#நீயே_நீயென்று_என்_கனா_விமர்சனம்
அபய் அதிரூபன் கிரிக்கெட்டில் சாதிக்கனும்னு கனவோட தன் உறவுகளையும் ஊரையும் விட்டு வந்துட்டாங்க.
கனவை நோக்கின பயணம் அவ்வளவு இலகுவாக இருந்துட்டா அப்பறம் என்ன சுவாரஸ்யம் இருக்கும் கதையிலையும் சரி வாழ்க்கையிலும் சரி . கனவு பயணத்தில் காலம் தந்த பெரிய அடியை வலியை கடக்க முடியாம போராடும் அபய்க்கு எல்லாமுமா வருகிறாள் ஆராதியா ❤ அபயின் கனவு ஆராதியாவின் வழியில் நிஜமானதா? அப்படி என்ன வலி அவனுக்கு? பிரிந்த உறவுகள் எல்லாம் ஒன்றினணந்தார்களா? என்பதே கதை ❤
வேங்கடம் , அபய் ஆராதியாவின் தாத்தா அவர் படிப்பிற்கு முக்கியதுவம் தருபவர். அவரால் அபயின் கிரிக்கெட் மீதான கனவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதற்கான காரணம் சற்றும் நான் எதிர்ப்பார்க்காதது


அவரின் நிலையில் இருந்து அவர் சொல்வதும் சரி தானேனு தோனுது ஆனாலும் பொசுக்கு பொசுக்குனு
அடிக்கறது தான் பிடிக்கல

நெப்போலியன் ❤ அபய் அப்பா மகன் பாசம் வேற லெவல்னா. வேங்கடம் ❤ நெப்போலியன் அப்பா மகன் பாசம் அது அதுக்கும் மேல

கூட்டு குடும்பமா அனைவரையும் பார்க்க அழகா இருக்கு ❤ எல்லாரும் மீசை மேல வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் பயமும் அருமை ❤
ஆரா சரியான அராத்து


she stole my heart ❤ ஆராவின் பேச்சு



அருமை, தியா பிரகாஷ் நட்பு, மீசைகான பயம், அவளின் அவனவனுக்கான காதலும் கனவும்❤, அதை வார்த்தைகளில் சொன்னது, நாட்டுக்காக விளையாண்ட அந்த தருணம் இப்படி எல்லாமே ரொம்ப பிடித்தது


இவளின் மொத்த உலகமும் அபய்யால் இயங்குது ❤❤❤ பொருத்தமான வசனம்

அபய் காதல் வந்தா போய் காதலிகிட்ட சொல்லனும் இவன் அம்மா அப்பாகிட்ட சொல்லுறான்

ஆனால் அந்த தருணங்கள் எல்லாம் செம க்யூட்


மீசைகிட்ட பேசி அவருக்கு அவருடைய தப்பை உணர்த்துனப்போ மனசுல உட்காந்துட்டாரு இந்த வாத்தி, வாத்தியா கோச்சா மகனா எல்லாமே அருமை ❤ எப்போ கல்யாணம் பண்ணிக்க கேட்டாலும் "இப்போ சொல்லனும்னு தோணல "

எப்பவும் இந்த வசனத்தை நான் மறக்க மாட்டேன்.
அவ்வளோ காதல் ஆரா மேல ❤ அந்த காதலும் அவளின் கனவும் தான் நின்னுப்போன அவன் உலகத்தை இயங்க வச்சிருக்கு, வலிகளை கடக்க வெச்சிருக்கு ஆனால் அவனால எப்படி அதை வெளிப்படுத்தாம இருக்க முடிஞ்சுதுனு இன்னும் பிரம்மிப்பா இருக்கு ❤
இப்படி அவன் காதலை உள்ளையே அடைக்கி வைச்சு பாரம் தாங்காமல் ஒருநாள் அவன் அதை பெரிசா வெளிப்படுத்துவானு நான் எதிர்ப்பார்த்தேன் ஆனால் நான் நினைச்ச மாதிரி அது நடக்கல அது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்
அபய் ஆரா திருமண நிகழ்வு எல்லாமே அழகு முக்கியமா அபய் கேட்ட பெர்பிஷனும் அவளின் பதிலும்
மூன்று முடிச்சு போடும் போதும் அவனின் உறுதிமொழியும் அருமை

விளையாட்டு சார்ந்த படம் பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் உணர்வுகளை கதை மூலமாகவும் அழகா கடத்தீட்டீங்க ❤
அவளவனுக்கான அவளின் கனவும்
அவனவளுக்கான அவனின் கனவும்
பல தடைகளையும் வலிகளையும் கடந்து
நினைவானது போல்
போட்டியில் வெற்றி காணும் உங்கள் கனவும் நினைவாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
