ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 37- மகிழனின் விழி அவள்

தமிழனின் விழி அவள்
ஆசிரியர்: சக்தி தாரா
நாயகன்: அகமகிழன்
நாயகி: மகிழ்விழி
நம்ம நாயகி மகிழ்விழி பெற்றோர் கவியரசி வெண்மதியன் அத்தை கீர்த்தனா இவங்களோட பாசத்தையும் நேசத்தையும் ஒருங்கே பெற்று வளரும் வீட்டிற்க்கு ஒற்றை வாரிசு....🥰🥰🥰🥰🥰 நல்ல கலகலப்பான பெரிய நட்பு வட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியிலும் ஒன்றாக வெவ்வேறு துறைகளில் பயில்கின்றனர்....🤍🤍🤍🤍🤍🤍

அங்கே இசையில் ஆர்வம் உடைய ஆசிரமத்தில் வளர்ந்து வரும் இசையவனின் நட்பு வருகிறது..
இசையவனுக்கு பார்த்த முதல் சந்திப்பில் இருந்து மகிழ் மேல் காதல் மகிழ்விழியும் இசையவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள்....💙💙💙💙💙
மதுசூதனன் என்ற புகழ்பெற்ற தொழில் அதிபர் உடன் மகிழுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்கிறார் வெண்மதியன் ❤️❤️❤️❤️

அதை தெரிந்து கொண்ட இசையன் மகிழ் விழியை திருமணம் செய்ய இருக்கும்போது இசையவனுக்கு விபத்து ஏற்ப்பட்டது இறந்து விடுகிறார்...
இசையவனுக்கு ஏற்ப்பட்டது விபத்தா
மதுசூதனன் யார்
மகிழ்விழியன் எப்படி மகிழை திருமணம் செய்தான் என்பதை எழுத்தாளர் எதார்த்தமான முறையில் சொல்லி உள்ளார்....
காதலன் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமலும் நண்பனே கணவனாக மாறிய விதியின் முடிவை ஏற்று வாழ முடியாமலும் போராடும் பெண்ணின் மனதை எழுத்தாளர் அழகான முறையில் சொல்லி உள்ளார்...
சிறுவயதில் இருந்தே நண்பராக இருந்த ஒருவரை சூழ்நிலை காரணமாக கணவனாக மாற்றி ஏற்றுக்கொள்ள முடியாமலும் காதலனின் இழப்பை மறக்க முடியாமல் மகிழ்விழி தவிப்பது மிகவும் வேதனையான உண்மை..... மகிழன் உண்மையான நண்பனாக தோள் கொடுத்து கணவனாக மகிழ் மனம் மாறும் வரை பொறுத்து கொண்டு இடைவெளி கொடுத்து அதில் சிக்கி சின்னா பின்னம் ஆகுவது என சராசரி கணவனாக வருகிறான்...
போதைப்பொருள் கடத்தலை கண்டுபிடிக்கும் காவல் அதிகாரியாக மகிழன் சட்ட வல்லுநராக மகிழ் என இரண்டு பேரும் நல்ல பொறுப்பில் இருக்கின்றனர்
இசையவனின்இறப்பிற்க்கு காரணம் யார் என்பதை கண்டறிய நாயகிக்கு உதவியாக நாயகனும் சேர்ந்து போராடும் விதம் அருமை...
சிறுவயது நட்பு பள்ளிப் பருவம் கல்லூரி காதல் பெற்றோர்கள் பாசம் துரோகம் என கலந்து எழுத்தாளர் சொல்லி உள்ளார் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 ❤️ 🧡 🧡 🧡 🧡 🧡
 
Last edited:
மகிழனின் விழி அவள் விமர்சனம்

நாயகன் அகமகிழனும் நாயகி மகிழ்விழியும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாக பயிலுபவர்கள் ..கல்லூரியில் இசையவன் மகிழ்விழியை விரும்ப மகிழ்விழியும் இசையவனை விரும்புகிறாள் ..நாயகி மகிழ்விழி மனதில் இசையவன் இருக்க அவளை திருமணம் செய்ய நினைக்கிறான் மதுசூதனன்..திருமணத்தை இசையவனுடன் நடத்த நினைக்கும் போது எதிர்பாராத விதமாக இசையவன் இறக்க மகிழ்விழிக்கு அவள் நண்பன் அகமகிழனுடன் திருமணம் நடக்கிறது..மனதில் ஒருவன் இருக்க நண்பனுடன் நடந்த திருமணத்தை ஏற்க முடியாமல் தவிக்கும் மகிழ்விழி..திருமணத்திற்கு பிறகு இவர்கள் வாழ்க்கை எப்படி செல்கிறது..மகிழ்விழி மகிழனை ஏற்றுக்கொண்டாளா?
நாயகனுடன் போதைப்பொருள் கூட்டத்தை பிடிக்க செல்லும் மகிழ்விழி அங்கு எதிர்பாராத விதமாக தன் தோழியை சந்திக்கிறாள் .. இவர்கள் எப்படி அந்த கூட்டத்தை பிடித்தனர் ? இசையவனின் இறப்பின் காரணம் யார் ? விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம்...

மகிழ்விழி தாய் தந்தை அத்தை என அனைவரின் பாசமும் பெற்ற குடும்பத்திற்கு ஒற்றை வாரிசு ...இவள் வழக்கறிஞர் ..மகிழ்விழி அகமகிழன் ரம்யா என நண்பர்கள் மூன்று பேரின் சிறுவயது நட்பு பள்ளிப்பருவம் எல்லாமே நல்லா இருந்தது.. கல்லூரியில் இசையவனின் காதல் இவள் தன்னை மறைத்துக் கொண்டு அவனுடன் பழகும் விதம், மகிழ்விழியின் இசையவன் மீதான காதல் எல்லாம் படிக்க நல்லா இருக்கு...👍👍

மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு அவனின் இறப்பினை ஏற்க முடியாமலும் நண்பனை கணவனாக ஏற்க முடியாமல் தவிக்கும் பெண்ணிண் இயல்புகளை ஆசிரியர் நல்லா சொல்லி இருக்காங்க..

இறுதியில் மகிழனை அவள் ஏற்றுக்கொண்ட விதமாகட்டும்,..தன் காதலனோட இறப்புக்கு நீதி கிடைக்க தன் கணவனோடு சேர்ந்து ஆதாரம் திரட்டுறதுலாம் 👍


வெண்மதியன் ஒரு நல்ல தந்தை ..மகிழ்விழிக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உறுதுணையாக நின்னாங்க.

அகமகிழன் போலீஸ் அதிகாரி..நண்பணோட கடைசி ஆசையை நிறைவேற்ற தன் நண்பியை கல்யாணம் பண்ணிக்கிறான் .. ஆரம்பத்துல அவளுக்கு டைம் கொடுத்து ஒதுங்கி இருக்கான்..அவளை மனைவியா பார்க்க ஆரம்பிச்ச பிறகு ஆளுக்கு இருக்க முடியல 🤭🤭 காவல்துறை அதிகாரியா மாஸ் காட்டுறான் நம்ம மகிழன்.. மதுசூதனனுக்கு எதிரா ஆதாரம் திரட்ட சூப்பர் ஹீரோ வேலைலாம் பார்க்கறான்.. இறுதியில் இசையவனின் இறப்பிற்கு காரணமானவனை கண்டுபிடித்து நீதி வாங்கி குடுத்தது அருமை 👏👏

இசையவனின் அவன் விழிமா மீதான காதல் அருமை.. இவன் இறப்பு பாவமா இருந்தது😒

மதுசூதனன் இவன் லாம் மனுசனா விருப்பமில்லாத பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண அவ லவ் பண்ணுறவன கொண்ணு , போதைப்பொருள் சப்ளைனு பண்ணுறது லாம் வில்லத்தனம்.. இறுதியில் இவனுக்கு நேர்ந்த கதி திருப்தியா இருந்தது..

எங்கடா அவ பிரண்டு ரம்யாவ காணோமேனு நினைச்சுட்டு இருந்தேன்..பரவால்ல ஆசிரியர் அவளை உள்ளே இழுத்துட்டாங்க சரஞ்சித் மனைவியா...


கீர்த்தனாவின் மகிழன் மீதான பாசம்❤️ வேந்தனின் மகிழன்மீதான அன்பு அக்கறை எல்லாம் நல்லா இருந்தது..

இடையிடையே சிறு சிறு எழுத்துப் பிழைகள் உள்ளது..யார் கேரக்டர் எந்த டைம் வர்ராங்கன்னு சரியா தெரியல..உரைநடை அமைப்பில் கதை இருந்த மாதிரி தெரிஞ்சது..நல்ல கான்செப்ட் கதை..சில எழுத்துப்பிழைகள் இல்லைனா கதை நல்லா அமைந்திருக்கும்...

ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
 
மகிழனின் விழி



காதலித்தவனுடன் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் காதலன் இறந்திட, அவனின் நண்பனை மணக்கிறாள் நம் நாயகி விழி.

கல்லூரியில் பார்த்த நிமிடத்திலே விழி மீது காதல் கொள்கிறான் இசையவன். இதற்கிடையில் தொழிலதிபர் மதுசூதனன் திருமணம் செய்ய அவளின் தந்தை ஏற்பாடு செய்ய, விழியின் காதலன் இசை விபத்தில் உயிரை விடுகிறான்.

இது சாதாரண விபத்தா.? இல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தா.? மதுசூதனன் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்.?

காதலனின் இறப்பை தாங்க முடியாமல் இருக்கும் நேரத்தில் மகிழன் விழியை எவ்வாறு திருமணம் செய்தான்.?

அதன் பிறகு மகிழனுடன் இருந்து போதைப்பொருள் கடத்தலை கண்டுபிடிக்க செல்வது அருமை.

சிறுவயதில் நண்பனாக இருந்தவனை கணவனாக ஏற்பது கஷ்டம் தான்.. மகிழனை விழி எவ்வாறு ஏற்றாள்.? இசையவனின் விபத்திற்கான காரணத்தையும் கண்டறிந்தாளா.? என்பதே கதை.

விழியின் குடும்பம் அருமை..

விழியை திருமணம் செய்து கொண்டு அவளுக்கான நேரத்தை குடுத்து தள்ளி நின்ற மகிழனும் அருமை..

தன் நண்பனுக்காக விழியை திருமணம் செய்வது எல்லாம்😍😍😍😍

கதை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது..

போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
Top