ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 5- நிழலாய் தொடரும் நிழல்

#நிழலாய்_தொடரும்_நிழல்…
#கௌரிஸ்ரிவ்யூ

கிரைம் & குடும்ப கதை…..

லக்ஷ்மணா…. இன்ஸ்பெக்டர்…போலீசுக்குகே உண்டான துடிப்பும், இறுக்கமும் கலந்து இருந்தாலும்…

குடும்பத்தின் மீது பாசக்காரி🤩🤩🤩🤩🤩

அவளை கல்யாணம் செய்தா, நம்ம comfort zone லையே இருக்கலாம்னு அவளோட மாமா பையன் அசோகன் அவளிடம் கேட்க….

அவளும் சரின்னு சொல்றா….கூடவே மாமா, அத்தையின் மீது கொண்ட அதீத பாசத்தால்…..

அம்மா இல்ல….அப்பா இருந்தும் இல்லாத நிலை தான்…..

இவங்க கல்யாண வேலையும் ஒரு பக்கம் நடக்க…இன்னொரு பக்கம் சீரியல் கில்****லர் வழக்கு….

அசோகனுக்கு, தன் வருங்கால வாழ்க்கை துணை அப்படினு லக்ஷ்மணவை அறிமுக படுத்த, ஊரை சுற்ற ஆசை….அவளுக்கோ வேலை பழு…..

வேலைக்கும், வீட்டுக்கும் அவள் அல்லல் பட…. அசோகனுக்கோ சலிப்பு….

இந்நிலையில், அசோகனை உருகி உருகி காதலிக்கும் நண்பனின் தங்கை கன்னியா….

சந்தரப்ப வசத்தால், அவளின் காதல் அசோகனுக்கு தெரிய வர…..

கன்னியாவின் காதலா?????

லக்ஷ்மணாவோடு கல்யாணமா??????

அசோகன் choice கன்னியாவின் காதலா இருந்தா….லக்ஷ்மணாவின் நிலை??????

இது தான் மீதி கதை…..

லக்ஷ்மணா…பாசக்காரியா இருக்கரவளை குடும்பமா சேர்ந்து பழி வாங்கிட்டாங்க….பாசத்தை காட்டி😔😔😔😔😔….

சில இடங்களில்…இவ ஏன் இப்படி இருக்கா அப்படினு ரொம்ப ஆத்திரமா வந்தது…..

அதன் உச்சம்…. அந்த ஹாஸ்பிடல் சீன்😬😬😬😬😬……

அலெக்ஸ்….ஏனோ இவனை ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப பிடிச்சது….அவள் மேல் காட்டும் சின்ன சின்ன அக்கறையில் இருந்து….அவள் அவனை மறுத்திட்டா அப்படினாலும் எதிர்பார்ப்பில்லா பாசம் ரொம்ப நல்லா இருந்தது 🤩🤩🤩🤩🤩🤩….

அதும் அந்த லாஸ்ட் சீன்ல….கண்ணு எல்லாம் கலங்கி….just wow அவனோட expression♥️♥️♥️♥️♥️….

அசோகன்…..இவன் அவனுக்கு வாழ்க்கை துணையை தேடல….காதல் செய்து, அவனை அரவணைக்கும் ஒரு அடிமையை தான் தேடினான்….

அது லக்ஷ்மணா கிட்ட போதிய அளவில் கிடைக்காமல்…மலர் விட்டு மலர் தாவும் வண்டாக தாவிட்டான்…..

எவளோ பெரிய துரோகம் இது அவளுக்கு?????

ஆன அவளை வளர்த்த மாமா, அத்தைக்கே….அவங்க பையனின் துரோகம் கண்ணுக்கு தெரியல…

அவனின் சந்தோஷமே தெரிய….

இங்கே, லக்ஷ்மணாவின் நிலை தான் என்ன????

கன்னியா…..முதலில் இவளின் காதலில் ரொம்ப வியந்து தான் போனேன்…..

தாலி ஏறிய உடன்….லக்ஷ்மணாவும் தன்னை போல பெண் தான் என்பதை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்ட விதம்😬😬😬😬😬

ச்சை என்ன சுயநல பிசாசு இவள்😤😤😤🙄🙄🙄

திப்பு….தயவு செய்து காதல்னு சொல்லாதே…எரிச்சலா வருது😏😏😏😏😏

ஆதித்தன், அலெக்ஸ் போல இவனும் உண்மையான பாசம் கொண்டவன் தான்….லக்ஷ்மணாவின் தம்பி…..

கிரைம் சீன்ஸ் எல்லாமே சூப்பரா இருந்தது….

அலெக்ஸ், லக்ஷ்மணா வாழ்க்கையை கொஞ்சம் காட்டி இருக்கலாம் ரைட்டர் நீங்
க…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
நிழலாய் தொடரும் நிழல்: போலீஸ் ஆபிஸராக நம் நாயகி இலஷ்மணா வீட்டின் ரின் விருப்பத்தின் பேரில் மாமன் மகனான அசோகனை மணக்க சம்மதிக்கிறாள்... திருமண அழைப்பிதழ் நண்பனுக்கு கொடுக்க செல்லும் இடத்தில் நண்பனின் தங்கை. கன்னிகாவும் சிறுவயது முதலே அசோகனைகாதலிப்பது தெரியவருகிறது .... இலஷ்மணா போலீஸ் ஆபிசராக இருப்பதனால் தொடர் கொலை வழக்கில் மிகவும் பிசியாக இருக்கிறார் அதனால் அசோகனுடன் நேரம் செலவிட முடியாத நிலை இருவரையும் சேர்த்து வைத்து பார்த்ததில் தன்னை அளவுக்கு அதிகமாக காதலிப்பதாக கூறும் கன்னிகாவையே மனைவியாக ஏற்றுக் கொண்டு இலஷ்மணா உடனான திருமணத்தை எப்படி நிறுத்துவது என தினறும் நிலை... என்ன காரணமாக இருந்தாலும் அசோகன் இலக்ஷ்மணாவுக்கு பண்ணது மிகப்பெரிய துரோகம்.... கதையின் நாயகன் அலேக்ஸ் ப்ளே பாயாக இருந்து இலஷ்மணாவிற்க்காக மனத்திருப்தி அவளை கல்யாணம் செய்தாரா தொடர் கொலைகளுக்கு காரணம் என்ன கொலைகாரன் யார் என்பதை நோக்கி கதை நகர்கிறது..... மிகவும் விறுவிறுப்பான கதை கரு வாழ்த்துக்கள் 🥰 🥰 🥰 🥰
 
இந்த கதையோட நாயகி இலக்ஷமணா
இவ ஒரு‌ போலீஸ் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி..அன்பும் அதே சமயம் அழுத்தமும் நிறைஞ்ச பொண்ணு.அம்மா இல்லாமல் தகப்பனும் இருந்தும் இல்லாத சூழல்ல தாய்மாமன்களால வளர்க்கப்படுற இவளுக்கு தன் குடும்பத்து மேல ரொம்பவே பாசம் அதிகம்..இதனாலயே தன் மாமன் மகன் தன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்கும் போது கடைசிவரை தன் குடும்பத்து கூட இருக்கலாம்ன்ற நினைப்புல அவனுக்கு சம்மதமும் சொல்லிடுறா ..

அசோகன் இவன் தான் அவளோட மாமன் மகன்.. இவனுக்கும் இலக்ஷமணாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா தன்னோட கம்பர்ட் ஜோன்லயே இருக்கலாம்னு நினைச்சு அவள கல்யாணம் பண்ணிக்க கேக்குறான்..

இலக்ஷமணாக்கும் இவனுக்கும் கல்யாணம் நடிக்க இருக்க டைம்ல ஒரு வித்தியாசமான சீரியல் கில்லிங் கேஸ்ல அவளோட போகஸ் புல்லா இருக்கு..அவளோட வேலைப்பளுனால அசோகன் கூட சரியா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலை..அவளும் ட்ரை பண்றா பட் சிச்சுவேசன் அப்படி அமையல.. இதனால் அசோகனுக்கும் அவள்மேல கோவம் வருது..

நண்பர்கள் தூண்டுதலாலயும் இலஷ்மணாவோட வேலைப்பளுனாலயும் அசோகனோட மனசுல கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பு உண்டாக ஆரம்பிக்கிது.. அதுலயும் அவனோட ப்ரண்ட் நன்மாறன் மட்டும் தான் அவளோட நிலைல இருந்து பேசுறான்..

இன்னொரு பக்கம் அசோகனுக்கும் தன் நண்பனோட தங்கை தன்னை ஒருதலையாக விரும்புறது தெரியவருது..இதனால மனசு தடுமாறும் அசோகனுக்கு இலக்ஷமணாகூட கல்யாணம் வேண்டாம் நிலைக்கு யோசிச்சு அவன் மனமும் நண்பனின் தங்கை பக்கம் சாய்ந்து ஒரு சிச்சுவேசன்ல அவகூட கல்யாணம் நடந்துடுது...

இலக்ஷ்மணாவும் அவளோட உயர் அதிகாரியான அலெக்ஸூம் சேர்ந்து ஒரு மஞ்சள் நிற பேப்பர்ர மட்டும் எவிடென்ஸ்ஸா வச்சு கொலையாளிய தேடிட்டு இருக்காங்க.. இன்னொருபக்கம் இலக்ஷமணாக்கும் அசோகனுக்கும் திருமண ஏற்பாடு நடந்துட்டு இருக்கு..அசோகனுக்கு திருமணம் ஆன விசயம் அவங்க குடும்பத்துக்கு தெரியவருது அவனோட நண்பணாண திப்புமூலமா தெரியவந்து கல்யாணம் நின்னுடுது..

இது தெரியவர்ர இலக்ஷமணாவும் ரொம்ப உடைஞ்சு போயிடுறா..அந்த துரோகத்துல இருந்து வெளிவந்து தன்னை மீட்டிக்க இந்த கேஸூல ரொம்ப இன்வால்வ்வா இருக்கிறா..இவள விரும்புற இவளோட மேலதிகாரியான அலெக்ஸூம் இவளுக்காக தன்னோட கருப்பு பக்கங்களை மாத்திக்கிட்டு அவளுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கான்.. இவளுக்கு சப்போர்ட்டா இருக்கது அலெக்ஸூம் அவளோட தம்பி ஆதித்தன் மட்டும்தான்.

தன் புகுந்த வீட்டு சொந்ததுக்கு தான் தான் முதலா நினைக்கிற அசோகன் மனைவி கன்னியாக்கு இலஷ்மணா மேல கோவம் வருது.. ஆனா அசோகனும் அவளுக்கு புரிய வச்சிடுறான்.. இருந்தாலும் அவளுக்கு ஏத்துக்க முடியலை..இதனால அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுது ‌..அதுக்கு காரணம் இலஷ்மணானு கன்னியா அண்ணண் திப்பு சொல்றதுக்கு அவங்க மாமா குடும்பம் ஏத்துக்கிட்டு இலஷ்மணா மேல நம்பிக்கை வைக்கல.. தன்னோட மரு மகள்ன்னு வரும்போது வளர்த்த பொண்ணு மேல இருக்க நம்பிக்கையை உணராமல் அவள நம்பாம இருக்காங்க அவங்க மாமா குடும்பம்..அவங்க மாமா குடும்பத்துமேல இருக்க அன்பால அவ மரணம் வரை போய் மீண்டு வர்ரா...அந்த ஹாஸ்பிடல் சீன்ல ரொம்ப கஷ்டமா போச்சு... ஆனா அவ எல்லாருக்கும் கொடுத்த பதிலடி ரொம்ப சூப்பர்..கடைசியாக கொலையாளியையும் கண்டுபிடிச்சுடுறா...

இலஷ்மணா ஒரு நல்ல துடிப்பான போலீஸ் அதிகாரியா காட்டுனது ரொம்ப நல்லா இருந்துச்சு..

அவளோட தம்பி ஆதித்தன்..இவனோட கேரக்டர் சூப்பர்..இப்படி ஒரு தம்பி கிடைக்க ரொம்ப கொடுத்து வைக்கனும்..

அலெக்ஸ்..- இலக்ஷ்மணாக்கு ஏத்த நல்ல ஜோடி ..இவங்களுக்கு இன்னும் கொஞ்சம் சீன்ஸ் வச்சு இருக்கலாம்...அவனோட காதலுக்காக தன்னோட தப்பை எல்லாம் மாத்திக்கிட்டு இலக்ஷமணாக்காக எப்பவும் நின்னான் ...நல்ல வேளை இரண்டு பேரும் ஜோடி சேர்ந்துட்டாங்கன்னு இருந்துச்சு...

அசோகன் - என்ன சொல்லலாம்..ஒரு முடிவு செய்ய தெரியாத தடுமாற்றம் மனசு கொண்ட சராசரி மனிதன்..அவன் செஞ்சது தப்பு தான் .

திப்பு - இவனே மொதல்ல இலக்ஷமணாவ அடிப்பானாம் அப்றோம் லவ் சொல்வானாம் போடா டேய் அப்படினு இருந்துச்சு..நல்ல வேலை இவன் கூட ஜோடி சேர்க்கல..

கன்யா - இவ லவ்வு ஓகேவா இருந்தாலும் இலக்ஷமணாகிட்ட இவ நடந்துகிட்டது ஓவர்தான்.. எல்லாமே தனக்கு தான் வேணும்னு நினைக்கிறவ

ஸ்டோரி ரொம்ப நல்லா இருந்துச்சு படிக்கும் போது...அடுத்த எபிசோட் படிக்க ரொம்ப ஈகர்ரா இருந்துச்சு.. சீக்கிரமே முடிஞ்ச மாதிரி இருக்கு கதை...ரொம்ப நல்ல சஸ்பென்ஸ் கதை...

ஆசிரியர்
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
Last edited:
#நிழலாய்_தொடரும்_நிழல்
#விமர்சனம்

நாயகன்: அலெக்ஸாண்டர்

நாயகி: இலக்ஷ்மணா

க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டரான நாயகி இலக்ஷ்மணா தாய் இறந்ததும் தகப்பனால சொந்த தாய்மாமன்மார் கிட்ட ஒப்படைக்கப்பட்டு ரொம்ப அன்பா வளர்க்கப்படுறா. குடும்பத்து மேல ரொம்ப பற்று இருக்கிற அவ தாய்மாமா மகனான அசோகனை கல்யாணம் பண்ண முடிவெடுக்குறா. ஆனா அவ விசாரிக்குற ஒரு கொ*லை கேஸ் அவளை கல்யாண வேலைகள்ல முழுசா ஈடுபட விடல. அந்த நேரத்தில அசோக்கோட மனசு அவன் பால்ய நண்பனான திப்புவோட தங்கை கன்னியா பக்கம் சரியுது. ஒரு சிக்கலான சூழல்ல வீட்டுக்கு தெரியாம கன்னியாவை கல்யாணம் பண்றவன் ஒரு கட்டத்தில வீட்ல சொல்லிடுறான் ஆனா இலக்ஷ்மணாக்கு கடைசி நேரத்திலதான் தெரியுது. ஊரக்கூட்டி அவங்க கல்யாணத்தை நடத்துறாங்க அவ குடும்பத்தில இருக்கிறவங்க. இதில மனசளவுல இறுகி போற இலக்ஷ்மணாவை இன்னும் இன்னும் காயப்படுத்துறான் திப்பு தங்கைக்காக. கன்னியாவும் அவளை வீட்ல ஒருத்தியா பாக்க மறுக்குறா. ஒரு கட்டத்தில அந்த வீட்ல இருக்கிறவங்களால மறைமுகமா பல தடவை காயப்படுற இலக்ஷ்மணாக்கிட்ட காதலை சொல்றான் திப்பு. அவளோட சுப்பீரியர் அலெக்ஸும் அவக்கிட்ட காதலை சொல்ல அதை நிராகரிக்கிறா இலக்ஷ்மணா. இடைல இடைல அந்த கேஸோட விசாரணை நடக்குது. கடைசில குற்றவாளியையும் கண்டு பிடிக்கிறா இலக்ஷ்மணா. அதுக்கப்புறம் அவ யாரோட காதலை ஏத்துக்கிட்டாங்குறத கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்.👍👍👍

இலக்ஷ்மணா அவ குடும்பத்து மேல வைச்சிருக்கிற பாசம், அவ வேலைல காட்டுற ஈடுபாடு, குடும்பத்தோட துரோகத்தால மனசளவில போராடுறது, அந்த நிலைமையிலேயும் அவளோட நிமிர்வு, அவளோட தெளிவான தீர்க்கமான முடிவு இப்படி எல்லா விதத்திலேயும் ரசிக்க வைக்குறா. அலெக்ஸ் அவனோட இருட்டான கடந்த கால வாழ்க்கையால அவன் காதல் ஏத்துக்கப்படாம போனாலும் அவ மீதான அவனோட குறையாத காதல், அவளோட துன்பமான நேரத்தில அவக்கூட நிக்குற பாங்கு, அவளை காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அவளுக்காக அவன் கேரக்டரை மாத்திக்கிட்டது, அவளுக்கு கல்யாணம்னு தெரியும் போது மனசளவில காயப்படுறது இதெல்லாத்திலேயும் அவனும் ரசிக்க வைக்குறான்😍😍😍

மொதல்ல இலா மாதிரி நாமளும் அவ குடும்பத்தை உயர்வாத்தான் பாத்தோம். ஆனா பெத்த பையன்னு வரும் போது வளர்த்த மருமகளை அவங்க நடத்தின விதம், கன்னியாவுக்காக அவளை தொடர்ந்து காயப்படுத்தினது இதெல்லாம் பாக்கும் போது இலா எடுத்தது ரொம்ப நல்ல முடிவுன்னு சொல்லத் தோணுது. ஆதித்யன் அவ அப்பாவோட ரெண்டாவது மனைவிக்கு பொறந்தாலும் அக்காவுக்கு அருமையான தம்பி. அவ தளர்ந்து நிக்கும் போது தூண் மாதிரி தோள் குடுக்குறான் அவளுக்கு.❤️❤️ வளவன் பொறுப்பான அப்பான்னு எல்லா இடத்திலேயும் காட்டுறதுக்கு முயற்சி பண்ணினாலும் அவரும் ஒரு சுயநலவாதிதான்.🫤🫤🫤

அசோகனோட துரோகம் ஏத்துக்கவே முடியல. அவனையும் ஒரு மனுஷனாக்கூட மதிக்க முடியல. திப்பு மேல எனக்கு தாங்க முடியாத கோபம். தங்கைக்காக ஒரு பொண்ணை இந்தளவு அவமானப்படுத்துவானா ஒருத்தன். அவளை மனசளவிலேயும், உடம்பளவிலேயும் காயப்படுத்திட்டு எப்படி அவக்கிட்ட போய் காதலை சொல்றான் அவன். அவனும் அவனோட விளக்கமும். இப்படிப்பட்ட அவனை அவ தேர்ந்தெடுப்பான்னு எப்படி நினைக்குறாங்க அவனும் அவளோட வீட்டு ஆட்களும். அந்த இடத்தில ரொம்ப எரிச்சலை ஏற்படுத்திட்டான் திப்பு. கன்னியா இவளையும் என்னால ஏத்துக்கவே முடியல. இவ புருஷனால ஒரு பொண்ணு மனசளவில பாதிக்கப்பட்டிருக்கா. அவ அண்ணனால காயப்பட்டிருக்கா. ஆனா அவளுக்கு எல்லாரும் அவளைத்தான் தலைல தூக்கி வைச்சு ஆடணும்னு எண்ணம் சுயநலப்பிசா*சு. 😡😡

அலெக்ஸ், இலக்ஷ்மணா ரெண்டு பேரும் சேர்ந்து விசாரணை நடத்தி துப்பு துலக்கி அந்த கொலை*யாளியை கண்டு பிடிச்சது ரொம்ப சுவாரஸ்யமா இருந்திச்சு. விசாரணையை விறுவிறுப்பா கொண்டு போயிருந்தீங்க ரைட்டரே. இது மொத்தத்தில காதல்,குடும்பம், க்ரைம் எல்லாம் கலவையா சேர்ந்த கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே❤️❤️❤️❤️❤️❤️
 
Top