ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 4- அகமாளவந்த அகவாளனே!

ஆண்டாள் வெங்கட்ராகவனின்

அகமாளவந்த அகவாளனே


தமிழறிவாளன்….நறுவீ


முதல் திருமணம் பல எதிர்ப்பார்ப்புகளை விதைத்து,ஏமாற்றங்களையும் ஏமாற்றங்களை மாறி, விரக்தியின் விளிம்பில் தள்ளி கணவனை பிரிந்து தாய் வீடு வர,அங்கோ அவளை தாங்கவில்லை என்றாலும் பராவாயில்லை, பாரமாக கருதுகின்றனர்.




இந்நிலையில் அவளை கரம் பிடிக்கிறான் நம் நாயகன் .

விவாகரத்து ஆன பெண் என சிலபல சங்கடங்களை அவள் அங்கு சந்தித்தாலும்,இதெல்லாம் என்னை பாதிக்காது ,இதனை விட பல மடங்கு நான் இதற்கு முன் சந்தித்துவிட்டேன்,என்ற மனோபாவத்தில் வலம் வருகிறாள்.




ஒட்டியும் ஒட்டாமலும் வலம் வந்தாலும் அவ்வீட்டில் அவளுக்கான அழகான அன்பான உறவாக கணவன் தம்பி அவளிடம் பாசமாய் ஒட்டி கொள்ள இருவருக்குமான பிணைப்பு அழகியல் தான்.


ஒரு கட்டத்தில் தன் அண்ணன் ஏன் அண்ணியை திருமணம் செய்தான் என காரணம் அறிய, அண்ணனிடம் மிகுந்த,அண்ணின் செயல் ஏமாற்றமும் கோபத்தையும் ஒருங்கே கொடுக்க ,கோபத்துடன் தன் அண்ணனையே எதிர்த்து சண்டையிடுகிறான்.



என்ன தான் தம்பி தன்னிடம் சண்டையிட்டாலும் ,தம்பிக்கு தன் மனைவி மீதான பாசம் அவனுக்கு உவகையே அளிக்கிறது.



தமிழின் தாய்க்கு விவாகரத்து ஆன பெண் என நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் இருக்க, அவரது மாமியாரோ வார்த்தைகளால் குதறுகிறார்.



மெல்ல அவள் கடந்த கால காறங்களை ஆற்றி அவளை தன் அன்பால் தனக்குரியவளாக மாற்றி வாழ்க்கையின் இனிமையான பக்கங்களை அவள் பக்கங்களாக மாற்றி அழகான புரிதலான வாழ்கையை இருவரும் வாழும் நேரம்,


தன் முதல் கணவனின் இரண்டாம் மனைவியை சந்திக்க நேரிடுகிறது.



நறுவீ முதல் மணவாழ்க்கை முறிவதற்கான காரணமென்ன..



தமிழின் தாய் நறுவீயை பிடிக்காவிட்டாலும் அவளை திருமணம் செய்வதற்கான காரணம் தான் என்ன?


தமிழ் நறுவீயை திருமணம் செய்வதற்கான காரணம் தான் என்ன???



என பல வினாளுக்கான விடையை அறிய



வாசித்திடுங்கள்…

அகமாளவந்த அகவாளனே


அகமாளவந்த அகவாளனே …சுகவாசம்



வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖 💖
 
அகமாளவந்த அகவாளனே!


முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இரண்டாம் திருமணம் எங்ஙனம் நம் நாயகியின் வாழ்வை வசந்தமாக்கிறது என்பதே கதை.

நம்ம நாயகன் தமிழ்.. நாயகி நறுவீ யை காதல் கொள்ள, அவளோ வேறு ஒருவனுக்கு மனைவியாகிறாள். அங்கு படாதபாடு பட்டு அத்திருமணமும் தோல்வியை தழுவிட, பொய் கூறி தன் காதலியை மணக்கிறான் தமிழ்.

குழந்தையில்லாமல் போனால் ஊர் உலகம் என்ன என்ன பேசும் என்பதை அனைவரும் அறிந்ததே. நறுவீக்காக தன் அன்னையிடம் தனக்கு குழந்தையே பிறக்காது என்று கூறி அவளை திருமணம் செய்தது எனக்கு சிலிர்த்தது.

மரத்து போயிருந்த பெண்ணவளின் உணர்வுகளை மீட்டு அவளை அவனுக்காக எப்படி தமிழ் மாற்றினான் என்பதே இக்கதை.

இளங்கோ தன் அண்ணிக்காக நின்றது அருமை.. ஆனா நிஜத்தில் கொழுந்தன் என்ற ஒருவன் எதற்காக நமக்கு இருக்கிறான் என்பதை தெரியாது. அந்தளவிற்கு மோசமாக தான் இருக்கிறார்கள்.

நறுவீ பெற்றோரை என்னவென்று சொல்ல.? தன் பிள்ளைக்காக நிற்காத இவர்கள் எல்லாம்🤦🤦🤦🤦 இதற்கு காமாட்சியே பரவால்ல போல..

நறுவீயை தனக்கவளாக மாற்றிய தமிழின் காதல்😍😍😍😍

கதை அருமை..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
Top