையில் தேங்கி நிற்காமல் அடுத்து என்ன என்று சிந்திக்கும் திறன், இடம் பொருள் ஏவல் அறிந்து நடத்தல், ஆளுமை, விடாமுயற்சி, செய்நன்றிமறவாமை, காதல் இருந்தும் அதை வெளிக்காட்டமல் நன்றிகாக மறைத்தல் இப்படி இன்னும் பல பல நல்ல குணாதிசயங்களே ஜீவானந்தி

❤
இவளில் ஜெயமன் மட்டுமல்ல நானும் காதல் வயப்பட்டேன்

காதல் இல்லாத பயணம் சுவாரஸ்யமற்றது

அவளை காதல் மழையில் நனைய வைக்கவே வருகிறான் ஜெயமன் (J)

அவளை மட்டுமல்ல நம்மையும் சேர்த்தே

ஓயாது காதல் வசனங்கள் பேசி அவள் பின் சுற்றாமல் அவளுக்கான காத்திருப்பிலும், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் செய்யும் சிறு சிறு சில்மிஷங்களாகட்டும்


, ஜீவா எப்போது விட்டு சென்றாலும் பறிதவித்து நின்றதாகட்டும் ,எந்த சூழ்நிலையிலும் அவளுக்கும் அவளின் முடிவுக்கும் துணையாய் நின்றதாகட்டும், ஜெ ❤ மனதில் நிற்கிறான்.
அதிபர் வெளியில் நல்லவர் நேர்மையானவர் ஆனால் சந்தர்ப்பம் அவரின் உண்மை நிறத்தை காட்டி கொடுத்துவிடுகிறது

இந்த சமூகத்தில் உள்ள சில அழுக்கு மனிதர்களின் பிம்பம் இவர்.
டீச்சர் நல்ல தாய் ❤ டீச்சர் அதிபர் புரிதலும் அன்யோன்யமும் அருமை ❤ டீச்சரும் அதிபரும் ஜீவாவிடம் காட்டும் அன்புமும் அக்கறையும் அதற்க்கு பிரதியாய் ஜீவாவின் நடத்தையும் சிறப்பு


ராஜு லாவண்யா இணை நல்லா இருக்கு ❤
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகா வடிவமைச்சிருக்கீங்க ❤ சுவாரஸ்யமான கதை ❤
இலங்கை தமிழில் வார்த்தைகளை நல்லா கோர்த்து அழகான நிறைவான படைப்பா இருந்தது❤ JJ மனசை நிறைக்கறாங்க❤
கதையை எனக்கு மிகவும் பிடித்தது❤
கார்கால தேர்வு (J❤J) முழு விழுக்காடு எடுத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
