மகிழனின் விழி அவள் விமர்சனம்
நாயகன் அகமகிழனும் நாயகி மகிழ்விழியும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாக பயிலுபவர்கள் ..கல்லூரியில் இசையவன் மகிழ்விழியை விரும்ப மகிழ்விழியும் இசையவனை விரும்புகிறாள் ..நாயகி மகிழ்விழி மனதில் இசையவன் இருக்க அவளை திருமணம் செய்ய நினைக்கிறான் மதுசூதனன்..திருமணத்தை இசையவனுடன் நடத்த நினைக்கும் போது எதிர்பாராத விதமாக இசையவன் இறக்க மகிழ்விழிக்கு அவள் நண்பன் அகமகிழனுடன் திருமணம் நடக்கிறது..மனதில் ஒருவன் இருக்க நண்பனுடன் நடந்த திருமணத்தை ஏற்க முடியாமல் தவிக்கும் மகிழ்விழி..திருமணத்திற்கு பிறகு இவர்கள் வாழ்க்கை எப்படி செல்கிறது..மகிழ்விழி மகிழனை ஏற்றுக்கொண்டாளா?
நாயகனுடன் போதைப்பொருள் கூட்டத்தை பிடிக்க செல்லும் மகிழ்விழி அங்கு எதிர்பாராத விதமாக தன் தோழியை சந்திக்கிறாள் .. இவர்கள் எப்படி அந்த கூட்டத்தை பிடித்தனர் ? இசையவனின் இறப்பின் காரணம் யார் ? விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம்...
மகிழ்விழி தாய் தந்தை அத்தை என அனைவரின் பாசமும் பெற்ற குடும்பத்திற்கு ஒற்றை வாரிசு ...இவள் வழக்கறிஞர் ..மகிழ்விழி அகமகிழன் ரம்யா என நண்பர்கள் மூன்று பேரின் சிறுவயது நட்பு பள்ளிப்பருவம் எல்லாமே நல்லா இருந்தது.. கல்லூரியில் இசையவனின் காதல் இவள் தன்னை மறைத்துக் கொண்டு அவனுடன் பழகும் விதம், மகிழ்விழியின் இசையவன் மீதான காதல் எல்லாம் படிக்க நல்லா இருக்கு...

மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு அவனின் இறப்பினை ஏற்க முடியாமலும் நண்பனை கணவனாக ஏற்க முடியாமல் தவிக்கும் பெண்ணிண் இயல்புகளை ஆசிரியர் நல்லா சொல்லி இருக்காங்க..
இறுதியில் மகிழனை அவள் ஏற்றுக்கொண்ட விதமாகட்டும்,..தன் காதலனோட இறப்புக்கு நீதி கிடைக்க தன் கணவனோடு சேர்ந்து ஆதாரம் திரட்டுறதுலாம்
வெண்மதியன் ஒரு நல்ல தந்தை ..மகிழ்விழிக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உறுதுணையாக நின்னாங்க.
அகமகிழன் போலீஸ் அதிகாரி..நண்பணோட கடைசி ஆசையை நிறைவேற்ற தன் நண்பியை கல்யாணம் பண்ணிக்கிறான் .. ஆரம்பத்துல அவளுக்கு டைம் கொடுத்து ஒதுங்கி இருக்கான்..அவளை மனைவியா பார்க்க ஆரம்பிச்ச பிறகு ஆளுக்கு இருக்க முடியல


காவல்துறை அதிகாரியா மாஸ் காட்டுறான் நம்ம மகிழன்.. மதுசூதனனுக்கு எதிரா ஆதாரம் திரட்ட சூப்பர் ஹீரோ வேலைலாம் பார்க்கறான்.. இறுதியில் இசையவனின் இறப்பிற்கு காரணமானவனை கண்டுபிடித்து நீதி வாங்கி குடுத்தது அருமை

இசையவனின் அவன் விழிமா மீதான காதல் அருமை.. இவன் இறப்பு பாவமா இருந்தது
மதுசூதனன் இவன் லாம் மனுசனா விருப்பமில்லாத பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண அவ லவ் பண்ணுறவன கொண்ணு , போதைப்பொருள் சப்ளைனு பண்ணுறது லாம் வில்லத்தனம்.. இறுதியில் இவனுக்கு நேர்ந்த கதி திருப்தியா இருந்தது..
எங்கடா அவ பிரண்டு ரம்யாவ காணோமேனு நினைச்சுட்டு இருந்தேன்..பரவால்ல ஆசிரியர் அவளை உள்ளே இழுத்துட்டாங்க சரஞ்சித் மனைவியா...
கீர்த்தனாவின் மகிழன் மீதான பாசம்

வேந்தனின் மகிழன்மீதான அன்பு அக்கறை எல்லாம் நல்லா இருந்தது..
இடையிடையே சிறு சிறு எழுத்துப் பிழைகள் உள்ளது..யார் கேரக்டர் எந்த டைம் வர்ராங்கன்னு சரியா தெரியல..உரைநடை அமைப்பில் கதை இருந்த மாதிரி தெரிஞ்சது..நல்ல கான்செப்ட் கதை..சில எழுத்துப்பிழைகள் இல்லைனா கதை நல்லா அமைந்திருக்கும்...
ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!