ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 36- விதியை மாற்றிடும் திருத்தங்கள்

pommu

Administrator
Staff member
APV 36- விதியை மாற்றிடும் திருத்தங்கள்
 
விதியை மாற்றிடும் திருத்தங்கள்
ஆசிரியர்: ராஜி அன்பு
நாயகன்: சங்கர்
நாயகி: சிவானி
பொதிகை மலை தாண்டி அதன் பின்னே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் நடைபெறும் இயற்க்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளையும்... அங்கே மலைத்தொடர்களில் உலாவரும் சித்தர்களின் சக்தியையும் நல்ல ஒரு ஃபேன்ஸி கான்செப்ட் டில் வித்தியாசமான முறையில் எழுத்தாளர் சொல்லி உள்ளார் 👏 💐 💐 💐 💐
முக்காலம் அறிவீர் !🧡 முக்காலம் பயணிப்பீர்!🧡 ஆனால் முந்தைய காலம் செல்வீரோ !🧡
நம் நாயகன் காட்டிலாகா அதிகாரியாக மேற்கு தொடர்ச்சி மலையில் பணியாற்றி வருகிறார் அங்கே இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக முகை எனும் பள்ளத்தாக்கு கிராமம் வெள்ளத்தில் மூழ்கி பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது அந்த பகுதி மக்களை பொழில் எனும் உயர்தாக்கு பகுதியில் மாற்றும் வேலையில் மீட்பு குழுவினருடன் சேர்ந்து நாயகனும் ஈடுபடுகின்றார்...💙💙💙💙💙
அந்த இடத்தில் எதிர்பாராத விதமாக நம் நாயகி சிவானி அவளின் நண்பன் மிதுனுடன் யூடியூப்க்கு வ்லாக் எடுக்க வரும் இடத்தில் நாயகனால் காப்பாற்ற படுகிறார்....🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
நாயகனுக்கு நாயகன் செய்கையில் நம்பிக்கை வராமல் அவளை கண்காணிக்க ஆரம்பிக்கிறார்.. நாயகனுடன் சேர்ந்து மூன்று காலங்களில் பயணம் செய்து மூன்று காலகட்டத்தில் நடந்த தவறுகளை சரி செய்து செய்த தவறை சீர் செய்தாலா என்பதே கதைக்கரு. முதலில் பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட நாட்டின் பேச்சு வழக்கு அங்கு நடக்கும் தவறுகளை சரி செய்வது இரண்டாம் காலமான பிரிட்டிஷரின் இந்திய ஆட்சிப் பகுதி அங்கே நடக்கும் நிகழ்வுகளை சரி செய்வது மூன்றாவது காலமாக முகை கிராமத்தில் நடக்கும் வெள்ளபாதிப்பு என் வெவ்வேறு காலங்களில் பயணித்து கால பயணம் செய்தது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்..❤️❤️❤️❤️❤️❤️❤️
மல்லி செய்த செயலால்🤦🤦🤦🤦 காலத்தை சரி செய்து மீட்ட முகை கிராம் மக்கள் நிலை என்ன என்பதை சஸ்பென்ஸ் கலந்து கூறியுள்ளார்... 🧡🧡🧡🧡 இதற்கு நடுவே நாயகியின் அம்மா நாயகி செய்த சிறு தவறால் அடிபட்டு கோமா ஸ்டேஜ்ல இருக்கிறார் அவரை நாயகி மீட்டாலா💚💚💚💚💚💚 நாயகன் நாயகிக்கு உதவினாரா என்பதை வித்தியாசமான முயற்ச்சியில் எழுத்தாளர் சொல்லி உள்ளார் ....👏👏👏👏👏
இந்த பயணம் முடிவல்ல ஆரம்பமே என்பதை போன்ற முடித்து உள்ள விதம் அருமை 👏 💐 ❤️ ❤️ 🧡 ஹாலிவுட் மூவி பார்த்த ஃபீல் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 ❤️ 🧡 🧡 🧡
 
Last edited:
விதியை மாற்றிடும் திருத்தங்கள் விமர்சனம்

இது ஒரு ஃபேண்டஸி கதை 😍

நாயகன் சங்கர் காட்டு இலாகா அதிகாரி..மூன்று மாதங்களுக்கு முன் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மண்சரிவு ஏற்பட்டு பொதிகை மலையில் உள்ள முகை என்ற கிராமமே நிலச்சரிவால் பாதிப்படைந்தது..அதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறான் சங்கர்..அங்கு யூட்யூப்க்காக வீடியோ எடுக்க வரும் நாயகி சிவானி ஆபத்தில் சிக்கிக்கொள்ள அவளை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான் சங்கர்.. ஆனால் சிவானி வந்த நோக்கமோ வேறு..தன் தாயை காப்பாற்ற சித்தரை தேடிச் செல்லும் சிவானிக்கு முக்காலத்தில் நடக்கும் மூன்று தவறுகளையும் சரிசெய்தால் அவள் தாய் காப்பாற்றப்படுவார் என்பதால் மலைக்கு செல்கிறாள் சிவானி..மலைக்கு செல்லும் சிவானியை சந்தேகித்து அவளோடு மலையில் இருக்கும் குகைக்கு செல்லும் சங்கரும் விதி வசத்தால் இவளுடன் சேர்ந்து முக்காலமும் பயணிக்கிறான்..முக்காலத்தில் நடந்த தவறுகளை இவர்கள் எப்படி சரி செய்தார்கள்? விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம் ‌.!!

முக்காலம் அறிவீர் !
முக்காலம் பயணிப்பீர்
ஆனால் முந்தைய காலம் செல்வீரோ !

என்பதற்கு இணங்க
முதலில் பாண்டிய மன்னன் காலத்திற்கு செல்கின்றனர்...

அங்கு அவர்களின் செந்தமிழ் பேச்சு , அவர்கள் நாட்டின்மீது படையெடுக்க உதவி செய்ய மாலிக்காபூர் தளபதியை முத்து பாண்டியன் சந்திக்க நினைக்கிறான் ..அந்த தவறை செய்ய விடாம சங்கர் திருத்தி அமைத்தது நல்லா இருந்தது படிக்க ..சிவானியை காப்பாற்ற அவன் செஞ்ச ஹீரோயிசம்லாம் அடிதூள்..லாஸ்ட்டா அவளை செயற்கை நீருற்று பைப் வழியாக கூட்டி வந்து வெளிவர்ரதுலாம் பேண்டஸி மாதிரி இருந்தது..😍😍

இரண்டாவதாக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்திற்கு போறாங்க ..அங்க ரௌலட் சட்டத்தின்போது ஆயிரக்கணக்கான மக்களை கொண்ணதை மாத்துறாங்க..அதுக்கு பதிலா பிரிட்டிஷ் மாளிகையை கொளுத்த அவன் செஞ்ச வேலை.அதுக்கு அவனுக்கு உதவி பண்ணவங்க, பிரிட்டிஷார்கிட்ட இருந்தும் நெருப்பு புகையிலிருந்தும் ஷிவானியை அவன் ரொம்ப அருமையா காப்பாத்திடுறான்👍👍👍
ரௌலட் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதும்' வந்தே மாதரம்' என்ற முழக்கம் நாமே அதை செஞ்ச பீல் கொடுத்தது ப்பா 😍😍😍😍

மூன்றாவதாக அந்த மண்சரிவின்போது தன்னால் காப்பாற்ற முடியவில்லைனு ரொம்ப வருத்தமா ஆதங்கமா இருக்கிற சங்கர் அந்த காலகட்டத்துக்கு‌போறாங்க ...அந்த மண்சரிவுக்கு காரணம் என்ன ? அதை செய்ய விடாமல் இவன் தடுத்த விதம் , முகை கிராமத்து மக்களை புரியவைத்து அவங்கள காலிபண்ணச் சொல்லி வேற பகுதிக்கு அழைத்து வந்துடுறான் .. ஆனால் மல்லியின் பேச்சைக் கேட்டு அவங்க மண்சரிவு ஏற்பட முன்ன போயிடுறாங்க..ஆனால் அங்கே அவன் தடுக்க முன்பு மக்கள் போயிடுவாங்க..அங்க உள்ள பையனை காப்பாற்ற போயி சங்கர் மாட்டிக்கிட்டான் , அவன் எப்படி அதை சரிசெஞ்சான்னு ஆசிரியர் அருமையா சொல்லி இருக்காங்க...

இடையிடையே சிவானிக்கு சங்கர் மேல் தோன்றும் காதலும் அதற்கு விடையளிக்காத சங்கர் இறுதியில் அவளை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்வதும் அருமை❤️

மல்லி சங்கர் மேல் உள்ள கோபத்தால அவ சொன்ன பொய்யால சங்கர் உயிருக்கே ஆபத்தா போச்சு 😬😬😬

இறந்த காலத்தில் பயணம் செய்த இவர்கள் தங்கள் சந்ததிகளுக்காக எதிர்காலத்தில் நடக்க இருப்பதை திருந்தி மாற்றியமைக்க போகிறார்கள் இதை ஆசிரியர் இது முடிவல்ல ஆரம்பமே என்று பயணத்தை முடிச்சிட்டாங்க...

நல்லா ஒரு ஃபேண்டஸி படம் பார்த்த மாதிரி இருத்ததுப்பா

ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
விதியை மாற்றிடும் திருத்தங்கள்


வாவ் வாவ்.. என்ன கதை என்ன கதை😍😍😍😍😍 நைட்டு புல்லா படிச்சேன்.. கீழ் வெக்கவே மனசு வரல.. உங்க கற்பனை அபாரம் சிஸ்டர்..

நம் நாயகன் சங்கர்.. நாயகி சிவானி

பொதிகை மலையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மீட்புப் பணியில் இருக்கிறான் சங்கர். அப்போது யூட்யூப்பராக வருகிறாள் சிவானி. ஆனால் இவள் வந்த நோக்கமே. வேறு..

பொதிகை மலையின் உலாவரும் சித்தர்களை பற்றி கூறியது எல்லாம் வேற லெவல்.. இதைப்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா உண்மையா.. இல்லையானு தெரியாம இருந்தேன்..

சிவானி மேல சந்தேகம் வர, அவளை கண்காணிக்கிறான் சங்கர்.. சிவானி வந்த நோக்கமே சித்தர் ஒருவரை பார்க்க வேண்டும் என்று தான்.. அதுவும் அவளின் அன்னைக்காக..

எப்படியோ சித்தரையும் பார்க்க, அவரோ முக்கால தவறை சரி செய்தால் மட்டும் தான் அவரை காப்பாற்ற முடியும் என்கிறார்.

சிவானியும் முக்காலத்திற்கு பயணமாகிறாள் சங்கருடன். இவளை காப்பாற்ற இவளுக்காக சங்கர் நின்றது😍😍😍😍 பாண்டிய மன்னனின் ஆட்சிக்கால தவறையும் பின்பு பிரிட்டிஷ்.ஆட்சிகால தவறையும்.. இறுதியாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் தவறுகளையும் எப்படி திருத்தி அமைகிறார்கள் என்பதே கதை..

சிவானியின் காதல் உணர்வுகளுக்கு பதிலளிக்காமல் இறுதியில் அவளை திருமணம் செய்து கொண்ட சங்கரின் காதலும்😍😍😍😍😍

மொத்தத்துல ஒரு பேண்டசி படம் பார்த்த ஃபீல்..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
இது ஒரு ஃபேன்டசி கதை 🤩🤩🤩


சிவானி அவள் அறியாமல் செய்யும் ஒரு தவறினால் பாதிக்கப்படும் அவளின் அம்மா. அவரை மீட்டெடுக்க இறங்கும் சிவானியின் முயற்சிக்கு துணை நிற்க்கும் காட்டில்லாக்கா அதிகாரி சங்கர்.


இருவரும் சேர்ந்து கடந்த காலத்திற்க்கு பயணிக்கிறார்கள். அதில் வரும் ஆபத்துக்களில் இருந்து எவ்வாறு தப்பிக்கிறார்கள்? சிவானியின் அம்மாவின் நிலை என்ன ஆனது? இந்த பயணத்தின் மலர்ந்த காதல் கைகூடியதா? என்பதை சுவாரஸ்யமாக கூறுகிறது கதை ❤


மூன்று காலக்கட்டமா பயணப்பட்டது நல்ல கற்பனை ❤ சுயநலத்திற்காக வந்தாலும் பொது நலனா செயல்பட வைத்தது அருமை ❣️


சுதந்திர போராட்டத்திற்கான காலக்கட்டத்திற்க்கு சென்றது ரொம்ப நல்லா இருந்தது மனசுல நிக்குது❣️ அவங்க எவ்வளவு உயிர் தியாகங்கள் செய்திருக்காங்க நம்ம இப்ப இந்த சுதந்திரத்தை அனுபவிக்க. அந்த காலக்கட்டத்திற்க்கு கூட்டி சென்றதர்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏


சங்கரின் காதலில் அவனும் குழம்பி நம்மளையும் குழப்பிவிடுறான். அவனின் மத்த செயல்களில் இருந்த நிதானமும் சமயோசித புத்தியும் அருமை ஆனால் காதலில் அவனின் நிலைபாடு எனக்கு ஏற்புடையதா இல்லை 😓


இன்னும் கொஞ்சம் வார்த்தைகளில் தெளிவும் அழுத்தமும் இருந்திருந்தா மிகவும் நல்ல படைப்பா அமைந்திருக்கும் ❤


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
Top