ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 6- மன்னவன் மயங்கும் மலரவள்

மன்னவன் மயங்கும் மலரவள் விமர்சனம்

நாயகன் குருசேத்ரன் தன் தாயை கவனிக்க தாதியை தேடி அவனின் நண்பி சுப்ரியாவின் உதவியை நாட அவளின் மூலம் அங்கு வேலைக்கு வரும் நம் நாயகி செம்பருத்தி..தன் தாயை கவனித்துக்கொள்ள வந்தவளையே பிறகு திருமணம் செய்து கொள்கிறான் நாயகன்..செம்பாவை திருமணம் செய்ய காரணம் என்ன ? அதற்கு பின் அவர்கள் வாழ்க்கை எப்படி சென்றது ? என்பதுதான் கதை...


நாயகன் குருசேத்ரன் சரியான கோபக்கார பேர்வழி ( சைக்கோதனமான லூசுன்னே வச்சிப்போம்) 😬 தன் தாய்மேல ரொம்ப பாசம் வச்சி இருக்கான் ..❤️ஒரு பொசசிவ்னே வச்சுக்கலாம்...கோபமாவே இருந்தாலும் தாய்க்கு மகன் சின்ன குழந்தை போலத்தானே அதுபோலவே மணியம்மைக்கும் குரு...யப்பா ஆனா அம்மா மேல ஓவர் பாசம்னால யாரையுமே நெருங்கவிடாம இருக்கறதுலாம் ரொம்பப்பா 😬 இதெல்லாம் பார்க்க என்ன மனிசன்டா இவன்னு தோணிச்சு..


திடீரென அவன் செம்பாவை திருமணம் செய்த பிறகு அவன் காட்டும் ரொமான்ஸ் என்ன 🙈 அவளுக்காக அவள் குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை லாம் பிடிச்சது..ஆனால் செம்பாவை கல்யாணம் பண்ணுறதுக்காக அவன் சொன்ன காரணம் பிடிக்கல😒படுபாவிப்பய ...


நாயகி செம்பருத்தி இவ குடும்பம் ஐந்து அக்கா தம்பினு பெரிய‌குடும்பம்..தன் குடும்ப சூழலுக்காக மணியம்மையை பார்த்துக்க வர்ரா..இவளும் மணியம்மையும் சேர்ந்து வர்ர சீன்ஸ் நல்லா இருந்தது..😍மோதலில் ஆரம்பிப்பது காதலில் முடியும்னு சொல்வாங்க ம்க்கும் இவன்லாம் காதல்ன்னா என்னன்னு கேட்பான் பயபுள்ள..அந்த அளவு கோவம் இருக்கு இவனுக்கு.

புயலில் சிக்கிய இருக்கும் பூவைப்போலத்தான் செம்பாவின் நிலை ...ஏன் தன்னை திருமணம் செய்கிறான் என்று தெளிவடைவதற்கு முன்னமே வாழ்க்கை ஆரம்பிக்கப்பட இவளுக்காக அவளின் குடும்பத்திற்கு பார்த்து பார்த்து செய்ற குருவின் மேல் இவளுக்கும் பிடித்தம் உண்டாகிறது.. ஆனால் குருவின் திருமணத்திற்கான உண்மைகாரணம் தெரிந்த பிறகு இவள் நிலை பாவமா இருந்தது 😒 😒


தன்னுடைய அன்புக்காக குருவை பின்னாடி சுத்த வைக்கிற செம்பாவாகட்டும் , அன்புக்காக குழந்தைபோல பின்னாடி சுற்றும் குருசேத்திரனாகட்டும் ஆஹா அடடே !!!


வெறுக்குறேன் வெறுக்குறேன்னு சொல்லிட்டு இவன் அவளுக்காக பண்ணுற ஒவ்வொன்னும் அழகா இருந்தது 😍 கோவக்காரனாக இருந்தவனை‌ அவளுக்கானவனாக மாத்தின செம்பருத்தியும் சூப்பர்👍



சாந்தா மணியம்மை செம்பா மூனு பேரு சீன்ஸ் சூப்பர்..பாரி நல்ல அப்பா செம்பாக்கு ,கர்ணன் கேரக்டரும் நல்லா இருந்தது தகப்பனைப்போல..

சுப்ரியா குரு நட்பு சுப்ரியா அவனை திட்டுறதுலாம் ஆனந்தமா இருக்கு 🤭🤭

சுப்ரியா - sriram நித்யா - தீட்சண்யன் சம்பூர்ணம் - திவ்யன் கீர்த்தனா - தர்ஷன்னு எல்லாருக்கும் ஜோடி சேர்த்தாச்சு...👍


எதனால வரதராஜன் குடும்பத்துமேல கோவமா இருக்கான் குரு, அவனுக்கு உள்ள பிரச்சினை இன்னும் கொஞ்சம் தெளிவா விளக்கி இருக்கலாம்... மற்றபடி நல்ல கதை...👍

ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
மன்னவன் மயங்கும் மலரவள்
The story is a fast-paced thriller about an intense, "psycho" heroகுருஷேத்ரன் who suddenly marries செம்பருத்தி. The mystery behind his motives and how their life unfolds makes it a very engaging read.
However, the writing felt a bit incomplete in some places, and the emotional scenes could have been more deeply expressed to make a stronger impact. Overall, it’s a gripping plot that keeps you hooked, though it needs a bit more polish in the storytelling✨
 
பிரதன்ய குழலியின்


மன்னவன் மயங்கும் மலரவள்


குருசேத்ரன்….செம்பருத்தி



தன் அம்மாவை பார்த்துகொள்ள தன் வீட்டோடு தங்கி வேலை செய்ய செவிலியரை தேடும் நாயகன்.



ஆனால் வந்தவர்களெல்லாம் ரெண்டு நாள் கூட தாக்குபிடிக்க முடியாமல் தெரித்துவிடுகின்றனர்.



பின்னே பயபுள்ள பாச மழை அம்மா நனைக்கிறேன், அந்தம்மா ஜன்னி வராத குறையா கதறிகிட்டு இருக்க,இந்தம்மா நிலையே இப்படி இருக்க, வேலைக்கு வரவங்க எம்மாத்திரம், இதுல பயபுள்ளைக்கு பொண்ணுங்களை கண்டாளே ஆகாது.




குடும்ப சுழல் காரணம் வேறு விழியின்றி அக்குடும்பத்திற்கு வேலைக்கு வருகின்றாள் நாயகி.



பணக்காரங்கள கண்டாலே தெரித்து ஓடும் அவளும், ஏழையினாலே கீழனு நினைக்கிற இவனும் ஒரே இடத்துல‌ …கேட்கவா வேணும் கலோபரத்துக்கு…


அவனது அட்டகாசங்களை தாங்காது அவன் இருக்கும் பக்கமே தவை வைத்து படுக்காது, அவனது தாய், அவ்வீட்டில் வேலைசெய்பவர் என தங்களது உலகத்தில் சறுக்கி அதனுள்ளே சுழல்கிறாள்.


இவளோ அவனை தவிர்த்துவிடுவது நல்லது என சுற்ற,அவனோ வீட்டில் நடப்பவை அனைத்தையும் தன் வீட்டில் பொருத்தியுள்ள cctv முலம் கண்காணித்து வருகின்றான்.



இதனால் அவரது தாயின் உணவு,அவரது செயல்பாடுகள் அனைத்தும் அவன்து கண்காணிப்பில் இருக்க, அவள் உணவில் மாற்றம் கொண்டு வருவது அவன் கவனத்தில் வர, சும்மா இருப்பானா அவன்..அவ்வளவு தான்.



அவன் கத்தறகத்தல பார்த்து ,அவள் அரண்டு நிற்க,நமக்கோ இவன் கட்டுபாடு விதிக்கிறேன் அந்தம்மாவ பட்டினி போட்டு ஒருவழியாக்கிடுவானோனு தான் இருந்தது.



சிலபல காரணங்களை முன்னிட்டு, அவன் அவளை திருமணம் செய்ய அவன் தாயை நாடுகின்றான்.

அவரும் கரும்பு தின்ன கூலியா என நாயகியின் குடும்பத்தை சரிகட்டி கல்யாண நடத்தி விடுகிறார்.




மனதிற்கு பிடித்திருந்தாலும் ,அறிவுகொண்டு. அடக்கி சப்புகட்டி அவளுடன் வாழ்கிறான்.



அவன் பிடிக்கவில்லை பிடிக்கவில்லையென கூறி அவளுடன் வாழ, ம்ம்ம் சரி அப்படியா பிடிக்கலையா போடா என அவனுக்கு மேல் இவள் முறுக்கி கொள்கிறாள்.




அவள் மலை இறக்குவதற்குள் இவன் ஒரு வழி அகிவிடுகின்றான்.



பிடிக்கவில்லையென வாயால் கூறிகொண்டு திரிந்தாலும்,அவளையும் அவள் குடும்பத்தையும் அவன் தாங்குவது அழகுதான்.





பெண்களை கண்டாலே எறிந்து விழும் இவன்ஜசெம்பாவை மட்டும் திருமணம் செய்ய காரணம் தான் என்ன…



மண்டகணத்தோடு சுற்றியவனை,மண்டபத்தரம் எப்படிவை சுற்றவைக்கிறாள் என்பதை அறிய


வாசிக்க இணைந்திடுங்கள் மன்னவன் மயங்கும் மலரவள்

மணம் வீசும்
 
Top